Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லிவர்-பூலில் ஏதோ போலந்து காரனை வைத்து கடையின் பெயர் பலகையை எழுதிவிட்டார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
லிவர்-பூலில் ஏதோ போலந்து காரனை வைத்து கடையின் பெயர் பலகையை எழுதிவிட்டார்!

0fffc49fabcb67f10cf49f17a5abbac8.jpg

நீங்கள் மேலே பார்கும் கடைக்கு சொந்தக்காரி நிஷா நடராஜா. இவர் பிரித்தானியாவின் வெளி மாநிலமான லிவர்-பூலில்(Liverpool) கடை ஒன்றை வைத்திருக்கிறார். இக் கடையின் பெயர்பலகையை பார்த்த ஆயிரக்கணக்கானவர்கள் , நினைத்துக்கொண்டது எல்லாம் ஒரு விடையத்தை தான். அதாவது லிவர்-பூல்(Liverpool) என்னும் பெயரை இவர்கள் தவறுதலாக “லிபூ-பூல்” (Liuerpul ) என்று எழுதிவிட்டார்கள் என்று தான். தற்போது தான் பிரித்தானியாவில் நிறைய போலந்து காரர்கள் இருக்கிறார்களே. அவர்களை வைத்து தான் கட்டட வேலைகள் நடைபெறுகிறது. அவர்களில் யாரோ ஆங்கிலம் தெரியாமல் இப்படி எழுதிவிட்டார்கள் என்று பலர் அதனை பார்த்து கேலிசெய்து , சிரிப்பதும் உண்டு. ஆனால் அவர்கள் அனைவரும் ஒரு வகையில் முட்டாள்களே.

காரணம் என்னவென்றால் தற்போது நாம் லிவர்-பூல் என்று அழைக்கும் பகுதி 1190 ம் ஆண்டில் லிபு-பூல் என்று தான் அழைக்கப்பட்டுள்ளது. அதாவது தண்ணீர் மற்றும் சேறு சகதி நிறைந்த இடம் என்று கிரேக்கத்தில் பொருள்படும். பின்னர் 1346ம் ஆண்டு லையர்-பூல் என்று அது மாற்றம் அடைந்து , 1514ம் ஆண்டு “லீத்த- பூல்” என்று மாறி அப்படியே படிப்படியாக அழைக்கும் பெயர் மாறி இறுதியாக 1752ம் ஆண்டு லிவர்-பூல் என்று அழைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் நன்றாக தெரிந்து வைத்திருக்கும் ஈழத்து தமிழ் பெண்ணான நிஷா நடராஜ், தனது கடைக்கு அந்த பழமையான பெயரை சூட்டியுள்ளார். இப்ப சொல்லுங்கள் யார் முட்டாள் என்று ? ஆங்கிலம் தெரிந்தவர்களா ? இல்லை எமது இனத்தவர்களா ?

தமிழில் ஒரு பழமொழி கூறுவார்கள். “அரசனுக்கு அவன் சொந்த நாட்டில் தான் மதிப்பு” ஆனால் படித்தவனுக்கு சென்ற இடம் எல்லாம் மதிப்பு என்பார்கள்.

http://www.vaavaa.co.uk/liver-pool-in-a-poland.html

 

  • கருத்துக்கள உறவுகள்

இயல்பாகவும் அது சரியாத்தான் இருக்கு... அங்கு விக்கும் தண்ணியைப் போட்டுட்டு எழுதினாலும் இப்படித்தான் வரும்.... தப்பில்லை...!! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்காவின் பியர் கள்ளன் இங்கயும் வந்திடப்போறான்.. :o:D

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா? இடிக்கிறதே!

இது ஒரு கடலோர நகரம். மண்ணும் சேறும்...!!??

இங்கிலாந்து சில நகரங்களின் பெயர்களுடன் மனித உடல் பாகங்களின் பெயர்களுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாகவல்லவா அறிந்திருந்தேன்.

