Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்துடன் தொடர்பு வைத்திருந்த இளம் பெண் சுட்டுக்கொலை:

Featured Replies

இராணுவத்துடன் தொடர்பு வைத்திருந்த இளம் பெண் சுட்டுக்கொலை: எல்லாளன் படை

[வியாழக்கிழமை, 2 நவம்பர் 2006, 19:45 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

சிறிலங்கா இராணுவத்துடன் பாலியல் தொடர்பு மற்றும் உளவுப்பணியில் ஈடுபட்டிருந்த இளம் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அவரது தேசத்துரோகச் செயலுக்காக சுட்டுக்கொன்றுள்ளதாக எல்லாளன் படை தெரிவித்துள்ளது.

பருத்தித்துறையில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு அப்பெண் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சுட்டுக் கொல்லப்பட்டவர் நாராயணமூர்த்தி யசோதினி (வயது 25) என்பவர் ஆவார்.

http://www.eelampage.com/?cn=29580

  • Replies 189
  • Views 18k
  • Created
  • Last Reply

இதை எழுதுவதற்காக என்னை எத்தனை பேர் கடித்துக் குதறப் போகிறீர்களோ தெரியவில்லை.

எதிரி நாட்டிற்கு உளவு பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம். இதில் எனக்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.

ஆனால் ஒரு பெண்ணை பாலியல் தொடர்பு வைத்திருந்ததற்காக தண்டிக்க முடியுமா?

ஒரு பெண் யாருடன் பாலியல் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்பதை, ஒரு நாடோ, இனமோ, சமூகமோ தீர்மானிக்க முடியுமா?

பண்பாட்டு மீறல்கள் தண்டனைக்குரிய குற்றமா?

இது பற்றி விசேடமாக நாரதர், நல்லவன், குறுக்காலபோவான், நெடுக்காலபோவான் போன்றவர்களிடம் இருந்து கருத்தை எதிர்பார்க்கிறேன்.

ஜெயதேவன், வன்னிமைந்தன் போன்றவர்களிடம் இருந்து எவ்வகையான கருத்துக்கள் வரும் என்று எனக்கு தெரியும்.

பண்பாட்டு மீறல்கள் தண்டனைக்குரிய குற்றமா?

பண்பாட்டு மீறல் என்பது தண்டனைக்குரிய குற்றமெனத் தான் நான் கருதுகின்றேன், இருந்தாலும் மரணதண்டனைக்குரிய குற்றம் என நான் சொல்லப் போவதில்லை. தண்டனைக்குரிய குற்றம் என நான் ஏன் கருதுகின்றேனெனின் பண்பாட்டு மீறல் என நாம் கூறும்போது பண்பாட்டுச் சீரழிவு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகக் காணப்படும். இச்சீரழிவு ஏற்படுமிடத்து அவரைச் சுற்றியுள்ள சமூகம் மிகவும் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் உண்டு. சமூகம் என்றால் நான், நீங்கள் ஆகியோர் தானே. எனவே இன்று நான் பாதிக்கப்பட்டு, நாளை நீங்கள் பாதிக்கப்பட்டு மறுநாள் அவர்கள் பாதிக்கபட்டுக் கொண்டிருந்தால் ஒரு சமுதாயமோ அன்றி ஒரு இனமோ அழிந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனவே பண்பாட்டு மீறலை அனுமதிப்பது என்பது ஒரு இனத்தையோ அல்லது ஒரு நாட்டையோ அழிப்பதற்குச் சமம் என நான் எண்ணுகின்றேன். மேலைத் தேசங்களின் சில பண்பாட்டுச் சீரழிவினால் இன்றும் எத்தனையோ உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்ற செய்துகளையும் கேட்டுக் கொண்டு தானே இருக்கின்றோம்.

எனவே பண்பாடு மாறாது பண் பாடுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் சபேசன் உங்கள் கேள்வியின் கனத்தைக்கூட்டுவதற்க்கு இப்படி கேட்க்கப்பட்டிருக்கலாமே? இராணுவத்தினர் கொடுத்த தேனீரைக் க்குடித்தது உயிர் பறிக்கப்பட வேண்டிய குற்றமா?

இங்கே தேசத்துரோகம் ஒன்றின் வியாபாரம் நடக்கின்றதே அதைப்பற்றியே சிந்தனையை செலவு செய்யுங்கள்

தவிர புலக்காதலுக்கு பண்பட்டுப் போன உள்ளங்களுக்கு யார்தான் என்ன சொல்லமுடியும் தமிழ்காதலா, இல்லை வெளிச்சம் பட்ட காதலா வேண்டும் என்பது அவர்கள் விருப்பம் ஆனால் என்னுடைய தாழ்மையான விண்ணப்பம் ஒன்று

உங்கள் குற்றங்களுக்கு இருக்கின்ற அநுபவிப்புரிமையை உங்கள் மனைவியர்க்கும் கொடுத்துவிட்டால் குறைந்தபட்சம் நீங்கள் மனிதஉரிமைக்காவது துரோகிகளாக மாட்டீர்கள்என்பதுதான்.

