Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

பெண்ணில்லையே தாயே

நீயோ இறைவனுக்கும் மேல்

தாயே நீயில்லை எனில்

இவ்வுலகில் நானில்லை

எனக்குள் உயிர் கொடுத்து

்அதற்கு உருவம் தந்து

அன்பாலே எனை வளந்து

உன் துயரம்தனை மறைந்து

எனை வாழவைக்கும்

தெய்வம் நீயம்மா

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

தெய்வம் நீயம்மா

ஈரைந்து மாதம் சுமந்து

இந்த உலகத்திற்க்கு

என்னை அறிமுகப்படுதிய

உனக்கு என்ன செய்வேனோ.......?

என் தெய்வத் தாயோ.......

என் தாயாகி, குருவாகி

நண்பியாகி,காதலியாகி

என்னுள் வாழ்பவளே

எந்தன் உயிர் நீ கொடுத்த

பிச்சைதான் தாயே

என்னுயிரை எடுக்கும்

உரிமையும் உனக்கு மட்டும்தான்

என் தாயே.........

என்னை ஒரு தடவை

பார்த்து விடு உன்

கண்ணைத் திறந்து...............

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணில்லையே அவள்

பெரிய பெண்ணில்லையே!

சிறியவளவளிடம் நீவிர்

சிற்றின்பம் நாடலாமோ!

கணவனுக்கு தாசியாய்

வாழ்தல் முறையன்றோ!;

காதலுக்கு கணிகையாய்

நினைப்பது பிழையன்றோ!

சிறியவள் செய்யும்

சிறுபிழை யெல்லாம்!

பெரியவர் நீவிரெல்லாம்

பொறுப்பது நும் கடமையே!

(மண்ணிக்கவும் , பெண்ணில்லையே என்பதற்கு எழுதினேன். இடையில் இரு பாடல் வந்துவிட்டது)

கடமையே கண்ணாய்

காலையில் எழுந்து..

காலைக்கடனையும் மறந்து

அவசரமாக ஆடைகள்

உடுத்தி..

வேகமாக வண்டியை மிதித்து

ஓட்டமும் நடையமாய்

உள்ளே..போனேன்...

அம்பாள் தரிசனம்..

அழகாய் கிடைத்தது..

உள்ளும் புறமும் சுற்றிய

பிறகு உற்றுப் பார்த்தால்..

எல்லாம் மாயை

மாயை பார்த்து

விகடம் மாய்ந்தால்

ஆய கலைகள் அறிவதெப்படி? :P

ஆய கலைகள் அறிவதெப்படி.......?

உன் கேள்விக்கு பதில் சொல்ல

பலருள்ளபர் களத்திலே,

வனத்திலே கூடி குலாவி

மரத்தில் ஓடித்திரியும்

வனாரங்களிற்க்கு

புரிவதெப்படி ஆய கலைகள்.........?

அந்த கலக்கத்தை

தீர்ப்பாயா நீ...........?

தீர்ப்பாயா நீ?

நித்திரையின்றி

உன்னால்நான்

தினமும் தவித்தேனே!

களவாகக் கனவில் வந்து..

காற்சட்டைப் பின் பொக்கற்றில்

பிளேட்லால் கீறி..

எனது பணப்பையை

திருடிச் செல்லும்

நீ யார்?

நீ யார்....?

என் கனவில் உதிக்கும்

பெண்ணே நீ யார்?

உன் தரிசனத்தை

எனக்கு எப்போது

கொடுப்பாய்...? என்

கனவுத் தேவதையே,

உன்னால் தூக்கம் இனிக்கிறது

பகல் எரிகிறது,

என்னை சுட்டெரிக்காமல்

என் கண்ணுக்கு

நேரில் தரிசனம் கொடு

உனக்கு வாழ்வு கொடுக்கிண்றேன்

என் உயிர் வாழும் வரை

தீர்ப்பாயா நீ?

போர்க்குருவி எச்சமிடும்

புதினங்கள் அறிந்தபின்னும்

புறஞ்சொல்லி புலிமீது

அறம்பிழைத்த அயல்நாடே!

ரோ என்ற அதிவேக(வி)வேகிகளில்

புலன்கொண்ட கொண்ட புண்களுக்கு

மருந்திட்டுத் தீர்ப்பாயா?

ஓ! :lol: பிந்தி விட்டேனா?

Edited by ஆதிவாசி

தீர்ப்பாயா?

வாழும்வரை எனது

வாழ்கை முடியும்வரை...

வையகத்தில் நான்வாங்கும்

யூனிவர்சிட்டி லோன்களை

நீ கட்டித் தீர்ப்பாயா?

படைத்தவனே பதில்சொல்லு!

ஓ! :lol: பிந்தி விட்டேனா?

கொஞ்ச நஞ்சமில்லை ரொம்பவே பிந்தீட்டீங்கள் :D :P

சொல்லி விடு

சொல்லி விடு

என் அன்பே

சொல்லி விடு....

