Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்ணன் சீமானுடன் கேள்விக்கு என்ன பதில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜய்,கமல் ஈழ மக்களுக்காக அரசியல் செய்கினமா? எப்போதிலிருந்து?

விக்கி அங்கு இருக்கும் மக்களுக்கு எதுவும் செய்கிறாரோ இல்லையோ[தலைவராலே முடியாமல் போய் விட்டது விக்கி செய்வார் என எதிர் பார்ப்பது சுத்த மடத்தனமாய் இல்லை.]அது வேற விசயம்...விக்கியையை பற்றி கதைக்கும் அருகதை ஈழத்து மக்களை வைத்து வியாபாரம் செய்யும் சீமானுக்கு இல்லவே இல்லை.பேசாமல் வாயை மூடிட்டு இருப்பது அவரது நீண்ட கால அரசியலுக்கு நல்லது

Edited by ரதி

  • Replies 85
  • Views 5.2k
  • Created
  • Last Reply

சுடச்சுட .....சும்மா செருப்ப P யில தோச்சு அடிச்ச மாதிரி ஆள் சொன்ன பதில்கள்

நல்லாவே நம்ம கள உறவுகளை உசுப்பிப்போட்டுது போல

அது சரி அபிவிருத்திக்கு மக்கள் வாக்கு போட்டிருந்தால் மஹிந்தரே வடக்கிற்கும் மன்னராகியிருக்க வேண்டும்

விக்கி அய்யா எப்படி தேர்வு செய்யப்பட்டார்...?

டக்கி மத்தியில் கூட்டாற்ச்சி மாநிலத்தில் சுயாற்ச்சி

விக்கி புலத்தில் ஒன்றிணைவு புலம்பெயர்சிடம் ஈழம் அவ்வளவே

(இல்லை என்பவர்கள் புலம்பெயர்சிடம் மாவை ஈழமே தீர்வு என்று முழங்கியத்தை என்னவென்று கூறுங்கள்)

காட்டிக்குடுத்தவன் எல்லாம் போராளி என்றால் ...கூட்டிக்கொடுத்தவன் எல்லாம் மாவீரனா...?

கத்தியும் புலிப்பார்வையும் தான் இப்போது நம்மோட பிரச்சினையே , கத்தியின் முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டு எத்தனைபேர் இங்கே கருத்தெழுதுகிறீர்கள்

சீமான் தான் போராடவேண்டுமா...? தமிழர் என்று கூவும் எல்லோரும் படத்தை புறக்கணித்திருக்கலாமே

எனக்கு இந்த வீடியோ பார்க்கும் போது கேள்வி கேட்கும் நபர் சில கள உறவுகளை ஞாபகப்படுத்துகிறார்

சீமான் அண்ணா எதை சொன்னாலும் எதை செய்தாலும் கண்மூடித்தனமாக அதை சரியென்று வாதாடுவோர் ஒருபக்கம். அதேபோல் கண்மூடித்தனமாக அவை அனைத்தையும் பிழை என்று நிறுவ முயற்சிப்போர் இன்னொருபக்கம். இந்த இரண்டிற்குள்ளும் மாட்டுப்படாதவர்களால் தான் சுயமாக கருத்து வைக்க முடியும்.

நான் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதில்லை. சீமான் அண்ணா என்றாவது மாறலாம் என்பதையும் எதிர்பார்த்தே வந்திருக்கிறேன். அதுவும் முதல்வர் என்ற பதவியை அவர் அடைந்த பின்னர் அந்த நிலை வரக்கூடிய சாத்தியங்கள் வரக்கூடும், அப்படி வரும் வரைக்கும் அவருக்கு ஆதரவு கொடுக்கலாம் என்ற நிலைப்பாடே இருந்தது.

ஆனால் புலிப்பார்வை படம் தொடர்பில் அவர் எடுத்த நிலைப்பாட்டுடன் அவர் பற்றிய நம்பிக்கை குறைந்து விட்டது. (புலிப்பார்வை படத்தை எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை, ஆதரவு கொடுக்காமல் விட்டிருக்கலாம்.)

ஆனாலும் தமிழகத்தில் ஈழம் பற்றிய செய்திகளை தொடர்ந்தும் எடுத்து செல்வதால் அவரை புறக்கணிக்கவும் இல்லை.

தமிழகத்தில் ஈழம் பற்றி குரல் கொடுக்கும் யாரும் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய பலத்தை கொண்டில்லை என்பதும் கூட இவரை புறக்கணிக்க முடியாமல் உள்ளமைக்கு இன்னொரு காரணம்.

ஆனால் புலிப்பார்வை படம் தொடர்பில் இவர் எடுத்த நிலைப்பாட்டின் பின் இவருக்கான ஆதரவை பலர் விலக்கி விட்டார்கள் என்பது மட்டும் உண்மை.

சீமான் அண்ணாவின் எதிர்கால செயற்பாடுகள் நல்லவிதமாக அமையும் பட்சத்தில் ஆதரவை விலக்கியவர்கள் மீள் ஆதரவு கொடுக்க முன்வரலாம்

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

விஜய்,கமல் ஈழ மக்களுக்காக அரசியல் செய்கினமா? எப்போதிலிருந்து?

விக்கி அங்கு இருக்கும் மக்களுக்கு எதுவும் செய்கிறாரோ இல்லையோ[தலைவராலே முடியாமல் போய் விட்டது விக்கி செய்வார் என எதிர் பார்ப்பது சுத்த மடத்தனமாய் இல்லை.]அது வேற விசயம்...விக்கியையை பற்றி கதைக்கும் அருகதை ஈழத்து மக்களை வைத்து வியாபாரம் செய்யும் சீமானுக்கு இல்லவே இல்லை.பேசாமல் வாயை மூடிட்டு இருப்பது அவரது நீண்ட கால அரசியலுக்கு நல்லது

ஆமாம் விக்கியால ஒன்றும் புடுங்க முடியாது என்பது ஒருபக்கம் இருக்க ....

இன்னும் இந்திய தமிழன் முக்கால்வாசிக்கு இலங்கை தமிழர் போராட்டவரலாறு  ராஜீவின் கொலையுடன் தான் ஆரம்பிக்கிறது,

நிலைமை அப்படியிருக்க சீமான் போன்றவர்கள் இப்படி பேசுவதே இப்போதைக்கு எமக்கு பெரியவிடயம்...

அதனை விட்டு விக்கியை பற்றி பேசும் தகுதி சீமானுக்கு இல்லை என்றால் வேறு யாருக்கு வாசுதேவவுக்கு இருக்கிறதா...?

