Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத முலாம் பூசி வட மாகாணசபையை கலைக்கவும் தயங்காது இலங்கை அரசு! - சென்னையில் விக்னேஸ்வரன் தெரிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துல்பென் நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. இப்ப கூட சீவி யை சந்திக்க மத்தியில் யாரும் தயாரில்லை என்பது கண்கூடு.

ஆனால் இது ஒரு நல்ல ஆரம்பம். எமது எல்லை மீறிய வன்முறையை சீவி நியாப்படுத்தாவிடினும், ஏன் ஆயுத கிளர்ச்சி வெடித்தது என்று நன்கு புரியவைத்தார்.

இது டெல்லியின் கொள்கை வகுப்பாளரை போக சேருமா? கொள்கை மாற்றம் வருமா? தெரியாது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், human security, மக்கள் இறைமை அடிப்படயில் ஒன்று பட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வுக்கு உழைக்க நாம் தயார் என்று சீவீ கோடிட்டு காட்டியுள்ளார்.

ஜனநாயகம் என்பது முழு இலங்கையிலும் தேவை படுவதை காட்டியுள்ளார்.

இது வரை தமிழ் தலைவர்கள் எல்லாம் வரலாற்றின் அநியாயங்களை சொல்லி அழுதே போனார்கள். பிரபா ஒருவர் தான் இந்த அநியாயத்துக்கு தனி நாடு தீர்வு என்று அழுத்தம் திருத்த்கமாக சொன்னவர். ஆனால் அதை யாரும் ஏற்கவில்லை.

இப்போ அதே பாணியில் சமஸ்டியே தீர்வு என்று அழுத்தம் திருத்த மாக சீவி சொல்கிறார். பார்க்கலாம்.

புலிகளை தவிர்த்து இந்த விடயத்தை கதைக்க முடியாது துல்பென்ஸ். புலிகள் இந்த போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தியது போல் யாரும் செய்யவிலை.

அவர்கள் இல்லாமல் போயிருந்தால் இந்தப் போராட்டம் ஒரிய பழங்குடி போராட்டம் போல 1000 இல் 1 ஆய்ப்போயிருக்கும். வரலாற்றில்

அவர்களுக்குரிய இடத்தை யாராலும் மறுக்க முடியாது.

ஆனால் அவர்களும் சில இமாலயத்தவறுகள் விட்டார்கள். அதில் ஒன்றுதான் தனி நாட்டை விடாமல் கட்டிப்பிடித்தது.

இதை சொன்னால் எதோ பிரபாகரின் மச்சான் மாரி சில பேர் வரிந்து கொண்டு வந்து அவதூறு செய்வார்கள். இந்த மாதிரியானவர்களின் முட்டாள் தனமான, மொக்குப் புத்தி ஆலோசனைகள் இல்லாமல் இருந்திருந்தால், புலிகள் சில முடிவுகளை நிதானமாக எடுத்திருக்க கூடும்.

புலிகள் மீது அவர்கள் சாதித்தவை மீது எனக்கு ஒரு போதும் காழ்ப்புணர்வு இல்லை. ஆனால் சில விடயங்களை அவர்கள் வேறு மாதிரியாக கையாண்டிருந்தால் இப்போதய கையறு நிலை வந்திராது.

புலிகளை இந்த நிலைக்கு தள்ளி விட்டதில், யோகி, திருநாவுக்கரசு, இன்னும் சில மோட்டு ஆலோசகர்களின் (------) பங்கு ஆய்வுக்குரியது.

பிரபாவின் கைகளை கட்டியவர்களில் கேபி, கருணாவுக்கு நிகரான பங்கு இந்த ---------- இருக்கிறது.

