Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நரகாசுரனுக்கு அஞ்சலிகள்

Featured Replies

வன்னிமைந்தன்! நீங்கள் இங்கு கூறப்படுகின்ற தீபாவளி சம்பந்தமான விடயங்களை ஏதோ நான்தான் முதன்முதலாக ஆய்வு செய்து கண்டுபிடித்ததாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான் என்னிடம் ஆய்வைத் தரும்படி கேட்கிறீர்கள்.

இவைகளை எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே பல ஆய்வாளர்கள் மிக ஆழமாக ஆராய்ந்து கூறியவைகள். ஆனால் எம்மில் பெரும்பான்மையானவர்கள் கடவுள் சார்ந்த மூடநம்பிக்கைகளினால் இவைகள் குறித்து பேசவே அஞ்சுகிறார்கள்.

இதனால் இது போன்ற ஆய்வுகள் உங்கள் பார்வைக்கு வரவில்லை என்று நினைக்கிறேன்.

நீங்கள் வன்னிமைந்தன் என்பதால் சொல்கிறேன். சந்தர்ப்பம் கிடைத்தால் வன்னி போய் வாருங்கள். வரும்போது நீங்கள் பகுத்தறிவில் எனக்கு பாடம் நடத்துகின்ற அளவிற்கு தெளிவோடு வருவீர்கள்.

நம்பவில்லை என்றால் வன்னிக்கு ஒருமுறை தொலைபேசியாவது எடுத்துப் பாருங்கள்.

  • Replies 245
  • Views 27.4k
  • Created
  • Last Reply

ஜயா நெடுக்கால போவான்

உம்மை பொருத்தவரைக்கும் நீர் பிடித்த முயலுக்கு 3 கால்தான்.நீர் உம்மை நீரே ஏமாற்றுகிரீர் தவறாக சொல்லிவீட்டு அதுக்கு நியாயம் கற்பிக்கும் **********.களின் தலைவன்.வால்மீகி ராமாயணமானது இலங்கையில் வசித்த திராவிடருக்கு எதிராகவும் ஆரியருக்கு எதிராக நடந்த ஒரு சம்பவம் அதில் கற்பனைகள் புகுத்தப்பட்டிருக்கலாம் அனால் சில உண்மையான சம்பவங்களை வரலார்ருக்கு திரித்துக்கூற புனையப்பட்ட ஒரு புனைக்கதை என நான் நினைக்கின்றேன்.அதாவது ஆரியரை தேவராகவும் திராவிடரை அரக்கராகவும் சித்தரிக்கப்பட்ட ஒரு புனைக்கதை.இராமாயனத்தில் அரக்கராக இலங்கையை சேர்ந்த இராவணன் கட்டப்பட்டுள்லான் கோரப்பற்களுடன் வித்தியாசமான உருவங்களாக வால்மீகி சொல்கிறார் ஆனால் அவ்ர் அதில் விட்ட பிழையோ நானறியேன் அதாவ்து அனுமான் சீதையை தேடி இலங்கை வருகையில் ராவணனின் மனைவியைகண்டு சீதையாக இருக்குமோ என யோசித்ததாக.ஆக ஆரியர்களால் சித்தரிக்கப்பட்ட ராவணான் அதாவது அரக்கன் கோரமானவன் ஆனால் ராவனனின் மனைவி அதாவது அரக்கி சீதையை விட அழ்கானவள்

Origins

It is believed to have been built at least 1300 years ago. Many inscriptions found in the surrounding area speak of Indian Pallava, Chola and even Pandya kings making contributions to the upkeep of the temple indicating an origin in antiquity. Local legend has it that it was renovated by a Tamil Chola king from South India named Kulakottan. This temple is one of the four important Saivite temple connected to the revival of Hinduism in Sri Lanka. The other three being situated in Ketheeswaram, Muneeswaram and Galle.

Trincomalee is a natural deep-water harbor that attracted great sea farers like Marco Polo, Ptolemy and Sea Traders China and East Asia from the ancient times. The local name Thirukonamalai means "Holy East Hill'. Kona is a derivative of the 1st Century Tamil word Kuna meaning East. Trinco as it is commonly called, has been a sea port since the days of the ancient Kings and one of the British Empire's most important ports in Asia during the second world war. From 1941-45, Trinco had been the headquarters of Lord Louis Mountbatten Allied Southeast Asia commander.

The Thirukoneswaram temple [1] attracted pilgrims from all parts of India. This celebrated shrine was demolished in 1622 by the Portuguese (who called it the Temple of a Thousand Columns), who fortified the heights with the materials derived from its destruction. (Some of the artefacts from the demolished temple were kept in the Lisbon Museum. The stone inscription by Kulakottan (Kunakottan), the last king. It has a dual fish emblem and is engraved with a prophesy stating that after 1500s the westerners with different eye colors will be ruling the country for the ensuing 500 years and at the end of it, the rule will revert back to Vadugus.) It was next held by the Dutch, and subsequently by them and the French alternately, till the capture of Sri Lanka by the British in 1795.

The hill face is rugged and is called 'Ravanan Veddu'.

வால்மீகி ராவணான் ஒரு சிவபக்த்தன் என சொல்கிறார் கோனமலையை வழிபட்டதாக சொல்கிறார் கோணமலையை வெட்டியதாக சொல்கிறார் தாயின் பிதிர்கடனுக்காக 7 வெந்நீர்கிணறுகளை உருவாக்கியதாக சொல்கிறார்.திருகோண்மலையை சேர்ந்தவர்களுக்கு தெரியும் கோணேஸ்வரர் மலையில் இராவணன் வெட்டு என் அழைக்கப்படுகிறது ஒரு குறுகிய கணவாய்.மர்ரும் கிண்ணியாவில் இருக்கும் வெந்நீர்கிணறு தாயின் பிதிர்கடனுக்காக ராவணனால் உருவாக்கப்பட்டதாக கருதுகின்றனர் மக்கள் அதனை என்னால் உறுதிப்படுத்தமுடியவில்லை அல்லது நம்பாமலும் இருக்கமூடியவில்லை.அத்துடன் நுவரேலியா செல்லும் வழியில் நுவெரேலியா எல்லைக்கு மிக அண்மையில் ஒரு கோயில் இருக்கிறது இங்குதான் சீதை சிறைவைக்கப்பட்டதாக ஜதீகம்