விக்கி ஒரு நீதியரசர் என்பதை தவிர வேறு என்ன தகுதி அவருக்கு இருக்கிறது-உண்மையிலே இவர் போட்டியிடும்வரை இவரை யார் என்றே எனக்கு தெரியாது  (இலங்கையின் நீதித்துறையைப்பற்றி எங்களுக்கு தெரியாததா

நீதியரசருக்கு சட்ட  அறிவு தேவையில்லை ஆட்சியாளர் எழுதி கொடுப்பதை வாசிக்க தெரிந்தால் போதும் இப்ப இந்தியா எழுதிக்கொடுப்பதை வாசிக்கிறார் ), அதை விட்டு நமக்கு ஆதரவாக வரும் ஒரு குரலை கூட உதாசீனம் செய்யும் நிலையில் நாம் இல்லை  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன் இளையராஜா கச்சேரி கனடாவில் நடந்தது. இதை சீமான் எதிர்த்தார். மாவீரர் மாதத்தில் கச்சேரி வைப்பதால் எதிர்க்கிறோம் என்றார். சீமானது எதிர்ப்பு சரியில்லை என்பது அப்போது என்னுடைய வாதம்.

இளையராஜா கச்சேரியை யார் தூண்டுதலால் எதிர்த்தாரோ தெரியாது. ஆனால் இந்தமுறை உஷாராகிவிட்டார். 'புலிப்பார்வையை எதிர்க்கவும், கத்தியை எதிர்க்கவும்' என்று போடப்பட்ட கட்டளைகளை இந்த முறை அவர் உதாசீனம் செய்துவிட்டார். :D அதுதான் பிரச்சினை. அதாவது பெற்றுக்கொண்ட அனுபவத்தின் வாயிலாக தன்னைக் கொஞ்சம் திருத்திக் கொண்டுள்ளார்.

புலிப்பார்வை, கத்தி பிரச்சினைகளில் அவர் சொன்ன விடயங்கள் இவைதான்.

1) புலிப்பார்வை இயக்குநர் புரிதல் இல்லாமல் படம் எடுத்துவிட்டார்.

2) அதை பேசியே தீர்த்துக் கொள்ளலாம்.

3) எதிர்த்துப் போராட விரும்புகிறவர்கள் நீங்களே போராடுங்களேன். ஏன் சீமான்தான் போராடவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? (இது இளையராஜா கச்சேரி விடயத்தில் கற்றுக்கொண்டது. :D )

4) லைக்கா கெட்ட நிறுவனம் என்றால் புலம்பெயர் மக்கள் போராடியிருப்பார்கள். அதைப் புறக்கணித்திருப்பார்கள். (நியாயம்தானே..)

இந்தப் பேட்டியிலும் விக்னேஸ்வரன் ஐயாவின் இரண்டு செய்திகளைத்தான் விமர்சித்துள்ளார்.

1) தமிழ்நாட்டில் தனி ஈழமே தீர்வு என்பது எமக்குப் பிரச்சினையாக உள்ளது.

2) சுயநிர்ணய உரிமையைப் பெறுவதே இனப்பிரச்சினைக்கான தீர்வு.

தமிழ் ஈழம் என்று பேசினால் குடலை உருவிவிடுவோம். இது சிங்களத்தின் நிலைப்பாடு. ஆக சிங்களத்தின் நிலைப்பாட்டை ஏற்கும்படி சொல்கிறது முதலாவது கருத்து.

தனி ஈழமே தீர்வு என வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரித்தவர்கள் ஈழமக்கள். திடீரென்று இவர் வந்து இப்போதைக்கு 13தான் தீர்வு; இறுதித்தீர்வாக சுயநிர்ணய உரிமையைப் பெற முயல்வோம் என்கிறார். இதைச்சொல்லித்தான் தேர்தலில் வாக்கு கேட்டார்களா?? அப்படி இல்லாத பட்சத்தில் இவைதான் இறுதித்தீர்வு என்று எழுந்தமானமாக எவ்வாறு சொல்லமுடியும்?? முதல்வர் பதவியை விட்டு விலகியபின்னர் நான் தீர்வு விடயத்தில் தவறு இழைத்துவிட்டேன் என்று சொன்னார் என்றால் என்ன நிலைமை? :blink:

சீமான் சொல்துபோல தந்தை செல்வாவுக்கு தனி ஈழமே தீர்வு என்று சொல்லி ஆதரவு வழஙகிய கட்சி ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி. இன்றும் அதே நிலைப்பாட்டில் உள்ளது சீமானின் தலைமையில். இந்த உறுதியான நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. நேரத்திற்கேற்ப இவர்கள் தீர்வுகளை மாற்றிக்கொள்ளவில்லை.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் முக்கியமான இன்னும் இரு விடயங்களையும் தொட்டிருந்தார்.

1) தமிழக முதல்வரை சந்திக்கவில்லை. மாறாக மத்திய அரசிடம் மட்டும் பேசினார்.

2) சென்னை வந்தவர் "பாஜக கட்சி அலுவலகத்தில்" இருந்த பேட்டி கொடுத்துவிட்டுச் சென்றார்.

அரசகருமங்களில் தேர்ந்தவர்களுக்குத் தெரியாதா எந்த இடத்தில் நின்று பேட்டி கொடுக்கலாம் என்பது?? பாஜக தனது அரசியல் இலாபத்துக்காகவும், தமிழகத்தை அழுத்தி வைப்பதற்காகவும் இச்செயலை செய்துள்ளது. இதை அறியாமல் மறுபடியும் சறுக்கிவிட்டார். உண்மையில் பொதுவான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றைஒரு ஊடக மையத்தில் வைத்திருக்கலாம்.

ஆக விக்கி அவர்கள் இந்தியாவின் குரலாக ஒலிக்கிறார். இதைத்தான் சீமான் எதிர்க்கிறார். இந்த நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன். இந்தியாவை மீண்டும் நுழையவிட்டால் இன்னொரு பேரழிவு நிச்சயம்.

Edited by இசைக்கலைஞன்

புலிப்பார்வையை எதிர்க்கவும், கத்தியை எதிர்க்கவும்' என்று போடப்பட்ட கட்டளைகளை இந்த முறை அவர் உதாசீனம் செய்துவிட்டார். :D அதுதான் பிரச்சினை.

புலிப்பார்வை, கத்தி பிரச்சினைகளில் அவர் சொன்ன விடயங்கள் இவைதான்.

1) புலிப்பார்வை இயக்குநர் புரிதல் இல்லாமல் படம் எடுத்துவிட்டார்.

2) அதை பேசியே தீர்த்துக் கொள்ளலாம்.

3) எதிர்த்துப் போராட விரும்புகிறவர்கள் நீங்களே போராடுங்களேன். ஏன் சீமான்தான் போராடவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

4) லைக்கா கெட்ட நிறுவனம் என்றால் புலம்பெயர் மக்கள் போராடியிருப்பார்கள். அதைப் புறக்கணித்திருப்பார்கள். (நியாயம்தானே..)

