Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நரகாசுரனுக்கு அஞ்சலிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யா சபேசா!

அனேகமாக கடவுளுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்துள்ளது. இதில் அசுரர்கள் திராவிடர்கள் என்றால், முருகனுக்கும் சூரனுக்கும் நடந்த போரில் தமிழ் கடவுளும் திராவிடனும் தானே போர் புரிந்துள்ளார்கள். இதை விளக்க முடியுமா?

  • Replies 245
  • Views 27.4k
  • Created
  • Last Reply

1.ராவணன் பத்துத்தலையோடு வாழவில்லை அதாவது பத்துதலை கொண்டவருக்கு இருக்கக்கூடிய அறிவு அவனுக்கு இருந்தது என்பதுதான் உண்மை அதற்கு ஆதாரம் இல்லை

"சரி ராவணன் அரக்கன் என சொல்கிறார்கள் அப்போது ராவணனின் மனைவியும் அரக்கிதானே ராமாயாணத்தில் இருப்பது போல கோரப்பற்கள் கொண்டவர்களாகத்தானே அவளும் இருக்க வேண்டும் ஆனால் அனுமார் இலங்கயில் சீதையை தேடும் போது ராவணனின் மனைவியை கண்டு சீதையாக இருக்கக்கூடுமோ என நினைத்ததாக ஏன் வால்மீகி எழுதினார்.ஆக சீதையை விட ராவணனின் மனைவி அழகி என்பதைதானே வல்மீகி சொல்லவருகிறார்"

என்னை பொறுத்தவரையில் தென்னிந்தியாவை சேர்ந்தவர்களை குரங்குகளாகவும் இலங்கையை சேர்ந்தவர்களை அரக்கராகவும் சித்தரித்து த்ராவிட வரலாற்றை இழிவுபடுத்திய நிகழ்வுகளுக்கு நீங்கள் அனைவரும் வக்காலத்து வாங்குவது வேதனைக்குரியது

2.எமது மண்னில் இன்னும் முழுமையான அகழ்வாராய்ச்சி பணி நடைபெறவில்லை நடை பெறுவதற்கான சாத்தியமும் இப்போது இல்லை ஆனால் நிச்சயம் மொசப்பத்தேமிக் ரைகிறிச் போன்ற நாகரீகங்கள் நீண்ட அக்ழ்வாரய்ச்சிக்கு பின்னர்தான் கண்டு பிடிக்கப்பட்டனன ஏன் பண்டார வன்னியனின் அரண்மனையோ அல்லது அவன் அரசாண்டதுக்கான சான்றுகள் அவனது சமாதியை தவிர வேறொன்றும் இல்லை ஆக உம்மால் பண்டாரவன்னியன் கதை புனைக்கதை என சொல்லமுடியுமா

3.இலங்கையை பொறுத்தவரையில் பவுத்தரின் அல்லது சிங்களவரின் வருகை விஜயனின் வருகையுடனே ஆரம்பிப்பதாக மகாவம்சம் சொல்கிறது ஆக சிங்களவர் அக்காலத்தில் வாழ்திருப்பதற்கான சாத்தியம் இல்லை.

குறுனிக்கற்காலத்திற்குரிய மக்கள்தான் இன்றைய வேடங்களின் மூதாதையர் ஆவர்.இவர்கள் பேசிய மொழி ஒஸ்ரிக் மொழி ஆகும்.இலங்கைத்தீவிலும் தமிழ்நாட்டிலும் இப்பண்பாட்டைப் பின்பற்றிய மக்களே ஆதி ஒய்ரோயிட் மனித வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாவர்.இவர்களின் மொழியும் பண்பாடும் பிற்கால திராவிட நாகரிகத்துடன் இணைந்தே இலங்கை நாகரிகம் தோற்றம் பெற்றது

தமிழ் நாட்டாருக்கும் எமக்கும் ஒரே கலச்சாரம் ஆக ஏறக்குறைய 25000 அண்டுகளௌக்கு முன்னமே இலங்கயில் தமிழர்கல் அதாவ்து எம் மூதாதையார் வாழ்ந்ததுக்கான சான்றுகள் இருக்கின்றன

