Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

விடுதலை என்பது

விடுகதை இல்லை

வெற்றியும் எளிதில்லை

விடுவலை என்று

வெருட்டியே அழிப்போம்

வெருண்டோடும் சிங்களமே

  • Replies 1.9k
  • Views 183.4k
  • Created
  • Last Reply

சிங்களமே.. சிரி..

இது உனக்கு சிரிக்கின்ற

காலம் ..

ஒரு இனத்தை அழ வைத்து

அரக்கன் போல்

சிரிக்கிறாய்..

இல்லை

அரக்கனாகியே சிரிக்கிறாய்..

சிரி..

சிங்கமென்ற போர்வைக்குள்தான்..

இருக்கிறாய்..

நிஜப்புலிகள்.. வரும்

போர்ச் சங்கு ஊதும்..

அப்போது நீ எரிவாய்..

நாம் சிரிப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்போம் சேர்ந்தே சிரிப்போம்

சிரித்து சிரித்தே கைகோர்த்து

சிங்காரமாய் நடந்திடுவோம்

சிரித்து சிரித்து கவலைகளை

சிட்டாய் பறக்க வைத்தே

சுதந்திரமான மனதை

சுகமாக்கி மகிழ்ந்திடுவோம்

வாய் விட்டு சிரித்தால்

நோய் விட்டுப் போகும் என்பதால்

வாய்விட்டு ஒருமுறை சிரிப்போம்

"வாய்விட்டு ஒருமுறை சிரிப்போம்"

இதிலென்ன கஞ்சத் தனம்?

யார் வீட்டு சங்கதியேனும்

சந்திக்கு வந்தால்

சீர்கெட்டுப் போனதப்பா

அக்குடும்பமென

கொடுப்புக்குள் சிரிப்பதுவும்

வார்த்தையாலே வாள் சண்டை

பிடிப்பதுவும் இருக்கட்டும்...

"ஊர் ரெண்டுபட்டால்

கூத்தாடிக்கு கொண்டாட்டம்" எனும்

பழைய பழ மொழியை

எத்தனை நாள் காவடி தூக்குவாய்?

யோசித்துப் பார்...

கேலிப் பேச்சுக்கு மட்டும்

உதடுகளுக்கு சிரிக்கக்

கற்றுக் கொடுத்தாய்!

சிந்தனை மாற்றடா

சந்தனக் காற்று

மேனி தடுவுகையில்

காற்றின் கைகளை தட்டிவிட்டு

மெதுவாய் புன்னகை

அப்படியே நிலைக் கண்ணாடியில்

நின்றுன் மேனி ரசி

எத்தனை அழகடா

நீ

புன்னகைக்கும் போது என

உனை நீயே ரசி

கொஞ்ச நாளில் மறப்பாய்

கேலிச் சிரிப்பை

புன்னகைக்க மட்டுமே

உதடுகளுக்கு உத்தரவிடுவாய்

ஒன்று தெரி்ந்து கொள்

உன் உதடுகள் புன்னகைக்கும்

போதெல்லாம்

நீ அழகாவாய்...

உன்னைப் பார்ப்பவனும்

அழகாவான்...

ஆக

வீட்டுக்கு வரவேற்பறை போல

மனிதனுக்குப்

புன்னகை...

ஆகவே தயங்காது

இன்றே நீயும்

புன்னகை...!

புன்னகை...

எந்நகை அணிந்தாலும்..

பெண்ணே..உனக்கு

அழகுந்தன்...புன்னகை

பூக்கள் வாடினாலும்..

என்றும் வாடாதது...

புன்னகை..

பள்ளியறையில்

சினங்கொண்ட கணவனின்

மனங்கொள்ளும்

மனையாளின் புன்னகை

கோடி இன்பங்கள்

கொட்டிக் கொடுத்தாலும்.

ஈடில்லா இன்பம்..

