Jump to content

உங்கள் தாயை அனுமதிப்பீர்களா ??????


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குங்குமத்தின் மகிமை

மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழசாற்றில் ஊறவைத்து, பின் உலர வைத்து பொடிசெய்தால் குங்கமம் தயாராகும். இவ்வாறு தயாரிக்கப்படும் குங்குமம் நெற்றியில் அணியப்படுகிறது .தலை வகிட்டு முனையிலும் பெண்கள் அணிகிறார்கள் நெற்றியில் புருவ மத்தியில் பொட்டு வைப்பதால் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது என்பது நம்பிக்கை. ஆன்மீக அடிப்படையும் இதுவாகும் .நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது.

 

இதையே இனி அறிவியல் ரீதியில் பார்ப்போம்.

நெற்றியின் புருவ மத்திக்கு நேர் பின்னால் மூளையின் ஒரு பகுதியாக  Pineal gland எனும் நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது. இது மூளையின் ஒரு முக்கிய பகுதியென அறிவியலார் உணர்ந்து வருகிறார்கள் கண்போன்ற அமைப்பு எனக் கண்டறிந்துள்ளார்கள். இதனை நெற்றிக்கண் எனலாம். இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும்.யோகப் பயிற்சியில் சுழுமுனை எனப்படுவதும் இப்பகுதியாகும். யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்ச்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவியும். ஞானக் கண் என்றம் அழைக்கப்படும். அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட இன்னொரு நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.

அன்றைய ஞானியர் யோகிகள் ஆகியோர் இதை உணர்ந்திருந்தார்கள். அதனாலையே நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டனர். இன்று உள்ளது போன்ற அலங்கார ஒட்டுப்பொட்டுகளை அவர்கள் வைக்கவில்லை. சந்தனம் குங்குமம் போன்ற குறிப்பிட்ட மூலிகை பொருட்களையே வைத்துக்கொண்டார்கள்.

குங்கமத்தை ஏற்கனவே கூறியபடி தயாரிக்கும் போது அதில் மின்கடத்தும் தன்மை அதிகரிக்கிறது. இதை நெற்றியில் இடும்போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது .

நெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் அல்லது திருஸ்டி எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும். ஹிப்னட்டிசம் முதலிய மனோவசியங்கள் புரவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.

மின்கடத்தும் தன்மை

நமது வழிபாட்டு முறைகளில் நன்றாக மின்சக்தியை ஏற்கக்கூடிய பொருட்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். வேப்பிலை, மாவிலை, துளசி, எலுமிச்சை போன்றவைக்கு இந்த சக்தி அதிகம். குங்குமத்தை இந்துக்கள் காரணத்தோடுதான் உபயோகிக்கிறார்கள். அதுமட்டுமல்லாது பல அறிவியல் நுணுக்கங்கள் ஒருங்கே இணைந்த பழக்கங்கள் நம் பண்பாட்டில் இருக்கின்றன்.

 

இணையத்தில் வாசித்தது

 

நன்றி வாத்தியார் பகிர்வுக்கு.

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply

எந்த வளமாப் பாத்தாலும் என் கேள்விக்கு சிலரைப் போல உங்களாலும் நேரடியாகப்  பதில் கூற முடியவில்லை என்பதுதான் உண்மை. :D :D

 

கேள்வி போடுற உங்களுக்கு, நாங்கள் எழுதுகின்ற பதிலை புரிந்துகொள்ள முடியாவிட்டால் நாங்கள் ஒண்டும் செய்ய முடியாது.

 

"உங்கள் அப்பா இருக்கும்போது, உங்கள் அம்மாவை நிதந்தரமா குங்குமப் பொட்டு வைக்க வேண்டாம் எண்டு உங்காளால் சொல்ல முடியுமா ?" இதுக்கு உங்கள் பதில் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி போடுற உங்களுக்கு, நாங்கள் எழுதுகின்ற பதிலை புரிந்துகொள்ள முடியாவிட்டால் நாங்கள் ஒண்டும் செய்ய முடியாது.

 

"உங்கள் அப்பா இருக்கும்போது, உங்கள் அம்மாவை நிதந்தரமா குங்குமப் பொட்டு வைக்க வேண்டாம் எண்டு உங்காளால் சொல்ல முடியுமா ?" இதுக்கு உங்கள் பதில் என்ன?

