Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளிடம் சிறிலங்கா இராணுவத்தின் ரி5 ரக டாங்கிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளிடம் சிறிலங்கா இராணுவத்தின் ரி௫5 ரக டாங்கிகள்: கொழும்பு ஊடகம்

முகமாலைச் சமரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சிறிலங்கா இராணுவத்தினரின் ரி௫5 ரக டாங்கிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தி விவரம்:

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சொக்கோஸ்லோவேக்கியா தயாரிப்பான ரி௫5 ரக யுத்த டாங்கி ஒன்று இருப்பதை இராணுவம் அண்மையில் உறுதி செய்துள்ளது. இருவேறு யுத்த நடவடிக்கைகளில் புலிகளால் கைப்பற்றப்பட்ட மூன்றில் ஒன்றாக அவை இருக்கக்கூடும்.

1993 நவம்பர் மாதம் பூநகரியில் இரு ரி௫5 ரக டாங்கிகளையும் 1997 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு நடவடிக்கையில் ஒரு டாங்கிகையும் சிறிலங்கா இராணுவம் இழந்தது.

இந்த ரி௫5 ரக டாங்கியானது சக்திவாய்ந்த 100 எம்.எம். ஆயுதங்களைக் கொண்டது. இராணுவத்தரப்பு உருக்கினாலான எறிகணை பயன்படுத்துகிறது. கடந்த மாதம் நடந்த சமரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் இந்த டாங்கி ஒன்று பயன்படுத்தப்பட்டது. அதிலிருந்து வீழ்ந்து வெடித்த எறிகணை எந்த நாட்டினது தயாரிப்பு என்று சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த செப்ரம்பர் முதல் வாரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது முன்னரங்கை இராணுவம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து வடமராட்சி கிழக்குக் கடலோரம் கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையிலான இராணுவ முதலாவது முன்னரங்க நிலைகளை விடுதலைப் புலிகள் தாக்கினர்.

கடந்த ஓகஸ்ட் 11 ஆம் நாள் மாலை தொடக்கம் 10 நாட்களுக்கு மேலாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சமரில் 182 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். செப்ரெம்பர் தாக்குதலின் போது முன்னரங்க காவலரணிலிருந்து விலகிய புலிகள் இந்த டாங்கியை அல்லது டாங்கிகளையும் மீட்டுக் கொண்டு சென்றனர்.

முகமாலையில் ஒக்ரோபர் 11 ஆம் நாள் நடந்த சமரின் போது டாங்கி மூலமாக நேரடித் தாக்குதலை புலிகள் நடத்தினர். இதில் இராணுவம் ஆள் மற்றும் தளபடா வகையில் பாரிய இழப்புக்குள்ளானது. இராணுவத் தலைமையகத்தின் அறிக்கையின்படி 138 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 600 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறிப்பாக கெமுனு வோட்ச் 5, முதலாவது விஜயபாகு படையணி மற்றும் 6 ஆவது கஜபாகு படையணி ஆகியவை அச்சமடைய வைக்கும் வகையிலான இழப்பைச் சந்தித்தன. ஆர்.எஸ்.எஃப் எனப்படும் ரிசர்வ் ஸ்ட்ரைக் படையணியுடன் இணைந்த ஏயர் மொபைல் படையணிக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. சிறப்புப் படையணிகள், தளபதிகள் மற்றும் ஏயர் மொபைல் இராணுவத்தினரை உள்ளடக்கியது ஆர்.எஸ்.எஃப்.

இதற்கு இணையாக கவலையளிக்கக்கூடியது என்னவெனில் 4 ரி௫5 ரக யுத்த டாங்கிகளும் 2 உக்ரேன் தயாரிப்பான பி.எம்.பிகளும் ஒக்ரோபர் 11 ஆம் நாள் சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளால் அகற்றப்பட்டுள்ளன.

