Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நரகாசுரனுக்கு அஞ்சலிகள்

Featured Replies

வன்னிமைந்தன்! நான் "மிக்க நன்றி நைனா என்று உங்களுக்கு சொல்லவில்லை.

"நைனை2000" என்பவர் என்னுடைய இணையத் தளம் நன்றாக இருப்பதாக சொன்னார். நான் அவருக்கு சொன்னேன்.

  • Replies 245
  • Views 27.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் சொன்னது...

மிக்க நன்றி நைனா

இங்கே நாம் கேட்ட கேள்விக்கும் அவர்கள் சொன்ன

பதில் பார்த்தீர்களா...

இது எதை குறிக்கிறது...???

சரி வரலாற்றை சொல்ல வரும் தாங்கள் தெழிவுபடுத்த வேண்டும்

அதன் அடி ஆழத்தில் இருந்து அதன் கருபொருளை விளக்க வேண்டும்

அதுவே முறை...

அப்படி தாங்கள் கூறாத பட்சத்து இது ஏற்புடையதொன்றல்ல என்ற

முடிவிற்கே நாங்கள் வர வேண்டும்...???

இதை ஆய்வு செய்த இந்த சபேசன் இதை வலியுறுத்தி கூறும் போது

ஏன் அந்த வரலாற்றை செம்மையாக சொல்ல மறுக்கிறார்...??

இன்றய அறிவியல் விஞ்ஞான காலத்தில் நீரில் விழுந்த விந்தில் இருந்து

பிள்ளை உருவானது என்பது ஏற்கலாக ஒன்று....

வியர்வையில் இருந்து பிறந்ததும் ஏற்கலாக...

இவ்வாறாக தொடராய் தாங்கள் அதன் தொடரை சொன்னால்

ஏற்புடையதாய் இருக்கும்...

அதை விடுத்து "" மிக்க நன்றி நைனா'' என்ற இந்த

சொல் பதம் தங்களால் தாங்களே தன் முகத்தில்

கரி புசும் நிகழ்வாகவும் தங்களை தாங்கலே இழிவு படுத்துவதாக அமையும்...

இந்த கதாபாத்திரத்தை அந்த கதையை ஆய்வு செய்தவரின்

நம்பகத்தன்மையையும் . அவர் இவ்வாறு சொல்ல முற்படுதின்

உள்நோக்கத்தையும் தெழிவாக சொல்லி விடுகிறது....

இந்த செயல் சபேசனின் சிறுபிள்ளைத்தனமான செயலாக இருக்கிறது

நானும் தங்கள் மீது ஒரு தனி மதிப்பு வைத்திருந்தேன் இந்த சொல் பதத்துடன் அதுவும்

உடைந்து போகிறது....

( மிக்க நன்றி நைனா)

நன்றி

வன்னி மைந்தன்

"மிக்க நன்றி நைனா"

இதை யாருக்காக எதற்கு சொன்னார் என்று நீங்கள் கவனிக்காமல்...எதோ எதோ எழுதுகிறீர்களே

:roll:

Naina2000: "அய்யா சபேசா!

உங்கள் வெப்ஈழத்தை வாரம் ஒருமுறை பார்வையிடுவேன். ஆக்கங்கள் சுப்பர்"

இதுவே நைனா2000 சொன்னது

நான் நைனா2000இற்கு நன்றி சொன்ன அதே நேரம் வன்னிமைந்தனும் தன்னுடைய கருத்தை எழுதியிருக்கிறார். என்னுடைய கருத்து வன்னிமைந்தனின் கருத்துக்கு அடுத்ததாக வந்து விட்டது.

என்றாலும் வன்னிமைந்தன் என்னை வசைபாடி இரண்டாவது கருத்தை எழுதுவதற்கு முன்பு ஒரு முறை மேலும் கீழும் பார்த்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் இதில் எதற்கு முக்கியமோ அதற்குப் பதிலளிக்கத்தான் சொல்கிறார் வன்னி மைந்தன்.

நன்றி சொல்லிவிட்டுப் போய் விடாதீர்கள் என்றுதான் தனது சார்பில் நீங்கள் தெளிவு படுத்த வேண்டிய விடயங்களை முன்வைக்கின்றார்.

அது தெரிந்திருந்து ஏன் கருத்தைத் திசை திருப்ப முற்படுகிறீர்கள், அதற்கு வேறு சிலரும் உடந்தையாகாமல் இருக்கலாமே.

சபேசன் உங்கள் அரசியல் விமர்சனம் உட்பட பலவற்றை வாசித்திருக்கிறோம். பல விடயங்களைத் தரமாக எழுதும் அதேவேளை சில சந்தர்ப்பங்களில் செய்தித் தொகுப்பாக உங்கள் அரசியல் விமர்சனங்கள் உங்களின் பார்வைக்கு இடமளிக்காத வகையிலும் இருந்திருக்கிறது.

அந்த வகையில் வரலாற்றுச் சான்றுகளற்ற வெறு புராணக் கதைகளின் அடிப்படையில் விடயங்களை நவீன காலத்துவத்தில் ஆராய மூடியாது. பகுத்தறிவு உங்களிடம் இருக்கோ இல்லையோ மக்களிடம் இருக்கவே செய்கிறது. மக்கள் கேள்வி கேட்பார்கள் நீங்கள் பதில் சொல்ல வேண்டியது கடமை.

நெடுக்காலபோவான், சபேசன் மற்றும் நெடுக்காலபோவான் எழுதியுள்ள விடயங்களை சரியாக வாசித்தீர்களா? அதில் பல விடயங்கள் தெளிவாக உள்ளனவே.

