Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிகேடியர் பால்ராஜின் சமர்க்கள நாயகன் நூல் அறிமுக விழா

Featured Replies

தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ்  27.11.1965 ஆம் ஆண்டு பிறந்தவர் . முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத் தொடுவாயைச் சேர்ந்தவர்.

1984 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளபட்ட பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களில் பங்கேற்றவர். பல வெற்றித்தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர்.தாயகத்தில் ஆக்கிரமிப்புப் படையாக வந்த இந்தியப்படைக்கு சிம்மசொப்பனமாக செயற்பட்டவர்.

இவரது நினைவுகளை சுமந்து அவரது வீர வரலாறுகளோடு வெளியீடுப்  பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம் , தமிழீழ விடுதலை புலிகளால் வெளியீடப்பட்ட நூல்  "சமர்க்கள நாயகன்" அதனை தமிழகத்தில் இராவணன் பதிப்பம்  தற்போது வெளியீட்டு வருகிறது.

balraj.jpg

 

 

இதன் முதல்  நூல் வெளியீட்டு விழா புதுச்சேரியில் பெரியார் திடலில் 13.12.2014 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக அணைத்து மாணவர்கள் இளைஞர்கள் இயக்கங்கள் இணைந்து நடத்தும் பிரிகேடியர் பால்ராஜ் சமர்க்கள நாயகன் நூல் அறிமுக விழா 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை லயோலா கல்லூரி, பி.எட்.அரங்கத்தில் மதியம் 2 மணியளவில் நடை பெற உள்ளது. 

இவ் விழாவிற்கு அனைத்து தமிழ் உறவுகளையும் வருமாறு அழைக்கின்றனர். 

தொடர்புக்கு: 9600031771, 9884495527, 9940121655.

 

 

 

http://www.pathivu.com/news/39289/57//d,article_full.aspx

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நூலினை அல்லது இ-பிரதியை எங்கே பெறலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

இ-பிரதி என்பது ஆங்கில நூல்களுக்கு பயனுள்ளது ஒப்பீட்டளவில் குறைந்த தொகையினராகிய நாங்கள்  இ-பிரதியை எதிர்பார்ப்பது அந்த நூலுக்கு கருவிலே சாவு மணி அடிப்பது போன்றது .இந்த புத்தகம் ஏற்கனவே உங்கள் பகுதி சவுத் கரோவ் பகுதியில் விற்பனையாகின்றது அங்குள்ள விடியோ கடையில் வேண்டின நினைவு. பெயர் நினைவில் இல்லை குளோபல் ஆக்கும் .

எவராவது இப் புத்தகத்தினை தமிழகத்தில் இருந்தோ, அல்லது வேறு எங்கு இருந்து என்றாலும் வாங்கி எனக்கு அனுப்ப முடிந்தால் சொல்லவும்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா/ அமெரிக்காவில் எங்கு பெறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புத்தகத்தின் நோக்கம் பால்ராஜை பற்றி உலகுக்குச் சொல்வது. காசு பார்பதில்லை.

தவிர e பிரதி எல்லாம் ஓசி என்றில்லை.

குளோபலில் தேடிப்பார்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.