Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

நிற்கின்றேன்

நடக்கின்றேன்..

நினைவுகளால்

பறக்கின்றேன்...

நெஞ்கினிலே

நீவந்ததால்..

நிர்க்கதியாய்..

நின்றேன்...

  • Replies 1.9k
  • Views 183.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நின்றேன் நிழலாடிய உன் விழியில் முகம் பார்த்து

நின்றேன் சிலையாய் உன் காதல் மனது அறிந்து

நின்றேன் ஆவியாய் உன் ஆதாரம் இல்லாத பிரிவால்

நின்றேன் அனாதையாய் உன்னை விரும்பியதால்

விரும்பியதால் அனாதையானாய்-நீ

உன்னை விரும்பியதால்

ஆவியானேன. நான்..

நான்

என்ற அகந்தையில்

என்னை மறந்தாய்

எண்ண மறந்தாய்

மறந்தாய் மொழி மறந்தாய் மொழி வந்த வழி மறந்தாய்

இனம் மறந்தாய் உனை ஈன்ற தாய் நிலம் மறந்தாய்

ஒட்டுறவு மறந்தாய் ஒட்டுக் குழுவானாய்

விட்டு விடு என்றாலும் கேளா விபரீதம் ஆனாய்

எதிரிக்கு நாயானாய் எழும்புக்கு பேயானாய்

உதிரிப்பூவென ஒருநாள் உதிர்வாய் என அறிவாயோ

Edited by vettri-vel

அறிவாயோ

ஈழத்தின் வேதனையை

ஈழமகளின் சோதனையை

தாய்நிலத்தின் வலியினை

தாளவொண்ணாத்துயரினை

இனவெறி தலையேறியதால்

தடுமாறும் சிங்களத்தை

அறிவாயோ என்னுறவே

அறிந்தும் சொறியாதே

சீழ்வடியும் நின்விழியில்...........

நின்விழியில் நீர்விழுந்தால்

நெஞ்செல்லாம்..தீ எரிய..

பஞ்சணையில் தூக்கமில்லை..

என்னுயிரே...ஏன் அழுகை....

உண்ணவில்லை ஊன் கவனம்..

ஊமையில்லை நீ பேசவில்லை..

சொல்லவொணா சோகங்களை

புதைத்துவைத்தால் தவித்திடுவேன்..

என்னகுறை ஏது குறை

என்னவளே.. ஏன்அழுகை

ஏன் அழுகை

ஓற்றை வார்த்தையில்

கல்லெறிந்துவிட்டு

கைம்மருந்து போடுகின்றாய்

குறும்புக்காரன் நீ

சுயமறிந்தும் உன்னை

சுகமறிய விட்டேனே

பாதகத்தி நான் செய்த

பாழான செயலதுவன்றோ

அன்றோ நல்ல மழை...- பெண்

அவளோ நனையவில்லை

வீதியில் நடந்தும் அவள் -கரு

விழிமை கரையவில்லை

கையிலோ பெரியகுடை...- அது

கனக்குமோ எனக்கவலை....

மெல்லியல் வேகநடை.. - நான்

தொடர்வதில் சிறியதடை..

விமானமாய் வந்த ஊர்தி - மெல்ல

விரித்தது கதவைப் பாதி...

ஏறினாள்..அந்த அழகி..- ஓர்

ஓரமாய்..ஏழை ஏங்கி

அதுவவள் மழைநேர பவனி..-நானோ

தெருவோர சயனி..

அன்றோ நல்ல மழை...- பெண்

அவளோ நனையவில்லை

வீதியில் நடந்தும் அவள் -கரு

விழிமை கரையவில்லை

கையிலோ பெரியகுடை...- அது

கனக்குமோ எனக்கவலை....

மெல்லியல் வேகநடை.. - நான்

தொடர்வதில் சிறியதடை..

விமானமாய் வந்த ஊர்தி - மெல்ல

விரித்தது கதவைப் பாதி...

