Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு தெற்கு மக்களின் மனங்களை ஒன்றிணைக்க வேண்டும்! ஜனாதிபதி

Featured Replies

9788773a0398cd08077913047b774c28_L.jpg
 
30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தாலும் வடக்கு - தெற்கு மக்களின் மனங்களை ஒன்றிணைக்க முடியாது போனதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
 
வடக்கு தெற்கு மக்களை ஒன்றிணைப்பது மிகவும் அவசியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
பத்தரமுல்லை பாராளுமன்ற மைதானத்தில் நடைபெற்ற இலங்கையின் 67 ஆவது சுதந்திர தின பிரதான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
அத்துடன், மக்களின் ஏழ்த்தைத் தன்மையை நீக்கி, வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
சுதந்திர தின விழாவில் உரையாற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
 
''2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டவரப்பட்டு நாட்டில் சமாதானம் நிலைப்பாட்டப்பட்டது. ஆனால், வடக்கு தெற்கு மக்களின் உள்ளங்கள் ஒன்றுபடவில்லை. இவர்களுக்கிடையிலான சந்தேகம் நீக்கப்படவில்லை. இவற்றையே செய்ய வேண்டியுள்ளது. தேசிய நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டும். நட்புறவுடன் அனைத்து இன மக்களிடையே தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியமும், அவசரமும் இருக்கிறது. 
 
அதுமட்டுமல்லாது உள்வர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளியையும், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து, சமூகங்களுக்கிடையிலான பேதமும் பிரிவினையும், சந்தேகமும், சமத்துவமின்மையும் ஏற்பட்டதால், சுதந்திரன் பலாபலன்களை முழுமையாக அனுப்பவிக்க முடியாது போனது. எனவே, ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுக்களை சுமத்தாமல், இவற்றில் விட்ட பிழைகளை சுயவிமர்சனம் செய்துபார்க்க வேண்டும். எமது குறைகள் என்ன? விடுப்பட்ட தவறுகள் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். அத்துடன் மனிதாபிமானமாக நல்லிணக்கத்துடன் செயல்பட வேண்டும். நாட்டில் அரசியல், சமூக, கலாசார துறைகளில் தேவையான மாற்றங்களை நாம் ஏற்படுத்த வேண்டும். அதன்மூலமே உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். 
 
மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பலவற்றை நாம் கடந்த மூன்று வாரங்களில் செய்ய ஆரம்பித்துள்ளோம். எனினும், மக்களுக்கான தரமான, வளமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதற்காக தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படும். புதிய தொழில்நுட்ப உதவிகளுடன் உள்நாட்டு விவசாயம் ஊக்குவிக்கப்படும். அத்துடன், நவீன தொழில்நுட்பத்துடன் ஏனைய துறைகளையும் மேம்படுத்த இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
 
இதனைத் தவிர, அணிசேராக் கொள்கையை வெளிவிவகாரக் கொள்கை பின்பற்றப்படும். ஐக்கிய நாடுகளின் சபையின் கொள்கைப் பிரகடனம் பின்பற்றப்படும். அத்துடன், சர்வதேசத்தின் உதவியுடன் முன்நோக்கிச் செல்லவேண்டும். 
 
அத்துடன், மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய நிறைவேற்று அதிகாரத்திலுள்ள அதீத அதிகாரங்கள் அகற்றப்படும். மக்களின் சுதந்திரமும், ஜனநாயகமும் உறுதிப்படுத்தப்படும். நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். இளைய தலைமுறையின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும். அனைவரும் இணைந்து தேசத்தைக் கட்டியெழுப்ப இந்த சுதந்திர தினத்தில் ஒன்றிணைய வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

முப்படைகளுக்கும் காவல்துறை அதிகாரங்களைக்கொடுத்து, வடக்குக்கிழக்கில் ஏற்கனவே களமிறக்கிவிட்டிருக்கும், படைப்புலனாய்வாளர்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கியாகிவிட்டது, இதன்பின்பு வடக்கையும் தெற்கையும் உறவுப்பாலம்மூலம் இணைக்கப்போகிறாராம்.

 

துக்ளக் பத்திரிகையில் லஞ்சத்தை ஒழிப்பதற்காக என்னவகைச் சட்டத்தைக்கொண்டுவரலாம் என ஒரு வாசகர் கேடிருந்தார், அதற்கு அப்பத்திரிகையின் ஆசிரியர், லஞ்சம் வாங்குவதை சட்ட்மாக்கிவிடுங்கள் பிரச்சனை முடிந்தது எனப் பதிலளித்திருப்பார். இதுபோன்றதே மேற்கூறிய நடவடிக்கை.

 

சிராணி மீண்டும் பதவியேறு நீதிமன்றம் சென்றபோது எங்கள் ஊர் நாட்டாண்மை சுமந்திரன்தான் முன்னுக்கு அவரை முண்டுகொடுத்து அவரது அல்லக்கையாகக் கூட்டிவந்தார் சிலவேளை தமிழர்மத்தியில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள அவர்தான் மைத்திரிக்கு இந்த ஆலோசனையை கூறியிருப்பாரோ!

