Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்?? (விவாதம்)ஞ

Featured Replies

சிறிலங்காவின் புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்துள்ளன. பெரும்பாலும் அடுத்த ஜனவரியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தேர்தலில் தமிழர்கள் தங்கள் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விடுவதற்கும் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்த ஒரு விவாதத்திற்கான களமாக இதனை ஆரம்பிக்கிறேன்.

 

இந்த நிலையில் பல தெரிவுகள் குறித்து பல தரப்புகளிலிருந்தும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

 

1. பொது வேட்பாளரை ஆதரிப்பது

2. தேர்தலைப் புறக்கணிப்பது

3. தமிழர் தரப்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி பலத்தை (?) காட்டுவது

4. தமிழ் முஸ்லிம் தரப்புகள் இணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்துவது

5. மகிந்தரை ஆதரிப்பது

 

இதைவிட வேறு தெரிவுகளும் உள்ளனவா என்பது குறித்தும் கதைப்போம்.

எனக்குத் தெரிந்த ஒரே ஒரு தெரிவு, இப்போதுள்ள மகிந்த ஆட்சியை அகற்றுவது. மகிந்த + கோத்தா கூட்டு அரசு இன்னும் 5 வருடங்கள் நீடித்தால் தமிழர்களின் நிலை மிகவும் மோசமாக ஆகிவிடும்.

 

ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு வசந்ததினையோ விடுதலையையோ பெற்றுத் தரப்போவதிலை என்பது உண்மை. ஆனால் அடுத்த அடி எடுத்து வைக்க எந்தவிதமான  வழியும் இல்லாமல் stalemate நிலையில் இருக்கும் தமிழர் தரப்புக்கு ஆட்சி மாற்றம் ஒரு சிறு வழியையாயினும் காட்டும்.

 

சீன சார்பு மிக்க மகிந்த அரசை விட, மேற்குலகின் சார்பு மிக்க ஐ.தே.க யுடன் தமிழர் தரப்பு சில விட்டுக்கொடுப்புகளுடன் அடுத்த கட்டங்களுக்கு நகர்வதற்கு வாய்ப்புகளை ஆட்சி மாற்றம் தரலாம்.

 

மகிந்தவின் பதவி போனால் போர்க்குற்ற விசாரணை அப்படியே மறக்கப்பட்டு விடும் என்பதும் உண்மை. என்னைப் பொறுத்தவரைக்கும் போர்க்குற்ற விசாரணை என்பதே மேற்குலகு மகிந்த அரசை அகற்றுவதற்காக கொண்டு வந்த ஒன்று என்றுதான் நம்புகின்றேன். 

 

த.தே. கூ அமைப்பு பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கு ஒரு சில நிபந்தனைகளையாவது இடல் வேண்டும். மீள் குடியமர்வு, நில அபகரிப்பு போன்ற விடயங்களிலாவது சில நிபந்தனைகளை இட்டு ஆதரிக்க வேண்டும்.

 

இம்முறையும் தீர்க்கதரிசனத்துடன் மகிந்தவை கொண்டு வந்து பெரிய கோட்டை வரைய முற்பட்டால் இன்னும் 5 வருடங்களில் பேரழிவு மாத்திரமே தமிழர்களுக்கு மிஞ்சும்.

  • தொடங்கியவர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளரை ஆதரிப்பதை பகிரங்கப்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் புலிகளோடு கூட்டு என்ற பழைய பல்லவியை ஆரம்பித்து சிங்கள பௌத்த வாக்குகளுக்கு வலை விரிப்பர் மகிந்த அண்ட் கோ!

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த, சரத் பொன்சேகா தவிர்ந்த பிரிதொருவர். சரத் பொன்சேகாவும் சரியான நபர் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வேட்பாளரைக் களம் இறக்கினால் சிங்களவர்கள் பற்றி மட்டுமே சிங்கள அரசு பார்த்துக் கொள்ளும். தமிழ் வாக்குகள் தங்களுக்குக் கிடையாது என்றால் அது அவர்களுக்கு இலாபமே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் என்ன பேசினாலும் தற்போதைய தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்க (மன்னிக்க தமிழரசுக் கட்சிக்கு) மகிந்த ஆட்சிக்கு வர வேண்டும் என்பதும் அதனூடாக தங்களது ”செயலற்ற” அரசியல் முன்னேடுக்கப்பட வேண்டும் என்பதே விருப்பு.