ஒரு சாதாரண ஒருவருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததற்காக அல்ல ஆக்கிரமத்திருக்கும் எதிரியோடு பாலியல் தொடர்பு வைத்திருந்ததைத்தான் குற்றமாக பார்க்கப்பட வேண்டியது.

இதை கொள்கை அளவில் விவாதித்து பயன் இல்லை பாலியல் தொடர்பை விரும்பியவருடன் வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை என்று. ஆக்கிரமித்துள்ள எதிரியோடு அத்தகைய உறவிற்கு ஒருவர் தயார் என்பதன் மூலம் அவரைப்பற்றி சில முடிவுகளிற்கு வரகூடியதாக இருக்கும். ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராட வேண்டிய சமூகத்திற்கு தவறான முன்மாதிரி. அது போக எதிரியை பொறுத்தவரை அவர்கள் ஆக்கிரமித்து இருக்கிற சமூகத்தின் பலவீனங்கள் இவர்கள், அதாவது எதிரியின் பலங்கள் பிரச்சார உளவு வேலைகளிற்கு.

இதை பண்பாடு கலாச்சார மீறலுக்கான தண்டனையாக பார்க்கக் கூடாது.

பண்பாடு கலாச்சாரங்கள் இயற்கையாக எல்ல இனங்களிற்கும் கால ஓட்டத்தில் மாறிக்கொண்டுதான் இருக்கும். அதற்கு தண்டனை வழங்க முடியாது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்களின் எதிரிகளின் திட்டமிட்ட கலாச்சார சீரழிவுகளிற்கு செயல்வடிவம் கொடுப்பவர்கள் துரோகிகளாகத்தான் பார்க்கப்பட வேண்டும். அதுவும் எச்சரிக்கைகளிற்கு செவிமடுக்காது தொடர்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

சரி, ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக் கொள்வோம்.

ஒரு பெண் ஒரு சிறிலங்கா படையினனுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்கிறாள். ஆனால் அவள் எந்தவிதமான உளவு வேலைகளிலும் ஈடுபடவில்லை.

இந்த நிலையில் அவள் தண்டிக்கப்பட வேண்டியவளா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி ஒரு விதண்டாவாதமான ஒரு திருப்பம் இந்த களத்துக்கு அவசியமானாதுதானா சபேசன்?

  • கருத்துக்கள உறவுகள்

சரி சபேசன் இதே பெண் எமது குடும்பத்தில் ஒருவராக இருந்தால் என்ன செய்வோம்.அவள் கொண்டுவரும் சன்மானத்தை வாங்கி உண்டு களித்து சந்தோசமாக இருப்போமா?

சரி, ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக் கொள்வோம்.

ஒரு பெண் ஒரு சிறிலங்கா படையினனுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்கிறாள். ஆனால் அவள் எந்தவிதமான உளவு வேலைகளிலும் ஈடுபடவில்லை.

இந்த நிலையில் அவள் தண்டிக்கப்பட வேண்டியவளா?

இந்த நாடுகளைப்பொறுத்தவரைக்கும் இது சாதாரணமாக இருக்கலாம். எமது நாட்டு கலச்சாரம் வேறு. இருப்பினும் அதற்கு தண்டனை மரணம் ஆகாது. இது உளவுவேலைகளுக்கு கொடுத்ததாகத்தான் இருக்கும், அதுவும் பல எச்சரிக்கைகளுக்குபின்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி, ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக் கொள்வோம்.

ஒரு பெண் ஒரு சிறிலங்கா படையினனுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்கிறாள். ஆனால் அவள் எந்தவிதமான உளவு வேலைகளிலும் ஈடுபடவில்லை.

இந்த நிலையில் அவள் தண்டிக்கப்பட வேண்டியவளா?

உங்கள் தாலிக் கதையின் நாயகி போல இவளும் எதிரி வீரனின் வீரத்தில் மயங்கி மனசைப் பறிகொடுத்து உடல் உணர்வுக்கு சுயநலத்துக்கு இரை தேடிக் கொண்டாள் என்று கேட்பது புரிகிறது.

தனி மனித ஒழுக்கம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டுக் கோலம். இவை இரண்டையும் மனிதன் உடல் உணர்வுகளுக்கு அப்பால் பாதுகாக்க வேண்டும் என்பதில் எமக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு. இவற்றை வலியுறுத்த வலுவான உளவியல் சமூகவியல் காரணங்கள் உண்டு. மனிதனுக்கு மனித உரிமைகள் வழங்கப்படலாம் விலங்குரிமைகள் வழங்கப்பட முடியாது. அப்படி வழங்க வேண்டும் என்றால் சட்டங்கள் தொடங்கி மனிதனைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் அனைத்தையும் தளர்த்து கற்கால மனிதன் போல விலங்குகளுக்கு ஈடாக வாழ அனுமதிக்க வேண்டும். அப்படி மனித வாழ நேரின் இத்தப் பூமியில் குறைந்தது ஒரு 50 ஆண்டுகளுக்குள் மொத்த மனித சனத்தொகையும் பூண்டோடு காவு கொள்ளப்படும். அந்தளவுக்கு தீவிரமான உள உடல் நோய்த்தாக்கங்களுக்கு வாய்ப்பிருக்கிறது.

