Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ரவுடிகள் ரணகளம்….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளை நினைக்க வைக்கும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்கின்றன. விடுதலைப் புலிகள், கடந்த காலத்தில் செய்தவைகள் நல்ல செயல்களா?

தீமையான செயல்களா என பட்டிமன்றம் போட்டு வாதிட்டால் புலிகள் நல்லதே செய்தார்கள் என்ற பக்கத்தில் வாதிடுபவா்களுக்கு சிறந்த உதாரணமாக இருப்பது புலிகளால் முற்றாக அழித்தொழிக்கப்பட்ட ரவுடிகளின் சாம்ராஜ்யமே ஆகும். அத்துடன் புலிகளின் காலத்தில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மற்றும் கொலை கொள்ளை போன்றவைகளும் மிகச் சொற்ப வீதத்திலேயே காணப்பட்டன.

இது யாழ்ப்பாணம் மாத்திரமல்லாது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து இடங்களிலும் இவ்வாறான நிலை இருந்தது. இதே வேளை புலிகள் இல்லாத காலப்பகுதியிலும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் யாழ்ப்பாணத்தில் அடங்கி ஒடுங்கியிருந்தனா் ரவுடிகள். மோட்டார் சைக்கிளை வேகமாகச் செலுத்தினாலேயே அவா்களைப் படையினா் மறித்து கும்பாபிசேகம் செய்த சம்பவங்களும் போர்க்காலத்தில் இடம்பெற்றுள்ளன.

ஆனால் தற்போது நிலமை தலைகீழாக மாறிவிட்டது. கூட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த குரங்குகளுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்ட நிலமைபோல் ஆகிவிட்டது தற்போதய யாழ்ப்பாண இளம்சமூகத்தின் நிலை. ஆவா குறுாப், பாவா குறுாப், சங்கிமங்கி குறுாப் என பல ரவுடிக் கூட்டங்கள் உருவாகி வடபகுதி மக்களின் நிம்மதியைச் சீரழித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

இளம் பெண்கள் தெருவால் செல்லமுடியாத நிலை யாழ்ப்பாணம் உட்பட்ட பிரதேசங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. ரவுடிகள் அதிகம் நடமாடும் பகுதிகளாக தனியார் கல்வி நிலையங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், பேரூந்துநிலையங்கள், கோவில்கள் போன்ற இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிசாரும் இந்த ரவுடிகளுக்கு துணைபோவதாக மக்கள் சந்தேகப்படுகின்றார்கள். அத்துடன் சில பொலிஸ்நிலையங்கள் ரவுடிகளை பிடித்து நியாயமான முறையில் நீதிமன்றத்தில் ஒப்படைத்தாலும் அங்கு வரும் சட்டத்தரணிகளால் அவா்களுக்கு சுலபமான முறையில் பிணை கிடைத்து வெளியே வந்து மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபடுகின்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணிகள் இவ்வாறானவா்களுக்கு வாதிடுவதை நியாயமான முறையில் சிந்தித்து பார்த்து தவிர்த்தல் வேண்டும். இவ்வாறான ரவுடிகளுக்கு வாதிட்டு பிணை எடுக்க முற்படும் போதாவது அவா்களுக்கு புத்திமதி சொல்லி அவா்களை சிறந்த முறையில் சமூகத்துடன் இணைப்பதற்கு சட்டத்தரணிகள் முன்வர வேண்டும்.

சட்டத்தரணிகள் இவ்வாறான செயற்பாட்டைச் செய்யாது காசுக்காக செயற்படுவார்களாயில் அவா்கள் ரவுடிகளால் பெற்ற பணம் அதே முறையில் அவா்களிடம் இருந்து வேறு விதமாகச் சென்றுவிடும் என்பதை அவா்கள் உணா்ந்து கொள்ள வேண்டும்.

புலிகளில் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வேலை இல்லாமல் இருந்தவா்களில் முக்கியமானவா்கள் இந்தச் சட்டத்தரணிகள் ஆவார். அவ்வாறான நிலை புலிகளின் காலத்தில் இருந்தது. இதை சட்டத்தரணிகள் முதல் அனைவரும் உணா்ந்து கொள்ளல் அவசியம்.