 

இந்தப் பதிவைப் போட்ட நோக்கமும் அதில் எழுதியுள்ள விடயங்களும் உங்களுக்குப் புரியவில்லை என்பதற்காக அல்லது புரியாததுபோல் நீங்கள் பதில் எழுதுவதற்காக நான் கோவிக்கவே இல்லை. :D

 

பெண்களின் உரிமை என்னும்போது அம்மாவை நான் பொட்டு வைக்க வேண்டாம் என்று கூறுவது முட்டாள்த்தனமான செயலல்லோ ???

அம்மா விரும்பினால் அப்பா இருக்கும் போதே பொட்டு வைக்காது இருந்திருப்பாரானால் நானோ என் சகோதரர்களோ எதுவுமே கூறியிருக்க மாட்டோம்.

Link to comment
Share on other sites

இந்தப் பதிவைப் போட்ட நோக்கமும் அதில் எழுதியுள்ள விடயங்களும் உங்களுக்குப் புரியவில்லை என்பதற்காக அல்லது புரியாததுபோல் நீங்கள் பதில் எழுதுவதற்காக நான் கோவிக்கவே இல்லை. :D

 

பெண்களின் உரிமை என்னும்போது அம்மாவை நான் பொட்டு வைக்க வேண்டாம் என்று கூறுவது முட்டாள்த்தனமான செயலல்லோ ???

அம்மா விரும்பினால் அப்பா இருக்கும் போதே பொட்டு வைக்காது இருந்திருப்பாரானால் நானோ என் சகோதரர்களோ எதுவுமே கூறியிருக்க மாட்டோம்.

இதில் கவலைக்கோ நகைப்புக்கோ உரிய விடையம் என்னவெனில்.... கேள்வி போட்ட உங்களுக்கு கேள்வியின் அர்த்தம் புரியாதது தான் :icon_idea:

உங்கள் கேள்விக்கு பதில்

1.ஆம்

2.இல்லை

3.அது அம்மாவின் விருப்பம்

இதில் ஒரு பதில் எனது பதிலில் உள்ளது உங்களுக்கு தெரியலையோ? :icon_mrgreen:

அறிந்தோ அறியாமலோ நீங்கள் கேட்ட கேள்விக்கு பலர் பதிந்துள்ள நல்ல கருத்துக்கள் மகிழ்ச்சியை தருகிறது......

Link to comment
Share on other sites

அம்மா விரும்பினால் அப்பா இருக்கும் போதே பொட்டு வைக்காது இருந்திருப்பாரானால் நானோ என் சகோதரர்களோ எதுவுமே கூறியிருக்க மாட்டோம்.

உங்களின் சகோதரர்களின் கருத்தை அவர்கள் தான் கூறவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருசில சனங்கள் என்னத்துக்கு ஜெகோவாவுக்கு மாறினது எண்டு இப்ப விளங்குது!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கவலைக்கோ நகைப்புக்கோ உரிய விடையம் என்னவெனில்.... கேள்வி போட்ட உங்களுக்கு கேள்வியின் அர்த்தம் புரியாதது தான் :icon_idea:

உங்கள் கேள்விக்கு பதில்

1.ஆம்

2.இல்லை

3.அது அம்மாவின் விருப்பம்

இதில் ஒரு பதில் எனது பதிலில் உள்ளது உங்களுக்கு தெரியலையோ? :icon_mrgreen:

அறிந்தோ அறியாமலோ நீங்கள் கேட்ட கேள்விக்கு பலர் பதிந்துள்ள நல்ல கருத்துக்கள் மகிழ்ச்சியை தருகிறது......

 

உங்கள் அம்மாவுக்குப் பொட்டு வைக்க விருப்பமா என்று நான் கேட்டிருந்தால் சில நேரம் நீங்கள் கூறிய விடை சரியாக வரலாம் ஆனால் உங்கள் அம்மா பொட்டு வைக்கிறாரா இல்லையா ??? வைப்பாரா இல்லையா என்னும் விடயங்களுக்கு உங்களுக்கு மட்டும் தானே பதில் தெரியும். நான் என்ன வெற்றிலையில் மை போட்டா பார்ப்பது ??? இவற்றுக்கு விடை தெரிந்தால்த்தான் நீங்கள் கூறியதில் எது விடை என்று அறியலாம் :icon_mrgreen: :icon_mrgreen:

 

ஒருசில சனங்கள் என்னத்துக்கு ஜெகோவாவுக்கு மாறினது எண்டு இப்ப விளங்குது!!

