Jump to content

'புற'த்திலும் புலத்திலும் பெண் கவிஞர்கள்!


Recommended Posts

'புற'த்திலும் புலத்திலும் பெண் கவிஞர்கள்!

சங்க கால இலக்கியத்தில் புறநானூற்றில் ஒரு பாடல் உண்டு. தமிழனுடைய வீரத்தைப் பற்றி பேசுகின்ற பொழுது இந்தக் புறநானூற்றுப் பாடல் சொல்லுகின்ற கதையை இன்று வரை உதாரணம் காட்டுகிற அளவிற்கு புகழ் பெற்ற பாடல் அது. அந்த பாடலின் சுருக்கம் இதுதான்.

ஒரு பெண் தன் கணவனை போருக்கு அனுப்புவாள். கணவன் போரில் வீரச் சாவு அடைந்து விடுவான். கணவன் மார்பில் விழுப்புண் ஏந்தி வீரனாக வீழ்ந்தான் என்ற செய்தி கேட்டு பெருமை கொள்வாள். அடுத்த நாள் போருக்கு தன் மகனை அனுப்புவாள். மகனும் போரில் இறந்து விட்டான் என்று செய்தி வரும். ஆனால் கூடவே இன்னும் ஒரு செய்தி வரும். அவளுடைய மகன் புறமுதுகு காட்டி ஓடுகின்ற பொழுது, முதுகில் காயம் பட்டு இறந்தான் என்பதே அந்தச் செய்தி. இதைக் கேட்ட அந்தப் பெண் துடித்துப் போவாள். போர்க்களம் நோக்கி ஓடுவாள். இறந்து கிடக்கும் உடல்களுக்குள் தன்னுடைய மகனை தேடுவாள். மகனைக் கண்டு பிடித்தவள், ஓடிச் சென்று மகனுடைய உடலைப் பார்க்கிறாள். மகன் மார்பில் காயம் பட்டு இறந்து கிடக்கிறான். தன்னுடைய மகனைப் பற்றி வந்த செய்தி பொய்யென்றும், உண்மையில் அவன் ஒரு வீரனாக மார்பில் காயம் பட்டு இறந்தான் என்றும் புரிந்து கொள்கிறாள். தன்னுடைய மகனை எண்ணி பெருமை கொள்கிறாள்.

ஈழத்தில் தாய்மார் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்புகின்ற பொழுது அவர்களை புறநானூற்று தாய் என்று சொல்வதன் காரணமும் மேற்சொன்ன புறநானூற்றுப் பாடல்தான். புறநானூற்றுப் பாடல்களில் வருகின்ற கதைகளில் ஒன்றைச் சொல்லும்படி கேட்கின்ற பொழுது, உடனடியாக சொல்லப்படுவதும் மேற்சொன்ன கதைதான். இந்தக் கதை ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. இந்தக் கதையை தருகின்ற பாடலை பாடியவர் காக்கைபாடினியார் என்கின்ற ஒரு பெண் புலவர்.

சங்க இலக்கியங்களை எழுதியவர்களில் 40இற்கும் மேற்பட்டவர்கள் பெண்புலவர்கள் என்று அறிய முடிகிறது. புறநானூற்றுப் பாடல்களை எழுதிய 32 புலவர்களில் 16 பேர் பெண்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அனைவரும் அறிந்த முக்கியமான சங்க கால புலவர் அவ்வையார். இவரே புறநானுற்றுப் பாடல்களில் அதிகமான பாடல்களை பாடியவர். நானூறு பாடல்களில் 33 பாடல்களை அவ்வையார் மட்டும் பாடி உள்ளார். அவ்வையார் அன்றைய மன்னர்களை இடித்து உரைக்கின்ற அளவிற்கு, போர்களில் சமாதானம் செய்கின்ற அளவிற்கு அரசியல் அந்தஸ்தும் பெற்றிருந்தார்.

அவ்வையாரின் பின் வந்த பல பெண் புலவர்கள் அவ்வையார் என்ற பெயரிலேயே தம்மையும் அழைத்துக் கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அதே வேளை ஆணாதிக்க சமூகம் பல அவ்வையார்களை ஒரு அவ்வையார் ஆக்கி விட்டது என்ற கருத்தும் உண்டு. அதியமானுடன் நட்புக் கொண்டிருந்த அவ்வையார், நல்வழி எழுதிய அவ்வையார், சேரமான் நாயனார் காலத்து அவ்வையார் என்று பல அவ்வையார்கள் வாழ்ந்தார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

சங்க காலத் தமிழர்களின் சமயத்தை ஆராய்கின்ற பொழுது, ஒரு பெண் புலவரின் பாடல் முக்கியமான சான்றுகளை தருகிறது. தாய்நாட்டைக் காக்க போரில் வீராச் சாவு அடைந்த ஒரு வீரனின் நடுகல்லை வணங்குவது பற்றி அல்லூர் நல்முல்லையார் என்ற பெண் புலவர் பாடி வைத்திருக்கிறார். கைம்பெண்களின் அவலத்தை, பெண்ணியக் கருத்துக்களை பெருங்கோப்பெண்டு என்ற பெண் புலவர் பாடியிருக்கிறார்.

புறநானுறில் இப்படி புகழ் பெற்ற பெண் புலவர்களின் படைப்புக்கள் விரவிக் கிடக்கின்றன. அதே போன்று அகநானுற்றுப் பாடல்களிலும் பெண் புலவர்கள் இருக்கிறார்கள். சங்க காலப் பெண் புலவர்களில் அவ்வையாருக்கு அடுத்தபடி புகழ் பெற்றிருந்த வெள்ளி வீதியார் என்ற பெண் புலவர் அகநானூற்றுப் பாடல்களில் பலதை பாடியுள்ளார்.

இவ்வாறு தமிழை அழகுபடுத்திய பெண் புலவர்களின் வரலாறு சங்க காலத்தோடு முடிந்து விடவில்லை. கி.பி 7, 8ஆம் நூற்றாண்டளவில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்தில் வாழ்ந்த அவ்வையார், ஆண்டாள் என்று தொடர்ந்தது. ஆண்டாளுடைய பாடல்களில் இருக்கின்ற இலக்கிய ரசனை வேறு எங்கும் இல்லை என்று சிலர் சொல்வார்கள். சிலர் ஆண்டாளை கம்பருடன் ஒப்பிட்டு பேசுவார்கள். உண்மையில் ஆண்டாளுடைய பாடல்களை படிக்கின்ற பொழுது, யாருமே அதில் மயங்கவே செய்வார். அதில் சொட்டுகின்ற கவி ரசம் அற்புதமானது. படிப்பவரை சொக்கிப் போகச் செய்வது.

இப்படி அவ்வையார்(கள்), காக்கைபாடினியார், வெள்ளிவீதியார், ஆண்டாள் என்று நீண்டு கொண்டு போன வரிசை திடீரென்று நின்று போய்விட்டது. ஆண்டாளுக்குப் பிறகு ஒரு பெண் புலவரை தேடிப் பார்த்தால், யாருமே அப்படி தென்படவில்லை என்பது ஒரு சோகமான செய்தி.

இன்றைக்கு புலம் பெயர் நாடுகளில் ஆண்களை விட பெண்களே அதிகமாக கவிதை எழுதுகிறார்கள். ஐரோப்பா, கனடா, அவுஸ்ரேலியாவின் ஒவ்வொரு நகரங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கவிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுடைய கவிதைகளின் வீச்சு ஒரு எல்லைக்குள் நின்று விடுகிறது. அல்லது கவிதைகளில் வீச்சே இல்லாமல் இருக்கிறது.

இந்தக் கவிஞர்களுடைய கவிதைகளில் புதிய விடயங்கள் இருப்பதில்லை. புதிய கருத்துக்கள் இருப்பதில்லை. புதிய காட்சிகள் இருப்பதில்லை. புதிய சொற்கள் இருப்பதில்லை. இதற்கு எமது ஆணாதிக்க சமூகமும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். பெண்கள் வீட்டிலும், தொடர் நாடகங்களிலும் அடைபட்டுக் கிடப்பதால் அவர்களிடம் புதிய தேடல்கள் இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. புதிய தேடல்கள் இல்லாததால் பெண் கவிஞர்களின் கவிதைகள் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றி வருகின்றன.

உலக அரசியல், பகுத்தறிவு, வர்க்கப் போராட்டங்கள், சாதியம் போன்றவற்றையெல்லாம் பெரும்பாலும் பெண்களின் கவிதைகள் தொட்டுச் செல்வதில்லை. அதற்கான தேடல்களை செய்வதிலும் பெண் கவிஞர்கள் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.

