Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு உற்பத்திகளுக்கு வெளிநாட்டில் சந்தைவாய்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடைப்புக்குறியினுள் போடலாம் Made in Sri Lanka (North & East)

 

போட்டாலும் யாழ்ப்பாண மிழகாய்துதுள் பூனகரி மொட்டடைக்கறுப்பன் அரிசி மட்டுவில் கத்தரி என்டு தானே வருகுது.அது கானுமே.மட்டக்களப்பு கசுக்கொட்டையும் அடங்கும்.

  • Replies 75
  • Views 10.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்டாலும் யாழ்ப்பாண மிழகாய்துதுள் பூனகரி மொட்டடைக்கறுப்பன் அரிசி மட்டுவில் கத்தரி என்டு தானே வருகுது.அது கானுமே.மட்டக்களப்பு கசுக்கொட்டையும் அடங்கும்.

உற்பத்தி பொருளின் பெயரை (trade name) பார்த்து வாங்கலாம். அதை உற்பத்தி செய்பவர் யாரென்பது சரியாக தெரிந்தால். Good luck.

  • கருத்துக்கள உறவுகள்

உற்பத்தி பொருளின் பெயரை (trade name) பார்த்து வாங்கலாம். அதை உற்பத்தி செய்பவர் யாரென்பது சரியாக தெரிந்தால். Good luck.

 

 

பொருட்களில் நாட்டுனுடைய  பெயர் ஒரு பிரச்சினையாக  இராது

காரணம் அதில் பொருள் உற்பத்தி செய்த இடத்தின் விலாசம் பொறிக்கப்பட்டிருக்கும்

அதில் வடக்கு அல்லது  கிழக்கு என இருந்தால் போதும்...

மக்கள் புரிந்து கொள்வார்கள்..

இதில் பொதுமக்கள் எனப்படுவோர் உற்பத்தியாளர்களே.இப்படி நடக்குமானால் பொருட்களின் விலைக்கு ஒரு நிர்னையம் கிடைக்கும்.அவர்களின் சந்தைப்படத்தலும் இலகுவாகும்.ஆனால் இவற்றை கொள் முதல் செய்து பொதி பண்ணி ஏற்றுமதிக்கு அனுப்புவதை யார் செய்வது என்பது தான் கேழ்வி.இதை மாகான சபை செய்யுமாயின் இன்னும் வசதி.தனி நபர் கொள்ளையை தடுக்கலாம்.

 

 

அரச நிறுவனங்கள் வியாபாரரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இலங்கை சட்டம் ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகம். அதற்கு பாராளுமன்றத்தின் அல்லது அமைச்சரவையின் அனுமதி தேவை. உதாரணமாக MD (Marketing department). இது அரசினது ஒரு துறை. இதில் வேலை செய்பவர்கள் அரசாங்க உத்தியோகத்தர். இவ்வாறான ஒரு அரச நிறுவனத்தை உருவாக்குவது இலகுவானதல்ல. மாகாணசபைக்கு இந்த அதிகாரம் இருந்தால் இலகுவானது. சபேசன்36 முயற்சி பண்ணலாமே.
 
கொழும்பில் கப்பல் வாழைப்பழம் 180 ரூபாவிற்குப் போன போது யாழில் 100 ரூபாவிற்கு விலைப்பட்டதை நேரடியாக பார்த்தவன். கேட்டபோது விவசாயிகள் தனித்தனிய சந்தைக்கு குலைகளை எடுத்து வருகிறார்கள். மொத்தமாக வாங்கி தென் இலங்கையில்  விற்பனை செய்ய ஏற்பாடுகள் இல்லை என்ற பதில் கிடைத்தது.
 
முன்பெல்லாம் வாழைக்குலை, மீன் லொறிகள் 100 அல்லது 200 யாழில் இருந்து தெற்கு நோக்கி தினமும் போவது வழமை. இந்த நிலைமையை மாற்ற பல நோக்கு கூட்டுறவு சங்கம் சரியான தேர்வாக இருக்கும் என்பது எனது கருத்து.

