Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றங்கள் தோற்றத்திலே அன்றி திட்டத்திலோ! தீர்விலோ! காணோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மாற்றங்கள் தோற்றத்திலே அன்றி திட்டத்திலோ! தீர்விலோ! காணோம்
ma.jpg

வளலாய் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் வளத்துக்கும் உறுதுணையாக இருந்த மக்களின் சொந்த நிலங்களை மேலாதிக்க நிலையில் அபகரித்து வளலாய் மாதிரிக்கிராம வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதை நிலத்தின் உரிமையாளர்களும் வளலாய் மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று வளலாய் மீள் குடியேற்ற செயற்குழு அறிவித்துள்ளது.

 
வளலாய் கிராமத்தில் 240 ஏக்கர் நிலத்தில் ஆயிரத்து 22 குடும்பங்களை குடியேற்றுவதற்கு மாதிரிக் கிராமம் அமைப்பது தொடர்பாக அரசு அறிவித்தல் செய்துள்ளது. 
 
இந்தக் குடியிருப்பில் வலி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களைக் குடியேற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு வளலாய் மீள்குடியேற்ற செயற்குழு தனது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.
 
வளலாய் மீள்குடியேற்ற செயற் குழுநிர்வாகியான ஓய்வுநிலை நிர்வாக சேவை அதிகாரி வ.கந்தசாமி கருத்துத் தெரிவிக்கையில்;
 
"மாதிரிக்கிராமம் அமைப்பதற்கு அரசு அறிவித்துள்ள காணிகள் வளலாய் மக்களின் பூர்வீக சொத்து; இதற்கான உறுதிகள், ஆவணங்கள் உள்ளன. அவற்றைச் சமர்ப்பித்து நிலத்தின் உரிமையை மீளப் பெறுவதற்கு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலம் வளலாய் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் வளத்துக்கும் நிலைக்களமாக இருந்தது. இதைப் பாதுகாப்பு வலயம் என்று அறிவித்து பாதுகாப்பு வேலி அமைத்து உள்ளடக்கி அரசு தனது விருப்பத்துக்கு ஏற்ப நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இதனை வளலாய் மீள்குடி யேற்ற செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
 
2013 ஆம் ஆண்டு மஹிந்த அரசு முன்னெடுத்த மாதிரிக் கிராம வேலைத்திட்டம் மக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டது. அதனையே புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசு செயற்படுத்த முற்படுகின்றது.
 
பெரும்பான்மை இன அரசியல் தலைவர்கள் ஒரேமாதிரித்தான் செயற்படுகின்றனர். தமிழர்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது'' என்று தெரிவித்தார். 
 
வளலாய் மாதிரிக்கிராம வேலைத் திட்டத்துக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=587943875716536561#sthash.m5E8r78r.dpuf

 

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவும்  தெரியாமலா அரசியல்?

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் ஒரே குட்டையில் ஊறியதுகள் தானே. எவனும் தமிழனுக்கு நன்மை செய்யப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் ஒரே குட்டையில் ஊறியதுகள் தானே. எவனும் தமிழனுக்கு நன்மை செய்யப் போவதில்லை.

ஏன் இப்படி வெறுத்து போகிறீர்கள் ?
புலிகளுக்கு அரசியல் ஞானம் இல்லை அதனால்தான் கடந்த 30 வருடத்தில் ஒன்றையும் பெற முடியவில்லை.
 
இனி நாம் அரசியலை ஆட்டுகல்லில் போட்டு ஆள் ஆளுக்கு ஆட்டினோம் என்றால் தராமல் எங்கு போக போகினம் ?? 

எல்லாரும் ஒரே குட்டையில் ஊறியதுகள் தானே. எவனும் தமிழனுக்கு நன்மை செய்யப் போவதில்லை.

தமிழனுக்கு நன்மை செய்வதா மற்றவனின் வேலை .தமிழனே தமிழனை போட்டு தள்ள மற்ற தமிழன் விசில் அடிக்கின்றான் இதற்குள் மற்றவனை குறை பிடித்துக்கொண்டு  :(

  • கருத்துக்கள உறவுகள்

..

 

இனி நாம் அரசியலை ஆட்டுகல்லில் போட்டு ஆள் ஆளுக்கு ஆட்டினோம் என்றால் தராமல் எங்கு போக போகினம் ?? 

 

 

இலங்கை பாற்கடலில் மகிந்தாவை மத்தாகவும், சிறீசேனாவை கயிறாகவும் கொண்டு தமிழர்களும் சிங்களர்களும் கடைந்தால் வரும் ஆலகால விசத்தை இந்தியா விழுங்கி கண்டம் நீலமாக, ஐ.நா சபை சிவபெருமானாக வந்து அருள் புரிவார்..'அமுதம்' கிட்டலாம்!

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு நன்மை செய்வதா மற்றவனின் வேலை .தமிழனே தமிழனை போட்டு தள்ள மற்ற தமிழன் விசில் அடிக்கின்றான் இதற்குள் மற்றவனை குறை பிடித்துக்கொண்டு  :(

இதை வேற செய்கிறார்களா ??
நம்ப முடியாது இருக்கிறது !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.