Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் eiffel tower க்கு அருகில் தேசிய தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

Featured Replies

  • Replies 130
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் இணைப்பில் இப்படி இருக்கின்றது.
SiiNnavan Thug-EeLam Mpk
wiiD mA frNs in wiiD mA frNs

Eiffel Tower க்கு முன்னால் தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடிய ஈழத்துச் சண்டியர் சின்னவனுக்கும் அவரது நண்பர்களுக்கும் பிரபல்யம் பெற்றுத்தர அயராது உழைக்கும் தோலி துல்ஸிக்குப் பாராட்டுக்கள். :lol:

தாங்கள் அம்மணமாக நின்றுகொண்டிருப்பது தெரியாமல் நிற்பவர்களைப் பார்த்து ஏன் உரிஞ்சான் கு*டியோடு நிற்கிறாய் என்று கேட்டால் "என்னை உடுப்பில்லாமல் பார்த்திட்டான்! பார்த்திட்டான்" என்று ஓலம் போடுவது மாதிரி இருக்கு. :icon_mrgreen:

  • தொடங்கியவர்

அவர்கள் short cut இல் எழுதுகிறார்கள். வெளிநாட்டவர்கள் முகநூல், twitter இல் எழுதுவதை பார்த்ததில்லையாக்கும். :) தனது நண்பர்களுடனான படங்களின் ஆல்பம் இற்குள் இப்படங்களையும் upload செய்துள்ளார்.

எனக்கு இவரை தனிப்பட்ட முறையில் தெரியாது. :)

Edited by துளசி

இப்ப நீங்கள் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பற்றி பேசுகிறீர்களா அல்லது அதன் நிகழ்வை உங்களுக்காக வளைக்க முயற்சிக்கிறீர்களா?!  :o

  • கருத்துக்கள உறவுகள்

மக்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் தலைவரை பிடிக்கிறது. அவரவர் அவரவர் மாதிரிக்கு கொண்டாடுகிறார்கள். இதில் என்ன தவறுள்ளது. மக்களுக்கு ஓரளவு ஜனநாயக உரிமைகளை அளிக்கக் கூடிய மேற்கு நாடுகளில் இதனைக் கூட காண்பிக்கவில்லை என்றால் தான் தவறு. மக்கள் ஆதரவற்ற தலைவராக்கும் என்று எண்ணி விடுவார்கள். அல்லது காட்டி விடுவார்கள்..!!

இவை எல்லாமே.. தலைவர் மீதான மக்கள் பற்றின் சாட்சியங்கள். அதற்கு மேல்.. இவற்றை துருவி துருவி ஆராய்வது தேவையற்றது. :icon_idea::)

  • தொடங்கியவர்

இப்ப நீங்கள் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பற்றி பேசுகிறீர்களா அல்லது அதன் நிகழ்வை உங்களுக்காக வளைக்க முயற்சிக்கிறீர்களா?! :o

என்னையா கேட்கிறீர்கள்? :o

நான் வழமை போலவே முகநூலில் பார்த்த படங்களை இணைத்தேன்..

முதல் தரம் இணைப்பு இல்லாமல் தனியே facebook என்று போட்டிருந்தேன். அதை நிர்வாகத்தினர் நான் மூலம் குறிப்பிடவில்லை என்று கூறி நீக்கி விட்டார்கள். அதனால் மீண்டும் இணைப்புடன் இணைத்திருந்தேன்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்பெட்டிக்க மடிச்சுப் போடு என்ற கொடியை தூக்கிக் கட்டிக் கொள்ளவும் ஒரு தில் வேண்டும். அதனை செய்யும் இந்த இளையோரை அந்தத் தைரியத்துக்காகப் பாராட்டலாம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தங்களையும் தங்கள் குழுக்குகளையும் பிரபல்யப்படுத்த அல்லது தமிழர்களுக்குள் ஒரு அங்கீகாரத்தைப் பெறக் கொண்டாடுபவர்கள் என்றுதான் சொல்லுவேன். அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் மாதிரித் தெரியவில்லை!

இவர்கள் தங்களையும் தங்கள் குழுக்குகளையும் பிரபல்யப்படுத்த அல்லது தமிழர்களுக்குள் ஒரு அங்கீகாரத்தைப் பெறக் கொண்டாடுபவர்கள் என்றுதான் சொல்லுவேன். அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் மாதிரித் தெரியவில்லை!