ஆதாரங்கள் போடாவிட்டால் இவை வெறும் அவதூறு மட்டுமே. 
இதற்கு உரியவர்கள் கவனத்தில் எடுப்பது நன்று. (இன்னார் இப்படி ஒரு ஆலோசனை கூறி இருந்தார். அதனால் புலிகள் பல பின்னடைவுகளை சந்தித்தார்கள் என்று நான் கருதுகிறேன். இப்படி என்றாவது இருத்தல் அவசியம்) 
  • Replies 57
  • Views 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்,

நீங்கள் வேடிக்கையாக கேள்வி கேட்டீர்கள் என்பது எனக்குப் பெரும் ஆச்சரியமாய் உள்ளது.

நான் நினைத்தேன் ஒரு சக கருத்தாளராக நீங்கள் பண்புடன் உரையாடுகிறீர்கள் என்று.

பரவாயில்லை. இனி நானும் வேடிக்கையாகவே உங்களுக்கு பதில் சொல்கிறேன்.

ஆனால் சூரியன், ஈசன், ரகு, துல்ஸ் போன்றவர்கள் அப்படிக் கேட்டார்கள் என்று நான் நினைக்கவில்லை. இடைகிடை சில குழப்பங்காசிகள் வந்து கும்மியடித்துப் போனாலும், மற்றையவர்கள் பொறுப்புடந்தான் உரையாடுகிறோம்.

இங்கே நாம் கதைப்பது எமது மக்களின் வாழ்வா, சாவா எனும் ஜீவ மரண போராடத்தை பற்றியது.

ஆயிரமாயிரம் போராளிகள் (எல்லா இயக்கங்களிலும்) சாவடைந்து உலக பேசுபொருளாக்கிய எமது பிரச்சினையை பற்றி.

இதில் போய் வேடிக்கை கேள்வி கேட்க, வேடிக்கை பதில் சொல்ல இது என்ன மதன் கேள்வி பதிலா?

கருத்துகளில் ஆயிரம் மாறுபாடு இருக்கலாம் - ஆனால் பேசுபொருளையே, அதுவும் இப்படிப் பட்ட ஒரு பிரச்சினையை கேலிப்பொருளாக்குவது என்பது சகிக்க முடியாதது.

உங்களிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 

மருதங்கேணி,

 

நான் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குக் காரணமான சில தூரநோக்கற்ற முடிவுகள் என்று எழுதியவற்றை நீங்கள் அப்படியில்லை என்று மறுத்து எழுதியிருக்கிறீர்கள். அதில் தவறிருப்பதாகவும் நான் நினைக்கவில்லை. ஆனால், நடந்ததைச் சரியாகத் தெரிந்துகொண்ட ஒருவராலன்றி, ஏனையவர்களால், முன்வைக்கப்படும் காரணங்களை அப்படியில்லை என்று அடியோடு மறுக்க இயலாது என்பதுதான் எனது எண்ணம். எமது அழிவிற்கான காரணம் எதுவென்று நன்றாக உங்களுக்குத் தெரிந்தவிடத்து அதை இங்கே முன்வைத்திருக்கலாம்.ஆனால் அதைச் செய்யாமல் நான் எழுதியதை தவறென்று கூறுகிறீர்கள். பரவாயில்லை, நான் எழுதியது சரிதானா என்று எனக்கே தெரியாது. வெறும் ஊகம்தான்.

 

சரி, அதை விடுங்கள்,

 

நான் முன்வைத்த காரணங்களுக்கும், நீங்கள் மறுத்தெழுதிய கருத்துக்களுக்கும் வருகிறேன்.

 