புலிப்பார்வை, கத்தி ஆகிய படங்களை எதிர்க்க சொல்லி யார் கட்டளையிட்டது என்று சொன்னால் நாமும் தெரிந்து கொள்ளலாம்.

இவர் எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை, இசை வெளியீட்டிற்கு சென்றதும், இப்படியான படங்கள் வர வேண்டும் என்று கூறியதும் தவறு.

படம் பற்றி பேசி தீர்க்கலாம், படத்தில் திருத்தங்களை மேற்கொண்ட பின் தம்மிடம் காட்டி உறுதிப்படுத்தப்பட்ட பின் தான் படம் வெளிவரும் என்றார்கள். இப்பொழுது படம் வெளிவந்து விட்டது. அதுவும் ஈழப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும், பல சித்தரிப்புகளை ஏற்படுத்தியும் தான் வந்துள்ளது.

படம் திருத்தப்பட்ட பின்னரும் தவறாக இருக்கும் பட்சத்தில் தாமும் படத்தை எதிர்ப்போம் என்று கூறியதாக இன்னொரு திரியில் சொன்னீர்கள். ஆனால் இப்பொழுது எதிர்ப்பேதும் இல்லாமல் படம் வெளிவந்து விட்டது.

நான் பார்க்கவில்லை. பார்ப்பதாகவும் இல்லை. ஆனால் தவறான விடயங்கள் இருக்குமானால் எதிர்க்கப்பட வேண்டியதே..

ஆனால் அந்த எதிர்ப்பை சீமான் மட்டும்தான் செய்யவேண்டும் என எதிர்பார்க்கவில்லை. யாரும் செய்யலாம். எல்லோரும் செய்யலாம்.

தனக்கு கட்டளை போடும் விடயத்தை சீமானே தனது பேட்டிகளில் சொல்லியுள்ளார். பழைய திரியில் இணைக்கப்பட்டுள்ளது.

இப்படியான படங்கள் வெளிவரவேண்டும் என கட்டளை இடுபவர்களுக்காக பேசியிருக்கலாம். ஆனால் அவ்வாறு பேசியிருக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. இதையும் காலப்போக்கில் திருத்திக் கொள்ளவார் என நினைக்கிறேன்.

எது எவ்வாறெனினும் இவற்றால் ஒரு நன்மை நிகழ்ந்துள்ளது. 'ஏன் இதற்கு சீமான் போராடவில்லை' என்கிற கேள்வி அடுத்தமுறை வராது. :icon_idea:

சீமான் அண்ணா போராடியிருக்க வேண்டும் என்று இங்கு நாம் கேட்கவில்லை. ஆனால் படத்துக்கு எதிர்ப்பு வருகின்றது என்றதும் இவரை போய் சந்தித்ததும் இவராகவே தான் படக்குழுவினருக்கு ஆதரவாக கதைத்தார்.

இவர் இப்படம் பற்றி எதுவும் பேசாமல் மௌனமாக இருந்திருக்கலாம், அல்லது வைகோ ஐயா போல் ஏதாவது சாட்டுப்போக்கு சொல்லி இசை வெளியீட்டிற்கு கலந்து கொள்ளாமல் தவிர்த்திருக்கலாம்.

இனம், மெட்ராஸ் கபே போன்ற படங்களுக்கு தானாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தியவர் புலிப்பார்வை படம் தொடர்பில் சரியான நிலைப்பாட்டை எடுக்காமல் விட்டமைக்கு அவரது சுயநல அரசியல் இடம் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை.

10801863_908787502467557_687948009993334

1486726_910144048998569_3925833440633870

10712885_908624539150520_606814208914003

(படங்கள்: Facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அண்ணா போராடியிருக்க வேண்டும் என்று இங்கு நாம் கேட்கவில்லை. ஆனால் படத்துக்கு எதிர்ப்பு வருகின்றது என்றதும் இவரை போய் சந்தித்ததும் இவராகவே தான் படக்குழுவினருக்கு ஆதரவாக கதைத்தார்.

இவர் இப்படம் பற்றி எதுவும் பேசாமல் மௌனமாக இருந்திருக்கலாம், அல்லது வைகோ ஐயா போல் ஏதாவது சாட்டுப்போக்கு சொல்லி இசை வெளியீட்டிற்கு கலந்து கொள்ளாமல் தவிர்த்திருக்கலாம்.

இனம், மெட்ராஸ் கபே போன்ற படங்களுக்கு தானாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தியவர் புலிப்பார்வை படம் தொடர்பில் சரியான நிலைப்பாட்டை எடுக்காமல் விட்டமைக்கு அவரது சுயநல அரசியல் இடம் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை.

படக்குழுவினருக்கு ஆதரவாகக் கதைத்தது எப்படித் தவறாகும்? படமே அப்போது வெளிவரவில்லை. பொரிக்காத முட்டைக்குள் சேவல்குஞ்சு இருக்கு என்று முட்டையை உடைப்பதற்கு சமமானது இது. :D

இப்போது படம் வெளிவந்துவிட்டது. இப்ப ஆளைப் பார்த்து நாலு கேள்வி கேட்கலாம். தப்பில்லை. யாராவது செய்யத்தான் போகிறார்கள். :huh:

மெட்ராஸ் கஃபே, இனம் போன்ற படங்களின் இயக்குநர் / தயாரிப்பாளர்களுடன் பேசி சரிசெய்ய முடியாத நிலை இருந்ததாக சொல்லியிருந்தார்கள் (வேற்று மாநிலக்காரர்.. போடா வெண்ணை என்றுவிடுவார்கள். :lol: ) ஆகவே ஒரு நிலைப்பாட்டை இலகுவாக எடுக்க முடிந்தது. :huh:

Edited by இசைக்கலைஞன்

என்னைப் பொறுத்தவரையில் ஈழத் தனிழனை விட கேவலமானா நாய் சாதி இந்த உலகத்தில் இருக்கமுடியாது, ஓரு அறிவு கொண்ட அல்கி உயிர் இனத்துக்கு இருக்கும் இன உணர்வு கூட ஈழ தமிழனுக்கு இல்லை, தனது இனத்தை அழித்தவனிடம் (சிங்களவன் & மலையாளி) பணத்தை வாங்கி விட்டு இங்கு வந்து கத்துபவன் ஒரு பக்கம், தனது அரசியலை வளர்க்க தனது இனத்தை விற்பவன் ஒரு பக்கம், ஏதோ பிரபாகரன் என்ற தனி மனிதனும் அவருடைய இயக்கமும் தங்களுடன் முரண்பட்டதற்காக அவர்ளை பழிவாங்குவதாக நினைத்து கொண்டு தனது இனத்தின் அழிவை ஊக்கப்படுத்தும் இன்னொரு கூட்டம். இப்படி தந்து இனத்தையே அழித்து சுய இன்பம் காணுபவர்களை தமிழனி மட்டும் தான் காணலாம்.