//இவரை...!!

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

இவரை...!

ஓ... மன்னிக்கவும். அவரை மேற்கோள் காட்டியிருக்கவில்லை என்பதால் என்னை கேட்டீர்களோ என்று தவறாக நினைத்து விட்டேன். :)

அடிப்பெட்டிக்க மடிச்சுப் போடு என்ற கொடியை தூக்கிக் கட்டிக் கொள்ளவும் ஒரு தில் வேண்டும். அதனை செய்யும் இந்த இளையோரை அந்தத் தைரியத்துக்காகப் பாராட்டலாம். :icon_idea:

உண்மை நெடுக்ஸ் அண்ணா, அதுவும் புலிக்கொடியை போர்த்தியபடி தலைவரின் பிறந்தநாள் கேக், காட் என அனைத்தையும் police க்கும் கொடுப்பதற்கு தனி துணிவு வேணும். :) அது தான் இந்த படங்களை இங்கு இணைக்க வேண்டும் என தோன்றியது.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இவரை...!

என்னைத்தான் சொல்லியிருந்தீர்கள் என்றால் அதற்குப் பதில் இதுதான்.

எமது போராட்டத்தையும் தலைவரையும் தமது சுயநலத்திற்காகக் பாவிப்பவர்களை விமர்சிக்காமல் ஒதுங்கிப் போவதும் தவறானதே. முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்ற பின்னர் இவர்கள் எல்லாம் செய்த சாதனைகளின் பட்டியலையும், அதனால் தாயகத்தில் இருக்கும் தமிழர்களுக்கு ஏற்பட்ட நன்மைகளையும் தந்தால் ஒதுங்கிப் போவதில் ஒரு பிரச்சினையுமில்லை.

முள்ளிவாய்கால் முடிந்தபின் ஒட்டு மொத்த தமிழினத்தையும் ,அவர்கள் உணர்வுகளையும் அழித்தொழிக்க நினைத்த  எதிரி செய்த சூச்சுமங்களை நான் இங்கு குறிப்பிட தேவை இல்லை என்று நினைக்கிறேன் கிருபன் அண்ணா .
 
மேலும் எதிரியின் திட்டங்கள் சிறிது காலம்  வெற்றி பெற்றாலும் ஆனால் அவை தற்போது முழு அளவில்  சாத்தியாமான சாதகமான நிலையில் இல்லை என்பதே யதார்த்தம் ,
 
கொஞ்சம் கொஞ்சமாக அவை தடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது .இது இந்த நிலை எப்படி உருவாகியது என்று நினைக்கிறீர்கள் .
 
மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலைகளை தாண்டினால் தான் எம் அடுத்த கட்ட அரசியல் போராட்டத்திர்கு எம்மால் நகர முடியும் .அதற்கான சூழல் சூழ்நிலைகள் தற்போது இங்கே நடைபெர்ருக்கொண்டிருக்கிறது .விரிவாக எழுதும் நேரம் இதுவல்ல ........
 
அதனால் எதுவும் யாரும் செய்யவில்லை என்ற கருத்து தவறானது . :)

குளிரில் கொடிகளுடன் நிற்கும் இந்த இளைஞர்களுக்கு இதனால் எத்தகைய சுயநல பேரின்பம் கிடைத்துவிடப் போகிறது?!

  • தொடங்கியவர்

கிருபன் அண்ணா, அடுத்தவனை விமர்சித்து எழுதி நீங்கள் பிரபலம் தேடுவதை விட ஒன்றுக்கும் உதவாத உங்கள் விமர்சனங்களை விட பிரயோசமாக நீங்கள் ஏதாவது செய்ய முன்வந்தால் மக்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள் தானே. அதை செய்ய மாட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குளிரில் கொடிகளுடன் நிற்கும் இந்த இளைஞர்களுக்கு இதனால் எத்தகைய சுயநல பேரின்பம் கிடைத்துவிடப் போகிறது?!