முதலாவது 1991 இல் ராஜீவைக் கொன்றதனால்த்தான் முள்ளீவாய்க்காலில் அவனது விதவை மனைவி பழிவாங்கினாள் என்னும் எனது கருத்து. ஆனால், அது அப்படியில்லை, ராஜீவ் மீண்டும் பதவிக்கு வந்திருந்தால் 1992 இலேயே முள்ளீவாய்க்கால் நடந்திருக்கலாம் என்று எழுதினீர்கள். நீங்கள் சொல்வதுபோல ராஜீவ் மீண்டும் வந்திருந்தால் இந்திய ராணுவம் மீண்டும் வந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் இருந்தனதான். ஆனால் அது முள்ளிவாய்க்காலினைப்போல மனிதப் பேரவலத்துடன் நடந்திருக்குமா என்பது கேள்விக்குறியே. இதை ஏன் சொல்கிறேன் என்றால், ராஜீவின் மரணம் வரைக்கும் புலிகளுக்கும் - இந்தியாவுக்குமிடையிலான பகை அரசியல் சார்ந்தது. இலங்கையும் புலிகளும் இணைந்தே தம்மை வெளியேற்றியதான அவமானம் சார்ந்தது. ஆகவே ஒருவேளை இந்திய ராணுவம் மீண்டும் வந்திருந்தால் கூட புலிகளின் தலமையினை அழிப்பதோடு அதன் செயற்பாடு முடிந்திருக்கும். அதுமட்டுமல்லாமல், அப்படியொரு இந்திய ராணுவத்தின் இரண்டாம் வருகையென்பது, நிச்சயம் இலங்கை அரசின் விருப்பங்களுக்கு மாறாகவே நடந்திருக்கும். ஆக, இலங்கையும், புலிகளும் விரும்பாத வருகையாக அது இருந்திருக்கும்.  ஆனால் ராஜீவைக் கொன்றதன்மூலம், இந்த அரசியல்ப் பழிவாங்கலும், பகையும், தனிப்பகையாகவும் பழிவாங்கலாகவும் மாறிப்போனது என்பதுதான் எனது எண்ணம். இது, இலங்கையரசிற்கும் - இந்தியாவுக்குமிடையே நிலவி வந்த முறுகலைத் தணித்ததோடு, புலிகளை இந்தியாவின் நிரந்தர எதிரிகளாகவும் மாற்றிவிட்டது. அதுவரை தமிழகத்திலாவது செயற்பட அனுமதியளிக்கப்பட்டிருந்த புலிகளியக்கம், இந்தியாவின் எந்த மாநிலத்திலும் செயற்பட முடியாதவாறு தடை விதிக்கப்பட்டது ராஜீவ் கொலையினால்த்தான் என்பதை மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் நீங்கள் கூறியதுபோல 1992 இல் நடந்தாலென்ன, 2009 இல் நடந்தாலென்ன, எம்மால் அதனைத் தடுத்திருக்க முடியாதென்பதுதான் உண்மை. ஆனால் என்ன, 1992 இல் நடந்திருந்தால் மக்கள் இழப்புகள் 2009 போல இருந்திருக்க வாய்ப்பில்லை. மற்றும்படி புலிகளியக்கம் அன்றே அழிக்கப்பட்டிருக்கலாம், 40000 ஆக அல்ல, வெறும் 4000 ஆக மட்டும்.

 

இரண்டாவது, ரணிலை தோற்கடித்து மகிந்தவைக் கொண்டுவந்ததன் மூலம் புலிகள் தம் தலைமீதே மண் அள்ளிப் போட்டனர் என்பது. இதற்கான காரணத்தை நான் பின்வருமாறு கூறியிருந்தேன். அதாவது, ராணுவ ரீதியில் சிங்கள ராணுவத்தை தோற்கடிக்கக் கூடிய நிலையில் புலிகள் அன்று இருந்தபடியினால் (அல்லது அப்படியான நம்பிக்கையில்) மகிந்தவைக் கொண்டுவருவதன் மூலம் சண்டையை உடனேயே ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தார்கள், அல்லது மகிந்தவே சண்டையைத் தொடக்குவான் என்று எதிர்பார்த்தார்கள் என்பது. இது தான் உண்மை என்பது உங்களுக்கும் எனக்கும் தெரிந்த விடயம்தானே?? அப்படியில்லை என்றால், ரணிலை விட மகிந்த எந்த விதத்தில் நல்லவன் என்று அவனைக் கொண்டுவந்தார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்??

