Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

உலக கோப்பையில் நியூசிலாந்தை, இங்கிலாந்து ஜெயிச்சி 32 வருஷம் ஆகிபோச்சி.. தொடரும் வரலாற்று சோகம்!

 

வெலிங்டன்: 32 ஆண்டுகளில் ஒருமுறை கூட உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்தை இங்கிலாந்து வீழ்த்தியதில்லை. இன்றைய தோல்வியின் மூலம், அந்த வரலாற்று சோகம் இங்கிலாந்து ரசிகர்கள் மனதில் இன்னும் தொடருகிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதலில் ஒரு பக்கமே கை ஓங்கியிருப்பது 23 ஆண்டுகளாகத்தான் தொடருகிறது. ஆனால் இந்த இரு நாடுகளின் பஞ்சாயத்து அதுக்கும் மேல..

 

இங்கிலாந்துக்கு முதல் வெற்றி 1983ம் ஆண்டு உலக கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் மோதின. அதில் இங்கிலாந்து வென்றது. அதன்பிறகு அதே தொடரில் மீண்டும் ஒருமுறை இரு அணிகளும் மோதின. அப்போது நியூசிலாந்து வென்றது. அதன்பிறகு இதுவரை நியூசிலாந்து அணியை எந்த ஒரு உலக கோப்பை போட்டியிலும் இங்கிலாந்து வென்றது கிடையாது.

 

அனைத்திலும் நியூசிலாந்தே ஏனெனில் 1983 உலக கோப்பைக்கு பிறகு, 1992, 1996 மற்றும் 2007 ஆகிய உலக கோப்பைகளில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதும் வாய்ப்பை பெற்றன. இருப்பினும், அனைத்து போட்டிகளிலுமே நியூசிலாந்துதான் வென்றுள்ள

 

32 ஆண்டுகளிலேயே இன்றுதான் மிக மோசம் எனவே 32 ஆண்டுகளாக நியூசிலாந்தை இங்கிலாந்து வென்றதில்லை என்ற அவப்பெயரை நீக்க இன்று நடைபெற்ற போட்டி உதவும் என்று இங்கிலாந்து ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வரலாறு காணாதவிதமாக இன்றைய போட்டியில்தான், இங்கிலாந்து இன்னும் மோசமாக தோற்றுள்ளது.

 

சவுத்தி 7 விக்கெட் சாதனை நியூசிலாந்தின் டிம்சவுத்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகள் சாய்த்த பெருமையை இந்த போட்டியில் பெற்றார்.

 

மெக்கல்லமும் சாதனை பிரெண்டன் மெக்கல்லம் 18 பந்துகளில் அரை சதம் அடித்து உலக கோப்பை போட்டிகளிலேயே குறைந்த பந்தில் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் இன்றைய போட்டியில் நிகழ்த்தினார். ஆக மொத்தத்தில், பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே, இங்கிலாந்து பரிதாபமாக விழித்தது.

 

இந்தியா-பாகிஸ்தான் பஞ்சாயத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 1992 உலக கோப்பை முதல்தான் மோதும் வாய்ப்பை பெற்றன. நடப்பு உலக கோப்பையுடன் சேர்த்து ஆறு முறை இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. ஆறிலும் இந்தியாவே வென்றுள்ளது. வருடக் கணக்கு என்று பார்த்தால் 23 வருடங்களாகும். ஆனால் இங்கிலாந்து-நியூசிலாந்து விவகாரம் 32 ஆண்டுகள் நீடிக்கிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/1983-when-the-last-time-england-beat-new-zealand-a-world-cup-221354.html

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இங்கிலாந்தை துவம்சம்செய்த நியூசிலாந்து 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி
 

 

ரிம் சௌத்தி பந்துவீச்சில் மிரட்ட இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிகொண்டது நியூசிலாந்து அணி.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில், 11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் இடம்பெற்று வருகின்றது.

நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் பகலிரவுப் போட்டியாக இன்று நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின்  9ஆவது லீக்  ஆட்டத்தில்‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள்  ஒன்றையொன்று சந்தித்தன.