ஆக சில சம்பவங்கள் நடை பெற்றிருக்கிறன ஆனால் வடநாட்டார் அதாவது ஆரியர் தம்மை தேவராக்கி திராவிடரை அரக்கராக்கி செய்யப்பட்டதாகவே எண்ணத்தோன்றுகின்ரது அதாவது ராமாயணத்தில் நடந்தது போல ராமர் ஒரு கடவிளோ அல்ல அவர் ஒரு ஆரியன் என்பதே நிதர்சனம்

மற்றைது மகாபாரதம் மகாபாரத்தில் கிருஸ்நர் அரிச்சுணனுக்கு ஒரு அட்வஸ் கொடுப்பாராம்(அதன் பெயரை மறந்துவிட்டேன்)

எது நடந்ததோ அது நன்றாக நடந்தது

எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கும்

எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்ராகவே நடக்கும்

இதுவானது பிராமணர்கள் தலித்மக்களுக்கு கூலிகொடுக்கமல் ஏமாத்துவதற்காக தாமாகவே புனைந்த ஒரு அட்வைஸ்.இதனை நான் தமிழ்துறையில் பேராசிரியர் ஒருவர் சொல்லக்கேட்டிருக்கின்றேன்.அ

Ceylon Tamils, the original inhabitants

The earliest information about Ceylon (or Lanka as known earlier) are from the Indian epics, Ramayanam and Mahabharatam. These epics refer to the great Dravidian King Ravanan, a devout Hindu who ruled Lanka, more than five thousand years ago. The Buddhist chronicles, the Mahavamsa written in the 6th Century A.D., and the later Suluvamsa, give information about Ceylon history from the 6th century B.C. All these contain some impossible stories, but contain some useful information about the early inhabitants of Ceylon and their culture and civilisation.

Tamil Hindu King Ravanan, Lord of Lanka

Common sense dictates that migrants from southern India were the original inhabitants of Sri Lanka. There are at present, three ethnic groups in Sri Lanka - Sinhalese , Tamils, and Muslims. Of these, Islam was founded in Arabia in the 7th Century A.D., and the arrival of Muslims in Sri Lanka commenced later, in the 8th century A.D. According to the Mahavamsa, the Sinhala chronicle, the Sinhalese race originated in Lanka after the arrival by sea of Prince Vijaya and 600 male companions from North East India in the 6th Century B.C. As they misbehaved, they were banished from the kingdom by Vijaya’s father, who was the king, and drifted to Ceylon. There were no women among them, and so they married the local Tamil women including the Yaksha queen Kuveni, to form the Sinhala race.

From the ancient Indian epics, and other sources, there is information that Tamils were in Sri Lanka, then called Lanka, from pre-historic times. Some of them were known as Yakkas and Nagas, a cultured and civilised people. Many thousands of years ago, obviously Ceylon was geographically part of the Indian mainland and the sea separated it by gradual erosion.

This is not to say that Tamils did not come from South India and settle down or go there subsequently. There would no doubt have been constant interaction between India and Ceylon and a flow of people between the two countries from time immemorial, before and after the arrival of Vijaya. India and Ceylon are only a few miles apart, and fishermen from either side would have seen the other lands and people and settled on either side and intermarried.

Queen Mandothari sends her son,Prince Indrajithan to battle

Not much information is available about the ancient Tamils of Lanka, who lived before the period of the Tamil Hindu King Ravanan, five thousand years ago, though Tamil existence in Lanka goes far back beyond King Ravanan.

King Ravanan, the first known Tamil king was a powerful ruler, and was also known as Lankeswaran or Lord of Lanka. His son, Crown Prince Indrajithan, was a renowned warrior, and his wife was the virtuous Mandothari. Later on there were famous Tamil Kings like Ellalan the Just and Parakramabahu the Great under whom the country prospered. The mighty Tamil Chola kings of South India ruled over the whole of Ceylon during different periods. By a twist of fate, the Tamils who were occupying all of Ceylon were overwhelmed and assimilated by the more aggressive Sinhalese. Gradually the Tamils were pushed into the Northeast, which now remains their embattled homeland. They are now fighting for their survival.

http://www.sangam.org/articles/view2/?uid=676

தமிழில் சொல்லியும் விளங்காதவர்களுக்கு ஆங்கிலத்தில் சொன்னால் விளங்கி விடவா போகிறது.

குறிப்பிட்ட இணையத் தளங்களில் இருப்பது உண்மை என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்க இவர்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?

இவர்களின் நோக்கம் ஒன்றுதான். எமது தமிழ் மக்கள் ஆரியச் சாக்கடைக்குள் காலம் காலமாக அமிழ்ந்து கிடக்க வேண்டும். தமிழன் தன்னுடைய அடையாளத்தை மீண்டும் பெறுவதற்கு முயற்சிக்கக் கூடாது

நான் ஆரம்பித்திலேயே சொன்னேன். இவர்கள் இத்தனை காலமாக "நரகாசுரன்" கதை பற்றி எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை.

கிருஸ்ணன், நரகாசுரன் போன்றவர்கள் இருந்ததற்கு என்ன ஆதாரம்?

புூமியை எப்படி பாயாக சுருட்டலாம்

புூமியை எப்படி கடலுக்குள் ஒளிக்கலாம்?

பன்றிக்கும் புூமிக்கும் எப்படி பிள்ளை பிறக்கும்?.....

என்று எதையுமே கேட்கவில்லை.

அத்துடன்

ஏன் தமிழில் வழிபாடு செய்யக்கூடாது?

புராணக் கதைகள் ஏன் ஆபாசமாக இருக்கின்றன?

திருமணத்தில் சொல்லப்படும் மந்திரங்களுக்கு அர்த்தம் என்ன?

சாதிகள் வேண்டாம் என்றால், பிராமண சாதி மட்டும் எப்படி இருக்கலாம்?

எல்லா இனங்களுக்கும் ஒரு செம்மையான வரலாறு இருக்க, தமிழனுக்கு மட்டும் ஏன் ஒரு சரியான வரலாறு இல்லை?......

இப்படியான கேள்விகளையும் இவர்கள் கேட்கவில்லை.

ஆனால் எங்களிடம் மட்டும் ஆயிரம் கேள்வி கேட்கிறார்கள். இதில் இருந்தே இவர்களுடைய மோசடி தெரிகிறது அல்லவா? இவர்களுடைய நோக்கம் எமது மக்கள் விழிப்புணர்வு பெறக்கூடாது என்பதே.

இங்கே வன்னிமைந்தனை நான் குற்றம் சொல்லவிரும்பவில்லை. அவர் தினம் ஒரு கவிதை எழுதித் தள்ளினாலும், ஆரிய-திராவிட பிரச்சனை குறித்து எதுவும் அறியாமல் இருப்பது பெருத்த ஆச்சரியம்.