 

மகிந்தவோ, ரணிலோ அல்லது வேறு எந்த சிங்கள இனவாத அரசியல்வாதியோ தமிழர்களுக்கு என்றுமே சம உரிமைகளைத் தரப்போவதில்லை என்பது சரித்திரம். அப்படியிருக்க மகிந்த வந்தாலென்ன, ரணில் வந்தாலென்ன தமிழருக்கு எதுவுமே கிடைத்திருக்கப் போவதில்லை. ஆனால் ஒரு வித்தியாசம், மகிந்தவைப் போல ரணில் சண்டையை உடனேயே தொடக்கியிருக்க மாட்டான். சிறுகச் சிறுகப் புலிகளைப் பலவீனப்படுத்தி, சர்வதேச வலைப் பின்னலுக்குள் கொண்டுவந்து இறுதியில் இனிமேல் யுத்தமொன்றிற்குள் புலிகள் செல்லமுடியாதவாறு முற்றுகைக்குள் கொண்டுவந்து, ஒரு உப்புச்  சப்பில்லாத தீர்வொன்றைக் கொடுத்திருக்கலாம். ஆகவே, புலிகள் தாமாகவே பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறி யுத்தத்தைத் தொடங்கினால் ஒழிய ரணில் யுத்தத்தைத் தானாக ஆரம்பிக்கும் சாத்தியப்பாடுகள் அப்போது இருந்தனாவா என்று எனக்குத் தெரியாது. வெளியுலகிற்கு அவன் போட்ட சனநாய முகமூடி அவனை சடுதியான யுத்தமொன்றிற்குள் இறங்க அனுமதித்திருக்காது என்பதுதான் எனது எண்ணம். ஆக, புலிகள் யோசிப்பதற்கும், செயல்படுவதற்கும் கால அவகாசம் கிடைத்திருக்கும். மேற்குலகின், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை போன்ற முட்டுக்கட்டைகள் வராது இருந்திருக்கும். ஆனால் மகிந்தவைக் கொண்டுவந்து, ஒஸ்லோவிலிருந்து தன்னிச்சையாக வெளியேறும் முடிவினை எடுத்த புலிகள் மேற்குலகின் வெறுப்பினைச் சம்பாதித்ததோடு, மகிந்தவின் மனிதாபிமானப் போருக்கு மேற்குலகின் அனுமதியையும், தங்குதடையற்ற மனிதவுரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கான அனுமதிப் பத்திரத்தையும் பெற்றுக் கொடுத்தார்கள்.

 

இறுதியாக, இந்த 30 வருடகால போராட்டமும், தியாகங்களும், இழப்புக்களும், அழிவுகளும், இடம்பெயர்வுகளும் முள்ளிவாய்க்கால் என்கிற ஒரு அவலத்திற்காகத்தான் என்கிற கருத்தை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று ஐ. நா வில் பேசுபொருளாக இருப்பதுகூட முள்ளிவாய்க்கால் அவலத்தினால்த்தான் என்கிற கருத்து அபத்தமானது. நிச்சயம் தலைவர் போராட ஆரம்பிக்கும்போது ஐ. நா வில் எமது அழிவு பேசப்படவேண்டும் என்பதற்காகத்தான் போராடப் போகிறேன் என்று புறப்படவில்லை. தமிழருக்கென்று சுதந்திரமாக, எந்தவித ஆக்கிரமிப்புக்களும் இல்லாமல், மற்றைய மனிதர்களைப்போல விடுதலை பெற்று வாழ ஒரு தனி நாடு வேண்டுமென்றுதான் போராடத் தொடங்கினார். ஆனால், இன்று சிலர் "முள்ளி வாய்க்கால் அவலம் தலைவரின் தீர்க்கதரிசனமான முடிவு, ராஜதந்திரம்" என்று சப்பைக் கட்டுக் கட்டுகிறார்கள். இதை நான் சொல்லிக் காட்டினால், உடனேயே, "நீங்கள்தான் அப்படிக் கூறிக்கொண்டு திரிகிறீர்கள்" என்று என்னை நோக்கியே திருப்பி விடுகிறீர்கள். இது நியாயமா?? இப்படிப் பலர் சொல்லியும் எழுதியும் வருவதை நீங்களே பலமுறை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