முஸ்லீம்களைப் பொறுத்தவரை வெல்லுபவா்கள்  பக்கம் மட்டுமே அதன் அரசியல் வாதிகள் சாா்ந்து நிற்பதால் கூட்டமைப்போடு அவா்கள் இணையப் போவதில்லை. 

மகிந்த ஆட்சிக்கு மீண்டும் வந்தால் அது சா்வதேச அழுத்தங்களை இலங்கை மீது இன்னம் அதிகாிக்க சந்தா்பமிருப்பதாக நினைக்கிறேன் ..( பொிய ஆய்வாளா்கள் எல்லாம் இருக்கினம் சொல்லுவினம் தானே) 


தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளரை ஆதரிப்பதை பகிரங்கப்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் புலிகளோடு கூட்டு என்ற பழைய பல்லவியை ஆரம்பித்து சிங்கள பௌத்த வாக்குகளுக்கு வலை விரிப்பர் மகிந்த அண்ட் கோ!

 

 

இப்பவும் அது தான் நடக்குது அண்ணா, ஆனால் கூட்டமைப்பே இப்போது இயங்கு நிலையில் (கூட்டமைப்பாக) என்பதே சந்தேகத்துக்கிடமானதே!

  • தொடங்கியவர்

பொது வேட்பாளர் தொடர்பில் பலரும் பேசும் நிலையில் வெற்றிபெறக் கூடிய நிலையிலுள்ள பொது வேட்பாளர் யார்?

 

எனது தெரிவு 

 

1. சிராணி பண்டாரநாயக்கா

2. சஜித் பிரேமதாசா

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வேட்பாளரைக் களம் இறக்கினால் சிங்களவர்கள் பற்றி மட்டுமே சிங்கள அரசு பார்த்துக் கொள்ளும். தமிழ் வாக்குகள் தங்களுக்குக் கிடையாது என்றால் அது அவர்களுக்கு இலாபமே!

மகிந்தரை ஆதரிக்க முடியாது. பொது வேட்பாளரை தமிழர்கள் ஆதரித்தால் சிங்களவர்கள் மகிந்தருக்குப் பின்னால் எடுபடலாம். பொது வேட்பாளர் வந்தாலும் எமது பிரச்சினை தண்மை அடையப்போவதில்லை என்பதால் தமிழர்கள் தந்திரமாகச் செயற்பட வேண்டும். வாக்களிக்காமல் ஒதுங்குவதுபோல் இருக்கக்கூடாது. ஆனாலும் பாதிப்பு இல்லாமல் வாக்களிக்க வேண்டும். :D

  • தொடங்கியவர்

இசை நீங்கள் இப்ப என்ன சொல்ல வாறியள்  :D

 

அடுத்தவனுக்குப் புரியாமல் பேசுவது தானே அரசியலுக்குத் தேவையான முதலாவது தகுதி.. அது இசைக்கு வந்தாச்சுது.

  • கருத்துக்கள உறவுகள்

இசை நீங்கள் இப்ப என்ன சொல்ல வாறியள்  :D

 

அடுத்தவனுக்குப் புரியாமல் பேசுவது தானே அரசியலுக்குத் தேவையான முதலாவது தகுதி.. அது இசைக்கு வந்தாச்சுது.

அடுத்த முனிசிபல் எலெக்ஷனில் குதிக்கப்போறன்.. :D

அதாவது தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்கக் கூடாது. காரணம், மேற்கு நாடுகளில் பிரச்சினையாகிவிடும். ஜனநாயத்தில் அக்கறை இல்லாதவர்கள் என்று ஆகிவிடும்.

