Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதுமலை முருகன் ஆலயத்தில் சொக்கப் பனை எரித்து வழிபாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி திகதியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும் வீடுகளிலும் இடம்பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும்.
 
இன்றைய நாளில் சுதுமலை முருகன் கோயிலில் சொக்கப்பனைக்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் சாட்சியளிக்கச் செய்த சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து அடியார்கள் வழிபட்டனர்.
 
கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலை வேளையில் இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்க வைத்து வழிபடுவதும் குறிப்பிடத்தக்கது.
 
1222%283%29.jpg
 
100%2820%29.jpg
 
13333.jpg
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=262413704905409131#sthash.KvOvsqjH.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

சுதுமலை அம்மனுக்கு பக்கத்திலை சும்மா அம்மணமா நிண்ட முருகனை அமர்க்களம் பண்ணிட்டாங்களே ..(அம்மான்) அம்மன் ..பாவம்

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை விளக்கீட்டை கார்த்திகை மாதத்தில் அல்லவா கொண்டாடவேண்டும்? இப்ப கார்த்திகை முடிஞ்சு மார்கழி அல்லவா நடக்கிறது..? :(

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை விளக்கீட்டை கார்த்திகை மாதத்தில் அல்லவா கொண்டாடவேண்டும்? இப்ப கார்த்திகை முடிஞ்சு மார்கழி அல்லவா நடக்கிறது..? :(

தம்பி இது தமிழ்மாதம் கார்த்திகை
  • கருத்துக்கள உறவுகள்

மாரிகாலத்தில் கோயிலை சூழ 2 அடிக்கு தண்ணி நிக்கும். இப்ப பரவாயில்லப் போல கிடக்கு. 3 தேர்களில் பெண்களே வடம் பிடித்து இழுக்கும் கோயில்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளேயெண்டு இதையும் தமிழருக்கு சொந்தமில்லையெண்டு சொல்லாட்டி பெரிய சந்தோசம். :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

சுதுமலை அம்மனுக்கு பக்கத்திலை சும்மா அம்மணமா நிண்ட முருகனை அமர்க்களம் பண்ணிட்டாங்களே ..(அம்மான்) அம்மன் ..பாவம்

 

கேலியில் இந்தியாவுக்கு அம்மான் மார் போன கோயில் அல்லோ.....

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இது தமிழ்மாதம் கார்த்திகை

அட ஆமால்ல.. நன்றி அண்ணை தகவலுக்கு. நெருப்புக்கொழுத்தினால் பொலிஸ்வாற நாட்டில உதெல்லாம் எங்கை ஞாபகம் வாறது. யாராவது சொன்னால்தான் உண்டு. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட ஆமால்ல.. நன்றி அண்ணை தகவலுக்கு. நெருப்புக்கொழுத்தினால் பொலிஸ்வாற நாட்டில உதெல்லாம் எங்கை ஞாபகம் வாறது. யாராவது சொன்னால்தான் உண்டு. :(

 

220px-Osterfeuer_TK.jpg

 

220px-Osterfeuer_mit_Strohpuppe.jpg

 

220px-Osterfeuer_in_Bad_Homburg-Dornholz

 

 

வெள்ளைக்காரரும் எரிக்கிறவை.....பொலிஸ் ஒண்டும் வராது. :)

 

எங்கடை சனம் எதுக்கெடுத்தாலும் ஒரு நொண்டிச்சாட்டு வைச்சிருப்பினம். :D

எல்லாம் எல்லா இடத்திலையும் இருக்குது நடக்குது. ஆனால் மதத்திற்கு மதம் வித்தியாசம்.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் நீங்க எந்த நாடெண்டு தெரியவில்லை, யூகே யில் வீட்டுப் பின் தோட்டத்தில எரிக்கலாம். Bonfire என்பார்கள். பக்கத்துவீட்டை எரிக்காமல், சூழல் மாசுபடாமல், பக்கத்துவீட்டுக்காரன் கண்ணில் தண்ணியும், காதில் புகையும் வராமல் எரிக்கலாம். சொக்கபனையளவுக்கு முடியாது.

நாவாலிப்பக்கம் ஒரு கோவிலிலும் முன்பு சொக்கப்பனை பிரசித்தம். சாத்திரிக்கு தெரிஞ்சிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.