Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

கண்டுகொள்ளும்போதும்

கவிதை பேசும்போதும்

வியப்போடு என்னை

விழிதூக்கிப் பார்க்கும்போதும்

கனியமுதே உன்னை

கைப்பிடித்து கதைகள் சொல்லி

கவித்தமிழால் நனையவைப்|பேன்

  • Replies 1.9k
  • Views 182.2k
  • Created
  • Last Reply

நனையவைப்பேன் தினமும்

நானுனை முத்த மழையிலே

நனைந்த நீ துவட்ட

நினைக்கையில் உடனே

மீண்டும் முத்தமிடுவேன்

மென்மையான உன் கன்னத்தில்

கன்னத்தில் சுருக்கங்கள்

கவிபேசத் துடிக்கின்றனவோ - இல்லை

கதைசொல்ல முனைகின்றனவோ

வாலிபம் உழுத தழும்புகளா

இல்லை வாழ்க்கை தந்த விருதுகளா

முத்தமிடத்துடிக்கின்ற கனியிதழை

முழுதாய் பருகிடத்துடிக்கின்றாய்

தாறும்போதுதான் மழை அழகு

தொட்டுக்கொள்ளும்போதுதான்

அச்சாறும் ருசி

அச்சாறும் ருசி

ஊறுகாயும் ருசி

இவையிரண்டையும்

இப்ப நினைக்கையிலும்

ஊற்றெடுக்கிறது எச்சில்

எச்சில் பண்டத்திற்காய்

காத்திருந்த காதல்

இன்று எச்சிலே என

எட்டியுதைக்கின்றது

கொஞ்சிகெஞ்சி

கோவையிதழ்பருகி

மலரே என் மகவே

மயிலிறகே என்றழைத்த காதல்

இன்று மண்ணிலே

மிதிபட்டு சிதைந்துபோவதேன்

சிதைந்து போவதேன்

சிறகு முளைத்து பறக்க துடித்த

சிட்டுக்குருவிகளான நம்

சின்ன சின்ன ஆசைகள்?

கருகிப் போவதேன்

களங்கமற்ற நம் நட்பில்

கறை கண்டு சமூகம்

குறை சொல்வதாலோ???

குறை சொல்வதாலோ

குற்றம் சொல்வதாலோ

நான் உன் மீது

நீ என் மீதும் கொண்ட

அளவில்லா ஆழமான

அன்பான நட்பு குறையாது

வா என் கையை இறுகப்பற்று

வானத்தின் எல்லையை தொடுவோம்

நட்பு என்ற உன்னத உறவோடு

உறவோடு உன்னதமாய்

உறவான தெப்படி...?

புறம் போக்கு நிலம் போல

அன்று வரை இருந்த மனம்

காதல் விளை நிலமாய்

உண்டான தெப்போது...?

வீட்டின் உட்புறத்தில்

முகட்டையே - இப்படி

எத்தனை நாள்

பார்த் திருப்பேன்...?

வெளிப் புறம் அழகு காண

கிராமப் புறம்

நடந்து போனேன்....

தெருப் புறம் மணல் களிலே

யாரோ சிந்திப் போன

மலர்கள் பார்த்தேன்...

இப்புறம் யாருமில்லை

தொலைவினிலே

அந்தப் புறம் - அவள்

பின் புறம் தெரியச் சென்றாள்...

தொடர்ந்தேன் அவள்

வீடு வரை...

சிந்தியது பூக்களல்ல

அவள் பாதச் சுவடுகள் தான்

அப் புறம் தான் தெரிந்து கொண்டேன்...

சுவடுகளே மலர் போலென்றால்... :rolleyes:

எப்படியும் முகம் பார்ப்பேன்

நெருங்கினேன் - அவள்

வீட்டுப் புறம்...

எப்புறம் பார்த்தாலும்

அவள் முகம் தெரியவில்லை

(அவள்) அப்பனைத் தான் நான் கண்டேன்... :o

புறங் காட்ட மனம் இல்லை

புன் முறுவல் நான் பூத்து

''ஜம்மு பேபி வீடிதுவோ''...?

வினா வொன்று நான் தொடுத்தேன்.... :blink:

என் கதையைப் புறந் தள்ளி

புறமுதுகில் கைவைத்து

''போடா போ''...

படலையை சாத்தி வைத்தார்.... :angry:

அப்புறமும் விடுவேனா...

முகம் பார்க்கத் தவங்கிடந்தேன்...

வரங் கொடுத்தாள் சாமி.. :P

முகம் பார்க்க மூர்ச்சை யானோம்..

இதயங்கள் அப்போதே

இடம் மாறிக் கொண்டன..