இவற்றில் ஏதேனும் ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது நடவடிக்கைக்களுக்காக கைப்பற்றியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

1991 ஆம் ஆண்டு முதல் ரி௫5 ரக டாங்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

52 ஆம் படையணியானது பிரிகேடியர் மனோ பெரேரா, 51 ஆம் படையணியானது பிரிகேடியர் எல்.பி.மார்க் ஆகியோரின் கட்டுப்பாட்டின் கீழும் மற்றும் மேலும் இரு படையணிகளும் யாழில் நிறுத்தப்பட்டுள்ளன.

55 ஆம் படையணியின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சனத் குணரட்ண அண்மையில் மாற்றப்பட்டு பிரிகேடியர் கமல் குணரட்ண நியமிக்கப்பட்டார்.

பிரிகேடியர் சிறிநாத் ராஜபக்ச அண்மையில் ஆர்.எஸ்.எஃப்பின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிகேடியர் சமந்த சூர்ய பண்டார அப்பொறுப்பில் இருந்து வந்தார்.

முகமாலை தோல்வி தொடர்பிலான விசாரணைகள் இராணுவத்தினரது நிலையை பல்வீனமாக்கும் என்ற சர்ச்சைகள் உருவாகியுள்ளது. அந்த வலிந்த தாக்குதல் மிகவும் தவறானது என்றும் இதனால் புதிய ஆளணி சேர்ப்புக்கான தேவையை ஏற்படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவருகிறது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

-புதினம்

"கொழும்பு ஆங்கில ஊடகம்" எண்டு ஏன் செப்படி வித்தை? எந்த ஊடகம் என்றும் பெயரை குறிப்பிட்டு தெளிவா போட வேண்டியானே நாசமறுப்பார். அதற்கு ஒரு அனுமதியும் அவர்களிடம் எடுக்க தேவையில்லையே.

மூலத்தை சொன்னா களவுகள் பிடிபட்டு போகும் எண்டு கூத்து பண்ணினமா?

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளிடம் ராங்கிகள் இருப்பது ஒன்றும் புதிய தகவல் இல்லையே. விடுதலைப் புலிகளிடம் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் கூட இருக்கின்றன. ஜெயசிக்குறு காலத்தில் ஆனையிறவில் சிறீலங்காப் படைகளின் ராங்கிகள் சிலவற்றைப் புலிகள் ஒரே தினத்தில் இந்த ஏவுகணைகளைக் கொண்டு அழித்ததாக அப்போது இக்பால் அத்தாஸ் எழுதி இருந்தார்.

விடுதலைப்புலிகள் தாங்கிகளைக் கொண்டு முல்லைத்தீவுப் பகுதியில் இரண்டு டோறாக்களைத் தாக்கி அழித்ததையும் இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் ஒரு விடயம் முக்கியம். விடுதலைப் புலிகளாய் தங்களிடம் டாங்கிகள் உள்ளதை அல்லது டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளதை பகிரங்கப்படுத்தியது கிடையாது.

புதினம் ஏன் இப்போ மட்டும் புதிசா எழுதுது. முகமாலையில் அழிக்கப்பட்டது புலிகளின் ராங்கி என்று சொன்னாலும் சொல்லுவார்கள். இராணுவத்துக்கு மனோபலம் கூட வேண்டுமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கொழும்பு ஆங்கில ஊடகம்" எண்டு ஏன் செப்படி வித்தை? எந்த ஊடகம் என்றும் பெயரை குறிப்பிட்டு தெளிவா போட வேண்டியானே நாசமறுப்பார். அதற்கு ஒரு அனுமதியும் அவர்களிடம் எடுக்க தேவையில்லையே.

மூலத்தை சொன்னா களவுகள் பிடிபட்டு போகும் எண்டு கூத்து பண்ணினமா?

http://www.southasianmedia.net/index_story...try=SRI%20LANKA

http://www.island.lk/

....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

During more than two decades of separatist War, there have been occasions when The Sunday Times exposed military blunders that cost lives and led to the loss of millions of rupees worth of equipment. This helped political leaders to understand realities. When they were told that artillery guns were destroyed (together with huge quantities of ammunition), it came to light the enemy had seized them. When they were told that battle tanks were destroyed, it came to light they were not.

