Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்­மு­றை­க­ளற்ற சாத்­வீக போராட்­டமே தென்­னா­பி­ரிக்­காவின் விடு­த­லைக்கு வித்­திட்­டது: சுமந்திரன்

Featured Replies

sumanthiran_CI.JPG

வன்­மு­றை­க­ளற்ற சாத்­வீக போராட்­டமே தென்­னா­பி­ரிக்­காவின் விடு­த­லைக்கு வித்­திட்­டதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

கொழும்பு தமிழ்ச் சங்­கத்தில் ஜன­நா­யக இளைஞர் இணையம் நடத்­திய நெல்சன் மண்­டே­லாவின் முதலாம் ஆண்டு நினை­வுரை நிகழ்வில் உரை­யாற்­று­கையிலேயேஅவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது;

நாட்டின் கறுப்­பி­னத்­த­வரின் விடு­த­லைக்­காக போரா­டிய ஒரு மாம­னிதர். அவரின் செயற்­பா­டுகள் தொடர்பில் புதி­தாக சொல்லத் தேவை­யில்லை. ஒரு பெரும்­பான்மை சமூகம் அங்­கி­ருந்த சிறு­பான்மை வெள்­ளை­யி­னத்­த­வ­ரிடம் அடி­மை­யாக வாழ்ந்­தனர். உலக வர­லாற்றில் இது மிகவும் வேறு­பட்ட வித்­தி­யா­ச­மா­ன­தொரு வர­லாறு. 

அதேபோல் பல ஆண்­டுகள் அடி­மை­க­ளாக வாழ்ந்து 27 வரு­டங்கள் தனது சொந்த வாழ்க்­கை­யினை சிறை­க­ளுக்கு பின்னால் செல­வ­ழித்து பின்னர் தனக்கு அதி­காரம் கிடைத்­த­வுடன் தனது அதி­கா­ரத்தை வெள்­ளை­யி­னத்­த­வ­ருக்கு எதி­ராக பயன்­ப­டுத்­தாது அனை­வ­ரையும் ஆத­ரித்து ஆட்சி நடத்­தினார். இம் மாற்றம் மிகவும் முக்­கி­ய­மா­ன­தொரு மாற்றம். 

ஒடுக்கு முறை­களில் வாழ்­கின்ற எமக்கு இது பல படிப்­பி­னை­களை கற்றுத் தரு­கின்­றது. எங்கள் மத்­தி­யிலும் பல முரண்­பா­டுகள் உண்டு. ஆனால் எமது சூழ்­நிலை அவ்­வா­றா­ன­தொன்­றல்ல. அன்று கறுப்­பின விடு­த­லைக்­காக அடித்­தளம் ஆயுத போராட்­டத்­தி­லேயே ஆரம்­பிக்­கப்­பட்­டது. நெல்சன் மண்­டேலா ஆரம்­பத்தில் கொரில்லா போரா­ளி­யா­கவே செயற்­பட்டார். 

அன்­றைய சூழ்­நி­லையில் அடி­மைத்­த­னத்தில் இருந்தும் கறுப்­பி­னத்­த­வ­ருக்கு எதி­ரான வன்­மு­றை­களில் இருந்தும் விடு­பட ஆயு­த­மேந்திப் போரா­டு­வது சரி­யா­ன­தா­கவே அமைந்­தது. அன்­றைய சூழ்­நி­லையில் போராட்டம் சரி­யென தெரிவு செய்­யப்­பட்­டது.

தமிழ் மக்­களின் வாழ்க்­கையும் இத­னோடு தொடர்­பு­பட்­டது. தமிழ் மக்­களும் அன்று இவ்­வா­றா­ன­தொரு தீர்­மா­னத்­தினை எடுத்­தி­ருந்­தனர். இன்று முப்­பது வரு­டங்­க­ளுக்கு பின்னர் அது தொடர்பில் கூடி­யி­ருந்து விவா­தித்து தீர்­மா­ன­மெ­டுப்­பது மிகவும் கடி­ன­மா­னது. அன்­றைக்கு இத் தீர்­மானம் சரி­யாக இருந்­தது. ஆனால் இன்று சூழ்­நிலை முற்­றிலும் மாறு­பட்­டது. 