புலத்திலே உள்ள பெரும்பாலான பெண் கவிஞர்கள் பெரும்பாலும் வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் கவிதை வாசிப்பதன் மூலமே தங்களுடைய கவிதைகளை வெளிக் கொணர்கிறார்கள். அந்தக் கவிதைகள் அனைத்தும் ஏறக்குறைய ஒரே மாதிரியே இருக்கும். ஒருவர் முதலாவதாக சொன்ன வரியை வேறு ஒருவர் நான்காவதாக சொல்லுவார். ஒரு வரியை இரண்டு தடவைகள் சொல்ல வேண்டும் என்பது கட்டாய வழக்கமாக இருக்கும்.

இதை படிக்கின்ற பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி வரும். இதை எழுதுகின்ற நான் ஒரு சிறந்த கவிஞனா என்று? இதை எழுத எனக்கு என்ன தகுதி என்று அடுத்த கேள்வியும் தொடர்ந்து வரும். நான் சிறந்த கவிஞனோ, இல்லையோ, ஆனால் ஒரு மிகச் சிறந்த ரசிகன். நீங்கள் என்னிடம் ஆண்கள் எழுதிய 50 கவிதைகளையும் பெண்கள் எழுதிய 50 கவிதைகளையும் பெயரிடாமல் கொண்டு வாருங்கள். நான் சரியான முறையில் எது ஆண்கள் எழுதியது, எது பெண்கள் எழுதியது என்று பிரித்துக் காட்டுகிறேன். அதில் தவறுகள் வந்தால் கூட அவைகள் பத்துக்குள்தான் இருக்கும். அது முடியாது போனால் நான் சொன்னது தவறு என்று ஏற்றுக் கொள்கிறேன்.

இதில் இன்னும் ஒரு கொடுமை உண்டு. ஒரு சோக நிகழ்ச்சி நடந்தால் போதும். அதற்கான அஞ்சலி நிகழ்வில் பெண் கவிஞர்கள் வரிசையாக வந்து தங்களுடைய கவிதைகளின் மூலம் மேலும் துன்பத்தை தருவார்கள்.

சுனாமி வந்த பொழுதும் இதுதான் நடந்தது. வந்த அலை திரும்பிப் போகவில்லை. இங்கே இவர்கள் கவிதை வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள். செஞ்சோலையில் குண்டு வீழ்ந்தது. மீட்புப் பணி முடியவில்லை. அதற்குள் கவிதைகள் அணி வகுத்து விட்டன. கடைசியாக வாகரையில் குண்டு வீசப் பட்ட பொழுதும், பெண் கவிஞர்கள் வானொலிகளில், தொலைக்காட்சிகளில் வந்து கவிதைகளை வீசி விட்டுப் போனார்கள்.

இதற்கான காரணம் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அடுத்த குண்டு எப்பொழுது விழும் என்ற இவர்கள் கவிதை எழுதி தயாராக வைத்திருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. பெண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்று ஒரு கருத்து உண்டு.

ஒரு சாவு வீட்டில் ஆண்கள் காரியங்களைக் கவனிக்க, பெண்கள் சுற்றி இருந்து ஒப்பாரி பாடுவார்கள். அந்த ஒப்பாரியின் மூலம் தனிப்பட்ட கோப தாபங்களையும் சிலர் தீர்த்துக் கொள்வார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. எப்படி இருந்தாலும், அந்தப் பெண்களின் சோகம் அந்த இடத்தில் பாடலாக வெளிப்படுகிறது. இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த ஒப்பாரி வைக்கும் பழக்கும் குறைந்து விட்டாலும், அந்தத் தன்மை மரபணுக்கள் வழியாக காவிச் செல்லப்பட்டிருக்கலாம். அதன் வெளிப்பாடாக சோக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற பொழுது பெண்கள் கவிதை வாசிப்பதாக இருக்கக் கூடும். இப்படி ஒப்பாரிக்கு பதிலாக கவிதைகள் வாசிக்கப்படுகின்றனவா என்பது உண்மையிலேயே ஆய்வுக்கு உட்பட்டத்தப்பட வேண்டிய ஒரு விடயம்.

மாவீரர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவர்கள் வந்து மீண்டும் கவிதை வாசிக்கப் போகிறார்களே என்று நினைக்க பயமாக இருக்கிறது. சென்ற முறை அவர்கள் எழுதிய அதே கவிதைகள்தான் இம் முறையும் வரப் போகின்றன. இம் முறை சில வசனங்கள் இடம் மாறி இருக்கப் போகின்றன. அவ்வளவுதான்.

மொத்தத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள பெரும்பாலன பெண் கவிஞர்கள் ஒரே விதமான பாணியில் ஒரே விதமான கவிதைகளை எழுதி காலத்தை வீணே கடத்திக் கொண்டு போகிறார்கள். சில விதிவிலக்குகள் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் விதிவிலக்குகள் பொதுவிதி அல்ல. இங்கே பெண் கவிஞர்களை நோக்கி இதை எழுதுவதற்கும் காரணம் உண்டு. நான் முன்பே சொன்னது போன்று புலம்பெயர்ந்த நாடுகளில் அதிகமாக கவிதை எழுதுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு கவிதைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கின்ற கடப்பாடு அதிகம் உண்டு.

அது முடியாவிட்டால் ஒன்று செய்யுங்கள். நான் குறிப்பிட்ட விதிவிலக்குகளுக்குள் அடங்குபவர்களில் நீங்களும் ஒருவர் என்று எண்ணி ஆறுதல் பட்டுக் கொள்ளுங்கள். அல்லது என்னை ஆணாதிக்கவாதி என்றும், திமிர் பிடித்தவன் என்றும் திட்டி கவிதை எழுதி சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாயுக்கு எங்கு கல் அடித்தாலும் காலைத்தான் தூக்கும், அது போலத்தான் சபேசனும் எப்போதும் ஆரியர்,மற்றும் சங்ககால இலக்கியத்தின் மூலம் தான் சமூக வாழ்வையும் பார்க்கின்றார்.

வானதியின் கவிதைகள் வாசித்துள்ளீர்களா?.அவரும் ஒரு பெண்தானே. ஒருவர் எழுதிய கவிதயில் என்ன பிழை என்று கூறி அவரை மேலும் திறமையாக எழுதுவதை விடுத்து, அவர்கள் எழுதினால் பயமாக இருக்கின்றது என்று கூறுவது அபத்தம்.

ஆதியமான் மற்றும் சேரமான் ஆகியோர் எக்காலங்களில் வாழ்ந்தார்கள் என்று கூறுவீர்களா?. அவர்கள் வாழ்ந்துவிட்டுப்போன எச்சங்கள் ஏதாவது (கட்டிய கட்டிடங்கள்) உள்ளதா?

Link to comment
Share on other sites

நைனா! நீங்கள் சரியாக கட்டுரையை விளங்கிக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

தமிழ் இலக்கியத்தில் பெண் புலவர்களுக்கு மிகப் பெரிய இடம் உண்டு. அந்த இடத்தை ஆண்டாளுக்குப் பிறகு யாரும் சரியான முறையில் நிரப்பவில்லை என்பது என் ஆதங்கம்.

அதற்காககத்தான் முன்பு இருந்த பெண்புலவர்களை பட்டியல் இட்டேன்.

நான் வெறுமனே இன்றைய பெண்கவிஞர்களைப் பற்றி மட்டும் எழுதியிருந்தால், அவ்வையை தெரியாதா, ஆண்டாளை தெரியாதா என்று என் மீது பாய்ந்திருப்பார்கள்.

அத்துடன் புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற பெண் கவிஞர்களை நோக்கியே என்னுடைய மிச்சக் கட்டுரை செல்கிறது.

மீண்டும் ஒரு முறை தலையங்கத்தடன் முழுக் கட்டுரையையும் வாசிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நைனா! நீங்கள் சரியாக கட்டுரையை விளங்கிக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

தமிழ் இலக்கியத்தில் பெண் புலவர்களுக்கு மிகப் பெரிய இடம் உண்டு. அந்த இடத்தை ஆண்டாளுக்குப் பிறகு யாரும் சரியான முறையில் நிரப்பவில்லை என்பது என் ஆதங்கம்.

அதற்காககத்தான் முன்பு இருந்த பெண்புலவர்களை பட்டியல் இட்டேன்.

நான் வெறுமனே இன்றைய பெண்கவிஞர்களைப் பற்றி மட்டும் எழுதியிருந்தால், அவ்வையை தெரியாதா, ஆண்டாளை தெரியாதா என்று என் மீது பாய்ந்திருப்பார்கள்.

அத்துடன் புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற பெண் கவிஞர்களை நோக்கியே என்னுடைய மிச்சக் கட்டுரை செல்கிறது.

மீண்டும் ஒரு முறை தலையங்கத்தடன் முழுக் கட்டுரையையும் வாசிக்கவும்.

1. சபேசன் நீங்கள்தான் பிழையாக விழன்கியுள்ளீர்கள் நான் கடைசியாகக்கேட்டது விவாதத்திற்கு இல்லை. அது என்னுடய சந்தேகம். அதாவது ஒளாவையார் பல பேர்களில் பல் வேறு ஆண்டுகளில் இருந்தால். அக்குறிப்பிட்ட மன்னர்களின் ஆட்சிக்காலத்தைவைத்து *(சேரமான்,ஆதியமான்) அவர் எக்காலத்தில் வாழ்ந்தார் என்று கண்டுபிடிப்பது கடினமா?.

