Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

பசுமரத்தாணியாய்

அவன் நினைவு

எனைத் துரத்த

பார்க்குமிடமெங்கும்

அவன் உருவம்

விம்பமாய்த் தோன்ற

பாவையிவள் தவித்தாள்

கண்ணிருந்தும் குருடாய்

  • Replies 1.9k
  • Views 182.2k
  • Created
  • Last Reply

கண்ணிருந்தும் குருடாய்

நான் தடக்கி விழுந்தபோது

கைகள் பிடித்து எனை

தூக்கி விட்ட உறவுகளான

என் அண்ணாக்கும் தம்பிக்கும்

என்றும் நான் அன்பாக

முத்தமிடத் துடிக்கையில்

சத்தமின்றி என் மனசினுள்

நுழைந்த காதலால்

அண்ணாவையும் தம்பியையும்

பிரியும் நிலை ஏற்படுவதை

நினைக்க என் கண்ணில்

கண்ணீர்த்துளிகள்

கண்ணிருந்தும் மீண்டும்

நான் குருடாய்.....

Edited by வெண்ணிலா

குருடாய் இருந்தாலும் கோழி

குழம்பில் ருசிதானே...

பெண்ணாய் பிறந்தவர்கள்..

பிதற்றுவதும் இயல்புதானே..

கூடப்பிறந்தவரோடெல்லாம்

கூடிவாழ வேண்டுமென்றால்..

உன் கல்யாணக் கனாக்கள்..

கிட்டுமா கிடைக்கமா.. பெண்ணே..

பெண்ணாய்ப்பிறந்துவிட்டாள்..

பிறந்தவீடு உனக்கென்றும்..

நிரந்தரமில்லையம்மா..அழுகை விட்டு

புகுந்தவீட்டு அழுக்கு நீக்க

துடைப்பம் கையிலெடு தூயவளே..

தூயவளே...

வாழ்கையின் கவர்ச்சி

நீ கொண்டு

அழகின் கவர்ச்சியால்

மயங்கா...

காதலின் கவர்ச்சிக்குள்

தொலைந்திடா?

உறவின் கவர்ச்சி

சொல்லி

உரிமையின் கவர்ச்சியை

தாய்மையின் அன்பால்

வென்று

வாழ்கையின் சிறப்பை

சொல்லி விடு

Edited by கஜந்தி

சொல்லிவிடு சொல்லிவிடு

சொல்ல வந்த காதலை

ஒருமுறையாவது அவனிடம்

உதட்டை திறந்து சொல்லிவிடு

சொல்லாத காதல்

செல்லாத காதலாகிடுமே

சொல்லிவிடு சொல்லிவிடு

உதட்டை திறந்து சொல்லிவிடு

சொல்லிவிடு வெண்ணிலாவிடம்

சொல்லாமல் தினம் கொல்லும் காதலை

அள்ளிவிடு உன் கவிமழையை

முக்கித்தவிக்கும் உன் நிலையை

அல்லி மலரிடம்

மல்லிக் கொடியிடம்

நெஞ்சில் பள்ளிகொள்ளும்

வெள்ளை நிலவிடம்

கொள்ளைகொள்ளையாய்

அள்ளிக்கொடு உன்காதலை

உன்காதலை அள்ளிக்கொடு

உனை நினைத்து ஏங்கும் என்னிடம்

உன் அன்பைக் கொட்டிவிடு

உனை காண துடிக்கும் என்னிடம்

உன் கவிமழையை தூவிடு

உனை பாட தொடங்கும் என்னிடம்

என்னிடம் மயங்கி

தன்காதல் இயம்பி

தன்னிலை மறந்து

தள்ளாடும் நிலவே

கவிபாட அழைத்தாய்

கடல்தாண்டி வந்தேன்

விண்ணேறி வரவும்

விண்ணோடம் இல்லை

மண்மீது பெண்ணாகி - நீ

என்னூஞ்சல் அமர்வாயோ !

மணமாலை நீ சூடி

மலர்வாசம் வீசாயோ ?

மலர்வாசம் வீசாயோ

தென்றல் காற்றோ

கனிமொழியாள் படைப்பில்

கற்பனைக்குள் தோற்ற வாசம்

காலத்தால் அழிந்த வாசம்

இதயத்தில் மறந்த வாசம்

மலரோடு மறைந்து போக

சுமையாக வந்த வாசம்

என்னைச் சுட்டேரிக்க

வாசமில்லா கவி பிறந்தது

இன்று

இன்று

நிஜமிழந்து நினைவிழந்து

நிர்க்கதியாய் புலம்பெயர்ந்து

உறவிழந்து ஊனிழந்து

உரிமையும் இழந்து

தவித்திடும் தமிழன் நான்

தவிக்கும் தமிழன் நான்

உயிர்காக் ஒடி வந்தேன்

அயல் நாடு

அடைக்கலம் கிடைத்ததாலே...