அண்மையில் கொக்குவில் பகுதியில்நடந்த சம்பவம் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் தனது மகளை ஏற்றிக் கொண்டு தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்றுள்ளார் தந்தை. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவா் பின்னால் இருந்த மகளை அங்கசேட்டை செய்துவிட்டு சென்றுள்ளனா். தந்தை பதற்றத்தில் மோட்டார் சைக்கிளை மதிலுடன் மோத விட்டதால் தந்தையும் மகளும் காயமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ் பெருமாள் கோவிலுக்கு அருகில் கண்ணாதிட்டி வீதி சந்திக்கும் சந்தியில் ஒரு கடையின் அருகே சில ரவுடிகள் நின்று அப்பகுதியில் உள்ள கல்வி நிலையத்திற்கு வரும் மாணவிகளுடன் பெரும் சேட்டைகளில் ஈடுபடுவதாக தெரியவருகின்றது. இது தொடா்பாக யாழ் பொலிசாருக்கு பல தடவை தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியும் பொலிசார் அசண்டையீனமாக இருக்கின்றனா்.

அத்துடன் சங்கானை, மானிப்பாய்ப் பகுதிகளிலும் வீதியோரத்தில் நிற்கும் ரவுடிகளால் பொதுமக்கள் பெரும் துன்பப்பட்டுக் கொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடாநாட்டில் சேவையில் ஈடுபடும் தனியார், அரச பஸ்களிலும் ரவுடிகளில் அட்டகாசம் அதிகரித்துள்ளது. மது போதையில் பஸ்களில் ஏறும் ரவுடிகள் பெண்களுடன் அங்கசேட்டையில் ஈடுபடுவதும் தகாத வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொள்வதுமாக இருப்பதாக தொடா்ச்சியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு, கிழக்குப் பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்த போது யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரிப் பகுதியில் தெருவில் சென்ற ஒரு யுவதியை துாசணத்தால் பேசிய நபா் ஒருவரைப் பிடித்த புலிகள் அந் நபருக்கு பேசிய இடத்தில் வைத்தே பச்சைமிளகாய் கொடுத்த சம்பவமும் இடம் பெற்றுள்ளது.

ஆனால் தற்போது இவ்வாறான ரவுடிகள் சுதந்திரமான முறையில் நடமாடித்திரிவது யாழ்ப்பாணத்தில் உள்ள நீதி நிர்வாகச் செயற்பாடுகளில் சந்தேசகத்தை ஏற்படுத்துகின்றது. இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராகப் போரிட்டு விடுதலை கொடுத்தது இவ்வாறான ரவுடிகளுக்கா என மக்கள் விரக்தியுடன் தெரிவிக்கின்றனா்.

இனி வரும் காலம் யாழ்ப்பாணத்தில் ரவுடிகளாகத் திரிபவா்களின் புகைப்படங்கள் அவா்களின் தெளிவான முகத்துடன் இங்கு பிரசுரிக்கும் நடவடிக்கையில் நாம் ஈடுபடுவோம் என்பதை ரவுடிகளுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.Jaffna-Boys.jpg 

http://www.jvpnews.com/srilanka/84566.html

Jaffna-Boys-01.jpgJaffna-Boys-02.jpgJaffna-Boys-03.jpgJaffna-Boys-04.jpg

Jaffna-Boys-06.jpgJaffna-Boys-07.jpgJaffna-Boys-08.jpg

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளிலும் இதே நிலை காணப்படுகிறது. இதனை புலிகளால் தவிர வேறு எவராலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.

 

வெளிநாடுகளில்.. தமக்கிடையே யார் பெரிசு என்ற..சண்டித்தனமும்.. பெட்டை பிரச்சனையும்.. தான் தமிழ் வன்முறைக்குழுக்களின் பெருக்கத்துக்கு முக்கிய காரணம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சுதந்திர நாட்டில இப்படி நடக்கிறது சகயம் தானே. இதை போய் பெரிசு பண்ணிக்கொண்டு. 

