Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெதமுலன ராஜபக்ஸக்களும் பரிவாரங்களும் சிறுபான்மை இனங்களை முற்றாக நிராகரித்தனர்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மெதமுலன ராஜபக்ஸக்களும் பரிவாரங்களும் சிறுபான்மை இனங்களை முற்றாக நிராகரித்தனர்:
23 ஏப்ரல் 2015
lg-share-en.gif
 

"சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட வாளேந்திய சிங்கம் காணப்படும் கொடிகளை கைகளில் ஏந்தினார்கள்"

 

 

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்டு தனியே வாளேந்திய சிங்கம் காணப்படும் கொடிகளை கைகளில் ஏந்தி இருந்தார்கள்

இலங்கை சுதந்திரம் அடைந்ததும்  இலங்கைக்கு நாட்டுக்கு என தேசிய கொடி  தேவை ஏற்பட்டது. அதுவரை பிரித்தானிய ஒன்றியக் கொடியே இலங்கை கொடியாக இருந்து வந்தது. 

 

இலங்கை சுதந்திரமடைந்த வேளை  பிரதமராக இருந்த டி. எஸ். சேனாநாயக்க இலங்கையின் கடைசி இராச்சியமான கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் சிறி விக்கிரம ராஜசிங்கனின் சிவப்பு நிறப் பிண்ணணியில் மஞ்சள்நிற போர் வாளேந்திய சிங்கக்கொடியானது சுதந்திர இலங்கையை குறிக்கும் சிறந்த கொடியாக அமையும் என தேர்வு செய்தார். 

எனினும் அக் கொடியில் தங்கள் இனத்துவங்களை பிரதிபலிக்கும் அடையாளங்கள் ஏற்படுத்த வேண்டும் என தமிழ்இ முஸ்லிம் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.

 

சில நாட்களின் பின் தேசிய கொடியில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கஇ ஜீ. ஜீ. பொன்னம்பலம்இ ஜே.எல். கொத்தலாவலஇ டி.பி. ஜாயாஇ எல்.ஏ. ராஜபக்சஇ எஸ். நடேசன்இ ஜே. ஆர். ஜயவர்தன என்போர் அடங்கிய நாடாளுமன்றக்குழு ஏற்படுத்தப்பட்டது.

இக்குழுவின் பரிந்துரைக்கமைய தேசிய கொடியில் சமஅளவு அகலம் கொண்ட மஞ்சள்இ பச்சை நிறமான இரண்டு நிலைகுத்தான பட்டைகள் உருவாக்கப்பட்டது. இதில் பச்சை முஸ்லிம் இனத்தையும்இ மஞ்சள் தமிழரையும் குறிக்கும்.

 

அத்துடன் பௌத்த மதத்தைக் குறிக்கும் வகையில் நான்கு அரசிலைகள் கொடியின் நான்கு முலைகளிலும் இணைக்கப்பட்டது. 

அத்துடன் சிங்கத்துடன் கூடிய கருஞ் சிவப்பு நிறப் பகுதி சிங்களவர்களையும்குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது. இக்கொடியே தற்போது இலங்கையில் பயன்பாட்டில் உள்ளது.

 

இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறுபான்மை இன மக்களை குறிக்கும் மஞ்சள்இ பச்சை ஆகிய நிறங்கள் அல்லாது தனியே பௌத்த மதத்தையும் சிங்கள மக்களையும் குறிக்கும் கருஞ் சிவப்பு நிற கலரில் நான்கு மூலைகளுக்கும் அரச இலைகள் மற்றும் வாளேந்திய சிங்கம் கொண்ட கொடிகளையே ஏந்தி இருந்தார்கள்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118967/language/ta-IN/article.aspx

அவங்க தேசிய கொடியைதான் கொண்டு வந்தார்கள் என்று எப்படி சொல்ல முடியும்?

அதுதான் பொடு பல சேனா வின் கொடி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறுபான்மை இன மக்களை குறிக்கும் மஞ்சள்இ பச்சை ஆகிய நிறங்கள் அல்லாது தனியே பௌத்த மதத்தையும் சிங்கள மக்களையும் குறிக்கும் கருஞ் சிவப்பு நிற கலரில் நான்கு மூலைகளுக்கும் அரச இலைகள் மற்றும் வாளேந்திய சிங்கம் கொண்ட கொடிகளையே ஏந்தி இருந்தார்கள்.

 

 

இது சரியென வாதிக்கவும் எம்மில் பலர் இருக்கின்றனர்.  :D

அவர்கள் இலங்கை சிங்களவருக்கு மட்டும் என்று போராடுகின்றார்கள் ஆனால் எங்கட சம்பந்தன் சுமந்திரன் எனற கொஞ்ச வெட்டி அரசியல வாதிகள் ஒன்றே இலங்கை ஒன்றே வேதம் என்கிறார்கள் ...
 
தமிழனின் தனி வீர வரலாற்றினை மாற்றுவதற்கு எந்த கொம்பனுக்கும் அதிகாரம் இல்லை . ஏனெனில் எங்களுடைய அம்மா அப்பாவினை மற்றவன் சொல்லுகின்றான் என்பதற்காக இல்லை என்று கூற முடியுமா ?  
எங்களின் பிறப்பிக்கு எவ்வளவு அர்த்தம் எங்கள் அம்மா அப்பா . அதுமாதிரிதான் எங்கள் தேசமும் ...
 
சம்பந்தன் சுமந்திரன் சொல்லுகின்றார்கள் என்பற்காக எப்படி அதனை சரி என்பது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.