எதிரியுடன் எந்த வகையான தொடர்பு வைத்திருத்தலும் தேச விரோதக் குற்றம். பாலியல் தொடர்புகள் வைத்திருப்பதன் மூலம் அவள் எதிரியின் இருப்புக்கு சொந்த தேசத்தில் இடமளிக்கிறாள். இது எதிரிக்கு சேவை வழங்கல் போன்றது. அந்த வகையில் தேச விரோதியாகவும் இவள் பார்க்கப்பட வேண்டியவள் ஆகிறாள்.

தேசத்துக்கு எதிராக உளவு பார்த்திருப்பதும் தேச விரோதக் குற்றம். தேசத்தின் நலனில் அக்கறையற்ற சுயநலத்தின் வெளிப்பாடு. சொந்த தேசத்தை மக்களை சுயநலத்துக்காக காட்டிக் கொடுத்திருப்பது மற்றவர்களின் மனித உரிமை மீறல். காட்டிக் கொடுப்பதும் பாலியல் தொடர்பு வைப்பதும் அவளின் மனித உரிமை என்று நோக்கினால் அவளால் பாதுக்கப்படப் போறவர்களின் மனித உரிமைகளை அவளும் மீறுகிறாள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி நோக்குகையில் பலரின் மனித உரிமைகளை மீறும் தனி ஒரு மனிதனின் மனித உரிமைகளை மீறுதல் சமூகத்தின் மனித இனத்தின் பாதுகாப்புக்கு அவசியம் என்றால் அது மீறப்படுதலில் குறை காண முடியாது.

மனித உரிமை என்று இன்னொரு மனிதனிற்கு அல்லது சமூகத்துக்கு தீமை பயக்கக் கூடிய விடயங்களை ஒரு தனி மனிதன் செய்தால் அது அவனுக்கு அல்லது அவளுக்குள்ள மனித உரிமைகளுக்கு அப்பால் தண்டனைக்குரிய குற்றமாகிறது. அந்த வகையில் இவள் தண்டனைக்குரிய குற்றவாளி.

ஆனால் மரண தண்டனை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒருவரின் குற்றத்துக்காக அவருக்கு வாழ இருக்கும் உரிமையைப் பறிக்க முடியாது. அவளைத் தனிமைப்படுத்தக் கூடிய அல்லது தண்டனைகளை அனுபவிக்க வைக்கக் கூடிய சூழல் இல்லாததால் மரண தண்டனை சூழ்நிலை கருதி வழங்கப்பட்டிருப்பினும் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஆயுள் தண்டனையோ அல்லது நீண்ட சிறைத் தண்டனையும் திருந்துவதற்கான சந்தர்ப்பம் அளித்தலுமே நேர்மையான தண்டனையாக இருக்க முடியும். எனினும் சூழ்நிலை கருதி மரண தண்டனை அளிக்கப்பட்டிருக்கலாம்.சமூக

மேலே சொல்லப்பட்டது போலவே இவ்வருட ஆரம்பத்திலும் 4 பிள்ளைகளின் தாயொருவர் யாழ்ப்பாணத்தில் போட்டுத் தள்ளப்பட்டார். பின் இவ்விடயம் விவாதமாகி இராணுவத்துடன் பாலியல் தொடர்பென்றவர்களே கசிப்புக் காய்ச்சியதாலேயே போட்டுத் தள்ளப்பட்டாரென்று கதையை முன்னுக்குப் பின் முரனாக்கினார்கள். சாவுக்கும் சாட்டு வேண்டும் தானே.
  • கருத்துக்கள உறவுகள்

தளர்த்து - தளர்த்தி

பாதுக்கப்படப் - பாதிக்கப்படப் என்று

சில முக்கிய எழுதுத் தவறுகள் திருத்தப்பட்டு வாசிக்கப்பட வேண்டும்.

மேலே சொல்லப்பட்டது போலவே இவ்வருட ஆரம்பத்திலும் 4 பிள்ளைகளின் தாயொருவர் யாழ்ப்பாணத்தில் போட்டுத் தள்ளப்பட்டார். பின் இவ்விடயம் விவாதமாகி இராணுவத்துடன் பாலியல் தொடர்பென்றவர்களே கசிப்புக் காய்ச்சியதாலேயே போட்டுத் தள்ளப்பட்டாரென்று கதையை முன்னுக்குப் பின் முரனாக்கினார்கள். சாவுக்கும் சாட்டு வேண்டும் தானே.

ஒரு ஈ, காக்கையை கொல்வதென்றாலும் சரியான காரணத்துடந்தான் கொல்லப்படவேண்டும், அவைக்கும் முன் எச்சரிக்கைகள் விடப்படவேண்டும். 8)

நாம் ஏனோ இது போன்ற விடயங்களை விவாதிப்பதற்கு தயங்குகின்றோம். அப்படி விவாதித்தாலும் வெளிப்படையாக விவாதிக்க முடிவதில்லை.