காகம் நரி சிட்டு குருவிகள் பேசிய நீதிகதைகள் இருக்கலாம். ஆனால் புராணாங்கள் இதிகாசைங்களில் சொல்லப்பட்டவையை அடிப்படையாக வைத்து சமூகத்தின் சாதியம் உருவாக்கப்பட்டது வர்க்க கோட்டபாடுகளின்படி தீண்டத்தகாதவர்கள் என்று பிறப்பால் (நடத்தையால் அல்ல)மனிதரில் ஒருபகுதி ஒதுக்கிவைக்கப்பட்டது. இன்னமும் அந்த அநியாயங்கள் முற்றகா நீங்கவில்லை. எனவே அவை மானுடவியல் சொல்லும் வெறும் நீதிக் கதைகள் அல்ல பல ஆயிரம் லட்சக்கணக்கான மக்களிற்கு அவலத்தை தேடித்தந்தவை.

கடவுளின் அவதாரங்கள் என்று ஏமாற்றி அடக்கி ஆண்டு முடிந்துவிட்டது மக்களிற்கு விழிப்புணர்வு வருகிறது என்றவுடன் அவை வெறும் நரியும் சிட்டுக் குருவியும் பறைஞ்ச நீதிகதைகள் போன்றது வெறும் கதைகளும் கதாபாத்திரங்களுமே என்று குத்துக்கரணம் அடிக்க முடியாது.

ஒரு வராலற்று சுத்துமாத்தை நியாயப்படுத்த குற்ற உணர்வில இருந்து தப்பிக்க இன்னொரு சுத்துமாத்தை முயற்சிக்க வேண்டாம் எல்லாம் வெறும் கதைகளாகத்தான் பார்க்கப்பட்டது அதற்கு மீறி சமுதாயத்தில் எந்த தாக்கமும் இல்லை என்று. இதுவரை காலமும் அவலத்தை அனுபவித்தவர்களும் இந்தியாவில் தலித்துக்கள் என்றும் ஏனைய குறைந்த சாதியினர் என்றும் அவலத்தை இன்றும் அனுபவிப்பவர்களை வெறும் நீதிகதைகள் என்று சிறுமைபடுத்த முடியாது.

பழசை கிளறி பகை வளர்ப்பது நோக்கமல்ல. ஆனால் அந்த பொறுமையையும் நல்லெண்ணத்தையும் பலவீனமாக பாவித்து எதுவுமே நடக்காதது போல் நடிப்பதையும் அவைகள் வெறும் நீதிகதைகள் என்று நிஜ அவலங்களை மூடிமறைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விவாதம் மிகவும் சிறப்பாக உள்ளது. கருத்துக்களை எழுது வோருக்கு நன்றி.

தீபாவளி போன்ற விழாக்களை தமிழர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் .. தென்இந்தியர்கள் .. மற்றும் வடஇந்தியர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பது ஒரு ஆய்வுக்குரிய விடயம். இங்கு நான் குறிப்பிட்ட மூன்று தரப்பும் ஒரேவிடயத்திற்காக கொண்டாடவில்லை என்பது உண்மை.

தமிழர்கள் கொண்டாடுவது நரகாசுரன் என்ற கொடிய அரக்கனை கொன்ற நாளை அவனைக் கொன்ற தெய்வம் "தீமை ஒழிந்த நாள்" ஆக கொண்டாடும் படி கேட்ட ஐதிகத்தின் அடிப்படையில் இருந்து பரம்பரம்பரை பரம்பரையாக வந்த வழக்கம். இவ்விதம் அரக்கனை கொன்ற கடவுளின் பெயரென்ன என உங்களுக்கு தெரிந்த தமிழர்களிடம் கேட்டுப்பாருங்கள் ..

கிருஸ்ணன், சத்திய பாமா, துர்க்கை என வித்தியாசமான பதில்கள் வரும். உண்மையில் யாருமே இந்த புராணக்கதைக்காக கொண்டாடுவதில்லை அன்றய நாளை மற்றய நாட்களிலிருந்து வேறுபடுத்தி மகிழ்ச்சியாக இருக்க முயல்கிறார்கள. அவ்வளவுதான்.

எங்கள் ஊரில் அந்த நாளில் ஆட்டு பங்கு இறச்சி வாங்கி சமைப்பார்கள். தீபாவளிக்கு முதல்நாள் ஊரில் உள்ள சாராயக்கடையில் வழமைக்கு மாறாக நீண்ட வரிசை காணப்படும். தீபாவளி தினம் காலையில் கோவிலுக்கு போய்விட்டுவந்தது மதியம் ஆட்டுச்சிக்கறியுடன் உணவு உண்பார்கள். பெரிசுகளில் பல அரை அல்லது முழு மப்பில் திரியும். ஆக இந்த பண்டிகைக்கும் நரகாசுரன் விவகாரத்துக்கும் ஏன் சமயத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

வடஇந்தியர்கள் இதுபோன்றே ராமன் ராவணன் கதையைச் சொல்லிக்கொண்டு தங்கட பாட்டுக்கு கொண்டாடுவார்கள்.

பிரச்சனை என்னவென்றால் வடஇந்தியரின் சமயத்தையும் தென்னிந்தியரின் சமயத்தையும் ஒன்றாக இணைத்து இந்து என்று பார்ப்பதால்தான் குழப்பம் வருகிறது.