அன்று ஆயுதப் போராட்­டத்தின் மூலம் தென்­னா­பி­ரிக்­காவின் விடு­தலை ஆரம்­பிக்­கப்­பட்­டாலும் இறு­தியில் வன்­மு­றை­க­ளற்ற சாத்­வீக போராட்­டமே தென்­னா­பி­ரிக்­காவின் விடு­த­லைக்கு வித்­திட்­டது. இதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

உலகின் ஆத­ரவு எமக்கு கிடைக்க வேண்­டு­மாயின் நாட்­டி­னுள்ளே தேசிய ஆத­ரவு எமக்கு கிடைக்க வேண்­டு­மாயின் பெரும்­பான்மை ஒத்­து­ழைப்பு எமக்கு கிடைக்க வேண்­டு­மாயின் எமது போராட்டம் என்­ன­வென்­பது அவர்­க­ளுக்கு தெளி­வாக விளங்க வேண்டும். எமது நிலைமை முழு­மை­யாக ஏனை­ய­வர்­க­ளுக்கு தெரிய வரும் போது எமது இலக்கு வெற்றியுறும்.

எனவே எமது போராட்டத்தினை முன்னெடுக்கும் போது நெல்சன் மண்டேலாவின் செயற்பாடுகளை மறந்து விடக் கூடாது. எமது தேவையான செயற்பாடுகளுக்கு இவ் அனுபவங்களை கருத்திற் கொள்ள வேண்டும். 

உண்மையிலேயே இவ் உதாரணங்களை எமது போராட்டத்திற்கு முன் உதாரணமாக எடுத்துக் கொள்வோமாயின் மாறி வருகின்ற சூழ்நிலையிலே நாங்கள் முன்னேறுவதற்கு இடம் உண்டு எனவும் குறிப்பிட்டார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114329/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
27 வரு­டங்கள் தனது சொந்த வாழ்க்­கை­யினை சிறை­க­ளுக்கு பின்னால் செல­வ­ழித்து அன்று கறுப்­பின விடு­த­லைக்­காக அடித்­தளம் ஆயுத போராட்­டத்­தி­லேயே ஆரம்­பிக்­கப்­பட்­டது. நெல்சன் மண்­டேலா ஆரம்­பத்தில் கொரில்லா போரா­ளி­யா­கவே செயற்­பட்டார்.
30 வருடங்களுக்கு முன் பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்திருந்தால் சில நேரம் எங்களுக்கு இப்ப ஈழம் கிடைத்திருக்குமோ?
  • கருத்துக்கள உறவுகள்

 

sumanthiran_CI.JPG

வன்­மு­றை­க­ளற்ற சாத்­வீக போராட்­டமே தென்­னா­பி­ரிக்­காவின் விடு­த­லைக்கு வித்­திட்­டதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

 

அதை கூட செய்யாமல்தான் சிங்களவர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது.
அது இன்னும் ஈசி ................. அதை ஞாபகத்தில் வைத்திருக்க கூடாதா ? 
  • கருத்துக்கள உறவுகள்

வன்­மு­றை­க­ளற்ற சாத்­வீக போராட்­டமே தென்­னா­பி­ரிக்­காவின் விடு­த­லைக்கு வித்­திட்­டது: சுமந்திரன்

 

 

தென்னாபிக்காவை இலங்கையில்  தமிழர்கள் பிரச்சினையுடன் ஒப்பிடமுடியாது

தமிழர் இலங்கையில் சிறுபான்மை இனம் ......

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்பவும் சாத்வீகத்துக்குப் பாேகலாம் ஒன்றும் தப்பில்லை.

பாராளுமன்றத்திலேயே உங்களை கணக்கெடுக்கினமில்லைை.

முற்றவெளியில உக்காருங்காே சில்லறை......?

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்க காங்கிரஸ் என்ற மண்டேலாவின் அமைப்பு.. வன்முறையில் ஈடுபட்டது. மண்டேலா சர்வதேச பயங்கரவாதி ஆகியும் நின்றவர். ஒரு கட்டத்தில்.. ஆட்சியாளர்களின் ஆயுத பலம் விஞ்சிவிட்ட நிலையில்... கறுப்பினத்தவர்கள் சாத்வீக வழியில் மிச்சப் போராட்டத்தை கொண்டு செல்லத் தலைப்பட்டனர். இறுதியில் அதில் வெற்றி பெற்றார்கள். மீண்டும் கவனிக்க வேண்டும்.. சாத்வீகப் போராட்டங்களுக்கு ஒரு கட்டத்தில் மதிப்பளித்த வெள்ளையர்களுக்கு எதிராகவே போராட்டம் நடந்துள்ளது. அதே கொள்கையை சிறீலங்கா சிங்கள.. இந்திய ஹிந்தி ஆட்சியாளர்களிடம் காண்பித்தால்.. கோவிந்தா கோவிந்தா தான். அவர்கள் போராட்ட சக்திகளின் தலையில் மிளகாய் அரைத்து மகிழ்வார்கள். :icon_idea::o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.