அனேகமாக அவர் தீபாவளிக்கு "தீபாவளி, சுறாவளி, கோமாளி" என்று ஏதாவது கவிதை எழுதி தயாராக வைத்திருந்து, அதை நாங்கள் குழப்பியதால் வந்த கடுப்பாக இருக்கலாம்.

எமது சைவக்கடவுள்மாரை பற்றிகதைக்க வெளிக்கிட்டால் கனக்கதைக்கலாம் நான் ஒரு நாத்தீகனல்ல ஆனால் சமயத்தில் ஆழ மூழ்குபவனுமல்ல

1.எமது கோயில் கோபுரங்களை அதில் இருக்கும் சிலைகலை உற்று நோக்குங்கள் ஒரு ஆபாசமான நிலையிலாவது அதாவது செக்ஸ் பொஸிசன் இல் இருப்பதுபோல கட்டாயம் இருக்கும் எங்களின் வாரிசுகள் எம்மைப்போல கேள்விகேட்காமல் இருக்கப்போவதில்லை அல்லது அப்படிக்கேட்டால் சாமி கோவிக்கும் என எம் பெற்றோர் எமக்கு சொன்னது போல நாம் அவர்களுக்கு சொல்லவும் முடியாது அவ்வாறு இப்படிப்பட்ட சிலையை பற்றி கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்.நாம் சிறுவயதெலேயே சமய நம்பிக்கையை ஊட்டி வளர்க்கப்பட்டு விட்டோம் அதாவது திணிக்கப்பட்டு விட்டோம் சமயம் என்பது ஒவ்வொரு தனிமனித சுதந்திரம் எம்மை பொறுத்தவரையில் அது எமது பெற்றோரின் சுதந்திரம் அதாவ்து எம் பெற்றோர் எம்மதமோ அம் மதமே நாம்.

2.ஜயனார் எப்படி பிறந்தார் சிவனுக்கும் கிருஸ்னருக்கும் பிறந்தவரெண்டு ஜதீகம் அதவது ஓரினச்சேர்க்கை மூலம் பிறந்தவர்.

3.தேவதாசிகள் கதை எப்படிப்பட்டது பிராமணர்கள் தேர்ந்தெடுப்பார்களாம் ஒரு பெண்ணை அதாவது கோயிலுக்கு அவரின் பெற்றோரால் அப்பெண் காணிக்கையாக்கப்படுவாராம்.ஆக எம் இந்துசமயம் பிராமணரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.

4.சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லும் ஜயர்மார்கள் ஏன் தமிழில் சொல்லமுடியாது தம் தமிழில் தேவாரங்கள் இருகின்றனதானே.இந்த விசயத்தில் கலைஞர் கருநாநிதிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் தமிழில் அர்ச்சனை எண்டு தமிழ்நாட்டில் கொண்டு வந்ததுக்கு இவ் நடைமுரை தமீழத்திலும் வரவேண்டும்.

5.தமிழ் முறைப்படி திருமணம் செயலாமே ஏன் இன்னும் ஆரியரின் மந்திரங்கலை சோல்லி செய்ய வேண்டும் அவுஸ்திரேலியாவில் இருக்கும் சபேசன் செய்து வைத்த தமிழ் முறைக்கல்யாணத்தினை எனக்கு பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது வெகு அருமையாக சுருக்கமாக செய்து முடித்தார் அவர்

6.நாம் சிறுவயதில் படித்த கதைகள் போல அதாவ்து அரக்கனின் உயிர் பல கடல் பல மலை கடந்து ஒரு வண்டினுள் இருக்கும் அதை பலதலை கொண்ட பாம்பு காவல் காக்கும் எம் தலைமுரை நம்பிவிட்டது எம் அடுத்ததலைமுரையையும் இப்படி ஏமாத்தப்போகிறோமா

7.எம்மினத்தவரின் பலவீனத்தால் காசுபாக்கும் கள்ளசாமிகள் தான் பலர்.மேல்மருத்துவர் ஒரு ரவுடியாக இருந்தவர் பின் சாமியாராகிவிட்டார்.அவரின் மகளையே பிரசவத்தின் போது காப்பாற்றமுடியாதவர் மற்றவர்களை எப்படி காப்பார்.கொமாண்டர் சாமி எண்டு ஒருவர் அமெரிக்காவில் இருகிறாராம் அவர் தமிழ் நாட்டு காவல்துறையில் முக்கியபதவியி இருந்தவராம் அவரின் கனவில் அமெரிக்காவில் கோயில் கட்டச்சொல்லி கடவுள் கட்டளையிட்டாராம் அதற்கு காணிக்கை கேக்கிறார்.ஜாதகம் பரிகாரம் செய்ய 5000 டொலராம் அதனை பரிசீலிக்க 200 டெலராம் என்னுடன் இருக்கும் ஒரு சிங்கப்பூர் இந்தியர் இவரிடம் நல்லாக எமாந்து தன் செயலை நொந்து கூறினார்

8.ஊரில் எத்தனைபேர் கோயில் கடல் கடல் எண்டு திரியிறாங்கள் அனால் ஒருவேலையும் செய்யமாட்டீனம் குடும்பம் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஸ்ரப்படும் ஆனால் கோயில் கோயில் எண்டு மாய்வீனம் வெளிநாட்டிலிருந்து யாராவ்து ஊர் போனால் ஒரு குழுவாய் வருவீனம்மாம் கோயில் கட்ட நன்கொடை கேட்டு என் நண்பர்கள் சொன்னார்கள் கேடு வருபவர்கள் வீட்டில் அடுப்பெரிந்தே கனகாலம் இருக்கும் ஏனிந்த தெவையில்லாத வேலை

இதையெல்லாம் கேட்டால் உங்களுக்கு லூசுக்கூட்டம் என்செய்ய நான் கடவுளை பின் பற்ற வேணாம் எண்டு சொல்லவில்லை மானசீகமாக பின்பற்றுங்கள் அதனுள் மூழ்கிவிடக்கூடாது எண்டுதான் சொல்கிறேன்,இதில் பிழையிருப்பின் அல்லது யாரின் மனதையும் புண்படுத்தியிருப்பின் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்

இந்து மதத்திற்கும் சைவத்திற்கும் வித்தியாசம் என்ன?

