Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரை குறிவைக்கும் மேற்குலக புலனாய்வுத்துறைகள்.

Featured Replies

அல் ஹைடாவுக்கு அடுத்ததாக தமிழரை குறிவைக்கும் மேற்குலக புலனாய்வுத்துறைகள்.

அண்மையில் வந்த செய்தி ஒன்று கடந்த காலத்தில் யாழ்கருத்து களத்தில் நிகழ்ந்த கருத்தாடல்களின் தொடர்சிச்சியாகவே கருதவேண்டியுள்ளது. அச்செய்தியின் இணைப்பு கீழ் உள்ளது.

Forty Sri Lankan Tamil airport workers in Paris under police questioning

Tue, 2006-11-07 06:49

French police are investigating nearly 40 Sri Lankan Tamils who are working in Charles de Gaulle airport in Paris, after withdrawing their airport identity badges. These Tamils were working as baggage handlers, security agents, drivers, cleaners and clerks in the airport.

According to a reliable report, this was completely a new investigation launched mainly against these 40 odd Sri Lanka Tamils working in the airport. Each of them was called separately for a high level investigation by a special team of policemen.

At the investigation, before withdrawing their airport identity badges, Police has shown each of them photographs taken while the particular individual was participating in rallies and demonstration conducted by the Liberation Tigers of Tamil Eelam, a Sri Lanka’s Tamil separatist outfit banned in France and also a rough timeline of each of their involvements in the banned organization.

http://www.asiantribune.com/index.php?q=node/3068

ஆவணி மாதத்தில் எம்மால் விவாதிக்கப்பட்ட ஒரு விடயம் எமது கவனத்தில் இருந்து அதிக தூரம் போய்விட்டாலும், மேற்குலக புலனாய்வுத்துறைகளால் தொடர்ச்சியாக அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

http://www.worldtamilpress.com/index.php?o...d=625&Itemid=27

எழுதப்பட்டது: புதன் ஆவணி 23, 2006 9:02 pm Post subject: நாம் சமாதானத்தை அடைய கொடுக்கக்கூடிய விலை என்ன?

அமெரிக்க மற்றும் மேற்குலகத்தின் இராஜதந்திர நகர்வுகளின் ஆரம்ப அறிகுறி இது. இதை புரிந்து கொண்டு நாம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...r=asc&&start=30

அமெரிக்க கனடிய உளவுத்துறைகளின் திட்டமிட்ட கைதுகளின் தொடர்ச்சியாக பிரித்தானிய உளவுத்துறை சேர்ந்த சிலர் விஜில் எனும் அமைப்பினூடாக சில புலனாய்வு செய்திகளை கசியவிட்டனர்.

LTTE 'Tamil Tigers' and its UK-wide network

http://globalpolitician.com/articles.asp?I...2235&print=true

இத்துடன் அமெரிக்காவில் மேலும் சில கைதுகள் நடந்தன.

TNI Denies Link with Admiral Held in U.S.

.....The two Indonesians, Erick and Haji Subandi, 69, were among six men charged in the U.S. for conspiring to sell arms and equipment to Sri Lanka's Tamil Tiger rebels and to customers in Indonesia.

American officials said Friday the Indonesians -- along with Singaporean Haniffa bin Osman, 55, and Sri Lankan Thirunavukarasu Varatharasa, 36 -- were charged with conspiring to export surface-to-air missiles, machine guns, ammunition and night vision goggles to Tamil Tiger rebels.

Arrested in Guam late this week, Osman, Erick and Subandi were charged with conspiracy to provide material support to a foreign terrorist organization and money laundering.

In a separate conspiracy also linked to the undercover operation in Maryland, two Indonesians -- Reinhard Rusli, 34, and Helmi Soedirdja, 33 -- along with Subandi conspired to ship night vision goggles to customers in Indonesia.

Foreign Affairs Ministry director of Indonesian citizens protection Ferry Adamhar told detikcom the Indonesian Consulate General in Los Angeles had contacted the U.S. officials who made the arrests.

A team from Los Angeles, he said, would fly to Guam on Monday to confirm the arrest and to seek more details.

http://www.kabar-irian.com/pipermail/kabar...ber/005282.html

இவைகள் பற்றிய விரிவான செய்திகளை கீழ் உள்ள இணைப்பில் பார்க்கவும்

US charges six with shipping arms to Tamil Tigers, Indonesia

Six charged in US for arms export conspiracy

Six Defendants Charged In Conspiracies to Export Arms, Provide Material Support to Foreign Terrorist Organization

6 charged in Md. arms deal sting

http://www.etan.org/et2006/september/31/29us.htm

இப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட சம்பவமான பாரிஸ் விமானநிலையத்தில் பணிபுரிந்த தமிழர்கள் பிரான்ஸ் உளவுத்துறையால் விசாரிக்கப்பட்டது, வேலைநிமித்தம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் திரும்பிப் பெறப்பட்டது பற்றி பிரான்ஸ் வாழ் யாழ் கள உறவுகள் தாம் அறிந்ததையும் இங்கு பகிர்ந்து கொள்ளவது மிக அவசியமானது.

எழுதப்பட்டது: வெள்ளி ஆவணி 25, 2006 10:30 am Post subject: நாம் சமாதானத்தை அடைய கொடுக்கக்கூடிய விலை என்ன?