யாழ் குடாவில் ஆண்களை விட பெண்கள் பல மடங்கு அதிகம்.

1996-97 காலப்பகுதியில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி 7 பெண்களுக்கு 1 ஆண் என்ற வீதத்திலேயே யாழ்குடாவின் நிலை இருந்தது. இன்றைக்கு இது பெரிய மாற்றம் எதையும் கண்டுவிடவில்லை.

இத்துடன் இராணுவ ஆக்கிரமிப்பு, வறுமை என்று பல கொடுமைகள் யாழ் குடாவை பிடித்து ஆட்டுகின்றன.

இந்த நிலையில் இது போன்ற பண்பாட்டு மீறல்களை தனிமனிதப் பிரச்சனையாகப் பார்ப்பதா அல்லது சமூகப் பிரச்சனையாகப் பார்ப்பதா?

இதை தீண்டத்தகாத பிரச்சனையாக ஒதுக்கிவிடாமல் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

எங்கள் மக்களை நாங்களே அழித்துக் கொண்டு அதற்கு ஏதாவது நொண்டிச் சாட்டுச் சொல்லி நியாயம் கற்பிக்கின்றோம். இதே போல்த்தானே சிங்கள அரசாங்கமும் தமிழனை எதிரி என்பதாலேயே அழிக்கின்றது என்று மௌனம் காப்போமா???

இங்கே பதில்கள் என்பது நியாயம் சார்ந்தல்ல சந்தர்ப்பம் சார்ந்தே பலர் மனம் போனபடி எழுதிக் கலாய்க்கின்றார்கள்

எங்கள் மக்களை நாங்களே அழித்துக் கொண்டு அதற்கு ஏதாவது நொண்டிச் சாட்டுச் சொல்லி நியாயம் கற்பிக்கின்றோம். இதே போல்த்தானே சிங்கள அரசாங்கமும் தமிழனை எதிரி என்பதாலேயே அழிக்கின்றது என்று மௌனம் காப்போமா???

.

எதிரிகளைவிட துரோகிகள் ஆபத்தானவர்கள்.

அதற்கு நல்ல உதாரணம் முகமாலையில் எதிரியுடன் நேருக்கு நேர் போரிட்டு இறந்த போராளிகளைவிட, மணலாற்றில் துரோகியால் காட்டிக்கொடுக்கப்பட்டு இறந்த போராளிகள் அதிகம்,

ஒரு கறையான் என்றுபாவம்பாத்து விட்டு விட்டால் முழு வேலியையும் நாசம் பண்ணிவிடும். :idea:

மேலே உள்ள செய்தியை எழுதிய ஊடகம் குறிப்பிட்ட பெண் சிங்கள இராணுவத்தின் உளவாளியாக செயற்பட்டார் என்றோ, அல்லது போராளிகளைக் காட்டிக் கொடுத்தார் என்றோ குறிப்பிட்டிருக்குமாக இருந்தால், இக் கேள்விகளை நான் இங்கு கேட்கப் போவதில்லை.

ஆனால் இவைகளை குறிப்பிடுகிறார்களோ இல்லையோ, சிறிலங்கா இராணுவத்துடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததை கட்டாயமாக குறிப்பிடுகிறார்கள். இது ஏன்?

இராணுவத்துடன் பாலியல் தொடர்பு வைத்திருக்கும் பெண் கொல்லப்பட வேண்டியவள் என்ற மனநிலையில் எமது சமூகம் இருக்கிறதா?

எதிரிகளைவிட துரோகிகள் ஆபத்தானவர்கள்.

அதற்கு நல்ல உதாரணம் முகமாலையில் எதிரியுடன் நேருக்கு நேர் போரிட்டு இறந்த போராளிகளைவிட, மணலாற்றில் துரோகியால் காட்டிக்கொடுக்கப்பட்டு இறந்த போராளிகள் அதிகம்,

ஒரு கறையான் என்றுபாவம்பாத்து விட்டு விட்டால் முழு வேலியையும் நாசம் பண்ணிவிடும். :idea:

இங்கை சொல்லப்படுகின்ற விடயம் அது இல்லை.... இப்படி பலருடன் தொடர்புடையவர்.... ஆக்கிரமித்து அண்றாடம் மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதும் கொலைசெய்வதுமாக இருக்கும் எதிரியுடன் குலாவியவருக்கு தமிழர் என்பதனால் மன்னிப்பு வளங்கவேணும்... அவர் தொடர்ந்தும் துன்பத்தை தரும் எதிரியுடன் குலாவிமகிழ இடம்தரப்படவேன்டும் என்பது தான் இப்போதைய வேண்டுகோள்...

இதையே மேற்கோள்காட்டி மக்களை கொண்று குவித்து துன்புறுத்தும் EPDP, கருணாகுழுவும் இராணுத்துடனான தேனிலவுக்காலம் முடிந்தபின் பொதுமன்னிப்பு கேக்க வசதியாக இருக்கும் என்பதால்தான் இந்த அக்கறை....!