In the past at least one tank fell into the hands of the guerrillas. In Muhamalai five were lost. Besides the two destroyed, what happened to the other three? It is known that one is already in guerrilla hands. What has been paid for with the tax payer's money came to be used against the troops defending the nation's sovereignty and territorial integrity. Can anyone say this is the result of good planning? .... By Iqbal Athas

http://yarl.com/forum3/viewtopic.php?p=231...4dae8c53#231509

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//கடந்த செப்ரம்பர் முதல் வாரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது முன்னரங்கை இராணுவம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து வடமராட்சி கிழக்குக் கடலோரம் கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையிலான இராணுவ முதலாவது முன்னரங்க நிலைகளை விடுதலைப் புலிகள் தாக்கினர்.

கடந்த ஓகஸ்ட் 11 ஆம் நாள் மாலை தொடக்கம் 10 நாட்களுக்கு மேலாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

//

எனக்கொரு சந்தேகம்.

ஓகஸ்டுக்குப் பிறகு செம்ரம்பரா, செம்ரெம்பருக்குப் பிறகு ஓகஸ்டா?

செம்ரெம்பரில் படையினர் புலிகளின் முன்னரங்கைப் பிடித்தபிறகு புலிகள் படையினரின் முன்னரங்கங்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்று ஓகஸ்ட் 11 தாக்குதலைச் சொல்கிறார்கள் போன்றுள்ளதே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளிடம் ஒரு ரி - 55 ரக டாங்கி இருப்பதும் அது பூநகரியில் கைப்பற்றப்பட்டதென்பதும் யாவருக்கும் தெரிந்ததே. புலிகள் தங்கள் டாங்கியைப் பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார்க

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கை ஊடகங்களுக்கு பூநகரியில் கைப்பற்றி இருப்பது முன்னரே தெரியுமே. பிறகேன் அலட்டிக் கொள்ளினம். அழிக்கப்பட்டதுகள் புலிகளின் கைக்குப் போனவை அல்லது போக இருந்தவை என்று சொல்லப் போலும்.

ஒளிவீச்சில் காட்டியதாகக் கூறி இருந்தீர்கள். நமக்கு அது பார்க்கக் கிடைக்கவில்லை.விடுதலைப்புலி

  • கருத்துக்கள உறவுகள்

புதினம் என்னவோ, தன்னுடைய கருத்தைச் சொல்லவில்லையே! ஆங்கில ஊடகம் போட்டதைத் தானே மொழி பெயர்த்துப் போட்டிருக்கு. அப்படி மொழி பெயர்த்துப் போட இயலாது என்றால், எனிமேல் சிங்கள அரசியல்வாதிகள் ஒருத்தர் சொல்வதையும் போட இயலாது.

செய்தி போடும்போதே எங்க பிழைபிடிக்கலாம்? நையாண்டி பண்ணலாம் என்று திரிந்தால் எல்லாம் பிழையாகத் தான் இருக்கும்.

சேதமாக்கப்பட்ட 4 டாங்கிகளை சேர்த்தால் 1 டாங்கியாவது வராதா?

1 டாங்கி பொறிக்கிடங்கில் வீழ்த்தப்பட்டதாக வாசித்திருந்தேன் அதை புலிகள் கைப்பற்றியிருக்கக்கூடும் என நினிக்கிறேன்

"கொழும்பு ஊடகம்" "சிங்கள ஊடகம்" "கொழும்பு ஆங்கில ஊடகம்" என்று செப்படிவித்தை விடாமல் எந்த ஊடகம் என்றும் பெயர்குறிப்பிட்டு தெளிவாக சொல்லிவிட்டால் வாசிக்கிறவர்கள் வேண்டிய அளவு வடிகட்டி விடையத்தை உள்வாங்குவினம்.