ஈழத்தமிழர்களில் பெரும்பகுதி பிறப்பால் சைவர்கள் அவர்கள் சிவனை முழுமுதல் கடவுளாக வணங்குபவர்கள். தென்னாடுடைய சிவன் முதன்மை கடவுளாக இருக்கிறபோது வடநாட்டு சிவன் முக்கியமறற அழித்தல் கடவுள். இந்த முக்கியமான விடயத்திலேயே இந்த இருபகுதிக்கும் முரண்பாடு. தமிழர்களின் கடவுள் முருகனுக்கு வடநாட்டில் கோவில்கள் கிடையாது என்பது இராமர் கோவில்கள் தென்னாட்டில் அரிதாக இருப்பது இன்னொரு முரண்பாடுதான். புலம்பெயர்நாடுகளில் வட இந்தியர்கள் (குறிப்பாக பிரித்தானியா, அமெரிக்கா) அவர்களது மதத்தையும் ஒன்றாயே பார்க்கப்படுகிறது. துரதிர்ஸ்டவசமாக இந்த வேறுபாடு எங்களில் பலருக்கு தெரியாது அல்லது புரியாது. இதனால்தான இராமயணம் என்ற காப்பியத்தில் வரும் அனுமன் என்ற பாத்திரம் இலஙகையை அழித்தது என்று கதையிருக்கும் போதும் ஈழத்தமிழர்கள் அதனை வணங்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் தீபங்கள் ஏற்றுவது தான் தீபாவளி என்கிறார்கள். சிலர் தீமைகள் நீங்கி நன்மை பெறும் நாள் தான் தீபாவளி என்கிறார்கள்

இலங்கைத்தமிழர்கள் நாரகாசூரனை கிருஸ்ணர் கொன்றதினால் தீபாவளி என்று சொல்கிறார்கள். இந்தியர்கள் இராமன் இராவணனைக்கொன்றதினால் தான் தீபாவளி என்கிறார்கள்.

நாரகாசூரனோ, இராவணனோ வாழ்ந்தார்களா அல்லது கற்பனைப்பத்திரங்களா என்றும் எனக்குத் தெரியாது. எப்பொழுதோ நடந்தவற்றுக்கு தீபாவளி கொண்டாடும் நாங்கள் ஏன் நமது கண்முன்னால் நடப்பவற்றுக்கு தீபாவளி கொண்டாடக்கூடாது?. தமிழர்களினைக் கொண்டு குவித்த, சகோதரிகளின் கற்புக்களினை சூறையாடியாவர்கள் இறந்த திகதிகளினை ஏன் கொண்டாடக்கூடாது. குள்ள நரி ஜே.ஆர்., பிரேமதாசா........ இவர்கள் இறந்த திகதியினை ஏன் தீபாவளியாகக் கொண்டாடக்கூடாது?

நெடுக்காலபோவானும், வன்னிமைந்தனும் இங்கு கேள்விகள் கேட்பது தெளிவு அடைவதற்கா அல்லது வேறு உள்நோக்கங்கள் உள்ளது என்பது எனக்கு சரியாக புரியவில்லை. ஆகவே என்னுடைய இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்.

நீங்கள் கிருஸ்ணனையும், ராமனையும் நம்புகிறீர்களா?

தயவு செய்து இந்தக் கேள்வி பதில் அளியுங்கள்!

காகம், குருவி போன்றவற்றை பாத்திரங்களாகக் கொண்டிருக்கும் நீதிக் கதைகளும் நடந்த கதைகள் என்று சொன்னால் நீஙகள் நம்புவீர்களா?

ஆனால் உண்மை அதுதான். அவைகளும் நடந்த கதைகளே. இந்த நீதிக் கதைகள் எங்கே, எப்படி உருவானவை என்று உங்களுக்கு தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சபேசன் சொல்ல வருகிறீர்கள் காகம் நரி சிட்டுக்குருவி குரங்கு பேசியது என்றா? மனிதர்கள் பேச வைத்தர்கள் கதைகளில் மானிடா நீ புரிந்து கொள்ள வேண்டும் என்று. ஆங்கிலத்திலும் பல கதைகள் புனையப்பட்ட பாத்திரங்களூடு சொல்லப்பட்டிருகின்றன. கரிபோட்டரில் கூட அது இருக்கிறது.

சிவன் கிருஷ்ணா விஷ்ணு எல்லாவற்றையும் புனைகதைகளின் புராணங்களின் கதாப்பாத்திரங்களாக நம்புகின்றோம். ஒரு சினிமாப் படத்தை பார்க்க வேண்டின் அந்தக் கதாப்பாத்திரத்தை நம்பித்தான் ஆக வேண்டும். இன்றேல் படத்தை ரசிக்க முடியாது.படம் பார்த்து முடிந்ததும் அந்த நம்பிக்கை என்பது அவசியமில்லை.

அதேபோன்றதுதான் புராணங்கள் இதிகாசங்கள் தருபவையும். வெறும் கதாப்பாத்திரங்கள் கொண்டு சிலாகிக்கப்பட்ட கற்பனைகள். அவற்றின் சாராம்சம் என்பதில் உள்ள மனுநீதி மட்டுமே கருத்தில் எடுக்கப்பட வேண்டுமே அன்றி அதற்குள் இனவாதம் மனித வேறுபாடுகளை திணித்து சமூகப் பிரிவினைகளைத் தூண்டக் கூடாது.

பெரியார் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது வளர்த்த கொள்கை வேறு காங்கிரஸை விட்டு வெளியேறிய பின் பின்பற்றிய தீவிர திராவிடக் கொள்கையும் பகுத்தறிவு வாதமும் அரசியலுக்கு மட்டும் தான் சமூகத்திற்கில்லை என்பதை பெரியாரை உச்சரித்துக் கொண்டு 5 தடவைகள் ஆட்சியில் அமர்ந்துவிட்ட பெரியாரின் பகுத்தறிவு தத்துவ வித்தகர் மிஸ்டர் கருணாநிதியால் தமிழ் நாட்டில் சாதியத்தை சான்றிதழ்களில் இருந்து கூட அகற்ற முடியவில்லை.