எதிரிகளைவிட துரோகிகள் ஆபத்தானவர்கள்.

அதற்கு நல்ல உதாரணம் முகமாலையில் எதிரியுடன் நேருக்கு நேர் போரிட்டு இறந்த போராளிகளைவிட, மணலாற்றில் துரோகியால் காட்டிக்கொடுக்கப்பட்டு இறந்த போராளிகள் அதிகம்,

ஒரு கறையான் என்றுபாவம்பாத்து விட்டு விட்டால் முழு வேலியையும் நாசம் பண்ணிவிடும். :idea:

சிங்கள அரசாங்கத்திடம் ஊதியம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கெதிராகச் செயல்பட்டால் அதுவும் துரோகம் தானே. அப்போ அவர்கள் போட்டுத் தள்ளுவதும் நியாயம் என்கின்றீர்களா???

மேலே உள்ள செய்தியை எழுதிய ஊடகம் குறிப்பிட்ட பெண் சிங்கள இராணுவத்தின் உளவாளியாக செயற்பட்டார் என்றோ, அல்லது போராளிகளைக் காட்டிக் கொடுத்தார் என்றோ குறிப்பிட்டிருக்குமாக இருந்தால், இக் கேள்விகளை நான் இங்கு கேட்கப் போவதில்லை.

ஆனால் இவைகளை குறிப்பிடுகிறார்களோ இல்லையோ, சிறிலங்கா இராணுவத்துடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததை கட்டாயமாக குறிப்பிடுகிறார்கள். இது ஏன்?

இராணுவத்துடன் பாலியல் தொடர்பு வைத்திருக்கும் பெண் கொல்லப்பட வேண்டியவள் என்ற மனநிலையில் எமது சமூகம் இருக்கிறதா?

குருடான உங்களுக்கு விழிகளைப் பற்றிச் சொல்ல என்ன அருகதை

இனவிடுதலையும் பகுத்தறிவும் எம் இரு கண்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகில் இன்றும் வாழும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுடன் கலந்துரையாடிப் பாருங்கள். அவர்களின் கூற்றுப்படி இரண்டாம் உலக யுத்தத்தில் ஏற்பட்ட ஆண்களின் அழிவுதான் பப் கிளப் கலாசாரம் மேற்குலகில் தோன்றக் காரணம். அதற்கு முன்னரெல்லாம் பெண்கள் பப் கிளப் என்று போவது மிக அரிது என்றும் போரின் பின்னரே பெண்கள் தங்கள் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கோடு பப் கிளப் என்று போகத் தொடங்கினர். காரணம் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த ஒரு காரணத்தால் துணை கிடைக்காத பெண்களுக்கு துணைகளை வழங்கும் இடமாக பப் கிளப் மூலைக்கு மூலை தோற்றுவிக்கப்பட்டன.

இன்றும் அதுவே தொடர்கிறது. இத்தக் கலாசாரம் தொடங்கப்பட்டதன் பின் மேற்குலகம் சந்திக்கும் சமூகச் சீரழிவுகள் என்பது எண்ணிலடங்காது. பல பெண்களும் ஆண்களும் மன அழுத்தங்களுக்கு மத்தியில் இந்தக் கலாசார நடைமுறைகளுக்குள் வாழ்ந்து வருகின்றார்கள். தான் தனக்கென்று ஒருவன் அல்லது ஒருத்தி தன் குடும்பம் என்று ஒரு கட்டமைப்புள்ள வாழ்க்கைகுள் வாழ்வதன் மூலமே மனித தன் முயற்சிகள் மூலமான வலுவான பங்களிப்பை தனக்கு சமூகத்திற்கு வழங்கக் கூடியதாக இருக்கும்.

பாடசாலை சென்று படிப்பதற்கும் வீட்டில் வைத்துப் படிப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடென்பது பாடசாலையில் கல்விக்கு என்று அதீத கவனத்தை சிரத்தையை முயற்சியை வழங்கக் கூடியதாக இருத்தலே. வீட்டில் அப்படியல்ல. அங்கு பல தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டி இருக்கும். கவனம் பல திக்குகளுக்கு திசை திரும்பும். அது போலத்தான் தான் தனக்கென்று ஒரு வலுவான துணை குடும்பம் என்று மனிதன் தனது உழைப்பையும் முயற்சியும் அளிக்கும் போது அவனுக்கு திருப்தியோடு மகிழ்சியும் விளைகிறது. அதனால் தான் குடும்பம் என்ற அலகு மனித இன நாகரிக வளர்ச்சியில் முக்கியம் வகிக்கிறது.