அதற்காக இரண்டு முன்னணி சிங்கள வேட்பாளர்களுக்கும் வாக்களித்துவிடக்கூடாது என்கிறேன். காரணங்கள் கீழே.

1) சித்தாந்த அடிப்படையில் மகிந்தருக்கு ஆதரவளிக்க முடியாது.

2) பொது வேட்பாளருக்கு ஆதரவளித்தால் மேற்கு நாடுகள் இந்தியா நினைப்பதுபோல இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு மகிந்த கும்பல்தான் காரணம் என்பதை தமிழர்களும் ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். உண்மையில் பொது வேட்பாளர் வென்றால் இன்னும் கபட நாடகங்கள் அரங்கேறுமே தவிர தமிழர் நிலைமையில் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

ஆகவே தமிழர் ஒருவரை களமிறக்கிவிட்டால் நாங்கள் ஜனநாயகப் பிரியர்கள்போல் ஆகிவிடுவோம். :D எப்படியோ ஜனாதிபதி சிங்கள இனத்தில் இருந்துதான் தேர்வாகிறார். அதை அவர்களே முடிவு செய்துகொள்வார்கள்தானே.

இதனால் தமிழரின் அரசியல் செல்வாக்கு குறைந்துவிடும் என நான் எண்ணவில்லை. அங்கு ஏற்கனவே ஒரு செல்வாக்கும் இல்லை. :unsure:

  • தொடங்கியவர்

மகிந்தர் மீளவும் ஜனாதிபதியானால் தான் சர்வதேச அரங்கில் சிறிலங்கா மேலும் ஓரங்கட்டப்படும் என்ற சத்தமும் ஓராமாய் கேட்குது. 

எனக்கு இதில் நம்பிக்கையில்லை. 

 

தனது நிறுவனத்தின் ஒரு பகுதியான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணையை மறுதலித்து அந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களள்க கைது செய்து தன்னிச்சையாக நடந்து கொண்ட பின்னரும் கண்டனத்துடன் மட்டுப்பட்டுள்ள ஒரு நிறுவனம் அல்லது அதன் பிரதான பங்காளிகளான அமெரிக்கம உள்ளிட்ட நாடுகளும் சிறிலங்காவை ஒதுக்க வேண்டுமானால் மகிந்தர் இன்னுமொரு 15 வருசத்திற்காவது ஜனாதிபதியாக இருக்க வேண்டும்.

 

அதற்குள்ளாக கோத்தாவும் கூட்டாளிகளும் தமிழர் தாயகத்தை முழுமையாக சிங்கள மயமாக்கி விடுவார்கள். தமிழர்கள் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முழுமையாக முடமாக்கப்பட்டு விடுவார்கள்.

 

அதற்காக பொது வேட்பாளர் (அது யாராக இருந்தாலும்) தமிழர்கள் நியாயமான உரிமைகளை மதித்து எல்லா உரிமைகளையும் தந்து விடுவார்கள் என்று சொல்ல வரவில்லை. 

 

ஆனால் சர்வதேசத்திற்கு பயப்படும் ஒரு ஆட்சி தமிழர்களை கொஞ்சம் மூச்சு விடவாவது அனுமதிக்கும் .

 

எனவே இருக்கிற பேயில் எந்தப் பேய் சாதுவானது என்று பார்க்க வேண்டிய நிலையில் தமிழினம் இருக்கிறது.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறைநிலை பற்றி நிதர்சன் சொன்னார். அது உறைந்து போயே இருப்பது தான் எல்லாருக்கும் நல்லது போலப் படுகிறது.

 

அவர்கள் மௌனம் சாதித்தாலே போதும். என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மக்கள் சரியான முடிவெடுப்பார்கள்.

 

அத்துடன் நான் ஏற்கனவே சொன்னது போல தமிழ் தேசியக் கூட்டமைப்போ ஏனைய தமிழ் அமைப்புகளோ இந்த விடயத்தில் பகிரங்கமாக பொது வேட்பாளரை ஆதரிப்பது சிங்கள பௌத்த இன வெறியைத் தூண்டி வாக்குகளை மகிந்த அதிகரிப்பதற்கு வழிவகுத்து விடும்.