படக்குழுவினருக்கு ஆதரவாகக் கதைத்தது எப்படித் தவறாகும்? படமே அப்போது வெளிவரவில்லை. பொரிக்காத முட்டைக்குள் சேவல்குஞ்சு இருக்கு என்று முட்டையை உடைப்பதற்கு சமமானது இது. :D

இப்போது படம் வெளிவந்துவிட்டது. இப்ப ஆளைப் பார்த்து நாலு கேள்வி கேட்கலாம். தப்பில்லை. யாராவது செய்யத்தான் போகிறார்கள். :huh:

மெட்ராஸ் கஃபே, இனம் போன்ற படங்களின் இயக்குநர் / தயாரிப்பாளர்களுடன் பேசி சரிசெய்ய முடியாத நிலை இருந்ததாக சொல்லியிருந்தார்கள் (வேற்று மாநிலக்காரர்.. போடா வெண்ணை என்றுவிடுவார்கள். :lol: ) ஆகவே ஒரு நிலைப்பாட்டை இலகுவாக எடுக்க முடிந்தது. :huh:

சீமான் அண்ணாவுக்கு படத்தை முன்னரேயே போட்டுக்காட்டியிருந்தார்கள். அவருக்கு படத்தின் கதை தெரியாது என்று கூறி சமாளிக்க வேண்டாம். பாக்கியராசன்.சே அவர்களும் படக்கதையை முகநூலில் பின்னர் பகிர்ந்திருந்தார்.

புலிப்பார்வை படத்தை எதிர்த்து முகநூலில் பல நாம் தமிழர் கட்சியினர் கருத்துக்கூறி வந்த நேரம் சீமான் அண்ணா புலிப்பார்வைக்கு ஆதரவு கொடுத்தவுடன் குழம்பி விட்டிருந்தார்கள். சிலர் ஆதரவை விலக்கி கொண்டார்கள். சிலர் திடீரென புலிப்பார்வை படத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.

இப்பொழுது படம் வெளியிடப்பட்டும் நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் அமைதியாக உள்ளார்கள். இனி படத்தை எதிர்த்து போராடுவார்கள் என்று நம்ப முடியாது. ஒருவேளை போராடினாலும் ஏற்கனவே படத்தை எதிர்த்தவர்கள் பற்றி விமர்சனம் வைத்தவர்கள் இனி படத்தை எதிர்த்தால் மீளவும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களுக்குள் முரண்பாட்டை ஏற்படுத்துவதாகவும் நாம் தமிழர் கட்சி பற்றி ஏனையோர் கேலி செய்யும் விதமாகவும் அமைவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம்.

இனி இவர்கள் போராட்டம் செய்து என்ன பலன் என்று புரியவில்லை. ஈழப்போராட்டம் பற்றிய புரிதல் இல்லாத சாதாரண மக்கள் படத்தை பார்த்து விட்டு ஏதோ சாதாரண சினிமா படம் பார்த்த கணக்கில் படம் சூப்பர், தலைவர் திரும்பி வருவார், ஈழத்தமிழர்களுக்காக படம் எடுத்த உங்களுக்கு நன்றி என்று கூறும் கருத்துக்களை வீடியோ எடுத்து உலாவ விட்டுள்ளார்கள்.

Edited by துளசி

படக்குழுவினருக்கு ஆதரவாகக் கதைத்தது எப்படித் தவறாகும்? படமே அப்போது வெளிவரவில்லை. பொரிக்காத முட்டைக்குள் சேவல்குஞ்சு இருக்கு என்று முட்டையை உடைப்பதற்கு சமமானது இது. :D

இப்போது படம் வெளிவந்துவிட்டது. இப்ப ஆளைப் பார்த்து நாலு கேள்வி கேட்கலாம். தப்பில்லை. யாராவது செய்யத்தான் போகிறார்கள். :huh:

மெட்ராஸ் கஃபே, இனம் போன்ற படங்களின் இயக்குநர் / தயாரிப்பாளர்களுடன் பேசி சரிசெய்ய முடியாத நிலை இருந்ததாக சொல்லியிருந்தார்கள் (வேற்று மாநிலக்காரர்.. போடா வெண்ணை என்றுவிடுவார்கள். :lol: ) ஆகவே ஒரு நிலைப்பாட்டை இலகுவாக எடுக்க முடிந்தது. :huh:

சரியாக கூறீனீர்கள் இசை, இது எங்கட ஆக்களுக்கு புரியாது, அதை விட peer pressure என்பது கத்தி புலி பார்வை விடய்த்தில் இருக்கு அதனால் தான் சீமானால் முழு வீச்சாக அவரது முழு எதிர்ப்பை காட்ட முடியவில்லை, அதை விட முருகதாசே கூறிய்ருந்தார் நாங்கள் சுபாச்கரனை நம்பி பட எடுகவில்லை கருணாகரனே தயாரிப்பாளர் என்றே படத்தை தொடங்கினோம், ஆனால் கருணாகரன் தான் இடையில் லைக்காவை அறிமுகப்படுத்தினார் என்று, இதற்குள் பல conflict of interests பிரச்சனைகள் இருக்கு அதனால் தான் சீமான் இந்த விடயத்தில் தளர்வு போக்கை கடைபிடித்தார், ஆனால் எப்படி எல்லாம் தமிழ் ஈழ உணர்வை அழிக்காலாம் என்று ரூம் போட்டு சிந்திக்கும் தமிழனுக்க அதை எல்லாம் அலசி ஆராய நேரம் இல்லை

புலிப்பார்வை படத்தை எதிர்க்க சொல்லி இத்திரியில் நாம் கதைக்கவில்லை. சீமான் அண்ணா ஆதரவு கொடுத்தது பற்றி தான் இங்கு கதைக்கிறோம்.

படம் ஒழுங்காக திருத்தப்பட்டு வராவிட்டால் படம் வெளிவரக்கூடாது என்று தாம் போராட்டம் நடத்துவோம் என்பதும் நாம் தமிழர் கட்சியினர் கூறியது தான். அந்த கருத்தை யாழில் வேறொரு திரியில் முன்னர் இசை அண்ணா இணைத்திருந்தார்.

ஆக மொத்தத்தில் உங்களால் தான் இங்கு என்ன கதைக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அண்ணாவுக்கு படத்தை முன்னரேயே போட்டுக்காட்டியிருந்தார்கள். அவருக்கு படத்தின் கதை தெரியாது என்று கூறி சமாளிக்க வேண்டாம். பாக்கியராசன்.சே அவர்களும் படக்கதையை முகநூலில் பின்னர் பகிர்ந்திருந்தார்.