பெண்களோ அல்லது ஆண்களோ சரி இந்தக் குடும்பக் கட்டமையை சீர்குலைகக் கூடிய வகைக்கு தங்கள் உடல் உணர்வுகளுக்கு முக்கியம் அளிக்க முனையின் அது குடும்பப் பிரச்சனைக்கு அப்பால் குடும்பத்தை அலகாகக் கொண்ட சமூகத்திற்கும் பிரச்சனை ஆகிறது. அதையே மேற்குலகில் தினமும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

மேற்குலகம் வசதி வாய்ப்புக்கள் உள்ளதால் இப்படியான சமூகப்பிரச்சனைகளை அரசைக் கொண்டு ஓரளவுக்கேனும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. தாயகத்தில் அப்படியான ஒரு நிலையில்லை. அங்கு சமூகச் சீரழிவு வரின் அது மொத்த சமூகத்தையும் காப்பாற்ற முடியாத அளவுக்கு சிதைக்கும். அச் சிதைவை மீளமைத்து எழுவதற்கிடையில் எதிரி எங்களை நிரந்தர அடிமையாக்கி விடுவான்.

கிட்லர் இரண்டாம் உலகப் போரின் பின்னர் தான் கைப்பற்றிய நாடுகளில் உள்ள மக்களுக்கு பூரண சுதந்திரம் அளித்தான். சுதந்திரம் என்பதால் அவன் வழங்கியது அந்தந்த நாடுகளின் மக்களின் மனதில் உள்ள போர் புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் மாற்றத்தையே. அவன் சமூகத்தின் பலங்கள் பற்றிக் கவலைப்படாமல் மனிதனை கட்டுப்பாடுகளற்று வாழ அனுமதிக்க விட்டு அவனின் சிந்தனைகளை உடல் உணர்வுக்கு கட்டுப்படும் வகையில் ஆக்கி அடிமையாக்கிக் கொண்டாம். தற்காலத்தில் மதுவுக்கு போதைவஸ்துவுக்கு அடிமையாவது போல.

எனவே தான் ஒரு ஆணுக்கு 7 பெண் என்றிருக்கட்டும் அல்லது மாறியாவது ஒருக்கட்டும் போர்ச் சூழல் ஒன்று நிலவும் தறுவாயில் பெண்களின் அல்லது ஆண்களின் உடல் உணர்வுகளுக்கு தீர்வு தேடிக் கொடுத்துக் கொண்டிருப்பதிலும் போரின் அவர்களின் பங்களிப்பு என்ன என்பதைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டுவதே அவசியம். இன்று மேற்குலகில் எத்தனை இளையவர்களுக்கு போரில் ஈடுபடும் ஆர்வம் இருக்கிறது. வெகுசிலருக்கே. அங்கு கூட பப் கிளப் இல்லையென்றால் அவர்கள் சோர்ந்துவிடுவார்கள்.

இந்த நிலை எமது சமூகத்துக்கு தற்போதைய வேளையின் அவசியமில்லை. பெண்களின் ஆண்களின் உடல் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ளக் கோருவதால் அவர்கள் உயிரிழந்து போகப் போறதில்லை. ஆயிரம் ஆயிரம் போராளிகள் இந்தக் கனவுகளை எல்லாம் தகர்த்துத்தான் போர்க்களத்தில் சண்டையிடுகின்றனர். சாவைத் தழுவிக் கொள்கின்றனர். இப்போது எங்கள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் அவசியம் தேச விடுதலை என்ற அந்த இலட்சியத்தை அடைதலே.

விடுதலைப்புலிகள் அமைப்பை மிகவும் கட்டுக்கோப்பான அமைப்பு என்று உலகமே வியக்கிறது, எந்த நாடும் அல்லது அமைப்பு புலிகள் பெண்களின் ஆண்களின் உணர்வுகளை மதிப்பதில்லை பப் கிளப் என்று அவர்களை உடல் உணர்வுகளுக்கு கட்டுப்பட்டுப் போக அனுமதிக்கவில்லை அது மனித உரிமை மீறல் என்று குற்றம்சாட்டவில்லை. மாறாக கட்டுக்கோப்புள்ள அமைப்பு என்பதற்குக் காரணம் அதன் வீரர்களின் போரிடுன் ஆற்றல் தான்.

போராளிகள் மக்கள் அடைய வேண்டிய இலட்சியத்தில் கண்ணாய் இருக்க வேண்டுமே தவிர அவர்களின் உடல் உணர்வுகளுக்கு தீனி தேடுவதில் அல்ல. பாடசாலை போகும் மாணவன் கல்வியில் அக்கறை காட்ட வேண்டுமே தவிர கலவியில் அல்ல.

அது போன்றதுதான் எமது இன்றைய தேசச் சூழலில் மக்களின் தேவை என்பது தேச விடுதலைக்கு முக்கியளித்தலாக இருக்க வேண்டுமே தவிர உடல் இச்சைகளிக்கு வழிதேடுவதல்ல. அப்படி தேடிக் கொள்ள விரும்புபவர்கள் அநேகர் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஓடட்டும். அவர்கள் அங்கிருந்தும் போராடப் போகக் கூடிய மன வலிமை பெறக் கூடியவர்கள் இல்லை என்பது வெளிப்படை.

