Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழலாம்: - சம்பந்தன் நம்பிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
sampanthan-300-seithy-news1.jpg

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி மூலம் தமிழ் மக்கள் தங்கள் சொந்த பிரதேசங்களில் நிம்மதியாக வாழும் சூழல் பிறக்கும் எனவும் அதேவேளை அவர்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கு ஓர் நிரந்தர தீர்வு கிடைக்கும் எனவும் நாம் பூரணமாக நம்புகிறோம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் தமது முழுமையான ஒத்துழைப்பை நல்க தயாராகவிருந்தது.

   

எனினும் அவர் எமது ஒத்துழைப்பை பெற்று எமது பிரச்சினைகளைத் தீர்க்கத் தயாராக இருக்கவில்லை. இதன் காரணமாகவே அதிருப்தி கொண்ட தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்துக்கான பரிபூரண ஆதரவை நடைபெற்ற தேர்தலில் புதிய ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கிறார்கள் என்றும் அவர் சொன்னார்.

புதிய ஜனாதிபதியின் பதவியேற்பும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் எவ்வாறு இருக்கிறது என்று இரா. சம்பந்தனிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்..

புதிய ஜனாதிபதியும் அரசாங்கமும் தமிழ் மக்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு உடனடியான அரசியல் தீர்வொன்றைக் காண முயல வேண்டும். அதற்காகவே நாம் காத்திருக்கிறோம். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் விசேடமாக வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்கள் மிகவும் பெரிய எதிர்பார்ப்புடன் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்துள்ளனர். குறிப்பாக அம்பாறையைத் தவிர்த்து யாழ், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ் மக்கள் பூரணமான ஆதரவை மைத்திரிக்கு வழங்கியிருக்கிறார்கள். எமது மக்கள் வடகிழக்கில் பல்வேறு பிரச்சினைகளை நீண்ட காலமாக அனுபவித்து வருகின்றார்கள்.

காணிப்பிரச்சினை, விவசாய நிலங்கள், ஆக்கிரமிப்பு, தொழில்வாய்ப்பின்மை என பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். புதிய ஆட்சியின் கீழ் இந்த நிலiமையில் ஒரு மாற்றம் ஏற்பட்டு மிகவும் விரைவில் எமது மக்கள் தமது சொந்த நிலங்களுக்கு செல்லும் நல்ல நிலையொன்றும் தீர்வும் ஏற்படுமென்று நம்புகின்றோம். அவர்கள் எதிர்நோக்கும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்போர் பிரச்சினை உட்பட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

காணாமல் போனவர் சம்பந்தமாக ஒரு முடிவு விரைவில் எடுக்கப்பட வேண்டும். சுதந்திரமான சிவில் நிர்வாகம் ஏற்பட வேண்டும். தேவையற்ற இராணுவ நெருக்கடிகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். இவையெல்லாவற்றையும் விட முன்னைய அரசு செயற்பட்ட விதம் எமது மக்களுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கவில்லை.

அரசியல் தீர்வு சம்பந்தமாக 2011 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் த.தே. கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்ட போதும் அரசாங்கம் நேர்மையாக செயற்படாத காரணத்தினால் அது நடைபெறாத விடயமாகி விட்டது. அரசியல் தீர்வு இனிமேலும் தாமதிக்கப்பட முடியாதவொன்று. இந்த விடயம் சம்பந்தமாக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அரசு உரிய கவனம் செலுத்தி குறித்த கருமங்கள் முன்னெடுக்கப்படுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.

தேர்தல் காலத்தில் இந்த விடயங்கள் பற்றி பகிரங்கமாகப் பேசினால் அதை துவேஷத்தின் அடிப்படையில் பெரும்பான்மை மக்களின் மத்தியில் சில குழப்பங்களை ஏற்படுத்தலாம் என்ற காரணத்தின் நிமித்தம் நாம் தமிழர்களுக்கான தீர்வு விடயம் சம்பந்தமாக பேசாமல் தவிர்த்து ஓரளவு மௌனமாக இருந்திருக்கிறோம். எமது முதல் குறிக்கோள் ஆகிய ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதே. தங்களுடைய உரிமைகளை தாங்கள் வாழுகின்ற பிரதேசங்களில் பிராந்தியங்களில் நிறைவேற்றக் கூடிய வகையில் போதிய சுயாட்சியைப் பெற்று சமத்துவமாக புரிந்துணர்வுடன் வாழ வேண்டுமென்பது எல்லோரின் விருப்பமாகும்.

இந்தக் கருத்துக்குப் பின்னால் சர்வதேச சமூகமும் ஏனைய சமூகங்களும் தமது ஆதரவை நல்க தயாராக இருக்கின்றது. இதேவேளை மன்னார் மறை மாவட்ட ஆயர் ராயப்பு யோசப் கருத்து தெரிவிக்கையில் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் காலங்களில் பல்வேறு விடயங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். பெரும்பான்மை சமூகத்துக்கு நன்மை பயக்கும் பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார். அது சிறுபான்மை மக்களுக்கும் பயனளிக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. தமிழ் மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சினையை தீர்த்து வைப்பேன் என்ற விடயங்களை அவர் தனது பதவியேற்பு உரையில் குறிப்பிடவில்லை.