அவர்கள் இந்த நாளைத் தவிர மற்றைய நாட்களில் என்ன செய்கின்றார்கள் என்பதைப் பொறுத்தது. சமூக அங்கீகாரம் தேவையென்றால் இப்படி ஏதாவது செய்யத்தானே வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பருதியை கொலை செய்த கூட்டம் இவர்கள் தான் என ஒரு உறவு காலையில் அத் திரியில் எழுதியிருந்தார்.பரிதியின் கொலைக்கு கண்ணீர் வடிக்கும் துளசியாவது அந்தக் கொலைகாரர்களின் படத்தையாவது இணைப்பதாவது:)

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா, அடுத்தவனை விமர்சித்து எழுதி நீங்கள் பிரபலம் தேடுவதை விட ஒன்றுக்கும் உதவாத உங்கள் விமர்சனங்களை விட பிரயோசமாக நீங்கள் ஏதாவது செய்ய முன்வந்தால் மக்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள் தானே. அதை செய்ய மாட்டீர்கள்.

இதை ஒன்றுக்கும் உதவாத இந்தப் படங்களை இணைக்கமுதல் நீங்கள் யோசித்திருக்கவேண்டும் துல்ஸி.

வேடதாரிகளைத் தோலிருப்பதும் சமூகசேவைதான். அதற்குப் பதில் தராமல் குரலை ஒடுக்க முயல்வதைத்தான் பாஸிஸம் என்பார்கள்.

மூலம்  குறிப்பிட்டிருக்கவில்லை என்பதால் என்னால் நீக்கப்பட்ட மறைக்கப்பட்ட  அந்த திரியில் அஞ்சரன் எழுதிய பதில் இது. இத் திரி சரியான மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளமையால் இதனை  இங்கு மீள பிரசுரிக்கின்றேன்.

இப்படி  சின்ன பாம்பு குருப் தங்களை நல்லவர்களா  காட்ட தலைவரையும்  புலிக்கொடியையும் பயனடுத்துவது விளபரம் தேடுவதும் பின்னர்  தமிழ்  ஆக்களிடமே போனை பறிப்பது ...நகை பறிப்பது ..காசு புடுங்குவதும்  ஒரு வேலையா செய்து கொண்டு திரியுதுக  அதுகள்  போடும்  இப்படியான  வெட்டி  சீனை எல்லாம்  கொண்டுவந்து  இங்கு செய்தியா  இணைப்பதை  தவிருங்கள் துளசி ...

இதே பாம்பு குறுப்  தலை  பிரேம் தான் கேணல் பரிதியை  கொலை செய்ததன் பின்னணி சூத்திரதாரி  என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன் பேஸ்புக்  நிகழ்வுகள் செய்தியா போடுவதை தவிர்த்தால் நல்லம் .

அஞ்சரன், இதை இந்த திரியில் இருந்து நீக்க வேண்டும் என்றால் அறியத் தரவும்

  • தொடங்கியவர்

ரதி அக்கா, அஞ்சரன் அண்ணா, நீங்கள் முன்வைப்பவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா, அஞ்சரன் அண்ணா, நீங்கள் முன்வைப்பவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்.

துளசி உங்களுக்கு இந்தப் படத்தில் இருப்பவரை நேரிடையாக தெரியாது என எழுதி இருந்தீர்கள். பிறகு எப்படி ஆதாரமற்ற குற்ற்ச்சாட்டு என சொல்கிறீர்கள்?... எனக்கு இவர்களைத் தெரியாது அஞ்சரன் எழுதியதையே நான் குறிப்பிட்டேன்

  • தொடங்கியவர்

இதை ஒன்றுக்கும் உதவாத இந்தப் படங்களை இணைக்கமுதல் நீங்கள் யோசித்திருக்கவேண்டும் துல்ஸி.

வேடதாரிகளைத் தோலிருப்பதும் சமூகசேவைதான். அதற்குப் பதில் தராமல் குரலை ஒடுக்க முயல்வதைத்தான் பாஸிஸம் என்பார்கள்.

விமர்சனம் வைக்கிறேன் என்ற பெயரில் காழ்ப்புணர்வில் உண்மையை மறைத்து பொய் குற்றச்சாட்டு வைப்பது தான் உங்கள் வேலையாச்சே.