எனவே 7 பெண்ணுக்கு ஒரு ஆண் இருக்கிறான் என்பதற்காக பெண்களின் ஆண்களின் உடல் தேவைகளைப் பூர்த்தி செய்ய எதிரி வீரர்களை வீராங்கனைகளை உதவிக்கு அழைக்க வேண்டும் என்பது போலான வாதங்கள் போரியல் சூழலில் அடிப்படைகள் அற்றவை. நடக்கும் முயற்சியில் மக்கள் அனைவரும் பங்கேற்கும் போது உடல் தேவைகளுக்கு அப்பால் வெற்றி உணர்வுதான் மிஞ்சி இருக்க வேண்டும். இது கிட்லர் பாணியில் 7:1 என்ற விகிதாரத்தைக் காட்டி பெண்களை எதிரி வீரர்களுடன் கூடிக்களிக்கச் சொல்வது பெண்கள் மத்தியில் போராட்ட உணர்வை போரிடும் உணர்வை மழுங்கடிக்கச் செய்யும் முயற்சியாகக் கூட இருக்கலாம்.

மனிதன் மனதை அடக்கி வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஒரு இலட்சியப் பயணத்தில் பயணிக்கும் போது மக்கள் அனைவரும் ஒரே மனோ நிலையில் இருக்க வேண்டும். போரிடும் தேவை இருக்கும் போது மக்கள் வீரியத்துடன் எழுந்து போரிட வேண்டும். மரணம் என்பது எப்படியோ வரத்தான் போகிறது. வாழப் போவது சந்ததிகள் மட்டுமே. அந்தச் சந்ததிகளுக்கு ஒரு வளமான தேசத்தை சமூகத்தை வழங்கச் சிந்திப்பதற்குப் பதிலாக 7 பெண்களுக்கு ஒரு ஆண் என்று கூறி அவர்களை எதிரிக்கு கூறு போட நினைப்பதிலும் 1 ஆண் போராளி இணைகிறான் என்றாள் 7 பெண் போராளிகளை இணைத்துக் கொள்வது கூட சமப்படுத்தும் சமன்பாட்டை.

சமன்பாடுகளுக்கு அப்பால் மக்களின் சமகாலத் தேவைக்குத்தான் முக்கியம் அளிக்க வேண்டும். எதிரி எம் மக்களின் போரிடும் ஆற்றலைச் சிதைக்க அனுமதிக்க முடியாது. அன்னை தெராசா போன்றவர்களும் மனதை அடக்கி வாழ்ந்துதான் மடிந்தார்கள். எத்தனையோ பெண் ஆண் கரும்புலிகள் போராளிகள் உடல் இச்சை வழி போக நினைத்திருந்தால் போராட்டத்தை நகர்த்தி வந்திருக்கவே முடியாது. எனவே மன அடக்கமும் தனி மனித ஒழுக்கமும் சமூக ஒழுக்கமும் போராடும் சமூகம் ஒன்றுக்கு அதன் ஆண் பெண் விகிதாசாரக் கணக்கெடுப்புகளுக்கு அப்பால் அவசியமாகிறது. அதை வெறும் மனித உடல் கிளர்ச்சிகளுக்கு இரையாக்கக் கோருவதை அனுமதிக்க முடியாது.

அந்த வகையில் சமூகத்துக்கு தவறான உதாரணமாகிய குறித்த பெண்ணிற்கு தண்டனை வழங்குதல் அவசியம். அது ஆணாக இருந்தால் கூட அதுவும் அவசியம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. யாழ்ப்பாணத்தில் ஈழத்தில் பப் கிளப் கலாசாரம் உருவாக வேண்டும் என்று வாதிடலாம் ஆனால் அந்தக் கலாசாரம் தமிழினத்துக்கு விடிவை ஒருபோதும் பெற்றுத்தரப் போறதில்லை என்பது நிதர்சனம். :idea:

எனவே

எதிரியோடு உறவுகளை வைத்திருப்பதன் மூலம் அவர்களது ஆக்கிரமிப்பை ஆக்கிரமிப்பு இல்லை என்று காட்டவும், ஆக்கிரமிப்பை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுவது குற்றம்.

முக்கியமாக நிர்பந்தம் அற்ற உறவுகள். உதாரணத்திற்கு அங்குள்ள அரச அதிபரோ அல்லது வேறு நிர்வாக அதிகாரிகளோ தொழில்ரீதியில் உறவு வைத்திருப்பது தவிர்க்க முடியாதது. மேலும் ஒரு வைத்தியரை எடுத்துக் கொள்வோம் எதிரிக்கு வைத்தியம் செய்யும் நிர்ப்பந்தத்தில் செய்வது குற்றம் அல்ல. ஆனால் அவர் வைத்தியர் என்ற தொழில் நாகரீகம் மனிதாபிமானத்திற்கு அப்பால் நிரந்தரமாக விரும்பி செய்கிறார் அதை ஆக்கிரமிப்பிற்கு அங்கீகாரமாகவும் செய்யும் நிலைக்கு போனால் எச்சரிக்கைக்கு பின்னரும் தொடர்ந்தால் தண்டனைக்குரிய குற்றமாகிறது.