நேற்று சிலிக்கன்வலியில் இருக்கும் எனது நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் கதைக்கும் போது '' எவ் பி ஐ, ஆர் சி எம் பி கைதுகளின் பாரதூரம் எம்மில் பலரால் சரியாக உள்வாங்கப்படவில்லை. கனடாவில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களது அடுத்த சந்ததி பல்கலைக்கழக படிப்பை தொடங்குவதும் பலர் படிப்பை முடித்துக்கொண்டு வெளிவரும் இக்காலகட்டத்தில் புலிகளுடன் அவர்களை தொடர்புபடுத்தி வரும் சம்பவங்கள் எமது அடுத்த சந்ததியினரை வெகுவாக பாதிக்கும். எதிர்காலத்தில் நாம் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாக ஒதுக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது.'' என்று தனது ஆதங்கதை தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த நாம் சமாதானம் என்ற ஒரே ஒரு கோசத்தினூடாகவே சர்வதேசம் எம்மை தனிமைப்படுத்துவதை தடுத்து நிறுத்த முடியும்

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...r=asc&&start=30

  • Replies 55
  • Views 7k
  • Created
  • Last Reply

ஓம் இப்ப இதுக்காக என்ன புதிய அணுகுமூறையச் செய்ய வேணும் எண்டுறீர்? சொன்னாத் தானே தெரியும்? நீர் இது வரை சொன்னது ஒன்றுமே புதிது இல்லையே?சமாதானம் என்னும் கோசம் என்றால் என்ன? புலிகளும் தமிழரும் சமாதானத்தைத் தானே வேண்டி நிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று சிலிக்கன்வலியில் இருக்கும் எனது நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் கதைக்கும் போது '' எவ் பி ஐ, ஆர் சி எம் பி கைதுகளின் பாரதூரம் எம்மில் பலரால் சரியாக உள்வாங்கப்படவில்லை. கனடாவில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களது அடுத்த சந்ததி பல்கலைக்கழக படிப்பை தொடங்குவதும் பலர் படிப்பை முடித்துக்கொண்டு வெளிவரும் இக்காலகட்டத்தில் புலிகளுடன் அவர்களை தொடர்புபடுத்தி வரும் சம்பவங்கள் எமது அடுத்த சந்ததியினரை வெகுவாக பாதிக்கும். எதிர்காலத்தில் நாம் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாக ஒதுக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது.'' என்று தனது ஆதங்கதை தெரிவித்தார்.

அடுத்த சந்ததி என்ன இன்னும் பல நூறு சந்ததியும் பல்கலைக்கழகம் போகட்டும் படிக்கட்டும். பல்கலைக்கழகம் போறதென்பது சர்வசாதரணமான விடயம். எல்லோருக்கும் பல்கலைக்கழகக் கல்வி என்பதுதான் 21ம் நூற்றாண்டின் தொனிப்பொருள்.

பாவம் தமிழர்கள் மட்டும் இன்னும் அதை ஏதோ அரிய சாதனை என்பது போல படங்காட்டுவதை விடுவதாக இல்லை. அதை வைத்தே தங்களின் கெளரவத்தை மதிப்பை புகழை நிறுவ நினைக்கிறது தமிழர்களின் அடிமைத்தனத்தின் வெளிப்பாடு. சரி அதை விட்டு விசயத்துக்கு வருவோம்.

விடுதலைப்புலிகளை ஆதரிக்க வேண்டாம் என்று எந்த நாடும் பிரகடனம் செய்யவில்லை. விடுதலைப்புலிகள் நிராயுதபாணிகளாக நிற்க வேண்டும் என்றும் எந்த நாடும் கோரவில்லை. வன்முறைகளைக் கைவிடத்தான் சொல்கின்றன. அதுவும் சில நாடுகள் மட்டுமே. சிறீலங்கா அரசு வன்முறைகளை நிறுத்தும் பட்சத்தில் புலிகளும் நிறுத்துவார்கள்.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்குவதன் வாயிலாக பல்கலைக்கழகத்தில் படித்ததை தமிழர்களின் சந்ததி என்ன மறந்து விடுமா? சோகுவரா திலீபன் அண்ணா போன்றவர்கள் பல்கலைக்கழகப் படிப்பையே தூக்கி எறிந்துவிட்டுப் போராடப் போனவர்கள். தமிழ் மாணவர்கள் படிப்பது பல்கலைக்கழகப் பாடமே தவிர தமிழர்களின் போராட்டத்தை நசுக்குவதற்கான வெளிநாட்டு ராஜதந்திரிகளின் பாடமல்ல.

தமிழ் மாணவர்களுக்கு சிங்கள அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளைக் கண்டிக்கவும் அதற்கு எதிராக குரல்கொடுக்கவும் உரிமை உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது.

தமிழர் சந்ததி மாணவர்கள் தாங்களா சிந்தித்து இந்த விடயத்தில் கவனமெடுக்க வேண்டியது அவசியமாகிறது. அவர்களை தவறான வழியில் இட்டுச் செல்வதுதான் தடுக்கப்பட வேண்டும். அதைவிடுத்து அவர்கள் வெறும் சமாதான உச்சரிப்பை மட்டும் உச்சரிக்க வேண்டும் என்றில்லை. அவர்கள் சிங்கள அரசின் பயங்கரவாதச் செயல்களைக் கண்டிக்க வேண்டும். அதற்கான செயற்பாடுகளின் ஊடாக தங்களின் பலமிக்க எதிர்ப்பை எதிர்பார்ப்பை சர்வதேச கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.

சில தூண்டுதல்களின் பேரில் ஒலித்து விட்டு அடங்கும் குரலாக இன்றி தமிழ் மாணவர்களின் குரல் பனியிலும் வெயிலிலும் மனித உரிமைகளுக்காக ஒரு இனத்தின் விடுதலைக்காக பலமாக ஒலிக்க வேண்டும். இதில் அவர்களா சிந்தித்து செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும்.

தகவல்களை ஆதாரங்களை ஆவணப்படுத்தி தங்கள் செயற்பாட்டுக்கான ஒரு சர்வதேச அங்கீகாரத்தை அவர்கள் உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு உலகத் தமிழ் மாணவர்கள் ஒரே அணியில் செயற்படுவதே அவர்களுக்குப் பலம். நாட்டுக்கொரு அணியாக இருப்பவர்கள் உலகலாவிய அளவில் ஒரு பொது அணியையும் பொதுவாக கொள்கைகளையும் செயற்பாடுகளையும் வரிந்து கொண்டு பலமான அமைப்பாக தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய பயனித்தில் பங்களிக்க வேண்டுமே தவிர அவர்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை எவரும் விரும்பவில்லை.