 

 

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி களமிங்கிய இங்கிலாந்து அணிக்கு நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்  ரிம்சௌத்தி சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தில் தடுமாற சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.

 

துடுப்பாட்டத்தில் தடுமாறிய இலங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஜோய் ரூட் 46 ஓட்டங்களையும் மொய்ன் அலி 20 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

 

நியூசிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ரிம் சௌத்தி 9 ஓவர்கள் பந்துவீசி 33 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து 124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, அதிரடி ஆட்டக்காரர் பிரண்டன் மெக்கலத்தின் சாதனை அரைச்சதத்தின் உதவியுடன் 2 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

நியூசிலாந்து அணி 12.2 ஓவர்களில்  2 விக்கெட்டுகளை இழந்து நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கை  அடைந்து 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

நியூசிலாந்து அணி சார்பாக அணித் தலைவர் பிரண்டன் மெக்கலம் 18 பந்துகளில் அரைச்சதமடித்து உலகக்கிண்ணத்தில் தனது உலக சாதனையை முறியடித்தார்.

18 பந்துகளில் அரைச்சதம் கடந்த மெக்கலம் , 25 பந்துகளில் 77 ஓட்டங்களைப்பெற்ற வேளை வோக்ஸின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் உள்ளடங்கும்.

 

கடந்த 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டியின்போது கனடாவுக்கு எதிராக, 24 பந்துகளில் மெக்கலம் அரைச்சதம் பெற்றமையே இதுவரை சாதனையாக இருந்தது.

 

நியூசிலாந்து அணி சார்பாக மெக்கலம் 77 ஓட்டங்களையும் குப்தில் 22 ஓட்டங்களையும்  பெற்றுக்கொடுத்தனர்.

 

இங்கிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் வோகஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

பந்துவீச்சில் மிரட்டிய ரிம்சௌத்தி இப் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
 

 

http://www.virakesari.lk/articles/2015/02/20/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-8-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF

  • கருத்துக்கள உறவுகள்

நான் நம்பின இரண்டு டீமும் இந்த தடவை சொதப்புது :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் நம்பின இரண்டு டீமும் இந்த தடவை சொதப்புது :D

 

நாங்கள் யாருக்கு என்ன துரோகம் செய்தோம், எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது  அமைச்சரே...!  :huh::)

  • தொடங்கியவர்

உலகக் கோப்பைப் போட்டி "ஃபிக்ஸ்" பண்ணியாச்சு... இந்தியா தோற்கும்... வாட்ஸ் ஆப் பரபரப்பு!

 

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டதாகவும், இந்தியாவுக்கு மீண்டும் கோப்பை கிடைக்காது என்றும், தென் ஆப்பிரிக்காதான் இந்த முறை கோப்பையை வெல்லப் போவதாகவும் ஒரு பரபரப்புச் செய்தி வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது. இந்த செய்தி இப்போது காட்டுத் தீ போல படு வேகமாக பரவி வைரல் ஆகியுள்ளது. இந்த செய்தியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பைப் போட்டிகள் ஏற்கனவே ஃபிக்ஸ் செய்யப்பட்டு விட்டன. தற்போது கோப்பையை வைத்துள்ள இந்தியாவுக்கும் கோப்பை கிடைக்காது, முன்னாள் சாம்பியன்களுக்கும் கிடைக்காது. மாறாக தென் ஆப்பிரிக்காதான் புதிய சாம்பியனாகும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.

