Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் டாட்டா காட்டிய காதலி: தூக்கில் தொங்கிய யாழ் வாலிபன்

Featured Replies

தற்கொலை ஒரு குறுகிய நேரத்தில் நடந்து முடிகின்றது . கடவுளே யாரப்பா இவருக்கு ஒரு நண்பர்களும் இல்லையா . அவர்களுடன் கதைத்திருந்தால் இப்படியான விபரீதமான் முடிவினை எடுத்திருக்க மாட்டார் .
 
கவலை இருக்கத்தான் செய்யும் அதற்காக இறப்பதா ? உண்மையில் சமுதாயம் மாற நிறைய இருக்கின்றது .
சினிமா படங்களும் ஒரு காரணம் தான் .  
 
இறைவன் தந்த இந்த அற்புத வாழ்கையை இப்படி அழிக்க எப்படி மனம் வந்தது ....
அந்த பெண் என்ன மனநிலையில் இப்படியான முடிவினை எடுத்தார் என்று தெரிய சந்தர்பம் இல்லை ...
 
இதனால் தான் காதலை பெரியோர்கள் எதிர்கின்றார்கள் .   இது இல்லாட்டா  இன்னொன்று என்ற மனநிலை வரவேண்டும் . அவர்கள் தான் காதலிக்க வேண்டும் ....
  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்காக... தன்னை வளர்த்து ஆளாக்கி, பெரும் கனவுடன் இருந்த பெற்றோரை.... ஏமாற்றி விட்டான். :(

11062145_10152868341418590_8713732097762

ஆழ்ந்த அனுதாபங்கள் .

11110974_10152868341323590_1517077676511

  • கருத்துக்கள உறவுகள்

11062145_10152868341418590_8713732097762

ஆழ்ந்த அனுதாபங்கள் .

11110974_10152868341323590_1517077676511

பெடியனுக்கு என்ன குறை. அழகாகத்தானே... உள்ளான்.

விசர் பெட்டை..... காசுக்கு ஆசைப்பட்டு, வெளிநாட்டு மாப்பிளையில் மயங்கி விட்டாள்.

பிளேன் ஏறி, வெளிநாடு வர... அவருக்கு என்ன அதிர்ச்சி காத்திருக்குதோ...

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
பார்க்கும் போது பாவமாக இருக்கிறது..ஒரு இடத்தில் இருப்புக் கொள்ளாதவே துலைஞ்சு போகட்டும் என்று விட்டுப் போட்டு படிச்ச படிப்பை வைச்சு முன்னேறிக் காட்டி இருக்கலாம்..இல்ல அவாளுக்கு பிறகு திருமணம் என்ற ஒன்றை நினைச்சு பார்ப்பதில்லை என்ற முடிவோடு வாழ்ந்து காட்டி இருக்கலாம்..கடந்த காலங்களில் சில பல்கலைகழக மாணவர்களோடு பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது...பின் சில காலங்களில் தவிர்க்க முடியாத சூழ் நிலையால் அவர்களோடு தொடர்பில் இருக்க முடியவில்லை..
 
ஆனாலும் நான் தம்பிகளாக நினைச்சுப் பழகிய ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமான சோகம் இருக்கவே செய்தது...'என்ன அப்பன்...."அய்யா என்று கதைச்சாலே மிகுந்த சந்தோப்படுவார்கள்...காரணம் தங்களோடு இப்படி அன்பாக  கதைக்கும்  மனிதர்களை இப்போ காண்பது அரிது என்பார்கள்..அந்த தருணங்களில் எங்கள் கவலைகள் எல்லாம் பெரிய விடையமாகவே தெரியாது..ஒரு நாள் அவர்களோடு பேசாது விட்டாலும் சோர்ந்து போய் விடுவார்கள்.மறுபடி கதைக்க விருப்பப்பட மாட்டார்கள்..சுனாமியும்,முள்ளிவாய்க்காலும் அவர்களுக்குள் நிறையவே வலிகளைத் தான் கொடுத்துட்டு போய் இருக்கிறது.எவ்வளவு மாணாவர்கள் எவ்வளவு கஸ்ரங்களை அனுபவிச்சுக் கொண்டு படிப்பை நகர்த்தி செல்கிறார் தெரியுமா.....???
 
ஏற்கனவே நிறைய வேதனைகளோடு வாழுபவர்கள் தங்களுக்கு வாழ்க்கையில்  நிரந்தரமாக ஒருத்தி வேண்டும் என்று பழகிக் கொண்டு இருக்கையில் பிரிவது என்பது துயரமான விடையம் தானே.ஆனாலும் நல்ல ஒரு நட்புக் கூடவே இருந்திருந்தால் இந்த இறப்பை தவிர்த்திருக்கலாம்... 
 
  • கருத்துக்கள உறவுகள்

பெடியனுக்கு என்ன குறை. அழகாகத்தானே... உள்ளான்.

விசர் பெட்டை..... காசுக்கு ஆசைப்பட்டு, வெளிநாட்டு மாப்பிளையில் மயங்கி விட்டாள்.

பிளேன் ஏறி, வெளிநாடு வர... அவருக்கு என்ன அதிர்ச்சி காத்திருக்குதோ...

இது போன்ற  சில நிகழ்வு நடந்த இடங்களைக்கண்டிருக்கின்றேன்..

உண்மையான காதல் என்றால் வாழவழிவிட்டு விலத்தி நின்று வாழ்த்தும்...