2. முதலில் எழுதியது> நீங்கள் எதை எழுதினாலும் பெரும்பாலும் சங்க இலக்கியங்கள் ஆரியர் போன்றவற்றுடன் தொடர்புபடுத்தியே எழுதுவீர்கள். இது இக்கட்டுரையிலும் இடம்பெற்றுள்ளது.

3. ஒருவர் எழுதுவதில் எழுதும்பாணிபிழைஎன்று கூறும் நீங்கள். அதைக்குறிப்பிட்டவர்களிடம் (உ/ம் தொலைபேசிமூலம் வானொலிக்கு) கூறாமல் வெறுமனே அவர்களை இழக்காரம் செய்தால் அவர்கள் மீண்டும் எழுத வருவார்களா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'இன்னுமா உறக்கம்?......

இன்னுமா...உறக்கம்?

இடியேறு உன்னில் விழ..

ஈழத்தில் உன்னினம் அழிப்பு.

இங்கு நீ இன்னும்.... இதமாய் உறங்கு!

ஊருக்கொரு சங்கமென்று கூறுபோட்டதுதான் மிச்சம்

ஊர்ச்சனத்தின் வாழ்வு உனக்கெதற்குப் போய் உறங்கு!

நிலம்விட்டு வந்த உந்தன்

புலன்போற திக்கைப் பார்த்து

புல்லரிப்புப் பொங்குது! பூரிப்பாக் கிடக்குது!

புளுகுக்குச் சொல்லவில்லை பக்குவமா உறங்கு!

எல்லாம் முடிந்த பின்னால் எங்கே? ஏது பிழை?

ஆயிரமாய்க்கூடி அங்கலாய்க்க வேண்டுமே..

அதற்காக உறங்கு!

கறுப்புப் படிந்துவிடக் கதவோரம் நிற்கிறது

களையாகக் கைகூப்பி வரவேற்க நிற்கவேணும்

இப்போது கண்ணுறங்கு!

பிடறியில கொண்டு வந்து வெடிகுண்டைப் போட்டாலும்

புண்ணாக்குத் தின்னிகளே! போர்த்திக்கொண்டு உறங்குங்கள்!

முகட்டு வளை பார்த்து முனகிக் கிடக்கும் முதியோரே!

உமக்கென்ன முழுமதியா? முடங்கிப்போய் கிடக்கிறது.

இறப்புக்கு முன் ஒருகால் ஈழத்துமண் பதிந்து

சிறப்புப் பெற்றுவிட சிந்தையிலே நினைப்பில்லையோ?

உணர்வூட்ட முடியாத ஊடகப் புழுக்களே!

தாலாட்டுப் பாட்டிருந்தால்

தொடர்ந்தின்னும் ஒலியுங்கள்! - கவனம்!

ஈழத்தமிழினம் விழித்தெழக்கூடாது.

குறுநில மன்னர்களே!

கொடி, குடை பிடிக்கக் கோமாளிக்கூட்டம்

கனடாவில நிறைய களிப்புற்றுக் கிடவுங்கள்!

வந்தவினை வெல்லாத வரட்டு மனிதர்களே!

முடிந்தால் இனம்வாழ முழங்குவீர்!

இல்லாவிடின் ஓசை எழுப்பி ஓர்மத்தைச் சிதைக்காதீர்!

சிந்தனையே இல்லாச் செம்மறிக்கூட்டமா?

வந்தேறு குடிகளே! வந்தவழி மறந்தீரோ?

கந்தகத் துகள் சாய்த்த சொந்தங்கள் கண்டோரே!

சிந்தை திறந்தாற்றும் பணி உம்மை அழைக்கிறது.

வேகும் வாழ்நிலையில் வெம்பி வெம்பி நித்தம்

சாவின் விளிம்பினிலே சரம்சரமாய் எங்கள்சனம்

நோயுற்றுப் போனீரோ? நுடங்கிக் கிடப்பது ஏன்?"

தோழர் சபேசன் இந்தக் கவிதை உங்களுக்கு ஒப்பாரியாகத் தெரிகிறதா?

Link to comment
Share on other sites

என்னுடைய தளத்தில் ஏறக்குறைய 40 கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அவைகளில் 10இற்கும் குறைவான கட்டுரைகளிலேயே ஆரியர், சங்க காலம் போன்றவைகள் இருக்கின்றன.

ஆனால் பகுத்தறிவு என்று வருகின்ற பொழுது "ஆரியர்" பற்றி பேசுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

அவ்வையார் என்கின்ற பெண் புலவர் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்திருக்க முடியாது.

சங்க காலத்தின் அளவை பொதுவாக கி.மு 500 - கி.பி 200 என்று கணக்கிடுவர். கி.பி. 200 - கி.பி. 600 ஐ சங்கம் மருவிய காலம் என்று சொல்வர்.

இவைகள் கிடைக்கின்ற மிகக் குறைந்த சான்றுகளைக் கொண்டு கணிக்கப்பட்டவையே. இதில் சில நூற்றாண்டுகள் முன்னுக்குப் பின் இருக்கக் கூடும்.

புறநானூற்றில் பாடல்கள் எழுதியவர் சங்க காலத்து அவ்வையார்.

பின்பு மூன்று சங்கங்களும் (முதல், இடை, கடை சங்கங்கள்) அழிந்தபின்பு அந்து மூன்று சங்கங்களையும் தருமாறு கேட்டு பாடியவர் வேறொரு அவ்வையார்

"துங்கக் கரிமுகத்து தூமணியே

சங்கத் தமிழ் மூன்றும் தா!

சங்க காலத்து அவ்வையார் 3 சங்கங்களையும் தரும்படி கேட்டிருக்க மாட்டார்.

அவ்வையார் பாடல்களில் வருகின்ற குறிப்புக்கள் வேறு வேறு கால கட்டங்களை சேர்ந்தவைகளாக இருக்கின்றன. அத்துடன் ஒவ்வொரு அவ்வையாரின் மொழிநடையும் பாரிய வேறுபாட்டைக் கொண்டிருக்கின்றன. மொழியியல்ரீதியான ஆய்வு செய்தவர்களும் பல அவ்வையார்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

;;இது குறித்து விரைவில் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சபேசன் உங்கள் நீண்டவிடைக்கு. உங்கள் எழுத்தாற்றலுக்கு தலைவணங்கும் அதேநேரம் நீங்கள் மற்றவர்களை நையாண்டி செய்யாமல் குறைகளைச் சுட்டிக்காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதே எனது அவா.

விவாத்தை திசைதிருப்புவது எனது நோக்கமல்ல இருந்தும் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சங்கத்தமிழ் மூண்ரும் தா என்பது மூண்று சங்கங்களைக்குறிக்கின்றதா அல்லது இயல் இசை நாடகம் எனும் முத்தமிழைக்குறிக்கின்றாதா?

Link to comment
Share on other sites

நான் ஒப்பாரி பற்றி குறிப்பிட்டதற்கு காரணம் வேறு.

ஒரு மனித அவலம் நிகழுகின்ற பொழுது, அதற்கான அஞ்சலி நிகழ்வுகளில் பெண்கள் அதிகமாக கவிதை வாசிப்பதை பற்றிக் குறிப்பிடுகின்ற பொழுதுதான் அப்படி சொன்னேன்.

அண்மையில் வாகரையில் பலர் கொல்லப்பட்டார்கள். ஊடகங்கள் அதற்கான கண்டன, அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினார்கள். கலந்து கொண்ட ஆண்கள் கண்டனத்தையும், அஞ்சலியும் செய்தார்கள், அரசியல் பேசினார்கள், தீர்வு பற்றி பேசினார்கள்.

அந்த நிகழ்ச்சியில் வந்து கவிதை வாசித்ததோடு தம் கடமை முடிந்தது என்று போனவர்கள் பெண்கள்தான். (பெயர்கள் சொல்லி மனதை புண்படுத்த விரும்பவில்லை)

இப்படித்தான் சுனாமியின் போதும்.

நாம் பல்லாயிரம் பேரை சில நொடியில் பல கொடுத்து விட்டு நிற்கிறோம். ஆனால் சிலர் சுனாமி, பினாமி, ஆமி என்று கவிதை எழுதத் தொடங்கி விட்டார்கள்.

ஒரு மனிதன் உச்சக்கட்ட சோகத்தில் இருக்கின்ற பொழுது, வார்த்தைகளில் எதுகைமோனை பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பானா?