கருத்துரிமை பேச்சுரிமை மாதிரி இது ஒரு "சைட் அடிக்கிற உரிமை".  இல்லையா மக்களே?  :lol:

 

Edited by ஊர்க்காவலன்

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி வெள்ளைக்காரனை துரத்திட்டு சுதந்திரம் எடுத்துக் கொடுத்த நாட்டில்.. பள்ளிக்கூடத்தில் வைத்து 3 வயசுப் பெண்பிள்ளை மீது பாலியல் வல்லுறவு. இதை சுதந்திரத்தின் விளைவு என்று சொன்னால்.. அதைப் போல....??!

 

ஊரில் இன்றிருப்பது சுதந்திரமல்ல. ஆக்கிரமிப்பு இன அழிப்பு. ரவுடிசம்... இன அழிப்பின் ஒரு அம்சமாக பாவிக்கப்படுகிறது. புலிகளுக்கு முன்னர் ரவுடிசம்.. உள்ளூர் அரசியலுக்காக வளர்க்கப்பட்டது. எனவே.. ரவுடிசத்துக்கு துணைபோவோர் எதிர்காலத்தில்.. அதற்கான பதிலையும் சொல்ல நேரிடலாம்.

 

Indian girl, 3, 'raped' in Bangalore school

 

_76595281_76456059.jpg

 

http://www.bbc.co.uk/news/world-asia-india-29719018

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஞ்ஞானமும் வளர பகுத்தறிவும் வளர உலகறிவும் வளர நாகரீகமும் வளர........ரவுடிகளின்ரை சேட்டையளும் வளரத்தான் செய்யும். :icon_idea:

மேலை இருக்கிறவனிலை பழியை போட்டுட்டு சிவனேயெண்டு அவரவர் வாழ்க்கையை பர்க்க வேண்டியதுதான். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான வளர்ச்சியை இவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்த எவ்வளவோ வழிமுறைகள் இருக்குது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த மனிதர்கள் தான் அங்கு இல்லை. அங்கு இருப்பவர்களுக்கு.. இந்த ரவுடிசம் இருக்கனும்.. அப்ப தான் அவர்கள் தங்களை அங்கு செல்வாக்குள்ளவர்களாக்கிக் கொண்டு.. இருக்க முடியும். ஆக்கிரமிப்பாளனுக்கும்.. ஒரு தேவை இருக்கனும்.. அவன் அங்க இருக்கனும்.. என்று ஊருக்கு காட்ட.!! :icon_idea::)

Edited by nedukkalapoovan

சைக்கிளிலும், மோட்டார் சைக்கிளிலும் திரியும் இவ் இளைஞர்களை ரவுடிகள் என்று எவ்வாறு மட்டம் கட்டுகின்றனர்? ஒரு ஹோட்டலில் அமர்ந்து கொண்டு கொக்காகோலா குடித்தால், அல்லது நண்பர்களுடன் இணைந்து நின்று படம் எடுத்தால் அவர்கள் ரவுடிகளா?  நண்பர்களுடன்  இணைந்து வெளியே திரியாமல் வீட்டுக்குள் பம்மிக் கொண்டு இருப்பவர்கள் மட்டும்தான் யோக்கியர்கள் என்ற அரதப் பழசான சிந்தனைகளில் இருந்து தான் இப்படியான மட்டம் தட்டல்கள் உருவாகின்றன.

 

ஜேவிபி யின் தமிழ் செய்தித்தளம் மிகவும் மட்டமான செய்திகளை பலமுறை இணைத்து இருக்கு. அத்துடன் பல ஆதாரமற்ற செய்திகளையும் Gossip வடிவில் இணைத்து வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ இது யாரோ வேண்டாத ஒருவர் செய்த வேலை போல் உள்ளது. இந்த புகைப்படத்தில் உள்ளவர்களை நான் ஏற்கனவே வேறொரு இணையத்தளத்தில் பார்த்துள்ளேன். 