மாணவர்களின் குரல் எழுச்சி மிக்கவை. அவர்களால் மட்டுமே இளைய சமூக்கத்துக்கு அதற்கான விரும்பப்பட்ட வடிவத்தில் விடயங்களைக் காவி வர முடியும்.

இந்த விடயத்தில் இன்னும் ஆயிரம் சந்ததிக்கும் தமிழ் மாணவர்கள் தமிழ் மக்களின் துன்பங்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய தேவை எழினும் கொடுக்க உருவாக்கப்பட வேண்டுமே தவிர சர்வதேசத்துக்காக சமாதானக் குரல்தான் எழுப்ப வேண்டும் என்பது சரியான வாதமல்ல. மாணவர்கள் தங்கள் செயற்பாட்டுக்கு சட்ட ஆங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்வதே அவசியம். அதற்கும் சமாதான கோசம் தான் அவசியம் என்றில்லை.

பலமான மாணவ சக்தி இன்று உலகில் சிந்திச் சிதறி சின்னாபின்னப்பட்டுப் போய் playstation, MSN, Gameboy Entertainment attitude, Anti social attitude நோக்கி உலக அரசியல் உலகப் பொருளியல் இராணுவ நகர்வுகள் நோக்கிய அடிப்படை சிந்தனைகள் கூட இன்றி அரசுகளால் திட்டமிட்டு வளர்க்கப்பட்டு வருகின்றனர். இதையே தமிழர்களின் சந்ததிகளும் செய்ய முனைந்து வரும் இவ்வேளையில் மாணவர்களாக சிந்தித்து உலக மனித அவலங்களுக்காகவும் இராணுவ சித்திரவதைகளுக்கு எதிராகவும் இன அடிமைத்தனங்களுக்கு எதிராகவும் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் குரல்கொடுக்கக் கூடிய புரட்சிகர நிலையை சிந்தனைகளூடு பெற வேண்டியது அவசியமாகிறது.

பல்கலைக்கழகக் கல்வி என்பது தொழில் சார்துறைகளுக்குள் முடக்கப்பட்டு மாணவர்கள் அரசுகளின் தொழில்வழங்குனர்களின் Biological machine என்ற வகையில் உலகின் உருவாக்கப்பட்டு வருகின்றனர்.

மாணவ சக்தி உலகின் இன்று பலவீனப்பட்டுள்ளதே உலகின் ஆக்கிரமிப்பாளர்களின் அடக்குமுறையாளர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக உலகளாவிய குரலை எழுப்ப முடியாமல் இருப்பதற்கு ஒரு காரணம். இவை குறித்து மாணவர்கள் விழிப்பூட்டப்படுவது மட்டுமன்றி அறிவீட்டப்படவும் வேண்டும். அந்த வகையில் தமிழ் சந்ததி மாணவர்களாவது ஒரு அடிமைப்படுத்தப்படும் இனத்தின் பிரதிந்திகளாக உலகளாவிய அடிமைத்தனத்துக்கும் அரச பயங்கரவாதங்களுக்கும் எதிரான குரலை ஒலிக்க கற்றுக்கொள்வதோடு தளராது தங்கள் செயற்பாடுகளை சர்வதேச மாணவ சமூகத்தை நோக்கி நகர்த்த வேண்டிய தேவையையும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

இன்று மாணவர்களின் குரல் சிலரின் தேவைகளுக்காக தூண்டப்பட்டு ஒலிக்கவிடப்பட்டு ஓயவிப்பட்டு விடுகிறது. இந்த நிலைமாறி மாணவர்களுக்கு மனித அவலங்கள் சரிவரச் சொல்லப்பட்டு அவர்களாக குரல் கொடுக்க சிந்திக்க வைக்கப்படும் போது மட்டுமே அர்ப்பணிப்புள்ள செயற்பாடுகளை உலக மனித சமூகம் மாணவ சக்தியிடமிருந்து பெற முடியும்.

எனவே சமாதானம் என்ற கோசத்தை சிறை தண்டனை என்ற அடக்குமுறைகளுக்கான பூச்சாண்டிகளைக் காட்டி மாணவர்களின் சிந்தனைகள் மட்டுப்பட்டிருக்கும் இக்காலத்தில் அவற்றை ஆக்கிரமிப்பாளர்களின் நன்மை நோக்கி நகர்த்தாமல் சிந்தனைகள் மனித அவலங்களுக்கு தீர்வு தேடப்பாடு பட செயற்படுத்தத் தூண்டும் அளவிற்கு வளர்க்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துங்கள். அதுவே அவசியமாகியுள்ளது.

சமாதானம் என்பது இரந்து கேட்பதல்ல. விடுதலை போன்று தர மறுப்பவனுடன் போராடியும் பெறப்பட வேண்டி இருக்கிறது என்ற நிலையை உணர்த்த வேண்டும். ஜனநாயகத்துக்காக போர் செய்பவர்களும் சமாதானத்துக்காக போர் செய்பவர்களும் அதற்கு அங்கீகாரம் வழங்குபவர்களாக உலக ஆக்கிரமிப்பு சக்திகள் ஒரே அணியில் இருக்கும் போது ஏன் உலகலாவிய மாணவ சக்தியை அவர்களுக்கு எதிராக அணிதிரட்ட முடியாது. நிச்சயம் ஆக்கிரமிப்பாளர்கள் தரும் மானுட அவலங்கள் அவர்களை அணிதிரட்ட உதவும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. ஆனால் மாணவர்களை அந்த அவலங்கள் தரும் பாதிப்புக்கள் உணரப்பட முடியாதபடி ஆக்கிரமிப்பு அரசுகள் திசை திருப்பி வைத்துள்ளன. அதனாலேயே அவற்றின் செயற்பாடுகளுக்கு அகிம்சை வழியில் எதிர்க்குரல் எழும்பாது அடக்கப்பட்டு ஆக்கிரமிப்பு நோக்கங்கள் மனித அவலங்கள் ஜனநாயகத்துக்கான இருப்பின் தேவைகளாக காட்டப்படுகின்றன. அதை மறைக்கவே மனித உரிமைகளும் போலியாக உச்சரிக்கப்படுகின்றன. உண்மையில் மனித உரிமைகள் இன்று ஜனநாயக ஆக்கிரமிப்பாளர்களாலேயே உலகெங்கும் சீரழிக்கப்படுகின்றன.