 

 

உலகக் கோப்பைப் போட்டி மேலும் அரை இறுதியில் யார் போட்டியிடுவார்கள், இறுதிப் போட்டியில் யார் போட்டியிடுவார்கள் என்பதையும் இது கூறுகிறது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்று இந்த செய்தி கூறுகிறது. தென் ஆப்பிரிக்க அணிக்கு கோப்பை கிடைக்கும் என்றும் இது அடித்துச் சொல்கிறது. மேலும் பிப்ரவரி 22ம் தேதி நடக்கப் போகும் இந்தியா, தென் ஆப்பிரிக்க போட்டியில் இந்தியா தோற்கும் என்றும் இந்த செய்தி கூறுகிறது. மேலும் ஜிம்பாப்வே அணியும் நம்மைத் தோற்கடிக்குமாம். என்ன அதிர்ச்சியான விஷயம் என்றால் இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளின் முடிவுகளையும் அது கணித்துக் கூறியுள்ளது என்பதுதான். ஏ பிரிவில் நியூசிலாந்து அணி முதலிடத்தைப் பிடிக்குமாம். தனது குரூப்பில் அனைத்துப் போட்டிகளிலும் அது வெல்லுமாம். பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தையும், இந்தியா 2வது இடத்தையும் பிடிக்குமாம்.

 

நாக் அவுட் பிரிவில், இந்தியா நியூசிலாந்தைச் சந்தித்து அதை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறும். ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வேயை வீழ்த்தும். இங்கிலாந்தை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தும். பாகிஸ்தானை இலங்கை வீழ்த்தும். அரை இறுதிப் போட்டியில், இந்தியாவை, ஆஸ்திரேலியா வீழ்த்துமாம். இலங்கையை தென் ஆப்பிரிக்கா வீழ்த்துமாம். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை, தென் ஆப்பிரிக்கா வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றுமாம். தலையைச் சுற்றிக் கொண்டு வருகிறதே...!

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/viral-message-india-will-lose-the-world-cup-2015-221390.html

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா 'அதிர்ச்சி வைத்தியர்' வங்கதேசம்? பிரிஸ்பேனில் நாளை மோதல் 

 

பிரிஸ்பேன்: பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவும், அதிர்ச்சி வைத்திய நிபுணர் வங்கதேசமும் நாளை இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் குரூப் ஏ-பிரிவு லீக் போட்டியில் சந்திக்க உள்ளன. ஆனால் புயல் காரணமாக போட்டியே கைவிடப்படும் சூழ்நிலை ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா தனது முதல் லீக் ஆட்டத்தில் 111 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. வங்கதேசம் தனது முதல் போட்டியில், 105 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

 

வங்கதேசம் எழுச்சியா வங்கதேசம் கடந்த 6 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்கவில்லை. ஆப்கானிஸ்தானை வீழ்த்திய விதத்தை பார்த்தாலும், வங்கதேசம் எழுச்சி பெற்றுள்ளதாகவே தெரிகிறது.

 

ஆஸி. கை ஓங்கியுள்ளது ஆனால் இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வங்கதேசம் விளையாடிய 19 ஒருநாள் போட்டிகளில் 2005ம் ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலுமே ஆஸ்திரேலியாதான் வெற்றி பெற்றுள்ளது. இதில் 1999 மற்றும் 2007 உலக கோப்பை போட்டிகளும் அடங்கும். எனவே இவ்விரு நாடுகளை ஒப்பிட்டால் ஆஸ்திரேலியா கைகளே ஓங்கியிருப்பது நன்கு தெரிகிறது.

 

அதிர்ச்சியளிக்குமா ஆயினும் அவ்வப்போது பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி தோல்வியை அளிக்கும் வங்கதேசத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதால் இந்த போட்டியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

 

புயல், மழை இதனிடையே பிரிஸ்பேனில் நாளை, புயல் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவ்வாறு போட்டி கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் பாதி புள்ளிகள் கிடைக்கும். ஒருவகையில் அது வங்கதேசத்துக்கு ஆதாயமே.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/preview-world-cup-2015-match-11-australia-vs-bangladesh-brisbane-221405.html

  • தொடங்கியவர்

இந்தியாவிடம் பெற்ற தோல்வி பாதிப்பிலிருந்து பவுன்ஸ் ஆகுமா பாகிஸ்தான்? மே.இ.தீவுகளுடன் நாளை மோதல்

 