 

எனக்கு அதுவும் விளங்கேல்லை :lol:

உங்களின் சகோதரர்களின் கருத்தை அவர்கள் தான் கூறவேண்டும்

 

இத்தனை நாட்கள் நாம் இதுபற்றிக் கதைக்காமலா இருந்திருப்போம். 

 

Link to comment
Share on other sites

நான் என்ன வெற்றிலையில் மை போட்டா பார்ப்பது ???

நீங்கள் வெத்திலையில் பேமஸ் எண்டால் உங்கள் சந்தேகங்களை அப்ப வெத்திலையிலை போட்டு பார்க்க வேண்டியது தானே

சும்மா விதண்டாவாதம் கதைக்காதேங்கோ.....

வெத்திலை கன இடத்திலை பாவிக்கிறவை :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரியாதை கொடுக்கிறோம் என்று கூறிக்கொண்டு சீதனம் வாங்குவதை பெண்கள் மேல் போடுகிறீர்களா ??? :D

 

சிலப்பதிகாரத்தில் தாலி அணிவது வருவதாக நினைவில்லையே புங்கை.

 

சிலப்பதிகாரத்தில் தாலி[தொகு]

சிலம்பில் வரும் மங்கலவாழ்த்துப் பாடல் என்னும் முதற் காதையே “மங்கல வாழ்த்து” என்ற சொற்றொடரால் “திருமண வாழ்த்தை”த்தான் குறிக்கிறது. குறிப்பாக, மங்கலம் என்ற சொல் இங்கு திருமணத்தையே குறிக்கிறது. சிலம்பின் மங்கல வாழ்த்து 46-47 ஆம் வரிகளில்,

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை

அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

என்று சொல்லும் போது மங்கல அணி என்ற சொல்லாட்சியும் வருகிறது; அதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். “முரசுகள் இயம்பின, மத்தளங்கள் அதிர்ந்தன, சங்கு முழக்கம் முறைப்பட எழுந்தது, அரசெழுந்தது போல் வெண்குடைகள் எழுந்தன இத்தனைக்கும் பின்னே மணம் நடக்கும் அகலுள் (அகல் என்பது ஒரு சாலை அல்லது மண்டபம் அல்லது hall) மங்கல அணி எழுந்தது” என்று உணர்த்துகிறார்.

“ 19ம் நூற்றாண்டு வரையிலும் கூட நம்மூரில் திருமணங்கள் இரவில்தான் நடந்தன; பகலில் இல்லை. இராகு காலம், யம கண்டம் இல்லாமல் நல்ல நேரம் பார்த்துத் திருமணம் செய்தது அப்பொழுது இல்லை. இன்றைக்கு இருக்கும் காலநேரத் திருமண நடைமுறை ஒரு 100/120 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கியதே! தவிரவும் திருமணங்கள் பெரும்பாலும் பூரணையும் (பௌர்ணமி), சகட நாள்காட்டும் (உரோகிணி நட்சத்திரம்) கூடிய இரவில் தான் நடந்தன. (நிலாவெளிச்சத்தில் வெண்குடைகள் எழுவது அலங்காரமாய் தோற்றமளிக்கும். ”