 

ஒரு தனிமனிதனின் தூரநோக்கற்ற முடிவு, ஒரு மொத்த இனத்தினதும் இருப்பினைக் கேள்விக்குறியாகியதென்று நான் எழுதியதற்கு, "30 வருடங்களுக்கு முன்னர் ஆயுதம் ஏந்திப் போராட புறப்பட்டதைச் சொல்கிறாயா?" என்று கேட்கிறீர்கள். நான் சொல்வது எதுவென்று நன்றாகப் புரிந்துகொண்டே வீம்பிற்கும் விதண்டாவாதத்திற்கும் எழுதுகிறீர்கள் என்பது நன்றாகவே எனக்கும் புரிகிறது. என்னைப் பொறுத்தவரையில் பிரபாகரனைப் போன்ற ஒரு மனிதரால்த்தால் எமக்கு விடிவு பிறக்க முடியும், அதுவும் ராணுவ ரீதியான் வெற்றியின் மூலம் மட்டும்தான் அது சாத்தியம். எந்த ராணூவ ரீதியான வெற்றியின் மூலம் சிங்களம் எம்மை அடிமைப் படுத்தியதோ, அதேபோன்ற இன்னொரு ராணுவ வெற்றியின் மூலம்தான் எமது விடுதலையும் சாத்தியம் என்று நான் நம்புகிறேன். அப்படியிருக்க, நான் தலைவர் 30 வருடங்களுக்கு முன்னர் தொடங்கிய ஆயுதப் போராட்டத்தை ஏன் தூரநோக்கற்ற முடிவென்று சொல்லப்போகிறேன் ? நான் கூறவந்தது, ராஜீவைக் கொல்வது மற்றும் மகிந்தவைக் கொண்டுவருவது போன்ற முடிவுகளைத்தான். இது நிச்சயம் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

 

சரி, நான் எழுதியவை எல்லாமே அதீத கற்பனை என்றோ அல்லது மொக்கைத்தனமான ஊகங்கள் என்றோ நீங்கள் கருதினால் (அப்படிக் கருதுவதிலும் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை), நீங்கள் முள்ளிவாய்க்கால் அவலத்திற்கான காரணங்கள் எதுவென்று நினைப்பதை அல்லது நம்புவதை எழுதுங்கள், நியாயமாகப் படுமிடத்து அவற்றை ஏற்றுக்கொள்ளவும் நான் பின்னிற்கப் போவதில்லை.

 

நன்றி !

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்,

சத்தியமாக சொல்கிறேன் போராளிகளை நான் ஒரு போதும் தாக்கி எழுதியதில்லை. உங்கள் தலைவரைக் கூட பெரிதாக தாக்குவதில்லை. ஆனால் அவரும் ஒரு மனிதரே, அவரும் பிழைகள் விட்டார், அவரும் விமர்சனத்துக்கு உட்பட்டவரே எனும் ரீதியில், 30 வருடங்களாக நடந்த விடயங்களின் நாயகன் எனும் ரீதியில் அவர் நடவடிக்கைகளை, விமர்சிக்கிறேன். இதை செய்ய நீ யார் நேற்று முளைத்த காளான்? என கேட்பது சரியில்லை. காளான்களுக்கும் பேச்சுரிமை இருக்கவேண்டும். ஒரு பங்களிப்பும் செய்யாவிட்டாலும், எமக்கும் கருத்துச் சொல்லும் உரிமை இருக்க வேண்டும். அதை ஏற்பதும் ஏற்க்காததும் படிப்பவர் விருப்பு. உலக யுத்தத்தில் போராடிய சிப்பாய்க்கும், வீட்டில் பதுங்கி கிடந்தவனுக்கும், யுத்த முடிவில் ஒரு வாக்குத்தான் (வோட்). உயிரை கொடுத்து போராடினான் என்பதற்க்காக சிப்பாய்க்கு தலா இரண்டு வோட் கொடுக்கவில்லை. இதுதான் ஜனநாயகம்.

