Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”தலைவர் பிரபாகரன் வந்து சொன்னாலும் கேட்கமாட்டோம்” - மாவை சேனாதிராஜா உறுதி

Featured Replies

நாங்கள் தான் உண்மையான விடுதலைப்புலிகள் அமைப்பு, நாங்கள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினோம். 2009ஆம் ஆண்டு வரைக்கும் எமது ஆணையின் கீழ்தான் செயல்பட்டீர்கள், 2009ஆம் ஆண்டின் பின்னர் நீங்கள் தனியாக முடிவெடுத்து செயல்பட்டு வருகிறீர்கள். அதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். இனிமேல் எங்கள் ஆணையின் கீழ்தான் நீங்கள் செயல்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு செயற்குழுவை நாம் நியமிப்போம். அந்த செயற்குழுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுக்கும். சம்பந்தனோ அல்லது இப்போது இருக்கும் நாடாளுமன்ற குழுவோ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய செயற்குழுவோ இனிமேல் எந்த முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுக்க முடியாது. முழுமையாக எங்கள் கட்டுப்பாட்டில் கீழ் தான் நீங்கள் செயல்பட வேண்டும். எதிர்வரும் தேர்தலில் நாங்கள் தயாரித்து தரும் வேட்பாளர் பட்டியலைத்தான் நீங்கள் தாக்கல் செய்ய வேண்டும். ( 2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பட்டியலை தயாரித்தார்கள்) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பதவி கஜேந்திரகுமாருக்கு வழங்கப்பட வேண்டும், அடுத்த பொதுத்தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் தலைமை வேட்பாளராக கஜேந்திரகுமாரின் பெயர் இடம்பெற வேண்டும், விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த அனந்தி உட்பட நாங்கள் தரும் பட்டியலையே வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து விடயங்களும் இனிமேல் எம்மை கேட்டுத்தான் செய்ய வேண்டும். முடிவுகளை நீங்கள் எடுக்க முடியாது. அறிக்கைகளை நீங்கள் விட முடியாது. இவ்வாறு பல நிபந்தனைகளை விதித்த அக்குழு தாங்கள் தயாரித்து வைத்திருந்த ஒப்பந்தம் ஒன்றையும் அங்கு சமூகமளித்திருந்த மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கருணாகரம் ஆகியோரிடம் கொடுத்து அதில் கையொப்பம் இடுமாறும் கோரினர். 

 

 

 
இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவ்வளவும் அந்த காமடி பீசுகள் கதைச்சு முடிக்கும் வரைக்கும் மாவை சிரிக்காமல் இருந்தாரா? நானென்றால் மூன்றாவது வசனத்திலயே விழுந்து விழுந்து சிரித்திருப்பன். :lol: 
மாவை என்ற படியால் கொஞ்சம் சாந்தமா பதிலளித்திருக்கிறார். சம்பந்தர் சுமந்திரன் போன்றோர் போயிருந்தால் முன்னாள் இன்னாள் கொள்ளை கூட்டத்தின்ட டங்குவார் கிழிஞ்சிருக்கும். 

 

 

 
இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவ்வளவும் அந்த காமடி பீசுகள் கதைச்சு முடிக்கும் வரைக்கும் மாவை சிரிக்காமல் இருந்தாரா? நானென்றால் மூன்றாவது வசனத்திலயே விழுந்து விழுந்து சிரித்திருப்பன். :lol:
மாவை என்ற படியால் கொஞ்சம் சாந்தமா பதிலளித்திருக்கிறார். சம்பந்தர் சுமந்திரன் போன்றோர் போயிருந்தால் முன்னாள் இன்னாள் கொள்ளை கூட்டத்தின்ட டங்குவார் கிழிஞ்சிருக்கும். 

 

தெனாலி அதற்கு முன்னால் சம்பந்தன் சுமந்திரன் மாவை இவர்களின் கோமணம் கூட மிஞ்சாது .... தேர்தல் வரட்டும் ......சரியான கோமாளிகள் இவர்களுக்கு யால்ரா அடிக்க கொஞ்ச பேர் ..