 

பத்துநாட்களுக்குமுன்புதான் இங்கு கருத்துக்கள உறவு ஒருத்தர் புலம்பெயர் புலிக்கொடி பிடிப்பாளர்களை அந்தந்த நாடுகளால் ஓரங்கட்டப்பண்ணி (அதாவது எட்டப்பன் வேலைபண்ணிக் காட்டிக்கொடுத்து) சிங்களத்தேசத்தின் அபிவிருத்திக்கு உதவிபுரிய புலம்பெயர் உறவுகள் எல்லாரும் அந்தந்த நாடுகளுடன் கைகோருங்கோ எனும் பொருள்பட இங்கு கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 

இனி என்ன தமிழன்வாழ்வில் தேனாறும்பாலாறும் ஓடும்.

 

சிங்களவன் கையில் பதவிவந்துவிட்டால் அவன் தன்னையும் அறியாது தமிழனை அழிக்கும் குரங்காக மாறிவிடுவான்.

இந்தக்குரங்குகளைத் தோழில் தூக்கிக்கொண்டாடும் கூத்தமைப்பு இனிமேல் காந்த்திதாத்தா குரங்குகளாக மாறிவிடும். எங்களுக்கான ஒரு தன்னலம்கருதாத அரசியல்த்தலைமை கிடைக்கவே கூடாது எனக் கடவுளால் சபிக்கப்பட்டுள்ளதுபோலும்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

மனங்களை இணைக்க வடக்கு மக்களும் தெற்கு மக்களும் திருமணம் செய்ய வேணும் என்பார்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா மைத்திரி அவர்களே! :rolleyes:

 

பாலும் பிரையும் தனித்தனியாகப் பிரிந்திருந்து ஒன்றிணையும்போதுதான் சுவையான புதுத் தயிர் கிடைக்கும். தவிர பாலையும் பிரையையும் ஒன்றிணைத்தே நெடுங்காலம் வைத்திருக்க முனைந்தால் அது புளிப்படைந்து, கெட்டுப்போய் துர்நாற்றமும் வீசும். இதுபோலவே வடக்கையும் தெற்கையும் ஒன்றிணைத்தே வைத்திருக்க முயல்வதால்தான் அது கெட்டுப்போய்த் துர்நாற்றம் வீசுகிறது. :o 

 

தமிழீழத்தையும், சிறீலங்காவையும் பிரித்து வைத்துப் பாருங்கள்.  அது  ஒன்றிணையும் போதெல்லாம் அத்தீவில் உள்ள மக்கள் அனைவருமே, புதிது புதிதாக வீசும் அதன் நறுமணத்தை ஆனந்தமாகத் தினம் தினம் அனுபவிப்பார்கள். :)    

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில பையனையும் தெற்க்கில பொண்ணையும் பிடிச்சு கல்யாணம் பண்ணி வைச்சா மேட்டர் ஓவர் :D

  • கருத்துக்கள உறவுகள்
அப்படியே ஒரு ஹிருனிகா குட்டியை அமெரிக்கவிற்கு ஷிப் பண்ணி விடுங்க 
மனம் என்ன மனம் ..........?
இரத்தம் டி என் ஏ  என்று எல்லாத்தையும் ஒன்றாக்கி விடுகிறேன். 
  • கருத்துக்கள உறவுகள்

 

அப்படியே ஒரு ஹிருனிகா குட்டியை அமெரிக்கவிற்கு ஷிப் பண்ணி விடுங்க 
மனம் என்ன மனம் ..........?
இரத்தம் டி என் ஏ  என்று எல்லாத்தையும் ஒன்றாக்கி விடுகிறேன். 

 

 

 

அதுக்கு முன்

நீங்க கனக்க விடயங்களை களட்டி எறிந்து

தூக்கி  காட்டணும்.....

அதை முதலில் தொடங்குங்கள்

 

(விரைவில் செய்க

நீண்ட வரிசை உங்களுக்கு முன் உள்ளது)

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில பையனையும் தெற்க்கில பொண்ணையும் பிடிச்சு கல்யாணம் பண்ணி வைச்சா மேட்டர் ஓவர் :D

 

தவறான திட்டம் சுண்டல் அவர்களே !

வடக்கில் பையன்களை பரலோகம் அனுப்பிவிட்டனர், மீதியில் பலர் புலம்பெயர்ந்து விட்டனர். இருப்பவர்களோ சிலர் அவர்களையும் தெற்கில் கிடைக்கும் சீதண வீடுகளுக்கு அனுப்பிவிடும் திட்டமோ....  :o

  • கருத்துக்கள உறவுகள்

மனதை வெல்ல வெளிக்கிட்டவர்களின் வரிசை மிகநீளமானது, அதேபோல் அதை நம்பிய தமிழ்த் தலைவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.