ஆனால் அப்படி நடக்கிறது. அதை செய்பவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருக்கிறார்கள். அதனாற்தான் இது ஒப்பாரியின் இன்னொரு வடிவமா என்று கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

அந்த நேரத்தில் அவற்றைபற்றி இவர்கள் சிந்திக்கவாவது செய்கிறார்களே, அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துதலில் அவர்களால் முடிந்த, கவிதையையோ கண்ணீர் அஞ்சலியையோ செலுத்துகிறார்களே, அப்படி பட்ட சமுதாய பிரக்ஞை அற்ற எத்தனையோ பேர் தாம் உண்டு, தம் வேலை உண்டு எண்டு இருப்பவர்கழும் இருக்கிறார்கள்தானே, அவர்களை விட இவர்கள் மேலானவர்கள்தான். ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் புலத்தில் பெண்கள் பொதுப்பணிகளுக்கு முக்கியமாக தாயகப்பணிகளுக்கு வானொலி வார்த்தைகளோடு காணாமல் போகிறவர்கள்தான் 95 வீதமானவர்களும் மீதமானவர்களின் கைகளில் பெரும்பணி.... எல்லோரையும் உள்வாங்கி எழுச்சிப்பயணம் செய்யவேண்டியவர்கள் குறுகிய தங்கள் சுயத்தை வளர்க்கும் எண்ணப்பாங்கு நிறைந்தவர்களாக உலாவருவதனால் விலகி இருப்பவர்கள் விலகியே இருக்கிறார்கள். சில விடயங்களுக்கு துணிவான பெண்கள் இந்தப் புலம்பெயர் தேசங்களில் மிகப்பெரும் தேவையாக இருக்கிறது என்பது மறுக்கமுடியாத நிலமை. ஆனால் நாங்கள் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடிக்கொண்டு வெளி உலகப்பயணப்பாடுகளைப் பேசினால் ஆகிவிடுமா? துணிவான பெண்களை எதிர்பார்க்கும் நாங்களே.. அப்பெண் மூடத்தனங்களின் முழுவிசுவாசியாக இருந்தால் மாத்திரமே நல்ல பெண் என்று முடிசூட்டுகிறோம். துணிச்சலாக ஆளுமையாக அப்பெண் எழுந்தால் நாங்களே அவளுக்கு ஆயிரம் கெட்ட பெயரை வழங்கி விளம்பரப்படுத்துகிறோம். அதன்பின் vy;NyhUf;Fk; பிடிக்கக்கூடிய வகையில் உள்ள துணிவான நல்லபெண்களை எங்கு சென்று தேடுவது? அத்தகைய ஒரு நல்ல பெண்ணுக்கு குடும்பம் மட்டுமே உலகம். அதுதான் அவளின் வரையரை. அதற்கப்பால் அவளுக்கு எதுவுமே தேவையில்லை. எல்லாப் பெண்களிடமும் தாயகம் பற்றிய பாசம் இருக்கிறது. ஒப்பாரிகளை வானொலியில் ஒலித்துவிட்டு காணாமல் போகிறார்களே என்ற ஆதங்கம் உங்களைப் போல் எனக்கும் உண்டு. ஒரு கை ஓசை எழுப்பாது! இதில் ஊடகங்களின் போலித்தனங்களையும் சாடித்தான் ஆகவேண்டும். உணர்வுவெள்ளம் திரண்டுவரும் காலங்களில் இவர்கள் உரிய வழிகளைக் கோலி விடுவதில்லை. வானொலிகளுக்கு அந்த நேரம் நேயர்கள் ஒப்பாரியாகவோ அல்லது ஆக்ரோசமாகவோ அவர்களின் நிகழ்ச்சியை அலங்கரித்துப் போனால் போதும். அந்த ஊடகமும், அதில் பங்கு பற்றிய நேயர்களும் தாயகத்திற்காக குரல்கொடுத்து உதவிசெய்து விட்டார்கள் என்ற மாயை உருவாக்கப்பட்டுவிடும். பிறகென்ன இன்று சாவீட்டுக்கு ஒப்பாரி வைத்துக் கடமை முடிந்தாயிற்று இனி வழமையான நிகழ்வுகள் தொடரும்.....

இதுதானே எங்கும் நடக்கிறது..

ஒவ்வொரு ஊடகங்களையும் நேயர்களாக இருந்து வளர்பவர்கள் மகளிரே!

ஆனால் அந்த ஊடகங்கள் அந்த மகளிரை வளர்க்கிறதா? என்றால் பூச்சியந்தான். எப்போதுமே பெண்களைத் தங்கள் நேயர்களாக வைத்திருப்பதிலேயே ஊடகங்களின் போட்டி அதிகம். ரீவீ சீரியலில் இருந்து சினிமாப்பாடல்கள் வரைக்கும் பெண்களின் சிந்தனைகளை மழங்கடிக்கும் அத்தனை நிகழ்வுகளையும் ஊடகங்களே கையாள்கின்றன. இதில் என்னைப்போன்ற ஒரு சிலரின் குரல்கள் எங்கே எடுபடப்போகிறது?

தனித்து நின்று குரல் கொடுத்தால் அடங்காப்பிடாரி என்றும் தலைக்கனம் பிடித்தவள் என்றும் பெண்ணென்னும் அடக்கமின்றி எடுத்தெறிந்து கதைக்கிறாள் என்றும் சொல்லத்தயங்காத சமுதாயம் ஒப்பாரிக் கவிதை படித்தால் மாத்திரமே பெண்ணை ஏற்றுக் கொள்கிறது என்பதுதான் வெளியே தெரியாத உண்மை.

Link to comment
Share on other sites

சோக நிகழ்ச்சிகளில் கவிதை என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட செயற்கையான வெளிப்பாடு.

அது இயல்பானது அல்ல.

எங்களுடைய கவிஞர்கள் எல்லாம் பேனாவை எடுத்தவுடன் மடை திறந்த வெள்ளம் போல் வார்த்தைகளை கொட்டக் கூடிய கவிஞர்கள் அல்ல. ஒரு சிலர் அப்படி இருக்கலாம்.

ஆனால் வாசிக்கப்படுகின்ற கவிதைகளை கேட்கின்ற போதே புரிந்து விடுகிறது, இது சுரந்தது அல்ல, கறந்தது என்று.

சோகத்தின் வடுக்கள் ஒரு விழுக்காடு கூட குறையாது இருக்கின்ற பொழுது இவர்கள் கறந்து கொண்டு இருப்பது எனக்கு கோபத்தை கொடுக்கிறது.

இன்றைக்கு சுனாமி குறித்து கவிதை எழுதலாம். காலம் எங்கள் வலிகளை ஓரளவு ஆற்றி இருக்கிறது.

இருந்து ஆறுதலாக அணிகளும், எதுகைமோனைகளும் போட்டு எழுதித் தள்ளலாம்.

தற்பொழுது வாகரையில் 50பேர் செத்தார்கள்.

உடனடியாக பேனா எடுத்து அதற்கு ஒரு கவிதை என்பது உண்மையான சோகத்தின் வெளிப்பாடா, அல்லது திறமையை வெளிப்படுத்த இன்னொரு விடயம் கிடைத்து விட்டது என்ற எண்ணத்தின் வெளிப்பாடா?

எமது மக்களின் மரணத்தில் எங்களின் திறமையை வெளிப்படுத்துவதை விட பேசாது இருப்பது எனக்கு நல்லதாக படுகிறது.

ஆயினும் எமது பெண்கள் மக்களின் அவலத்தை திறமை வெளிப்படுத்தும் களமாக பாவிக்க மாட்டார்கள் என்ற என்னுடைய நல்ல சிந்தனையின் காரணமாகவே "ஒப்பாரியின் இன்னொரு வடிவமா" என்ற கேள்வியை எழுப்பினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் இதில் பெண்களை நீங்கள் மிகைப்படுத்துவதுபோல் தோன்றுகிறது.

பெண்களைவிட ஆண்களும் ஒப்பாரி வைப்பதில் சளைத்தவர்கள் அல்ல என்பது உங்களுக்குப் புரியாததல்ல.. ஆனால் ஆண்கள் வானொலி இணைப்பில் காத்து நிற்கும் பொறுமையற்றிருப்பதாலேயே உங்களுக்கு பெண்கள்தான் அதிகமாகக் கவிதை எழுதுகிறார்கள் என்று தோன்றுகிறது.

கறப்பது இது ஒன்றும் புதியதல்லவே!

எத்தனையோ பெருங்கவிஞர்களின் வரிகள் இடம்மாறுவது மலிவான சங்கதிகள் ஆயிற்றே! வாசகர்கள் கண்டுபிடிப்பார்கள் என்பது களவாடி தமதாக்குபவர்களுக்குப் புரிவதில்லை.

அதீத சோகத்தில் இருக்கும்போது உடனடியாக கவிதையென்று என்னால் எதையும் எழுதமுடிவதில்லை. ஏனெனில் நாங்களே பேச்சற்றுத் திணறுவோம். அப்போது வார்த்தைகளுக்கு எங்கே செல்வோம்?