இந்த செய்தியையும் அவர்களிற்கு அனுப்பியுள்ளேன். இனி அவர்கள் அங்கே சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அவர்களின் விருப்பம். 

 

இதோ அவர்களின் முகநூல் பக்கம்:

https://www.facebook.com/avarankal.thirteenbatch

 

ஏற்கனவே யாழில் பேரூந்திற்கு நின்ற ஒரு பெண்ணை போட்டோ எடுத்து "யாழில் விபச்சாரம்" என்று செய்தி வெளிவந்தது. எந்த இணையம் என்று தெரியவில்லை. ஆனால் இப்படியான இணையங்களை யாழில் தடைசெய்யலாம்.

Edited by ஊர்க்காவலன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேவிபி யின் தமிழ் செய்தித்தளம் மிகவும் மட்டமான செய்திகளை பலமுறை இணைத்து இருக்கு. அத்துடன் பல ஆதாரமற்ற செய்திகளையும் Gossip வடிவில் இணைத்து வருகின்றது.

 

இது உண்மையில்  ஜேவிபியின் இணையம் அல்ல. இது ஒரு லங்காசிறியின் இணையம் அவா்களின் பிரதான நோக்கமே Gossip தான் எனவே இவா்களின் செய்தி பற்றி அலட்டிக் கொள்ளத்தேவையில்லை.

யாழ் பாணத்தில் உண்மையில் உலா வரும் ரவுடிகளை படம் பிடித்து போட துணிவற்றவா்கள் முகப்புத்தகத்திலிருந்து படங்களை திருடிபோட்டு படம் காட்டுகிறாா்கள்.

 

இவா்களுக்கு சமூக அக்கறை கிடையாது இணையத்தில் பாா்வையாளா்களை அதிகாித்து அதன் மூலம் வருமானமீட்டலிலே தான் அக்கறை.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படங்களில் உள்ளவர்கள் ரவுடிகளோ.. சாதாரண இளைஞர்களோ தெரியாது. இந்தச் செய்தியில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதும் தெரியாது. ஆனால்.. வடக்குக் கிழக்கில் இப்போது ரவுடிசும்.. சிங்களப் படைகளின் தயவோடு வளர்க்கப்பட்டு வருவதை மக்கள் மிகவும் வருத்தத்தோடு அவதானித்து வருவதோடு முறைப்பாடுகளையும் செய்தே வருகின்றனர். அதில் மாற்றுக் கருத்திருப்பதாகத் தெரியவில்லை. :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் நாடுகளிலும் இதே நிலை காணப்படுகிறது. இதனை புலிகளால் தவிர வேறு எவராலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.

 

வெளிநாடுகளில்.. தமக்கிடையே யார் பெரிசு என்ற..சண்டித்தனமும்.. பெட்டை பிரச்சனையும்.. தான் தமிழ் வன்முறைக்குழுக்களின் பெருக்கத்துக்கு முக்கிய காரணம். :icon_idea:

 

என்றோ ஒரு காலத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, புலம்பெயா்ந்த இளைஞா்கள் மீது குற்றம் சாட்டுதல் ஆகாது. புலம்பெயா் நாடு என்று வரும்போது அதிகளவான குழுச்சண்டைகளையும், இளைஞா் வன்முறையையும் சந்தித்த கனடாவில் தற்போது அவை முற்றுமுழுதாக இல்லை என்ற நிலை உருவாகியிருக்கின்றது.

அதற்காக பாடசாலையில் சிறுவா்கள் சண்டையிடுவதை எல்லாம் விட்டு விடுங்கள் என்றால்... பள்ளிக்கால நினைவுகளை மீட்க அவா்களுக்கு எதுவும் மிஞ்சாது.  (அதாவது பாதிப்பற்ற வன்முறை- சும்மா நாம ஊாில அடிபடுறது மாதிாி செய்யத்தானே வேணும் -பொலிசுக்கு போகாமல் இருந்தா சாி)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.