தமிழர்களில் எத்தனை பேர் தம்மை சைவர்களாக பார்க்கிறார்கள்? வெளிநாட்டவர் யாராவது நீ இந்துவா (hindu) என்றால் இல்லை என்று எத்தனைபேர் விளக்கம் கொடுத்திருப்பார்கள்? கொடுக்க முடியுமானவர்களாக இருக்கிறார்கள்?

அதாவது சொந்த அடையாளத்தை விளக்க தெளிவு படுத்த கூடிய பக்குவமும் அடிப்படை அறிவும் இருக்கா?

நான் எல்லோரும் நாத்திகராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. குறைந்தபட்சம் தமது வரலாற்றில் தெளிவு, தமது உண்மையான அடையாளத்தை பிறத்தியாருக்கு பெருமையுடன் விளங்கப்படுத்திறத்திற்கு ஆர்வம் இருக்கா?

இந்து என்பது மதம்

சைவம் என்பது உணவு

இதுதான் எங்கள் தமிழரின் அறிவு

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு ஆராய்ச்சி என்று உங்கள் உங்கள் குரோத எண்ணங்களைக் கொட்டிக் கொண்டிராமல் ஆதாரங்களோடு தாருங்கள். தமிழிலோ ஆங்கிலத்திலேயோ ஆதாரங்களோடு அறிவியல் ரீதியாக அணுகக் கூடிய வகையில் சமூக சர்வதேச அங்கீகாரங்கள் பெறத்தக்க வகையில் கட்டுரைகளில் ஆதாரங்களை இணைத்து வழங்குங்கள்.

உங்கள் உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை எல்லாம் உலகமோ சமூகமோ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை.

முயலுக்கு ஒன்றரைக் கால் என்பவரோடு 3 கால் என்றால் தான் 4ம் காலையும் தேடுவார்கள்.

முன்னுக்குப் பின் முரணான தகவல்களையும் ஒரு தலைப்பில் நடப்பவைக்கு பிறிதொரு தலைப்பில் கருத்து எழுதுவதையும் தவிர்த்து ஆதாரங்களோடு விடயங்களை அணுகுவதே சிறப்பு.

கற்பனைக்கு கற்பனை விளக்கம் அளிப்பதை நிறுத்தி வரலாற்றுச் சான்றுகளை தொல்பொருள் சான்றுகள் வழிவந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆதாரமாக்கி அறிவியல் பூர்வமாக சிந்தியுங்கள். தொடர்ந்து சிலாகிக்கும் சொற் சிலம்பம் ஆடுவதை நிறுத்துங்கள். போலிக் கருத்துக்களால் மக்களை ஏமாற்றிய காலம் போய் விட்டது. அறிவியல் பூர்வமான அணுகுமுறைகளே மக்களை சிந்திக்க மாற்றங்களைக் கோர வைக்கும்.

நெடுக்கால போவனைப் பற்றிய ஆராய்ச்சியை விடுத்து சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் சான்றுகளைச் சமர்பிக்கவும். தமிழ் போய் ஆங்கிலத்தில் எழுதிய சொற் சிலம்பங்களை இங்கு வைத்து ஆதாரம் போன்ற ஒரு மாயைத் தோற்றத்தை உருவாக்காமல் சரியான அங்கீகரிக்கப்பட்ட சான்றுகளை முன் வையுங்கள்.

தமிழர்களின் வரலாற்றுச் சான்றுகள் பலவும் கூட அழிந்து போயுள்ள நிலையில் அவற்றையே உறுதிப்படுத்த முடியாமல் இருக்கும் நிலையில் தீபாவளி என்ற சர்வதேச அங்கீகாரத்துடன் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வுக்கு அநாவசிய திராவிட விளக்கம் அளித்து மக்களை ஆதாரமற்ற வகையில் குழப்புவதை நிறுத்துவது நல்லம். ஆதாரங்களோடு கட்டுரைகளை முன்வைக்கும் போது அவையே சர்வதேசம் சமூகம் என்று பல நிலைகளிலும் தீவிரமாக எடுக்கப்படும். இன்றேல் வாசிக்கப்பட்டு குப்பையில் தான் வீசப்படும்.

நெடுக்காலபோவான்!

இது ஒன்றும் எங்களின் தனிப்பட்ட கருத்து அல்ல. தமிழ்நாட்டை ஆளுகின்ற கலைஞரின் கருத்தும் தமிழீழத்தை ஆளுகின்ற தேசியத் தலைவரின் கருத்தும் இதுதான். அதற்கான ஆதாரங்களை ஏற்கனவே தந்துள்ளேன்.

அத்துடன் பல்லாயிரக் கணக்கான தமிழ் உணர்வாளர்களின் கருத்தும் இதுதான். இதை நீங்கள் அறியாமல் இருப்பதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது.

வரலாற்று ஆதாரங்கள் கேட்கிறீர்கள். தமிழர்களின் வரலாற்றுக்கு என்ன நேர்ந்தது என்று உங்களுக்கு தெரியாதா? அனல்வாதம், புனல்வாதம் என்று மதத்தின் பெயரால் தமிழர்களின் அரிய ஓலைச் சுவடிகள் அழிக்கப்பட்டதைப் பற்றி நீங்கள் கேட்கப்படவில்லையா?

தமிழர்கள் எத்தனை ஆண்டுகள் சுதந்திரமாக வாழ்ந்தார்கள், தங்களின் வரலாற்றை சுதந்திரமாக எழுதுவதற்கு?

ஆரியப் படையெடுப்புக்கள் பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாதா?

நேடுக்காலபோவான்! இன்று எங்களிடம் எஞ்சி இருப்பவை ஒரு சில சங்கப்பாடல்கள், திருக்குறல், ஐம்பெருங்காப்பியத்தில் சில பகுதிகள், தொல்காப்பியம் இப்படி ஒரு சிலவே.

தமிழர்களின் பெரும்பாலான வரலாற்று சான்றுகள் சிதைத்து அழிக்கப்பட்ட பின் நாம் எதை ஆதாரமாக காட்ட?

நாம் இருக்கின்ற சில வரலாற்று நு}ல்களையும், ஆரியர்கள் எழுதிய வேதங்களையும் ஆராய்ந்து ஒப்பிட்டு சில முடிவுகளுக்கு வருகிறோம்.

திராவிடர்களேயே அசுரர்கள் என்று சொன்னார்கள் என்று நாம் கூறுவதற்கு காரணங்களாக நான் சில விடயங்களை சுட்டிக் காட்டியுள்ளேன்.

முடிந்தால் அவைகளை நீங்கள் தர்க்கரீதியாகவோ, அறிவியல்ரீதியாகவோ மறுங்கள்!