எனவே இங்கு பாலியல் தொடர்பு என்பதற்கான குற்றம் என்று நியாப்படுத்துவது தவறு.

வெறும் விருந்துபசாரமும் எச்சரிக்கைக்கு பின்னர் தொடர்ந்தால் அது தண்டனைக்குரிய குற்றம்.

குடாநாட்டின் ஆண் - பெண் விகிதாசாரம் மற்றும் பொருளாதார நிலைகள் சிலரை இப்படியான நடத்தைகளிற்கு தூண்டலாம் என்பது சிந்திக்க வேண்டியது தான். பல அடிமட்ட துரோகிகள் கைக்கூலிகள் பொருளாதார அவலத்தினால் தான் உருவானவர்கள் என்பதை நம்புபவன் நான். அந்த உயிர் இழப்புகள் வருந்தத் தக்கது. ஆனால் எந்த மரண தண்டனையும் பல தடவை முன்னெச்செரிக்கை செய்யாது நிறை வேற்றப்படுவது இல்லை. நிர்ப்பந்தமான உறவுகளை கொண்டவர்கள் பற்றி தீர விசாரிக்கப்படுகிறது. அவர்களது போராட்டம் தொடர்பான நிலைப்பாடு என்ன என்பன ஆய்வு செய்யப்படுகிறது. எனவே அவர்களிற்கு மாற்று வழிகள் அறிவுரைகள் வழங்கப்பட்டும் மாற மறுப்பவர்களாகத்தான் இருப்பார்கள்.

ஊடகங்களில் இவற்றை தெளிவாக ஆய்வு செய்யாது செய்தி எழுதுபவர்கள் தமது சொந்த நிலைப்பாடுகளை கூடவே வைத்து தாளித்து எழுதுவது தான் பிரச்சனை. இவர்களின் கன்றுக்குட்டித்தனமான objective அற்ற செய்தியாளர் எழுத்துக்கள் ஏதோ ஆப்கானிஸ்தானிலும் ஈரானிலும் இஸ்லாமிய மிதவாதிகள் பாலியல் உறவுகளிற்கு மரண தண்டனை வழங்குவது போல் வழங்கப்படுவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு இங்கு கருத்தெழுதும் சிலர் உந்த ஊடகங்கள் ஒன்றிற்கு செய்தி ஆசிரியராகவோ செய்தி சேகரிப்பவராகவோ இருந்தால் எப்படி எழுதுவாரோ அது தான் நடக்கிறது.

  • தொடங்கியவர்

மேலே உள்ள செய்தியை எழுதிய ஊடகம் குறிப்பிட்ட பெண் சிங்கள இராணுவத்தின் உளவாளியாக செயற்பட்டார் என்றோ, அல்லது போராளிகளைக் காட்டிக் கொடுத்தார் என்றோ குறிப்பிட்டிருக்குமாக இருந்தால், இக் கேள்விகளை நான் இங்கு கேட்கப் போவதில்லை.

ஆனால் இவைகளை குறிப்பிடுகிறார்களோ இல்லையோ, சிறிலங்கா இராணுவத்துடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததை கட்டாயமாக குறிப்பிடுகிறார்கள். இது ஏன்?

இராணுவத்துடன் பாலியல் தொடர்பு வைத்திருக்கும் பெண் கொல்லப்பட வேண்டியவள் என்ற மனநிலையில் எமது சமூகம் இருக்கிறதா?

சிறிலங்கா இராணுவத்துடன் பாலியல் தொடர்பு மற்றும் உளவுப்பணியில் ஈடுபட்டிருந்த இளம் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அவரது தேசத்துரோகச் செயலுக்காக சுட்டுக்கொன்றுள்ளதாக எல்லாளன் படை தெரிவித்துள்ளது.

சபேசன் செய்தியில் உளவுவேலை பார்க்கவில்லை என்று இருக்கா?

சிங்கள அரசாங்கத்திடம் ஊதியம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கெதிராகச் செயல்பட்டால் அதுவும் துரோகம் தானே. அப்போ அவர்கள் போட்டுத் தள்ளுவதும் நியாயம் என்கின்றீர்களா???

ஊதியம் என்பது செய்யும் வேலைக்கு கொடுக்கப்படுவது, துரோகத்துக்கு கொடுக்கப்படுவது ஊதியம் அல்ல கையூட்டு, இலங்கை அரசு பணம் கொடுத்து இணையங்களிலும், வானொலிகளிலும் பேச, எழுத கொடுப்பது இந்த வகைக்குள் வரும். இதில் எந்த விதமான உள்குத்தும் இல்லை. 8) 8) 8)

செய்திகளில் உளவு வேலை பார்த்தார் என்பதை விட பாலியல் தொடர்பு வைத்திருந்தார் என்பதுதான் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

குறிப்பிட்ட செய்தியிலும் "இராணுவத்தினருடன் பாலியல் தொடர்பு வைத்திருப்பது" தேசத் துரோகச் செயல்களில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

இது பற்றி என்னால் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை.

உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.