நீங்கள் கவனித்திருப்பீர்கள் இறப்பு வீட்டுக்கு வருகின்றவர்கள்தான் அழுதுகொண்டிருக்கின்றவர்களை அணைத்து ஒப்பாரி வைப்பார்கள்... அதாவது ஒப்பாரி வைப்பவர்களுக்கு இழப்பு இருக்காது.... ஒப்பாரி சொல்பவர்கள் அயலவர்கள், உறவினர், ஊரார்...

சபேசன் புலம்பெயர்ந்தோர் தாயகத்திருந்து வேறுபட்டதனால்த்தான் ஒப்பாரி வைக்கிறார்கள் என்பதுதான் உண்மையாக இருக்குமோ?

தாயகத்திலிருந்து வேறுபடாமல் நின்றிருந்தால் அங்கு நடக்கும் அட்டூழிங்களுக்கு பொங்கி அல்லவா எழுந்திருப்பார்கள்,......ஆனால் இங்கு ?????

Link to comment
Share on other sites

வல்வைசகாறா! சாவு நடந்து பிணத்தை எண்ணி முடிக்கும் முன்பே கவிதை எழுதக்கூடிய "திறமைசாலி" ஆண்கள் என் கவனத்திற்கு வந்தது குறைவு.

சில வேளைகளில் நீங்கள் சொல்வது போன்றும் இருக்கலாம்.

ஆனால் நான் இருக்கின்ற இடத்தை சுற்றி நாலு பக்கமும் பார்த்தால், கவிதை எழுதுபவர்கள் அதிகமாக பெண்களாகத்தான் தெரிகிறார்கள்.

இங்கே ஜேர்மனியில் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு பெண் "கவிஞர்" இருக்கிறார். அவ்வாறான நிலையில் கவிதை இலக்கியம் ஒரு பெரும் பாய்ச்சலை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லவா?

ஆனால் அது நடக்கவில்லையே! ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் சபேசன் ஏற்கனவே கூறிவிட்டேனே...

குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

இது ஜெர்மனியில் மட்டுமல்ல உலகின் எல்லாப் பாகங்களிலும் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இங்கு கனடாவை எடுத்துக் கொண்டால் தடக்கி விழுந்தால் தமிழ்க்கவிஞர்கள்!!!

என்ன பிரயோசனம்?

ஆளுக்கொரு மேடை....

வால்பிடிக்கக் கூட்டம்....

பேனை எடுத்தாலே பூமியைப் பிளப்பார்கள்...

பட்டம்,பதவி, கௌரவிப்பு விழா எடுப்பு....

முதுகு சொறிதல்,

எதுவுமே தாயகத்தின் வேதனைகளுக்கு ஆறுதல் சொல்பவையாக உணரமுடியவில்லை..

கதையோடு கதையாக...

இனத்தின் விடியலுக்காய் வீறுகொண்டெழும் விழுதுகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

தாயகத்திற்கு உரமூட்ட....

புலம்பெயர்ந்தோரிடம் எழுச்சித்தீ மூட்ட...

புலத்தின் திசையெங்கும் புது ரத்தம் பாய்ச்ச

புத்துணர்வோடு கரமிணைக்கும் களத்தினில்

கனலும் உறவுகளுக்காய் காத்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

நிகழ்வுகளை தமது திறமைக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது போன்று கவிதையை கறந்து காட்டுவது ஆண்களும் தான் பெண்கள் மாத்திரம் அல்ல. ஆண்கள் வானொலியில் வருவது குறைவு குரல் வளம் இல்லை என்று நினைப்பதாலோ அல்லது பொறுமை இல்லாததாலோ தான் போல் உள்ளது.

தனிய அவலங்களிற்கு மாத்திரம் அல்ல வேறு பல செயலில் காட்ட வேண்டிய விடையங்களையும் கவிதையாக எழுதுவிடுகிறார்கள்.

இதற்கு காரணம் என்னவோ?

-1- சினிமாவின் தாக்கமா? ஒவ்வொரு சூழ்நிலைக்கும், நண்பர்களுடனான கூதூகலிப்பு, காதல், திருமணம், பிரிவு, மரணம், வெற்றி, தோல்வி போன்ற உணர்வுரீதியில் எல்லைகளிற்கு கொண்டு செல்லும் நிகழ்வுகளிற்கு சினிமாவில் பாடல்கள் வருவது வழமை. அந்த பாடல் வரிகள் மூலம் அந்த சூழ்நிலையின் உணர்வுகள் சொல்லப்படுகிறது. சினமாவில் ஆட்கொள்ளப்பட்ட எமது சமூகம் அந்த சினிமா வாழ்கையை உல்டா பண் நினைப்பதால் தான் நிஜவாழ்விலும் சூழ்நிலைகளிற்கு ஏற்றவாறு கவிதை கறக்கிறார்களோ?

-2- அடுத்து பிரச்சனைகளை எதிர்கொண்டு ஒரு தீர்வு காண்போம் என்று முழுப்பொறுப்பை தாமே எடுத்து அதற்குரிய காரியங்களில் நேரடியாக அர்பணிப்போடு இறங்குவதை விட கடவுளிடம் வழிபடுவது நேர்த்திகடன் வைப்பது சாத்திரியிடம் சாதகம் பார்ப்பது ஏதாவது குற்றம் குறை இருக்கோ என்று பிறகு அதுகளுக்கு பிராயச்சித்தம் செய்வது போன்று பொறுப்பை வேறு ஒன்றில் போட்டு பழியை இலங்கையில் என்றால் நாடு நிலமையில் வெளிநாடுகளில் என்றால் வெள்ளையர்கள் துவேசமாக நடத்துகிறார்கள், கெட்டகாலம், போன பிறப்பு பாவங்கள் என்று புலம்பி வாழ்கையை நடத்தி ருசி கண்டவர்கள் நாங்கள். அதேபோல் கவிதையை கறப்பதன் மூலம் ஏதோ ஒன்றை அந்த நிகழ்வு சம்பந்தமாக செய்து விட்டதாக பங்களித்து விட்டதாக திருப்த்திப் பட்டுக் கொள்ள உதவுகிறதா?

அதோ போல் தான் போராட்டத்திற்கு ஆதரவாக காட்டுவது ஒரு status symbol ஆக இருக்கிறது சிலருக்கு. ஆதரவாக வெளிப்படையாக கதைத்து அதன் மூலம் நட்பு வட்டத்தை சம்பாதித்து அவர்களிற்குள் பொழுது போக்க வீராப்பான கதைகள் எதிரியை மட்டந்தட்டல்கள் மூலம் ஒருவரை ஒருவர் மாறி மாறி பொழுதுபோக்கி சந்தோசப்படுத்தி கொண்டு இருப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'புற'த்திலும் புலத்திலும் பெண் கவிஞர்கள்!

இன்றைக்கு புலம் பெயர் நாடுகளில் ஆண்களை விட பெண்களே அதிகமாக கவிதை எழுதுகிறார்கள். ஐரோப்பா, கனடா, அவுஸ்ரேலியாவின் ஒவ்வொரு நகரங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கவிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுடைய கவிதைகளின் வீச்சு ஒரு எல்லைக்குள் நின்று விடுகிறது. அல்லது கவிதைகளில் வீச்சே இல்லாமல் இருக்கிறது.

ஏன் சபேசன் சார் ஆண்களும் பெண்களுக்கு சமமாகவே வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் கவிதைகள் வாசிக்கின்றார்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கால போவானுக்கு நிறையவே அனுபவம் இருக்கிறதுபோல் இருக்கிறது. சபேசனுடைய கருத்தாடலுக்கு இனி திறமையான எதிர்வாதங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

கறுப்பி! மாவீரர் வாரத்தில் எண்ணிப் பார்த்தால் தெரிந்து விடும்.

வல்வைசகாறா! நீங்கள் சொன்னதையே நானும் என்னுடைய கட்டுரையில் சொல்லி இருந்தேன். புலம்பெயர் நாடுகளில் கவிதை என்பது அடுத்த கட்டத்திற்கு நகராது தத்தளிக்கிறது.

எழுதுகின்ற எல்லோரும் சுற்றி சுற்றி ஒரு வட்டத்திற்குள்ளேயே நிற்கிறார்கள்.

இதில் பெண் கவிஞர்களின் எல்லை இன்னும் சிறிதாக இருக்கிறது என்பதாலும், பெண் கவிஞர்களே அதிகமாக இருக்கின்றார்கள் என்ற என்னுடைய கணிப்பினாலுமே, நான் பெண்களை குறிப்பாகச் சொன்னேன்.

அத்துடன் பெண்கள் ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்று சுட்டிக்காட்டுவதற்காக சங்க காலத்து உதாரணங்களை சொன்னேன்.

குறுக்காலபோவான் நான் சொன்னவைகளை மறுக்கவில்லை. காரணம் எதுவாக இருக்கும் என்று அவருடைய விளக்கங்களை சொல்கிறார்.

அவர் சொல்கிற விளக்கங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியவைதான்.