உலகம் கொண்டாடுகிறது என்பதற்காக அது சரி என்று ஆகி விடுமா? உலகம் எம்மை பயங்கரவாதிகள் என்று சொன்னால் அதை சரி என்ற சொல்ல முடியுமா?

நீங்கள் முதலில் உங்கள் வாதங்களை தர்க்கரீதியில் சரியாகவும், ஆதாரங்களோடும் வையுங்கள்.

எங்கள் தேசியத் தலைவரும் எங்களின் கருத்தையே கொண்டிருக்கிறார் என்று சொன்ன போது, அப்படி இருக்காது என்று அடம்பிடித்தீர்கள். ஆதாரம் தந்த பிறகு அவர்கள் செய்தால் நாங்களும் செய்ய வேண்டுமா என்றீர்கள்.

ஏதோ ஒரு விதத்தில் தமிழன் தொடர்ந்தும் முட்டாளாகவே இருக்க வேண்டும் என்று நோக்கத்தோடு செயற்படுகிறீர்கள்.

ஜயா நெடுக்கல போவான்

இது கருத்துக்களம் இது நீர் சொல்லுவதுபோல அராய்ச்சி கட்டுரைகலை சமர்பிக்கும் களமல்ல நான் சில இணையத்தள ஆதாரங்களை தந்திருந்தேன் சபேசனும் தந்திருந்தார் இவை உமக்கு காணும் என நினைக்கின்றேன் அதாவது நீர் உண்மையாக தூய நோக்கத்தோடு ஆதரம் கேட்பின்.நீர் சொல்லுவது போல ஆரய்ச்சி கட்டுரைகலை ஒக்ஸ்பேட் ரெபரன்ஸ் முறயோ அல்லது ஹாவேட் முறையும் எமக்குத்தெரியும் ஆனால் இது கருத்துகளம் இது ஆராய்ச்சி கட்டுரைகளையோ அல்லது எமது மேதாவித்தனத்தையோ காட்டும் இடமில்லை என்பது என்கருத்து

தலைப்பை திசைதிருப்பாமல் யதார்த்ததை உணர்ந்து கொள்ளும் நீர் கூறுவது போல இங்கு யாரும் தலைப்புக்கு பிரம்பாக எழுதவில்லை நீர்கேட்ட கேள்விகளுக்கும் சில முற்போக்கான விடயங்களையும் இத்தலைப்புக்கு சார்பாக இருக்குது.சபேசன் உங்களின் கருத்து நாரதர் சொல்லுவது போல பலர் தெளிவாக்கக்கூடியது சிலர் குரைப்பதுக்காக உங்களின் முயற்சியில் இருந்து பின்வாங்கவேண்டாம் நீங்கள் பின்வாங்கமாட்டீர்கள்

அன்புடன்

ஈழவன்

கற்பனைக்கு கற்பனை விளக்கம் அளிப்பதை நிறுத்தி வரலாற்றுச் சான்றுகளை தொல்பொருள் சான்றுகள் வழிவந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆதாரமாக்கி அறிவியல் பூர்வமாக சிந்தியுங்கள். தொடர்ந்து சிலாகிக்கும் சொற் சிலம்பம் ஆடுவதை நிறுத்துங்கள். போலிக் கருத்துக்களால் மக்களை ஏமாற்றிய காலம் போய் விட்டது. அறிவியல் பூர்வமான அணுகுமுறைகளே மக்களை சிந்திக்க மாற்றங்களைக் கோர வைக்கும்.

மேற் கூறப்பட்ட கருத்துகளை நான் ஆதரிக்கிறேன்

ஏனெனில் சன்றுகள் வரலாறுகள் கட்டாயமாய்

தரப் படுதல் வேண்டும்...

முன்பு பலர் இது பற்றி எழுதி உள்ளார்கள் என்றால்

அதை தர வேண்டும் மாறாக அதற்கு வியாக்கியானம் கூற முனைந்தால்

யார் தான் என்ன செய்ய முடியும்....???

நானும் பல முறை கேட்டிருந்தேன் ஆனால் இது வரைக்கும்

தெழிவான கருத்து வர வில்லை...

சில வேளை இது உண்மையாக இருக்கலாம் அனால்

தொடர்ந்து அந்த பண்டிகையை புறக்கணித்து நாம் அதை

கொண்டாடா பின்பற்ற இவை உதவும்.

என்னi வன்னி போகும் படி கூறுpயிருந்தார் இது எல்லாம்

தேவையற்ற வாதம்.

இருந்தால் ஆதரத்தை தராலாம் இல்லை

எனின் இல்லை என்று கூறிவிட்டு போகலாம்

அதற்கு மாறாக அர்த்மற்ற கதை பேசின்

வீண் சச்சரவுகள் தான் தொடரும்.

இது சம்பந்தமாக கவிதை பகுதியல் எழுதி உள்ளேன்

போய் படித்து பார்த்தால் நிலமை புரியும்.

எம் தமிழ் சமுதாயத்தில் உள்ள மூட நம்பிக்கைகள்

பல களையப்பட வேண்டும் அதை நான் மறுக்கவில்லை

இந்து தத்துவத்தின் பெயரால் எத்தனையோ இழிவு

இதை கட்டாயம் செய்ய வேண்டும்.

மாறாக வரலாறு என்று ஒன்று வரும் போது

இவ்வாறாக வாதங்கள் வைக்கும் போது

மேற்கண்டவாறு கருத்துப் போர் மூளவே செய்யும்

அது தவிர்க்க பட முடியாத ஒன்று.

எனவே அந்த ஆய்வு சன்றிதல்கள் அல்லது அது சம்பந்தமான

முளு விபரங்கள் தந்தால் சிறப்பு

அல்லது இவ்வாதம் இறப்பு...

நடமுறை சாத்தியமாக ஒரு நிகழ்வாகவே இது முடியும்.

அந்த கருத்தை காவி நேரடியாக மக்கள் முன்னால் நீங்கள் போங்கள்

அங்கு வருகின்ற கேள்வி கணை அம்புகள் உங்கள் இதயம் தைக்கும்

சான்றுகளுடன் விளக்கும் போது அது நிற்கும்

இதுவே எனது இறுதி வாதம்.

மேற்கொண்டு இதில் கருத்து பகிர்வதால்

எந்த பலனும் கிட்டப் போவதில்லை....