நீங்கள் எல்லோரும் என்ன தான் குத்தி முறிந்தாலும் உங்கள் கதையை கேட்டால் உருப்பட முடியாது என்பதை பலர் புரிந்து வைத்திருக்கிறார்கள். :)

துளசி உங்களுக்கு இந்தப் படத்தில் இருப்பவரை நேரிடையாக தெரியாது என எழுதி இருந்தீர்கள். பிறகு எப்படி ஆதாரமற்ற குற்ற்ச்சாட்டு என சொல்கிறீர்கள்?... எனக்கு இவர்களைத் தெரியாது அஞ்சரன் எழுதியதையே நான் குறிப்பிட்டேன்

குற்றம் சாட்டுபவன் தான் ஆதாரத்தை காட்ட வேண்டும். இதற்குள் அடுத்தவன் சொல்வதை உண்மையா பொய்யா என ஆராயாமல் நம்பி கருத்து கூறுகிறீர்கள்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் சாட்டுபவன் தான் ஆதாரத்தை காட்ட வேண்டும். இதற்குள் அடுத்தவன் சொல்வதை உண்மையா பொய்யா என ஆராயாமல் நம்பி கருத்து கூறுகிறீர்கள்.

கண்ட பாட்டுக்கு யாரும் புலிக் கொடியை போர்த்தி இருந்தால் உடனே அவர்கள் படத்தை இணைக்கிறது.ஆதாரம் கேட்டால் நொண்டிச் சாட்டுகள் சொல்லி சலாப்பிறது...நான் ஏன் ஆதாரம் காட்ட வேண்டும் நானா சொன்னேன்?...நான் என்ட முதலாவது கருத்திலேயே அவர் சொன்னார் என்று தான் எழுதியிருந்தேன்.சலாப்பிறத்திற்கும் ஒரு அளவு இருக்கு.அவர்கள் குற்றமற்றவர்கள்,அவர்களை உங்களுக்கு தெரியுமென்டால் நீங்கள் முதலில் நிருபீயுங்கோ

அடுத்தவன் சொன்னால் அதை நீங்களும் நம்பி எனக்கு பதிலிட்டால் நீங்களும் குற்றம் சாட்டுபவர் ஆகிறீர்கள். அஞ்சரன் அண்ணா குற்றம் சாட்டினால் அதை ஆராயாமல் பதில் போடுவது. குற்றம் சாட்டுபவன் தான் ஆதாரம் காட்ட வேண்டும்.

அடுத்தவன் ஆதாரமற்று குற்றம் சாட்டுவதை நம்ப வேண்டிய அவசியம் எனக்கில்லை.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படங்களில் நிற்பவர்களில் பலர் தெரிந்தவர்கள் நண்பர்கள் மற்றும் நண்பர்களின் நண்பர்கள்தான்... சில அசிங்கங்களை எழுதி எதுக்கு அவர்கள் செய்யும் நல்லவிடயங்களை கேவலப்படுத்துவான்.. சேகுவாராவின் படத்தைபயன்படுத்தாதே என்றும் சரியானவர்கள்தான் பயன்படுத்தவேண்டும் என்றும் யாரும் வறையறுத்து கொப்பிறைற் எடுக்கவா முடியும். அதுபோல்தானே எமது போராட்ட அடையாளங்களும்.சரியானவர்கள் அடையாளங்களையும் பணிகளையும் சுமந்து முன்செல்ல முன்வந்தால் எதற்கு தவறானவர்கள் முன் எழுகிறார்கள் சமூகத்தில் இவற்றை கையிலெடுத்து.? சீமானை விமர்சிக்கும் இந்திய அரசியல்வாதிகள் தமிழ் குறித்தும் தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்படுவது குறித்தும் தமிழர் நலன் குறித்தும் இதய சுத்தியுடன் போராட வந்திருந்தால் எதற்கு இந்த சீமான் தொண்டைகிழிய கத்திக்கொண்டு முட்டுச்சந்துகளில் நிற்கப்போகிறான் அவனிற்கு பின்னால் எதற்கு ஒருகூட்டமும் நிற்கப்போகிறது என்று ஒரு முறை சீமான கூறியதுதான் நியாபகம் வருகிறது..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் ஆதாரம் இருக்க்காது எனத் தெரிந்தது தானே துளசி...போய் படுங்கள் இனிய இரவாக அமையட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.