பகுத்தறிவு என்பது பேச்சளவில் இருக்கக் கூடாது. மனதளவில் எழ வேண்டின் மக்கள் கேட்கும் நியாயபூர்வமான கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான பதில் வேண்டும்.

பகுத்தறிவு இன்னொருவர் சொல்லி வருவதில்லை. மனிதன் தானாக சிந்தித்துப் பெற வேண்டியது அது. அதற்கு வழிகாட்டாத்தான் முடியுமே தவிர பகுத்தறிவை திணிக்க முடியாது. பெரியாரின் பகுத்தறிவு அவருக்கு விளக்கின அளவுக்கு மக்களுக்கு விளங்கவில்லை. காரணம் அவர் தொட்டுச் சென்ற பார்ப்பர்ணிய இனவாத கருத்தியல் அவரின் பகுத்தறிவு குறித்த கேள்விக்குறியை ஏற்படுத்தியதே.

இங்கு பெரியாரைக் குறிப்பிடக் காரணம் அரசியலுக்காக சமூகத்தை நோக்கி கொள்கை விளக்கம் அளித்தால் அது சமூகத்தில் அதிகம் மாற்றம் தராது. வரலாற்று ஆதாரங்களோடு வரும் அறிவியல் ரீதியான விஞ்ஞான ரீதியான உறுதியான விளக்கங்களே மக்களை மாற்றும். இது பெரியார் காலமல்ல. பகுத்தறிவு பேசி அரசியல் நடத்துவதற்கு.

தீபாவளி இன்று அரசியலாகி நிற்கிறது. இன்னும் சிலர் தீபாவளியால் சமூகப்பாகுபாடுகள் பிறந்ததாகச் சொல்கின்றனர். தலித்தியம் பார்பர்ணியம் எல்லாம் மீண்டும் தீபாவளிக்குள்ளால் விதைப்படுகின்றன என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

உலகமே தீபாவளியை ஜதீகங்கள் கடந்து மன மகிழ்வு வேண்டிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது இங்கே சிலர் தீபாவளிக்குள் பகுத்தறிவு தேடப் போய் கற்பனைப் பாத்திரங்களை தமிழ் அரசர்களாக்கி கற்பனைப் பாத்திரங்களை ஆரிய திராவிடர் ஆக்கி காலத்தால் மறந்து போன மறைந்து போன ஆரிய திராவிட வேற்றுமைகளைத் தூண்டி விட்டு அரசியல் நடத்துகின்றனர். இந்தியாவில் இன்னும் தப்பிப்பிழைத்துள்ள தலித்தியம் சாதியம் போன்றவற்றை நம்பி அரசியல் நடத்துபவர்களுக்கு இது உதவலாம். ஈழத்தமிழ் மக்களுக்கு இவை அவசியமில்லை. எமது மக்கள் பகுத்தறிவு பெற்று நீண்ட தசாப்தங்கள் கடந்து போயாயிற்று.

இன்றைய இளைய தலைமுறைக்கு தீபாவளி என்பது ஒரு என்ரரெயின்மென்ற் வெஸ்ரிவல் என்றுதான் உணரப்பட முடிகிறது. ஐதீகங்கள் எல்லாம் அவர்கள் கேட்கும் நிலையிலும் இல்லை அசுரர் தேவர் என்ற கற்பனைகளை நம்பித் திரியவும் அவர்கள் தயார் இல்லை. இன்று அறிவியல் வளர்ந்து வியாபித்திவிட்ட உலகில் நீங்கள் யாருக்கு பகுத்தறிவு புகட்ட வெளிக்கிட்டிருக்கிறீர்களோ தெரியாது.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் பழையவற்றைக் கிளறி நீங்கள் உங்களை மேன்மையாய்க் காட்ட முற்போக்கு வாதமாக பழைமை வாதம் பேசலாம். இன்று சிறுவர்கள் கூடக் கேட்பார்கள் இவர்களுக்கு வேற வேலை இல்லையா அசுரர் தேவர் என்று கொண்டு ஏன் இன்னும் பழைய படைப்பியலைச் செய்கின்றனர். ஒரு சுப்பர்மான் ஒரு ஸ்பைடர்மான் போன்று செய்யலாமே என்று.

பேசாமல் தீபாவளி சுப்பர்மானை ஸ்பைடர்மான் வெற்றி கொண்டதாக எழுதிவிடுங்களேன். நிச்சயம் அதுதான் இன்னும் விளம்பரமும் வியாபாரமும் பெருக்கும். அல்லது இன்னொரு கரிப்போட்டர் போன்ற ஒரு கதையை எழுதலாமே. பகுத்தறிவு வளர்க்காவிடினும் இனிமையான பொழுதுபோக்காவது அளிக்கும்.

தீபாவளியை இன்ரரெயிண்ட் மென்றுக்காக கொண்டாடுபவர்களை கொஞ்சம் உங்கள் அபரீத சிந்தனைகளைக் கொட்டி டிஸ்ரப் பண்ணாதீர்கள் பிளீஸ். தீபாவளி துன்ப இருள் விலக்கி இன்ப ஒளியின் ஒரு 12 மணி நேரமாவது வெடி கொழுத்திக் கொண்டாடவிடுங்கோ.

நமக்கு நரகாசுரனும் வேண்டாம் திராவிடமும் வேண்டாம் தலித்தியமும் வேண்டாம் அதை வைத்து அரசியலும் வேண்டாம். தேவை மன மகிழ்ச்சி மற்றும் றிலாக்ஸ.