 

 

  • தொடங்கியவர்

அடுத்த முனிசிபல் எலெக்ஷனில் குதிக்கப்போறன்.. :D

அதாவது தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்கக் கூடாது. காரணம், மேற்கு நாடுகளில் பிரச்சினையாகிவிடும். ஜனநாயத்தில் அக்கறை இல்லாதவர்கள் என்று ஆகிவிடும்.

அதற்காக இரண்டு முன்னணி சிங்கள வேட்பாளர்களுக்கும் வாக்களித்துவிடக்கூடாது என்கிறேன். காரணங்கள் கீழே.

1) சித்தாந்த அடிப்படையில் மகிந்தருக்கு ஆதரவளிக்க முடியாது.

2) பொது வேட்பாளருக்கு ஆதரவளித்தால் மேற்கு நாடுகள் இந்தியா நினைப்பதுபோல இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு மகிந்த கும்பல்தான் காரணம் என்பதை தமிழர்களும் ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். உண்மையில் பொது வேட்பாளர் வென்றால் இன்னும் கபட நாடகங்கள் அரங்கேறுமே தவிர தமிழர் நிலைமையில் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

ஆகவே தமிழர் ஒருவரை களமிறக்கிவிட்டால் நாங்கள் ஜனநாயகப் பிரியர்கள்போல் ஆகிவிடுவோம். :D எப்படியோ ஜனாதிபதி சிங்கள இனத்தில் இருந்துதான் தேர்வாகிறார். அதை அவர்களே முடிவு செய்துகொள்வார்கள்தானே.

இதனால் தமிழரின் அரசியல் செல்வாக்கு குறைந்துவிடும் என நான் எண்ணவில்லை. அங்கு ஏற்கனவே ஒரு செல்வாக்கும் இல்லை. :unsure:

 

இதிலை ஒரு பிரச்சினை இருக்குது இசை..

 

தமிழ் வேட்பாளர் ஒருத்தர் போட்டியிடுறார் எண்டே வைச்சுக் கொள்ளுவம்...

 

 

மலையக வாக்குகள் இவருக்குக் கிடைக்காது. (எல்லாம் தொண்டமான் இராதாகிருஸ்ணன் கை காட்டிற மகிந்தருக்கே (தற்போதைய நிலவரப்படி) போகும்

 

வடக்கு கிழக்கிலை இருக்கிற சனத்திலையும் மகிந்தரை வீட்டுக்கு அனுப்ப வேணும் எண்ட மனநிலையிலை இருக்கிற சனம் எதிர்க்கட்சி வேட்பாளருக்குத் தான் வோட்டுப் போடும்.

 

கொஞ்சச் சனம் மகிந்தருக்கும் போடும். (டக்கிளசின்ரை சனம் கருணான்ரை பிள்ளையான்ரை சனம்)

 

82 இலை குமார் எலக்சன் கேட்கேக்கையும் யாழ்ப்பாணச் சனம் ஹெக்டர் கொப்பேகடுவுக்கு ஏராளமான வோட்டைப் போட்டது.

 

 

ஆக தமிழ் வேட்பாளர் போட்டியிட்டு அரைவாசித் தமிழ் வோட்டையும் எடுக்காட்டில் தமிழ் வேட்பாளரை தமிழ் மக்களே நிராகரிச்சுப் போட்டினம். அவை சிங்களத் தலைமையத் தான் ஏற்றுக் கொள்ளுகினம் எண்டு  வெண்டு வாறவர் சர்வதேசத்திலை பிரச்சாரம் பண்ண வெளிக்கிடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியை எதிர்பார்ப்பவர்களுடன் கூட்டுச் சேர்வதை விட

வெற்றியை எதிர் நோக்குபவர்களுடன் கூட்டணி அமைக்கப்படுவதே

ராச தந்திரம் :D:lol:

மூன்றாவது முறையும் மகிந்த ஜனாதிபதியா வருவதுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேணும் அதுக்காக வடக்கு கிழக்கு மக்கள் வாக்குகள் போடலாம் என்று எண்ணுகிறேன் ..