என்னைப் புடம் போட்ட

அப்பன்- எம்மைப் புறம் பாக்க

எண்ணி நின்றார்

இது தெரிந்தும் எனது நண்பன்

புறஞ் சொல்லித் தான் திரிந்தான்.. :angry:

வடம் போட்டேன்

அவளை நான் - இப்போது

எவர் புறமும் வருத்தமில்லை..!

உன்னதமாய் உறவோடு

உறவாடி நிற்கின்றேன்...

அப்புறம் நான்

என்னசொல்ல... :lol::lol:

Edited by gowrybalan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னசொல்ல... :lol::rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சித்திரமே சிந்தையினை

சிறகடிக்க வைத்தவளே

நித்திரையும் மறந்து

நித்தமும் நின் நினைவால்

பத்தியமும் மறந்திட

நான் என்ன

பைத்தியக்காரனா

வேண்டாம் உன்

நினைவுகள்

நினைவுகள்

நித்தமும்

நெஞ்சினில்

நிழலாடுவதால்

நித்திரையின்றி

நீராகாரமுமின்றி

நெடுஞ்சாலையை

நோக்கியவண்ணம்

நான் இருக்கின்றேன்

நீ வருவாயென

நீ வருவாயென நான் இருந்தேன்

''என் வருவாய் யென்ன''...? :P

என நீ கேட்டாய்...

என் வருவாய் ஏன் ...?

உனக் கென நான் கேட்டேன் :huh:

வெறும் வாய் போதுமா...?

வாழ- வருவாய் வேண்டும்..!

அதன் பின் வருவாய் யென

நீ உரைத்தாய்...! :(:blink:

  • கருத்துக்கள உறவுகள்

நீ உரைத்தாய் நிலவு வளர்ந்தது!

நீ நடந்தாய் பூமி குளிர்ந்தது!

நீ பார்த்தாய் செடி,கொடிகள் தளிர்த்தன!

நீ சிரித்தாய் பூக்கள் பூத்தன!

நீ பேசினாய் நான் நானிழந்தேன்!

நின்னிடம் மௌனம் என்னிடம் நிம்மதி.

என்னிடம் நிம்மதி

உடைந்திடும் பெண்ணே - உன்

ஒரு சில நேர மெளனத்தால்....

என்னிடம் வார்த்தை

பேசடி கண்ணே....

தரித்திடும் நெஞ்சம்

மீண்டும் துடித்திடவே.....

மீண்டும் துடித்திடவே

கண்ணால் பேசுவேன்

என் கண்களை உற்றுநோக்கு

உன் இதயம் துடித்திடும்

என் கண்களுக்குள்

உனை உறங்க வைக்க

கண்மணி எனும் பாய்விரித்து

கண்ணிமை என்னும் சாமரம் வீசி

கண்மடல் எனும் போர்வையால்

கண்ணே உனை போர்த்துவேன்

கண்ணயரு கண்ணா நீ

என் கண்களூக்குள் கண்ணயர்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணயர்வாயா என் கண்மணியே!

காலம் கடக்கின்றது என் களஞ்சியமே!

பள்ளிசென்ற உன் உன்னுடன்பிறந்தோர்

பசியில் முகமது வாடியே வந்திடுவர்!

கருக்கலில் கழனியேகிய நின் பிதாவும்

களைத்து விழுந்து வந்திடுவார்!

பங்கஜமே! பசும்பொன்னே! பால்நிலவே!

ஆலிலையில் கால்விரல் சப்பியே

அயர்ந்துவிடும் கன்னன் போல்நீயும்-- என்

பருமுலையில் பாலருந்தி பாயினிலே கண்ணயர்வாய்!!.

கண்ணயர்வாய் கண்மணியே....

ஓடித் திரிந்த காலம்

ஊரோடு போயிடிச்சு

வேண்டி அழுதாலும்

அந்த நாட்கள்

மீண்டும் வந்திடாது...!

தேம்பி அழுவாமல்

சொன்னபடி நீ கேளு....

தூங்கி எழும் பினால்தான்

துன்பம் கொஞ்சம் குறைந்துவிடும்...!

சென்ற கால வேதனையை

மெத்தையுள் புதைத்து விடு

வருங்கால சிந்தனையை

கண்களுள் வளர விடு..!

வருங்கால மெல்லாம்

வளமாகத்தான் அமையும்

இன்னுமோர் கனவுகாண

இதமாக தூக்கம் கொள்ளு...!!