பி.கு. சபேசன் இது எனது கருத்து தங்கள் மீது தனி நபர்

தாக்குதல் நான் நடத்தவில்லை. இதில் மட்டுமே

நான் தங்களுடன் கருத்து மோதல் பட்டாவறு உள்ளேன்

வேறு எந்த விடயத்தில் இது போன்று வைக்கவில்லை என்பதை

தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி

அன்புடன்

வன்னி மைந்தன் -

சபேசன் சொன்னது

தீபாவளி பற்றியை ஆய்வை செய்யும்படி வன்னிமைந்தன் கேட்டிருந்தார்.

ஆம் இது உண்மை

தமிழ் நாதத்தில் பார்த்துவிட்டு கேட்டிருந்தேன்

உடனே தனிமடல் ஊடாக பதிலும் கொடுத்திருந்தேன்.

இது காலத்தின் கட்டாயமும் கூட

அந்தவைகியிலே அதை கேட்டேன்.

அன்று எவ்வாறு சொன்னேனோ அதையே

இன்றும் கூறுகிறேன்.

தெளிவாக தரும்படி. நானும் இது சம்பந்தமாக பல தகவல்களை

தற்போது தேடிகொண்டு இருக்கிறேன் படித்து கொண்டு இருக்கிறேன் வேறு விடயங்கள்.

ஆனால் தாங்கள் தந்த சான்றில் எனக்கு திருப்தி இல்லை அவ்வளவே.

நன்றி

வணக்கம்

வன்னி மைந்தன்

நெடுக்கால போவான்! உங்களுக்கு ஏற்றபடி விளங்கப்படுத்த முயற்சிக்கிறேன். கன்னத்தில் முத்தமிட்டாள்" என்ற திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் ஈழத்துப் போராளிகளாக சிலரை காட்டி இருப்பார்கள். ஆனால் அதில் விடுதலைப்புலிகள் என்ற பதம் எங்கும் வரவில்லை. ஆனால் அது விடுதலைப்புலிகளையே குறிக்கிறது என்பதை அந்தப் படத்தில் வரும் சில குறியீடுகளை வைத்து நாம் புரிந்து கொள்கிறோம் அல்லவா?

கன்னத்தில் முத்தமிட்டாள் திரைப்படம் எங்களின் போராட்டத்தை கொச்சைப் படுத்துகிறது என்று வேறு சொல்கிறோம் அல்லவா?

இவைகளை என்ன தொல்பொருள் ஆராய்ச்சி செய்தா சொல்கிறோம். ஒரு கற்பனைக் கதையில் வரும் பாத்திரங்களையும், அவைகள் சித்தரிக்கப்படும் முறையையும் வைத்து இதை சொல்கிறோம்.

அதே போன்று புராணக் கதைகளில் வரும் அசுரர்கள் என்று பதத்தையும் வைத்து, மேலும் அசுரர்கள் குறித்து புராணக் கதைகள் தரும் குறிப்புக்களையும் வைத்து , திராவிடர்களையே அசுரர்கள் என்று புராணம் சொல்கிறது என்று சொல்கிறோம்.

ஒரு கற்பனைக் கதையில் வரும் பாத்திரங்கள் குறித்த ஆய்வுக்கு அறிவியல் ஆதாரம் கேட்கும் உங்களின் அறிவை நான் என்னவென்று சொல்ல?

நான் சொல்வது இதுதான். கற்பனையான புராணக் கதைகள் திராவிடர்களை இழிவுபடுத்துகின்றன. ஆகவே அக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட விழாக்களை திராவிடர்கள் கொண்டாடாதீர்கள் என்கிறேன்.

உங்களால் முடிந்தால் புராணக் கதைகளில் வரும் அசுரர் பாத்திரம் திராவிடர்களை குறிக்கவில்லை என்பதற்கு ஆதாரங்களை வையுங்கள். அறிவியல் ஆதாரங்கள் தேவையில்லை. புராணக் கதைகளில் வரும் குறிப்புக்களை காட்டினாலே போதும்.

வன்னி மைந்தன் நீங்கள் சான்றுகள் கேட்பதை நினைக்கையில் சிரிப்பாக இருக்குது பல ஆய்வுக்கட்டுரைகள் என்று நீரே உமக்கு சொல்லிக்கொண்டு அதி மேதாவிதனக்களையும் கற்பனைகளைம் எழுதிய புத்திசாலி நீர் கப்பல் வருது கப்பல் வருது எண்டு ஒரு கவிதை எழுதினீர் அதற்கு என்ன ஆதாரம்??

தந்தை பெரியாரும் அவர்வழிவந்தவர்களினதும் கருத்துக்களை பாரும்

http://www.viduthalai.com/2006%20Asrun%20malar.html

இவ் இணைப்பை சபேசன் தந்திருந்தார் அதை முடிந்தால் வாசியும்

முன்னர் நான் தந்திருந்த சில இணைய இணைப்பையும் பாரும் ச்சித்தாஎலிய என்ற இடத்தில் சீதை சிறைவைக்கப்பட்டதாக ராமாயணம் சொல்கிறது நுவரேலியாவில் இவ்விடம் இருக்குது இது உண்மையானால் இலங்கையில் அரக்கர்தானா வழ்ந்தார்கள்.எம் இனத்தின் வரலாற்று சான்றுகள் ஆரிய படையெடுப்புகளாலும் அனல் வாதம் புனல் வாதம் என்பவற்ரால் அழிக்கப்பட்டு விட்டன என சபேசன் சொன்னார் அதுதான் உண்மை.இருக்கும் சான்றுகளும் வால்மீகிராமாயணத்தில் இருக்கும் சில பிழைகலையும் வைத்து பாரும் உண்மைதெரியும் திராவிடரை ஆரியர் அசுரர் என்றே அழைத்தனர் அப்ப நீர் ராமாயணத்தில் குறிக்கப்பட்டது போல இலங்கையில் அசுரர்கல் வாழ்ந்தார்கள் என்பதை உருதி செய்கிறீரா 5000 வருடங்களுக்கு முன்னர் ராவணன் இலங்கையை ஆண்டதாக சொல்கிறார்கள் 5000 ஆண்டுக்கு முன்னம் இலங்கையில் தமிழர் இருந்ததுக்கான சான்றுகல் தமிழீழத்தில் நடந்த தொல்பொருள் ஆய்வில் இருந்து உறுதியாக்கப்பட்டுள்ளது ஆக இலங்கையில் வாழ்ந்த திராவிடரை அதாவது தமிழரை அரக்கர் என சொல்கிரார்கள் அதை நீர் ஏற்றுக்கொள்கிறீரா

வன்னிமைந்தன்! நீங்கள் இங்கு கூறப்படுகின்ற தீபாவளி சம்பந்தமான விடயங்களை ஏதோ நான்தான் முதன்முதலாக ஆய்வு செய்து கண்டுபிடித்ததாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான் என்னிடம் ஆய்வைத் தரும்படி கேட்கிறீர்கள்.