மங்கல அணி என்ற சொல்லாட்சி எதைக் குறிக்கிறது என்பதைப் புரிய மிஞ்சிக் கிடக்கும் இன்றையப் பழக்கம் தெரிந்தால் போதும். இன்றைக்கும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு திருமணத்திலும், “கெட்டிமேளம், கெட்டிமேளம்” என்ற குரல் எழுந்து மேளம் அதிர்ந்து, சில இடங்களில் சங்கு முழங்கி [குறிப்பாகச் சிவகங்கைப் பக்கம் சில ஆண்டுகள் முன்பு வரை சங்கு முழக்கம் திருப்பூட்டும் போது (தாலி கட்டும் போது) இருந்தது], அரசாணைக் காலுக்கு அருகில் எல்லோரும் எழுந்து நிற்க, வந்தவர்கள் தொட்டு வாழ்த்தப் பெற்ற தாலி அகலுள் எழத் தான் செய்கிறது. எனவே, சிலம்பில் மங்கல அணி என்ற சொல் தாலியைத்தான் மிகத் தெளிவாகக் குறிக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக் கனி. இங்கே தாலி என்ற சொல் வரவில்லை என்றாலும் தாலி குறித்த சொல் இருப்பதைக் காணலாம். தாலிப் பழக்கம் கி.பி. 100/150 அளவில் இருந்திருக்கிறது என்று சிலம்பை வைத்து அறுதியிட்டு உரைக்க முடியும்.

மங்கல அணி என்பது மனையறம் படுத்த காதையிலும் பேசப் படுவதைச் சொல்லலாம். நகரத்தார் வழக்கத்தில் திருமணமான மகனையும் மருமகளையும் (பெரும்பாலும்) ஓராண்டு முடிந்தோ, அல்லது ஓரோவழி மூவாண்டு முடிந்தோ, தனிக் குடித்தனம் வைப்பார்கள். இப்படித் தனிக் குடித்தனம் வைத்தலை “வேறு வைத்தல்” என்றும் சொல்லுவார்கள். இளங்கோவடிகளும் கூட “வேறு வைத்தல்” என்ற சொல்லாட்சியையே சிலம்பில் ஆளுகிறார். மகனைப் பெரிய வீட்டில் (பெற்றோர் வீட்டில்) இருந்து வேறு வைத்தலைத் தான் “மனையறம் படுத்தல்” என்று சொல்லுவார்கள்.

மனையறம் படுத்த காதையில் “மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே, தேனே” என்றெல்லாம் கோவலன் சொல்லுவதைப் பலரும் ஏதோ திருமண நாள் இரவு நடந்தாக எண்ணிக் கொள்கிறார்கள். அது தவறு. அந்த உரை வேறு வைக்கும் சடங்கு நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு நடந்ததாகும். அந்த ஓராண்டில் அவர்களுக்கு ஏற்பட்ட நிறைவின் முடிவில் தான், கோவலன் கண்ணகியைப் பலவாறு பாராட்டுகிறான். அப்படிப் பாராட்டுவதில் கீழே வருவதும் ஒரு பாராட்டாகும்.

நறுமலர்க் கோதைநின் நலம்பா ராட்டுநர்

மறுவின் மங்கல அணியே அன்றியும்

பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்

“மணம்வீசும் மலர்சூடிய பெண்ணே! உன்நலம் பாராட்டுபவர்கள், குறையில்லாத மங்கல அணியைத் தவிர வேறு அணி சூடவில்லையே, அது எதனால்?”

என்று கேட்கிறான். வேறொன்றும் இல்லை; பல்லாண்டு மங்கலமாய் வாழ்ந்து பலபேறும் பெற்ற வாழ்வரசி தான் தனித்து வாழப் போகிறவளை வாழ்த்த வேண்டும் என்பது மரபு. இங்கும் மங்கல அணி என்பது தாலியையே குறிக்கிறது. இந்தக் காலத்தில் சுமங்கலி என்ற இருபிறப்பிச் சொல்லால் இது போன்ற வாழ்வரசிப் பெண்ணைக் குறிப்பார்கள். சிவ மங்கலி என்னும் நல்ல தமிழ்க்கூட்டுச் சொல் தான் திரிந்து சுமங்கலி என்றாகி வடமொழியாய்ப் பொய்த்தோற்றம் காட்டுகிறது. இன்றும் இறைவியின் முன்னிலையில் பெற்ற குங்குமத்தைத் தாலியின் மேல் இட்டுக் கொள்ளும் பழக்கம் தமிழ்ப் பெண்களுக்கு உண்டு. குங்குமம் பொற் தாலியில் ஒட்டாது; ஆனால் மஞ்சள் பொருளில் நன்றாய் ஒட்டிக் கொள்ளும். அப்பொழுது அது சிவமங்கலியாய் ஆவது வியப்பு ஒன்றும் இல்லை.