விஜயன் வரும் போது இயக்கர் நாகர் வாழ்ந்ததாக மகாவம்சம் சொல்கிறது இதில் நாகர் பாம்பினை வழிபட்டதாக சொல்லப்படுகிரது பாம்பு வழிபாடு இந்துசமயத்தில் இருந்த ஒன்று அல்லது திராவிட வழிபாட்டு முரை எனக்கூட கூறலாம் ஆக தமிழரின் இருப்பு இலங்கையில் திராவிட நாகரிகம் தொன்றமுதலேயே இருந்தது ஆக தமிழரின் இருப்பை திரிவுபடுத்தவும் முடியாது கேள்விக்குறியாக்கவும் முடியாது

ஏன் அவுஸ்திரேலியாவில் இருக்கும் பழங்குடியினரின் ஜீன்ஸ் தமிழரின் தமிழ்நாட்டில் உள்ளவரின் ஜீன்ஸுடந்தான் அதிகம் ஒதுப்போவதாக ரு கட்டுறை ஒன்றில் படித்தேன் அதன் இணைப்பு இப்போ என்னிடமில்லை அவுஸ்திரேலியா ஆனது இந்திய துணைக்கண்டத்துடன் ஒன்றிகாணப்பட்டதாகவும் அவ்கண்டமானது லெமூரியா அல்லது குமரிக்கண்டம் அல்லது கண்டுவானா என அழைக்கப்பட்டதாகவும் கடற்கோலினாலும் மற்றும் புவித்தகட்டு மாறுதலாகவும் அது பிரிந்ததாக சொல்லப்படுகிறதே அது சரியா.

lemooriya_kurikiya.jpg

lemooriya.jpg

கிட்டத்தட்ட 5000 வருடங்களுக்கு முன்னம் நடந்த சம்பவம்

The first modern human signs in the Indian subcontinent are in Sri Lanka and date from -35000, the island was by then 


united to the continent (the sea level was some 90 meters down than nowadays).

உலகின் மனித பரம்பல் மர்ரும் மொழிபற்றி இதில் கூறப்பட்டுள்ளது திராவிடர் என்ற வார்த்தை இக்கட்டுரையில் எம்மை நொக்கி பாவிக்கப்படுகிரது

The Dravidian Tamil language has a 25% of IE lexic (adstrate).

மேலதிக தகவல்களை இக்கட்டுரையை வாசித்து அறியுங்கள்

http://www.lhhpaleo.religionstatistics.net...aleolithic.html

இந்த இணையத்தையும் பாருங்கல்

http://www.tamilnation.org/heritage/index.htm

மேலும் சில இணைப்புக்கள் மொழி பெயர்க்க நேரம் இருந்தால் மொழி பெயருங்கள்.

Indo-Aryan migration

From Wikipedia, the free encyclopedia

.

"Indo-Aryan migration" refers to the theory that speakers of Indo-Aryan languages migrated into the Indian subcontinent during the 2nd millennium BCE, as opposed to being autochthonous to the region.

Based on linguistic evidence, most scholars[1] have argued that Indo-Aryan speakers migrated to northern India following the breakup of Proto-Indo-Iranian, which corresponds to an initial wave of Indo-Iranian expansion out of Central Asia. These scholars argue that, in India, the Indo-Aryans were amalgamated with the remnants of the Indus Valley civilization, a process that gave rise to Vedic civilization.[2]

Archaeological data indicates that there was a shift of settlements from the Indus Valley region to the east and south during the later 2nd millennium BCE, but is inconclusive with regard to a preceding immigration into India.[3]

The linguistic facts of the situation are little disputed.[citation needed] However, linguistic data alone cannot determine whether this migration was peaceful or invasive. Different linguists have argued for either, or for a combination of both, on extra-linguistic grounds.

http://en.wikipedia.org/wiki/Indo-Aryan_migration

Concept of the Dravidian race

The identification of the Dravidian people as a separate race arose from the realization by 19th-century Western scholars that there existed a group of languages spoken by people in the south of India, which were completely unrelated to the Indo-Aryan languages prevalent in the north of the country. Because of this, it was supposed that the generally darker-skinned Dravidian speakers constituted a genetically distinct race. Accordingly, Dravidians were envisaged as early inhabitants of India who had been partially displaced and assimilated by Aryan language speaking populations.

The term Dravidian is taken from the Sanskrit term Dravida. It was adopted following the publication of Robert Caldwell's Comparative grammar of the Dravidian or South-Indian family of languages (1856); a publication which established the language grouping as one of the major language groups of the world.

Linguistic classifications

Main article: Dravidian languages

The best known of which are Kannada (ಕನ್ನಡ), Malayalam (മലയാളം), Tamil (தமிழ்), Telugu (తెలుగు), and Tulu (ತುಳು). Notably one Dravidian language, Brahui, is spoken in Pakistan as well minor tribal languages are used in Nepal and Bangladesh, perhaps hinting at the language family's wider distribution prior to the spread of the Indo-Aryan languages.

