Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிரட்டப்பட்டாரா சோபித

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொது ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சோபித தேரரை மகிந்த, கோத்த அபய ஆகியோர் வியாழன் இரவு சந்தித்து பேசியதாயும் அதன் பின் தேரர் மெளனம் காப்பதாயும் ஆசுப்பத்திரியில் ஜனாதிபதிக்கு விசுவாசமான ஒரு வைத்தியரின் கண்காணிப்பில் பாதுகாக்க படுவதாயும், தேரரின் விகாரை முன் அமைசர் பாதுகாப்பு பிரிவு நிற்பதாயும் சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுளது.

http://www.sundaytimes.lk/141116/columns/alles-plays-double-game-arranges-meeting-between-president-and-ven-sobitha-128237.html

  • கருத்துக்கள உறவுகள்

ஜே,வி.பி கலகத்தில் தனது இனத்தவரிலேயே 60,000 பேரைக் கொன்றுதள்ளியவர்கள் தான் சிங்களவர்கள். இதற்குள் கல்விமான்கள், புத்த பிக்குகள், பலகலைக் கழக மாணவர்கள் என்று பலர் அடக்கம். ஆகவே சோபித ஹாமுத்துருவுக்கும் ஆஸுப்பத்திரி காட்டப்பட்டது ஒன்றும் பெரியவிடயமல்ல. அரசியல் என்று வந்துவிட்ட பிறகு பிக்கு என்ன பிடாரி என்ன, எல்லாம் கொல்லப்படக் கூடியவர்கள்தான்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

நான் மொரட்டுவைப் பலகலையில் படிக்கும் காலத்தில் இரத்தினபுரியைச் சேர்ந்த சிங்கள மாணவன் ஒருவனும் படித்தான். எப்போதுமே பயந்த சுபாவம் உள்ளவனாகவும், நிமிர்ந்து பேசப் பயப்படுபவனுமாகிய அவனைக் காணும்போதெல்லாம் ஒரு வித இரக்கம் வந்துவிடும். அவன் அப்படியிருப்பதற்கான காரணம் என்னவென்று கேட்க பலமுறை முயன்றும், நாவை அடக்கிக்கொண்டு இருந்துவிட்டேன்.

 

ஒருநாள் அவனின் நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, அவன் ஏன் இப்படிப் பயந்தவன் போலக் காணப்படுகிறான் என்று எதேச்சையாக கேட்டேன். அதற்கு அவனளித்த பதில் என்னைத் தூக்கிவாரிப் போட்டது.

 

சந்திரிக்கா சனாதிபதியாக வருவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், இரத்தினபுரியில் அரசுக்கெதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற பெயரில் ஒரு பாடசாலையிலிருந்து 30 அல்லது 40 மாணவர்கள் விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்பட்டுக் காணாமல்ப் போனார்கள். அவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இறுதியில் சூரியக் கந்தை எனும் பாதுகாக்கப்பட்ட சரணாலயப் பகுதியிலிருந்து அந்த மாணவர்களினது என்று நம்பப்படும் மனித எச்சங்கள் மீடகப்பட்டன. அதன்பின்னர்தான் அந்த மாணவர்களுக்கு நடந்த அகோரம் வெளித்தெரிய வந்தது. அந்த மாணவர்களின் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த, ஆனால் தற்செயலாக மற்றைய மாணவர்கள் கடத்தப்பட்ட நாளில் வேறிடத்திற்குச் சென்றிருந்தவந்தான் அந்தப் பயந்துபோன சிங்கள நண்பன். அவனைப் பொறுத்தவரையில் தன்னையும் கொல்வதற்கு ராணுவத்தினர் தற்போதும் தேடிக்கொனண்டிருப்பதாகப் பிரமை, ஆகவேதான் அப்படிப் பயந்து திரிவதாக அவனது நண்பன் கூறினான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதை எம்பிலிப்பிட்டிய படுகொலைகள் என்பர்.