குஷ்பு பேசினால் அரசியல் சாதிச் சண்டை என்றால் அரசியல் பெரியாருக்கு மாலை போடுதல் அரசியல் அண்ணாவுக்கு சாராயம் பருக்குதல் அரசியல் காந்திக்கு மூக்குக்கண்ணாடி போடுதல் அரசியல் முற்போக்குவாதம் என்று அரசியல் நடத்தும் இந்திய அரசியலை தயவுசெய்து ஈழத்துக்கும் கொண்டு வராதீர்கள்.

நரகாசுரன் புராணக்கதையின் ஒரு பாத்திரமாகவே இருக்கட்டும். அவனை திராவிட மன்னன் அல்லது தமிழன் அல்லது ஆரியன் என்றாக்கி உங்கள் கற்பனைகளால் மக்கள் மனங்களில் அசிங்கங்களை விதைக்காதீர்கள். ஜேசு நபி சிவன் எல்லாம் ஒருவரே இதைச் சொல்லிக் கொடுக்கவே உலகம் படுறபாட்டுக்குள், நீங்கள் வேறு ஜேசு யூதன் நபி காக்கா சிவன் ஆரியன் என்று மனிதருக்குள் வேற்றுமைகளையும் குரோத எண்ணங்களையும் வளர்த்து அதில் அழிவைக் கண்டு அரசியல் நடத்தி விளம்பரம் தேடி புகழ்தேட நினைக்காதீர்கள். அதுதான் சிறுமை. உங்களைப் போன்ற நரகாசுரகள் தான் மக்களுக்கு இனங்காட்டப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர். மனிதன் ஒற்றுமைப்பட்டுச் சிந்திப்பதைக் கூட விடமாட்டீர்கள் போல இருக்கிறதே. தீபாவளி ஒன்றுதான் இந்திய உபகண்ட மக்கள் அனைவராலும் ஒரே தினமாகக் கொண்டாடப்படும் ஒரு மகிழ்வான நாள். இன்று அது உலகம் பூராவும் வியாபித்த அளவில் கற்பனைக் கதைகளையும் கடந்து மகிழ்ச்சியைப் பகிர கொண்டாடப்படுகின்றன. தமிழ் பாரம்பரியத்துக்குள் தீபாவளி வரவில்லை என்று கருதுபவர்கள் ஒரு நத்தாராகவோ அல்லது ஒரு நோன்பாகவோ அல்லது ஒரு லவ்வேர்ஸ் டே போலவோ மக்கள் கொண்டாட்டும் விடுங்களேன். தொந்தரவு கொடுக்காமல்.

தயவு செய்து விவாதம் தனிநபர் தாக்குதல்களாக திசை திரும்பாமல் பார்த்துக் கொள்ளவும்.

மேற்கோள்: "சிவன் கிருஷ்ணா விஷ்ணு எல்லாவற்றையும் புனைகதைகளின் புராணங்களின் கதாப்பாத்திரங்களாக நம்புகின்றோம். ஒரு சினிமாப் படத்தை பார்க்க வேண்டின் அந்தக் கதாப்பாத்திரத்தை நம்பித்தான் ஆக வேண்டும். இன்றேல் படத்தை ரசிக்க முடியாது.படம் பார்த்து முடிந்ததும் அந்த நம்பிக்கை என்பது அவசியமில்லை.

அதேபோன்றதுதான் புராணங்கள் இதிகாசங்கள் தருபவையும். வெறும் கதாப்பாத்திரங்கள் கொண்டு சிலாகிக்கப்பட்ட கற்பனைகள். அவற்றின் சாராம்சம் என்பதில் உள்ள மனுநீதி மட்டுமே கருத்தில் எடுக்கப்பட வேண்டுமே அன்றி அதற்குள் இனவாதம் மனித வேறுபாடுகளை திணித்து சமூகப் பிரிவினைகளைத் தூண்டக் கூடாது."

இதை வைத்து நீங்கள் சிவன், கிருஸ்ணன், விஸ்ணு போன்றவற்றை நம்பவில்லை என்றும் அவைகளை வெறும் கற்பனைப் பாத்திரங்களாக மட்டுமே பார்க்கிறீர்கள் என்றும் நான் எடுத்துக் கொள்ளலாமா?

தயவு செய்து இதற்கு மழுப்பாமல் பதில் அளியுங்கள். நான் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு தெளிவாக பதில் சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவாத்தை திசை திருப்பும் விதமாக/ சர்ச்சைகுரியதாக இருந்த சொல சொற்பதங்கள் நீக்கப்பட்டுள்ளன. அத்துடன் தலைப்பை விட்டு நீங்கி/ விவாதத்தின் போக்கை மாற்றகூடியவாறு எழுதப்பட்ட கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

புராணங்களை உண்மை நிகழ்வுகளாகக் காட்டக் கூடிய எந்த வரலாற்றுச் சான்றுகளுக்கும் அல்லது விஞ்ஞானச் சான்றுகளும் இல்லாத வகையில் அவை நம்பும் போக்கில் இல்லாத போது புராணங்களைக் கதைகளாகப் படிக்கும் போது கதாப்பாத்திரங்களா நீங்கள் குறிப்பிட்டவர்களைக் கதைகளில் அவற்றை நம்பித்தான் ஆக வேண்டும். ஆனால் அவர்களே கையெடுத்துத் தொழுதுவிட்டால் நேரில் வந்து வாழ்க்கைக்கு உதவுவதாக நாம் நம்பவில்லை. ஆனால் புராணங்கள் இதிகாசங்கள் காவி வரும் மானுடவியல் நீதி அல்லது தத்துவங்கள் மனிதர்களுக்கு நல்ல வழிகாட்டிகளாக அமைகின்றன என்பதை ஏற்றுக் கொள்கின்றோம்.