புலிப்பார்வை படத்தை எதிர்த்து முகநூலில் பல நாம் தமிழர் கட்சியினர் கருத்துக்கூறி வந்த நேரம் சீமான் அண்ணா புலிப்பார்வைக்கு ஆதரவு கொடுத்தவுடன் குழம்பி விட்டிருந்தார்கள். சிலர் ஆதரவை விலக்கி கொண்டார்கள். சிலர் திடீரென புலிப்பார்வை படத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.

இப்பொழுது படம் வெளியிடப்பட்டும் நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் அமைதியாக உள்ளார்கள். இனி படத்தை எதிர்த்து போராடுவார்கள் என்று நம்ப முடியாது. ஒருவேளை போராடினாலும் ஏற்கனவே படத்தை எதிர்த்தவர்கள் பற்றி விமர்சனம் வைத்தவர்கள் இனி படத்தை எதிர்த்தால் மீளவும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களுக்குள் முரண்பாட்டை ஏற்படுத்துவதாகவும் நாம் தமிழர் கட்சி பற்றி ஏனையோர் கேலி செய்யும் விதமாகவும் அமைவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம்.

இனி இவர்கள் போராட்டம் செய்து என்ன பலன் என்று புரியவில்லை. ஈழப்போராட்டம் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் படத்தை பார்த்து விட்டு ஏதோ சாதாரண சினிமா படம் பார்த்த கணக்கில் படம் சூப்பர், தலைவர் திரும்பி வருவார், ஈழத்தமிழர்களுக்காக படம் எடுத்த உங்களுக்கு நன்றி என்று கூறும் கருத்துக்களை வீடியோ எடுத்து உலாவ விட்டுள்ளார்கள்.

முகநூலில் என்ன நடக்கிறது என்பதை நான் கவனிப்பதில்லை. அதுவும் முக்கியம்தான். ஆனால் இவற்றைவிடப் பெரிய பிரச்சினைகள் வெளியே உள்ளன.

சீமான் படத்தைப் பார்த்தவர்.. ஆகவே சமாளிக்க வேண்டாம் என்கிறீர்கள். சீமான் படத்தைப் பார்த்துவிட்டு என்ன கருத்தைக் கூறினார்?

1) படத்தில் தவறான சித்தரிப்புக்கள் உள்ளன. அவற்றை எடுத்துச் சொன்னோம். மாற்றங்களைச் செய்வதாக உறுதி வழங்கியுள்ளார்கள்.

2) படத்தின் இயக்குனர் புரிதல் இல்லாமல் படம் எடுத்துள்ளார்.

இதற்கு மேலும் அவர் என்னத்தை செய்திருக்க முடியும்?

முருகதாஸ் அண்மையில் ஒரு பேட்டியில், நின்றவன் போனவனுக்கெல்லாம் எதுக்கு படத்தைப் போட்டுக் காட்டணும் என்கிறார். நியாயம்தானே.. ஆனால் பின்னுக்கு பிரச்சினைகள் வரக்கூடாது என்று பயந்து சிலர் படத்தைப் போட்டுக் காட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றால் அதற்கு யார் பொறுப்பாக முடியும்?

எனது புரிதலின்படி, தனக்கு வெளியில் இருந்து கட்டளைகள் போடுவதை சீமான் விரும்பவில்லை. அதன் விளைவுகளே இவையெல்லாம்.

Edited by இசைக்கலைஞன்

முகநூலில் என்ன நடக்கிறது என்பதை நான் கவனிப்பதில்லை. அதுவும் முக்கியம்தான். ஆனால் இவற்றைவிடப் பெரிய பிரச்சினைகள் வெளியே உள்ளன.

சீமான் படத்தைப் பார்த்தவர்.. ஆகவே சமாளிக்க வேண்டாம் என்கிறீர்கள். சீமான் படத்தைப் பார்த்துவிட்டு என்ன கருத்தைக் கூறினார்?

1) படத்தில் தவறான சித்தரிப்புக்கள் உள்ளன. அவற்ரை எடுத்துச் சொன்னோம். மாற்ரங்களைச் செய்வதாக உறுதி வழங்கியுள்ளார்கள்.

2) படத்தின் இயக்குனர் புதல் இல்லாமல் படம் எடுத்துள்ளார்.

இதற்கு மேலும் அவர் என்னத்தை செய்திருக்க முடியும்?

முருகதாஸ் அண்மையில் ஒரு பேட்டியில், நின்றவன் போனவனுக்கெல்லாம் எதுக்கு படத்தைப் போட்டுக் காட்டணும் என்கிறார். நியாயம்தானே.. ஆனால் பின்னுக்கு பிரச்சினைகள் வரக்கூடாது என்று பயந்து சிலர் படத்தைப் போட்டுக் காட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றால் அதற்கு யார் பொறுப்பாக முடியும்?

எனது புரிதலின்படி, தனக்கு வெளியில் இருந்து கட்டளைகள் போடுவதை சீமான் விரும்பவில்லை. அதன் விளைவுகளே இவையெல்லாம்.

சீமான் அண்ணா படத்தை பார்த்தவர். படம் பிழையாக உள்ளது என தெரிந்தும் கதை மாற்றியமைக்கப்பட்டு சரிபார்க்கப்பட முன்னர் இசை வெளியீட்டிற்கு சென்றது தவறு. அங்கு படத்துக்கும் படக்குழுவினருக்கும் ஆதரவாக கதைத்தது தவறு. 10 விடையம் அவர்களுக்கு ஆதரவாக கதைத்து 2 விடையம் எதிராக கதைத்தால் படம் சரியாக திருத்தப்படாமல் வெளிவரும் போது ஆதரவாக கதைத்த எதையும் மீளப்பெற முடியாது. அது பதிவிலேயே இருக்கும்.

திருத்தியமைப்போம் என்ற வாக்குறுதியை நம்பி சென்று விட்டு பின்னர் அவர்கள் சொன்னதை செய்யவில்லை என்று சொல்லுமளவுக்கு சீமான் அண்ணா அரசியல் தெரியாதவரல்ல. அனைத்தும் முடிந்த பின்னர் திருத்தப்பட்ட படத்தை பார்த்து விட்டு படம் சரியாக இருக்கும் பட்சத்தில் இசை வெளியீட்டிற்கு சென்றிருக்க முடியும்.

இதுவே என் கருத்து.

படத்தை அனைவருக்கும் போட்டுக்காட்ட தேவையில்லை என்று முருகதாஸ் நினைத்திருந்தால் அவர் தனது கத்தி படத்தை சீமான் அண்ணாவுக்கும் போட்டுக்காட்டியிருக்க தேவையில்லை. சீமான் அண்ணாவை பிரச்சினைக்குள் மாட்டி விட்டதில் பெரும்பங்கு இந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தான். தமது படத்துக்கு சீமான் அண்ணா ஆதரவு என்ற இவர்கள் கருத்துக்கு பின்னரேயே அதுகுறித்து சீமான் அண்ணாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

வெளியிலிருந்து மற்றவர்கள் போடும் கட்டளையை விரும்பாததால் சீமான் அண்ணா இவ்வாறு நடந்தார் என கூற முடியாது. இவருக்கு சுயமாக சிந்திக்கும் திறன் உள்ளது.

