Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புக்கு மோடி கூறிய அறிவுரை என்ன? - சுமந்திரன் விபரிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
TNA-meet-MODI-350-news.jpg

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்றுமாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வௌியிடுகையில், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நேற்று) பாராளுமன்றில் உரையாற்றுகையில் கூட்டு சமஷ்டி என்ற சொற்பதத்தை பயன்படுத்தியிருந்தார்.

அவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கருத்துக்களை பரிமாறியிருந்தார். அதன் பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம். அதன்போது இந்தியப்பிரதமர் இந்தியா என்றும் தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பக்கபலமாக இருக்கும் உறுதிபடத் தெரிவித்தார்.

அத்துடன் ஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ளது. அவர்களுக்கான கால அவகாசத்தை வழங்குவது அவசியம். கடந்த அரசாங்கங்கள் ஆட்சி செய்த காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்பாங்கான போக்கினை கொண்டிருந்தது. ஆகவே புதிய அரசாங்கத்தின் மனநிலையில் சில மாற்றங்களை என்னால் உணரமுடிகின்றது. ஆகவே நீங்கள் பொறுமையும் கடந்த காலத்தில் மேற்கொண்ட அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய காத்திரமான அணுகுமுறைகளை மேற்கொள்வது சிறந்தது ஆலோசனையையும் எமக்கு வழங்கினார் என்றார்.

http://seithy.com/breifNews.php?newsID=128257&category=TamilNews&language=tamil

கூட்டமைப்புக்கு மோடி கூறிய அறிவுரை "சும்மாவிரு"

இதை எப்படி சுமந்திரன் தன் வாயால் தமிழ் மக்களுக்கு தெரிவிப்பது.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

"இந்தியா என்றும் தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பக்கபலமாக இருக்கும் உறுதிபடத் தெரிவித்தார்" கடந்த காலங்களில் நடந்தவை இதற்க்கு முற்றிலும் முரணானதே. இனியும் இப்படி நடக்க போவதில்லை. இப்படி ஒரு வாக்குறுதியை மோடியால் மட்டுமல்ல எந்த கொம்பனாலும் தமிழர்களுக்கு தரமுடியாது. அப்படி சொல்லியிருந்தால் தமிழரை தற்காலிகமாக சமாதானப்படுத்துவதற்கே சொல்லப்பட்டிருப்பதாகவே இருக்கும். அல்லது சம்பந்தனும் சுமந்திரனும் மோடியுடன் நடந்த சந்திப்பில் சொல்லப்பட்ட விடயங்களின் சாராம்சத்தை இப்படிதான் தாங்கள் புரிந்துகொண்டதாக சொல்கிறார்களோ அவர்களுக்கு தான் வெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் ஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ளது. அவர்களுக்கான கால அவகாசத்தை வழங்குவது அவசியம். கடந்த அரசாங்கங்கள் ஆட்சி செய்த காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்பாங்கான போக்கினை கொண்டிருந்தது. ஆகவே புதிய அரசாங்கத்தின் மனநிலையில் சில மாற்றங்களை என்னால் உணரமுடிகின்றது. ஆகவே நீங்கள் பொறுமையும் கடந்த காலத்தில் மேற்கொண்ட அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய காத்திரமான அணுகுமுறைகளை மேற்கொள்வது சிறந்தது ஆலோசனையையும் எமக்கு வழங்கினார் என்றார்.

இதை சுமந்திரன் சொல்கிறாரா?  மோடி   சொன்னவரா??

இனி கூடடமைப்பின் அடுத்த தலைவரது அறிக்கை வந்தால் தான் தெரியும்..

வரும்..

...

இனி கூடடமைப்பின் அடுத்த தலைவரது அறிக்கை வந்தால் தான் தெரியும்..

வரும்..