கவியத்தமிழன் நான்

பக்தி வேண்டி கோவில்

வந்தேன ஆயுதமும்

கொண்டு வந்தேன்

என் உயிர் காத்த

கடவுளக்காய்

நன்றி சொல்லி

பலி கொடுத்தேன்

மனித உயிரை

நான் வாழ்வதற்காய்....

வாழ்வதற்காய்

வம்சமறுப்பவனல்ல

தமிழன் வாழ்வதற்காய்

தன்னையே அழிப்பவன்

ஈனச்செயல்களால்

எம்மினத்தை இழிவுபடுத்தும்

சில காட்டேறிகளை

கண்டதுண்டமாக

வெட்டி வீசவேண்டும்

வீசவேண்டும்..

வெறிநாய் உள்ளிருக்கும்..

வெளியே வீச வேண்டும்..

அன்பும்..எளிமையும் உள்

வாழ வேண்டும்..

உடல் வலிமை உன்

ஆரோக்கித்தை பாதுகாக்கும்..

கோபம்.. உன்னதும்..

உன்னவரதும் வாழ்வை

பறிக்கும்..

நேசமும்..நேயமும்..கொண்டு...

ஒற்றுமை கொண்டு உலகோடு

வாழும் நிலை மலரவேண்டும்..

கனாக்கள்தானா இதுவும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவும் உனக்கோர் பாடம்!

எட்டாக்கனி புளிக்கும் என

முட்டாள்கள் சொன்ன மூடக்

கதைகளை விட்டெறி!! எறும்பும்

ஊரக் கல்லும் குழியும்!. வல்லவனுக்கு

புல்லும் ஆயுதம்! போதும் உறக்கம்!

எழுந்திரு! இளைஞனே!

இளைஞனே உன்

வாழ்கை உன்னிடம்

ஏதற்காய் தடுமாற்றம்

பாதைகள் பல மாறி

பருவங்கள் தனை

இழந்து

தோல்விகள் நீ கொண்டு

குடும்பத்தின் நின்மதி.தனைத்

தொலைத்து

உறவுகள் தனை வெறுதது்

தனிமை சிறை உனக்காய் எழுதி

ஏன்?

முதுமையில்

இளமை தேடுகின்றாய்.....

Edited by கஜந்தி

தேடுகின்றாய் நீயும்

எனக்குள் உறங்கும்

இன்னொருவனை...

சூடுகின்ற மலரிலும்

சுந்தரத் தமிழிலும்

பாடுகின்ற பட்சியின்

குரல் விநோதத்திலும்

என் வாசம் கலந்திருக்கும்!

காது திருப்பி

மெய் சிலிர்த்து

மனசுக்குள் உள்வாங்கு

வடிவாய் விஷ்வரூபமாவேன்!

நண்பனாய் நான் சிரிப்பேன்

நல்ல உள்ளதோடு

உனை அணைப்பேன்!

கண்களை மூடி

நீ தூங்கு

கண்டறியாத உலகம்

காறியுமிழும்

விடு...

விழி மூடி தியானி

வழி காட்டாத

உலக செய்கை

உனக்கேன் பயணி!!!

  • கருத்துக்கள உறவுகள்

பயணி.... உனக்குள்ளே பயணி!

புல், பூண்டுகள் மறைந்தன,

செடி, கொடி, மரங்கள் மறைந்தன!

மாடமாளிகைகள், கூடகோபுரங்கள் போயின!

பூமிப் பந்து ஒரு மண்சட்டியாக!

பக்கத்தில் நிலவு, பாதி தூரத்தில் செவ்வாயும், புதனும்!

எல்லாக் கோள்களினதும் எழிலான தரிசனம்!

எங்கும் சம தரிசனம்!.... இதற்காகவேனும்,

பயணி..... உனக்குள்ளே பயணி.

பயணி

கஜனி முகமது போல்

எத்தனை முறை

வேண்டுமெனினும்

பயணி

கோட்டை உனக்குத் தான்!

வீணே சயனித்திருப்பதிலும்

'விசர்'க் கதை பேசி

சாதாரண நரனாய்

நீ இருப்பதிலும் என்ன பயன்?

நடந்தால் தான் நதி

நுரை கக்கினாலும்

கரை தொட்டால் தான் கடல்

குறை இருந்தாலும்

உனக்குள் நம்பிக்கை

நிரப்பி

கறை யளித்து

பிறையென வளந்து

முழு நிலவாய்

ஒளி கொடுத்தால் தான்

நீ மனிதன்!