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் அனைத்துலகச் செயலகம் என்ற பேரில் ஒப்பந்தங்களை வெளிப்படையாகப் போடுவது தற்போததைய நிலையில் ச நல்ல விடயமாகத் தெரியவில்லை.ஆனால் தமிழர்களின் நலன் கருதி புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகளின் சார்பாக உதாரணமாக பிரித்தானியத் தமிழர் பேரவை,நாடுகடந்த அரசாங்கம் போன்ற அமைப்புகள் அவர்களை அழைத்து தமிழரர்களின் பிரதிநிதித்துவம் சிதறடிக்கப்படாத வகையில் வகையில் ததே கூட்டமைப்பைப் பதிவு செய்யும் படி கோரலாம். தற்போதைய நிலையில் மிரட்டல் அரசியலை சர்வதேச உலகம் ஏற்றுக் கொள்ளாது. ஆனால் தமிழரசுக்கட்சியின் சார்பாக இந்தக் கட்டுரையை எழுதியிருக்கும் கட்டுரையாளர் கஜேந்திரகுமார் தமிழ்க் காங்கிரஸ் சார்பாக நின்று வெற்றி பெற முடியாது என்பதால் ததே கூட்டமைப்பு சார்பாக தேர்தலில் நிற்பதற்கு ஆசைப்படுகிறார் என்பது போல இருக்கிறது. அதிலென்ன தவறு இருக்கிறது.சம்பந்தரோ,மாவையோ அல்லது தமிழரசுக்கட்சி சார்பாக தேர்தலில் நின்று தேர்தலில் வென்று காட்ட முடியுமா?அவர்கிலிலும் அந்தப் பெயரில் நின்று வெல்ல முடியாது என்ற பயத்தில்தானே கூட்டமைப்பைப் பிடித்துக் கொண்டு nதொங்குகின்றனர்.வெற்றிக்கு மட்டும் ததே கூட்டமைப்பு என்ற பெயர் வேணும். ஆனால் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யக் கூடாது என்றால் எப்படி? தவிரவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ததேகூட்டமைப்பின் ஆரம்ப கால உறுப்பினர்.மாவைக்கும்,சம்பந்தருக்கும் ததேகூட்டமைப்பின் மீது எவ்வளவு உரிமை உண்டோ அதே அளவு உரிமை கஜேந்திரகுமாருக்கும் உண்டு. தவிரவும் உறுதியான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட காரணத்தால் ததேகூட்டமைப்பின் தலைமையை எற்க அவருக்கு முழுத் தகுதி உண்டு.

நேரத்திற்கு நேரம் யால்ரா அடிக்கின்ற சம்பந்தன் மாவை மற்றும்  பின் வாசல் சுமந்திரன் எல்லாம் அநியாத்திக்கு கதைக்கும் போது ஏன் கஜேந்திரகுமார் அவர்கள் தலைமை வகிக்க கூடாது . அவரின் அப்பா ஒரு மாமனிதர் இது போதும் கூட்டமைப்பை வழிநடத்த . 
 
கொள்கையும் தனித்துவமும் இல்லாத கண்ட கண்ட இவர்கள் இருக்கலாம் , ஆனால் இளமையும் தனித்துவமுமான கொள்கையும் உள்ளவர்கள் இருக்க கூடாதோ ?

 

 

 
இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவ்வளவும் அந்த காமடி பீசுகள் கதைச்சு முடிக்கும் வரைக்கும் மாவை சிரிக்காமல் இருந்தாரா? நானென்றால் மூன்றாவது வசனத்திலயே விழுந்து விழுந்து சிரித்திருப்பன். :lol:
மாவை என்ற படியால் கொஞ்சம் சாந்தமா பதிலளித்திருக்கிறார். சம்பந்தர் சுமந்திரன் போன்றோர் போயிருந்தால் முன்னாள் இன்னாள் கொள்ளை கூட்டத்தின்ட டங்குவார் கிழிஞ்சிருக்கும். 

 

 

உந்த செய்தியில உள்ளமாதிரி அப்பிடியே சொல்லியிருப்பினமா? இந்த செய்தியும் கொஞ்சம் கூட்டி குறைச்ச செய்தியாத்தான் இருக்கு.