ஆயுத வழங்கல் உட்பட போரிற்கு தேவையான அனைத்தையும் வழங்கிக் கொண்டு சமாதானப் பூச்சாண்டி பேசுபவர்களுக்கு முன்னால் சமாதானம் என்று போலிக் குரல் எழுப்பக் கோராமல் அவர்களின் உண்மை Version என்ன என்று மாணவர்களுக்கு உணர்த்துவதும் அதை முறியடிக்க மாணவ சக்திகளை ஒன்று திரட்டுவதுமே அணு குண்டுகளோடு ஆக்கிரமிப்பு நோக்கங்களை மனித இனத்தை அடிமைப்படுத்தி அவலப்படுத்தும் வல்லரசுகளினதும் ஆக்கிரமிப்பாளர்களின் தந்திரங்களையும் வெளிக்கொணரவும் உலக மக்கள் ஒன்று திரண்டு இவர்களை எதிர்க்கவும் வகை செய்யும். :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு சமாதானம்!

எனது கேள்விகள்.

களத்திலே தலையால் நடக்கிற உமது பிழைப்பு ஒட்டு மொத்த தமிழ் உணர்வாளர்களால் நிராகரிக்கப்பட்டும், சாதாரண மனிதசுணையின் பொறுமை எல்லைகளையும் மீறி, அவமானப்பட்டுக்கொண்டு பிழைப்பு; களத்தில் குப்பை கொட்டிக்கொண்டெ இருப்பதன் காரணம்.

எமது சிந்தனையைத் திருத்தம் செய்து

தமிழ்த்தேசியத்துக்கு நல்ல தலை விதி செய்யவா?

இல்லை நாய் விற்ற காசு குரைக்காது

என்பது போல், வருமானத்தில அவமானம் ஒட்டாது என்பதனாலா?

புலத்திலே காவல் துறையின் பணி; சேவை வழங்கக்கூடிய எல்லைக்கு அப்பால் குற்றங்கள் பெருகிக் கொண்டிருப்பதால், அவர்கள் பணிக்கு தகுதியாகின்ற குற்றங்களை தரைப்படுத்தல் பாணியிலேயே தெரிவுசெய்ய வேண்டி உள்ளது, இதுதான் இன்றைய யாதார்த்தம்.

இன்நிலையில் புலிகள் பற்றி அவர்கள் பணி; அக்கறைப் பட வேண்டும் என்றால் அந்த தரைப்படுத்தலைப் பொறுப் பேற்றுக்கொள்ள இலங்கை அரசோ, இல்லை சமாதானமோ வந்தால் தான் முடியும். ஏன் எனில் புலிகளின் செயற்ப்பாடுகள் புலநாடுகளை எந்தவகையில் பாதிக்கும்.

இல்லை சிங்கள் அரசுக்கு பயப்படும் நிலையில் உள்ள சிற்றரசுகளா?

இது சமாதானத்துக்கு புரியாததா?

இலை. இளம் தலைமுறையின் ஒற்றுமை உணர்வுக்கு சமாதானத்தின் தேசவிரோதப் புத்தி, பூச்சாண்டி காட்டுகிறதா?

துரோகப் புத்தியின் பௌக்குவத்தில் தீட்டப்படும் நாடகத்துக்கு சம்பவங்கள் பாத்திரமாக உள்வாங்கப்படுகிறதா துரோகசாணக்கியமாக?

  • கருத்துக்கள உறவுகள்

பயணிகள் விமானங்கள், விமான நிலையங்கள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகும் என்ற காரணத்தினால் அங்கு வேலை செய்பவர்களின் பின்புலங்களை ஆராயவேண்டும் என்று புதிய பாதுகாப்பு விதி வந்துள்ளது. இதனாலேயே எல்லோரையும் கேள்விக்குட்படுத்துகின்றனர

ஐயா சமாதானம்!

அண்மையில் பாரிஸ் விமான நிலையத்தில் பணிபுரிந்த பல அரெபிய இனத்தவர்களை பணி நீக்கம் செய்தார்கள்.இது அவர்கள் பயணிகளின் பொதிகளை உடைத்து பொருட்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.சட்டத்துக

ஐயா சமாதானம்!

அண்மையில் பாரிஸ் விமான நிலையத்தில் பணிபுரிந்த பல அரெபிய இனத்தவர்களை பணி நீக்கம் செய்தார்கள்.இது அவர்கள் பயணிகளின் பொதிகளை உடைத்து பொருட்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.சட்டத்துக

நவம் உங்கள் செய்திக்கு மிக்க நன்றி இந்தச் சமாதானம் என்பவர் இலங்கை அரசின் லண்டன் தூதுவராலயத்தால் நெறிப் படுத்தப்படும் ஒரு தமிழ் உளவாளி என்பது எனக்குக் கசிந்த புலனாய்வு.இவரின் கருத்துக்களை அந்தவகையில் அடையாளம் கண்டு தகுந்த பதிலடிகளை வழங்குங்கள்.பொய்களைப் புனைந்து புலத்தில் தமிழர்கள் மத்தியில் மனக்கிலேசத்தை உண்டு பண்ணி தமிழ்த் தேசியப் போராட்டங்களை முடக்குவதே இவரின் நோக்கம்.இதற்கு சமாதானம் என்கிற முகமூடி வேறு.

எந்த ஆரோக்கியமான கருத்தாடலோ அன்றி பதில்களோ இன்றி இவ்வாறான பொய்களை இங்கே விதைப்பதே இவரின் தொழிலாக இருக்கிறது.இந்தச் செய்தியை உருவாக்கிய ஏசியன் ரிபீயூன் என்பதுவும் சிறிலங்காவின் வெளி நாட்டு உளவு நிறுவனத்தால் நெறிப்படுத்தப்படும் ஒரு தளமே.

