Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்பிரமணியன் சுவாமி - மறுபக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சுவாமி, ஒரு புதிர் ! - சுவாமியின் திருவிளையாடல்கள் புரியாதவர்களுக்கு !!
 
ஜெயலலிதாவை நிரந்தர சிறைப் பறவையாக்க தன்னிடம் கட்டுக் கட்டாக ஆவணங்கள் இருப்பதாக மார் தட்டுகிறார் சுப்ரமணிய சாமி. அவற்றில் சிலவற்றை மேலோட்டமாக பார்த்தாலே பலமான வழக்குகளாகத் தெரிகிறது. இதெல்லாம் இவருக்கு எப்படி கிடைக்கின்றன என்று அநேகருக்கு ஆச்சரியம்.
 
உண்மையில் அது பெரிய விஷயம் அல்ல. நீங்கள் அதிகாரத்தில் இருக்கும்போது எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பலருக்கு நன்மை அளிப்பதாக இருக்கலாம். சிலருக்கு அதனால் பாதிப்பும் ஏற்படும். வேண்டுமென்றே நீங்கள் தீமை இழைத்ததாக நம்புவோர், பழி வாங்க சந்தர்ப்பம் வரட்டும் எனக் காத்திருப்பார்கள். 
 
உங்கள் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்து பாதகமான தகவல்களை பத்திரப் படுத்தி வைத்திருப்பார்கள். உங்களுக்கு எதிராக நிற்பவர்களில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என நினைக்கிறார்களோ அவரிடம் சமர்ப்பித்து விடுவார்கள். சாமிக்கு காணிக்கை செலுத்துவதைப் போல சமயங்களில் வழக்குச் செலவுக்கென தொகை கொடுப்பதும் உண்டு. பலனை அனுபவிக்கப் போவது பக்தன்தான் என்பதால் வக்கீல் ஃபீஸ் போல சாமியே கேட்டு வசூலிப்பதும் நடக்கும்.
 
சுப்ரமணிய சாமியிடம் குவியும் ரகசியத் தகவல்களில் பெரும் பகுதி அவராக சேகரித்தது அல்ல. அவரைத் தேடி வரும் தகவல்கள். ஜெயல்லிதா தேவையே இல்லாமல் நிறைய எதிரிகளை சம்பாதித்து இருந்ததால் சாமிக்கு வந்து சேரும் தகவல்களை சரிபார்க்க ஒரு குழுவே வேலை செய்கிறது. புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் சிலரும் அவ்வப்போது தனக்கு கிடைக்கும் காகிதக் கட்டுகளை அவருக்குக் கொடுப்பதுண்டு.
 
அதே போல் கருணாநிதி குடும்பத்தார் தகவல்கள், அவர் பதவியில் இருந்த போது பாதிக்கப் பட்ட அவரது எதிராளிகளால் அவருக்கு வழங்கப் பட்டன. இவ்வகையிலேயே, கனிமொழி, ராசா, கலாநிதி, தயாநிதி மாறன் மாட்டினார்கள்.
 
விஷயம் என்னவெனில், சுவாமி, தமிழ் நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதுமே பிஸி.
 
சோனியா குடும்பமும் அவரிடம் மாட்டிக் கொண்டுள்ளது. 
 
நமக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை. எதிரி களத்திலிருந்து அகல வேண்டும் என்று பெருமளவில் ஆட்டையப் போடும் பங்காளிகள், பகையாளிகள் கருதும் வரை சுவாமி பாடு கொண்டாட்டம் தான். 
 
Thatstamil.com & யாழ் களத்திற்காக நாதமுனி 

Edited by Nathamuni

சுப்புரமணியசாமியின் முன்பக்கமே மிக அசிங்கமாக இருக்கு. அப்ப மறுபக்கம் பின் பக்கம் எவ்வளவு அசிங்கமா இருக்கும். அப்பாடா. வேண்டாம் அதை பார்க்கவே வேண்டாம்.

இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு சு.சாமி ஒரு துருப்பு சீட்டு.  சிலரை மட்டுப்படுத்தவும் / அப்புறப்படுத்தவும்.. சிலரை உயர்த்தி விடவும் சு.சாமிக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்வது அவர்களே என்று தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆக்கம் தொடருங்கள் நாதமுனி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தமிழகத்தில் சுவாமியின் அரசியல் எதிரிகளில் மிக முக்கியமானவர் ஜெயலலிதா.
 
சுவாமி கட்சி ஆரம்பித்த போது, அவருடன் இருந்த சந்திரலேகா என்னும் பெண்  IAS அதிகாரி ஒருவருக்கு 'அசிட்' வீசிய சம்பவத்துடன் இந்த வன்மம் ஆரம்பித்தாலும், அதிமுக, மகளிர் அணி தொண்டர்கள், அவருக்கு தமது சேலைகளை உயர்த்தி காட்டிவாறு வழங்கிய மிக 'அருவருக்க' தக்க ஒரு வரவேற்புடன் உச்சம் அடைந்தது.
 
இந்த நாய் குலைக்க மட்டும் செய்யாது, கடிக்கும், அதுவும் மோசமாக... நீண்ட நாட்கள், பாதிப்புற வைக்கும் வகையில் என சுவாமி, அரசியல் எதிரிகளுக்கு புரிய வைத்து உள்ளார்.  
 