 

என்ன ஏதென்று தெரியாமல் மாவை சுவிஸ் வரைக்கும் போயிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கேன் பெரிசா அலட்டிக்கிறீங்க எல்லாரும். இது கடவுள் வந்து சொன்னால் குடிக்கிறதை நிற்பாட்டிறன் என்று குடிகாரன் சொன்னது போல இருக்குது. இதுக்குப் போயி. கடவுள் வந்து யாரையும் தண்டிக்கவும் போறதில்லை தூக்கி விடவும் போறதில்லை. யார் சமூகத்துக்கு நன்மை செய்யினமோ.. அதனை மனித சமூகம் நன்றி உணர்வோடு பார்க்கும். யார் கேடு செய்யினமோ.. அவையை தூக்கி எறியும். இதுக்கேன் கடவுள்.. தலைவர். அவையவை அவையவை செய்யுறதுக்குரிய பலனை அனுபவிப்பார்கள்.  மாவையாருக்கும் அது பொருந்தும். அவ்வளவே. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

Swiss-300x130.jpg

 

இக் கூட்டம் முக்கியமாக ரணிலால் ஏற்படுத்தப்பட்டது.

 

 

 

பேசுறன் பேசுற மாதிரி பேசினால் 
மாவை புலிகொடியே பிடித்து ஆட்டுவார் என்பது திண்ணம்.
 
பதிவு செய்வது 
செய்யாது இருப்பது 
 
இதில் என்ன நன்மை தீமை உண்டு ?
 
எனக்கு என்னமோ முன்னாள் செயட்பாட்டால்ர்கள் இவர்கள் பதிவு செய்துவிடுவார்களோ ...?
என்று தயங்கித்தான் ....
இப்படி பிளான் பண்ணி செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
மாவையை சரியாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 
 
நல்லதை செய் என்றால் 
முடியாது என்பார் என்பது 
எல்லோருக்கும் தெளிவாக தெரிந்தது. 
 
தமிழர்கள் கட்சி பிரிந்து அடிபட்டால் உங்களுக்கு 
ஆகா ஓகோ என்று மகிழ்ச்சியாக இருப்பதாக 
பல திரிகளில் உங்கள் மகிழ்ச்சியை காட்டி வருகிறீர்கள்.
 
முன்னாள் செயட்பாட்டாலர்கள் ....
மாவையுடன் பிரிந்தால் பாதிப்பு அதிகம் இல்லை.
திட்டமிட்டு உள்ளூரில் பிரிவை ஏற்படுத்தினால் ...?
பாதிப்பு நிச்சயம் உண்டு.
நீங்கள் வந்து விசில் அடித்து போவீர்கள்.
 
இவர்கள்(மாவை) உண்மையான மன நிலை அறிய 
ரோ இந்த முன்னால்களை வைத்து பேசியிருக்கலாம். 

 

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

நமது கருத்தை நாமே மேற்கோள் காட்டுவது ரிடையர் ஆவதற்குச் சமன்.

அதிலும் சிவப்பில் அடிக்கோடுபோடுவது.....:)

ஆனாலும் நீங்கள் சொல்வதில் நியாயம் இல்லாமலில்லை.

இந்த் வெறும்பயல்கள் ஒரு கூட்டத்தை கூட்டினால் ஆனந்த சங்கரிக்கு வரும் கூட்டம் கூட வராது,

மாவை வரவைக்கப் பட்டமைக்கு வேறு எதேனும் ஓர் அமைப்பு பின்னால் இருந்ததே காரணமாய் இருக்கல்லாம்.

கொஞ்ச காலமாக மாவையார் ஒரு மாதிரி தான் இருக்கார் . கிட்டத்தட்ட ரணிலுடன் கூட்டு என நினைகிறேன் .
அதுதான் இந்த ஆட்டம் . ஆனால் அவருக்கு ஒரு உண்மை தெரிந்தே ஆகவேண்டும் .
 
