Jump to content

காரமான... துளசி ப்ரைடு ரைஸ்


Recommended Posts

காரமான... துளசி ப்ரைடு ரைஸ்

 

ப்ரைடு ரைஸில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் துளசி ப்ரைடு ரைஸ். இது வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான ப்ரைடு ரைஸ் என்று சொல்லலாம். ஏனெனில் துளசியில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால், இதனை அதிகம் உட்கொள்ளும் போது, உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

 

எனவே இந்த உணவை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இந்த ப்ரைடு ரைஸில் விருப்பமான காய்கறிகளை சேர்த்தும் சமைத்து சாப்பிடலாம். இப்போது இந்த துளசி ப்ரைடு ரைஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 

jqrejl.jpg

 

காரமான... துளசி ப்ரைடு ரைஸ் தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப்

 

வெங்காயம் - 2 (நறுக்கியது)

 

குடைமிளகாய் - 2 (நறுக்கியது)

 

கேரட் - 2 (நறுக்கியது)

 

தக்காளி - 1 (நறுக்கியது)

 

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

 

சிவப்பு மிளகாய் பேஸ்ட் - 2 டீஸ்பூன்

 

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

 

சர்க்கரை - 1 டீஸ்பூன்

 

துளசி இலைகள் - 1 கப் (நறுக்கியது)

 

உப்பு - தேவையான அளவு

 

எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்

 

தண்ணீர் 4 கப்

 

செய்முறை: முதலில் அரிசியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 15-20 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைக்க வேண்டும்.

 

பின்னர் அதனை இறக்கி, அதில் உள்ள அதிகப்படியான நீரை வடித்து விட்டு, ஒரு தட்டில் போட்டு குளிரை வைக்க வேண்டும்.

 

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

 

பின் கேரட், குடைமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட்டை ஒவ்வொன்றாக சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் வதக்க வேண்டும்.

 

அடுத்து நறுக்கிய தக்காளி, மிளகாய் பேஸ்ட், சர்க்கரை, உப்பு மற்றும் சோயா சாஸ் சேர்த்து, 4-5 நிமிடம் வதக்கி விட வேண்டும். பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறி விட்டு, இறுதியில் துளசி இலைகளை போட்டு கிளறி, 5 நிமிடம் தட்டு கொண்டு மூடி வைத்து இறக்க வேண்டும்.

 

இப்போது சுவையான துளசி ப்ரைடு ரைஸ் ரெடி!!!

 

Read more at: http://tamil.boldsky.com/recipes/veg/spicy-basil-fried-rice-003302.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பப்பா துளசி காரமானது .....  :rolleyes:

 

இணைப்புக்கு நன்றி நவீனன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசி என்டாலே காரம் தானே :)

அது எங்கே வைகிறீர்கள் என்பதை பொறுத்தது.
தீர்த்தத்தில் வைத்துபாருங்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நானும் துளசி செய்த பிரைட் றைஸ் எண்டெல்லோ நினைச்சிட்டன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த துளசி இலை போடாமல் செய்து பாருங்கோ...ரேஸ்ற் அந்தமாதிரி இருக்கும். :D   துளசி இலை போட்டால் இருக்கிற சுவையையும் கெடுத்துடும்.  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த துளசி இலை போடாமல் செய்து பாருங்கோ...ரேஸ்ற் அந்தமாதிரி இருக்கும். :D   துளசி இலை போட்டால் இருக்கிற சுவையையும் கெடுத்துடும்.  :icon_idea:

அவர்கள் மல்லி இலையைத்தான் மாறி துளசி என்று போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி துளசியில் வெள்ளை நிறத் துளசிகள் இரண்டு மூன்றில் மேற்குலகமும் சாப்பாடு செய்யிறது. சோஸ் வகைகளுக்கும் போடுறது.


துளசி என்டாலே காரம் தானே :)

 

காரம் இல்லாத துளசியள் நிறைய இருக்கு.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

300px-Oregano_1.jpg

 

ஒரேகானோ என சொல்லப்படும் ஒருவகை செடியின் இலையும் துளசியின் நறுமணத்தை கொடுக்கக்கூடியது. இது ஐரோப்பிய நாடுகளில் உண்ணும் உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றது.

முக்கியமாக  பிட்சா நூடில்ஸ் ஈரோஸ் போன்ற உணவு வகைகளுக்கு சேர்க்கின்றார்கள்.

கடினமான உணவுவகைகளின்  செமிபாட்டுக்கு நல்லது என சொன்னார்கள்.

 

http://en.wikipedia.org/wiki/Oregano

எனது சர்வதேச யாழ் உறவுகளின் வசதிக்காக.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி துளசியில் வெள்ளை நிறத் துளசிகள் இரண்டு மூன்றில் மேற்குலகமும் சாப்பாடு செய்யிறது. சோஸ் வகைகளுக்கும் போடுறது.

 

காரம் இல்லாத துளசியள் நிறைய இருக்கு.

 

அவர் சொல்கிற துளசி வேற அக்கா 

Link to comment
Share on other sites

அவர்கள் மல்லி இலையைத்தான் மாறி துளசி என்று போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் 

 

ப்ரைடு ரைஸில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் துளசி ப்ரைடு ரைஸ். இது வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான ப்ரைடு ரைஸ் என்று சொல்லலாம். ஏனெனில் துளசியில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால், இதனை அதிகம் உட்கொள்ளும் போது, உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரிசரி  நவீனன் நீங்கள் காரத் துளசி  பிரைட் ரைஸ் பற்றித்தான் சொல்கிறீர்கள்-( அதாவது துளசி இலை போட்டுச் செய்வது ) என்பதை ஒத்துக்கொள்கிறோம். :lol:

Link to comment
Share on other sites

சரிசரி  நவீனன் நீங்கள் காரத் துளசி  பிரைட் ரைஸ் பற்றித்தான் சொல்கிறீர்கள்-( அதாவது துளசி இலை போட்டுச் செய்வது ) என்பதை ஒத்துக்கொள்கிறோம். :lol:

 

விளங்கினால் சரி :icon_mrgreen::lol:

 

நந்தன் சும்மா திரியை திசை திருப்பி விடுவது :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.