அப்ப கூட்டமைப்புத் தலைமைப்பீடத்திலிருந்து பல வேறுபட்ட அறிக்கைகள் வரும் என்கிறீர்கள். கூட்டமைப்பை நன்றாகவே புரிந்து வைத்துள்ளீர்கள். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றில் இதை மோடி உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையாக விட்டிருக்கவேண்டும் அல்லது ஊட்டமைப்பு இந்த சந்திப்பில் ஊடகங்களையும் அழைத்துச் சென்றிருக்க வேண்டும். இங்கு தமிழ் அரசியல்வாதிகள் இரண்டும் கெட்டானாக ஆளுக்கு ஆள் முந்திரிக்கொட்டைபோல அறிக்கைவிடுவதும் தங்கள் தங்கள் பார்வையில் பட்டபடி பொது விடயங்களை விமர்சிப்பதும் தமிழர் தலைமையின் அரசியல் சாணக்கியம் கற்காலத்தில்தான் இன்னும் வாழ்கிறது என்பதைத்தான் குறிக்கிறது. தமிழர் விவகாரம் பற்றிய அறிக்கைகள் அனைத்தும் எதிர்காலத்தில் தனியான ஒரு ஊடக பிரிவவினால் மட்டும் கையாளப்பட்டு வெளியிடப்படவேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பு.

உண்மையான கருத்து. நன்றி
 
ஆனால் இதை யார் கூட்டமைப்பிற்குப் புரிய வைப்பது.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றில் இதை மோடி உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையாக விட்டிருக்கவேண்டும் அல்லது ஊட்டமைப்பு இந்த சந்திப்பில் ஊடகங்களையும் அழைத்துச் சென்றிருக்க வேண்டும். இங்கு தமிழ் அரசியல்வாதிகள் இரண்டும் கெட்டானாக ஆளுக்கு ஆள் முந்திரிக்கொட்டைபோல அறிக்கைவிடுவதும் தங்கள் தங்கள் பார்வையில் பட்டபடி பொது விடயங்களை விமர்சிப்பதும் தமிழர் தலைமையின் அரசியல் சாணக்கியம் கற்காலத்தில்தான் இன்னும் வாழ்கிறது என்பதைத்தான் குறிக்கிறது. தமிழர் விவகாரம் பற்றிய அறிக்கைகள் அனைத்தும் எதிர்காலத்தில் தனியான ஒரு ஊடக பிரிவவினால் மட்டும் கையாளப்பட்டு வெளியிடப்படவேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பு.

“தமிழர் விவகாரம் பற்றிய அறிக்கைகள் அனைத்தும் எதிர்காலத்தில் தனியான ஒரு ஊடக பிரிவவினால் மட்டும் கையாளப்பட்டு வெளியிடப்படவேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பு.”

நல்ல எதிர்பார்ப்பு. ஆனால், கூட்டமைப்பு க்கு இது வசதிப்படாது.

“குப்புசாமி கூறியது அவரது சொந்தக் கருத்து், கட்சியின் கருத்தல்ல. குப்புசாமி பற்றி நான் கூறுவது எனது கருத்து, கட்சியின் கருத்தல்ல. குப்புசாமிக்கு முட்டை பொரிப்பது அவரது மனைவியின் விருப்பம், குப்புசாமியின் விருப்பமல்ல. குப்புசாமி சுத்த வைசம்” என்றெல்லாம் தனியான ஒரு ஊடக பிரிவவினால் சொல்ல முடியாது. எனவே இது எமக்கு வசதிப்படாது என நிராகரிக்கிறோம்.   

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சுரேஸ் ஒருவர்தான் இப்படி குளறுபடி செய்கிறார்.

அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் மக்கள் இவரை வீட்டுக்கு அனுப்பினால் ( இவரிடத்துக்கு ஐங்கரநேசன் பொருத்தமானவர்) நல்லாயிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழகத்து தமிழனான எனக்கு திரு மோடியின் இலங்கை பயணம் பெருத்த ஏமாற்றத்தை இலங்கை தமிழர்களுக்கு தந்திருக்கும் என்று உணர முடிகின்றது. என்னடா இந்த மக்கள் பெரும் துன்பத்தை எதிர் கொண்டு லட்சகணக்கான உறவுகளை இழந்து இருக்கிறார்களே , அவர்களுக்கு வேண்டி தமிழகத்தில் பெரிய போராட்டங்கள் நடக்கின்றனவே என்று கொஞ்சம் கூட எண்ணாமல், ஒரு ஆறுதல் வார்த்தை கூட அவர்  சொல்லவில்லை . மாறாக நான் இதை செய்தேன், அதை முன்னேற்றுவேன் என்று சொல்லுவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் செயலாகவே தோன்றுகிறது. எப்பொழுதுதான் இந்த வடநாட்டு அரசியல்வாதிகளுக்கு தமிழனின் வேண்டுகோள்கள் புரிய போன்கின்றோதோ என்று தெரிய வில்லை. 
 
மேலும் இந்த மக்களை குறிப்பாக வட இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் முட்டாள் தென் தமிழக மீனர்வகளை கொஞ்சம் கூட கண்டிக்காத தமிழக அரசியவாதிகள் மற்றும் ஊடகங்களை   பார்க்கும் பொழுது கோபம் தான் வருகிறது. 

உங்கள் கோபம் நியாயமானதுதான் கண்ணா123. 

கண்ணா இவ்விவகாரத்தில் உங்களுக்காவது ஒரு தெளிவிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கண்ணா,

உண்மையில் மோடி சொன்னதில் பல நல்ல விடயங்கள் உள்ளன.

அழிவுகளை, யுத்த குற்றம் இவற்றை பற்றி எல்லாம் எந்த இந்திய தலைவரும் பேசப் போவதில்லை என்பது நாம் எதிர்பார்த்ததுதான் ( இவற்றின் சூத்திரதாரியே இந்தியாதானே). ஆனால் தன்நலனில் ஒரு பகுதியாக எமக்கு தரவேண்டிய தீர்வை பற்றி மோடி சொல்லுவார் என எதிர்பார்த்தோம்.

அது நடந்திருக்கிறது. பாராளுமன்ற உரையில் ஒரு முன்னாள் முதல்வராக சமஸ்டிக்குதான் கொடுக்கும் முக்கியத்துவத்தை மோடி கோடிட்டு காட்டினார்.

அரச மாளிகை உரையில் நேரடியாகவே 13 பிளஸ் தான் தீர்வாக அமையும் என்றார்.

இது முன்பு சிங்கும் சொன்னதுதான். எதுவும் நடக்கவில்லை.

ஆனால் மோடி அப்படியில்லை. தன் பேச்சை கேட்டு ஆளுநரை கூட மாற்றாத மகிந்தவை தூக்கி வீச வைத்தார். மைத்திரியும் ரணிலும் தன் நிஜ எஜமான் யாரென்று தெரிந்து நடக்கிறார்கள்.

கூட்டமைப்பும் அப்படியே. இந்திய மேலாதிக்கத்தை இருதரப்பும் ஏற்கும் போது, மாகாண சபை அடிப்படையில் ஒரு தீர்வு வரும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது.

தமிழர்களின் நீண்ட நோக்கு பூரண சுயாட்சி. இருப்பினும் அறுபதுகளில் அண்ணா செய்தது போல இப்போதைக்கு 13 பிளசுக்கு உடன் பட்டு மேலும் படிபடியாக முனேற முடியும்.

உண்மையில் மோடியின் வருகை ஒரு சின்ன நம்பிகையையே தருகிறது.

மீனவர் விவகாரம் பற்றி நீங்கள் சொல்வது மிகச்சரியே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணா இவ்விவகாரத்தில் உங்களுக்காவது ஒரு தெளிவிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது!

இந்த தெளிவு நிறைய பொது மக்களிடம் உள்ளது என்று எண்ணுகிறேன். ஆனால் இலங்கையை எல்லா விதத்திலும்  எதிர்க்க  வேண்டும் என்பதற்காக தாம் செய்யும் இந்த பிரச்சனையை தமிழக அரசியல் தலைவர்கள் புரியாமல் பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த பிரச்சனையை தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் சரியாக கையாண்டு இருந்தால்  இந்த பிரச்சனை எப்பொழுதோ தீர்ந்து இருக்கும். குறிப்பாக மூன்று மாவட்டங்களின் மீனவர்களை ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்களேயானால் இலங்கை மீனவர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும். இலங்கையை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இந்த  பிரச்சனைக்கு சரியாக தீர்வு கிடைக்காமல் உள்ளது. 