[edit] Spread of the language group

Some believe that Dravidian-speaking people were spread throughout the Indian subcontinent before the Aryans settled there. In this view the early Indus Valley civilization (Harappa and Mohenjo Daro) is often identified as having been Dravidian[6].

However it is now considered more likely that the collapse was caused by environmental change (drought). It was then this collapse that encouraged the migration of the nomadic Indo-Aryans into the area; a situation comparable with the decline of the Roman Empire and the incursions of North European tribes that followed during the Migrations Period. It is therefore more likely that the Dravidian speakers of South India were already living in the region, and were merely one of the groups little affected by the initial Indo-Aryan migration.

Current views

It has been suggested that the proto-Dravidians of the Indian subcontinent arrived from the Middle East, and may have been related to the Elamites[11], whose language some propose be categorized along with the Dravidian languages as part of a larger Elamo-Dravidian language family. However, many linguists dispute the existence of an Elamo-Dravidian language family.

The Dravidians were preceded in the subcontinent by an Austro-Asiatic people, and followed by Indo-European-speaking migrants sometime later. The original inhabitants may be identified with the speakers of the Munda languages, which are unrelated to either Indo-Aryan or Dravidian languages. This view is put forward in geneticist Luigi Luca Cavalli-Sforza's book The History and Geography of Human Genes.

http://en.wikipedia.org/wiki/Dravidian_race

Elam

From Wikipedia, the free encyclopedia

Elam (Persian: تمدن ایلام) is one of the oldest recorded civilizations. Elam was centered in the far west and southwest of modern day Iran (in the Ilam Province and the lowlands of Khuzestan). It lasted from around 2700 BC to 539 BC. It was preceded by what is known as the Proto-Elamite period, which began around 3200 BC when Susa (later capital of the Elamites) began to be influenced by the cultures of the Iranian plateau to the east.

Ancient Elam lay to the east of Sumer and Akkad (modern-day Iraq). In the Old Elamite period, it consisted of kingdoms on the Iranian plateau, centered in Anshan, and from the mid-2nd millennium BC, it centered in Susa in the Khuzestan lowlands. Its culture played a crucial role in the Persian Empire, especially during the Achaemenid dynasty that succeeded it, when the Elamite language remained in official use. The Elamite period is considered a starting point for the history of Iran (although there were older civilizations in Iranian plateau like Mannaeans kingdom in Iranian Azarbaijan and Shahr-i Sokhta (Burned City) in Zabol and other indigenous civilizations such as Jiroft Kingdom who lived in Iranian plateau but weren't as established as Elamites). The Elamite language was not related to any Iranian languages, but may be part of a larger group known as Elamo-Dravidian.

Elam gives its name to one of the provinces of modern Iran (usually spelt Ilam).

http://en.wikipedia.org/wiki/Elamites

மேற்கோள் - நைனா2000:

"அய்யா சபேசா!

அனேகமாக கடவுளுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்துள்ளது. இதில் அசுரர்கள் திராவிடர்கள் என்றால்இ முருகனுக்கும் சூரனுக்கும் நடந்த போரில் தமிழ் கடவுளும் திராவிடனும் தானே போர் புரிந்துள்ளார்கள். இதை விளக்க முடியுமா?"

இது ஒரு நல்ல கேள்வி! உண்மையில் சங்க காலப் பாடல்கள் சொல்கின்ற முருகன் வேறு. இவர்கள் சொல்கின்ற சுூரபத்மனைக் கொன்ற சுப்ரமண்யன் வேறு.

முருகன் தமிழ் மக்களிடையே வாழ்ந்த ஒரு குறுநில மன்னன். அவன் தமிழினத்தை காத்தவனாக இருந்ததால் முருகன் கடவுளாக வழிபடபட்டான். முருகன் கொற்றவை என்கின்ற போர்கடவுளாக வழிபடப்பட்ட ஒரு பெண்ணின் மகன் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் முருகனின் மனைவி வள்ளி மட்டும்தான். முருகன் பற்றிய பழைய பாடல்களில் தெய்வானை என்ற பாத்திரம் எங்குமே இல்லை.