Link to comment
Share on other sites

ஜயா சபசேன் இதை தங்களது இணையத்தில் றேந்நு பார்த் போது

என் சக உறவுகளுடன்..அவர்கள் பல கவிதை எழுதி தந்துள்ளார்கள் ஆண்.பெண்..

எங்கே கண்டு பிடித்து சொல்லுங்கள் பார்கலாம்

எது ஆணுடய கவ..எது பெண்ணுடய கவி என்று....

கவிதை பகுதியில் போய் பாருங்கள்...

பின்னர் தருகிறேன் விளக்கம்...போகும் இதோடு தங்கள் முழக்கம்...

நன்றி

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மைந்தன் நீங்கள் கொஞ்சNனும் அறிவை உபயோகிக்கமாட்டீர்களா?

Link to comment
Share on other sites

என்னை

பொறுத்தவரை புலம் பெர் நாட்டில் உள்ள பெண்கள்

இங்கு வந்தே பின்னெ பல தொடர்பு சாதனங்கள்

கிடைத்தது...அதை தமக்கு சாதகமாக பயன் படுத்தி

தற்போது படி படியாக தம்மை வளர்து வருகிறார்கள்...

குறிப்பாக சீ.ஜ.hP.வியில் வெள்ளி கிழமை தொறும்

சுரேஸ் நடத்துகிற நிகழ்வு கவி களத்தில் நானும் பங்கு பற்றினே;...ஆக..என்ன

அற்புதம் அங்கு பெண்கள் படிக்கும் வார்த்தைகள்...அதன் ஆழம்...

சொல் கட்டு..எதுமை மோனை...ஏற் இஙறக்கம்..படு அசத்தல....

இது இவ்வாறு இருக்க...இவர் இப்ப எதையோ காவி கொண்டு வந்து உள்ளார்...

எங்கே இவர் இதுவரை எழுதிய கவிதைகளை எங்கே இதில் பார்வைக்கு வைக்கட்டும் பாh';போம்

அவருடைய கவி திறன் எவ்வாறு உள்ளதென்று...

மற்றவரை சாடி சாடி பழக்கப் பட்ட இவருக்கு...

இதுவே வேலையாக போச்சு...

வளர்ந்து வரும் அந்த துளிர்களை அரும்பிலேயே கிள்ளி எறிகின்ற நடவடிக்கையே இது...

என்னோடும் முட்n மோதினார் பின்னர் தனிந்தார்..அவ்வப்போ..அங்காங்க

Link to comment
Share on other sites

வன்னி மைந்தன் நீங்கள் கொஞ்சNனும் அறிவை உபயோகிக்கமாட்டீர்களா?

எதற்கு...???

தங்களிற்கு எப்டி தெரியும் நான் அறிவை பயன் படுத்தவில்லை என்று....???

விழுந்த பாட்டுக்கு குறி சுடுவது எனக்கு ஆகாது...???

தன்னை

தானே

கவியென்றால்

கவிக்கு ஆகாது...

அதை புரிந்து கொள்ளுங்கள்....

முதலில் மாற்றாரை விமர்சிக்க முன்

உங்களை விமர்சியுங்கள்...

உங்களை திறனாய்வு செய்யங்கள்..

திட்டமிட்டு பெண்ணவளை இழிவு படுத்தி

அவர்கள் மீது கலங்கம் விளைவிக்க முனைந்தால்

இந்த வாத தொடரில் பல இன்னல்களை சந்திப்பீர்....

;;கவிதையில

மன்னர்

என்று

கத்துகிற

தோழர்களே...

உம்தன்

கவிதைகளை

கொண்டுவந்து

வானலையில்

நீர் தாரும்..

சந்திகளில்

சபைகளில்

சத்தமது

போடாதீர்...

மலட்டு

கவியென்று

மாற்றானை

சாடாதீர்.....( தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை ஒரு மொழி வடிவம். அதை எவரும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம். மொழியை இப்படித்தான் பாவிக்க வேண்டும் என்பது போல ஒருவருக்குள் கட்டுப்பாடு விதிக்க முடியாது. அப்படித்தான் கவிதைக்கும் யாருக்கும் கட்டுப்பாடு விதிக்க முடியாது. சிந்தனையில் எழுவது கவிதையாக விழும். அதில் வாசகனின் பங்கே கவிதையை கவிதையாக காணும். சிலர் கவிதைகளை உரைநடையாகக் கூடக் காண்கிறார்கள். அது பார்ப்பவரின் கவி நயத்தைப் பொறுத்தது.

இதில் பெண்கள் இப்படித்தான் ஆண்கள் இப்படித்தான் என்றெல்லாம் கிடையாது. அதே போன்று சபேசன் உதாரணம் காட்டிய ஆண்டாள், பாடிய கவிதைகள் கிருஷ்ணரைப் பற்றியதே அதிகம். அதுமட்டுமன்றி அவர் காட்டிய புலவர்கள் கவிஞர்கள் எவரும் ஈழத்துக்கு சொந்தமான தமிழ் கவிஞர்களோ புலவர்களோ பாவலர்களோ அல்ல.

அந்த வகையில் இன்றைய போர்ச்சூழல் ஈழத்துத் தமிழ் பெண்களின் மீதான போரின் தாக்கங்களை அவர்களின் உணர்வுகளாகவே அவர்களுக்கு உரித்தான கவிதை வடிவங்களில் ( புதுக்கவிதை ) வெளிக் கொணர்வதைக் காணக் கூடியதாக உள்ளது. கவிதைகளில் மொழி ஆழமில்லா விட்டாலும் உணர்வாழம் உள்ளனவாக பல கவிதைகள் இன்றைய இளம் ஆண் பெண் புதுக்கவிதைக் கவிஞர்களால் வெளிக்கொணரப்படுகின்றன. அவை நிச்சயம் வரவேற்கப்பட்டு அவர்களின் முயற்சிகள் மெருகேற வழிகாட்டுபவர்களாக சிறந்த விமர்சனங்களை முன் வைப்பவர்களாகவே வாசகர் கவி ரசணையாளர்கள் இருக்க வேண்டும்.

சபேசனின் ஒப்பீடே அடிப்படையில் தவறானது. ஆண்டாள் ஒளவையார் போன்றவர்கள் மரபுக் கவிஞர்கள். பாரதியின் கவிப் புரட்சிக்குப் பின்னர் பல தமிழ் பெண் புதுக் கவிதைக் கவிஞர்கள் உலகெங்கும் உருவாகி உள்ளனர். அவர்கள் தங்கள் உணர்வுகளைப் பகரும் மொழியாக கவிதைகளைப் பயன்படுத்துகின்றனர் என்றால் அவர்கள் ஆண்டாள் ஒளவையாரை எல்லாம் கடந்து நிற்கிறார்கள் என்பதே உண்மை.

ஒளவையார் மன்னர் புகழ்பாட கவிதை எழுதியவர். ஆண்டாள் கற்பனனயில் இறைவனைக் காதலித்துக் கவிதை புனைந்தவர். ஆனால் இன்றைய பெண்கள் நிகழ்காலத்தில் தங்களின் உணர்வுகள் பிரதிபலிப்பவற்றைக் கவிதையில் தருகின்றனர். ஆண்களும் தான்.

மரபுக் கவிஞர்கள் அது ஆண்களிலும் சரி பெண்களிலும் சரி மிகக் குறைவு.

தென்னிந்திய திரைக் கவிஞர்களில் பெண் கவிஞர்களின் வருகையும் அவர்களின் ஆதிக்கமும் பெண்களின் கவித்திறனுக்கு கிடைத்துள்ள வரவேற்பும் பெண்களுக்குள்ள கவி நயத்தையும் கவியினூடு தங்கள் உணர்வுகளை வெளியிடக் கூடிய பண்பையும் கூறி நிற்கின்றன.

போர்ச் சூழலில் துயரம் நிறைந்த வேளையில் அவர்கள் பேசக் கூடிய மொழிகளில் கவிதையே தாக்கம் கூடியதாக இருக்கும் என்பதால் ஆண்களும் சரி பெண்களும் சரி தங்கள் உணர்வுகளைக் கவி வரிகளில் கொட்டுகின்றனர். உணர்வுகளால் ஒன்றுபட்ட மனிதர்களில் வரிகளும் ஒன்றுபடத்தான் செய்யும். அதற்காக அவர்களின் திறனில் சந்தேகிக்கலாமோ. சபேசன் பேசும் மொழியும் தமிழ் தான். ஒரு குழந்தை பேசும் மொழியும் தமிழ்தான். இருவரும் ஒரு அழகான ரோஜாவை பற்றி எழுதும் போது அது மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் இருந்தது என்பதை கூறுவதனாது சபேசன் பிள்ளையைக் கொப்பி பண்ணியது என்றாகுமா? இல்லை. ஒரே உணர்வுகள் எழுகின்ற போது வரிகளும் ஒன்றோடு ஒன்று பொருந்திச் செல்லத்தான் செய்யும். அது மொழியில் சகஜம்.