Edited by kanna123

இ்ந்திய மேலாதிக்கத்தை ஏற்று அவர்களின்  நலன்களுக்காக ஈழத்தமிழர் தமது  உரிமைகளை  குறைத்து கொள்வதை போல இந்திய மீனவர்களின் மேலாண்மையை ஏற்று எமது மீனவர்கள் தமது மீன் வளத்தையும் குறைத்து கொள்ளலாம். 

ஓகோ அப்படி செய்ய முடியாது ஏனென்றால் அவர்கள் தமிழ் பேசும் மீனவர்களல்லவா? வேற்று மொழி பேசுவோரின் மேலாண்மையை  மட்டும் ஏற்குமாறு தானே பிரசங்கிகள் கூறுகிறார்கள். . தமிழ் மீனவர்கள் என்றால் சீறி பாய மாட்டோமா?

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா,

நீங்கள் சொல்லும் அறிவார்ந்த பார்வை இல்லாமல் - பாதிக்கப்படுவது வடபகுதி தமிழர்கள்தான் என்பதை கண்டு கொள்ளாமல் முடிவெடுப்பது ஒரு காரணம்.

ஆனால் பிரதான காரணம் தமிழ் நாட்டின் எல்லா அரசியல் தலைகளுக்கும் பணம் பட்டுவாடா செய்யும் மீன் மாபியாவின் அழுத்தம்.

ரிங்கோ,

நாம் வந்தவன் போனவனின் மேலதிக்கதை எல்லாம் ஏன் ஏற்க வேண்டும்.

டெல்கியில்தான் தர்பார். அவர்களுக்கு மட்டும் சலாம் போட்டால் போதும். சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் ஏன் காவடி தூக்கணும். தூக்கியும் பலன் இல்லை.

டெல்கியே பிழை தமிழக மீனவர் மீது எனும் போது - நாம் எதுக்காக எம் மீன்வளத்தை எல்லோருக்கும் திறந்து விடணும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

பாதிப்பு நடப்பு மீனவர்களுக்கு மட்டுமல்ல எதிர்கால மீனவர்களுக்கும்தான். மீன்குஞ்சுகளும்ம் அள்ளப்படுவதால் மலட்டுக் கண்டமேடைகளே எதிர்காலத்தில் விட்டுச் செல்லப்படும்!

சென்னையிலும் தூத்துகுடியிலும் வேற்று மொழிக்காரன் ஆட்சியில் இருந்தால் உங்கள் பார்வை நிச்சயமாக  வேறாக இருக்கும் கோசான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மீனவ பிரச்சினைக்கு தீர்வு வரும் தமிழக சட்ட மற்ற தேர்தலுக்கு பிறகு கிடைக்கும் என்று எண்ணுகின்றேன். இப்பொழுது, தமிழக ஊடகங்களில் ஆழ் கடல் மீன் பிடிப்பு பற்றி செய்திகள் வர தொடங்கியுள்ளன. மேலும் படகுகள் பிடிக்க படுவதால் தென் தமிழக மீனவர்களின் குறிப்பாக புதுகோட்டை, நாகப்பட்டினம் மீனவர்களின் செயலில் மாற்றம் வரத்தான் போகின்றது. மேலும்,  ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் இவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகள் கொடுப்பார்களேயானால் சீக்கிரம் தீர்வு கிடைக்கும். ஜெயலலிதா அவர்கள் பெரிய செயல் திட்டத்தை மத்திய அரசிற்கு ஏற்கனவே கொடுத்து விட்டார்கள். எனவே தீர்வு கிடைக்கும் என்று கருதுவோம். ஏனென்றால் இந்த நாடகம் தமிழகத்தில் நிறைய நாள்  நீடிக்காது. மக்கள் இப்பொழுது அனைத்தையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். 