முருகன் பின்பு ஆரியக் கடவுள்களுக்குள் உள்வாங்கப்பட்டான். மற்றைய கடவுள்கள் போன்று முருகனுக்கும் கற்பனைக் கதைகள் புனையப்பட்டன. முருகனை ஆரியன் ஆக்க வேண்டும் என்பதற்காக பெயர் மாற்றம் செய்யப்பட்டதோடு, தெய்வானை என்ற புதிய பாத்திரத்தையும் உருவாக்கினார்கள்.

இதில் வேதனை என்னவென்றால் முருகனுடைய மனைவியாக தெய்வானையை உயர்த்தியும் துணைவியாக (இரண்டாவது மனைவி) வள்ளியை தாழ்த்தியும் விட்டார்கள்.

நீங்கள் கவனித்து பார்த்தீர்கள் என்றால் எந்த ஒரு பார்ப்பானும் முருகன் என்ற பெயரைக் கொண்டிருக்க மாட்டான். அத்துடன் வட இந்தியாவில் முருக வழிபாடு எங்குமே இல்லை. அவர்கள் முருகனை ஆரியக் கடவுள்களுக்குள் உள்வாங்கினாலும், முருகன் சுூத்திரர்களின் கடவுள் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

அத்துடன் உண்மையான முருகன் ஆரியர்களை எதிர்த்து போர் புரிந்ததாகவும் கதைகள் உண்டு. அதனாலும் அவர்கள் முருகனை வணங்குவதில்லை.

ஆனால் வெட்கம் கெட்ட தமிழன் மட்டும் கிருஸ்ணனையும், ராமனையும், அனுமானையும் வணங்கிக் கொண்டு திரிவான்.

என்னுடைய தனிப்பட்ட அனுமானம் கிருஸ்ணன் ஒரு கதிர்காமரோ நீலன்திருச்செல்வம். அனுமான் ஒரு டக்கிளசோ பரந்தன்ராஜானோ கருணாவோ.

நானும் சபேசன் கூறியவற்றை கேள்விப்பட்டேன்

நன்றி தகவலுக்கு சபேசன்

அன்புடன்

ஈழவன்

சபேசன் பல தகவல்களை அறியத்தருவதற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

முருகன் குறுநில மன்னன் என்றால் எந்தக் குறுநிலத்துக்கு எக்காலத்தில் மன்னனாக இருந்தான். அதற்கான வரலாற்றுச் சான்றுகள் என்ன. அல்லது ஆரியரை விட நாங்கள் வென்று புனைகதை புனைய வெளிக்கிட்டுவிட்டோம் என்கிறீர்களா?

வரலாற்று அகழ்வாராய்ச்சிகளை வரலாற்று ஆவணங்களை ஆதாரப்படுத்தாத எந்த ஆக்கமும் அது எந்தப் பெரிய புகழ்வாய்ந்தவர் எழுதினும் உலகின் நடைமுறைக்குள் எடுபடாது. இது அறிவியல் யுகம். அனைத்து விடயங்களையும் அலசி ஆராய்ந்து ஆதாரங்கள் சகிதம் உறுதிப்படுத்த வேண்டியது நம்பகத்தன்மைக்கு அவசியமாகிறது.

கதைகளில் வருபவனும் உங்களால் சொல்லப்பட்டதுமான 5000 ஆண்டுகளுக்கு முன்னரான இராவணனின் காலத்து கட்டுமானங்கள் உயிரின எச்சங்களை ஒரே அடியாக சுனாமியால் அல்லது வலுவான பூகம்பத்தால் கடலுக்குள் புதைக்கப்பட்டதாக சொல்கிறீர்களே அப்போ இராமர் அணை என்று பாக்குநீரினைக்குள் தெரியும் மேடுகள் மட்டும் எப்படி சுனாமிக்குள் தப்பியது? அது தப்புவதற்கான ஏதாவது புவியல் பெளதீக விளக்கங்கள் உண்டா?

பார்ப்பர்ணியர்கள் ஆரியர்கள் மட்டுமல்ல தமிழர்களும் நிறையப் புனைகதைகளை அவிழ்த்துவிட்டுள்ளனர் என்பதையே உங்களின் ஆதாரமற்ற வெறும் சொற்களில் அமையும் புனைகதைகள் உறுதிப்படுதுகின்றன.