கிறைஸ்ட்சர்ச்: தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியுற்ற பாகிஸ்தானும், மேற்கிந்திய தீவுகளும் நாளை பலப்பரிட்சை நடத்த உள்ளன. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் கடந்த 15ம்தேதி நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. அதேபோல 16ம்தேதி நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசாக அளித்தது. இந்நிலையில் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள ஹக்லி ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் பாகிஸ்தானும், மேற்கிந்திய தீவுகளும் மோதுகின்றன. இரு அணிகளுமே முதல் வெற்றிக்காக வரிந்துகட்டும் என்பதால் போட்டியில் அனல் பறக்கும்.

 

மோசமான பவுலிங் இவ்விரு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்தின. இருப்பினும் ஒப்பீட்டளவில் பாகிஸ்தானின் பந்து வீச்சு பலமானதாகவே உள்ளது. சொகைல் கான், முகமது இர்பான் போனஅற பந்து வீச்சாளர்கள் மே.இ.தீவுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்.

 

பாகிஸ்தானில் குழப்பமோ குழப்பம் பாகிஸ்தானின் பேட்டிங்தான் இன்னும் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. ஓப்பனிங்கில் யாரை இறக்குவது, விக்கெட் கீப்பர் யார் என்பது போன்ற பல கேள்விகள் இப்போதும் எழுப்பப்பட்டு வருகின்றது. அநேகமாக வழக்கமான விக்கெட் கீப்பர் சர்பாஸ் அகமது, உமர் அக்மலுக்கு பதிலாக கிளவுசை மாட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/pakistan-vs-west-indies-icc-world-cup-2015-preview-221402.html

  • தொடங்கியவர்

WI 156/3 After 22.4 overs

  • தொடங்கியவர்

உலகக் கோப்பை லீக் போட்டி: மேற்கிந்திய தீவுகளிடம் பாகிஸ்தான் பரிதாப தோல்வி
 

 

பாகிஸ்தான் - மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்த உலகக் கோப்பை லீக் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

 

311 ரன்கள் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. 1 ரன் மட்டுமே சேர்த்த நிலையில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. மிஸ்பா - ஷோயிப் ஜோடி சிறுது நிலைத்து ஆடினாலும், மிஸ்பா 7 ரன்களுக்கு வீழ்ந்தார்.

 

தொடர்ந்து ஷோயிப் - உமர் அக்மல் ஜோடி பார்ட்னர்ஷிப்பில் 80 ரன்களை பொறுமையாக சேர்த்தாலும் அணியின் வெற்றிக்கு அது பயன்படவில்லை. இருவரும் முறையே 50 மற்றும் 59 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். நட்சத்திர வீரர் அப்ரிடியும் 28 ரன்கள் மட்டுமே சேர்த்தால். முடிவில் பாகிஸ்தான் அணி 160 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வி கண்டது. மே.இ.தீவுகளின் பந்துவீச்சாளர்கள் டெய்லர் மற்றும் ரஸ்ஸல் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான், மே.இ.தீவுகளை பேட்டிங் செய்ய பணித்தது. நிதனமாக துவங்கிய மே.இ.தீவுகள் ஆட்டத்தில் ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்தாலும், அடுத்து வந்த வீரர்கள் பொறுப்பாக ஆடி அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றனர். பிராவோ, ராம்தின், சிம்மன்ஸ் என நிலைத்து நின்று ஆடினர். ரஸ்ஸல் கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடி 13 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார்.

 

முதல் போட்டியில் அயர்லாந்து அணியிடம் தோல்வி கண்ட மே.இ.தீவுகள் அணிக்கு இந்த வெற்றி தேவைப்பட்ட உற்சாகத்தை அளித்துள்ளது. பாகிஸ்தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ளது. இன்றைய தோல்வி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கண்டுள்ள மோசமான தோல்வியாகும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article6919438.ece

  • தொடங்கியவர்

அடை மழையால் ஆஸ்திரேலியா-வங்கதேசம் போட்டி கைவிடப்பட்டது! ஆளுக்கு ஒரு புள்ளி பகிர்ந்தளிப்பு!!