ஏனெனில் சந்திரிகாவின் காலத்தில் நடந்த செம்மணி புதைகுழி ..மற்றும் கிருஷாந்தி படுகொலை பற்றிய அப்பொழுது இருந்த வேகமும் அதை விசாரிக்க வேணும் என்று அனைவரும் செயல்பட்ட திறனும் பின்னாளில் சந்திரிகா பதவி விட்டு போனபின் இல்லது போனது ....

ஆக இப்பொழுது உள்ள சூழலில் மகிந்த ராஜபஷவை புறக்கணிப்பதன் மூலம் தமிழர்கள் தங்களுக்குள் எரிந்து கொண்டு இருக்கும் பழிவாங்கும் உணர்வை இழக்க நேரும் நாம் எப்பொழுதும் எதிரியை நம் முன்னாடி வைத்திருந்ததால் மட்டுமே எப்பொழுதும் விழிப்பா இருக்கலாம் ..

அதை விடுத்து மகிந்த தேர்தலில் இல்லது போனால் எல்லாம் பழைய கதையாகி வேறு ஒரு அரச இயந்திரத்தில் மக்கள் சுழன்று கடந்தகால நிகழ்வை எல்லாம் மறந்து போகவே வழி செய்யும் ..

எமக்கு அழிவை கொடுத்தவனை கொண்டே எமக்கான தீர்வை பெற்று கொள்வது நியாயமான தீர்வாகவும் எமக்கு சாதகமான சர்வதேச பார்வையும் கொண்டுவரும் ஆக மகிந்த இருக்குவரை பதவியில் தமிழர்களின் மனங்களில் முள்ளிவாய்க்கால் நினைவும் வாழும் ..

அரசியல் மாற்றம் வேணாமே

 

காலம் இப்படியே இறுகிக் கொண்டு நிற்கப் போவதில்லை. கால மாற்றத்திற்கேற்ப எங்கள் அணுகுமுறையும் இருக்க வேண்டும்.

 

இன்று எத் திசையும் திரும்புவதற்கு முடியாமல் முட்டுச் சந்தியில் முட்டுப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். இச் சூழலில் மாறுதல் வர வேண்டும் என்றால் ஒன்றில் சர்வதேச அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் சடுதியாக நிகழ வேண்டும். இல்லையேல் இலங்கை அரசியலில் ஒரு மாற்றம் வர வேண்டும். சர்வதேச அரசியலில் சடுதியான மாற்றங்கள் நிகழ்வது அரிது என்பதால் இரண்டாவதை நோக்கி நகர்வதே தேவையானது.

 

மகிந்த மீதான போர்க்குற்ற விசாரணையின் வீச்செல்லையாக ஆட்சி மாற்றத்தினைத் தான் சர்வதேசம் தீர்மானித்துள்ளது.  போருக்கு முண்டு கொடுத்த, முழு உதவிகளையும் தாராளமாக செய்த மேற்குலகு தான் இன்று தாமும் பங்கு கொண்ட போரில் தமக்கு நன்கு தெரிந்த குற்றங்களை விசாரிக்க துணிகின்றது.  ஏனெனில் மகிந்தவின் சீன சார்பும், மேற்குலக எதிர்ப்பும். இல்லாவிடின் தாமும் பங்கு கொண்ட ஒரு போரில் இடம்பெற்ற தம்மால் எதிர்வு கூறப்பட்ட குற்றங்களை விசாரிக்க துணியாது.

 

எம்மில் பலர் போர்க்குற்ற விசாரணையின் தீர்ப்பு தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வாக அமையும் என்று நினைத்தால் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே கூறுவேன். வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் இணைந்த தாயகம் என்ற அரசியல் கோட்பாட்டைக் கூட ஏற்க மறுக்கும் சர்வதேசம், நல்ல ஒரு தீர்வை தரப்போவதில்லை.