இதை விட முருகன் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஒரு மன்னன் என்றும் அவன் உலகையே ஆண்டவன் என்றும் கிமு 45,000 ஆண்டு கால வரலாறு சொல்கிறது. இதை உறுதிப்படுத்துவீர்களா???????? சும்மா கதையளக்காமல் ஆர்கிலோஜி வளர்ந்து விட்ட இன்றைய உலகில் பூதம் பிசாசு அசுரர் தேவர் என்று ஆரியர்கள் கட்டிய கட்டுக்கதைகளை மையமாக வைத்து திரிபுகளைப் புகுத்தி போலியான வரலாறுகளை தமிழர்களுக்கு எழுதுவதை நிறுத்தி காத்திரமான தொல்பியல் மற்றும் வரலாற்றியல் ஆய்வுகளைச் செய்து ஆதாரமுள்ள சர்வதேசம், சமூகம் ஏற்கத்தக்க விடயங்களை ஆய்வுக்கட்டுரைகள் வடிவில் வையுங்கள். அவை உலகின் முன்னனி தொல்பொருள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களால் நோக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மட்டுமே தமிழர்களுக்கு என்று ஒரு வலுவான வரலாற்றுச் சான்று பதிவாகும்.

அதுவரை ஆரியரைத் தொடர்ந்து இப்போ தமிழர்களே தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்க வெளிக்கிட்டுவிட்டனர். அதற்கு கண்டவரெல்லாம் முன்னெடுக்கும் முற்போக்குவாதம் பகுத்தறிவுவாதம் என்று மக்களை முட்டாள்களாகக் கருதி நடத்தும் சொற்சிலம்பாட்டம் பலராலும் நம்பக் கூடிய நிலையில் இல்லை. விளம்பரத்து எழுதுபவர்கள் எழுதிவிட்டுப் போகலாம். அது மட்டுமே இணையத்தளத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய இலாபம். இணையத்தள ஆக்கங்கள் எல்லாம் அங்கீகரிக்கப்பட்ட நிலைக்குரியவை என்று எடுத்த எடுப்பில் கூறிவிட முடியாது. இணையத்தில் பல தரப்பட்ட குப்பைகளும் கொட்டிக் கிடக்கின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சங்க இலக்கியமான பத்துப்பாடல்களில் முருகன் பற்றிய தகவல் உண்டு. தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த முருகன். எங்கள் வீட்டுத் தெருவிலும் ஒரு முருகன் இருக்கிறார்.

காலத்துக்கு காலம் முருகன் என்ற பெயரில் பலர் வாழ்ந்திருக்கலாம். நீங்கள் எந்த முருகனைப் பற்றிக் கூறுகிறீர்கள். அதுதான் இது என்பதை நிறுவதற்கான ஆதாரம் என்ன?

அகத்தியர் பற்றிய வலராற்றில் கூட இரண்டு அகத்தியர்கள் வாழ்ந்ததாகக் கூட கதைகள் இருக்கின்றன. கதைகளை நம்பி கனவு காண முடியாது. ஆதாரங்களைத் தேட வேண்டியதும் காலங்களை தெளிந்து துணிய வேண்டியதும் அவசியமாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த முருகன். எங்கள் வீட்டுத் தெருவிலும் ஒரு முருகன் இருக்கிறார்.

காலத்துக்கு காலம் முருகன் என்ற பெயரில் பலர் வாழ்ந்திருக்கலாம். நீங்கள் எந்த முருகனைப் பற்றிக் கூறுகிறீர்கள். அதுதான் இது என்பதை நிறுவதற்கான ஆதாரம் என்ன? இலக்கியங்களைச் சான்றுகளாக்க முடியாது. அவற்றிலும் நிறையக் கற்பனைகள் உள்ளன.

அகத்தியர் பற்றிய வலராற்றில் கூட இரண்டு அகத்தியர்கள் வாழ்ந்ததாகக் கூட கதைகள் இருக்கின்றன. கதைகளை நம்பி கனவு காண முடியாது. ஆதாரங்களைத் தேட வேண்டியதும் காலங்களை தெளிந்து துணிய வேண்டியதும் அவசியமாகிறது.

முருகனின் எலும்புக்கூடுகளை என்னால் தற்பொழுது தேடி எடுத்து தரமுடியாத என்பதை நெடுக்காலபோவனிடம் மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேண்டும் என்றால் வட இந்தியர்கள் ஏன் முருகனை வணங்குவது இல்லை என்று ஆராய்ந்து பாருங்களேன். சில உண்மைகள் வெளிவரும்.

