Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் போராட்டம் வெடிக்கும்! இராணுவத்தை வெளியேற்றி மக்களை மீள்குடியமர்த்தாது விடின்

Featured Replies

mmmaaaii.jpg

 

"வலிகாமத்திலும் சம்பூரிலும் மக்களை மீள்குடியேற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அதனைப் பெரிதும் வரவேற்றனர். ஆனால், அரசின் தற்போதைய நடவடிக்கைளைப் பார்க்கும்போது எமக்கு கவலையும் விசனமும்தான் வருகின்றது.
 
25 வருடங்களின் பின்னர் தமது சொந்த இடத்தை - வீட்டை - காணியைப் பார்க்கலாம் என்ற ஆவலோடு கடந்த வெள்ளிக்கிழமை (நேற்றுமுன்தினம்) வயாவிளான் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குச் சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் அழுதவாறு திரும்பியுள்ளனர்.'' - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
"உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருக்கும் வலிகாமத்தில் ஆயிரத்து நூறு ஏக்கர் நிலப்பரப்பையும், சம்பூரில் ஆயிரத்து ஐம்பத்து இரண்டு ஏக்கர் நிலப்பரப்பையும் விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருந்தது. அதற்கமைய கடந்த 13ஆம் திகதி வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வளலாய் கிராம சேவையாளர் பிரிவு மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்தநிலையில், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வயாவிளான் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவு நேற்று (நேற்றுமுன்தினம்) விடுவிக்கப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த அறிவிப்புக்கு அமைய குறித்த கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த மக்களை அரச அதிகாரிகள் நேற்று (நேற்றுமுன்தினம்) அழைத்துச் சென்றனர். ஆனால், வல்லை - அராலி பிரதான வீதியைத் திறந்து விட்ட இராணுவத்தினர், வீதியின் இரு மருங்கிலும் உள்ள காணிகளுக்குள் செல்ல பொதுமக்களை அனுமதிக்கவில்லை. பிரதான வீதியின் இருபுறமும், பொது மக்களின் சில வீடுகளிலும் அமைக்கப்பட்ட இராணுவ முகாம்கள் அப்படியே இருக்கின்றன. அவற்றுக்கு முன்பாக புதிதாக நிரந்தர பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இராணுவ முகாம்கள் அமைக்கப்படாத வீடுகள் மற்றும் ஆலயங்கள் அடியோடு இடித்தழிக்கப்பட்டுள்ளன. வீதிகள் கூட அடையாளம் தெரியாதவாறு அழிக்கப்பட்டுள்ளன.
 
இதேவேளை, வயாவிளான் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளான ஒட்டகப்புலம், தோலகட்டி, வடமூலை ஆகிய பகுதிகளுக்குள் மக்கள் செல்வதற்கு நேற்று (நேற்றுமுன்தினம்) அனுமதிக்கப்படவில்லை. அந்த இடங்களுக்குச் சென்ற மக்களை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். 25 வருடங்களின் பின்னர் தமது சொந்த இடத்தை - வீட்டை - காணியைப் பார்க்கலாம் என்ற ஆவலோடு வெள்ளிக்கிழமை (நேற்றுமுன்தினம்) வசாவிளான் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குச் சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் கதறியழுதவாறு திரும்பியுள்ளனர்.
 
தமது சொந்த இடங்களில் மீள்குடியேற வேண்டும் என்று கோரியே இந்த மைத்திரி அரசுக்கு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். ஆனால், இராணுவத்தைத் திருப்திப்படுத்தும் விதத்தில்தான் மீள்குடியேற்ற விடயத்தை அரசு கையாள்கின்றது. இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். வடக்கு, கிழக்கில் இராணுவத்தை முழுமையாக வெளியேற்றி மக்களை உரிய முறையில் அரசு மீள்குடியேற்ற வேண்டும். இல்லையேல் சொந்த நில மீட்புக்கான தமிழரின் அஹிம்சைப் போராட்டம் மீண்டும் வெடிக்கும்.
 
இதனை நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை நேரில் சந்தித்துத் தெரிவிக்கவுள்ளோம். எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அரச தலைவர்கள், இராணுவத் தலையீடுகள் இல்லாத தமிழ் மக்களின் சுதந்திரமான மீள்குடியேற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். தமிழ் மக்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உரிய முறையில் உடன் மீள்குடியேற்ற வேண்டும்" - என்றார்.
 
 
 

எப்ப இருந்து மாவையும் புலம் பெயர் புலி வால் ஆனார்? சொல்லவேயில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
புலம்பெயர் தேசத்திலுள்ளவர்கள் தான் குழப்புகின்றனரென்றால் கூட்டமைப்பிலுள்ளவர்களும் குழப்புகின்றனர்! - சுமந்திரன் குற்றச்சாட்டு
அவர் புலம் பெயராத புலிவால்.....
ஏண்டா இன்னுமா நீங்கள் சிங்களத்தை புரியவில்லை ... சுமந்திரனை இன்னும் மிண்டு கொடுக்க சொல்லுங்கோ ...
எங்க கோசன் ... வாலை காணம் 
  • கருத்துக்கள உறவுகள்

மாவை : அஹிம்சை போராட்டம் மீண்டும் வெடிக்கும்.

மாற்று கருத்து புல வாலுகள் : உறுதிப்படுத்திய செய்தியா ?

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் மீண்டும் வெடிச்சா - ஆமி இண்டலிஜன்ஸ் வந்து நல்லா ஊதி ஒட்டுப்போடுவான். இப்ப விட்டிருக்கும் காணியையும் மறுபடியும் எடுப்பான்.

பழையபடி உசுப்பேத்திற வேலையை விட்டுட்டு சனத்தின் காணியை எப்படி தொடர்ந்தும் மீட்கலாம் எண்டு பாருங்கோ.

மறுபடியும் முள்ளிவாய்கால் கடற்கரையில் போய் பிக்கினியோடு படுக்க யாரும் தயாரில்லை.

இப்ப யாழில் யாருக்கும் சிறுநீர் முட்டினாலும் "எங்கே கோசான்" என்று கூவுவது ஒரு பேசன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

போராடலாம்.. தப்பில்லை. போராட்ட அழுதங்களால் தான்.. சர்வதேசம் இதைப் பற்றி பேச வெளிக்கிட்டதால் தான்.. மகிந்தவும் சரி மைத்திரியும் சரி கொஞ்சம் கொஞ்சம் என்றாலும் நிலக்கையளிப்புச் செய்யினம்.

 

எமது நிலங்களை எமது கையில் இருந்து சிங்கள எதிரிகளிடம் கையளித்த குற்றத்தில்.. சர்வதேசதக்கும் பங்குள்ளது. அந்த வகையில்.. அதனை விடுவித்து மீண்டும் எம் கையில் அதனை ஒப்படைக்கச் செய்ய வேண்டிய கடப்பாடு அவைக்கு இருக்குது. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.