மழலையின் புன்னகை

நெஞ்சத்தே வஞ்சம்

நிலை கொண்ட

மாந்தர்க்கு மண்ணில்

வாராது..அழகுப் புன்னகை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகுப் புன்னகை சிந்திடும்

அழகு தேவதை அவள்

அழகு ஆபத்தாம்

ஆழம் அறியாமலே

அழகினை அணுஅணுவாய்

அள்ளி ரசித்திட முனைந்தேன்

அழகினை அணுஅணுவாய்

அள்ளி ரசித்திட முனைந்தேன்

கிள்ளி எறிந்தாள்

தரையில் விழுந்த

மீனாய்

துள்ளி விழுந்தேன்

பள்ளி கொள்ளும் பாவனையில்

படுத்துறங்குவதாய்

பாசாங்கு செய்தாள்

கள்ளி - கன காலம்

எனை ஏமாற்றிய

பெருங் கள்ளி

முள்ளுள்ள கள்ளிச்

செடி பார்த்ததுண்டு

அழகுள்ள கள்ளிச் செடி

இங்கே கண்டேன்

பாசமுள்ள நெஞ்சத்திற்கு

மோசம் செய்யும்

இவள் வேண்டாமென

தள்ளியே நடக்கிறேன்

பழைய நினைவையும்

தள்ளியே நடக்கிறேன்!

தள்ளியே நடக்கின்றேன்

பள்ளிகொள்ளும் உன்னை

மந்திகள் போல நான்

தொந்தரவு செய்யாமல்..

சாந்தமானவனே

நீ நன்றாக தூங்கு என்

காந்த விழிகள் உனை

ஈர்க்காதபடி கண்களை மூடி..

போர்வைக்குள் உன்

தேகத்தை மறைத்து

நிம்மதியாக தூங்கு

நிலவிவளின் சீண்டலின்றி..

சீண்டலின்றி..

சிணுங்கலின்றி..

தூங்கலாமோ...பெண்ணே...

காதல் என்பது...

தேன்கூட்டைப்போல கண்ணே...

சத்தமின்றி..

முத்தமின்றி...

நித்திரையேன்.. பெண்ணே...

காதல் என்பது..

தீயைப்போல கண்ணே...

சிரித்திடாமல்..

உரித்திடாமல்...

துயிலுவதேன் பெண்ணே..

காதல் என்பது..

ஓடும் ஆற்றைப் போல கண்ணே...

உன் தூக்கமும்

தூக்கமில்லை..

என் ஸ்பரிசங்கள்..

பூக்கவில்லை..

உன் சுவாசத்தில்...

என் வாசனை..

என் யோசனை..

உன்னில் சோதனை..

பாசாங்குக்காரி நீ

என் பாதி நீ...

முடிச்சிட்ட கணவன்...

மூச்சுபட்டும்.. நீ..

தூக்கம் தொடரலாம்..

எதிர் கண்ணாடி சொன்னதே.. மெய்..

இதழ் களவாக பூத்த புன்னகை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புன்னகை சிந்திடும் வேளைதனில்

புகுந்திடும் ஆனந்தம் மனசுக்குள்ளே

கோபம் கொள்ளும் வேளைதனில்

கொளுந்து விட்டேறியும் எண்ணங்கள்

அன்பு காட்டிடும் வேளையில்

பனியாய் உருகிடும் எந்தன்

உள்ளம் உன் மூச்சுக் காற்று பட்டு

மயங்கிடும் பொழுதுகளில்

எந்தனுயிர் இங்கில்லை

என்னுயிர் இங்கில்லை

எழுந்து வாடி பெண்ணே - நீ

தான் என் உள்ளத்தில்

பூத்த முல்லை!

மன்னுயிர் காக்கும்

மன்னவன் போல்

உன்னுயிர் காப்பேன்

நான்...

புதிதாய் பயிர் வளர்க்கும்

விவசாயி போல்

கெதியாய் எனக்குள்

வளர்ந்த காதல் பயிர்

தினம் தினம் நான் பார்க்கிறேன்

வாடாமல் வதங்காமல்

நான் வளர்க்கிறேன்!

தனம் நீ மட்டும்

என்னோடு இருந்தால் போதும்

சினம் விடுகிறேன்

சிகரெட்டும் தொடேன்!

வரம் தாடி பெண்ணே

சிவன் பக்கம் பார்வதி போல் - என்

தனம் பக்கம் கவியிவனென

வரம் தாடி

இல்லையேல் இவன் வளர்க்கக்கூடும்

பெருந் தாடி!

உனக்குப் பிடித்தால்

பிரன்ஞ் தாடி! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிரெஞ்சு தாடி! பிரெஞ்சு தாடி!

பிண்ணாக்குத் தின்னும் ஆட்டுக்கும் அதே தாடி!

கிடாயின் காலடியில் அதன் காதலிகள் கோடி!

இருந்தும் அதன் தாடையிலும் ஒரு தாடி.

பெண்கள் பின்னே பாய்ந்திடுவார் ஓடி!

அவளின்றேல் உடன் விட்டிடுவார் தாடி!

காதல் தோல்விக்கு விளம்பரமா தாடி!