 

பிரிஸ்பேன்: அடாது மழை விடாது பெய்ததால் ஆஸ்திரேலியா, வங்கதேசம் நடுவேயான போட்டி டாஸ் போடாமலேயே கைவிடப்பட்டது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா தனது முதல் லீக் ஆட்டத்தில் 111 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. வங்கதேசம் தனது முதல் போட்டியில், 105 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

 

 வங்கதேசம் கடந்த 6 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்கவில்லை. ஆப்கானிஸ்தானை வீழ்த்திய விதத்தை பார்த்தாலும், வங்கதேசம் எழுச்சி பெற்றதாகவே தெரிந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியா-வங்கதேச அணிகள் இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பிரிஸ்பேனில் தொடங்கும் ஆட்டத்தில் மோதுவதாக இருந்தது. ஆனால் புயல் மழை காரணமாக மதியம் 12.15 மணியாகியும் போட்டிக்கான டாஸ் கூட போடப்படவில்லை. மழை தொடர்ந்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

 

இந்த பிரிவில் 6 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்திலும், 3 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகியவை 2வது இடத்தை பகிர்ந்தபடியும் உள்ளன. வங்கதேசத்துக்கு கிடைத்த புள்ளியால் இங்கிலாந்துக்குதான் நெருக்கடி அதிகரித்துள்ளது. அந்த அணி இதுவரை ஆடிய இரு போட்டிகளிலும் தோற்றுள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/the-aus-vs-ban-match-affected-due-rain-221426.html

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு எதிராக என்ன செய்வார் டேல் ஸ்டெயின்? கொஞ்சம் இக்கட ச்சூடு கண்ணா..!

 

 

மெல்போர்ன்: உலக கோப்பையில் நாளை இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான லீக் போட்டி நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் பற்றிதான் இந்திய அணி வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக தெரிகிறது. சச்சின் டெண்டுல்கரும், ஸ்டெயினிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அபாய மணி அடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக அப்படி என்னதான் செய்வார் ஸ்டெயின்.. என்ற அலட்சியம் இருக்குமாயின், முந்தைய சாதனைகளை ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வருவது நலம்.

 

 

இந்தியாவுக்கு எதிராக என்ன செய்வார் டேல் ஸ்டெயின்? கொஞ்சம் இக்கட ச்சூடு கண்ணா..! இந்தியா-ஸ்டெயின் நடுவேயான சில புள்ளி விவரங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: இந்தியாவுக்கு எதிராக ஸ்டெயின் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டெயின் பவுலிங் சராசரி 25.4 ஆக உள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிராக 19.17தான் அவரது சராசரி. அதாவது, இந்தியாவுக்கு எதிராக சராசரியாக 19 ரன்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் ஸ்டெயின். சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டெயின் ஸ்டிரைக் ரேட் 31.6 ஆக உள்ளது. அதாவது, சராசரியாக 32 பந்துகளில் ஒரு விக்கெட்டை வீழ்த்துகிறார் ஸ்டெயின். ஆனால் இந்தியாவுக்கு எதிராக சராசரியாக 25 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்ற விகிதத்தை ஸ்டெயின் வைத்துள்ளார்.

 

ஸ்டெயினின் ஒட்டுமொத்த ரன் சராசரி 4.82 ஆக உள்ளது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக அதிலும் ஸ்டெயின் சிக்கனம்தான். ஓவருக்கு 4.54 ரன்களைத்தான் சராசரியாக விட்டுக்கொடுத்துள்ளார். 97 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டெயின் 152 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதில் இந்தியாவுக்கு எதிராக 12 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை சாய்த்ததும் அடங்கும். இதற்கு முந்தைய சீரிசில் (2013 டிசம்பர்) இந்தியாவுக்கு எதிராக 2 போட்டிகளில் விளையாடிய ஸ்டெயின் வெறும் 30 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த சீரிசில் இந்தியாவின் டாப் பேட்ஸ்மேன்கள் ஸ்டெயினை எப்படி எதிர்கொண்டனர் என்பதை பார்த்தோமானால், அதிலும் அவரின் கையே ஓங்கியுள்ளது தெரியும். ஷிகர் தவான் 2 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டெயின் பந்தில் அவுட் ஆகியுள்ளார்.