ஏறினாள்..அந்த அழகி..- ஓர்

ஓரமாய்..ஏழை ஏங்கி

அதுவவள் மழைநேர பவனி..-நானோ

தெருவோர சயனி..

தெருவோர சயனி

இதை நீ கொஞ்சம் கவனி..! :D

(''விக்னேஸ்வரா')

பள்ளியில படிக்க விட்டால்

பாடத்தில கவனமில்லை...!

டச்சு றோட்டில்

உன் சயனம்...

போற.... வாற...

பொம்புளைங்க

கொஞ்சம் கவனம்...!

கிளை விட்ட

தென்னம் புள்ள

இவன் வீட்டின்

அண்டையில

அதைப் பார்க்க

போன புள்ள

பொழுதோட

காண வில்லை..! :rolleyes:

தோப்போரம்

சர...சரக்க...

தெரு நாயும் குரை..குரைக்க...

பெண்தேடி....

அப்பன் வர

மாட்டிக்கொண்டான்

இவன் பாவமில்லை....! :P

பெண்ணோ அங்க

மசக்கையில

இவனோ கிழக்குச் சீமையில..! :D

நகைச்சுவைக்காக எழுதியது தவறாயின் பொறுத்தருள்க.... :D

Edited by gowrybalan

சீமையில நா இருக்கேன்

சீக்கிரமா வா மயிலே - எனக்கு

கடதாசி கிடைச்சுடுச்சு

கண்மணியே காதலியே

காதலிலே ஏங்குகின்ற

கூதலான ராத்திரிகள்

ஆதரிக்க நீ இருந்தால்

அழகான மணித்துளிகள்

ஆதலினால் என் உயிரே

அவசரமாய் வந்து விடு

ஆதியிலே தந்த இதழ்

அதை மீண்டும் தந்துவிடு

தந்துவிட தந்துவிட

வந்து விடும் மயக்கங்கள்

வந்துவிட்ட மயக்கத்தில்

மடை திறக்கும் வெண்துளிகள்

மடைதிறந்த வெள்ளத்தை

இடை சுமந்து முத்தாக்கும்

கொடை நீயும் கொண்டதனால்

உன் பிறப்பதுவே அற்புதமே

Edited by vettri-vel

அற்புதமே ஆராதனா...மெத்தை

வன்முறைக்கு வா வா வா

கண்கிறங்க காதல் செய்ய..சத்தமின்றி

சல்லாபிக்க வா வா வா

வரைமுறை என்பது உன்

வாய்வரும் என்றால் -நம்

தலைமுறை என்னாவது?

உதடுகள் காய்வது உன்

இதழ்களில் நனைந்திட-இது

உனக்கா தெரியாதது?

வயது என்னை வாட்ட-தேக

வயலில் தீயை மூட்ட-அன்பே

முத்த மழை பெய்ய வா...

அற்புதமே ஆராதனா...மெத்தை

வன்முறைக்கு வா வா வா

கண்கிறங்க காதல் செய்ய..சத்தமின்றி

சல்லாபிக்க வா வா வா

கூடத்தானே கொண்டைச்சேவல்..

கூவி அழைக்கிறது..

பெட்டைக் கோழிக்கென்ன கோபம்..

பேசாதிருக்கிறது..

காதல் குற்றம் என்றால்...

கடவுள் முதல் கைதி...

காமம் பாவம் என்றால்

மன்மதன் பெரும்பாவி..

நான் ஏக பத்தினி விரதன்..

என் ஏக்கம் தீர்க்க வரவும்..

அற்புதமே ஆராதனா...மெத்தை

வன்முறைக்கு வா வா வா

கண்கிறங்க காதல் செய்ய..சத்தமின்றி

சல்லாபிக்க வா வா வா

அற்புதமே ஆராதனா...மெத்தை

வன்முறைக்கு வா வா வா

கண்கிறங்க காதல் செய்ய..சத்தமின்றி

சல்லாபிக்க வா வா வா

வரைமுறை என்பது உன்

வாய்வரும் என்றால் -நம்

தலைமுறை என்னாவது?