இன்னும் பார்த்தால், மங்கலம் என்ற சொல் சிலம்பு 5:146, 151 வரிகளிலும் பயில்கிறது. இனி நடுகற் காதையில் வேண்மாளைக் குறிக்கும் போது வரும் வரிகளைப் (சிலம்பு 28:51) பார்க்கலாம்.

தமனிய மாளிகைப் புனைமணி அரங்கின்

வதுவை வேண்மாள் மங்கல மடந்தை

மதியேர் வண்ணம் காணிய வருவழி

வதுவை வேண்மாள் என்பது வதுவுற்ற அரசி வேண்மாளைக் குறிக்கிறது. வதுவை = wedding; இங்கே வதுவுற்ற என்பது wedded என்ற வினைச்சொல்லைக் குறிக்கிறது. மங்கல மடந்தை என்ற பெயர்ச்சொல் கண்ணகியைத் தான் குறிக்கிறது. “நிலவு எழுந்த பொழுதில் பொன்மாளிகையில் உள்ள புனைமணி அரங்கின் ஊடே மங்கல மடந்தையைக் காண வரும் வழியில்” என்ற பொருளை இங்கு கொள்ள வேண்டும்.

ஆகக் கணவன் இறந்த பின்னும் கூடக் கண்ணகி மங்கல மடந்தை என்றே சிலம்பிற் சொல்லப் பெறுகிறாள். இன்றைக்கும் கேரளத்தில் கண்ணகி கோயில் மங்கலதேவி கோயில் என்றே சொல்லப் பெறுகிறது. “கணவன் இருப்பதால் தான் மங்கலச் சிறப்பு” என்ற மூடநம்பிக்கைகளைக் குறிக்காமல், இங்கு தனித்த முறையில் மங்கல மடந்தை என்று கண்ணகி சொல்லப் பெறுவது குறிப்பிடப்படவேண்டியது.. மங்கல வாழ்வு என்பது ஒரு முழுமை பெற்ற வாழ்வு, அவ்வளவு தான். பொதுவாய் வேறு வைத்துத் தனிக் குடித்தனம் நடத்தும் எந்த ஒரு பெண்ணுக்கும் குமுகத்தில் தனி ஆளுமை கிடைத்து விடுகிறது. அப்படி ஆளுமை கிடைத்த எவளும் மங்கல மடந்தை, வாழ்வரசி என்றே அழைக்கப் படுவாள். (இன்றைக்கு முட்டாள் தனமாகக் கணவனை இழந்தோரை வாழ்வரசி அல்லாதவள் என்று கூறினாலும்) பழைய புரிதலில் கண்ணகியும் மங்கல மடந்தையே. (இந்தச் சொல்லாட்சி சிலம்பு 28:51, 30:53, 50:88 ஆகியவற்றிலும் பயிலும்.) நிறைவு வாழ்க்கையை கண்ணகி நடத்தியதை மனையறம் படுத்த காதையின் முடிப்பு வரிகளில்,

வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி

மறப்பருங் கேண்மையொடு அறப் பரிசாரமும்

விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்

வேறுபடு திருவின் வீறுபெறக் காண

உரிமைச் சுற்றமோடு ஒருதனி புணர்க்க

யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையிற்

காண் தகு சிறப்பில் கண்ணகி தனக்கென்

என்று சொல்லி ஆண்டு சில கழிந்ததை உணர்த்துகிறார். இன்னொரு சொல்லாட்சியாய் நீர்ப்படை காதையில் (27:163)

மாடலன், மங்கல மறையோன் என்று சொல்லப் பெறுவான்.

எங்கோ வேந்தே வாழ்கென்று ஏத்தி

மங்கல மறையோன் மாடலன் உரைக்கும்

இன்றைக்கும் பெருமானரில் இரண்டு வகையை இனம் காட்டுவார்கள். ஒருவர் மந்திரங்களிலும், வேள்விகளிலும் தேர்ந்தவர், இன்னொருவர் தந்திரங்களில் (கோயில் பற்றிய புரிசைகளில்) தேர்ந்தவர். முதல்வகை ஆள் தான் இன்றைக்கும் திருமணங்களின் ஊடே வருகின்ற பார்ப்பனர் ஆவார். இரண்டாம் வகையைச் சேர்ந்த தந்திரி, ஓரோவழி முதல் வகையாருக்கு உதவி செய்யும் தோதாய் வரக்கூடும். இருந்தாலும் முதல் வகையாரையே, பெருமானர் சடங்குகள் நடத்த நாடுவர். மாடலன் முதல் வகை மறையவன்; அவன் மங்கல மறையோன் = மங்கல காரியங்களை நடத்தி வைக்கின்ற பார்ப்பனன் என்றே சொல்லப் படுகிறான். அதாவது “கல்யாணம் போன்ற நல்ல காரியங்களைச் செய்து வைக்கும் வாத்திமார்”.