உன் உள்ளமதில்

உள்ளவற்றை

என்னவென்று சொல்லிவிடு...

எத்தனை நாள்

யான் பொறுப்பேன்

என்னவளே முடியவில்லை...

இன்று வரை

உன் மனதில்

இருப்பவன் யான் தானெ...????

யான் தானெ...????

என் மனதில்

இருப்பவன்

என நீ கேட்டு

எத்தனை நாள்

யான் பொறுப்பேன்

என்னவனே முடியவில்லை...

சொல்லி விடுகின்றேன்..

சொல்லி விடுகின்றேன்..

சொல்லி விடுகின்றேன்...

என் உள்ளமதில்

உள்ளவற்றை

என்னவென்று சொல்லிவிடுகின்றேன்!

ஆனால்...

அதற்கு முன்...

உன் சட்டைப் பையினுள்

எத்தனை டொலர்

கரன்சி நோட்டுக்கள்

உள்ளதென்று

நீ

சொல்லிவிடு..

சொல்லிவிடு...

சொல்லிவிடு!

சொல்லிவிடு சொல்லிவிடு

என்னவனே சொல்விடு

உன் பையில் உள்ள பணம்

எத்தனைகோடி சொல்லிவிடு.....

பாவை நானே போதுமென்று

பல்லிழித்து வந்தவனே

இன்று வந்து ஏனோ

லட்சம் கோடி கேட்கிறாய்...??

இது தான் உன் காதலா...???

:lol::D :P :P

காதலா?

இல்லையே..

கைப்பையினுள் கரன்சி வைத்திருக்காத

கருமிஉனை நான் எப்படி காதலிப்பேன்?

என் காதல் புனிதமானது...

தங்கக் கம்பளத்தில் மட்டுமே

எனது கால்கள் நடக்கவேண்டும்...

பார்வையில் பிளாற்றினக் கட்டிகள்

மட்டுமே படவேண்டும்...

சுவாசிக்கும் காற்றில்

ரோஜாப்பூ வாசம் மட்டுமே இருக்கவேண்டும்...

உன்னால் இவற்றை எனக்கு

தர முடியுமா?

முடியுமா உன்னாலென்று

முண்டியடித்து கேட்கிறாய்

இதயமதை தந்தயெனக்கு

இதுவுமா முடியாது....??

என்னவனே

ஏன் இன்னும்

என் மனதை புரியவில்லை...??

ஏழையென்று

தெரிந்த பின்னேன்

என் மனதை வதைக்கிறாய்...??

இத்தனையும்

கேட்டிடவா

என்னையின்று

காதலித்தாய்...???

:P :P :lol:

காதலித்தாய்

என்னை நீ...

இல்லையென்று சொல்லவில்லை...

ஆனால்..

என்னில் நீ கண்டதென்ன?

உதட்டுச் சிரிப்பு...

கட்டான உடல்..

வசீகரமான முகம்...

எனது அழகிய பேச்சு...

இவற்றைத் தானே நீ காதலித்தாய்?

உன்னால் என்

ஆன்மாவைக் கண்டுகொள்ள முடிந்ததா?

இல்லையே!

அவ்வாறாயின்...

ஏழையாகிய உனைநான்

கைகழுவி விடுவதில்

தவறேது உள்ளது?

பதில் சொல்வாய்

காதலா!

இத்தனையும்

கேட்டிடவா

என்னையின்று

காதலித்தாய்...???

காதலித்தாய்

என்று கலக்கமின்றி

சொல்கிறாயே

மைந்தா

இந்தா

இதைப் பிடி

என்னவென்று படி

வடிவான உன்

அத்தை மகள்

உனக்குத் தானென்று

கொம்மான்

எழுதியுள்ளார்

அம்'மான் '

உனக்குக் கிடைத்தால்

எம் பெருமான்

ஆசியிது வென்பேன்

சும்மாவா தம்பி

சுருட்ட எவ்வளவோ

சொத்திருக்கு அவளிடம்

'சுருட்டை' எவ்வளவு

நாள் நானும்

சுருட்டுவது?

கையிரண்டைப்

பிசையாமல்

கடகடவென்றே

உன் நெஞ்சத்தில்

உள்ள சேதி

சொல்வாய்...

மைந்தா

குறிப்பு : சற்றே பிந்தியதால் எங்கோ பிழைத்து விட்டது...

Edited by kavi_ruban

அவ்வாறாயின்...

ஏழையாகிய உனைநான்

கைகழுவி விடுவதில்

தவறேது உள்ளது?

பதில் சொல்வாய்

காதலா!

காதலா

உன் மேல்

எனக்குக்

காதலா?

கண்டபடி

கற்பனை செய்யாதே

எட்டி நின்று

பல்லிளித்தால்

உன் மனசுக்குள்

வலியா?