இவைகளை எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே பல ஆய்வாளர்கள் மிக ஆழமாக ஆராய்ந்து கூறியவைகள். ஆனால் எம்மில் பெரும்பான்மையானவர்கள் கடவுள் சார்ந்த மூடநம்பிக்கைகளினால் இவைகள் குறித்து பேசவே அஞ்சுகிறார்கள்.

இதனால் இது போன்ற ஆய்வுகள் உங்கள் பார்வைக்கு வரவில்லை என்று நினைக்கிறேன்.

நீங்கள் வன்னிமைந்தன் என்பதால் சொல்கிறேன். சந்தர்ப்பம் கிடைத்தால் வன்னி போய் வாருங்கள். வரும்போது நீங்கள் பகுத்தறிவில் எனக்கு பாடம் நடத்துகின்ற அளவிற்கு தெளிவோடு வருவீர்கள்.

நம்பவில்லை என்றால் வன்னிக்கு ஒருமுறை தொலைபேசியாவது எடுத்துப் பாருங்கள்.

யாருக்கு தொலை பேசி எடுத்து கேட்பது....???

என்வென்று கேட்பது...???

எங்கே எடுப்பது....???

அந்த உறவின் பெயர் என்ன....???

ஈழத்தில் எந்த பகுதியில் உள்ளது....???

அத்தனை விடயங்களையும் சிறு உரையாடல் மூலம் கேட்டு தெழிந்து கொள்ள முடியுமா....???

இது சம்பந்தமாக ஏதவது நூல்கள் சேய்யுல் முறையற்ற தெழிவான தமிழில் உள்ளதா....???

தற்போது வன்னியில் இந்த பண்டிகை இரத்து செய்யப் பட்டுள்ளதா...???

அவ்வாறானல் எப்படி....???

'' இன்றும் தொடர்பு கொண்N;டன்'' எம் உறவுகள் இது பற்றி கேட்டேன்

சிரித்தார்கள் ஏன்....???

இந்த நிகழ்வு தாயக மக்களால் எழுச்சிகரமாக நடைமுறைப்பட்டிருந்தால்

உங்கள் கூட்டணியில் நானும் இணைகிறேன்

என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்.

எனது பங்களிப்பையும் ஏகமனதோடு தருகிறேன்

நன்றி

வன்னி மைந்தன்

குறுனிக்கற்காலப் பண்பாடு

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தையே குறுனிக்கற் காலமாக ஆய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.இப்பண்

வன்னி மைந்தன் நீங்கள் சான்றுகள் கேட்பதை நினைக்கையில் சிரிப்பாக இருக்குது பல ஆய்வுக்கட்டுரைகள் என்று நீரே உமக்கு சொல்லிக்கொண்டு அதி மேதாவிதனக்களையும் கற்பனைகளைம் எழுதிய புத்திசாலி நீர் கப்பல் வருது கப்பல் வருது எண்டு ஒரு கவிதை எழுதினீர் அதற்கு என்ன ஆதாரம்??

தந்தை பெரியாரும் அவர்வழிவந்தவர்களினதும் கருத்துக்களை பாரும்

ஜயா..ஈழவன்...

ஆயுத கப்பல் வருகுது என்று என் கற்பனை சிந்தனை சிதறல் ஊடாகவே எழுதி இருந்தேன்...

அதை தான் கவி என்பது....

அதற்கும் இதற்கும் முடிச்சு போடாதீர்கள்...

இது வேறு

அது வேறு....

அதை தெழிவாகவே சொல்லி இருந்தேன் கண்காணிப்பு குழுவினருக்கு அதை அடுத்Ni

அந்த படைப்பு பின் அந்த கவிதை பகுதியல்

இணைக்கப் பட்டது. .

இதை போல எத்தனையோ படைப்புகள் எழுதி விட்டேன் ஆனால்

உங்களை மாதிரி இப்படி கேட்டதை எண்ண சிரிப்பு வருகிறது....

ஆனால் அதை அடுத்து ஒரு ஆய்வு கட்டுரை எழுதியபோது

என்ன நடந்தது வந்தவர்களில் சிலர் என்னை கால சாரமாக

திட்டி இருந்தார்கள்.

ஏன்...??

நான் என்ன செய்தேன்...??

அப்படியானால் அரசியல் ஆய்வு செய்பவர்கள் பலவாறான கருத்துகள கூறுவர்

எதிர்கால எதிர்வுகூறலை மைய்யமாக nவைத்து நிகழ்கால நிகழ்வுகளின்

நிகழ்வோட்டைத்தை மைய்யமாக வைத்தே .

அது பலது நடந்தே விடுகிறது என்...??

இவர்கள் என்ன அங்கு போய் உளவறிக்கை எடத்தா இவ்வாறு உரைத்தார்கள்...???

எந்த உலகில் இருந்து எதை சொல்கிறீர்கள்...

அந்த நிகழ்வுக்கும் இந்த நிகழ்வுக்கும் மூடிச்சு போடாதீர்கள்

அப்படி போட்டால் அது தங்களுடய மடமைத்தனம்.

இவ்வாறான முரன்பாடுகள் காரணமாகவே எனது வடிவத்தை தற்போது

அந்த படைப்பு சார்ந்து மாற்றி வருகிறேன்.

உற்று பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் தந்த பதிலுக்கு பதில் தந்தேனெ அன்றி

வேறொன்றும் உள்நோக்கம் இல்லை.

நன்றி

வணக்கம்

வன்னி மைந்தன் -

அது சரி வன்னி மைந்தன் நான் மேலே கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பார்போம் இராமாயணத்தில் அரக்கனாய் சித்தரிக்கப்பட்ட இராவண் யார்??

நிங்களே பதிலையும் சொல்லி கேள்வியையும் தொடுத்தால் நான் என்ன கூற...

சிறிது நேரம் கழித்து நான் டே முனைந்த செய்தி என்ன வென்பதை எனது படைப்பு பக்கத்தில் இணைக்கிறேன் ...படித்து அறிந்து கொள்ளங்கள்...அத்துடன் எனது வாதத்தை இத்துடன் நிறைவு செய்கிறேன்...

நன்றி. ஈழவா...