Liverpool,

Manchester

Middlesex

St Pancreas

Sussex

Essex

Hertford

Braintree

அரசரின் அதிகாரங்களை பாராளுமன்றுக்கு, Magna Carta (Great Charter) பிரகடணம் மூலம் தந்த மன்னர் John னின் 1207ம் ஆண்டு பிரகடணம் மூலம், Liverpool, ஒரு ஊராக அறிவிக்கப்பட்டது. அங்கே வாழ்ந்த மக்களின் உச்சரிப்பால் Liverpulle என்றும் அழைக்கப்பட, அவ் வட்டார உச்சரிப்பு, Scouse என அழைக்கப்ப்டது.

Magna Carta பிரகடண காலத்தில் ஆங்கில மொழியும் இருக்கவில்லை.

Norman, Anglo Saxon மற்றும் செல்றிக் வகை கலப்பு மொழியே இருந்தது. ஆங்கில மொழி, 16ம் நூறாண்டில், முதலாம் எலிசபெத் மகாராணியார் காலத்தில், சேக்ஸ்பியர் பங்களிப்புடன் வீறு கொண்டு எழுந்தது.

எனினும் இக்கட்டுரையில் சொல்லும் பெயர் எங்குமே குறிக்கப்படவில்லை. கிரேக்க மொழிக்கும் இங்கிலாந்துக்கும் தொடர்பில்லையே. இங்கிலாந்து ரோமர்கள் பிடியில் இருந்த கிபி 1 முதல் 400 வரை இந்த பகுதியில் குடிகளே இருக்கவில்லை.

நல்லா சொல்றாஞ்கையா, டீட்டைலூ! :D

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல ஊர்கள்   shire என முடியும் நாதமுனி,   shire  - தமிழில் என்ன அர்த்தம்? தெரிந்தால் எழுதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

Shire: traditional name for a division of Land in the UK ( as per wiki )

நம்மூரில், 'பிட்டி' ( இறுப்பிட்டி, சிறுப்பிட்டி, அல்லைப்பிட்டி ) அல்லது 'புரம்' போல.

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்காவின் பியர் கள்ளன் இங்கயும் வந்திடப்போறான்.. :o:D

 

0fffc49fabcb67f10cf49f17a5abbac8.jpg

 

இவவிடம் அந்தப் பாச்சா, பலிக்காது போலுள்ளது. :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

0fffc49fabcb67f10cf49f17a5abbac8.jpg

இவவிடம் அந்தப் பாச்சா, பலிக்காது போலுள்ளது. :D:lol:

அடிசாத்து தான்!

வந்தவன் துண்டைக் காணோன், பியரைக் காணோம் எண்டு ஓடி விடுவான்.

சுமோ அக்காவை Training க்கு அனுப்பி வைக்கவாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கடைக்கும் ஒருக்கா போகத்தான் வேண்டும் :D

  • கருத்துக்கள உறவுகள்

0fffc49fabcb67f10cf49f17a5abbac8.jpg

 

இவவிடம் அந்தப் பாச்சா, பலிக்காது போலுள்ளது. :D  :lol:

 

இவா

நம்மாளு..... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடிசாத்து தான்!

வந்தவன் துண்டைக் காணோன், பியரைக் காணோம் எண்டு ஓடி விடுவான்.

சுமோ அக்காவை Training க்கு அனுப்பி வைக்கவாம். :D

 

சுமோவும்.... லண்டன் என்ற படியால்,

Training க்கு போய் வர, சிரமம் இருக்காது.

காலையில் போனால், மாலையில் Training கை முடித்துக் கொண்டு,

நிறைய அனுபவத்துடன் திரும்பி விடலாம்.girl%20(2).gif:D

இவா

நம்மாளு..... :lol:

 

விசுகர் சொல்வதைப் பார்க்க, சுமோ... ரொம்ப, அப்பாவி போலுள்ளது. :D

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.