Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை உடைக்க ரணில் வியூகம்? அதிர்கின்றது வடக்கு!! -Video in

Featured Replies

muhamad_01.pngவட-கிழக்கு தமிழர் தாயகத்தில் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களை முடக்க ரணில் அரசு சதி முயற்சிகளை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது. அத்துடன் அம்முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியினையும் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்:-

இலங்கைப் புலனாய்வுக் கட்டமைப்பின் அதிகாரி மட்டத்தில் முகமட் எனும் பேரில் நபர் ஒருவர் தற்போது களமிறக்கப்பட்டுள்ளார். அந்நபர் முன்னணி செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து மூளைச்சலவை செய்துவருவதாக தெரியவருகின்றது. எனினும் அவர் உண்மைப் பெயர் மற்றும் பதவி நிலை பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை.

குறிப்பிடத்தக்க சில மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளென இலக்கு வைத்துள்ள அந்நபர் அதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அண்மையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலர் தனிப்பட்ட ரீதியில் இரகசியமாக புதிய ஆளுநர் பாளிகக்காரவை சந்தித்துள்ளதாகவும் அதற்கும் குறித்த முகமட் எனும் நபரே ஏற்பாடுகளை செய்து வழங்கியுள்ளதும் அம்பலமாகியுள்ளது. அத்துடன் நாடாளுமன்றத்தில் வைத்து சில அமைச்சர்களை சந்திக்கவும் ஏற்பாடுகளை செய்து வழங்கியமையும் அம்பலமாகியுள்ளது.

மக்களிற்கான உதவி திட்டங்களை பெற்றுத்தருவதாக கூறியே இவ்வாறு அரச உயர்மட்டங்களுடன் உறவை பேண வழிவகுக்கப்பட்டதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

இத்தகைய நெருக்கமான தொடர்பாடல்களையடுத்து காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட மக்களது பிரச்சினைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்துவதை இந்நபர் தடுத்துவருவதாகவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தரப்புக்களையும் இத்தகைய தரப்புக்களினை கொண்டு தடுத்துவருவதாகவும் தெரியவருகின்றது.

குறிப்பாக அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் வட-கிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கணிசமான வாக்குகளை திரட்டுமென புலனாய்வு அறிக்கைகள் அரசிற்கு அறிக்கையிட்டுள்ளன.

கூட்டமைப்பின் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது வாக்குவங்கியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இந்நிலையில் கடும் போக்கு அரசியல் நிலைப்பாட்டை கொண்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அபரிதமான வளர்ச்சி இலங்கை அரசிற்கு அப்பால் இந்தியாவையும் கவனத்தை செலுத்த வைத்துள்ளது.

இந்நிலையில் கூட்டமைப்பிலுள்ள கடும் போக்கு செயற்பாட்டாளர்களை கைக்குள் போட்டு அதன் தலைமையினை தக்க வைக்கவே இம்முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளென தனது இரகசிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நபர் யாழில் கொக்குவிலிலுள்ள படைத்தளமொன்றில் தங்கியுள்ளதுடன் தனது சொகுசு வாகனத்தில் திரிந்தே செயற்பட்டுவருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நபரது நடவடிக்கைகள் தமிழ் தேசிய நிலைப்பாடுடைய ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியினை தோற்றுவித்துள்ளது.

http://www.pathivu.com/news/39340/57//d,article_full.aspx

 

Edited by sudaravan

  • கருத்துக்கள உறவுகள்
தமிழகத்தில்தான் தமிழனோடு தெலுங்கன், மலையாளி, கன்னடன் என்று கலந்திருந்து தமிழனுக்குக் குழிபறிக்கிறார்கள் !!.  :(
 
ஈழத் தமிழனோடு அப்படி எவர் கலந்திருந்து தமிழனுக்குக் குழிபறிக்கிறார்கள்.....??  :o
 
  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழகத்தில்தான் தமிழனோடு தெலுங்கன், மலையாளி, கன்னடன் என்று கலந்திருந்து தமிழனுக்குக் குழிபறிக்கிறார்கள் !!.  :(
 
ஈழத் தமிழனோடு அப்படி எவர் கலந்திருந்து தமிழனுக்குக் குழிபறிக்கிறார்கள்.....??  :o

 

 

ஒட்டுக் குழுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வரதராஜபெருமாள் இந்திய துணை தூதரகத்தில் ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறாராம்.

சொந்த புத்தி இல்லாவிட்டால் சீரழியவேண்டியத்துதான் .

 

மூளை சலவை செய்ய அது முதல் இருக்கவேண்டும் . :icon_mrgreen:

  • தொடங்கியவர்

முகமட்டிடம் பலியான முக்கியஸ்தர்கள்!!

வட- கிழக்கு தமிழர் தாயகத்தினில் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களை முடக்க ரணில் அரசு சதி ஆரம்பித்திருப்பதாக கூறப்படும் சதி முயற்சிகளில் வடமாகாணசபையின் அமைச்சர்கள் மற்றும் பேரவை முக்கியஸ்தர் ஆகியோர் பலியாகியிருக்கலாமென்ற சந்தேகம் வலுப்பெறத்தொடங்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்:-

இலங்கை புலனாய்வு கட்டமைப்பின் அதிகாரி மட்டத்தில் முகமட் எனும் பேரில் நபர் ஒருவர் தற்போது களமிறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பதிவு ஏற்கனவே அம்பலப்படுத்தல்களை செய்திருந்தது. அந்நபர் முன்னணி செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து மூளைச்சலவை செய்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர் உண்மைப் பெயர் மற்றும் பதவி நிலை பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்காத போதும் சர்ச்சைக்குரிய சுன்னாகம் குடிநீர் விவகாரத்துடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் பேரவை முக்கியஸ்தர் ஆகியோருடன் அவர் தொடர்புபட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் பற்றியும் தெரியவருகின்றது. அவர்கள் தொடர்பான புகைப்பட ஆதாரங்களும் பதிவு வசம் சிக்கியுள்ளது.

எனினும் அவர்கள் எத்தகைய தொடர்பாடல்களை கொண்டிருந்தனர் என்பது பற்றி தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை.

அண்மையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலர் தனிப்பட்ட ரீதியில் இரகசியமாக புதிய ஆளுநர் பாளிகக்காரவை சந்தித்துள்ளதுடன் யாழிலுள்ள இந்திய துணைதூதரக அதிகாரிகளையும் சந்தித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

இதனிடையே குறித்த புலனாய்வு அதிகாரி பற்றிய தகவல்கள் அம்பலமானதையடுத்து மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளென தொடர்பு கொண்டு நேரடியான சந்திப்புக்களில் தான் ஈடுபடப்போவதில்லையென அறிவித்துள்ளார்.

தனது இரகசிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் கொக்குவிலிலுள்ள படைத்தளமொன்றினில் தங்கியிருந்த குறித்த நபர் இப்போது அதனை மாற்றியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

 

http://www.pathivu.com/news/39371/57//d,article_full.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.