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூநகரியில் நெற்பயிர் செய்யாதகாலத்திலும் பூநகரி மொட்டை கறுப்பன் அரிசி புலம்பெயர் தேசங்களுக்கு வந்தது கேரளாவில் இருந்தும் அந்தராவில் இருந்தும் இங்கு சிறிலங்காவில் இருந்து வந்ததாக விற்கும் பல பொருட்கள் இந்தியாவில் இருந்துதான் வருகிறது என்பது பலருக்கு தெரியாது   


சிறிலங்கா உள் நாட்டு யுத்தத்தில் இலாபம் அடைந்தது இந்தியாவும்தான்.   :(

நீங்கள் வசிக்கும் நாட்டு இறக்குமதி சட்டங்களில் அது அனுமதிக்கப்படுகிறதா என்பதை தயவு செய்வு விசாரித்து சொல்லவும். சர்வதேச COO சட்டங்களில் அதற்கு அனுமதியில்லை என்று படித்திருக்கிறேன். நான் படித்தது 1991-ல் UBC-யில். இப்போது மாறியிருக்கலாம். பார்த்துச் சொல்லவும். இங்குள்ள தயாரிப்பாளர்களுக்கு குறிப்பிட்ட நாட்டில் அனுமதி உள்ளது என்று சொல்லலாம்.

 

"made in shanghai china" என பல பல பொருட்களில் பார்த்த நினைவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொருட்களில் நாட்டுனுடைய  பெயர் ஒரு பிரச்சினையாக  இராது

காரணம் அதில் பொருள் உற்பத்தி செய்த இடத்தின் விலாசம் பொறிக்கப்பட்டிருக்கும்

அதில் வடக்கு அல்லது  கிழக்கு என இருந்தால் போதும்...

மக்கள் புரிந்து கொள்வார்கள்..

”அதை உற்பத்தி செய்பவர் யாரென்பது சரியாக தெரிந்தால். Good luck." என்று நான் குறிப்பிட்டது அதைத்தான்.

 

யாரும் யாழ்ப்பாண முகவரியை பொருளில் அச்சிடலாம்.  அதை தடுக்க எந்த சட்டமும் இல்லை. யாழ்ப்பாணத்தில் ஒரு ரூம் எடுத்து அலுவலகம் வைத்திருந்தால் போதும்.

யாரும் யாழ்ப்பாண முகவரியை பொருளில் அச்சிடலாம்.  அதை தடுக்க எந்த சட்டமும் இல்லை. யாழ்ப்பாணத்தில் ஒரு ரூம் எடுத்து அலுவலகம் வைத்திருந்தால் போதும்.

 

பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒருங்கிணைக்கலாமே.

ஏற்றுமதி வாய்ப்பு கிடைத்தால் வடமாகாண மரக்கறி உற்பத்தியை அதிகரிக்க திட்டம் 

 

article_1422008227-rjbfkjenjewd%20(2).jp

 

வடமாகாணத்தில் சீரான ஏற்றுமதி வாய்ப்பு கிடைத்தால் மரக்கறி உற்பத்திகளை அதிகரிக்க முடியும் என வடமாகாண உதவி விவசாய பணிப்பாளர் திருமதி எஸ்.ஜெகநாதன் வெள்ளிக்கிழமை (23) தெரிவித்தார்.

 

வடமாகாணத்தில் மரக்கறி உற்பத்தி 2013ஆம் ஆண்டு அதிக வளர்ச்சி கண்டது. எனினும் 2014ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய அதிக வரட்சி காரணமாக சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.

 

இதனால் எமது விவசாயிகள் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதில் பெரும் சவாலை எதிர்கொள்கிறார்கள். வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யும் விவசாயிகள் சில வேளைகளில் ஏற்றுமதி செய்வதற்கான படிமுறைகளையும் அறிந்துகொள்வதில்லை. இதனால் அவர்கள் நஷ்டங்களையும் எதிர்கொள்கிறார்கள். கடந்த ஆண்டு வடமாகாணத்தில் 6 ஆயிரத்து 908 ஹெக்டேயர் நிலப்பரப்பில் மரக்கறி செய்கை மேற்கொள்ளப்பட்டு, 1 இலட்சத்து  9 ஆயிரத்து 653 மெற்றிக்தொன் விளைச்சலை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். -

 

http://www.tamilmirror.lk/138332#sthash.P4StewXG.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரியில் நெற்பயிர் செய்யாதகாலத்திலும் பூநகரி மொட்டை கறுப்பன் அரிசி புலம்பெயர் தேசங்களுக்கு வந்தது கேரளாவில் இருந்தும் அந்தராவில் இருந்தும் இங்கு சிறிலங்காவில் இருந்து வந்ததாக விற்கும் பல பொருட்கள் இந்தியாவில் இருந்துதான் வருகிறது என்பது பலருக்கு தெரியாது   

சிறிலங்கா உள் நாட்டு யுத்தத்தில் இலாபம் அடைந்தது இந்தியாவும்தான்.   :(

 

உண்மைதான்

நானும்  சிறிலங்கா பொருட்களுக்கு பதிலாக இந்தியப்பொருட்களை  வாங்கியதுண்டு

அவை தமிழகப்பொருட்கள் என்ற நம்பிக்கையில்...