பெற்றவள் பரிதவிக்க, பார்த்தவர்

பரிகசிக்க தேவையா தாடி!

தேவையா தாடி

பாவையெனக்கு பிடிக்காத

கறுப்புத்தாடி ஏன் உனக்கு

முறுக்கிவிடும் மீசையும்

நறுக்கென்ற வீரமான பேச்சும்

வெண்மையாக பற்கள் காட்டி

பெண்மையை கவரும் சிரிப்பும்

இவையனைத்தும் உனதழகு

ஆகையால்.. :lol:

குறுந்தாடியை நீக்கிவிட்டு

குமரியிடம் வா காளையே

குதூகலமாக அணைப்பேன் :lol:

Edited by வெண்ணிலா

அணைப்பேன் என்று

தான் நீயும்

சொல்கிறாய்

எவ்வளவு நேரமாய்

விளக்கு எரிகிறது...

முதலில் அதை அணை

பிறகு என்னை அணை

இருட்டில் உனக்கு நானும்

எனக்கு நீயும் துணை! (சேர்த்துப் படிக்காதீர்கள்... கடவுள் காக்க....)

துணையென வந்து

அணைத்து எனை

கணையாழி தந்து

இணைத்து நெஞ்சோடு

பிணைத்தாய் அன்போடு

பிணைமான் என்னை

என்னைப் படித்த முதல்

மாணவி...அவள்...

நான் ஒன்றும்..

சமஸ்கிரதம் அல்ல..

தெளிவான அரிச்சுவடிதான்..

ஆனால்..

இந்த அரிச்சுவடிக்குள்..

புதைந்து கிடந்த..

நூலகத்தை பார்த்தவள் அவள்...

படித்தவள் அவள்...

ரசித்தவள் அவள்..

சிரித்தவள் அவள்..

அவள்தான் என் தாய்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாய் என்றாலே அன்பு

சேய் நான் இங்கே விரும்புவது

சாய்ந்தாட ஒரு மடி

வாய் விட்டு சொல்லமுடியா

துய்யும் துயரங்கள்

காயும் மனதினில் கரைந்தோட

அம்மா நீ வேண்டும்

அம்மா நீ வேண்டும்..

உன் மடி வேண்டும்....

மரணமென்றாலும்....

உன் மடிமேல்..தலை

சாய்ந்தால் அது போதும்..

உதரம் மிதித்த கால்களை..

கையிலேந்தி முத்தமிட்டாய்..

கன்னம் கிள்ளிய நகக்குறிகளை

பெருமையாக சொல்லிக்கொண்டாய்..

பள்ளிசெல்ல மறுத்த நாளில்..

கூட வந்து காத்திருந்தாய்..

எனக்குப் பிடித்த உணவைத்தானே..

பார்த்து பார்த்து நீ சமைப்பாய்..

அப்பாவோடு சண்டை போட்டு..

என் ஆசைக்கெல்லாம்..

அங்கீகாரம் பெற்றுத் தந்தாய்..

அம்மா தெய்வம் கூட

ஒரு வரத்தோடு நிறுத்திக்கொள்ளும்..

கோடி வரந் தந்து

வாழ்வு தந்த என் அம்மா..

நீ எனக்காகவே வாழ்கிறாய்..

எனக்குள்ளும் வாழ்கிறாய்..

வாழ்கிறாய் அம்மா

என்றென்றும்

வாழ்வாய் அம்மா

என்னுள்ளே சுவாசமாய்

என்னுள்ளே கவிதையாய்

எனக்கே எனக்காக

என்னுயிர் தாயே

அசையும் தெய்வம் அம்மா

நீ அசையும் தெய்வம்

தெய்வம்

இருக்கிறதா.. இல்லலையா...

இருக்கின்றதென்றால்..

எங்கே.. எங்கே இருக்கிறது...

உருண்டு சுற்றிய வீதிகளும்..

காவடி எடுத்த தெருவிலும்..

பாற்செம்பு தூக்கிய பாதையிலும்..

அழுதழுது தொழுத தெருவிலும்..

கூட்டம் கூட்டமாய்க்.

கூடி இழுத்த தெருவிலும்..

சந்தன வாசமும்..

ஜவ்வாது வாசனையும்..

கற்பூர புகையில்...வெப்பத்தில்..

அரோகரா என்ற

பெருங்கோசத்தோடு..

கூவித்தொழுத கோபுர வாசலிலும்..

இதெல்லாம் வேண்டாம்..

கடவுளே..