மனிதன் தன்

வாழ்விழந்து

ஊருக்கு உறவுசொல்லி

புரிதல் தனைமறந்து

பிரிந்தே சேர்த்து

நின்று உரிமை

தனக்கெழுதி

பல முகம்கள் தனைக்

கொண்டு சமூகத்திற்காய்

வாழ்கின்றான்

இருளுக்குள் தவித்துக்

கொண்டும்

இருளுக்குள் தவித்துக்

கொண்டும்

பொல்லாத நினைவில்

என்னைத் தொலைத்துக்

கொண்டும்

எத்தனை காலம்

இருப்பேனடா கண்ணா?

உலகுக்குள்

உண்மையில்லை

மயங்கி மயங்கி

அலைபாய்கின்ற மனசினால்

நிம்மதியொன்றில்லை

சிலைகளுக்குப் பின்னால்

கடவுளைத் தேடியும்

சேலைகளுக்குப் பின்னால்

பெண்மையைத் தேடியும்

புரிந்து கொண்டது

எதுவுமில்லை!

நான், அவள்

சல்லாபிகின்ற எல்லாம்

ஐம்பூதச் சேர்கையின்றி

வேறெதுவுமில்லையெனும்

ஞானம் கூடவில்லை

வீணாகக் கரைகின்றது

காலம்

கோலங்கள் பல வரையும்

ஆசை மீன்கள் மனசுக்குள்

ஓடித் திரிந்தாலும்

சோம்பித் திரிகிறேன்

சோகமடா எல்லாம்!

கண்ணா

அண்ணாந்து பார்த்து

அரோகரா எனக்

கோஷம் போடும்

சராசரி மானிடனாக

என்னையும் ஆக்காதே

விண்ணெல்லாம்

தொட்டு

விண்மீன் அளைந்து

விளையாடும்

நீல மேனி வண்ணா

வாய் திறந்து

நான் சொன்னால் தான்

என் மனம் புரிவாயோ?

காலமெலாம்

உனை மனதில் ஏந்தி

உற்ற தோழானாக்கி

உறவு கொண்டேனே

மீதமெல்லாம் நான்

சொல்லவும் வேண்டுமோ?

மங்களங்கள் தருவாய்

என் ஈழ மண்ணின்

விடுதலை தருவாய்

கோல விளிப் பாவையர்

அழகில் லயித்து

கட்டற்ற கவி செய்யும்

புலமை தருவாய்!!!

Edited by kavi_ruban

தருவாயா?

பூவின் மென்மை

பேச்சிலும் செயலிலும்

கொண்டவள்

பலர் ரசிக்க ..

கல்லைப் போன்ற

உறதி மனதில்

கொண்டு தோல்வியிலும்

வெற்றி கண்டாள்

சுகந்திர காற்றை

சுவாசித்து _ ஆனால்

பிரிவை தாங்கா இதயம்

இவள் கொண்டதால்

வெற்றியிலும் தோல்வி

கண்டாள் இவளுக்காய்

தருவாயா இறைவா ?

உறுதியான இதயத்தை...

Edited by கஜந்தி

இதயத்தை தேடி

இளவயது பறக்கின்றுது

நொடியினுள் தீரும்

இன்பத்திற்காய்

நூற்றாண்டாய் தவம்

காத்திருந்து கனிந்து

கசங்கிய பிறகே

கனவிடயம் புரிகின்றது

புரிகின்றது எனக்கெல்லாம் என்றே சொல்லி;

விரிகின்ற நவீனத்தின் அழுக்கைப் பற்றித்

திரிகின்ற இளசுகளின் நிலையை எண்ணி

எரிகின்ற மனத்தோடு வாழும் `பழசு'நான்

Edited by Manivasahan

நான் என்ற அகந்தையில்

நாமழிந்து போகின்றோம்

நானெல்லாம் ஓன்றானால்

நல்லதோர் தேசம் அமையும்

ஈழத்திலும் பூ மலரும்

இனிய உதயம் கிட்டும்

வாழ்க்கையும் வசந்தம் ஆகும்

வரவெல்லாம் அதிகமாகும்

வையகமும் வாய்பிளக்கும்

வையகமும் வாய்பிளக்கும்

எம்மை நாம் உணர்த்தால்

ஆணவத்தின் உச்ச நிலை

மறந்து

சுயநலவாழ்வை

கொஞ்சம் மாற்றி எம்

திறமை எமக்காய் எழுதி

தலைக்கணம் தனை மறந்து

உண்மைத்தேடல் தனைக்

கொண்டு

உரிமைக்கரம் தனைப்

பற்றி வின்விவாதம்

சண்டை மறந்து புதிய

தேடல் கொள்வோம்

எமக்காய்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.