Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் சரியான நேரத்தில சரியான இடத்தில் கே.பியை கொண்டு போய் நிறுத்துவோம் - இலங்கை அரசாங்கம்

Featured Replies

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கு, சரியான இடத்தில், சரியான நேரத்தில் பயன்படுத்துவதற்காகவே,   கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை பாதுகாப்பாக வைத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்கா அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த இதுகுறித்து தெரிவிக்கையில்,

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கும், ஜெனிவாவிலும், ஏனைய இடங்களிலும் சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக பரப்புரைகளுக்கு எதிராக போராடவும், சரியான நேரத்தில சரியான இடத்தில் கொண்டு போய் நிறுத்துவதற்காகவே கே.பியை அரசாங்கம் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

ஆனால், எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களைப் பரப்பி மக்களைக் குழப்ப முனைகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார் http://www.pathivu.com/news/36614/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

குமரன் பத்மநாதனை யாரிடமிருந்து அரசாங்கம் பாதுகாக்க முயல்கிறது. இந்தியாவிடமிருந்தா?.

ஆக அவரை ஒரு வேள்வியாடு என்று சொல்லுறாங்க.

இப்பிடி இன்னும் கொஞ்சபேர் இருக்கினம் எப்ப திருவிளாவோ?

  • கருத்துக்கள உறவுகள்

கே பியோடு.. கோத்தாவும்.. மகிந்தவும்..சரத்தும் போக நேரிடும். ஏன் சந்திரிக்காவும் போக நேரலாம். மேற்குல நலன்களுக்கு எதிராக இவர்கள் இயங்க முற்பட்டால். கேபி யை அவ்வளவு இலகுவாக தண்டிக்க முடியாது. காரணம் அவரிடமுள்ள சொத்துக்கள்.  :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டியளா செய்தியை? உப்புப்பாேட்ட பாண்டமும், உபாயம் கற்ற நெஞ்சமும் தட்டி உடையாமல் தானே உடைந்ததாம். இவையள் ஏதாே மக்களின்ர அபிவிருத்திக்காக அரசாங்கத்தாேட சேந்திருக்கிறம் எண்டு கதையளக்கினம். இப்பவும் இதுகளுக்கு தாங்கள் யாா்? புரியுதாே தெரியாது. அரசியல்வாதி நாலும் சாெல்லுவான் அதையெல்லாம் நம்புறதே எண்ணுவினம். அவன் சும்மா முசுப்பாத்திக்கு சாென்னவன்.

குமரன் பத்மநாதனை யாரிடமிருந்து அரசாங்கம் பாதுகாக்க முயல்கிறது. இந்தியாவிடமிருந்தா?.

 கேபி யர் உலகம் முழுக்க அடிபட்டவர் தானே.அவரிடம் தான் நல்ல தொழில் வளம் உண்டு. உலகிலே மகிந்த பரிவாரங்களுக்கு பாதுகாப்பான இடம் தேடி கொடுப்பார் இப்படி பல நன்மைகளை மகிந்த அன் கோவுக்கு வழங்கக் கூடியவர்.மொத்ததில் பொன் முட்டையிடும் வாத்து 

KP500.jpg

 

இந்தநிலையில் சிங்கள திரைப்பட முன்னோடியான கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வரவேற்கும் படத்தில் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக கே பியின் படம் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது பாரிய பிரசுர உரிமைமீறல் சம்பவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

  • pol.jpg

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி. இலங்கையில் இருந்தால், பிரச்சாரத்துக்கு செல்லாமல்... இருப்பாரா?
அவர் சிங்களவனுக்கு, "காதில் பூ" வைத்து விட்டு,  எப்பவோ.... நாட்டை விட்டு போய்விட்டார். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

"யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம். அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்" 

KP120.jpg

 

கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், பாதுகாப்பான இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தேவைப்படுகின்ற நேரத்தில், சரியான வழியில் அவரை பயன்படுத்துவோம். குறிப்பாக ஜெனீவாவில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் கூறுவதற்கு அவர் தயாராக இருக்கின்றார் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நேற்று (04) அறிவித்தது.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகஸ்தராகவும் சர்வதேச செயற்பாட்டாளராகவும் செயற்பட்ட குமரன் பத்மநாதனை (கே.பி) சரியான நேரத்தில், சரியான வழியில் பயன்படுத்துவோம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

 

கொழும்பில் நடைபெற்ற கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு  தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கே.பி பற்றி போலியான விடயங்களை எதிர்க்கட்சியினர் கீழ்த்தரமாக பரப்பி வருகின்றனர். டாக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு, அரவணைத்து வாழ்த்துத் தெரிவித்த புகைப்படத்தினை தவறான முறையில் பயன்படுத்தி, கே.பி.யுடன் ஜனாதிபதி கட்டித்தழுவுவது போன்ற போலியான புகைப்படத்தினை எதிர்க்கட்சியினர் வெளியிட்டு குழப்பம் விளைவிக்கின்றனர். இது அவர்களின் இயலாமையை எடுத்துக் காட்டுகிறது.

 

குமரன் பத்மநாதன் பாதுகாப்பான இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தேவைப்படுகின்ற நேரத்தில், சரியான வழியில் அவரை பயன்படுத்துவோம். குறிப்பாக ஜெனீவாவில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் கூறுவதற்கு அவர் தயாராக இருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் சர்வதேசத்தில் சூழ்ச்சிகளுக்கும் போலிகளுக்கும் நிச்சயமாக கே.பி பதில் கூறுவார் எனவும் சுசில் பிரேம ஜயந்த மேலும் தெரிவித்தார். -

 

http://www.tamilmirror.lk/136988#sthash.hZglOZrH.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.