 

ரோகித் ஷர்மா 29 பந்துகளை சந்தித்து 10 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில் முதல் 15 பந்துகள் ரோகித் ஷர்மாவின் பேட்டில் படாமலே விக்கெட் கீப்பரிடம் சென்ற சோகமும் அடங்கும். விராட் கோஹ்லி மட்டுமே கொஞ்சம் பரவாயில்லை. 15 பந்துகளை சந்தித்து 11 ரன்களை எடுத்துள்ளார். இவ்விருவரும் கடந்த சீரிசின்போது ஸ்டெயின் பந்து வீச்சில் அவுட் ஆனதில்லை.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/india-gear-up-face-proteas-pace-battery-221459.html

  • தொடங்கியவர்

ஆசிய அணிகளான இலங்கை-ஆப்கன் நாளை பலப்பரிட்சை! முதல் வெற்றிக்காக இரு அணிகளும் தீவிரம்

 

வெலிங்டன்: தங்களின் முதல் போட்டியில் தோல்வியடைந்த இலங்கையும், ஆப்கானிஸ்தானும் நாளை நியூசிலாந்தின் டுனேடின் பல்கலைக்கழக மைதானத்தில் பலப்பரிட்சை நடத்த உள்ளன. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு நாடுகளில் இலங்கை தனது முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 98 ரன்கள் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தான்,, தனது முதல் ஆட்டத்தில், 105 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்திடமும் தோற்றன. ஆசிய அணிகளான இலங்கை-ஆப்கன் நாளை பலப்பரிட்சை! முதல் வெற்றிக்காக இரு அணிகளும் தீவிரம் இதனிடையே இவ்விரு அணிகளும் நாளை பலப்பரிட்சை நடத்த உள்ளன.

 

இந்திய நேரப்படி, இந்த போட்டி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கும். இரு அணிகளுக்குமே இந்த போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

 

இலங்கை அணி விவரம்: தில்ஷன், திரிமன்னே, சங்கக்கரா, மஹேலா ஜெயவர்த்தனே, மேத்யூஸ் (கேப்டன்), கருணா ரத்னே அல்லது தினேஷ் சன்டிமால், ஜீவன் மென்டிஸ், திசரா பெரேரா, குலசேகரா, ஹெராத், மலிங்கா.

 

ஆப்கானிஸ்தான் அணி விவரம்: முகமது நபி, அப்சர் ஜசாய், அப்டாப் ஆலம், அஸ்கர் ஸ்டானிக்சாய், தவ்லத் ஜத்ரான், குல்பதின் நயிப், ஹமீத் ஹசன், ஜாவீத் அகமதி, மிர்வாய்ஸ் அஷ்ரப், நஜிபுல்லா ஜட்ரான், நாசிர் ஜமால், நவ்ரோஸ் மங்கல், சமியுல்லா ஷென்வாரி, ஷாபூர் ஜர்டான், உஸ்மான் ஹனி.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/sri-lanka-eye-big-win-against-afghanistan-221463.html

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானுக்கு என்னாச்சு?

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானுக்கு என்னாச்சு?

தோத்துப் போச்சு :lol:

  • தொடங்கியவர்

மிஸ்பா ஒரு கோழை, சுயநலமி: பாக். தோல்வியை அடுத்து ஷோயப் அக்தர்
 

 

மே.இ.தீவுகளுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இன்று படுதோல்வியடைந்ததையடுத்து முன்னாள் பாக். வீரர்கள் அந்த அணியின் மீதும் கேப்டன் மிஸ்பா மீதும் கடும் விமர்சனங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

 

ஜியோ நியூஸ் சானலில் ஷோயப் அக்தர் கூறும்போது, “அதாவது அழிவை நோக்கி நம் அணி சென்று கொண்டிருக்கிறது என்று நான் நீண்ட நாட்களாகக் கூறிவருகிறேன். மிஸ்பா உல் ஹக் போல் ஒரு சுயநலம் மிக்க கோழையான ஒரு கேப்டனை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை.