ஆனால்............???

Edited by விசுகு

'யாழ். மாவட்டத்திலேயே வாழை செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றது' 

article_1422082851-tyu.jpg

 

வடமாகாணத்தில் யாழ். மாவட்டத்திலேயே வாழை செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண உதவி விவசாய பணிப்பாளர் திருமதி எஸ். ஜெகநாதன், சனிக்கிழமை (24) தெரிவித்தார்.

 

யாழ். மாவட்டத்தில் உரும்பிராய,; புத்தூர் ஆகிய இடங்களில் வாழை செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல் கிளிநொச்சி மாவட்டத்தில் திருவையாறு, முழங்காவில், புன்னைநீராவி, கிளிநொச்சி மேற்கு ஆகிய இடங்களிலும் மன்னார் மாவட்டத்தில் மடு, மாந்தை மேற்கு, நானாட்டான் ஆகிய இடங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு, இரணைப்பாலை, முத்தயன்கட்டு, பாண்டியன்குளம், துணுக்காய் ஆகிய இடங்களிலும் வவுனியா மாவட்டத்தில் பாம்பைமடு, கனகராயன்குளம், செட்டிக்குளம், பாவற்குளம், ஓமந்தை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

இங்கு கதலி, கப்பல், இதரை போன்ற வாழை இனங்கள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அவற்றில் கதலிவகை செய்கையே அதிகளவில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இவற்றுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை அதிகரித்தால் அதிகமான செய்கையை மேற்கொண்டு விவசாயிகள் பயன்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.tamilmirror.lk/138370#sthash.LgA51Dxf.dpuf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் எங்கட தமிழ் கடைகளில் கானாவில் இருந்தும் உகண்டாவில் இருந்தும் வாழைப்பழத்தை இறக்கி கப்பல் பழம் என்றெல்லோ விற்க்கினம். :blink:   

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரியில் நெற்பயிர் செய்யாதகாலத்திலும் பூநகரி மொட்டை கறுப்பன் அரிசி புலம்பெயர் தேசங்களுக்கு வந்தது கேரளாவில் இருந்தும் அந்தராவில் இருந்தும் இங்கு சிறிலங்காவில் இருந்து வந்ததாக விற்கும் பல பொருட்கள் இந்தியாவில் இருந்துதான் வருகிறது என்பது பலருக்கு தெரியாது   

சிறிலங்கா உள் நாட்டு யுத்தத்தில் இலாபம் அடைந்தது இந்தியாவும்தான்.   :(

 

உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

'யாழ். மாவட்டத்திலேயே வாழை செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றது' 

article_1422082851-tyu.jpg

 

இங்கு  ஒரு திருமணவீட்டுக்கு  பந்தலுக்கு இரு பக்கமும் கட்டுவதற்கு வாழைக்குலையுடன் கூடிய இரு வாழைகளை வாங்க சென்ற போது எமது மண்ணை யோசித்தேன். ஒரு வாழை குலையுடன் 250 ஈரோக்கள். அதாவது கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரூபாக்கள்) 

அதுவும் மிகச்சிறியது

குலையும் தான்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால் நடை வளர்ப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும்.அங்கு இருப்பவர்கள் உங்கள் கிராம சேவகர் மூலமோ அல்லது நேரிடையகவோ உங்களுக்கு ஒரு சங்கமோ உருவாக்கி நெஸ்லே லங்கா வுடன் தொடர்பு கொண்டால் அவர்கள் உங்களுக்கான வழி முறையைத்தருவார்கள். ஆரம்பத்தில் அதிக பாலைத்தரக்கூடிய மாடுகள் அதற்கான கொட்டகை,முதல் ஒரு வருடத்துக்கான பராமரிப்புச் செலவு போன்றவற்றை வெளி நாட்டுத்தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். உங்களிடம் பாலையும் நெஸ்லே நிறுவனம் கொள்வனவு செய்வார்கள்.இது ஒரு நிரந்தர வருமானம்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால் நடை வளர்ப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும்.அங்கு இருப்பவர்கள் உங்கள் கிராம சேவகர் மூலமோ அல்லது நேரிடையகவோ உங்களுக்கு ஒரு சங்கமோ உருவாக்கி நெஸ்லே லங்கா வுடன் தொடர்பு கொண்டால் அவர்கள் உங்களுக்கான வழி முறையைத்தருவார்கள். ஆரம்பத்தில் அதிக பாலைத்தரக்கூடிய மாடுகள் அதற்கான கொட்டகை,முதல் ஒரு வருடத்துக்கான பராமரிப்புச் செலவு போன்றவற்றை வெளி நாட்டுத்தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். உங்களிடம் பாலையும் நெஸ்லே நிறுவனம் கொள்வனவு செய்வார்கள்.இது ஒரு நிரந்தர வருமானம்.