நாளைக்கே வெளியிலிருந்து யாரும் ஈழத்து மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுங்கள் என்று சொன்னால் வெளியிலிருந்து எனக்கு கட்டளை போடுகிறார்கள், எனவே நான் அவர்களுக்கு எதிராகவே நடப்பேன் என்று ஈழ எதிர்ப்பு அரசியல் செய்ய போய் விடுவார் என்பது போல் உள்ளது உங்கள் கருத்து.

எது எப்படியோ நான் சீமான் அண்ணா பற்றி காழ்ப்புணர்வுடன் விமர்சனம் வைக்கும் ஆள் அல்ல என்பதால் ஈழத்தமிழர்கள் பற்றிய அவர் போராட்டங்கள் என் கண்ணில் பட்டால் நான் தொடர்ந்தும் யாழில் இணைப்பேன்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இசையை மாதிரி உசுப்பேத்த நாலு பேர் இருந்தால் காணும் சீமான் எங்கேயோ போய் விடுவார்:D...மனச்சாட்சியை கழட்டி வைச்சிட்டு எழுதுறோமே என்று கொஞ்சம் கூட வெட்கமாய் இருக்கிறேல்லையா:lol:இசை:lol:

இல கோபாலசாமி 

இன்றைக்கு பிரபாகரன் படத்தை பொதுக் கூட்டத்தில், கல்யாண வீடுகளில், உங்கள் டீ சர்ட்களில் போட முடிகிறதென்றால், மேடைக்கு மேடை பிரபாகரனின் தம்பி நான், பிரபாகரனும் நானும் ஓட்டிப் பிறந்த இரட்டைப் பிறவிகள் என உன்னால் தெருத்தெருவாக கதையளக்க முடிகிறதென்றால், அதற்குக் காரணம் வைகோ என்கிற மனிதன் தொய்வின்றி நடத்திய சட்டப் போராட்டம் தான் !

தடை செய்யப்பட புலிகள் இயக்கம் குறித்துப் பேசலாம் என்கிற நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுத் தந்தார். 
ஒரு நாள் புலிகள் மீதான தடையும் நீங்க வேண்டும் எனதான் சத்தமின்றி வருடக் கணக்கில் சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் வைகோ.

இந்திய சட்டப்படி பார்த்தால், நேரு வழி வந்த பாரதப் பிரமரை கொடூரமாக கொலை செய்த ஒரு அந்நிய இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை அது. அதை எதிர்த்துப் போராடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

அப்பேற்பட்ட வைகோவை, பிரபாகரனின் படத்தைப் போட்டுக் கொண்டு தெலுங்கன், வந்தேறி என விமர்சிக்கிறாயே.... உனக்கெல்லாம் கொஞ்சமாவது மானம், மரியாதை, நன்றி விசுவாசம் என ஏதேனும் இருக்கிறதா? இவ்வளவு பேசுகிறவன், நியாயஸ்தன், ரோசக்காரன் ஒரு தெலுங்கன் வாங்கிக் கொடுத்த உரிமையை நான் பயன்படுத்தவே மாட்டேன் என வீசி விட்டெறிந்துவிட்டு அல்லவா போயிருக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அண்ணா படத்தை பார்த்தவர். படம் பிழையாக உள்ளது என தெரிந்தும் கதை மாற்றியமைக்கப்பட்டு சரிபார்க்கப்பட முன்னர் இசை வெளியீட்டிற்கு சென்றது தவறு. அங்கு படத்துக்கும் படக்குழுவினருக்கும் ஆதரவாக கதைத்தது தவறு. 10 விடையம் அவர்களுக்கு ஆதரவாக கதைத்து 2 விடையம் எதிராக கதைத்தால் படம் சரியாக திருத்தப்படாமல் வெளிவரும் போது ஆதரவாக கதைத்த எதையும் மீளப்பெற முடியாது. அது பதிவிலேயே இருக்கும்.

திருத்தியமைப்போம் என்ற வாக்குறுதியை நம்பி சென்று விட்டு பின்னர் அவர்கள் சொன்னதை செய்யவில்லை என்று சொல்லுமளவுக்கு சீமான் அண்ணா அரசியல் தெரியாதவரல்ல. அனைத்தும் முடிந்த பின்னர் திருத்தப்பட்ட படத்தை பார்த்து விட்டு படம் சரியாக இருக்கும் பட்சத்தில் இசை வெளியீட்டிற்கு சென்றிருக்க முடியும்.

இதுவே என் கருத்து.

படத்தை அனைவருக்கும் போட்டுக்காட்ட தேவையில்லை என்று முருகதாஸ் நினைத்திருந்தால் அவர் தனது கத்தி படத்தை சீமான் அண்ணாவுக்கும் போட்டுக்காட்டியிருக்க தேவையில்லை. சீமான் அண்ணாவை பிரச்சினைக்குள் மாட்டி விட்டதில் பெரும்பங்கு இந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தான். தமது படத்துக்கு சீமான் அண்ணா ஆதரவு என்ற இவர்கள் கருத்துக்கு பின்னரேயே அதுகுறித்து சீமான் அண்ணாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

வெளியிலிருந்து மற்றவர்கள் போடும் கட்டளையை விரும்பாததால் சீமான் அண்ணா இவ்வாறு நடந்தார் என கூற முடியாது. இவருக்கு சுயமாக சிந்திக்கும் திறன் உள்ளது.

நாளைக்கே வெளியிலிருந்து யாரும் ஈழத்து மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுங்கள் என்று சொன்னால் வெளியிலிருந்து எனக்கு கட்டளை போடுகிறார்கள், எனவே நான் அவர்களுக்கு எதிராகவே நடப்பேன் என்று ஈழ எதிர்ப்பு அரசியல் செய்ய போய் விடுவார் என்பது போல் உள்ளது உங்கள் கருத்து.

எது எப்படியோ நான் சீமான் அண்ணா பற்றி காழ்ப்புணர்வுடன் விமர்சனம் வைக்கும் ஆள் அல்ல என்பதால் ஈழத்தமிழர்கள் பற்றிய அவர் போராட்டங்கள் என் கண்ணில் பட்டால் நான் தொடர்ந்தும் யாழில் இணைப்பேன்.

முதலில் ஒரு படத்தை நிறுத்து / திருத்து என்று சொலதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது, தணிக்கை அதிகாரிகளைத் தவிர. இது சட்டம்.