சமாதானம் போட்ட போடல் பார்த்து கொஞசம் குளம்பிற்றன் முதலில... :twisted:

ஏதோ எழுத துவங்கினன்... பின்...ஏதோதட்டுப்பட்டதால்... (வேறுஒருவரும் கருத்தெழுவில்லை) கனக்க தொடர்புகள் கொடுத்தால் வாசிச்சேன்.... முழுதும் வாசிக்க முடியவில்லை....(காரணமும் விளங்கிக்கொண்டேன்)... கள உறவுகள் வரட்டுமே... எழுதட்டுமே என காத்திருந்தேன்... இப்போ மேலிருந்தது கீழ்கிடக்கிறது

ஒன்று மட்டும் தெரிகிறது களமும்... எதிரிகளும்.... எம்மை நன்கு பாவித்துக்கொள்கிறதது இது இன்று மறுக்கமுடியாத உண்மை :idea:

(கள ஆரம்பத்தில் இருந்து அவதானிக்கும் நமக்கே இந்நிலமை என்றால்........ புதியவர்கள்.. நிலை :?: :? :roll: :idea: )

நால்வகையினரும்.... எரியும் விளக்கில் எண்ணை (களத்தில்) விட்டுக்கொண்டிருக்கவேண்யு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிருபம் மன்னிக்கவும் சமாதானம் தனது முதலாவது தகவலின் இணையத்தளமுகவரியை மறைத்துள்ளார் என்பதிலிருந்து அன்னாரின் நோக்கத்தை அறியக்கூடியதாக உள்ளது. இந்த தகவல் அப்படியே ஏசியன் ரிபியுூன் இணையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. (http://www.asiantribune.com/index.php?q=node/3068)

தகவலில் உணமையிருக்கலாம் ஆனால் இதுபற்றி கலவரப்பட ஒன்றுமில்லை. சாதரணமாய் விமானப்பயணிகளுக்கே சோதனைக் கெடுபிடிகள் இருக்கும்போது இப்படி நடப்பது ஒன்றும் ஆச்சரியப்படக்கூடய வி;டயம் இல்லை.

ஆனால் இதை வைத்து புூச்சாண்n காட்ட முனைந்துள்ளார் நிருபம். இது புலத்தில் உள்ள தமிழர்களை கிலி கொள்ளச் செய்ய மேற்கொள்ளப்படும் உளவியல் யுத்தம். எமது அடுத்த சந்ததி இதனால் பாதிக்கப்படும் என்றால் புலத்தில் உள்ள இசுலாமியர்களின் நிலைபற்றி முதலில் சிந்தியுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • தொடங்கியவர்

ஒருவர் சொல்கின்றார் '' இந்தச் சமாதானம் என்பவர் இலங்கை அரசின் லண்டன் தூதுவராலயத்தால் நெறிப் படுத்தப்படும் ஒரு தமிழ் உளவாளி என்பது எனக்குக் கசிந்த புலனாய்வு.இவரின் கருத்துக்களை அந்தவகையில் அடையாளம் கண்டு தகுந்த பதிலடிகளை வழங்குங்கள்.பொய்களைப் புனைந்து புலத்தில் தமிழர்கள் மத்தியில் மனக்கிலேசத்தை உண்டு பண்ணி தமிழ்த் தேசியப் போராட்டங்களை முடக்குவதே இவரின் நோக்கம்.''

மேற்குறித்த செய்திகள் எந்தெந்த இணைய தளங்களில் இருந்து பெறப்பட்டது என்பதற்கான இணைப்புகள் முழுமையாக தந்திருந்தும் ஏதோ எனது கற்பனையில் எழுதப்பட்ட புனைவுகளாக இவர் தமது விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.

இன்னொருவர் சொல்கின்றார் ''இந்த தகவல் அப்படியே ஏசியன் ரிபியுன் இணையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. (http://www.*****/index.php?q=node/3068)''

ஏசியன் ரிபியூன் என்னால் மறைக்கப்பட்டது அல்ல யாழ் களத்தில் அவ்வாறுதான் வலையேற்றம் செய்ய முடியும்.

உதாரணத்துக்கு இன்னொரு செய்தியை கீழே இணைத்துள்ளேன். அதுவும் அப்படிதான் வலைஏறுகிறது

LTTE in Paris closing down businesses and illegally transferring moneys into Switzerland

Liberation Tigers of Tamil Eelam, a banned Tamil rebel outfit is making secret moves either to close down all its existing business concerns in France or to slim them down.

Also it is learnt that the LTTE is making secret moves to transfer all the moneys they have in various bank accounts in Paris by withdrawing them gradually in small amounts without creating suspicion to the authorities.....

http://www.asiantribune.com/index.php?q=node/3064

பொதுவாக அந்த செய்திகளின் நம்பகத்தன்மை, அந்த செய்திகள் வெளிவந்த இணைய தளங்கள் பற்றிய தமது கருத்துகளை முன்வைக்காது என்னைப்பற்றிய விசமத்தனமான கருத்துகளை முன் வைப்பதிலேயே சிலர் இங்கு தீவிர ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் அவர்களது கருத்துகள் காலத்தைக் கடந்தும் உயிர் வாழும் என்ற நினைப்புதான் அவர்களது பிழைப்பைக் கெடுக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் இவ்வகையான அசாதாரண நிகழ்வுகளின் பின்னணி என்ன? இவை எமது போராட்டத்தில் ஏற்படுத்தும் சாதக பாதகங்கள் என்ன? என்பவை பற்றி கிஞ்சித்தும் கவலையில்லாத இந்த விட்டேத்திகள் பயனனுள்ள கருத்தாடல்களை முன்வைக்க மாட்டார்கள் என்பதை மீண்டும் தலையில் அடித்து சத்தியம் செய்துள்ளார்கள்.

இருபது ஆண்டுகளுக்கு மேல் ஐரோப்பாவில் வாழும் எனக்கு இவை அசாதாரண நிகழ்வுகளாக தெரிகிறது.