 

உண்மை

இது பற்றி  கேள்விப்பட்டுள்ளேன்

எமது ஊரிலும்  சில குடும்பங்களுக்கு அதிக பாலைத்தரக்கூடிய 10 மாடுகள் இவ்வாறு கொடுத்துதவப்பட்டுள்ளன.

வடமாகாண உழவர் திருவிழா

 

article_1422095893-ERT.jpg

 

வடமாகாண உழவர் திருவிழா வவுனியா நகரசபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெறவுள்ளதாக வடமாகாணசபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சனிக்கிழமை (24) தெரிவித்தார்.   இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இத் திருவிழாவில் வட மாகாணத்தில் உள்ள பல்வேறுபட்ட சிறந்த வீட்டுத்தோட்ட செய்கையாளர்கள், சிறந்த சேதன விவசாயத்தில் ஈடுபட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

 

தெரிவுசெய்யப்பட்ட சிறந்த பசு பண்ணையாளர்கள், கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள், ஆடு வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் வவுனியா நிருத்திய நிவேதன கலாமன்ற மாணவர்களின் நடனநிகழ்சியும், 'நம் தேசக்காற்று' எனும் தலைப்பில் நாட்டார் இசையரங்கும் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா வளாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாணசபை  உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

 

http://www.tamilmirror.lk/138391#sthash.ZExFJSuq.dpuf

உண்மை

இது பற்றி  கேள்விப்பட்டுள்ளேன்

எமது ஊரிலும்  சில குடும்பங்களுக்கு அதிக பாலைத்தரக்கூடிய 10 மாடுகள் இவ்வாறு கொடுத்துதவப்பட்டுள்ளன.

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  பதிவுக்கும் நேரத்துக்கும்..

தாயக கிராமங்களுக்கு கொண்டு செல்லவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

பொருட்களில் நாட்டுனுடைய  பெயர் ஒரு பிரச்சினையாக  இராது

காரணம் அதில் பொருள் உற்பத்தி செய்த இடத்தின் விலாசம் பொறிக்கப்பட்டிருக்கும்

அதில் வடக்கு அல்லது  கிழக்கு என இருந்தால் போதும்...

மக்கள் புரிந்து கொள்வார்கள்..

 

1.JPG

 

40.jpg

 

 

ஒரு பொருளின் உற்பத்தியில், ஊர்ப்பெயர் காலனி ஆதிக்கம் இருந்த காலத்திலும் இருந்துள்ளது. 

உருளைக்கிழங்கு விளைச்சல் அதிகரிக்கும்: அ.செல்வராசா

article_1422262193-SAM1371.JPG

 

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள உருளைக்கிழங்கு செய்கையில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்குமென நம்புவதாக கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா திங்கட்கிழமை (26) தெரிவித்தார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

 

கடந்த 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த உருளைக்கிழங்கு செய்கையில் 1:8 என்ற வீதத்தில் விளைச்சல் கிடைத்தது. இதனை அடிப்படையாக வைத்து, ஒரு விவசாயிக்கு தலா இரண்டு பரப்புக்களுக்கான விதை உருளைக்கிழங்கு வீதம் முழங்காவில் மற்றும் திருவையாறு பகுதிகளை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 112 விவசாயிகளுக்கு விதை உருளைக்கிழங்குகள் மத்திய விவசாய திணைக்களத்தின் நிதியுதவியில் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு வரட்சியான காலநிலை நிலவிய போதும் உருளைக்கிழங்கு செய்கை வெற்றியளித்தது. இம்முறை போதியளவு நீர் இருப்பதால் செய்கை முழுவதுமாக வெற்றியளிக்கும் என்பதில் முழு நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார்.