எம் தமிழ்

பண்பிலே

முனை;பாடு

அதனாலே

இங்கே

முனை;பாடு...

நன்றி

வணக்கம் ஜயா

வன்னி மைந்தன்

எம் தமிழ்

பண்பிலே

முரன் பாடு

அதனாலே

இங்கே

முரன்பாடு....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மைந்தன்,

சபேசன் தன்னால் முடிந்தவரைக்கு விளக்கமாக விபரித்துவிட்டார். அதற்கு அவருக்கு நன்றி கூற வேண்டும். அந்த கருத்துக்கள் உங்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் இல்லை. ஆனால் சும்மா விதண்டாவாதம் புரிந்து உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.

ஆதராம் வைத்துக்கொண்டு மட்டும்தான் விவாதிக்க வேண்டுமென்றால் உலகில் நடைபெறும் விவாதங்களில் பாதிக்கு மேல் நடாத்தப்பட முடியாதவையாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

5000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் பத்துத் தலையோடு தமிழர்கள் வாழ்ந்தனர் என்று சொல்ல வாறீங்களோ? அல்லது தமிழர்களுக்கு 10 தலையாக ஆரியர்கள் சித்தரித்துவிட்டனர் என்று கூற வாறீர்களோ?

இதற்கான ஏதாவது அகழ்வாராச்சிச் சான்றுகள் அல்லது எலும்புக் கூடுகள் இருக்கிறதா? இராமாயணத்தின் படி பெரும் யுத்தம் நிகழ்ந்த களத்தில் எலும்புப் படிவுகள் இல்லாமல் போனதன் மர்மம் என்ன??

இதுவரை கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் பாத்திரங்களில் கிமு 2000 ஆண்டு கால வரைக்குமானவையே இலங்கையின் வடக்குப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மன்னார் கரை எல்லாமே படிவுப்பாறைகள் கொண்ட தரைத்தோற்றம் கொண்டவை. அங்கு குவாட்ஸ் எனும் மெற்றாபோபிக் பாறைகள் பாவனை வர முடியாது என்றில்லை. அதுவும் 5000 ஆண்டுகளுக்கு முன்னர். இலங்கையின் வடமத்திய மத்திய பகுதிகளில் குவாட்ஸ் இருக்கிறது. அதனால் அப்பகுதி மக்கள் குவாட்ஸ் கருவிகளைப் பாவித்திருக்கலாம். அதற்கும் தமிழர்கள் தான் குவாட்ஸை உருவாக்கினர் என்பதற்கு என்ன வரலாற்றுச் சான்றுகள் உள்ளன?

இராமாயணத்தில் வரும் கற்பனனப் பாத்திரம் இராவணன், தமிழன் என்றால் கம்பராமாயாணத்தைத் தந்த தமிழரான கம்பர் ஏன் இராவணனை தமிழன் என்று கூறிப் பெருமைப்படுத்தவில்லை?

இராமாயணமோ ஒரு கற்பனை இதிகாசம். அதனடிப்படையில் தமிழர்களின் வரலாற்றைப் புனையைப் போய் தமிழர்களின் இருப்பையே இலங்கைத் தீவில் கேள்விக் குறியாக்கும் நிகழ்வே நிகழப்போகிறது..!

வரலாற்றுச் சான்றுகாளால் உறுதிப்படுத்தபடாத முடியாத அளவுக்கு இராவணனின் வாழ்விடங்களோ படைவீடுகளோ படைக்கலங்களோ புட்பங்க விமானங்களோ கோட்டை கொத்தளங்களோ கதைகளில் மட்டுமே காணப்படுகின்றன. நிஜத்தில் எங்கே அதன் சுவடிகள் 5000 ஆண்டுகளுக்குள் எவ்வாறு அழிந்தொழிந்தன..இப்படியான உண்மைகள் எப்படி மறைந்து போயின...??!

நெடுக்காலபோவான்! கடற்கோள்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சங்க கால இலக்கியங்கள் இக் கடற்கோள்கள் பற்றி பல தகவல்களைக் கூறுகின்றன. தமிழனின் பேரரசு ஆரியப் படையெடுப்பாலும், கடற்கோள்களாலும் அழிந்தது என்று அறிகிறோம்.

ஆனால் நீங்கள் அநேகமாக அவைகளுக்கும் சுனாமி வரும் வரை ஆதாரம் கேட்டுக்கொண்டுதான் இருந்திருப்பீர்கள்.

ராமாயணம் குறிப்பிடுவதைப் போன்ற ஒரு பெரும் போர் நடந்திருந்தாலும் அதன் சான்றுகள் கடற்கோளில் அழிந்துதான் போயிருக்கும். சில வேளைகளில் வருங்காலங்களில் அவைகள் கண்டுபிடிக்கப்படலாம்.

மற்றையபடி இராமாயணம் என்பது ஆரிய திராவிப் போரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதையே!

சில வேளைகளில் இராவணன் போன்று ஒரு மன்னன் இருந்திருந்தாலும், அவனுக்கு பத்துத் தலை இருந்திருக்காது. பத்துத் தலைகளின் அறிவு கொண்ட மன்னனாக இருந்திருக்கக் கூடும்.

இராமயணத்தை ஆராய்கின்ற பொழுது இராமன் தெற்கு நோக்கி அசுரர்களை (சுரபானம் அருந்தாதவர்களை) வென்று கொண்டு வருகிறான். தடாகை, கரன் என்று அசுரர்களைக் கொன்று, கடைசியில் அசுரர்களுக்கு எல்லாம் தலைவனாக இருந்த இராவணனையும் இலங்கை சென்று வெல்கிறான்.

அது மட்டும் அன்றி ராமன் விஸ்ணுவின் அவதாரமாக இருக்கிறான். இராவணன் சிவ பக்தனாக காட்டப்படுகிறான்.

சீதையை ராமன் மணக்கும் பொழுது சிவனின் வில்லை உடைக்கிறான். ஆனால் பரசுராமன் நீட்டுகின்ற விஸ்ணுவின் வில்லை ராமன் உடைக்கவில்லை. நாண் ஏற்றுகிறான்........

இராமயணம் என்பது ஆரியர்களால் இரண்டு காரணங்களுக்காக எழுதப்பட்டிருக்கலாம். தெற்கில் வாழ்ந்த தமிழர்களை குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் இழிவுபடுத்துவதற்கும், சைவர்களை தாழ்த்துவதற்கும் எழுதப்பட்டிருக்க வேண்டும். அதற்கான குறிப்புக்கள் இராமாயணத்தில் ஆங்காங்கே தென்படுகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.