 

அணிக்கு உத்வேகம் மிக்க ஒரு தலைவர் தேவை என்ற நிலையில் 3ஆம் நிலையில் மிஸ்பா களமிறங்கி யூனிஸ் கான் போன்ற வீரர்களைப் பாதுகாத்திருக்க வேண்டும். மிஸ்பா எப்போதும் ஒரு சுயநலமியே. தான் எவ்வளவு ரன்கள் எடுக்கிறோம் என்பதுதான் அவருக்கு முக்கியம், அணி இரண்டாம்பட்சம்தான்.

முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் கூறுகையில், “ஒட்டு மொத்த தேசமும் கோபமாக உள்ளது. ஒரு தொழில்பூர்வ நிர்வாகத்திடமிருந்து இத்தகைய தொழில்பூர்வமற்ற முடிவுகள் வருவது ஆச்சரியமே.

 

முன்னாள் வீரர் முகமது யூசுப் கூறும்போது, “சர்பராஸ் அகமட், அல்லது லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா ஆகியோரை எப்படி உட்கார வைக்கலாம். இத்தகைய பிட்ச்களில் விளையாட தற்போதைய பாக்.வீரர்களிடத்தில் சிறந்த பேட்டிங் உத்திகள் இல்லை. இந்த இலக்கல்ல எந்த ஒரு இலக்கையுமே நம்மால் துரத்த முடியாது, இனிமேலாவது யூனிஸ் கான் ஒரு நல்ல முடிவை எடுப்பாரா?” என்று சாடினார்.

 

மியாண்டட் மட்டும் கொஞ்சம் ஆறுதலாக, “அணிச்சேர்க்கை சரியாக அமைந்து ஒரு வெற்றி வந்துவிட்டால் போதும், உலகக்கோப்பையில் அதன் பிறகு சரியாக விளையாடும்.” என்று கூறினார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/article6920116.ece

 

  • தொடங்கியவர்

ஆஸி. - வங்கதேசம் போட்டி கைவிடப்பட்டதால் இங்கிலாந்துக்கு நெருக்கடி
 

 

பிரிஸ்பனில் ஆஸ்திரேலியா-வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று புயல் மழை காரணமாக கைவிடப்பட்டதால் ஏ-பிரிவு அணிகளில் இங்கிலாந்துக்கு நெருக்கடி அதிகமாகியுள்ளது.

 

புள்ளிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டதால் தற்போது ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகள் தலா ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகளை பெற்றுள்ளது.

இதனால் அட்டவணையில் கடைசி நிலையில் உள்ள இங்கிலாந்துக்கு நெருக்கடி அதிகமாகியுள்ளது.

 

வங்கதேச கேப்டன் மஷ்ரபே மோர்டசா உற்சாகமாகி கூறும் போது, “நாங்கள் இன்னும் 2 அல்லது 3 போட்டிகளில் வெல்ல வேண்டும், இதனை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

 

இங்கிலாந்து நெருக்கடியில் இருக்கிறதா என்று இப்போது என்னால் கூற முடியவில்லை. ஆனால் நாங்கள் அவர்களுக்கு எதிரான போட்டியையும், இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து போட்டிகளையும் எதிர்நோக்குகிறோம்.

வங்கதேசம் அடுத்ததாக இலங்கை அணியுடன் மெல்போர்னில் அடுத்த வியாழக்கிழமை (பிப்.26) மோதுகிறது. மார்ச் 9-ஆம் தேதி அடிலெய்டில் வங்கதேச அணி இங்கிலாந்துடன் மோதுகிறது.