சரி நீங்கள் ஆசைப்பட்டது போலவே நடந்ததை விட்டு, நடக்கப் போவதை பற்றிக் கதைப்போம்.

http://dbsjeyaraj.com/dbsj/archives/34798

இந்த திரியில் ரணில் தனது அரசியலமைப்பினை பற்றிய எதிர்கால திட்டத்தை சொல்கிறார்.

13 ஐ தக்க வைப்போம் என்று சொல்லும் ரணில் 13 பிளஸ் பற்றியோ, சம்ஸ்டி பற்றியோ எதுவும் சொல்லவில்லை.

எதிர் கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரள்வது, சந்திரிக்கா களமிறக்கப் பட்டிருப்பது, போர்க்குற்ற விசாரணை இறுகுவது இப்படி மகிந்தருக்கு ஆப்படிக்க இந்தியாவும் மேற்கும் தயாராகி விட்டதாயே எனக்குத் தோன்றுகிறது.

சீவீ ஏன் - 1987 ஒப்பந்த படி இந்தியாவுக்கு இலங்கையில் தலையிடும் உரிமை உள்ளது என் மீள, மீள வற்புறுத்தி பேசினார்?

இந்தியாவின் வகிபாகத்தை அதிகரிக்கும் பொருட்டு அப்படி பேசும் படி பணிக்கப்பட்டதா?

இதுவரையும் இலாமல் திடீரென ஏன் சீன நீர்மூழ்கிகள் கொழும்புக்கு வருகிறன? இந்தியா எதிர்த்தும்?

பாதையை போட்டுக் கொடுத்தும், யாழ்தேவி வரவேற்பில் ஏன் இந்திய தூதர் முன்னுக்கு நிக்கவில்லை?

பல விடயங்கள் ஒரு நேர்கோட்டில் வருகிறன என்றே எனக்குப் படுகிறது. 2005 ஐப் போல் சமஸ்டி அடிப்படையில் ஒரு தீர்வை பெறும் வாய்ப்பு மீள உருவாகிறதா? மேற்குலகு உருவாக்கி வருகிறதா?

அப்படி ஒரு நிலை வருகிறதாயின், அதை இறுக்கப் பிடித்து எமது மக்களின் விடுதலையை சமஸ்டி மூலம் அடைவோமா?

அதுக்கு புலத்தில் இருந்து என்ன செய்யலாம்?

அல்லது தனிநாட்டை கட்டிப்பிடித்த படி இந்த சந்தர்பத்தையும் நழுவ விடுவோமா?

மேற்குலகு என்று ஒன்றே இல்லை (இணைத்தலைமை நாடுகள் எல்லாம் சும்மா மிக்சர், ரோல்ஸ் சாப்பிட கூடின கூட்டம்) இலங்கை பற்றி ஒரு பொதுக் கொள்கை அவர்களிடம் இல்லை என்று நம்பும் அளவுக்கு நான் புத்தக அறிவு மட்டுமே உடைய பாமரன் இல்லை. ஆனால் நடக்கும் சில விடயங்களை நான் over analysis பண்ணி ஒரு தப்பான முடிவுக்கு வருவதற்கும் சாத்தியங்கள் உண்டு.

என் மனதில் பட்டதை சொல்கிறேன், அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்

கோசான்.. நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு உண்டு.. ஆனால் ஆட்சி மாற்றம் மட்டுமே இந்தியாவின் இலக்கு.. இனப்பிரச்சினைக்கான தீர்வு.

மேற்கைப் பொறுத்தவரையிலும்கூட ஆட்சிமாற்றம் மட்டுமே உடனடி இலக்கு.. மேலதிக விடயங்கள் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரே..