இதற்கும் தீபாவளி என்பதில் நரகாசுரன் தமிழ் மன்னன் அல்லது திராவிட மன்னன் என்று நிறுவத்தக்க வரலாற்றுச் சான்றுகளை அல்லது நவீன விஞ்ஞானம் சார்ந்த ஆர்கியோலொஜிகள் சான்றுகளை நீங்கள் காட்ட நினைப்பதற்லும் என்ன சம்பந்தம் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

ஒருவேளை நரகாசுரனை ஆதாரங்களோடு தமிழனாக நிறுவினாலும் கூட தீபாவளியைக் கொண்டாடாதே என்று மக்களைப் பார்த்துக் கூற முடியாது. தீபாவளியால் காவப்படும் இந்தக் கதையை மாற்றும் படியே கோர முடியும். அதிலும் இன்றைய தலைமுறையினருக்கு இந்த இதிகாசப் பின்னணியே தெரியாது. அதில் கூட இடத்துக்கு இடம் பல வேறுபாடுகள் இருக்கும் போது நீங்கள் எதை மறுதலிக்கச் சொல்லப் போகின்றீர்கள்??

ஆனால் தீபாவளி பொதுவாக மனித மனங்களில் வாழ்வில் இருந்து துன்பத்தை நீக்கி மகிழ்வளிக்கும் ஒரு நிகழ்வாகக் கொண்டாடப்படலாம். அதில் உங்களுக்கு கருத்து வேறுபாடிருந்தால் ஏன் என்று தெளிவுபடுத்துங்கள். கொண்டாட வேண்டாம் என்பதிலும் கொண்டாடபப்டுவதின் நோக்கம் காவி வந்த தகவல் தவறானது என்று ஆதாரபூர்வமாக நிறுவி கொண்டாடபப்டுவதன் உண்மை நோக்கத்தை மானுடவியல் சார்ந்து எடுத்துச் சொல்வதைவிடுத்து அரசியலாக்குவதயோ இனவாத சமூகப் பிரிவினைவாதச் சிந்தனைகளை விதைப்பதையோ எம்மளவில் நாம் ஆதரிக்கவில்லை. அவை அமைதியான மகிழ்ச்சிகர மனித வாழ்வுக்கு உதவாது.

தமிழர்களுக்கு என்றிருந்த பல தனித்துவ அடையாளங்களையே முற்போக்குவாதம் என்று சிதறித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் பலதைக் காலமாற்றத்துக்கு இடமாற்றத்துக்கு வேண்டிய மாற்றம் என்று ஒதுக்கித் தள்ளிக் கொண்டிருக்கும் நிலையில் தீபாவளி மட்டும் ஆரிய திராவிட சிந்தனைகளின் அடிப்படையில் ஒதுக்கப்பட ஏன் முனையப்படுகிறது?? அதை மனித நிம்மதி கருதிய ஒரு கொண்டாட்டமாக உலகமே அங்கீகரிக்கும் போது நாமும் அனுமதிக்கலாம் தானே. அதனால் தமிழர் பாரம்பரியம் தனித்துவம் ஒட்டுமொத்தமாக கெட்டழிந்து போய்விடவா போகிறது.

தமிழர்கள் தொலைத்துவிட்ட தனித்துவ அடையாளங்கள் ஒன்று இரண்டல்ல. பல. அதற்கு விளக்கம் என்பது கலாசாரம் என்பது காலவோட்டத்தில் மாறுபடுவது என்பதாகி உள்ள நிலையில் தமிழர்கள் எப்படி தனித்துவம் பாரம்பரிய விழுமியம் காத்து இன அடையாளம் பேண முடியும். அதுவே கேள்விக் குறியாகி உள்ள நிலையில் ஏன் தீபாவளிக்கு மட்டும் இத்தனை முக்கியத்துவம். அதுவும் நரகாசுரனை தமிழனாக்க இவ்வளவு கரிசணை. அரசியல், விளம்பரம், விவாதம் என்பதான தேவைகளுக்காகவா?

உண்மையான மாற்றங்களை சமூகம் வேண்டின் சமூகத்துக்கு சரியான விளக்கங்களை சான்றுகளோடு அளியுங்கள். வெறும் தத்துவவியல் ரீதியான தர்க்க ரீதியான விடயங்களை சமூகம் உள் வாங்கப் போவதில்லை. மாற்றங்களும் வரப்போவதில்லை. தத்துவங்கள் பல நடைமுறையில் இல்லை. ஏட்டளவில் தான் உண்டு.

நெடுக்காலபோவான்!