"தென்னிலங்கை" "சிங்கள" அரசியல்வாதி சொன்னவர் என்று செப்படிவித்தை விடுறதுக்கும் சோமவன்ச அமரசிங்க என்றோ அல்லது மலிந்த மொறகொட என்று பெயர் சொல்லி குறிப்பிடும் பொழுது அதை உரிய கோணத்தில் பார்க்க தூண்டுவது போலவே.

புதினம் அனாவசியமாக குளப்பம் விளைவிக்காமல் உள்ளதை உள்ளவாறே மூலத்தையும் முழுக்க தெரிவித்துவிட்டால் நல்லம்.

ஓம் ஓம் 4 சேதமாக்கப்பட்ட டாங்கிகளும் இடியப்பம் அவிக்க குளைச்ச மா பதம் பிழைச்சமாதிரி அதை கொத்தி புட்டா அவிச்சு விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தி அயலண்ட் நாளேடு எழுதியுள்ளது. அதைக் குறிப்பிடுவதால் புதினத்துக்கு என்ன நட்டமோ தெரியவில்லை...???! :?:

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

புதினம் எங்காவது திருடும் பின்'னர் தன்னுடையதை கொப்படி அடிக்கினம் எண்று நியாயம் வேற?

lttank.jpg
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோனவர் எழுதியது!

தி அயலண்ட் நாளேடு எழுதியுள்ளது. அதைக் குறிப்பிடுவதால் புதினத்துக்கு என்ன நட்டமோ தெரியவில்லை...???!

hவவி:ஃஃறறற.pயவாiஎர.உழஅஃiனெநஒ.pரி?ளரடியஉவழைnசிறீளாழறகரடடரூனைச

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு எந்த பத்திரிகை என்பது முக்கியம்.

இன்னொருவருக்கு யார் எழுதினார் என்பது முக்கியம்....

மற்றொருவருக்கு எப்போது எழுதினார் என்பது முக்கியம்...

வேறொருவருக்கு ஏன் எழுதினார் என்பத முக்கியமெனில்........

ஒருவருக்கு புதினம் நல்ல திறப்பட செய்ற்படவேண்டும் என்பதுக்காக் கருத்துக்கள் வைக்கிறார்.

மற்றவர் புலிகளுக்கு ஆதர்வாக செய்றபடுது என்று தனது புலிக் காச்சலை வைத்து கருது சொல்லுகிறார்,,,,,'

எனொருவர் கருத்து சொல்ல வேனும் என்பதுகாக கருத்து வைக்கிறார்.................

அடுத்தவர் தங்களை விட புதினம் உடனுக்கு உடன் செய்திகளை எப்படி கொண்டு வருகிறார்கள் என்ற அன்புடன் கருது வைக்கிறார்........

ஆனா இங்கு புதினம் பற்றி கருத்து வைக்கும் எல்லோருடைய நோக்கமும் ஒன்று இல்லை.

குருக்கால போனவரின் கருத்தின்படி புதினம் திறம் பட செய்றபடவேனும் என்ற ஆதங்கம் இருப்பது போல் தோனுகிறது( நான் புரிந்து கொண்டது சரியாக இருக்கும் என்றால்)

ஆனா இதே தொடர்ந்து கருது எழுதியவர்களின் நோகமும் என்று சொல்ல முடியவில்லை

சந்தர்ப்பம் பார்த்து காலை வாரிவிடும் குனமும் இருக்கு

ஆனாலும் புதினம் செய்வது சரியே அவர்கள் ஒரு பத்திரிக்கை எய்தி தாள் இல்லைஅது ஒரு இனையசெய்தி தளம் மட்டுமே உடனுக்கு உடன் உண்மை செய்திகளையும் நல்ல ஆய்வுகளையும் தருவதில் புதினத்துக்கு தனி சிறப்பு இருக்கு...............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில எழுத்துக்கள் பிழையாக பதிந்துள்ளன எப்படி திருத்துவது?