 

ஆனால் இவர்கள் எதுவும் தரப்போவதில்லை என்பதற்காக மக்கள் போராடாமல் விடப் போவதில்லை. அப்படி அவர்கள் போராடுவதற்கான அடிப்படை பலத்தினையாவது கட்டி அமைக்கவும் அதை தக்க வைக்கவும் மகிந்த அரசு இருக்கும் வரைக்கும் சாத்தியமில்லை. வடக்கில் 30 வீததுக்கும் அதிகமான இடங்கள் பறிக்கப்பட்டு, முக்கிய மீன் பிடித்துறைகள் எல்லாம் சிங்களமயமாகி, பொருளாதாரத்தில் பின் தங்கி  மிகவும் மோசமான நிலைக்கே இன்னொரு மகிந்தவின் ஆட்சி காலம் வழி சமைக்கும்.

 

மகிந்த அரசு ஒரு இனவாத அரசு மட்டுமல்ல. கொடூரமான, சனநாயக எதிர்ப்பை தன் இயங்கியலில் கொண்ட, ஊழல் நிறைத்த மோசமான ஒரு அரசு. இலங்கையின் வரலாற்றில் இந்தளவுக்கு ஒரு மோசமான அரசு இருக்கவில்லை. இவ் அரசு தொடருமாயின் எல்லாவற்றையும் இழந்த தமிழ் மக்கள் இன்னும் இன்னும் மோசமான நிலைக்கே செல்வர்.

 

ஆட்சி மாற்றத்தின் பின் வரும் எந்த சிங்கள அரசும் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கப் போவதில்லை. மீள் குடியேற்றத்தினை செய்யப் போவதில்லை. தாயக கோட்பாட்டை ஏற்கப் போவதில்லை, கொல்லப்பட்ட போராளிகளை இறந்து விட்டார்கள் என்று கூட அறிவிக்கப் போவதில்லை ஆனால் மேற்கின் ஆதரவுடன் வரும் அரசுக்கு குறைந்த பட்சம் மேற்குலகை திருப்தி படுத்த வேண்டிய தேவை வரும். இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தமிழர் தரப்பு முயலுமாயின் ஆகக் குறைந்தது ஒரு 13 + இனையாவது தற்காலிகமாக பெறுவதற்கு போராட முடியும். வடக்கில் இடம்பெறும் சிங்கள மயமாக்கலை தணிக்க முடியும்.

 

சொந்த பலமில்லாமல் இருக்கும் நாங்கள் மேற்குலகின் ஆதரவு இல்லாமல் எம்மால் ஒரு சிறு துரும்பைக் கூட நகர்த்த முடியாது என்பதை உணர்ந்தால் சரி. தீர்க்கதரிசனமாக தீர்மானித்து இன்னொரு முறை கோவணமும் இல்லாமல் நடுத்தெருவிற்கு வர  முடியாது.

 

மகிந்தா அன்ட் கொம்பனி தமிழர்களது தெரிவாக ஒரு போதும் இருக்ககூடாது .

 

தமிழர்கள் மீது  மிக கடுமையான நிலை கொண்ட சிங்களவர் ஒருவரை ஜனாதிபதி ஆக்கினால் உள்ள அநியாயம் எல்லாம் அவர் செய்ய எமக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று ஒரு தியறி எம்மவரிடம் குறிப்பாக புலம் பெயர்ந்தவர்களிடம் இருக்கு .நாட்டில் இருக்கும் தமிழர்களை போட்டு வாங்க சர்வதேசத்திடம் இருந்து எங்களுக்கு விடுதலை கிடைக்கும் .சிங்களம் ஆயுதம் வாங்கினால் அது எங்களுக்கு தானே என்று சொன்னவர்கள் அவர்கள் .யாழில் பலர் அப்படிதான் இருந்தார்கள் .

 

உண்மையில் வேறு ஒரு தெரிவு கூட இல்லை .சிங்களவன் தேர்தலுக்கு முன் ஒரு கதை தேர்தல் முடிந்த பின் ஒரு கதை இதுதான் எமது வரலாறு .