உதடுகள் காய்வது உன்

இதழ்களில் நனைந்திட-இது

உனக்கா தெரியாதது?

வயது என்னை வாட்ட-தேக

வயலில் தீயை மூட்ட-அன்பே

முத்த மழை பெய்ய வா...

அற்புதமே ஆராதனா...மெத்தை

வன்முறைக்கு வா வா வா

கண்கிறங்க காதல் செய்ய..சத்தமின்றி

சல்லாபிக்க வா வா வா

கூடத்தானே கொண்டைச்சேவல்..

கூவி அழைக்கிறது..

பெட்டைக் கோழிக்கென்ன கோபம்..

பேசாதிருக்கிறது..

காதல் குற்றம் என்றால்...

கடவுள் முதல் கைதி...

காமம் பாவம் என்றால்

மன்மதன் பெரும்பாவி..

நான் ஏக பத்தினி விரதன்..

என் ஏக்கம் தீர்க்க வரவும்..

அற்புதமே ஆராதனா...மெத்தை

வன்முறைக்கு வா வா வா

கண்கிறங்க காதல் செய்ய..சத்தமின்றி

சல்லாபிக்க வா வா வா

வா...வா...வா...

என்றுரைத்தாய் வந்தேனடி

வந்த பின்னால்

பூ...இவனா...?

என்றுரைத்தால்

எங்கு செல்வேனடி..

காதலித்த போது

கண்ணே... மணியே...

என்றுரைத்த துண்மையடி...

கிட்ட வந்தபின்னால்

வார்த்தை இன்று

ஏனோ.. முட்டுதடி...

காதலித்த போது

காலம் பாரம் இல்லையடி

கட்டி வந்தபோது-

வேலை வெட்டி செய்தால்தான்

வாழ்க்கை வண்டி ஓடுமடி..

வெட்டிப்பயலாய்

வீட்டில் உன்னை

சுற்றித்திரிந்தால்..

குட்டிப் பயலுடன்

உன்னையும் கட்டிக்

காப்பதெப்படி...

கலங்காதே கண்மணியே

காதல் என்றும்

என்னெஞ்சில் உள்ளதடி...

காலை வந்தால் வேலை

காலம் இப்படியே

என்னைக் கொல்லுதடி..! :P

கொல்லு தடி ஏந்திவந்த குண்டர்களால் பயந்திருந்தோம்

எல்லை யில்லா சோகத்துள் எம்மையே புதைத்திருந்தோம்

வல்லை தந்த மைந்தனவன் பின்னணியில் இணைந்திருந்தோம்

தொல்லை யற்ற வாழ்வுவரும் ! எல்லைபோட நாடும்வரும்!!

வரும் பூக்கள்

சிரிக்கும்

விடுதலை பின்னால்..

பச்சை வயல்

கொழிக்கும்..

சந்தோசத்தில் நம்நாள்..

தேசம் திசை திரும்பும்..

பொழுதுகள் புதிதாகும்..

காலம் எம்மருகில்..

எம்மருகில் ஏதுமில்லை

ஏங்கி ஏங்கி தவிக்கின்றோம்

கொல்லையிலே வைத்த நெல்லி

குலை குலையாய் காய்க்குதாம்

அள்ளி அள்ளி நான் சுவைக்க

அதுக்கு வழிதான் இல்லை

இல்லை இல்லவே இல்லை

என் வீட்டிற்கு கூரை இல்லை

தெரியும் வானத்தில் நிலவு இல்லை

ஜன்னலில் சேலை இல்லை

உள்வரக் காற்று இல்லை

தூங்கிடப் பாய் இல்லை..