இது ஒருவித பழி வாங்கல்...

உன்னை நிம்மதியாக வாழவிடமாட்டேன் என்ற தனிக்கோட் தீர்ப்பு....

ஆனால் வாழ்க்கை என்பது எல்லாவற்றையும் தாண்டி கழித்து  ஓடிக்கொள்ளக்கூடியது

எவ்வளவுக்கு இது தன் வேலையைக்காட்டும் என்பது அந்தப்பெண் இவர் மேல் வைத்திருக்கும் அன்பையும்

இனி வாழப்போகும் வாழ்க்கையையும்  பொறுத்தது.....

வாழ்வு என்பது சட்டை மாற்றிக் கொள்வது போல் அல்லவே.சிலருக்கு விருப்பு,வெறுப்புக்கள் முறிந்து விட்டால் மறுபடியும் எதிலுமே விருப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாது...நீங்கள் இவர்களின் வயதை கடந்து வராதவரும் அல்ல..ஆகவே நிறைய எழுத வேண்டிய அவசியம் இல்ல என்று நினைக்கிறன்...
அப்படி இருக்கையில் இது ஒரு வித பழி வாங்கல் அப்படி என்று நாங்கள் எழுந்தமானமாக அந்தப் பையன் மேலவே பழியைப் போட முடியாது....குறிப்பிட்ட பெண்ணினால் என்ன விதமான கஸ்ரங்களை எல்லாம் இந்தப் பையன் எதிர் நோக்கினாரோ யாருக்கும் தெரியும்.எல்லா விதமாகவும் யோசிச்சு பார்க்க வேண்டும்..அண்மைய காலங்களில் தாயகத்து உறவுகளின் மாற்றங்கள் பற்றி நிறைய அறியக் கூடியதாகவே இருக்கிறது..
பாவம் பெடியன். ஆழ்ந்த இரங்கல்கள்.
நெடுக்கர் கூறியது போல இந்த கணணி யுகத்தில யாரென்றாலும் கொஞ்சம் எட்டத்தில் வைத்தால் வாழ்க்கை சுலபமாக போகும். கோப்பை கழுவாததற்கே விவாகரத்து கேக்கும் காலம் இது
  • கருத்துக்கள உறவுகள்
'காதலுக்காக விசம் குடித்ததுபோல் நடித்தாள் யூலியட். இதை நாடகம் என்று அறியாத ரோமியோ விசம் அருந்தி இறக்க, அவன் குடித்து மீதி வைத்த விசத்தினை அருந்தி உயிரைவிட்டாள் அவனது காதலி யூலியட்.'  :(
 
இத்தகைய நிகழ்வுகளைக் காதல் காவியமாக்கி உலகம் போற்றிப் புகழ்வதும், காதல் தோல்வியானது, தற்கொலையை நாடத் தூண்டுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். :o
 
  • கருத்துக்கள உறவுகள்

அப்போது யுலியடிட்கு வயது 13

என்ன அக புற சூழ்நிலைகள் இருந்தாலும் காதல் தோல்விக்கு தற்கொலை ஒரு முடிவல்ல ... தப்பான செயல் ... கேவலம் ஒரு பெண்ணுக்காக உன் உயிரை விட்டுவிட்டாய் .....
 
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வு என்பது சட்டை மாற்றிக் கொள்வது போல் அல்லவே.சிலருக்கு விருப்பு,வெறுப்புக்கள் முறிந்து விட்டால் மறுபடியும் எதிலுமே விருப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாது...நீங்கள் இவர்களின் வயதை கடந்து வராதவரும் அல்ல..ஆகவே நிறைய எழுத வேண்டிய அவசியம் இல்ல என்று நினைக்கிறன்...
அப்படி இருக்கையில் இது ஒரு வித பழி வாங்கல் அப்படி என்று நாங்கள் எழுந்தமானமாக அந்தப் பையன் மேலவே பழியைப் போட முடியாது....குறிப்பிட்ட பெண்ணினால் என்ன விதமான கஸ்ரங்களை எல்லாம் இந்தப் பையன் எதிர் நோக்கினாரோ யாருக்கும் தெரியும்.எல்லா விதமாகவும் யோசிச்சு பார்க்க வேண்டும்..அண்மைய காலங்களில் தாயகத்து உறவுகளின் மாற்றங்கள் பற்றி நிறைய அறியக் கூடியதாகவே இருக்கிறது..

நன்றி  யாயினி

நீங்கள் ஒரு பக்கத்தையும் நான் இன்னொரு பக்கத்தையும் பார்க்கின்றோம்....

எனக்கு கோபம் இவர் மீது...

28 வயதுவரை வளர்த்து

படிப்பித்து பட்டாதாரியாக்கி மகிழமுதல்

பெற்றோரை இப்படிப்புலம்ப வைத்ததை ஏற்றுக்கொள்ளமுடியாத  கோபம்..

இதற்கு பதிலாக

என் சுற்றம் இருக்கு

படிப்பு இருக்கு

வாழ்ந்து காட்டுகின்றேன் பார் என்று சொல்லியிருந்தால்

அவருடன் சுற்றமும் நானும் நின்றிப்போம் அல்லவா..

அதற்கு மாறாக அவளை பழி வாங்கணும்

வாழ்க்கை பூராகவும் தனது  சுமையை புகுத்தணும் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.