இங்கு எமது தமிழ் அரசியல்வாதிகள் பலரது சுய அரசியலும் பெரிய பங்கை வகிக்கின்றது .தமிழர்களது விடிவை விட சுய அரசியல் ,வியாபாரம் ,தமது எதிர்காலம் தான் அவர்களுக்கு முக்கியம் .

 

ஒதுங்கி இருந்து தீர்வு வேண்டும் என்று எதிர்ப்பை காட்ட அவர்கள் என்றும் முன் வரமாட்டார்கள் ஆனால் அதுதான் எனது ஒரே தீர்வு .

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்?? 

 

 

என்னைப்பொறுத்தவரை

எந்த ஒரு தேர்தலிலும்  தமிழர்கள் சரியாகவே முடிவெடுத்துள்ளார்கள்

இந்த முறையும் முடிவெடுப்பார்கள்

 

  • தொடங்கியவர்

ஜனாதிபதி முறையை மாற்ற வேண்டும் என்ற கொசம் பலமாக எழுப்பப்படுகின்ற இந்த நேரத்தில் ஜனாதிபதி முறை சிறுபான்மை மக்களைப் பொறுத்த வரையில் கூடுதல் அனுகூலமானது என்பது எனது கருத்து. அதிலும் குறிப்பாக ஒருவர்எத்தனை தரம் வேண்டுமானாலும் ஜனாதிபதியாகலாம் என்ற சட்டத் திருத்தத்தின் பின்னர் சிறுபான்மை மக்களின் வாக்ககளை பதவியிலிருக்கும் ஜனாதிபதியால் புறக்கணித்து விட முடியாது.

 

அதிகாரப் பரவலாக்கம் குறித்த பேச்சுக்கள் நடைபெறும் சு+ழலொன்று ஒருவானால் பாராளுமன்றத்தை விட ஜனாதிபதியொருவராலேயே துணிவாக அதனைச் செய்ய முடியும். (செய்வார்களா என்பது வேறு விடயம்)

 

தமிழர்கள் தேர்தலைப் புறக்கணிப்பது என்பதையோ தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிட வேண்டும் என்பதிலோ எனக்கு உடன்பாடில்லை. தேர்தலில் மக்கள் சுயமாக வாக்களியுங்கள் என்று தமிழ் தலைமை அறிவித்தாலே அதிகமான வாக்குகள் எதிரணியின் வேட்பாளருக்குச் செல்லும் என்பது எனது கணிப்பு.

 

தற்போதைய நிலையில் இந்திய அரெிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றன.

 

குறிப்பாக இந்தியா ஆட்சி மாற்றத்தை விரும்பவது தேர்தலில் கணிசமான செல்வாக்கைச் செலுத்தக் கூடிய ஒரு அம்சம்.  முக்கியமாக மலையகத் தமிழ் அரசியல்வாதிகளான தொண்டமான், சாந்தினி சந்திரசேகரன் ஆகியோரை முடிவை மாற்றச் செய்யக் கூடிய சக்தி இந்தியாவிடம் இருக்கிறது.

 

சந்திரிக்கா பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க முன்வந்தால் கொழும்பில் பௌசி, கம்பஹாவில் முதலமைச்சர் ரணதுங்க, களுத்துறையில் ரத்னசிறி விக்கிரமநாயக்கா, பொலனறுவையில் மைத்திரிபால சிறிசேன என சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரும் மகிந்தவைக் கைவிடும் நிலையை உருவாக்கலாம்.  இது 5 சதவீதமான வாக்குகளையாவது மகிந்த இழக்க வழி வகுக்கும்.

 

மதில் மேல் பூனையாக இருக்கிற ஹெல உறுமயவும் கடும்போக்கு சிங்கள வாக்குகளை மகிந்தவிடமிருந்து திசை திருப்ப காரணமாக அமையலாம்.

 

எதிர்க்கட்சி வேட்பாளருக்கான வெற்றி வாய்ப்புகள் உருவாகும் போது ஹக்கீம் அதாவுல்லா பதியுதீன் போன்றோரும் குத்துக்கரணம் அடிப்பார்கள்.