தூக்கமும் எனக்கு இல்லை

பானையில் நீர் இல்லை

பருகிடத் தாகம் இல்லை

அறைக்குள் விளக்கில்லை

வெளிச்சம் தெவையில்லை

கதவுக்குப் பூட்டு இல்லை

பூட்டவும் தேவை இல்லை

கண்ணலி நீர் இல்லை

அழுவதால் லாபம் இல்லை

நெஞ்சில் ஆசை இல்லை

ஆசைகள் நடப்பதில்லை..

இதயம் கனக்கவில்லை

அங்கே எவருமில்லை..

இருந்தாலும் தொல்லை தொல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொல்லை என்று நினத்தால் மூச்சு விடுவதும் அஃதே

தொல்லை என்றால் சுவாசிபதும் அஃதே

தொல்லை என்றால் மனிதன் வாழ்வதும் அஃதே

தொல்லை என்றால் வாழ்வதிலும் பார்க்க இறப்பது அஃதே

அஃதே

தொல்லை

தொல்லை மானிட

வாழ்கை தொல்லை

அதில் பெண்ணாய்

வந்ததோ மபெரும்

தொல்லை

திட்டித்திட்டி

தீர்த்தாலும்

சேலையின் வாசம்

தொல்லை

வெட்டிவிட்டு நின்றாலும்

உணர்ச்சிகள் ஏனோ

தொல்லை அவள்

விட்டு விட்டு

போனாலும் யாரும்

புத்தனாக வில்லை

மனசை கட்டிக்கட்டிப்

போட்டாலும்

மீண்டும்

அவளைதோடும்

தொல்லை

தொல்லையில்லாமல்..நான்

தொலைவில் நின்றேன்..

காதலியே உனை மறக்கவில்லை

எங்கிருந்தாலும். வாழும் காதல்..

வாழ்த்தும் உன்னைக் காதலியே..

காதல்காலம் இதயத்தில் செதுக்கிய

சிற்பம் போல இருக்குதடி..

நீ சாய்ந்த மார்பில் வேறோரு மாதை

நினைக்க மனது மறுக்கதடி..

விதியின் சதியில் திசைகள் கலைந்தோம்..

உன் நினைவு ஏனோ கலையாமல்..

என்னை நீ மறக்கவேண்டும்..

இன்பமாக வாழவேண்டும்...

கோடி காத தூரம் வந்தேன்..

கோடி வாழ்த்துக் கண்மனியே..

வாழும் காலம் யாவும் அன்பே..

இன்பமாக வாழு பெண்ணே..

  • கருத்துக்கள உறவுகள்

இன்பமாக வாழு பெண்ணே!

இன்னிசையாய் சினுங்கும் கண்ணே!

இளங்காலைப் பொழுதைப் போல்!

இளமுறுவல் காட்டிடுவாய்!

இதமாக உரையாடி!

இல் துன்பமதை வென்றிடுவாய்!!.

வென்றிடுவாய்

எனவுரைத்து

வெற்றித்திலகமிட்டு

சென்றுவா மகனே என

வெற்றிக்களிப்புடனே அனுப்பிவைத்தாள்

எதிரிமுகம் கண்டு

அக்கினியாய் முகம் சிவந்து

கொன்று தின்று அவன்

குலத்தைNயு அழித்த

எம்மவர் தமிழர் என

எட்டுத்திக்கும்

புகழாரம் சூட்டிடுவாய்

வென்றிடுவாய்

எனவுரைத்து

வெற்றித்திலகமிட்டு

சென்றுவா மகனே என

வெற்றிக்களிப்புடனே அனுப்பிவைத்தாள்

எதிரிமுகம் கண்டு

அக்கினியாய் முகம் சிவந்து

கொன்று தின்று அவன்

குலத்தைNயு அழித்த

எம்மவர் தமிழர் என

எட்டுத்திக்கும்

புகழாரம் சூட்டிடுவாய்

''சூட்டிடுவாய் மலர்ச்சரத்தை''

என்று சொல்லி

கொண்டுவந்தாள் தங்கை...

