Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவுறுவிலுள்ள இலங்கை அகதிகள் கம்போடியாவில் குடியேற்றப்படுவர்: ஆஸி

Featured Replies

article_1429172281-09po.jpg

 

அவுஸ்திரேலியாவினால் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கையர் உட்பட பல்நாட்டு அகதிகள் நவுறு தீவிலிருந்து கம்போடியாவில் குடியமர்த்துவதற்காக அங்கு அனுப்பப்படவுள்ளனர் என அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் கூறியது. 
கம்போடிய தலைநகரான 'நொம்பென்' இல் குடியேற்றப்படுவதற்காக முதல் தொகுதி அகதிகள் விசேட விமானத்தின் மூலமாக  திங்கட்கிழமை அழைத்து செல்லப்படவுள்ளனர். இதற்கான கம்போடியாவும் அவுஸ்திரேலியாவும் இருபக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. 
 
கம்போடியாவுக்கு அனுப்பப்படவுள்ளவர்களில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர். 
நவுறு தடுப்பு முகாம்களிலிருந்து வெளியேறுபவர்கள் சுய விருப்புடன் செல்பவர்களாக இருக்க வேண்டுமென இந்த ஒப்பந்தம் கூறுகின்றது. 
தாமாக விரும்பி கம்போடியாவில் குடியேறுவோருக்கு கையில் பணம், வங்கியில் பணம், வேலைவாய்ப்பு, கல்வி வசதி, மொழிப்பயிற்சி, ஆரோக்கிய காப்புறுதி என பல சலுகைகள் கிடைக்கும். 
 
இந்த ஏற்பாட்டின் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு ஆண்டுக்கு 10 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் செலவாகும். 
இதேவேளை, கம்போடியாவுக்கு அகதிகளை அனுப்புவதை மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்துள்ளன.  
 
 
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸின் மனிதாபிமானம் கப்பலேறிப் பல காலங்களாகிவிட்டது.
 

அவுஸின் மனிதாபிமானம் கப்பலேறிப் பல காலங்களாகிவிட்டது.

 

 

ஒரே கப்பல் மயம்தான்  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

உலக கிரிக்கட் போட்டியின் பின்பு தான் இந்த முடிவு எடுத்தவங்களாம் :D அவுஸ்ரேலியா குடியுரிமை எடுத்தபின்பு அவுஸ்ரேலியாவுக்கு ஆதரவு கொடுக்காமல் தங்களுடைய நாட்டுக்கொடியை பிடித்துகொண்டு தங்களுடைய நாடுகளுக்கு ஆதரவு கொடுத்தபடியால் இந்த முடிவாம்.....மூன்றாம் நாட்டுக்கு அனுப்பினால் எந்த கொடியை இவையள் பிடிப்பினம் என்று பார்க்கதான் இந்த சோதனையாம் ...தகவல் அவுஸ்ரெலியா புலனாய்வு துறையினர்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஆவுஸ் வெள்ளையள கப்பல் ஏத்தி, UK அனுப்பவேண்டும்.

சிறைக் கைதிகளாக அங்க போனது 200 வருசம் தான், ஏதோ, 1000, 2000 வரியம் இருந்து ஆண்டு, அனுபவிச்ச மாதிரி பண்ணுற அலம்பறை எண்டால்..... :o

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.