ஆனால் மகிந்தரின் இலக்கு அதிகாரத்தை தக்க வைப்பதே.. தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் அடுத்து என்ன என்பதை முடிவு செய்துகொண்டே தேர்தலை அறிவிப்பார்கள். அதிகார இழப்பு அதில் அங்கம் வகிக்காமல் பார்த்துக்கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி ; நான் அப்போது வேலையில் இருந்த படியால் தமிழில் எழுத முடியவில்லை. மன்னிக்கவும்

கோசான்;

நான் உங்களுடைய கருத்துக்களை முற்றிலும் மறுக்கும் ஒருவர் அல்ல. ஆனால் இந்த திரியில் பல பதிவுகள் எழுந்தமானமாக பதிவது போல் இருந்தது.

தமிழருக்கு ஒரு "தீர்வை" தர அல்லது பெற யார் யார் உழைத்தார்கள் உழைக்கிறார்கள் என்று ஒரு பார்த்தல் ஒன்றுக்கு பின் ஒன்று முரணாக கருத்து எழுத வேண்டி வராது .

விடுதலை புலிகளின் அணுகுமுறையால்தான் எல்லாமே இல்லாமல் போனது என்று வைத்துகொண்டால் கூட , அவர்கள் இல்லாத இந்த காலத்தில் - அவர்கள் திரும்பவருவார்கள், இப்பவும் இணையத்தில் இருக்கிறார்கள் என்கிற கருத்துக்களை தவர்த்து பார்த்தால், பலவிடயங்கள் கடந்த 5 ஆண்டுகளில் நடந்து இருக்க வேண்டும். ஆனால் எதுவுமே நடக்காத இந்த காலத்தில், 5 வருடத்திற்கு முன்பு நடந்த சரி பிழைகளை -முழுமையான தரவுகள் அற்று ஒப்பிடுவது எந்த விதத்தில் உதவும் என்று தெரியவில்லை.

தமிழரின் குரல் வெளியே வரக்கூடாது என்பதில் அனைவரும் ஒருமித்தே நிற்கிறார்கள். இந்த CVW பேச்சை நானும் நீங்களும்தான் கதைக்கிறோம்.. கேவலம் BBC கூட ஒரு செய்தியாக தன்னும் போடவில்லை . இதற்க்கு மாறாக Rajiv காந்தி கொலைக்கு நான் மன்னிப்பு கேட்ட்கிறேன் என்றோ புலிகள் 30 வருடமாக அழ்ளித்ததை மீள்கட்டுமானம் செய்ய இந்திய உதவி தேவை என்றோ சொல்லி இருந்தா இதைப்பற்றி பெரிய பெரிய விவாதமே நடந்து கொண்டு இருக்கும். ஆனால் இவர் எங்களது பிரச்னையை சொன்னவுடன், அதுவும் , எப்படி இந்திய -இலங்கை ஒப்பந்தம் ஒரு முளுமையட்டது , முறையற்றது என்று சொன்னவுடன் எல்லோருமே கப்சிப். ஒரு செய்தி நிறுவனமும் முழுமையான செய்தியாக போடவில்லை . இப்படி ஒரு முதல் அமைச்சருக்கே நடக்கும் போ து , புலிகளுக்கு மாத்திரம் , அவர்கள் அச்சா பிள்ளையாக இருந்திருந்தால் "13 பிளஸ் பிளஸ் " தந்திருப்பார்கள் , அதற்க்கு இந்தியாவும் , மேற்க்கு உலகமும் உத்தரவாதம் அளித்து இருக்கும் என்று எப்படி சொல்லுவீர்கள் ?

கடந்த 5 ஆண்டுகளில் நடந்து இருக்க வேண்டும். ஆனால் எதுவுமே நடக்காத இந்த காலத்தில், 5 வருடத்திற்கு முன்பு நடந்த சரி பிழைகளை -முழுமையான தரவுகள் அற்று ஒப்பிடுவது எந்த விதத்தில் உதவும் என்று தெரியவில்லை.