அல்லது உங்களுக்கு தெரிந்தால் வடக்கில் முருக வழிபாடு ஏன் இல்லை என்றாவது கூறுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நீங்கள் இப்படிக் கேட்டுப்புட்டியள்...முருகனுக

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஆர்கியோலொஜி இணையத்தளம்..

http://archaeologyonline.net/index.html

இத் தளத்தில் பக்தகோடிகளே விவாதிக்கிறார்கள் போல் இருக்கிறது. அவர்கள் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு பேசுகிறார்கள். அதுவும் அவர்களுடைய ஸ்கந்தன் பற்றி பேசுகிறார்கள். இதில் எமக்கு என்ன வேலை வந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தானே நீங்களும் செய்கிறீர்கள். முருகனைத் தேடுகிறீர்கள். எந்த முருகனை என்றால் அதற்கு ஆதாரமில்லை. பார்ப்பர்ணிய கதைகளின் தெய்வயானை நுழைந்ததாகச் சொல்லி வள்ளியை மனைவியாக்குகிறீர்கள். எதனடிப்படையில் புராணங்களின் அடிப்படையில் தானே மூலத்தை மாற்றுகிறீர்கள். ஆதாரம் கேட்டால் இல்லை என்கிறீர்கள். எந்த முருகன் என்றால் அதுவும் தெரியாது?

நவீன ஆர்கியோலொஜி என்பது அகழ்வாராச்சிகளுக்கும் அப்பால் பல அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு விரிவடைந்திருக்கும் நிலையில் பல பழைய ஆய்வுகள் கூட மறுதலிக்கப்பட்டும் நிலை தோன்றி உள்ள நிலையில் நீங்கள் புராணங்களை வைத்து புளுடாக்களை அவிழ்த்து விடுவது பாவம் அறியாத மக்களுக்கு அவஸ்தைதான்.

அதுதான் கேட்டோம் ஆதாரங்களைச் சான்றுகளை தொல்பொருள் ஆய்வுகளைச் சான்றுகளை சமர்ப்பித்து எழுதுங்கள் என்று. இப்போதாவது விளங்க வேண்டும் நீங்கள் எழுதும் இப்படியான கட்டுரைகளின் நம்பகத்தன்மை என்பது வெறும் சொற்சிலம்பமே தவிர சான்று அல்ல என்பது. உங்கள் எழுத்துப் பாணியை ஆய்வு ரீதியாக சான்றுகள் ரீதியாக மையப்படுத்தி எழுத முனையுங்கள்.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில காலங்களுக்கு முதல் வந்த ,தலைவன் பிரபாகரன் அவன் முருகனுக்கே நிகரானவன்@ எனும் பாடல் புலத்தில் சில முணுமுணுப்புகளை உருவாக்கியது. இதற்கு அறிவுமதி (pபாடலாசிரியர்) கூறிய காரணம். முருகன் ஒரு கடவுள் என்பதை விட அவன் ஒரு தமிழ் போர் வீரன், ஆகவே அவன் பிரபாகரணுக்கு நிகரானவன் எனக் கூறியிர்ந்தார். ஆகவே சபேசன் உங்கள் கூற்று சரி, அதாவது முருகன் ஒரு தமிழ் பெயர் அதனால் அவன் ஒரு குறு நில மன்ன்னாக இருந்திருக்கலாம். ஆனால் சுப்ரமணீ ஒரு வட சொல் எனவே அவன் ஒரு ஆரியக்கடவுள். பெயரை வைத்துப் பார்க்கையில் இது சரியாகவே படிகுன்றது. ஆனால் விடயம் என்னவென்றால், ஆறு முகன் ஒரு தமிழ்ப்பெயர்.இவர்தானே சூரனை வதைத்தவர்." ஏறுமயில் ஏறியில், சூரனை வதைத்தமுகம் ஒன்ரு என எழுதியது நம் நாயன்மார்களில் ஒருவர் தானே?

நான் புராணங்களை வைத்து புளுடாக்களை அவிழ்த்துவிடுகிறேனா?

நான் புராணங்கள் சொல்லுகின்ற புளுடாக்களை மறுத்துக் கொண்டு இருக்கிறேன்.

புராணங்கள் சொல்லுகின்ற கிருஸ்ணன், சுப்ரமண்யன், விஸ்ணு, அரக்கர், தேவர் போன்றவைகளை மறுத்து, அவைகள் உண்மையில் எதுவாக இருக்கலாம் என்று எங்களிடம் எஞ்சியுள்ள சான்றுகளில் தேடுகிறோம். அவைகளை மக்களுக்கு சொல்கிறோம்.