மங்கல அணி என்ற தமிழ்க் கூட்டுச்சொல் மங்கலம்>மங்கல்யம்>மாங்கல்யம் என்று சுருங்கிப் போய் இருபிறப்பியாய் மாறியது ஒன்றும் வியப்பான செயல் அல்ல.

எடுத்துக்காட்டாக, “ஜல சமுத்ரம்” என்ற இருபிறப்பிச் சொல் இன்று “சமுத்ரம்” என்று சுருங்கச் சொல்லப் பட்டு பொருள் புரிந்து கொள்ளப் படுகிறது. சமுத்ரம் என்ற இருபிறப்பிச் சொல்லின் பிறப்பை அறியத் தமிழில் வராமல் முடியாது. கும்>கும்முதல்>குமிதல் என்ற தமிழ்வினையடி சேருதல் என்ற பொருளைத் தரும். குமிதல் என்பது தன் வினை. குமித்தல் என்பது பிறவினை. குமித்தம்/குமுத்தம் என்பது சேர்த்து வைத்ததைக் குறிக்கும் பெயர்ச்சொல். தென்மொழி/வடமொழிப் பரிமாற்றங்களில் (இவை இருவழிப் பரிமாற்றங்கள்; ஒருவழி மட்டுமே அல்ல.) குகர/சகரப் போலி பலநேரம் ஊடு வந்து நிற்கும். நம்முடைய குமுகம் அவர்களுடைய சமுகமாக உருமாறும். அப்படித்தான் குமுத்தம் சமுத்தம் ஆகி வழக்கம் போல ரகரம் ஊடுருவி சமுத்ரம் ஆகும்.

 

ஆதாரம்:   விக்கி 

 

பி.கு:  விக்கியில் வருவதெல்லாம் உண்மை என்று இல்லையே என்று மட்டும் கேட்கக்கூடாது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலப்பதிகாரத்தில் தாலி என்று முன்பு ஒரு கட்டுரை வாசித்தேன். சிலப்பதிகாரத்தை பொழிப்புரையுடன் மீண்டும் வாசிக்க வேண்டும்


நீங்கள் வெத்திலையில் பேமஸ் எண்டால் உங்கள் சந்தேகங்களை அப்ப வெத்திலையிலை போட்டு பார்க்க வேண்டியது தானே

சும்மா விதண்டாவாதம் கதைக்காதேங்கோ.....


வெத்திலை கன இடத்திலை பாவிக்கிறவை :icon_idea:

 

லண்டன் கடையளுக்கு இப்ப வெத்திலை தடையாம்.  வெத்திலைக்கு நான் எங்க போறது ???
 

Link to comment
Share on other sites

லண்டன் கடையளுக்கு இப்ப வெத்திலை தடையாம்.  வெத்திலைக்கு நான் எங்க போறது ???

 

ஓம் எண்டு தான் கேள்வி.....
 
எங்கடையாக்கள் போட்டுட்டு கண்ட இடத்திலையும் துப்பிறதாலேயோ?
 
ஆனாலும் களவா பியர் இறக்குறவைக்கு உதல்லாம் விக்குறது சிம்பிள்... :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமூகம் என்ற சட்டை யாரும் கழட்டி போட்டு அம்மணமாக திரிய முன்வருவதில்லை அந்த சமூகம் தூற்றும் என்பதற்காக ஆக மொத்தத்தில் சமூகத்திற்கு பயந்து பெண்கள் துணிந்து வருவதில்லை

ஏனென்றால் நம்ம வீட்டு கறி சட்டியை கழுவி ஊத்துவது அடுத்தவன் மூற்றத்திலே <_< <_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.