Edited by kanna123

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னை பற்றிய உங்களின் (தப்பான) பார்வை. இதுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது ரிங்கோ.

நடந்தால் சந்தோசம் கண்ணா.

மோடி மீது இருக்கும் நம்பிக்கையில் 1% கூட எந்த தமிழக தலைவர் மீதும் எமக்கு இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக தலைவர்களை குறிப்பாக ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் முழு இந்தியாவும் கூர்ந்து கவனிக்கும். மோடி இவ்வளவு பேசுகிறார் என்றால், இவர்கள் கொடுத்த அழுத்தங்களால் தான். 7 கோடி தமிழ் நாடு தமிழர்களை எந்த இந்திய தலைமையும் ஒதுக்கி  விட முடியாது. 

கண்ணா எங்களுக்கு எங்களை அடக்கு்ம் அடக்குமுறையாளர்களுக்கு பணிந்து விசுவாசம் செய்து தான் பழக்கம். உணர்வுடன் உரிமையுடன் உதவி செய்யும் உங்களை நக்கலாக தான் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கட்டும் கண்ணா,

உங்கள் நம்பிக்கையில் ஏன் நான் வீணா மண்ணைப் போடுவான்?

7 கோடிக்கு உள்ள பவரை 2009 முள்ளி வாய்க்காலலில் நாம் தெளிவாக கண்டு கொண்டோம்.

பிரபாவும் இதை நம்பியே ஏமாந்தார்.

தமிழகத்தை எப்படி கட்டுக்குள் வைத்திருப்பது என்று மத்திக்கு நல்லாவே தெரியும்.

இதை நக்கலுக்குச் சொல்லவில்லை. இதுதான் தமிழகத்தின் இயலுமை அல்லது இயலாமை.

கண்ணா உங்கள் தமிழை பார்த்தால் அப்படியே இலங்கை வழக்கு மாதிரி இருக்கு, நிறைய இலங்கை நண்பர்களோ ?

மோடி அங்கு  இறங்கி  பார்த்தால்  எல்லாம்  மெடின்  சீனா  சாமானாம் அதுதான்  எதுக்கு  வாயை  கொடுத்து வம்பை  விலைக்கு  வாங்குவான்  என்று அவரும்  இணக்க  அரசியலுக்கு  சம்மதம்  சொல்லுறார் போல .. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கோஷன்,
2009 இல் நடந்தது எங்களின் கைகளை மீறி சென்ற செயல். போர் நடந்தது இரு பிரிவிகளுக்கு இடையில். இதில் ஒரு பிரிவு இந்திய நாட்டில் தடை செய்ய பட்ட பிரிவு. தமிழகத்தில் ஒரு நிகழ்வால் கெட்ட பெயரை சம்பாதித்த பிரிவு. இதனால் மக்களிடையே அவ்வளவு புரிதல் இல்லாமல் போய் விட்டது. மேலும், ஜெயாவும் கருணாநிதியும் இரு துருவங்களாக இந்த விஷயத்தில் கருது சொன்னது மக்களை குழப்பமடைய வைத்தது. பார்க்க போனால் ஜெயாவின் மனசு போர் குற்றங்கள் அடங்கிய விடியோக்கள் வெளியில் வந்த பிறகு தான் மாறியது என்று இங்கு அனைவரும் அறிவர். யார் தான் அறிவார், சொந்த அரசு தரப்பே தன் மக்களை இப்படி கொன்றொழிக்கும் என்று. இதனாலேயே, இலங்கையை அணைத்து விஷயங்களிலும் எதிர்க்கும் மனப்பான்மை தமிழகத்தில் நிலவுகிறது. 
 
என்னுடைய எழுத்து தமிழ் நானே வளர்த்து கொண்டது. இங்கு தூய தமிழில் எழுதும் வழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. என்னால் முடிந்தவரை  தமிழை சரியாக பயன்படுத்த  முயல்கிறேன். 

Edited by kanna123

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.