ஆரியன் எழுதிய புராணங்களை விட தமிழர்கள் எழுதிய சங்க இலக்கியங்கள் நம்பத் தகுந்தவையாக எமக்குப் படுகிறது.

புராணங்கள் சொல்லுகிற ஆறு தலைகளை கொண்ட சுப்ரமண்யனை விட சங்க இலக்கியங்கள் சொல்கிற ஒரு தலையைக் கொண்ட முருகனை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

ஆனால் நீங்களோ ஒரு தலை முருகனைப் பற்றி கேள்விகள் எழுப்பி ஆறு தலைகள் கொண்ட சுப்ரமண்யனை காப்பாற்ற முனைகிறீர்கள். உங்கள் அடிமைச் சேவகத்தை திறம்பட செய்கிறீர்கள்

நாயன்மார்களின் காலத்திற்கு பல நு}ற்றாண்டுகளுக்கு முன்னமேயே ஆரியமதம் தமிழை விழுங்கிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையில் துயர்பகிர்வுக்குரிய விடயம் தான். முப்பெரும் சங்கங்களைக் கொண்ட தமிழ் உலகம் இன்று ஆந்திரா விசாகப்பட்டணத்தில் மூழ்கிப் போய்க் கிடப்பதால், தமிழரின் முகவரி தொலைந்து போய் விட்டது.

சங்கம் அமைத்து தமிழுகம் மீண்டு வர அடிப்படையில் இருந்து வர வேண்டியதாகக் கிடக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யா சபேசா?

எனக்கு ஒன்றை விளங்கப்படுத்துவீர்களா? அதாவது நீங்கள் ஆரியக் கலப்பு இல்லாத ஒரு மதத்திற்காக வாதிடுகின்றீர்களா இல்லை சைவசமயமே தேவை இல்லை என்று வாதிடுகின்றீர்களா? ஏனென்றால் தீபாவழி கொண்டாடத்தேவை இல்லை எனெனில் அது எம்மை ஆரியர் அழித்த நாழ்?. கூறுவதில் தவரேதும் உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

எக்கட்டத்திலும் இந்துக்கள் வணங்கும் ஆறுமுகசாமி இருக்கிறார் என்று நாங்கள் குறிப்பிடவில்லை. அதற்கான சான்றுகளும் இல்லை. உங்களின் தவறான புரிதலோடு எம்மைத் தொடர்வுபடுத்தி எழுதுவதைத் தவிருங்கள். நாங்கள் எவருக்கும் வங்காளத்துக்கோ பிரச்சாரத்துகோ எழுதவில்லை.

சமூகத்துக்கு அறிவியல் ரீதியா ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய விடயங்கள் ஆதாரங்களோடு காத்திரமான வகையில் சொல்லப்பட வேண்டும். அப்போதுதான் அவை ஏற்றுக் கொள்ளப்படும். அதுவே வரலாற்றுக்கும் ஒரு பலமான நிலையளிக்கும் என்பதையே கூறிவருகின்றோம்.

ஆறுமுகசாமி..அதேபோல் தான் முருகன் என்பவரும். அவர் மன்னன்.. வீரன் தேவன் என்றெல்லாம் பலரும் சொன்னதாகச் சொல்கிறார்கள் சிலர். அந்த சொல்லுக்கு ஆதாரம் என்ன அடிப்படை என்ன எதை வைத்து சொல்கிறார்கள். அப்படி ஒரு முருக மன்னன் வாழ்ந்தான் என்றால் அவன் எங்கு எக்காலத்தில் எப்படி வாழ்ந்தான்...???! எங்கு வாழ்ந்தான்? அதற்கான கால அடையாளங்கள் என்ன..புவியல் அடையாளங்கள் என்ன???இப்படி நிறைய வினாக்களுக்கு விடை சொல்ல வேண்டும்.

அறிவுமதி என்ன எவரும் எதுவும் அழகாகச் சோடிச்சு சொல்லலாம். ஏன் நாங்களே சொல்கிறோமே சிவபெருமான் என்றொரு மன்னன் வாழ்ந்தான். அவன் ஒரு தீரன். அதனால் தான் தமிழ் மக்கள் அவனை வணங்குகின்றனர். இதை ஏற்றுக் கொள்வீர்கள் என்றால் அறிவுமதி சொன்னதாகச் சொல்வதையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ளலாம்.