Edited by gowrybalan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துக்கம் கொள்ளு கண்மணியே

கணப் பொழுதில் நிகழ்பவை

கணதியாக்கி விடும் இதயத்தை

கண்விழித்து பாராமலே

கண்ணுறங்கு கண்மணியே

மண்ணுக்குள் மாந்தர் பலர்

கண்மண் தெரியா புரிந்திடும்

ஈனச் செயல்கள் காணாமலே

கண்ணுறங்கு கண்மணியே

மணிப்பொழுதுகள் பொன்னாய்

கண்ணுறங்கும் உன் அழகை

கண்ணிமை மூடாமல் ரசித்தபடியே

ரசித்தபடியே இருக்கிறேனடி

ராப்போதும் உன் சிரிப்பை

அணைந்து கொண்டே தூங்கினாலும்...

இணைந்துள்ளிருப்பதும் நீதானே..

உச்சிமோந்து இட்ட முத்தங்களால்..

இச்சையில்லா அன்புச் சத்தம் சொன்னவளே...

விரல்களோடு விரல்கள் கோத்து

வித்தைசெய்யவந்தவளே..

சலங்கைகட்டி கால்களால் என்

கால்களோடு கலகம் செய்பவளே..

மார்பில் முகம் புதைத்து

சம்மதம் சொன்னவளே..

கட்டி அணைத்து கடடிலோடு..உருண்டு

கீழேவிழக் கனவுபோலவே நீயும் மறைந்ததேன்.!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டி அணைத்து கடடிலோடு..உருண்டு

கீழேவிழக் கனவுபோலவே நீயும் மறைந்ததேன்.!

அள்ளி எடு என்று

ஆண்மையிடம் நீ சொன்னால்

பள்ளியறைக் கட்டிலென்ன

தாங்குமா..தயங்குமா..

திணவெடுத்த தோள்களில்

ஊஞ்சலாடும் பூங்கொடிக்கு..

அத்தானின் மேலென்ன

ஆசையா..அன்புந்தானா..

வெட்டியிடம் சொன்னாலே..

வீரனாவான் மெத்தையிலே..

வீரனிடம் சொல்லிவிட்டாய்..

தத்தையே..என் வித்தைகளை

கண்டுகொள்ள கட்டில்க்

களத்திலே... காத்திரு..

  • கருத்துக்கள உறவுகள்

காத்தி ருக்குவுடன்

பகிர்ந்த நட்பு!

களங்கமில்லா இதயத்துள்

முகிழ்த்த மொக்கு!

காலங்கள் கடந்தன

பாதைகள் பிரிந்தன!

கடிதங்கள் தொடர்ந்தன

நட் பூ மலர்ந்தது!

ருக்குவின் மகன்

பத்மநாபன் எனும் பாத்து!

காத்தியின் மகள் -- நட்பில்

வைத்த நாமம் ருக்மினி !

பாத்துவை வரன் கேட்டு

வந்தது கடிதம்-- காத்தி !

வாஞ்சையுடன் சம்மதித்தாள்

பாசமுள்ள ருக்கு! --வரும்

ஐப்பசி திங்கள் வளர்

பிறை வருநாளில் காண்பீர்

பந்தலிலே கரம்பற்றி

இனைவராம் பாத்தி ரு....

பார்த்திருந்தேன் காத்திருந்து

பார்ப்பம் என்று துடித்திருந்து

நினைவுகளால் வலித்திருந்து

வலிப்பின் ரணங்களோடு காலத்தை -துரத்தி

கனிந்த போது ஒரு நாள் ஊர் சென்றேன்

உறவுகள் மிக மலர்ந்து உபசரித்தன-டொலரின் வாசம் கண்டு

ஆனாலும் எட்டியே நின்றார்கள்- அந்நியன் போல

கிட்ட சென்ற போதும் என் வீட்டு பூவே வாசம் தர மறுத்த கணம்

பட்ட வலிகள் எல்லாம் மரத்து போனது.-இப்போது வேற இடத்தில் நொந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேற இடத்தில் நொந்தது

வலிப்பின் ரணங்கள்

காலத்தின் கட்டாயங்களாய்

மறுதலித்தப்போனாலும்

உறவின் உன்னதங்கள்

உறவாடும் போதினில்

சின்னக்குட்டி தந்த பாவும்

அழகே அழகே

பூவே தனி வாசம் பெற்றதாய்

கவிதை அந்தாதியும்

மலர் தூவி வரவேற்கின்றது

வரவேற்கின்றது...

அலைகளைக் கரை...

அலைகளாக மட்டும்

சுனாமியாக அல்ல....

வரவேற்கின்றது...

காற்றைப் பூங்காடு...

தென்றலாக மட்டும்...

புயலாக அல்ல

வரவேற்கின்றது

சூரியனைப் பூமி...

ஒளிவிளக்காய் மட்டும்

எரிக்கும் நெருப்பாக அல்ல

வரவேற்கின்றது

என்னிதயம் உன்னன்பை

அரவணைப்பாக மட்டும்..

அரக்கத்தனமாக அல்ல...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.