Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு மோடி வழங்கிய ஆலோசனையை சிறிலங்கா ஏற்றுச் செயற்படும்!

Featured Replies

13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், அதற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய ஆலோசனையை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் ஏற்றுச் செயற்படும் என்று இந்தியாவின் மத்திய இணைஅமைச்சர் வெங்கய்ய நாயுடு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“சிறிலங்காப் பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 1987ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய – சிறிலங்கா உடன்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அமைய, தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

அது தான் நரேந்திர மோடி கொடுத்த ஆலோசனை. அந்த ஆலோசனையை  சிறிலங்கா புரிந்து கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்.

அதன் பின்னர், இலங்கைத் தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை நோக்கி நகர முயற்சிக்கலாம்.

சிறிலங்காவின் அரசியலமைப்புக்குட்பட்ட வகையில், சிறிலங்காவின் ஒருமைப்பாட்டுக்குள் விரைவான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு.

ஆனால், அதேசமயம், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிலையான அமைதியான தீர்வைக் காண்பதற்கு நல்லிணக்கமும், அதிகாரப்பகிர்வும் அவசியமானதாகும்.

மோடியின் சிறிலங்கா பயணம் வரலாற்று ரீதியானது. அயல்நாட்டில், அமைதியையும், பதற்றமற்ற நிலையையும், இந்தியா விரும்புகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/news/38500/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், அதற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய ஆலோசனையை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் ஏற்றுச் செயற்படும் என்று இந்தியாவின் மத்திய இணைஅமைச்சர் வெங்கய்ய நாயுடு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

என்னிடம் நண்பன் ஒருவன் கடன் வாங்கினான். அதனைத் திரும்பக் கேட்டபோது... "கவலைப்பட வேண்டாம், நீ இறப்பதற்குள் தந்துவிடுவேன்." என்று நம்பிக்கை தந்தான்.  :(  :o

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் நண்பன் ஒருவன் கடன் வாங்கினான். அதனைத் திரும்பக் கேட்டபோது... "கவலைப்பட வேண்டாம், நீ இறப்பதற்குள் தந்துவிடுவேன்." என்று நம்பிக்கை தந்தான்.  :(  :o

நம்பிக்கைதான் வாழ்க்கை என விளக்கம் சொல்லபோயினம் :D

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

"ராஜீவ் ஏறி விழுந்த குதிரையில் மோடியும் ஏறி விழுந்தார்.." இப்பிடித்தான் வரலாற்றில் எழுதப்போகிறார்கள்.. :lol:

ஏதோ நாங்கள் நினைப்பதும் சொல்வதுதான் நடக்குது அதுவரை சந்தோசம் .

  • கருத்துக்கள உறவுகள்
மழை பெய்யும்போது நீர் மேலே இருந்து கீழே வரும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
(அப்படி சொன்னால் மற்றவர்கள் சிரிப்பார்கள் என்றுதான் யாரும் சொல்வதில்லை)
எப்போது மழை பெய்யும் என்று சொல்லத்தான் அறிவு வேண்டும். 
 
வார நவம்பர் மாதம் இலங்கையில் மழை பெய்யும் என்று சொன்னால் ....
மற்றவர்கள் சிரிப்பார்கள்.  
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ நாங்கள் நினைப்பதும் சொல்வதுதான் நடக்குது அதுவரை சந்தோசம் .

விடுதலைக்கும்

அரசியலுக்கும் உள்ள வித்தியாசம் மலையளவு...

அதை  எப்ப படிப்பதாக உத்தேசம்.....?? :(  :(

பயங்கரவாதத்தை ஒழிப்பது ஒன்றும் இலகுவானது அல்ல இருந்தாலும் இலங்கையில் அது ஒழிக்கப்படும் என்று முற்றுமுழுதாக நம்பினேன் .நான் எதிர்பார்த்ததை விட கூடுதல் காலம் எடுத்துவிட்டது .இந்தியாவில் பெருன்பான்மை ஆட்சி இல்லாதது தான் காரணம் .

அதன் பின் என்னை போன்றவர்கள் நினைத்ததுதான் நடக்கின்றது .

இடையில் மகிந்த நம்ம தலைவர் மாதிரி உலகத்தை பற்றி  தெரியாமல் ஆட  வெளிக்கிட  கொஞ்சம் இழுபறி அதுவும் நல்லதற்குத்தான் .சிங்கள தலைமைகளுக்கும் தாம் நினைத்த படி எதுவும் செய்ய  முடியாது  என்பது சொல்லியிருக்கு .

எங்கள் காட்டில் தான் மழை அதை எப்ப பெய்ய வைக்கவேண்டும் என்றும் தெரியும் .

விடுதலைக்கும்

அரசியலுக்கும் உள்ள வித்தியாசம் மலையளவு...

அதை  எப்ப படிப்பதாக உத்தேசம்.....?? :(  :(

அண்ணை பிரெஞ்சு எனக்கு தெரியாது .என்ன எழுதிருக்கின்றிர்கள் என்று ஒருக்கா மொழி பெயர்த்து சொல்லுங்கோ . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
இதைவிட எங்கள் காட்டில் மழை வெள்ள பெருக்கோடு பொழிகிறது.
(வாயால நாங்களும் வடை சுடுவம்)
உலகில் என்ன நடக்கிறது என்றே தெரியாது ..... இதிலே மழையும் வெயிலும்.
 
சீனா  இழுத்து மூடினால் ,,,,,, இந்தியாவின் சென் செக்ஸ்சையும் மூட வேண்டியதுதான்.
மாட்டுப்பால் காய்ச்சி பொங்க விடத்தான் சரி.  
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்தை ஒழிப்பது ஒன்றும் இலகுவானது அல்ல இருந்தாலும் இலங்கையில் அது ஒழிக்கப்படும் என்று முற்றுமுழுதாக நம்பினேன் .நான் எதிர்பார்த்ததை விட கூடுதல் காலம் எடுத்துவிட்டது .இந்தியாவில் பெருன்பான்மை ஆட்சி இல்லாதது தான் காரணம் .

அதன் பின் என்னை போன்றவர்கள் நினைத்ததுதான் நடக்கின்றது .

இடையில் மகிந்த நம்ம தலைவர் மாதிரி உலகத்தை பற்றி  தெரியாமல் ஆட  வெளிக்கிட  கொஞ்சம் இழுபறி அதுவும் நல்லதற்குத்தான் .சிங்கள தலைமைகளுக்கும் தாம் நினைத்த படி எதுவும் செய்ய  முடியாது  என்பது சொல்லியிருக்கு .

எங்கள் காட்டில் தான் மழை அதை எப்ப பெய்ய வைக்கவேண்டும் என்றும் தெரியும் .

அண்ணை பிரெஞ்சு எனக்கு தெரியாது .என்ன எழுதிருக்கின்றிர்கள் என்று ஒருக்கா மொழி பெயர்த்து சொல்லுங்கோ . :icon_mrgreen:

உங்களுக்கு தமிழரின் எழுத்துக்கள் எப்பொழுதும் விளங்குவதில்லை அண்ணை

எனக்குத்தோல் வெள்ளையும் இல்லை

நான் என்ன செய்ய..??

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.