தலைவர் பிரபாகரனை தயவுசெய்து புராண இதிகாச கற்பனைக் கதாப்பாத்திரங்களோடு ஒப்பிடுவதைத் தவிருங்கள். அவர் வாழும் மனிதர். ஒரு அடக்கப்பட்ட இனத்துக்காக விடுதலைப் போராட்டத்தை நடத்தும் தலைவர். ஒப்பிட விருப்பம் என்றால் ஒரு பிடல் ஒரு சோகுவரா என்று நடைமுறை யதார்த்தங்களோடு ஒப்பிடுங்கள். அதுதான் வாழும் சமூகத்துக்கும் எதிர்கால சந்ததிக்கும் பலமான உறுதியான தகவல்களைக் காவிச் செல்லும்.

முருகன் சிவன் கிருஷ்ணர் என்று போலிப் புகழாரங்கள் அவசியமில்லை. அது போலித் தன்மையானவை. போலியானவற்றோடு ஒப்பிட்டு நடைமுறை வீரங்களையும் தியாகங்களையும் மலினப்படுத்தாதீர்கள். புறநானுறு சொன்ன வீரம் நமக்குத் தெரியாது ஆனால் பிரபாகரன் சேனைகளின் வீரம் தெரிந்தது. அதை வைத்துத்தான் புறனானுறைப் பற்றித் துணியும் நிலையில் நீங்கள் என்னடா என்றால் புராணக் கதைகளை வைத்துத் தலைவரை துணிகிறீர்கள். மக்களை விட நீங்கள் சிந்திக்கும் போக்குத்தான் தவறானது. தயவுசெய்து மக்களுக்கு சரியான வழிகட்டுங்கள் இல்ல உங்கள் வழியைப் பார்த்துக் கொள்ளுங்கள். தமிழர்களுக்கு வரலாறு திருத்தி எழுதுகிறோம் என்று அடிப்படைகளற்ற விடயங்களைத் தந்து குழப்பங்களை விளைவிக்காமல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உண்மையில் துயர்பகிர்வுக்குரிய விடயம் தான். முப்பெரும் சங்கங்களைக் கொண்ட தமிழ் உலகம் இன்று ஆந்திரா விசாகப்பட்டணத்தில் மூழ்கிப் போய்க் கிடப்பதால், தமிழரின் முகவரி தொலைந்து போய் விட்டது.

சங்கம் அமைத்து தமிழுகம் மீண்டு வர அடிப்படையில் இருந்து வர வேண்டியதாகக் கிடக்கின்றது.

சங்க காலத்திற்கு பின்பா ஆரியரின் செல்வாக்கு எம்மைத்தொட்டது :?:

ஆறுமுகன், ஆனைமுகன் என்பது எல்லாம் பிற்காலத்தில் வைக்கப்பட்ட பெயர்.

முருகன் விடயத்தில் இன்னும் ஒரு வேடிக்கையும் உண்டு. முருகனை தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக வழிபட்டதற்கு நிறைய குறிப்புக்கள் உண்டு.

ஆனால் கி.பி ஏழாம் நு}ற்றாண்டுக்கு பிறகுதான் கணபதி வழிபாடு தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டது. இதற்கு ஆதாரம் கேட்பவர்கள் கி.பி ஏழாம் நு}ற்றாண்டுக்கு முன்பு தமிழர்களிடம் கணபதி வழிபாடு இருந்ததற்கு ஆதாரம் காட்டட்டும்.

(ஒளவையார் என்ற பேரில் பலர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அதியமானிடம் நட்புக் கொண்டிருந்த அவ்வையார், ஆத்திசுூடி எழுதிய அவ்வையார், கம்பர் காலத்து அவ்வையார், மூதுரை எழுதிய அவ்வையார், சுந்தரமூர்த்தி நாயனாரோடு நட்புக் கொண்டிருந்த அவ்வையார் இப்படி அனைவரும் வேறு வேறு. வௌ;வேறு காலகட்டங்களை சேர்ந்தவர்கள். இதில் சுந்தரமூhர்த்தி நாயனருடன் நட்புடன் இருந்த அவ்வையாரே கிபி எட்டாம் நு}ற்றாண்டில் "வினாயகர் அகவல்" படினார். அவ்வையாரை ஆதாரமாக யாரும் காட்டிவிடக் கூடாது என்பதற்கே இதைச் சொன்னேன்)

இப்படி பல ஆயிரம் ஆண்டுகளாக வழிபட்டு வந்த முருகனை பிற்காலத்தில் வந்த விநோத உருவம் கொண்ட கணபதிக்கு தம்பி ஆக்கி விட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.