article_1422262203-SAM1372.JPG

 

 

 

http://www.tamilmirror.lk/138498#sthash.QDROOkGE.dpuf

வடக்கு மக்களுக்கு பாரிய நன்மைகளை தரக்கூடியது பாரம்பரிய வாழ்க்கையா, தொழில்துறைசார் முறையா? -

 

 http://thinakkural.lk/article.php?article/dat8xczorf7351a18ad9f9bc15280zdzxhd4e260979d102a260fc262gfxaj#sthash.b3LqZNKN.dpuf

 

 

வட மாகாண  திருநாள் போட்டியில் சிறந்த கோழி வளர்ப்பாளருக்கான விருதை பெற்ற பெண்

 

http://www.yarl.com/...ள்/?p=1079869//

  • கருத்துக்கள உறவுகள்

ஆரவாரமில்லாமல் உள்ளூர் மக்களுக்கு உதவுவதில் நெஸ்லே ஒரு முன்மாதிரியான நிறுவனம். நான் அறிந்தவரை பால் உற்பத்தி என்பது சிறிலங்காவில் பல்வேறு காரணங்களால் இலாபமீட்டக் கூடிய ஒரு தொழில் அல்ல. ஆனால் நெஸ்லே போன்ற நிறுவனங்கள் ஓரளவு வளர்ப்பாளர்களுக்கு இலாபமும் தொழிலும் தரும் வகையில் உதவுகிறார்கள். இன்னுமொரு சிறப்பு, அந்தந்தப் பிரதேச ஆட்களையே வேலைக்குச் சேர்க்கிறார்கள், தமிழ் ஏரியாவில் தமிழர் இருப்பார், சிங்கள ஏரியாவில் சிங்களவர் இருப்பார், முஸ்லிம் பகுதியில் முஸ்லிம் பொறுப்பாக இருப்பார். இலங்கை கற்றுக் கொள்ளத் தவறிய அடிப்படைப் பாடத்தை கற்றுக் கொண்டு இலாபமீட்டி வளர்கிறது நெஸ்லே!

மன்னாரில் பெரிய வெங்காயப் பயிர் வயல் விழா
 
onion.jpg
 
 
மன்னாரில் 16 ஏக்கரில் பெரிய வெங்காயப் பயிர்ச்செய்கை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. விவசாயத் திணைக்களத்தின் தொழில்நுட்ப ஆலோசனையுடனும் யுஎஸ் எய்ட் நிறுவனத்தின் அனுசரணையுடனும் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் 401 விவசாயிகள் வெங்காயச் செய்கையில் ஈடுபட்டனர்.
 
இவர்களுக்கான உதவிகளை யுஎஸ் எய்ட் நிறுவனம் வழங்கியது. மன்னார் மாவட்ட மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண விவசாயப் பணிப்பாளர் வி.சிவகுமார் பிரதம விருந்தினராகவும் யுஎஸ் எய்ட் நிறுவனத்தின் பயிற்சிப் பிரிவின் தலைவர் இராமநாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
 
 
 

 

யாழில் கே.சி.ஐ தக்காளி வகை பயிரிடப்பட்டுள்ளது

 

article_1422698763-kci.jpg

 

யாழ்ப்பாணம் திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் கே.சி.ஐ தக்காளி வகை பயிரிடப்பட்டுள்ளதாக விவசாய ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி க.கருணைநாதன், சனிக்கிழமை(31) தெரிவித்தார்.

 

வெப்பகாலத்திலும் பயிரிடக்கூடிய விதை குறைந்த தசைப்பிடிப்பான புளிப்புத்தன்மை குறைந்த அழுத்தமான மேற்பரப்பைக் கொண்ட இவ்வகை தக்காளிகளின் விதைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. எனவே இவற்றுக்கான விதைகளைப் பெற்றுக் கொள்ளவும் இம் மண்ணுக்கு பொருத்தமானதா? என்பதை அறிந்து விவசாயிகளுக்கு விதைகளை வழங்கும் நோக்கிலேயே இவ் வகை தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. இவ்வகை தக்காளி 3 கிழமைகள் வாடாத தன்மை உடையதும் 80 கிராம் நிறை கொண்டதாகும். இவற்றுக்கான நாற்றுக்கள் தற்போது நாட்டப்பட்டுள்ளதாகவும் இவற்றின் அறுவடைக்காலம் 45 நாட்கள்  எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 http://www.tamilmirror.lk/138846#sthash.okMzr7fD.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.