ஐயா சமாதானம்

பாரிஸ் விமான நிலையத்தில் பணிபுரியும் எனக்கு நீர்; சொன்ன செய்தியும் அதை உமது எசமானர் திரித்து சொன்ன விதமும் நன்றாகத் தெரியும். நீர் ஆடு நனைகின்றதென்று ஓநாய் கணக்கில் கதைவிட வேண்டாம்.

ஐயா சமாதானம்

ஐரோப்பிய நாடுகளில் நீர் பம்மாத்துவிடுவதைப் போல ஒன்றும் பெரிய அசாதாரண நிகழ்வுகள் நடைபெற்றவிடவில்லை. மூதுரில் பட்டிணிக்கு எதிரான அமைப்பின் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை,எல்லைகளற்ற மருத்துவர்கள் சங்க உறுப்பினர்கள் வெளியேற்பட்டமை(இவையெல்லாம் பிரான்சை தளங்கொண்டு இயங்குபவை) என்பவை எல்லாம் உமது எசமாரின் உண்மையான இனவாத கொலைவெறி முகத்தை பிரெஞ்சு மக்களக்கு இனங்காட்டிவிட்டன.

இங்குள்ள சிறீலங்கா தூதரகம் உம்மைப்போன்ற சிலரை 2500யுரோ சம்பளம் கொடுத்து பணிக்கமர்த்தி சில பத்திரிகைகளில் விடுதலைப்புலிகளைப் பற்றி எழுதுவிக்க வைத்தாலும் அந்த பருப்பு பிரான்ஸ்; அரசாங்க மட்டத்திலும் மக்கள் மத்தியிலும் வேகவில்லை.உலக வல்லரசுகளில் ஒன்றும் பாதுகாப்புச் சபையில் விட்டோ அதிகாரம் கொண்டதுமான பிரான்ஸ் நாடு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மையை புரிந்துகொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை.நீங்கள் என்னதான் அல்கைதா கதையை விட்டாலும் அந்தப் பருப்பும் வேகாதையா! பிரான்ஸ் புஸ்சின் வாலை பிடித்துக்கொண்டு அவர்சொல்வதற்கெல்லாம் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிக் கொண்டிருக்கிற நாடு அல்ல என்பது யாழ் இணைய வாசகர்களுக்கு தெரியும்.ஐயோ புலம்பெயர்ந்த தமிழருக்கு ஆபத்து என்று நீர் முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டாம்

உமது பருப்பு இங்கு வேகாது கூலியே,

சர்வதேச நிலைப்பாடு என்ன என்பதை இந்த சிறிலங்கா பத்த்ரிகை சொல்கிறது.முதலில் கேட்க்கப் பட்ட கேள்விகளுக்குப் பதில்கள் எங்கே? யாழ்க் களத்தில் பிரச்சாரம் செய்ய மட்டும் முடியாது கேள்விகளுக்குப் பதிலும் அழிக்க வேண்டும்.

பொறுப்பளருக்கு வேண்டுகோள் இந்தக் கூலி இங்கு தொழில் செய்ய தொடர்ந்தும் அனுமதிக்க வேண்டாம்.கருதாடல் செய்வதாயின் நாமும் தயார் ஆனால் பிரச்சாரம் மட்டும் செய்ய அனுமதிக்க வேண்டாம்.

The Geneva talks on October 28 and 29 broke down on the A9 highway and the Co-chairs are known to be even considering the extreme step of sanctions because of the government's failure to respond adequately to the humanitarian catastrophe in the northeast. According to most independent analysts, the LTTE won the battle in Geneva by convincing the international community that a hard line government was unwilling to reopen a highway through which essential supplies could be brought to hundreds-of-thousands of people who are on the brink of starvation

Going for peace, gone to pieces

By: Koththamalli

Courtesy: Daily Mirror - November 8, 2006

http://www.tamilcanadian.com/page.php?cat=52&id=4526

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருபது ஆண்டுகளுக்கு மேல் ஐரோப்பாவில் வாழும் எனக்கு இவை அசாதாரண நிகழ்வுகளாக தெரிகிறது.

நல்லா தான் பிரச்சாரம் செய்கீறிர் பாறவாய் இல்லை :P :P

  • தொடங்கியவர்

''பொறுப்பளருக்கு வேண்டுகோள் இந்தக் கூலி இங்கு தொழில் செய்ய தொடர்ந்தும் அனுமதிக்க வேண்டாம்.கருதாடல் செய்வதாயின் நாமும் தயார் ஆனால் பிரச்சாரம் மட்டும் செய்ய அனுமதிக்க வேண்டாம்'' என்ற நாரதரின் எழுத்தில் தெரிகிறது எவ்வளவு கருத்து வறுமையில் இருக்கின்ற அவமானமான நிலை என்பது.

எனது கருத்துகளுக்கு எதிராக தன்னிடம் விசயஞானம் இல்லாத ஒவ்வொரு தடவையும் எனக்கு கூலிப்பட்டமும் துரோகி முத்திரையுமே நாரதரால் தரமுடிந்ததே அன்றி அறிவார்ந்த கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் மனப்பக்குவம் அவர் கருத்தாடல்களில் கிஞ்சித்தும் கிடையாது.

யாழ் களத்தில் கருத்தெழுத எனக்கு தடை கோரும் நாரதரின் வேண்டுகோள் பற்றி களநிர்வாகிகளும் மற்றைய கள உறுப்பினர்களும் தங்கள் மேலான கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுதல் ஆரோக்கியம் உள்ளதாக இருக்குமென மனதார நம்புகிறேன்.

அடுத்து நவம் எழுதியது பற்றிய சில கருத்துகளை வைக்கிறேன். நல்லது நவம், நீர் விமானநிலையத்தில் வேலைசெய்வதால் உமக்கு அங்கு என்ன நடந்தது என்பது பற்றி விபரமாக தெரிய வாய்புகள் அதிகம்.