 

இன்றைய புள்ளிகள் பகிர்வினால் வங்கதேசத்திற்கு அடுத்த சுற்றுக்கு முன்னேற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இங்கிலாந்து மீண்டெழ முடியாத தோல்வியை அன்று நியூசிலாந்துக்கு எதிராகச் சந்தித்ததால் அந்த அணி மீண்டும் தங்களை ஓருங்கிணைத்து மீதமுள்ள போட்டிகளில் வெல்வது அவசியமாகியுள்ளது. ஆஸி., நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக அந்த தோல்வி தழுவியது தொடக்கத்திலேயே நிகழ்ந்து விட்டதால் மீதமுள்ள இலங்கை, ஸ்காட்லாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி பெற்றாக வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF/article6919775.ece

  • தொடங்கியவர்

இந்திய பேட்டிங்கிற்கும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சுக்குமான போட்டி: விராட் கோலி
 

 

மெல்போர்னில் நாளை நடைபெறும் பரபரப்பான இந்திய - தென் ஆப்பிரிக்க உலகக்கோப்பை போட்டி இந்திய பேட்டிங்கிற்கும், தென் ஆப்பிரிக்க பந்துவீச்சுக்குமான போட்டியாக இருக்கும் என்று துணைக் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 

"இரு அணிகளுமே சமபலத்துடன் திகழ்கின்றன. அந்த குறிப்பிட்ட நாளில் எந்த அணி எப்படி விளையாடுகிறது என்பதைப் பொறுத்து முடிவுகள் தீர்மானிக்கப்படும். அவர்களிடம் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர், நம்மிடையே பேட்டிங் பலம் உள்ளது. எனவே அவர்கள் பந்துவீச்சுக்கும் நமது பேட்டிங்கிற்கும் இடையிலான போட்டியாக நாளை விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

 

மிகப்பெரிய பவுண்டரிகள் என்பதால் கடைசி ஓவர்களில் ரன் விகிதத்தைக் கூட்டுவது சற்று கடினம். எனவே திட்டமிட்ட அணுகுமுறையே பேட்டிங்கில் கைகொடுக்கும்.

முழு ஸ்டேடியமும் ரசிகர்களால் நிரம்பி வழியும்போது ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் முன்னிலையில் நன்றாக ஆடுவது பெரிய திருப்தியை அளிக்கும். எப்போதும் வெற்றியடைவோம் என்று கூற முடியாது, ஆனால் நன்றாக ஆடினால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அதிகமாக இருக்கும்.

 

நாளைய போட்டியில் வெற்றி பெறுவது மிகப்பெரிய அளவிலான தன்னம்பிக்கையை அளிக்கும். அதாவது நல்ல அணியை வீழ்த்தினோம் என்பது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கும். இந்தத் தடையைக் கடந்துவிட்டால் பிறகு வரும் பெரிய போட்டிகளில் உத்வேகம் கூடுதலாக இருக்கும்.

 

ஆனால் பெரிதாக கணிப்பவன் அல்ல. ஒரு சமயத்தில் ஒரு போட்டியில் கவனம் செலுத்துபவன் நான். ஒரு அணியாக நன்றாக ஆடவேண்டும். யாருக்கும் எதையும் நிரூபிப்பதற்காக அல்ல.”

 

இவ்வாறு கூறினார் கோலி. வழக்கமாக போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கலந்து கொள்வார். ஆனால் இன்று விராட் கோலி கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/article6920051.ece

  • தொடங்கியவர்

சிறீலங்கா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களதடுப்பை தெரிவு செய்து உள்ளது

  • தொடங்கியவர்

AFG 2/0 after 3.3 overs

  • தொடங்கியவர்

AFG 158/4 after 33.2 overs

  • தொடங்கியவர்

AFG 175/6 after 38.1 overs

  • தொடங்கியவர்

AFG 227/9 after 49 overs

  • கருத்துக்கள உறவுகள்

AFG 232 all out 49.4 overs

  • தொடங்கியவர்

சிறிலங்கா 4 விக்கட்டுக்களால் வெற்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.