ஆனாலும் சில தயாரிப்பாளர்கள் / இயக்குநர்கள் போட்டுக் காட்டுகிறார்கள் என்றால் பின்னாளில் பிரச்சினைகள் வருவதை தடுக்கவே. அது அவர்களது சுய முடிவு. சீமான் தணிக்கை அதிகாரிபோல வெளியிடுவதற்கு முன்னம் என்னுடைய ஒப்புதலை நீ பெறவேண்டும் என்று கட்டளை போட முடியாது.

படத்தை வெளியிட்ட பிறகு இசை வெளியீட்டில் கலந்து கொள்ளலாம் என்கிறீர்கள். இசை வெளியீடு என்ன பத்து தடவைகளா நடக்கும்? கலந்து கொள்வதும், கொள்ளாததும் சீமானின் தனிப்பட்ட முடிவு. ஒரு வேளை அவர் இசை வெளியீட்டு விழாவுக்குப் போகாமல் இருந்திருந்தால் இந்தப் படம் வெளிவராமல் போயிருக்குமோ?

சீமான் சிந்திக்கத் தெரியாதவரா என்று கேட்டுள்ளீர்கள். அவரும் ஒரு தனிமனிதன் தான். தவறான முடிவுகளை எடுக்கலாம். இளையராஜா கச்சேரி விடயத்தில் எடுபட்டுவிட்டார் என்றே நினைக்கிறேன். இன்று அவ்வாறான சூழ்நிலைகளை தவிர்க்கிறார். இது பாராட்டப்படவேண்டிய விடயம்.

இசையை மாதிரி உசுப்பேத்த நாலு பேர் இருந்தால் காணும் சீமான் எங்கேயோ போய் விடுவார் :D...மனச்சாட்சியை கழட்டி வைச்சிட்டு எழுதுறோமே என்று கொஞ்சம் கூட வெட்கமாய் இருக்கிறேல்லையா :lol:இசை :lol:

மனச்சாட்சி இருப்பதால்தான் இப்பிடி எழுதத் தூண்டுது.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல கோபாலசாமி 

இன்றைக்கு பிரபாகரன் படத்தை பொதுக் கூட்டத்தில், கல்யாண வீடுகளில், உங்கள் டீ சர்ட்களில் போட முடிகிறதென்றால், மேடைக்கு மேடை பிரபாகரனின் தம்பி நான், பிரபாகரனும் நானும் ஓட்டிப் பிறந்த இரட்டைப் பிறவிகள் என உன்னால் தெருத்தெருவாக கதையளக்க முடிகிறதென்றால், அதற்குக் காரணம் வைகோ என்கிற மனிதன் தொய்வின்றி நடத்திய சட்டப் போராட்டம் தான் !

தடை செய்யப்பட புலிகள் இயக்கம் குறித்துப் பேசலாம் என்கிற நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுத் தந்தார். 

ஒரு நாள் புலிகள் மீதான தடையும் நீங்க வேண்டும் எனதான் சத்தமின்றி வருடக் கணக்கில் சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் வைகோ.

இந்திய சட்டப்படி பார்த்தால், நேரு வழி வந்த பாரதப் பிரமரை கொடூரமாக கொலை செய்த ஒரு அந்நிய இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை அது. அதை எதிர்த்துப் போராடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

அப்பேற்பட்ட வைகோவை, பிரபாகரனின் படத்தைப் போட்டுக் கொண்டு தெலுங்கன், வந்தேறி என விமர்சிக்கிறாயே.... உனக்கெல்லாம் கொஞ்சமாவது மானம், மரியாதை, நன்றி விசுவாசம் என ஏதேனும் இருக்கிறதா? இவ்வளவு பேசுகிறவன், நியாயஸ்தன், ரோசக்காரன் ஒரு தெலுங்கன் வாங்கிக் கொடுத்த உரிமையை நான் பயன்படுத்தவே மாட்டேன் என வீசி விட்டெறிந்துவிட்டு அல்லவா போயிருக்க வேண்டும்?

கைபுள்ள‌
இதை போய் யாராவது இளிச்சவாய் இருபார்கள் அவர்களிடம் போய் சொல்லுங்கோ , அரசியல் வியாபாரி வைக்கோவை பற்றி எங்களுக்கு நல்லாவே தெரியும்............2009ம் ஆண்டு இவரால் என்ன செய்ய முடிஞ்சது மத்தியில் மூன்று அமச்சரை வைத்து இருந்தும் ஒன்றும் செய்ய முடியாத கை கால் ஆக்காத மனிதனை நீங்கள் தூக்கி பிடிப்பதை பார்க்க நோக்கு சிப்பு வருது ஹிஹிஹிஹிஹிஹிஹி......

lDsH.jpg

தேசிய தலைவர் படத்தை வைக்கோ தனது மேடையில் வைத்தது இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை........இருந்தால் காட்டுங்கோ   பார்த்தேதெரிந்து கொள்ளுறேன்...........நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலிலும் கூட‌ அண்ணன் சீமானை தவிர மற்ற அரசியல் தலைவர்கள் முள்ளி வாய்க்காளில் உயிர் நீத்த உறவுகளின் படங்களையும் தேசிய தலைவரின் படத்தை வைத்தது இல்லை......இதில் இருந்து என்ன தெரிகிறது.............

முதலில் ஒரு படத்தை நிறுத்து / திருத்து என்று சொலதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது, தணிக்கை அதிகாரிகளைத் தவிர. இது சட்டம்.

ஆனாலும் சில தயாரிப்பாளர்கள் / இயக்குநர்கள் போட்டுக் காட்டுகிறார்கள் என்றால் பின்னாளில் பிரச்சினைகள் வருவதை தடுக்கவே. அது அவர்களது சுய முடிவு. சீமான் தணிக்கை அதிகாரிபோல வெளியிடுவதற்கு முன்னம் என்னுடைய ஒப்புதலை நீ பெறவேண்டும் என்று கட்டளை போட முடியாது.

படத்தை வெளியிட்ட பிறகு இசை வெளியீட்டில் கலந்து கொள்ளலாம் என்கிறீர்கள். இசை வெளியீடு என்ன பத்து தடவைகளா நடக்கும்? கலந்து கொள்வதும், கொள்ளாததும் சீமானின் தனிப்பட்ட முடிவு. ஒரு வேளை அவர் இசை வெளியீட்டு விழாவுக்குப் போகாமல் இருந்திருந்தால் இந்தப் படம் வெளிவராமல் போயிருக்குமோ?

சீமான் சிந்திக்கத் தெரியாதவரா என்று கேட்டுள்ளீர்கள். அவரும் ஒரு தனிமனிதன் தான். தவறான முடிவுகளை எடுக்கலாம். இளையராஜா கச்சேரி விடயத்தில் எடுபட்டுவிட்டார் என்றே நினைக்கிறேன். இன்று அவ்வாறான சூழ்நிலைகளை தவிர்க்கிறார். இது பாராட்டப்படவேண்டிய விடயம்.