ஆனால் ''பிரான்ஸ் அரசும் மக்களும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாட்டை புரிந்துள்ளனர்'' என நீர் குறிப்பிடுவது பற்றி சில சந்தேகங்களை இங்கு முன்வைக்கிறேன்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் கடந்த வருடம் ஒக்டோபரில் பிரித்தானியாவால் புலிகள் மீதான பிரயாணத்தடை கொண்டுவரப்படவேண்டும் என்பது முன்மொழியப்பட்டபோது அதை தீவிரமாக ஆதரித்து வாக்களித்த நாடுகளின் வரிசையில் ஜேர்மனியும் நெதர்லாந்தும் மட்டுமல்ல நீர் குறிப்பிட்ட பிரான்ஸ் கூட இருந்ததற்கு ஏன்?

ஐரோப்பிய ஒன்றியம் 2006 மே 30இல் புலிகள் மீதான முழுத்தடை கொண்டுவரப்பட்ட போது அதை எதிர்த்த நாடுகளின் வரிசையில் நீர் குறிப்பிட்ட பிரான்ஸ் இல்லாதது ஏன்?

இவைகள் குறித்து பதில்கள் தேட கீழ் உள்ள இணைப்பும் பயன் உள்ளதாக இருக்கும்

ஐரோப்பிய ஒன்றியம் தடை - உங்கள் கருத்து என்ன?

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...er=asc&&start=0

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம் அய்யா அய்ரோப்பிய யூனியன் தடைகொண்டு வந்தபோது அதற்கு பிரான்சும் ஆதரவு தெரிவித்ததற்கான காரணங்களில் மிக முக்கியமானது என்னவெனில் பிரான்ஸ் சாள் டி கோல் விமான நிலையத்தில் யாரோ ஒரு தமிழர் பயணிகளின் பயணபொதியை களவெடுத்ததுதான் காரணம்.அதேமாதிரி இப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்தால் புலிகளை தமிழீழத்தில் தடைசெய்யவும் ஆலோசிக்கினமாம் நினைச்சா கவலையாதான் இருக்கு :cry: :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சமாதானம் என்ற பெயரில் எழுதுபவர் மேற்கோள் காட்டும் செய்தித் தளங்கள் பெரும்பாலும் சிங்கள சார்புள்ள செய்திகளாகவே இருக்கின்றன. ஏசியன்ரிபு என்பது கருணா பிரச்சனையில் மட்டுமல்ல, தாய்லாந்தில் புலிகள் என்று சிங்கள அரசுக்கு அடிக்கடி செய்தி கொடுத்துக் கொண்டிருப்பது. ஒரு சிங்களப் பேராசிரியர் தான் நடத்துகின்றார் என நினைக்கின்றேன். இவர் பற்றி சிவராமும், பீஸ்மரும் அடிக்கடி உண்மைகளை வெளிக்காட்டி எழுதுபவர்கள்.

அவ்வாறன செய்hதித் தளங்கள், இவ்வாறன பயத்தினை மக்கிளடம் கூட்டுவது மூலம் ஒதுங்கியிருக்க வைக்க வேண்டும் என நினைக்கின்றன. கருணா பிரிவின் போது கூட கருணா போனதால் இயக்கம் அழிஞ்சு போச்சு என்று கதை விட்டது கூட, தமிழ்மக்கள் வெறுப்பால் ஒதுங்க வைக்கலாம் என்ற நப்பாசையில் தான்.

அது தோற்றுப் போனாலும் இவ்வாறு தொடரான முயற்சிகளில் ஈடுபடுகின்றன. எனவே சமாதானம் அவர்கள் அடிக்கடி இனவாத ஊடகங்களை மே;றகோள் காட்டுவது குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.

''பொறுப்பளருக்கு வேண்டுகோள் இந்தக் கூலி இங்கு தொழில் செய்ய தொடர்ந்தும் அனுமதிக்க வேண்டாம்.கருதாடல் செய்வதாயின் நாமும் தயார் ஆனால் பிரச்சாரம் மட்டும் செய்ய அனுமதிக்க வேண்டாம்'' என்ற நாரதரின் எழுத்தில் தெரிகிறது எவ்வளவு கருத்து வறுமையில் இருக்கின்ற அவமானமான நிலை என்பது.

எனது கருத்துகளுக்கு எதிராக தன்னிடம் விசயஞானம் இல்லாத ஒவ்வொரு தடவையும் எனக்கு கூலிப்பட்டமும் துரோகி முத்திரையுமே நாரதரால் தரமுடிந்ததே அன்றி அறிவார்ந்த கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் மனப்பக்குவம் அவர் கருத்தாடல்களில் கிஞ்சித்தும் கிடையாது.

யாழ் களத்தில் கருத்தெழுத எனக்கு தடை கோரும் நாரதரின் வேண்டுகோள் பற்றி களநிர்வாகிகளும் மற்றைய கள உறுப்பினர்களும் தங்கள் மேலான கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுதல் ஆரோக்கியம் உள்ளதாக இருக்குமென மனதார நம்புகிறேன்.

எனக்கு விசய ஞானம் இல்லாமை இருக்கட்டும், எனக்கு என்ன இருக்கு இல்லை என்பது களத்தில அனேகமானவர்களுக்குத் தெரியும், நீர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதலில இது கருதுக்களம் இங்கு பிரச்சாரம் செய்வதற்கு மட்டும் சிறிலங்கா புலனாய்வுத் துறையால் உண்டாக்கப்படும் செய்திகளை இணைக்கும் களம் இல்லை.

முதலில கேட்க்கப் பட்ட கேள்விகளுக்கு உமது கருத்தைத் தெருவியும் அதன் மூலம் தான் உமது நோக்கம் இங்கு பிரச்சாரமா கருதாடலா என்று கள நிர்வாகம் தீர்மானிக்கலாம்.

உமக்கு விசய ஞானம் இருக்கா இல்லையா, உமது தொழில் என்ன என்பதை நாங்கள் உமது பதில்களில் இருந்து தீர்மானிக்கலாம்.

1)சமாதான கோசம் என்று நீர் கூறுவது என்ன?

2)பன்முகக்கோட்பாடு என்றால் என்ன? அதில் வரும் கோட்பாடுகள் என்ன என்ன?

3)கூட்டமைப்பிற்குள் யார் யார் வர வேண்டும்?