பல போராளிக் கவிஞர்கள் உருவாகியுள்ளனர். பல பெண் போராளிக் கவிஞர்கள் கள நிஜங்களைக் கவிதையில் கொட்டியுள்ளனர். பரணி பாடப்பட்ட காலத்தில் கண்டிராத வீரத்தை 21ம் நூற்றாண்டில் எமது போராளிகள் காட்டும் போது அதைக் கவிதையில் உணர்வுகளால் வரிகளால் பதிவு செய்வதில் குறை காண முடியாது. அது சரியானதே. நிச்சயம் அப்படி வெளிப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் இவை ஒரு காலத்தின் பதிவாக பதியப்படும். ஒரு நவகாலப் பரணியாக நோக்கப்படும்.

பகுத்தறிவு பேசும் சபேசன் ஏன் பரணிக்கு மட்டும் பழைய தனியாள் படைப்பு வேண்டும் என்பது போலப் புலம்புகிறார். புதிய பரணி கவிஞர்கள் பல்லாயிரம் பேரின் தொகுப்பாக இருக்கட்டுமேன். அதுதான் போரில் பல்லாயிரம் மக்களின் உணர்வுகளையும் தனித்தனியே காவி வந்ததாகக் காட்டும். உண்மையைச் சொல்லும். பரணியில் ஒரு வீரத்தாய் காட்டப்பட்டிருக்கலாம். இன்று பல வீரப் பெண்கள் வாழ்கிறார்கள் போர்க்களத்திலும் வெளியிலும்.

கவிதை என்பது ஓரிருவருக்குள் அடங்கிக் கிடக்கும் உணர்வுகளை மட்டும் வெளிக்கொணரக் கூடிய நிலையில் இருந்தது மரபுக் கவி காலத்தில். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாக்கமே பாரதியை புதுக்கவிதை வடிவத்தை நோக்கி கொண்டு சென்றது. தன்னைப் போல மற்றவர்களும் உணர்வுகளை உள்வாங்கிக் கொள்ள வெளிப்படுத்த வகை செய்யும் நோக்கோடே புதுக்கவிதை வடிவை பாரதி தந்தான். அவன் சமூகத்தில் ஒவ்வொருவனையும் அவனது உணர்வுகளை எளிய தமிழில் கொட்டத்தக்க கவிஞனாகக் காணவே ஆசைப்பட்டான்.

நாமும் தமிழ் பெண்கள் இன்று போராட்ட சூழலில் இருந்து கொண்டிருக்கிறோம். போராட்ட சூழலின் துயரை சோகத்தை வெற்றியை வீரத்தை தோல்வியை என்று உணர்வுகளைக் கவிதையில் செதுக்குவதை வரையறுக்கக் கூடாது. தடுக்க கூடாது. கவியெழுதும் ஆர்வமே சிலதை அறியவும் மனதில் பதிக்கவும் செய்து விடுகிறது. கவிதை தந்த படிப்புகள் மனதில் நிலைத்தும் விடுகிறது. பல கதைகளைப் படித்து எவரும் வாசில் உச்சரிப்பதில்லை. ஆனால் ஒரு சினிமாப்பாடல் வரி என்பது இலகுவாக புகுந்து கொள்கிறது. அதேபோன்றதே விடுதலை கானங்களும் அதன் வரிகளும். உணர்வுகளை தட்டிவிட்டு சிந்திக்க வைத்து விடுகிறது.

தாயகத்தில் 90 களில் பொருளாதாரத்தடையில் விறகு வெட்டி சைக்கிளில் சுமந்து செல்வார்கள். நாவற்குழி வெளியில் அவர்கள் வரிசையில் வரும் போது பாடுவது என்னவோ விடுதலைக்கானங்களாக இருக்கும். அவர்களை அறியாமலே அவர்களின் உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்த விரும்புவார்கள். தங்கள் சோகங்களை துன்பங்களை களைப்புக்கான மகிழ்வுகளை அந்த வரிகளினூடு தீர்த்துக் கொள்ள அவர்கள் முனைகின்றனர் என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

கொழும்புக்கு வந்த இடத்தில் ஒரு சிறுவன் பாடுகிறான் "கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்" என்று. அருகில் சிங்களப் படைவீரன் துப்பாக்கி சகிதம் நிற்கிறான். அவனால் அந்தச் சிறுவனின் வார்த்தைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் அதையே பத்திரிகையில் எழுதிக் கட்டுரையாக விட்டிருந்தால் சிறுவன் கூட சிறையில் இருந்திருப்பான்.

அப்படி கவிதை என்பது இலாவகமாக மனதைக் கொள்ளை கொண்டு விடுவதோடு எல்லைகள் கடந்து செவி வழியும் போகும் கண் வழியும் போகும். அதே போல் உணர்வுகளை அச்சொட்டாக வெளிப்படையாகவும் சொல்லமுடியும் ஒளித்தும் சொல்ல முடியும்.

சபேசனின் குற்றச்சாட்டுக்களில் பெண்களால் சமூகக் கவிதைகள் வரையப்படுவதில்லை என்று. பல பெண் சமூகச் சமத்துவம் வேண்டிய கவிதைகளும் பெண்களின் சமூகத்துயரங்களை வெளிக்கொணரும் கவிதைகளையும் பத்திரிகைகளில் காணலாம்.

இங்கு யாழ் களத்தில் கூட பல பெண் கவிஞர்கள் சிறப்புற விளங்கினர். ஊடகவியலாளராக இருந்த போதும் தனது உணர்வுகளை பல வடிவங்களிலும் தந்து வந்த நல்ல கவிஞராக சாந்தியக்காவைக் குறிப்பிட முடியும். சண்முகி அக்கா சந்திரவதனாக்கா நளாயினியக்கா என்று பலரும் சிறப்புற சமூகக் கவிதைகள் தொடங்கி அரசியல் கவிதைகள் வரை பேசினர்.

இளம் கவிஞர்களை யாழில் இன்றும் பார்க்கலாம். அவர்களுக்கு வழி காட்ட வேண்டுமே தவிர. வன்னி மைந்தன் கூறுவது போல முளையில் கிள்ளி எறியக் கூடிய அல்லது மனதளவில் கவிதை எழுதுவதால் பயனென்ன என்று கேட்டு மனச்சோர்வை உண்டாக்குவதை செய்யக் கூடாது அல்லது தவிர்ப்பது நல்லது.

பல வரிகளில் எழுதுவதைப் புரிந்து கொள்வதிலும் ஒரு கவிதை காவி கொண்டு வரும் பல வடிவக் கருத்துக்களை இலகுவாக உள்வாங்கிக் கொள்ள முடியும். அந்த வகையில் தமிழ் மொழிக்கு கவிதைகளே அதுவும் பெண்கள் அளிக்கும் கவிதைகளே சிறப்பான இருப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. பெண்களின் கவிதைகளில் சூடு இருக்காது. சுரணையை கிள்ளிப் பார்க்கும் உணர்வு இருக்கும். ஆண்களின் கவிதையில் சூடு இருக்கும் கொதிப்பு இருக்கும் ஆனால் உணர்வுகளை மதிக்கும் தன்மை குறைவாக இருக்கும். அந்த வகையில் சமூகத்துக்கு இரு பாலாரினதும் கவிதைப் படைப்புக்கள் அவசியம்.

வேணும் என்றால் சபேசனுக்காக ஒன்றைக் கோரலாம். அவர் விரும்புவது போல சாதியம் ஆரியம் பார்ப்பர்ணியம் போன்ற சொத்துப்போனவற்றை வைத்து 50 வருடகாலத்துக்கு முந்திய பகுத்தறிவை கற்பனையில் கொண்டு கவிதைகளையும் பெண்கள் எழுத வேண்டும் என்று கோரலாம். பலர் காலத்துக்கு காலம் எழுதி இருக்கிறார்கள். சபேசன் கண்பட தற்போதும் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டு; கவிதை அழகான ஒரு மொழி நடை அல்லது வடிவம் அதை உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உங்களுக்கு உரித்தான முறைகளில் விரும்பிய வடிவில் பயன்படுத்துங்கள். இதைத்தான் பாரதி புதுக்கவிதையை ஆக்கி உங்களுக்கு சொல்லிவிட்டுச் சென்றுள்ளான். அதை நிறுவி தமிழ் மொழியின் உயிர்ப்பை கைகளில் தாங்கிக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

சபேசன் அண்ணா ஆரம்பித்தது ஒரு நல்ல விடயம் என்றே தோன்றுகின்றது. அவர் எப்படி சொன்னால் என்ன, பெண் கவிஞர்கள் உயரே வேண்டும் என்பதே அதில் கருத்து பொருளாக உள்ளது. இதில் வருத்தப்பட என்ன இருக்கின்றது!