என்னுடைய பார்வையில் புதினமும் சங்கதியும் தற்பொழுது தமிழர் தரப்பின் தமிழ் மொழி mainstream media ஆக உள்ளன.

புதினம் முழு இணைய விபரங்களோடு இந்திய மற்றும் மேற்கத்தேய ஊடகங்களினால் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது பல தடவை.

சங்கதியின் ஒளிப்படங்கள் AFP/Reuters இனால் மேற்கோள் காட்டி பாவிக்கப்படுகிறது.

எனவே இவற்றில் வரும் ஒவ்வொரு தகவல்களும் 100 இற்கு 100 வீதம் சரியாக இருக்க வேண்டும் நிதானமாக இருக்க வேண்டும். இவர்கள் தமிழர்களிற்கு மாத்திரம் செய்தி சொல்லவில்லை சர்வதேச ஊடகங்களிற்கும் தமிழர்களின் செய்தி சொல்கிறார்கள்.

பிந்தி செய்தியை வெளிக் கொண்டு வந்தாலும் அது 100 வீதம் சரியாகவும் நிதானமானதாகவும் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களிற்கு பொல்லுக் கொடுக்காததாகவும் இருக்க வேண்டும். இந்த உயர்ந்த பட்ச கவனம் அவர்கள் செய்தி எழுதும் ஒவ்வொரு வசனத்திலும் இருக்க வேண்டும் இடும் தலையங்கத்தில் அதில் பாவிக்கப்படும் ஒவ்வொரு சொல்லிலும் இருக்க வேண்டும்.

அவர்கள் இலவசமாக செய்கிறார்கள் தன்னாவலர்கள் செய்கிறார்கள் என்ற எந்த நொண்டிச்சாட்டும் இவர்களை மேற்கோள் காட்டி தமிழர் தரப்பு செய்திகளாக எழுதும் சர்வதேச ஊடகங்கள் ஏற்றுக் கொள்ளப் போவது இல்லை. பிழைகள் விட்டால் திருத்தும் பொழுது அது தடையங்களோடு திருத்தப்பட்டதாக காண்பிக்கப்பட வேண்டும்.

காலியில் தாக்குதல் நடந்தால் சிறீலங்கா அமைச்சரோ சிறீலங்கா இராணுவப் பேச்சாளரோ சொல்லுவதை அவர்கள் சொல்கிறார்கள் புலிகளை குற்றம்சாட்டுகிறார்கள் என்றதை தமது செய்திகளில் தெளிவாக குறிப்பிட வேண்டும். இவர்கள் தங்கள் பாட்டிற்கு பழைய தாக்குதல்களை நினைத்துவிட்டு சிங்கள ஊடகங்கள் சொல்லுது பிபிசி சொல்லுது சிறீலங்கா அமைச்சர் சொல்லுறார் கொழும்பு வானொலிகள் சொல்லுது ஆனபடியா தற்கொலைத்தாக்குதல் என்று எவரையும் மேற்கோள் காட்டாது எழுதுவது தவறு.

புலிகள் உத்தியோகபூர்வரீதியில் உரிமை கோரும் வரை அனைத்தும் குற்றம்சாட்டப்பட்ட தாக்குதல்களும் தாக்குதல் முறைகளுமே. தடயவில் நிபுணர்கள் ஆய்வு செய்து சொன்னாலே அது சிறீலங்காவின் தடயவியல் நிபுணர்களின் முடிவு என்பதை தெளிவாக தமது செய்திகளில் குறிப்பிட வேண்டும்.