மூலஸ்தானமூர்த்தியே..

உன்... மூலஸ்தானத்தில் கூட..

தர்மம் மீறி..

அப்பாவித் தமிழர்.. இரத்தம் சிந்துவதைக்..

கண்டு காணாமல்..

தெய்வமே...

நீ இருக்கிறாயா..இல்லையா..

இருக்கிறாயா இல்லையா

கல்லாலே உன்னை

கட்டித் தொழுததாலே நீயும்

கல்லாக உன்மனதை ஆக்கிக்கொண்டாயோ

பொல்லாத இந்த மனிதர்

புழுத்துவிடும் உடம்பிற்காய்

காட்டிக்கொடுக்கின்றார் கழுத்தறுக்கின்றாரே என

கடவுளே நீயும் கண்மூடிக்கொண்டாயோ

இல்லை

காணாமல் போனாயோ

கண்காணிப்புக் குழுவினில் உன் பெயரும்

கடைசியில் வரும் என்று

காத்துத்தான் கிடைக்கின்றாயோ

காத்துத்தான் கிடக்கின்றாயோ..

என் வீட்டுக் காவல்காரா...

நீ நன்றியுள்ளவனடா...

உன்னை மறந்து..

எம் உயிரை மட்டும்

நினைந்து ஓடி வந்தோம்...

நீ வீட்டையே சுற்றி சுற்றி

வருவதாக

அயலவர்கள் சொன்னார்கள்..

இப்போது நீ எங்கே..

எங்கே எப்படி சாப்பிடுகிறாய்..

என்ற என் கேள்ளவிகளே..

என்னை உறுத்துகிறது..

மன்னித்துக்கொள் டைசன்..

உன்னை நாயென்று

யாரும் சொன்னாலே..

கோபப்படும் நான்..

உன்னை மறந்துவிடவில்லை

என் நினைவில்

நீ இன்னமும்.. உண்டு..

டைசன்..ஓ என் டைசன்..

ஓ என் டைசன்

என்ன கொடுமையடா

இது?

உனக்குக் கூட

ஆங்கிலத்தில் பெயரா?

பெயரில் என்ன

இருக்கு என்று சும்மா

குரைக்காதே...

உன்னை அடையாளப்படுத்துகின்ற

அவசிய முத்திரையடா அது...!

கொஞ்சம் யோசித்துப் பார்

நீ எப்படிக் குரைக்கின்றாய்?

"வள்... வள்..." என்று தானே

அது கூட தமிழ் என்று தானே

நான் சந்தோசப் பட்டேன்...

ஏனடா உன் எஜமானை

கோபித்துக் கொள்ளவில்லை...?

ஆனாலும் நீ கொடுத்து வைத்தவன்டா

ஈழத்தெருக்களில் தானே

உன் வாசம் இப்போதும்!

இப்போதும்...

புரியவில்லையா...

மதியுகி..பார்த்தால்..

புரிந்திருக்குமே...

நான் சொன்னது

நடக்கின்றதென்பது...

இவன் இப்படித்தான்..

இவன் இப்படித்தான்

கவன் இழுத்து

கல்லெறிந்து கண்ணாடி

உடைந்த பின்

காலில் விழுந்து

புலம்புவான்

இவன் இப்படித்தான்...!

சிவன் முன் போய் நின்று

நக்கீரப் பரம்பரையின்

கடைசி வாரிசு

நானென இறுமாந்து

சவால் விடுவான்

இவன் இப்படித் தான்...!

சரி விடு அண்ணா

சண்டை வேண்டாம்

பல வரி நான்

தமிழன்னையின் சொல்லழகு

காட்ட எழுதினால்

ஒரு வரி பிடித்து

தொங்குகின்றாயே...

நம் முன்னோரின் வீர

விளையாட்டு அது!

நாம் தான் பரிணாம வளர்ச்சியின்

உச்சியில் நின்று கொண்டு

ஆறறிவு ஆணவத்தில்

ஓரறிவு உயிரின்

குணம் கூட அறியோம்!

வீணே சீர் கெட்டுப்

போனோம்...

யாழில் வந்து

சடுகுடு, கிட்டிப் புள்,

தாச்சி மறித்தல் ஏதேனும்

விளையாடாமல்

சொலோடு விளையாடுகிறோம்

என்ன சின்னத் தனம் இது! (வீணான கற்பனைகளுக்கு இடம் கொடாதீர்... அடியேன் தன்னையே திட்டுவதாக அர்த்தம் கொள்க...)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.