 

எது எப்படியொ தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கள நிலையில் கடும் மாற்றங்கள் தோன்றலாம்.

 

 

கடைசியா ஒரு விசயத்தை சொல்லப் போறன். இதைக் கேட்டு ஆரும் சிரிக்கக் கூடாது.  :unsure:

 

எனக்கென்னவோ மகிந்த தோற்றால் இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படும் போலத் தோன்றுகிறது. அது தமிழர்களுக்கு படும் பாதகமாகவோ அல்லது கடும் சாதகமாகவோ அமையலாம்... 

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கடைசி வரியைத்தான் நானும் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில பழமொழி ஒன்று நினைவுக்கு வந்து துளைக்கின்றது.

Damn you do and damn you don't

வாக்களிக்காமல் விட்டதால் கொத்தாக இழந்தோம். 2005 பகிஸ்கரிப்பு, உள்நாட்டு, சர்வதேச ரீதியாக, மிகப் பாரிய தவறு என்பதை, நடந்தவை, உறுதிப்படுத்தி உள்ளன.

நமது மக்கள் இன்னும், சிங்கள ஆட்சியின் பிடியில் இருக்கும் வரை, தேர்தல் அவர்களது அரசியல் என ஒதுங்குவது முட்டாள் தனமானது மட்டுமல்ல, தற்கொலைக்கு ஒப்பானது.

முக்கியமாக எமது பகிஸ்கரிப்பை அன்றும், இன்றும், என்றும் மகிந்தர் விரும்புகிறார் என்பதே உண்மை.

இம்முறை ஒன்றினைந்த வாக்குப்பலத்தால் ஏதாவது உத்தரவாதம் பெற முடியுமா என பார்ப்போம்.

அவர்கள் நினைத்ததற்கும் மேலாக, ஐ.நா ஆட்கள் விசாரனை தமிழர் மத்தியில் தீவிரமாக நடப்பதை இப்போது அறிந்து, வெளியார் வன்னி செல்ல தடை போட்டுள்ளார்கள். முன்னால் புலி உறுப்பினர், இரகசிய சாட்சியம் அளித்தார் என்ற சந்தேகத்தில் சுடப்பட்டார்.

சிங்கள பத்திரிகையாளர் ஒருவர், மகிந்த, அதிகமாக குழம்பி இருப்பதாக எழுதுகிறர்.

கேள்விகள்.

1. இந்தியாவிற்கும், மேற்குலகுக்கும் சீனத்து செல்லம் மகிந்த பதவியில் இருக்கக் கூடாது என்ற நிலையில், மகிந்த எதற்கு இரண்டு வருடங்கள் முன்னதாக தேர்தலை சந்திக்க விரும்புகிறார் ?

2. அதாவது மூன்று வருடங்கள் அதிகமாக பெற, கையில் இருக்கும் இரண்டு வருடங்களை ரிஸ்க் எடுக்க முயல்கிறார். ஏன்?

3. தேர்தலில் வெல்லாவிடில், ஐ நா முடிச்சு இறுகும் நிலையில் அவரதும், தம்பி கோத்தாவினதும் நிலை என்ன?

பதில்

1. இந்த தேர்தல் நோக்கம், மேற்குலகுக்கும், ஐ நா மனித உரிமை சபைக்கும், அதன் மார்ச் மாத கூட்டத்துக்கு முன் மக்கள் தனது பக்கம், தான் சர்வாதிகாரி அல்ல என காட்ட விரும்புகிறார்.

2. அவர்களுக்கு, என்ன தில்லுமுல்லு செய்தும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் தான் ரிஸ்க் எடுக்கிறார்கள்.

3. மகிந்த தான் அடுத்த 5 முதல் 7 வருடங்களுக்கு ஜனாதிபதி என்று கருதி, அதற்கேற்ப திட்டமிடுவதே புத்திசாலித்தனமானது.

Edited by Nathamuni

ஜனாதிபதித் தேர்தல்: தமிழ்க் கட்சிகளின் முன்னாள் உள்ள தெரிவுகள் - நிலாந்தன்
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.