இது நடந்தது 1989, ஆனால் 1994 இல்தான் வெளிவந்தது.

நாங்களும் சளைத்தவர்கள் இல்லை. இதைவிட மோசமான கொடுமையை எல்லாம் சகதமிழன் மீதே செய்துள்ளோம்.

நீங்கள் சொல்வதை எம்பிலிப்பிட்டிய படுகொலைகள் என்பர்.

இது நடந்தது 1989, ஆனால் 1994 இல்தான் வெளிவந்தது.

நாங்களும் சளைத்தவர்கள் இல்லை. இதைவிட மோசமான கொடுமையை எல்லாம் சகதமிழன் மீதே செய்துள்ளோம்.

எங்களுக்கு மற்றவன் செய்வது  மட்டும் தான் தெரியும் .

சுந்தரம் ,ஒபரே தேவன் ,சிறி நாபா சரி விடுவம் பிறகு அமீர் நீலன் ரஜனி செல்வி கேதிஸ் இப்போதும் வாயை திறக்காவிட்டாலும் பரவாயில்லை சரி என்று தலையாட்டியதற்கு  சிங்களவன் ஆயிரம் மடங்கு திறம் .

  • கருத்துக்கள உறவுகள்

யேசு நாதர், வேசியொருத்தியின் மீது கல்லெறிந்து கொண்டிருந்தவர்களிடம், உங்களில் தவறே செய்யாதவர்கள் மட்டும், இவள் மீது கல்லை எறியுங்கள் என்று கூறியதாக ஒரு கதை உண்டு!

 

அங்கு கையில் 'கற்களை' வீசுவதற்காகக் காத்திருந்த கூட்டம், கற்களை நிலத்தில் போட்டுவிட்டுக் கலைந்து போனது!

 

ஒருவர் மீது மற்றவர் மாறி மாறிக் கற்களை எரிந்து கொண்டிருப்பதால், உண்மையான குற்றவாளி எப்போதும் தப்பித்துக் கொண்டே இருக்கிறான்!

 

எனவே அனைத்தையும் மறந்து, தப்பியவர்களை விட்டுவிட்டு, இருப்பவர்களுக்காவது தண்டனை பெற்றுக் கொடுக்க முனைவதே புத்திசாலித் தனமானது!

 

இந்த விடயத்தில், இன, மத வேறுபாடற்ற 'இணைவு' சாத்தியமெனில், அதில் ஏதும் தவறில்லை என்று நினைக்கிறேன்! 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு மற்றவன் செய்வது  மட்டும் தான் தெரியும் .

சுந்தரம் ,ஒபரே தேவன் ,சிறி நாபா சரி விடுவம் பிறகு அமீர் நீலன் ரஜனி செல்வி கேதிஸ் இப்போதும் வாயை திறக்காவிட்டாலும் பரவாயில்லை சரி என்று தலையாட்டியதற்கு  சிங்களவன் ஆயிரம் மடங்கு திறம் .

தன் மூக்கு போனாலும் பிறருக்கு சகுனப் பிழையாக வேண்டும்.

எங்களுக்கு மற்றவன் செய்வது  மட்டும் தான் தெரியும் .

சுந்தரம் ,ஒபரே தேவன் ,சிறி நாபா சரி விடுவம் பிறகு அமீர் நீலன் ரஜனி செல்வி கேதிஸ் இப்போதும் வாயை திறக்காவிட்டாலும் பரவாயில்லை சரி என்று தலையாட்டியதற்கு  சிங்களவன் ஆயிரம் மடங்கு திறம் .

 

உண்மைதான்உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். சந்ததியார், இறைகுமாரன்,உமைபாலன், உட்பட ஓரத்தநாடு படுகொலைகளில் கொல்லபட்ட பல நூற்றுகணக்கான இளைஞர்களின் படுகொலைகளையும் அதில் சேர்ப்போம். செய்கிற கொலைகளை  செய்துவிட்டு தப்பி  ஓடி வந்துவிட்டு  இப்ப வேஷம் வேறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.