தேசிய தலைவர் மற்றும் போராளிகளை மதிக்காமல் அவர்களின் தியாகங்களை விலை பேசினால் என்ன ஆகும் என்பதை தேர்தல் அவருக்கு சொல்லும் ..
 
பார்ப்பம் எத்தனை நாளைக்கு இவர்களின் ஆட்டம் என்று ... தந்தை செல்வா , அதன் பின்னர் தமிழ் மக்களின் எல்லாமுமாக இருக்கின்றவர் தான் எங்கள் தேசியத்தலைவர் ... 
 
  • கருத்துக்கள உறவுகள்

மருது,

நமது கருத்தை நாமே மேற்கோள் காட்டுவது ரிடையர் ஆவதற்குச் சமன்.

அதிலும் சிவப்பில் அடிக்கோடுபோடுவது..... :)

ஆனாலும் நீங்கள் சொல்வதில் நியாயம் இல்லாமலில்லை.

இந்த் வெறும்பயல்கள் ஒரு கூட்டத்தை கூட்டினால் ஆனந்த சங்கரிக்கு வரும் கூட்டம் கூட வராது,

மாவை வரவைக்கப் பட்டமைக்கு வேறு எதேனும் ஓர் அமைப்பு பின்னால் இருந்ததே காரணமாய் இருக்கல்லாம்.

இதுதான் நடந்து என்பதை நான் நேரில் காணவில்லை 
இப்படி ஏதும் நடக்க சாத்தியம் இருக்கலாம் என்பதுதான் எனது சந்தேகம் 
 
எனது சந்தேகத்தை இன்னமும் வலுவாக்க மேலே இருக்கும் செய்தி உரித்தாகுகிறது 
அந்த செய்தியும் உண்மையாக இருக்க தேவை இல்லை.
 
மாவை நிதானமாகவும் இருக்க வேண்டும் எனபதே எனது சுட்டிக்காட்டல்.
இந்தியாவும் சிறிலங்காவும் இப்போதும் உளவுத்துறைக்கு பலகோடி ரூபாய்களை 
பட்ஜெட்டில் வைத்திருக்கிறார்கள் 
அவர்கள் இரவும் பகலும் நகர்ந்துகொண்டுதான் இருக்கிறர்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

மாவையின் தமிழரசுக் கட்சியின் இன்றைய நிலை இது தான்..

 

 

11049665_10152784448707944_7706646141058

 

11066011_10152784448502944_8475940782616

 

எங்கால பாய்வம் என்றது தான் அவைக்கு இருந்த..பிரச்சனை. எங்க அதிகம் ஆதாயமும்.. தங்கட வியாபாரத்துக்கு மதிப்பும் இருக்கோ.. அங்க பாய்ஞ்சிடுவினம்.. என்ற முடிவுக்கு வந்திருக்கினம் போல. மக்கள் உரிமை எல்லாம்.. சும்மா.. வாக்குச் சேர்க்க. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்
அடுத்த தேர்தல் வரும்போது ......
மதிலுக்கு கீழே ஒரு கிடங்கு கிண்டி விடத்தான் இருக்கு.
பூனை பொத்தெண்டு விழட்டும். 
  • கருத்துக்கள உறவுகள்

 

அடுத்த தேர்தல் வரும்போது ......
மதிலுக்கு கீழே ஒரு கிடங்கு கிண்டி விடத்தான் இருக்கு.
பூனை பொத்தெண்டு விழட்டும். 

 

 

கீழே பிடிப்பது கடினம்

பின்னால் இருப்பவர்கள்

வளர்ப்பர்கள் பல குழிகளை ஏற்கனவே பறித்து வைத்துள்ளனர் 

தம்  சொல்லபடி நடக்காது விட்டால் தள்ளிவிட...

 

நீங்கள்  இன்னொன்றை  முயற்ச்சிக்கலாம்

அப்படியே மேலே தூக்கிவிடலாம்.. :o

(நான் சொன்னதாக யாரிடமும் சொல்லாதீர்கள். ஏற்கனவே தளும்புகள் அதிகம் :D )

தமிழரசு கட்சி இப்ப ஒன்றுக்கும் உதவாத சிலரிடம் சிக்கிவிட்டது ..... அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.