ஒரு படத்தை நிறுத்து/திருத்து என்று சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை என்றால் அந்த சட்டத்தை சீமான் அண்ணாவும் பின்பற்றுவாராக இருந்தால் படத்தை திருத்தும்படி கூறியிருக்கிறேன் என்று சொல்லியிருக்க தேவையில்லை. முன்னரும் இனம், மெட்ராஸ் கபே படங்களை வெளியிடாதே என்று போராடியிருக்க வேண்டியதுமில்லை.

சீமான் அண்ணாவிடம் தயாரிப்பாளர்கள்/இயக்குனர்கள் தாமாகவே தான் படத்தை போட்டு காட்டினார்கள். அதேநேரம் அவர்களுக்கு ஆதரவாக சீமான் அண்ணா தானாகவே கதைத்திருந்தார். படம் திருத்தப்பட்ட பின்னர் தம்மிடம் காட்டி தாம் பார்த்து சரி என கூறிய பின்னர் தான் வெளியிடுவார்கள் என்பதையும் நாம் தமிழர் கட்சியினரே கூறியிருந்தனர். இதில் யாரும் யாருக்கும் கட்டளையிடவில்லை. இருபகுதியும் இணங்கி வெளியிடப்பட்ட கருத்து.

படத்தை வெளியிட்ட பின் இசை வெளியீட்டில் கலந்து கொள்ளும்படி யார் சொன்னது. படம் திருத்தப்பட்டு முடிந்ததும் ஏற்கனவே சீமான் அண்ணாவுக்கு போட்டுக்காட்டியது போல் போட்டுக்காட்டும்போது பார்த்து படம் சரி என உறுதிப்படுத்திய பின்னர் இசை வெளியீட்டில் கலந்து கொண்டிருக்கலாம். அதன் பின் படத்தை வெளியிட்டிருக்கலாம் என்பதே என் கருத்து. இசைவெளியீட்டை இன்னொரு திகதிக்கு பிற்போட்டிருக்கலாம்.

இசை வெளியீட்டில் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாததும் சீமான் அண்ணாவின் தனிப்பட்ட முடிவு என்றால் அதில் அவரது சுயநலம் உள்ளது. இசைவெளியீட்டிற்கு இவர் போகாமல் விட்டிருந்தாலும் (எதிர்ப்போராட்டங்கள் ஏதும் வலுவற்ற நிலையில்) படம் வெளியிடப்பட்டிருக்கும். ஆனால் சீமான் அண்ணா படத்துக்கு ஆதரவு என்ற கருத்து எழுந்திருக்காது. நாம் தமிழர் கட்சியினரின் போராட்ட, அரசியல் பாதையில் ஒரு கரும்புள்ளி வந்திருக்காது.

சீமான் அண்ணாவுக்கு சுயமாக சிந்திக்க தெரியுமா என்று எங்கே கேட்டேன். சுயமாக சிந்திக்கும் திறன் உள்ளது என்றே எழுதியுள்ளேன். வெளியிலிருந்து வரும் கட்டளைகளை (உண்மையிலேயே கட்டளைகள் வந்திருந்தால்) எதிர்ப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவல்ல. இவர் சுயமாக சிந்தித்து எடுத்த முடிவு என்பதையும் குறிப்பிட்டுள்ளேன். அதே நேரம் இந்த படத்திற்கு ஆதரவளித்தால் பிரச்சினைகள் வரும் என்பது தெரிந்துமே இசை வெளியீட்டிற்கு சென்றிருந்தார்.

Edited by துளசி

தேசிய தலைவர் படத்தை வைக்கோ தனது மேடையில் வைத்தது இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை........இருந்தால் காட்டுங்கோ பார்த்தேதெரிந்து கொள்ளுறேன்...........நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலிலும் கூட‌ அண்ணன் சீமானை தவிர மற்ற அரசியல் தலைவர்கள் முள்ளி வாய்க்காளில் உயிர் நீத்த உறவுகளின் படங்களையும் தேசிய தலைவரின் படத்தை வைத்தது இல்லை......இதில் இருந்து என்ன தெரிகிறது.............

10294343_691911744202108_805989647397442

(Facebook)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படத்தை நிறுத்து/திருத்து என்று சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை என்றால் அந்த சட்டத்தை சீமான் அண்ணாவும் பின்பற்றுவாராக இருந்தால் படத்தை திருத்தும்படி கூறியிருக்கிறேன் என்று சொல்லியிருக்க தேவையில்லை. முன்னரும் இனம், மெட்ராஸ் கபே படங்களை வெளியிடாதே என்று போராடியிருக்க வேண்டியதுமில்லை.

நான் முன்னரே சொன்னதுதான்.. இயக்குநர்கள் / தயாரிப்பாளர்கள் சுயமாக சிந்தித்து மாணவர்கள், சீமான், நெடுமாறன் ஐயா போன்றவர்களை கூப்பிட்டார்கள். ஆனால் சட்டப்படி அவர்கள் கூப்பிட வேண்டியதில்லை.

கூப்பிட்டதால்தான் இவர்கள் போனார்கள். கருத்தும் சொன்னார்கள்.

ஒருவேளை இவர்களை அழைக்காமல் விட்டு படம் தாறுமாறாக எடுக்கப்பட்டிருந்தால் திரையரங்குகளில் பிரச்சினை வரலாம். மக்கள் போக தயங்குவார்கள். வருமானம் பாதிப்புக்கு உள்ளாகலாம். மெட்ராஸ் கஃபே, இனம் இவற்றுக்கு நடந்தவை இவைதான்.

புலிப்பார்வைக்காரர் முன்னமே பிரச்சினையை முடிக்க நினைத்தார்கள். அதுதான் வேறுபாடு.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரைவேக்காட்டுடன் அஞ்சரன் படும்பாடு எனக்கு ரத்தக்கண்ணீர் வருது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10294343_691911744202108_805989647397442

(Facebook)

இது மாவீரர் நிகழ்வின் போது எடுத்த படம்...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பொழுது போக்குக்கு அடுத்தவனின் நல் செயல்களை கேலி செய்யிற பச்சோந்திகளை பார்க்க எனக்கு ரத்த வாந்தியே வருது..............இவர்களால் இனத்துக்கு நல்லது நடக்கப் போறது இல்லை..........இவர்களால் தமிழீழ மீட்ப்பு போராட்டத்துக்கு இடைஞ்சல் தான் ஏற்படும்.........குரை சொல்லுவதையே வாழ்கையாய்  கொண்ட‌ மனிதர்கள் எப்ப தான் திருந்துவார்கள்.........முடியலடா சாமி.......................... :wub:

Edited by பையன்26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.