விஸ்ணு, கிருஸ்ணன் போன்றவைகள் வெறும் பாத்திரங்கள். அவைகள் கைகூப்பி தொழுகின்ற கடவுள்கள் அல்ல என்ற கருத்தை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

இந்து மதம் தருகின்ற புராணக் கதைகளும், அதன் பாத்திரங்களும் கடைந்தெடுத்த பித்தலாட்டம் என்பதை ஏற்றுக்கொண்ட உங்களுடன் விவாதிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி

இப்பொழுது விடயத்திற்கு வருவோம்

ஒரு தமிழனை நரகாசுரன் ஆக்கி விட்டார்கள் எதை வைத்துக் கொண்டு சொல்கிறேன் என்பது உங்கள் கேள்வி

இதற்கு நீங்கள் உதாரணம் சொன்ன நீதிக் கதையில் இருந்து ஆரம்பிப்போம்

என்னுடைய விளக்கம் நீளும் என்பதால், வாசிப்பதற்கு இலகுவாக சிறிது சிறிதாகத்தான் எழுதுவேன். இடையில் வேறு கருத்து இருப்பின் தெரிவியுங்கள்

நெடுக்காலபோவான் சுட்டிக்காட்டிய காகம், குருவி, சிங்கம் போன்றவைகள் பாத்திரங்களாக இருக்கின்ற நீதிக் கதைகள் உருவான இடம் கிரேக்கம் மற்றும் ரோமபுரி

இங்கு உருவான கதைகள் கிரேக்கர்கள், ரோமர்கள் வணிகம் செய்யச் சென்ற இடம் எல்லாம் பரவியது. அதனால்தான் "பாட்டி வடை சுட்ட கதை" உலகம் முழுவதும் இருக்கிறது.

இந்தக் கதைகளை ஆரம்பித்தவர்கள் கிரேக்கம், ரோமபுரியில் இருந்த அடிமைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து காகம் நரி தமிழ் பேசிய கதைகளை சொல்லாதீர்கள்.

வரலாற்று ரீதியான விஞ்ஞான ரீதியான அகழ்வாராச்சி ரீதியான தொல்பியல் ரீதியான சான்றுகளைத் தந்து உங்கள் விவாதம் சமூகத்துக்கு ஒரு தகவலைக் காவிச் செல்லத்தக்க வலுவான உறுதியான மாற்றத்தை வலியுறுத்தத் தக்க நிலையை எட்ட முன்வையுங்கள்.

தத்துவம்.. அவர் சொன்னார் இவர் சொன்னார்..வீரமணி சொன்னார் கருணாநிதி சொன்னார் இந்தக் கதைகள் வேண்டாம். நாம் சர்வதேச அங்கீகாரங்கள் தரவல்ல வரலாற்றுச் சான்றுகளோடு அறிவியலினூடு விடயங்களை அணுகுவதே எமது பாரம்பரியத்தின் இருப்பை சர்வதேசத்தின் முன் நிலைநிறுத்திக் காட்ட உதவும். அதுவே தைழர்களுக்கு என்று ஒரு தனித்துவ இன அடையாளம் உண்டு என்பதை சர்வதேசத்தை உறுதிபட நம்பவைக்கும். அதைச் செய்யுங்கள். நிச்சயம் வரவேற்கலாம். காலத்தை வீணே வீராப்புப் பெசி வீனடிப்பதிலும் சான்றுகளைத் தேடுவதே அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் ஆரம்பத்திலேயே குறுக்கிடுவதாக எண்ண வேண்டாம். நீங்கள் குறிப்பிட்டது போல காகம் நரிக் கதைகள் கிரேக்கர் உரோமர் கதைகளின் வழி வந்தவை என்பதற்கான சான்றுக்கான இணைப்பையும் வழங்குங்கள். அப்படித் தரமுடியாத பட்சத்தில் இதை எப்படி நம்ப முடியும்>>> இதே நிலைப்பாட்டத்தை தொடர்ந்து நீங்கள் வைக்கப்போகும் விடயங்களிலும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஒரு விமானத்தாக்குதலைக் கூட உறுதிப்படுத்த நேரடி விசாரணைக்கும் தடயங்களுக்கும் வழிதேட வேண்டி இருக்கும் இக்காலத்தில் வெறும் வார்த்தைகளால் எழுதப்படும் சோடிப்புக்களுக்கு பெறுமதியில்லை. ஆதாரங்களைத் தேட வேண்டியதாகிறது. 9 வது கோளாக இருந்த புளூட்டோவை அகற்றியதற்கு எவ்வளவு சான்றுகள் கலந்துரையாடல்கள் வாக்கெடுப்புகள் தேவைப்பட்டன. அப்படி இருந்தும் இன்னும் சர்ச்சை இருக்கிறது.

ஆனால் நாம் அவர் சொன்னார் இவர் எழுதினார் என்று ஆளாளுக்கு எழுதும் ஆதாரங்கள் சமர்ப்பிக்காத எழுத்துக்களை உதாரணமாக்கி அவற்ரை விரிவுபடுத்தி மாற்றங்களைக் கோர முடியாது. வெறும் கட்டுரைகளை மட்டும் வரைந்து எங்களை நாமே பாராட்டிக் கொள்ளத்தான் முடியும். அவை சமூகத்தாக்கம் தரவல்லனவாக இருக்க ஆதாரங்களை அறிவியல்ரீதியாக அங்கீகரிக்க கூடிய வகையில் முன் வைக்க வேண்டும்.

கவனத்தில் கொள்வீர்கள் என்று நம்புகின்றோம். இன்றேல் உங்களின் வாதத்தை நாம் ஏற்கக் கூடிய நிலை இருக்காது. ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைக்கு எப்படிச் சான்றுகள் முக்கியமோ அந்தளவுக்கு உங்களின் இந்த விவாதத்திலும் நீங்கள் சான்றுகளைத் தர வேண்டிய கடப்பாடு உண்டு. காரணம் நீங்கள் கையில் எடுத்துள்ள விடயம் மிகவும் சான்றுகளோடு நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்று. இன்றேல் சமூக்க்திடம் நாம் அதற்கு அங்கீகாரம் தேட முடியாது.