மயக்கங்கள்

வருதா?

களையான பெண்னென்னை

கண்டு கண்ணடிப்பீர்

முறுவலித்தால்

கிட்டவந்து

கையணைப்பீர்

கலியாணம் என்று

வந்தால்

கடைசி வரை

காணமல் போவீர்

போமய்யா

காதலால் வந்தென்னை

கட்டி போட்டவளே

நெஞ்சத்தை கிழித்தேண்டி

கருவாடாய் போடுகிறாய்...??

வார்த்தை அம்பெடுத்து

வலிந்து வந்து தாக்குகிறாய்

என் செய்வேன் நானடி

எனக்குள்ளே அழுகிறேன்...

இத்தனை பிடிவாதம்

என்னவளே

ஏன் உனக்கு...???

தப்பேதும் செய்யாமல்

தண்டனை எனக்கேன்...??

உன்னாசை தீர்ந்ததுமா

உள்ளமதை நீயெறிந்தாய்...??

இல்லை நீ என்றானால்

என் உயிரை விட்டிடுவேன்

சத்தியமாய் சொல்கிறேன்

தட்டிடாமல் நீ கேள்...

தட்டிடாமல் நீ கேள்...

எனது இதயத்தில்

ஏற்கனவே ஓட்டை விழுந்துவிட்டது...

இன்னொரு தட்டை

தாங்க அதற்கு

பலமில்லை...

ஆகையினால்...

தட்டிடாமல் நீ

எட்ட நின்று நீ கேள்...

என் இதயத்தில் உனக்கு

இடம் இருக்கின்றதா என்று!

என்றுதான் சிந்திக்க

போகின்றீர்கள்

சிதைந்து போகும்

கலாச்சாரத்தை

அழித்து போகும

பண்பாட்டை

இருளில் தவிக்கும்

வாழ்கவை வறுமையில்

சிதையும்

கோலங்களை என்று தான்

சிந்திக்க போகின்றீர்கள்

வீணே

ஒடிப்போனவள்கதை

பேசிப்பேசி அழிந்து

போகும் உங்கள்

காலத்தை சிந்தித்தால்

நாம் இமயத்தையே

தொட்டிருப்போம்

எப்போது சிந்திப்பீர்கள்

Edited by கஜந்தி

எப்போது சிந்தீப்பீர்கள்

என்றெனக்கு தெரியவில்லை

ஆனாலும் உன் நினைப்பை

அழிக்க என்னால் முடியவில்லை....

இல்லையது இதயமென்று

இன்று வந்து உரைத்துவிட்டாய்

எப்படித்தான் முடிந்ததுவோ

எனக்கு வந்து சொல்லாயா...??

ஈட்டி கொண்ட வார்த்தையாலே

இதயமதை கிழித்துவிட்டாய்

இரக்கமில்லா உன்னுடனே

எப்படி நான் வாழ்வேனோ...??

காலில் விழுந்து கதறையிலும்

காலால் எட்டி உதைக்கிறியே

இனியுமென்ன வாழ்வேனெக்கு

இறந்து நானே போகிறேன்...

எண்ணி எண்ணி ஒரு நாள்- நீ

எனை எண்ணி எண்ணி நீயழுவாய்

அன்றுனக்கு புரிந்து விடும்

அன்பு மனம் என்நிலை தான்...

நல்ல மனமொன்றுடனே

நலமுடனே வாழ்ந்து விடு

கையெடுத்து கெஞ்சுகிறேன்- எனக்கு

கருமாதி செய்து விடு....

விடு விடுவென

எனை விட்டுப் போன

இதயமே..

கல்லறை சமாதிகளைப்

பார்

காதலில் தோத்த

பல ஆண்கள்..

காதலை வாழவைத்த

ஒருசில பெண்கள்..

புரிந்தால் மீண்டு வந்துவிடு

காதல் இல்லாமல் போனாலும்

போகட்டும்

நான் வாழவேண்டும்..

ஆண்கள் தோற்பதும்

மாள்வதும்

இல்லாதுபோகவேண்டும்.

வா வந்து விடு

விடு விடுயென்றேன்

விடாமல் துரத்தினாய்

இன்றேன் வந்தெந்தன்

இதயத்தை கலக்கினாய்...???

காதல் பிச்சை கேட்டு

காலடியில் விழுந்தவளே

சீ..தூ..வென

சீறியேன் துப்புகிறாய்...???

பெண்ணெ;று உன்னையே

பெருமையாய் எண்ணியானை

கல் கொண்டடித்தவளே- உனை

கனவிலும் நினைப்பேனோ....???

வா வாவென

வந்தென்னை அழைக்கிறாய்

இத்தனையும் மறந்துவிட்டா

என்னையின்று அழைக்கிறாய்....??

வெட்கமில்லையா உனக்கு....???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.