அவர் கூறியதிலும் உண்மை உண்டு, பெண் கவிஞர்கள் பலர் இருந்தும் ஒருவர் பெயரும் தனித்து உயரவில்லை என்பது உண்மையே! காரணம், கனடா, லண்டன் போல் அதிகம் தமிழர்கள் இல்லாத நாடுகளாக அவுஸ்திரேலியா, நியூசிலாந்தை சொல்லலாம் என நினைக்கின்றேன். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் நாட்டுபற்றுள்ளவர்களே! எம் இனத்து கலைஞர்களள வரவேற்பவர்களே! ஆனால் புலத்தில் வாழும் ஒரு பெண் கவிஞரில் பெயர் கூட இங்கு பெரிதாக வெளியே தெரிவதில்லை! அதே சமயம் ஆண்கள் பெயரும் இல்லை தானே!

ஆயினும் எத்தனையோ பிரச்சனைகளுக்குள் பெண்கள் இந்த அளவு வளர்ந்ததே பெரும் சாதனை என்பதையும் மறுக்க முடியாது!

பொதுவாக எனக்கு கவிதை எழுதும் பழக்கம் இல்லை. யாழில் நான் கதை ஆரம்பித்த நேரத்தில் பல கருத்துக்கள் என்னை நோக்கி வந்தன.

அதில் சில என் தமிழை சாடினா...ஆனால் பல கருத்துக்கள் என் எழுத்து வளர பெரும் உதவியாக இருந்தது. "எல்லாரும் எழுதுவது போல் எழுதாமல், வித்தியாசமாக எழுதுங்கள்"/ "எமக்கு தேவை பெண் கதையாளர்களே, இப்படி எழுதலாம்..அப்படி எழுதலாம்..."என ஏகப்பட்ட கருத்துக்கள். நான் எல்லாவற்றையும் ஆலோசனைகளாக தான் எடுத்தேன்.

ஆனால் ஒரு கேள்வி... புறனாறு தொடங்கி, இன்று வரை பெண்களின் எழுத்து மாறவில்லை...அவ்வைக்கு பின் யாருமே வரவில்லை என சொல்கிறம்...அதற்கு காரணம் என்ன?

சபேசன் அண்ணாவின் கருத்தில் ஒன்றை என்னால் ஒத்துகொள்ள முடியவில்லை:

"அண்மையில் வாகரையில் பலர் கொல்லப்பட்டார்கள். ஊடகங்கள் அதற்கான கண்டன, அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினார்கள். கலந்து கொண்ட ஆண்கள் கண்டனத்தையும், அஞ்சலியும் செய்தார்கள், அரசியல் பேசினார்கள், தீர்வு பற்றி பேசினார்கள்.

அந்த நிகழ்ச்சியில் வந்து கவிதை வாசித்ததோடு தம் கடமை முடிந்தது என்று போனவர்கள் பெண்கள்தான். (பெயர்கள் சொல்லி மனதை புண்படுத்த விரும்பவில்லை)"

அன்று ஆண்கள் கண்டன போராட்டத்தில் கலந்து, அஞ்சலி செலுத்தி, அரசியல் பேசி, தீர்வு பற்றி பேசினார்கள் என்றால் அதற்கு காரணம் வீட்டில் அவர்கள் மனைவிமார்/அம்மாமார் வீட்டில் நடக்க வேண்டியவற்றை பார்த்து கொண்டதால் தான்.

மற்றைய நாடுகளை பற்றி நான் சொல்ல முடியாது.. ஆனால் நியூசிலாந்து, ஒஸ்திரேலியாவில் அது தான் நிஜம். மாவீரர் தினமாகட்டும், அஞ்சலி கூட்டமாகட்டும் "நீங்கள் போய் உதவி செய்யுங்கோப்பா, நான் மற்ற வேலைகளை பார்க்கிறன்" என்று சொல்ல ஒரு மனைவி இல்லையெனில்....இந்த ஆண்கள் எல்லாம் கூட்டத்திற்கா வருவார்கள்?

என்ன வெளியே வரும் ஆணுக்கு பெயர் வருகின்றது. அவனையும் குடும்பத்தையும் தாங்கும் பெண் வெறுமே ஒன்றுமில்லாதவள் ஆகிறாள்!

ஒரு கூட்டம் என்றால் கவிதை சொல்ல ஒரு பெண்ணை நிறுத்தினால் நன்றாக இருக்கும் என்று தான் நினைக்கின்றார்கள். இதற்கு வானொலிகள் ஒன்றும் விதிவிலக்கு இல்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு "ஒரு கவிதை எழுதி தாங்கோ" என்று கேட்கிறார்கள்.

ஒரு ஆண் கதை/கவிதை எழுதினால் பெருமைப்படும் சமூகம். ஒரு பெண் எழுத ஆரம்பிக்கும் போது "இவக்கு எத்ற்கு தேவையில்லாத வேலை? / மத்தவையள் என்ன நினைப்பினம்? " இப்படி பல தடைகள்.. இது நியம் என உங்களை அனைவருக்கும் தெரியும்!

மற்றபடி சபேசன் அண்ணா எழுதிய முதல் கருத்து, கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே! உண்மை கசக்கும் என்பது நிஜம் தான்!

இன்னுமொரு விடயம். பெண்கள் சில விடயங்களை கவிதைகளில் தொட்டுசெல்லாமல் இருப்பதன் காரணம் எம் சமூகமே!

வல்வை சகாறா கூறியது போல, நல்ல பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என சமூகம் தான் முடிவுசெய்கின்றது.

புலத்தில் இருக்கும் பெண்கள் "நல்ல பெண்கள்" & "எழுத்தாளர்கள்" என இரண்டும் செய்வது தான் உயர முடியாமைக்கு காரணமோ என்னமோ?!

Link to comment
Share on other sites

வன்னிமைந்தனின் கேள்வி பாமரத்தனமாக இருக்கிறது.

ஒரு படைப்பை இன்னொரு படைப்பாளிதான் விமர்சிக்க வேண்டும் என்று அல்ல. அப்படிப் பார்த்தால் ஒரு திரைப்படைத்தை இன்னொரு இயக்குனர்தான் விமர்சிக்க வேண்டும் என்று ஆகி விடும். ஒரு சிறுகதையை ஒரு சிறு கதை எழுத்தாளன்தான் விமர்சிக்க வேண்டும் என்று ஆகி விடும்.

சமையல் சுவையாக இருக்கிறது என்று சமையல்காரன்தான் சொல்ல வேண்டுமா?

என்னுடைய கட்டுரையில் மிகத் தெளிவாக "நான் சிறந்த கவிஞனோ, இல்லையோ, ஆனால் சிறந்த ரசிகன்" என்று சொன்ன பிறகு நீங்கள் என்னுடைய கவித்திறன் பற்றிக் கேள்வி அனுப்புவது நீங்கள் கட்டுரையை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது.

நீங்கள் சொன்னது போன்று கவிதைகளை அனுப்புங்கள். நான் தரம் பிரித்துக் காட்டுகிறேன்.

வானொலிகளில் படிக்கப்படும் கவிதைகள் "மிகச் சிறந்தவைகளாக" உங்களுக்கு தெரிவதில் எனக்கு எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

இன்னும் ஒன்று! உங்கள் கவிதைகள் பற்றிய விமர்சனங்களை நான் தவிர்ப்பது, உங்கள் மனதை புண்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான்.

நெடுக்காலபோவான்! நான் மரபுக் கவிதைகள்தான் வேண்டும் என்று கேட்கவில்லை. கவிதை எந்த வடிவத்தில் வேண்டும் என்றாலும் இருந்து விட்டு போகட்டும்.

சென்ற நூற்றாண்டில் நீங்கள் பாரதியை உதாரணம் சொல்கின்ற பொழுது, உங்களினால் ஒரு பெண் கவிஞரை உதாரணம் சொல்லமுடியாது இருக்கிறது அல்லவா?

அதைத்தான் நான் சொல்கிறேன்.

இன்றைக்கு நிலைமை மாறி விட்டது. எங்கு பார்த்தாலும் பெண்கள் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

சங்க காலத்தில் இருந்ததை விட மிக பலமடங்கு அதிகமான புலவர்கள் இன்று இருக்கிறார்கள் போன்ற ஒரு தோற்றம்.

ஆனால் பெண்கவிஞர்கள் ஒரு வட்டத்தை விட்டு வெளியே வருகிறார்கள் இல்லையே என்பதே என்னுடைய ஆதங்கம். நான் சொன்ன உலக அரசியல், பகுத்தறிவு, வர்க்கப் போராட்டங்கள் போன்றவைகள் வெறும் உதாரணங்கள்தான்.

வெறும் சோகத்தையும், காதலையும் பாடிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடிவேலு மூட்டைப் பூச்சி அடிக்கும் மிசின் கண்டு பிடித்த மாதிரி இவர்களும் ஒவ்வொரு குரங்காய் பிடித்து வைத்து பொருத்துவார்கள் போல.........!   😁
    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.