முடி கொஞ்சம் கலைந்திருக்கே ...?:(

தலை வாரி பின்னலிட்டு

மலர்ச்சரமும் வைத்துவிட்டேன்...

அழகாக இருக்கேனா..? ''அண்ணா''

அடி போடி

என்னோட தங்கையல்லா...

அழகாகத்தானிருப்பாய்.... :rolleyes:

கொடுப்புக்குள்

சிரிப்பை வைத்து

கோவிலுக்கு போய் வருவாள்...

வரும் போது

வடையோடு திரு நீறும்..

மோதகமும்.. கொண்டருவாள்

என்னோடு பகிர்ந்துண்டு-தன்

எச்சில் கையால் - எனக்கும்

ஊட்டி வைப்பாள் .....

ஏ.எல் படிக்கும் போதும்

கணக்குப் பாடம்

சொல்லித்தர - என்னைக் கேட்பாள்..

எப்படிச் சொன்னாலும்

இந்த -மர மண்டைக்கு பூராதாம்

குட்டு வைப்பேன் ....!

அழுது முடித்தபின்பு

என் தோழில் தலை சாய்வாள்...!

கல்யாணமான பின்பு

இன்று - அவளோடு

நானில்லை.. :rolleyes:

ஆனால் எங்கே கண்டாலும்

அன்று போல்தான் இன்றும்

அண்ணா என்றளைத்து

என் கையை பற்றிக் கொண்டு

தோழில் தலை சாய்வாள்.....

என் (தமிழ்) தங்கை அவள்..!

  • கருத்துக்கள உறவுகள்

அவள் பெயர் தமிழ்

அதிகாலையில்

பயிர்களின் மேல் இருக்கும்

பனித்துளிகள் போல்

மென்மையானவள்

வயலும் வாழ்வும்

வரப்பில் நிர்க்கும்

பூவரசுநிழலில்

வேர்வை உலர்த்திய தென்றல் போல்

இனிமையானவள்

அம்மாவின் தலை வருடல் போல்

ஆதரவானவள்

அப்பாவின் கண்டிப்பு போல்

அறிவானவள்

வாழ்க்கையோடு எப்பவும்

வழித்துணையாக

வருகின்றாள் என்னுடன்

நாட்டை பிரிந்த போதும்

அம்மாவையும் விட்டு வந்தேன்

அவளை மட்டும்

என்றும் பிரிந்ததில்லை

மரண வலி வந்த பேதும்

அம்மா என்று அவள்மூலம்

அழுதிடுவேன்

கூட வரும் தமிழே உன்னை

பாடையேத்த பலர்

ஏன் என்று தெரியவில்லை

நன்மையை தவிர வேறெதுவும் நீ

யாருக்கும் செய்ததில்லை

வலி வந்த போது நான்

அம்மா.. என்று கத்த வேண்டும்

மம்மி என்று கத்த எனக்கு

மரண வாசலிலும் முடியாது

கூட இருப்பாய் என்னுடன்

கூடியிருப்பேன் என்றும் உன்னுடன்.

உன்னுடன் நான்

சிற்பமாய் நிற்க

இதை அறியாத

பலர் என்னை

பலவரு சிந்தனை

செய்தனர்

அவர்களை

வேடிக்காய் ரசித்துக்

கொண்டு வேதனையாய்

சிரித்து நின்றேன்

இன்று உனக்காய்

எழுதப்பட்ட கல்லறைக்

காவியம் நாளை

எனக்கானது என்று

தெரியாது பாவம்

நான் எப்போதும்

உன்னவள் அது

எனக்கு தெரியும்

என்பதால் என்

கவிதைகளை நம்

கல்லறை பூக்களாய்

சமர்ப்பிக்கின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.