தமிழரின் குரல் வெளியே வரக்கூடாது என்பதில் அனைவரும் ஒருமித்தே நிற்கிறார்கள். இந்த CVW பேச்சை நானும் நீங்களும்தான் கதைக்கிறோம்.. கேவலம் BBC கூட ஒரு செய்தியாக தன்னும் போடவில்லை . இதற்க்கு மாறாக Rajiv காந்தி கொலைக்கு நான் மன்னிப்பு கேட்ட்கிறேன் என்றோ புலிகள் 30 வருடமாக அழ்ளித்ததை மீள்கட்டுமானம் செய்ய இந்திய உதவி தேவை என்றோ சொல்லி இருந்தா இதைப்பற்றி பெரிய பெரிய விவாதமே நடந்து கொண்டு இருக்கும். ஆனால் இவர் எங்களது பிரச்னையை சொன்னவுடன், அதுவும் , எப்படி இந்திய -இலங்கை ஒப்பந்தம் ஒரு முளுமையட்டது , முறையற்றது என்று சொன்னவுடன் எல்லோருமே கப்சிப். ஒரு செய்தி நிறுவனமும் முழுமையான செய்தியாக போடவில்லை . இப்படி ஒரு முதல் அமைச்சருக்கே நடக்கும் போ து , புலிகளுக்கு மாத்திரம் , அவர்கள் அச்சா பிள்ளையாக இருந்திருந்தால் "13 பிளஸ் பிளஸ் " தந்திருப்பார்கள் , அதற்க்கு இந்தியாவும் , மேற்க்கு உலகமும் உத்தரவாதம் அளித்து இருக்கும் என்று எப்படி சொல்லுவீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது வோல்கனோ. இதுக்கு என்ன செய்யலாம்?

புலிகள் அச்சா பிள்ளைகளாய் இருந்து இருந்தால் சமஸ்டியை தங்க தட்டில் வைத்து கொடுத்திருப்பார்கள் என்று நான் சொல்லவில்லை.

ஒரு கடுமையான ராஜதந்திர போருக்கு புலிகள் தயாராக வேண்டி இருந்திருக்கும் எண்டே சொன்னேன். ஒரு சமாந்திர அரசு, முப்படைகள், புலம் பெயர் சமூகம் இவ்வளவு பலத்துடனும் நின்று கொண்டு, ஆயுதங்களை பாவனைக்கு அப்பால் வைக்கவும் (decommisining), நாட்டை பிரிக்கும் கோரிக்கையை கைவிடவும் நாங்கள் தயார் ஆனால் ஒரு சமஸ்டித்தீர்வு எமக்குத்தேவை என்று நாம் சொல்லியிருந்தால் -

அந்த நிலையில் ரணில் வென்றிருந்தால் - 1987 இன் 13 ம் திருத்தத்தோடு சமாதானப் படுங்கள் என்று ரணிலால் சொல்கியிருக்க முடியாது. இந்த காலத்தில் ரணில் பேசிய பேச்சுக்களை பாருங்கள். வேண்டா வெறுப்பாக ஆனால் எமது பலம் காரணமாக எமக்கு ஒரு குறைந்து 13 பிளஸ் தீர்வையாவது, வட கிழக்கை இணைத்து, தர வேண்டிய நிர்பந்தத்தில் அவர் இருந்தார்.

இதை எமக்கு சாதகமாக்கி சமஸ்டி வரை முன்னேறியிருக்கலாம் என்பது என் நம்பிக்கை.

இது கடந்த காலம்.

இன்று தனது ஆளுமையையும் தன் பக்க நியாயத்தின் மீதுள்ள தர்மத்தையும் மட்டுமே நம்பி களத்தில் கிட்டத்தட்ட தனியாளாக நிக்கிறார் சீவி. அன்று பிரபா நின்றதை போல.

இவரின் நியாயமான கோரிக்கைக்கு பின்னால் அணிதிரள்வது புலத்தவரின் கடைமை அல்லவா? சமஸ்டியே எமது நோக்கு என்று புலம் இவருக்குப் பின்னால் அணிதிரண்டால் அவரின் பலம் அதிகரிக்கும் அல்லவா?

அல்லது இவரையும் காவு கொடுத்து விட்டு, தனி நாட்டுக்கனவில் மிதக்கப் போகிறோமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.