இவரை கோமாளி, அரசியல் தரகர் என பலர் கூறினாலும், இவர் உண்மையிலேயே, ஒரு புத்திசாலியான சந்தர்ப்பவாதி.
 
தமிழகத்தில், அதிமுக கட்சியினரால் தனக்கு நேரக் கூடிய போராட்ட எதிர்ப்புக்களை நிறுத்தவதை, உச்ச நீதிமன்றின், ஜெயலலிதாவின் பிணை நிபந்தனைகளில் ஒன்றாக போட வைத்து, எதிர்க் கட்சிக் காரர்கள், அதிமுக போல, வேண்டும் என்றே ஆர்ப்பாட்டம் செய்தாலும், பிணை கான்சல், அம்மா, மீண்டும் களி தின்ன போகவேண்டும் என்பதால், ஆர்ப்பாட்ட விசயத்தில் போலிஸ் கண்ணுக்குள் எண்ணையை விட்டுக் கொண்டு நிற்க,  ஹாயாக தமிழகம் வந்து போகிறார் சுவாமி.
 
ஜெயலலிதாவினை வீழ்த்த அவரது அரசியல் எதிரிகளிடமும், அவரது அரசியல் எதிரிகளை வீழ்த்த ஜெயலலிதாவிடமும் பணம் கறக்கும் வித்தை சாதாரணமானதா?
 
இந்த வித்தை, தமிழ் நாடுடன் மட்டுப் படாமல், டெல்லியிலும், சோனியா, வதேரா என அவர்களது அரசியல் எதிரிகள் மட்டத்திலும் நீளுவது ஆச்சரியம் மிக்கது.
 
அது மட்டமா? நம்ம லோக்கல் ராஜபக்சே அண்ணன் தம்பி மாரும், இவரிடம் மாட்டி விட்டனரே. 
 
பலே கில்லாடியாக, பணம் பார்க்கும் அதே வேளை, தன்னை ஒரு உழல் எதிர்ப்பு வாதியாக ஒரு விம்பதினை போட்டு பீலா விடும் கெட்டிக்காரர்.  

 

Edited by Nathamuni

சந்திரலேகா ஒரு IAS அதிகாரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
முன்னாள் மத்திய அமைச்சர் சதி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமாக இறந்தது குறித்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, பொது நல வழக்குத் தொடுக்கப் போவதாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்
 

ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் நேற்று செய்தியாளர்களிடம் இது தொடர்பாக அவர் கூறியதாவது: கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கோரி பல முறை வழக்குத் தொடர்ந்திருக்கிறேன். ஆனால் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு எந்த விவகாரத்திலும் நான் நீதிமன்றத்தை அணுகவில்லை. தற்போது டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் சுற்றிசுற்றி வந்துகொண்டிருக்கிறார். இருந்தாலும் அவரை விடப்போவதில்லை. அவரது மனைவி சுனந்தா இறந்த சம்பவம் குறித்து நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரிக்கக் கோரி பொது நல வழக்கு தொடரவிருக்கிறேன். 

 

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

 

14/11/14

 

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தனது மனைவி மரணம் பற்றி உதவியாளரிடம் போனில் பேசியதை டெல்லி போலீசார் எப்பொழுது வெளியிடுவார்கள் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள லீலா ஹோட்டலில் பிணமாகக் கிடந்தது கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மாலை 4.30 மணிக்கு போன் செய்து தரூரிடம் அவரது உதவியாளர் சுனந்தா காலி என்று கூறிய உரையாடலை டெல்லி போலீசார் எப்பொழுது வெளியிடுவார்கள்? என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சுனந்தாவின் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை கோரி பொதுநல வழக்கு தொடரப் போவதாக சாமி தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், என்னதான் சுனந்தாவின் கணவர் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வந்து சென்றாலும் நான் பொதுநல வழக்கு தொடருவேன் என்றார். சுனந்தாவின் மரணம் தற்கொலையா, கொலையா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

தரூரிடம் பணம் வாங்கி, கம் என்று அடுத்த அரசியல் வாதிகள் போல் செய்யாமல், தரூரின் அரசியல் எதிரிகளிடம் பணத்தினை வாங்கிக் கொண்டு, அவரை கவிழ்ப்பதும் இல்லாமல், தனது இமேஜினை உயர்த்தும் வகையில் நடந்து கொள்கிறார். சாணக்கியர் சுவாமி.
 
இன்றைய இன்னுமொரு செய்தியில் பி சிதம்பரம் மீதும் ஒரு வழக்கு போடுகிறார்.  :icon_idea:  :blink:  :D 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உண்மையிலேயே, ஜெயலலிதா, சிதம்பரம், கருணாநிதி குடும்பம், தயாநிதி, கலாநிதி, ராமதாஸ் மகன் அன்புமணி, போன்ற தமிழ் நாட்டின், அரசியல்வாதிகளில், ஊழலால் வீழ்த்தப் படக் கூடியவர்களை வீழ்த்தி அங்கே, பாரதிய ஜனதா கட்சியினை வெல்லச் செய்ய சுவாமி பயன் படுத்தப் படுகின்றார் என்று சொல்லலாம்.
 
வைகோ, சீமான் போன்றோர் இந்த நிதர்சனதினை புரிந்து அரசியல் செய்வது நல்லது.

1920508_569126096551445_6586944293855478

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.