இருந்த போதிலும் புரையோடிப் போய்க்கிடக்கின்ற பிரச்சினைக்கு தீர்வு காண்பார் என நாம் பூரணமாக நம்புகின்றோம். நாங்கள் அவருடன் உரையாடிய போது தமிழ் மக்களுடைய பிரச்சினை சம்பந்தமாக கேட்டறிவதில் ஆர்வம் காட்டினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய தமிழ் மக்கள் வடகிழக்கில் மைத்திரிக்கு அமோக ஆதரவு வழங்கியுள்ளனர்.

சிறுபான்மை மக்களின் பிரச்சினையென்ன என்பதை அவர் நன்றாக உணர்ந்திருக்கிறார். அதை தீர்க்க வேண்டிய மாபெரும் பொறுப்பு அவருக்குண்டு. ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க போன்ற நல்ல மனிதர் அவருடன் இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனையையும் ஆதரவையும் பெற்று நாட்டில் உண்மையான ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் நீதியையும் கொண்டு வருவார் என்று எல்லோரும் நம்புகின்றனர். அதற்குரிய காலம் கனிந்திருக்கிறது என்றார்.

http://seithy.com/breifNews.php?newsID=124453&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மகிந்த முதல்தரம் சனாதிபதியாய் வரேக்கையும் உதே வசனங்களைதான் கேட்டனாங்கள். :D
 
இந்த முறை  காயம் வெளியிலை தெரியாமல் அடி  இருக்கும்  எண்டுறாங்கள்???????  :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவை முதல்தரம் வரவச்சிட்டு, 2005 மாவீரர் தின உரையில் இப்படி ஒரு எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டது.

இந்தமுறை எப்படியோ?

  • கருத்துக்கள உறவுகள்

கோஷான் புலி 2005 இல் விட்ட தவறை இப்ப யாரிடம் கேட்க முடியும்? ஆனால் TNA விடும் தவறை கேட்கலாம் அல்லவா

கோஷான் புலி 2005 இல் விட்ட தவறை இப்ப யாரிடம் கேட்க முடியும்? ஆனால் TNA விடும் தவறை கேட்கலாம் அல்லவா

தவறை கேட்பதில் தப்பில்லை ,இணையங்களில் எழுதுவதெல்லாம் எப்படி அவர்களின் பார்வைக்கு போகும் ?

இப்பொழுது TNA இடம் கேட்கிற மாதிரி புலிகள் இருந்தபோது கேட்டிருக்கலாம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவறை கேட்பதில் தப்பில்லை ,இணையங்களில் எழுதுவதெல்லாம் எப்படி அவர்களின் பார்வைக்கு போகும் ?

இப்பொழுது TNA இடம் கேட்கிற மாதிரி புலிகள் இருந்தபோது கேட்டிருக்கலாம் .

 

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சியில் மக்கள் தலையில் பாரமில்லை...சுதந்திரமாக வாழ்ந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கரி புலிகளிடம் கேட்காததால் இப்போது TNA கேட்க வேண்டாம் என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
அரசியல் தீர்வு சம்பந்தமாக 2011 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் த.தே. கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்ட போதும் அரசாங்கம் நேர்மையாக செயற்படாத காரணத்தினால் அது நடைபெறாத விடயமாகி விட்டது.

 

 

ஜெனிவா பேச்சுவார்த்தயிலும் ரனிலும் பீரிசும் இதனை தான் செய்தார்கள்.  சந்திரிக்காவும் ஏதோ தீர்வுப்பொதி தருவதாக நிறைய கதைகள் விட்டவர்.ஞாபகசக்தி உள்ளவர்களுக்கு விளங்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவை முதல்தரம் வரவச்சிட்டு, 2005 மாவீரர் தின உரையில் இப்படி ஒரு எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டது.

இந்தமுறை எப்படியோ?

சில அதிகார போக்குடைவர்களின் நிகழ்ச்சி நிரலில் ஆடாமால் ஒரு சிறிய எதிர்பாராத திருப்பத்தை உண்டுபண்ணினால் 
நிகழ்ச்சி நிரலில் ஒரு மாற்றம் வரலாம் என்று புலிகள் எண்ணினார்கள். அப்போது இருந்த ஒரே ஒரு நகர்த்த கூடிய காய் அதுதான்.
இன்னொரு ருவண்டாவிட்கு ஐ நா கூட ஒத்துழைக்கும் என்பது எதிரபாராத விடயம்.
 
இப்போ நாமாகவே சென்று அவர்கள் வெட்டிய குழியில் குதிக்கிறோம்.
சம்மந்தருக்கு சுமந்திரனுக்கும் பணம் பதவி மிஞ்சும் தமிழருக்கு இனி இனபிரச்சனையே இருக்காது. 
ஒரு இனம் ஒரு நாடு ஒற்றுமையாக வாழலாம். 

கரி புலிகளிடம் கேட்காததால் இப்போது TNA கேட்க வேண்டாம் என்கிறீர்களா?

அப்படி சொல்லவில்லை .எங்களுக்கு முன்பு தவறு நடந்தால் அது யாராகிலும் தட்டி கேட்கவேண்டும் ,அதே நேரத்தில் அவர்களுடன் சேர்ந்து இயங்கினால் தான் எங்களுடைய சொல்லுக்கு மதிப்பு இருக்கும் .அது புலிகளாக இருக்கலாம் அல்லது TNA யாக இருக்கலாம் .தாயகத்தில் இருந்த போது மக்கள் நலனுக்காக புலிகளுடன் சேர்ந்து பயனித்தனான் ,தற்போது TNA யுடன் சேர்ந்து பயணிக்கின்றேன் .

வெளியில் நின்று கத்துவதால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.