இப்படி அடிமைகள் இந்தக் கதைகளை உருவாக்கியதற்கு காரணங்கள் இருக்கிறது. ஆள்பவர்களால் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்ட அடிமைகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதற்கு சுதந்திரம் அற்றவர்களாக இருந்தார்கள். அடி வாங்கிய சக அடிமைக்கு வெளிப்படையாக தைரியம் சொல்ல முடியாதவர்களாக இருந்தார்கள். அப்பொழுது கற்பனை வளம் மிக்க "ஏசப்"(கி.மு 600) போன்ற அடிமைகள் இந்தக் கதைகளை உருவாக்கினார்கள். நேரடியாக ஆள்பவர்களை திட்ட முடியாது என்பதால் இந்தக் கதைகளின் மூலம் அவர்களை சாடினார்கள். பலமான மிருகங்கள்(ஆள்பவர்கள்) பலவீனமான மிருகங்களிடம்(அடிமைகள்) தோற்பது போன்றும் ஏமாறுவது போன்றும் கதைகளை உருவாக்கி பரப்பினார்கள்.

ஆகவே இந்த "நீதிக் கதைகள்" கூட வாழ்ந்த மனிதர்களையே குறிப்பிடுகின்றன.

இதற்கு ஆதாரம் கேட்காதீர்கள். நீதிக் கதைகளின் தோற்றம் குறித்து ஆராய்ந்தவர்கள் கூறிய முடிந்த முடிபு இது. இதை நீங்கள் ஒரு சாதரண வரலாற்று ஆசிரியரிடம் கூட கேட்டு அறிந்து கொள்ளலாம்.

நீதிக் கதைகள் பற்றி googleஇல் தேடிப் பாருங்கள்.

என்னிடம் காலக் கருவி இல்லை. உங்களை நேரடியாக கூட்டிக் கொண்டு போய் காட்டுவதற்கு.

இந்தக் களத்திலே ஆய்வாளர்களின் முடிவுகளையும், தர்க்கரீதியாக வாதங்களையும் மட்டுமே வைக்கி முடியும். சோதனைக் குழாய்களை வைத்து விஞ்ஞானரீதியாகவா நிரூபிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக நாங்களா மக்களை நோக்கி தீபாவளியைக் கொண்டாடாதீர்கள் என்று கோருபவர்களாக இருந்தால் சரியான சான்றுகளோடு எங்களின் கோரிக்கைக்கான அறிவியல் ரீதியான சமூக அங்கீகாரம் மட்டும் நோக்காமல் சர்வதேச அங்கீகாரம் நோக்கிய வடிவிலேயே வைப்போம்.

இப்போ நீங்கள் குறிப்பிட்ட இந்த நீதிக் கதைகளின் பின்னணி பற்றிய கருத்து எமக்கு மட்டுமானதல்ல. ஒரு சமூகத்தை நோக்கி நீங்கள் வைத்துள்ள கருத்து.

அந்த வகையில் நீங்கள் இப்படிக் கூற அதற்கான ஆதாரத்தை எங்காவது பெற்றிருப்பீர்கள். நிச்சயமாக அது உங்கள் கற்பனையாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் ஆரம்பமே அடிபட்டுப் போகிறது. நீங்கள் இந்த வரலாற்று உண்மையைப் பெற்ற இடத்தை பகிரங்கப்படுத்துங்கள்.

நாம் வரலாற்று ஆச்சிரியரைத் தேடித் திரிய முடியாது. காறணம் இது பற்றிய ஆய்வை செய்யவில்லை. மக்களுக்கும் அது முடியாது. எனவே தகவல் தந்து மக்களை நோக்கி கட்டுரை ஒன்றை சமர்ப்பிக்கும் நீங்களே அதற்கான ஆதாரத்தையும் காட்ட வேண்டும்.

சில சமகால நிகழ்வுகளுக்குக் கூட ஆதாரமில்லாமல் நிரூபிக்க வழியின்றி இருக்கின்றோம். வீட்டு மதிலில் எழுதியதைக் கூட சொல்லால் நம்ப வைக்க முடியவில்லை. எனி விடியோதான் எடுத்துப் போட வேண்டும். அப்படிப் போட்டாலும் கூட அது மிமிகிரி என்றுவார்கள். அப்படியான காலக்கட்டத்தில் உங்கள் வார்த்தைகளை மட்டும் எப்படி நம்புவது?? அவை உண்மையாக இருப்பினும். எழுத்தில் பலதை எழுதி அனுப்பிவிடலாம். பிரசுரித்துவிடலாம். ஆனால் அதை உறுதிப்படுத்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டியது கட்டாயம். அப்படிச் சமர்ப்பிக்கபடாத கட்டுரைகளை நம்ப நாம் தயார் இல்லை. காரணம் அதை நாம் அறிவியலினூடு நிரூபித்துக் காட்ட முடியாது. மக்களை ஏற்கச் சொல்ல முடியாது.

நீதிக்கதைகளின் வரலாறு பற்றி நான் இங்கே சொன்ன விடயத்தை இந்தக் களத்திலே உள்ள வேறு யாருமே கேள்விப்படவில்லையா?

"ஏசப்" பற்றி சில தகவல்கள் இங்கு உண்டு

http://en.wikipedia.org/wiki/Aesop

உங்களுக்கு ஆதரங்களாக ஆய்வு நு}ல்களையோ, இணையத் தளங்களையோ தருவதில் என்ன பயன் என்று எனக்கு தெரியவில்லை. அந்து நு}ல்களும், இணையத் தளங்களும் உண்மையை சொல்லுகின்றன என்பதற்கு என்ன ஆதாரம் என்று நீங்கள் கேட்கத்தானே போகிறீர்கள்.

எதுவாக இருப்பினும் இதை வாசிக்கின்ற மற்றவர்கள் என்றாலும் சில விடயங்களை புரிந்து கொள்ளட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.