ஆனால் தற்பொழுது என்ன நடக்கிறது? கொழும்பில் ஒரு தாக்குதல் நடந்தால் புதினத்தின் கொழும்புச் செய்தியாளர் அதை தற்கொலைத்தாக்குதல் என்று எழுதினால் அதை அவர் என்ன ஆதாரத்தில் எழுதுகிறார்? அவர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று கூட செய்தி சேகரித்திருக்கலாம் ஆனால் அவர் அங்கு உள்ளவர்கள் சாட்சியங்கள் மற்றும் சிறீலங்கா பேச்சாளர்களை மேற்கோள் காட்டி என்பதை தெளிவாக சொல்ல வேண்டும். புதினம் செய்தியாளர் என்ன தடயவியல் ஆய்வு செய்து முடிவெடுத்தவரா நடந்தது தற்கொலைத்தாக்குதல் என்று?

இதே அவதானம் தான் வடக்கு கிழக்கில் நடக்கும் தாக்குதல்கள் இழப்புகளை அறிவிக்கும் பொழுதும் தேவை.

தமிழர்களை கிளு கிளுப்பூட்ட கற்பனையில் எழுதிய காலம் மலையேறிவிட்டது. பிந்தி செய்தி வந்தாலும் 100வீத நிதானம் தரம் முக்கியம்.

குறுக்ஸ் நீங்கள் சொல்லுறது எல்லாத்தியும் தாண்டி ஒருவிடயம் இருக்கே...!

அதுதான் அந்த ஆயுத இறக்குமதி எண்டது... தங்களின் தோல்விக்கு புலிகளின் டாங்கிகை காரணமாக காட்டும் அதேவேளை புலிகளின் டாங்கியை அளிக்க ஏவுகணை வாங்க வெளிக்கிடப்போகினம் போல.... அதிலைதானே பல இராணுவாதிகாரிகளின்ர, அரசிலவாதிகளின் வண்டியே ஓடுது....

எப்பிடி எண்டாலும் சிங்களவனின்ர காசு கரியானால் சரிதான்... :wink: 8) 8)

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ அரச படைகளின் விமானப்படை ஏவுகணைகள் புலிகளிடம் உள்ள ராங்கிகளை அழிக்காது என்பது யாழில் முன் வைக்கப்படும் புதிய தரவா?

நல்ல விசயம் அப்ப எங்கட கிளுகிளு கதையளை சிங்களவன் ஆயுதம் வேண்டி காசகரியாக்க உதவிற தேசிய கடமையாக தொடருவம்.

மக்கள் சோர்வடையாமல் இருக்க துல்லியமா அடிச்சு முற்றுகையிட்டு கட்டளை பீடத்தை மாத்தி முடிஞ்சுது.

இனி வியாபாரம் இப்படி நடக்கட்டும் :lol:

நல்ல விசயம் அப்ப எங்கட கிளுகிளு கதையளை சிங்களவன் ஆயுதம் வேண்டி காசகரியாக்க உதவிற தேசிய கடமையாக தொடருவம்.

மக்கள் சோர்வடையாமல் இருக்க துல்லியமா அடிச்சு முற்றுகையிட்டு கட்டளை பீடத்தை மாத்தி முடிஞ்சுது.

இனி வியாபாரம் இப்படி நடக்கட்டும் :lol:

:lol::lol::lol::D:D

அப்போ அரச படைகளின் விமானப்படை ஏவுகணைகள் புலிகளிடம் உள்ள ராங்கிகளை அழிக்காது என்பது யாழில் முன் வைக்கப்படும் புதிய தரவா?

அப்போ அரச விமானப்படையிட்ட தாங்கிகள் அளிக்கும் ஏவுகணை இருக்கு என்பது புதிய தரவா...??

அப்படி இருந்தால் பதின்மூண்று வருடமாக ஏன் பாவிக்கவில்லை என்பதையும் இங்கை சொல்லுமன்... :wink: 8) 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ அரச படைகளின் விமானப்படை ஏவுகணைகள் புலிகளிடம் உள்ள ராங்கிகளை அழிக்காது என்பது யாழில் முன் வைக்கப்படும் புதிய தரவா?

:P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.