4) ப்லென்டி ஒf கில்ட் என்று நீர் கூறுவது எதனை?

5) பட்டு வேட்டிக்கு ஆசைப் பட்டு கோவணத்தையும் இழக்க வேண்டும் என்று நீர் கூறியதில் எது பட்டி வேட்டி எது கோவணம்?

கள உறவுகளுக்கு உம்மைப் போன்ற கூலிகளை இனங்க்காண முடியும்,இது உமக்கு கொடுக்கப் படும் கடைசிச் சந்தர்ப்பம். நீர் இங்கு இருக்க வேண்டுமா இல்லையா என்பதை உமது பதில்களில் இருந்து தீர்மானிக்கலாம்.

  • தொடங்கியவர்

........இது உமக்கு கொடுக்கப் படும் கடைசிச் சந்தர்ப்பம். நீர் இங்கு இருக்க வேண்டுமா இல்லையா என்பதை உமது பதில்களில் இருந்து தீர்மானிக்கலாம்.

உது மாதிரி கன சலசலப்பை கண்டனான்.

புதிசா ஏதாவது சொல்லும் உம்மிடம் கைவசம் சரக்கு இருந்தால்.

உம்முடைய கேள்விகளுக்கு விரிவான பதில்கள் ஏற்கனவே எழுதியுள்ளேன். ஓய்வு நேரத்தில் ஆற அமர இருந்து பழைய யாழ் கள பதிவுகளை ஒவ்வொன்றாய் வாசியும்.

அப்பிடியும் விளக்கம் போதவில்லையென்றால் ஒரு நல்ல உளவியல் மருத்துவரை நாடவும்.

உது மாதிரி கன சலசலப்பை கண்டனான்.

புதிசா ஏதாவது சொல்லும் உம்மிடம் கைவசம் சரக்கு இருந்தால்.

உம்முடைய கேள்விகளுக்கு விரிவான பதில்கள் ஏற்கனவே எழுதியுள்ளேன். ஓய்வு நேரத்தில் ஆற அமர இருந்து பழைய யாழ் கள பதிவுகளை ஒவ்வொன்றாய் வாசியும்.

அப்பிடியும் விளக்கம் போதவில்லையென்றால் ஒரு நல்ல உளவியல் மருத்துவரை நாடவும்.

இவ்வளவு தான் உமது விசய ஞானமா,எங்கே பதில் அழித்த இணைப்பைத் தாரும் பாப்பம். :):lol::D

  • தொடங்கியவர்

இங்கே சமாதானம் என்ற பெயரில் எழுதுபவர் மேற்கோள் காட்டும் செய்தித் தளங்கள் பெரும்பாலும் சிங்கள சார்புள்ள செய்திகளாகவே இருக்கின்றன. ஏசியன்ரிபு என்பது கருணா பிரச்சனையில் மட்டுமல்ல, தாய்லாந்தில் புலிகள் என்று சிங்கள அரசுக்கு அடிக்கடி செய்தி கொடுத்துக் கொண்டிருப்பது. ஒரு சிங்களப் பேராசிரியர் தான் நடத்துகின்றார் என நினைக்கின்றேன். இவர் பற்றி சிவராமும், பீஸ்மரும் அடிக்கடி உண்மைகளை வெளிக்காட்டி எழுதுபவர்கள்.

அவ்வாறன செய்hதித் தளங்கள், இவ்வாறன பயத்தினை மக்கிளடம் கூட்டுவது மூலம் ஒதுங்கியிருக்க வைக்க வேண்டும் என நினைக்கின்றன. கருணா பிரிவின் போது கூட கருணா போனதால் இயக்கம் அழிஞ்சு போச்சு என்று கதை விட்டது கூட, தமிழ்மக்கள் வெறுப்பால் ஒதுங்க வைக்கலாம் என்ற நப்பாசையில் தான்.

அது தோற்றுப் போனாலும் இவ்வாறு தொடரான முயற்சிகளில் ஈடுபடுகின்றன. எனவே சமாதானம் அவர்கள் அடிக்கடி இனவாத ஊடகங்களை மே;றகோள் காட்டுவது குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.

உமது கருத்துக்கு நன்றிகள்.

அவை தமிழ் தேசியத்துக்கு எதிரான ஊடகங்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தவைதான். ஆனால் நான் இங்கு குறிப்பிடுவது, அவற்றின் செய்திகள் அடிப்படையே இல்லாத வெறும் புனைவுகளா? இல்லை திரிக்கப்பட்ட செய்திகளா? என்பதை யாழ் கள உறவுகள் மூலம் தெளிவு படுத்தவே என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

உமது கருத்துக்கு நன்றிகள்.

அவை தமிழ் தேசியத்துக்கு எதிரான ஊடகங்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தவைதான். ஆனால் நான் இங்கு குறிப்பிடுவது, அவற்றின் செய்திகள் அடிப்படையே இல்லாத வெறும் புனைவுகளா? இல்லை திரிக்கப்பட்ட செய்திகளா? என்பதை யாழ் கள உறவுகள் மூலம் தெளிவு படுத்தவே என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

:):lol::D:lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உமது கருத்துக்கு நன்றிகள்.  

அவை தமிழ் தேசியத்துக்கு எதிரான ஊடகங்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தவைதான். ஆனால் நான் இங்கு குறிப்பிடுவது, அவற்றின் செய்திகள் அடிப்படையே இல்லாத வெறும் புனைவுகளா? இல்லை திரிக்கப்பட்ட செய்திகளா? என்பதை யாழ் கள உறவுகள் மூலம் தெளிவு படுத்தவே என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

¿ýÀ§Ã ºÁ¡¾¡Éõ þôÀÊ ¿£í¸û ƒÉɡ¸š¾¢Â¡¸ þÕ󾡸 º¢Ä §Å¨Ç ¬Éóòºí¸Ã¢ìÌ ¸¢¨¼ò¾ Á¡¾¢Ã¢ «øÄÐ «¨¾ Å¢¼ ¯Â÷Å¡É Å¢Õиû ¸¢¨¼ì¸Ä¡õ.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.