Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனுடன் இணைந்து மஹிந்த என்னை தோற்கடித்தார் – ரணில்

Featured Replies

mahintha%20&%20ranil_CI.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் இணைந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தம்மை 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தோற்கடித்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சியில் நடைபெற்ற சத்தியாக்கிரகம் என்ற செவ்வி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2005ம் ஆண்டு பிரபாகரனுடன் இணைந்து கொண்ட மஹிந்த அதன் பின்னர் குமரன் பத்மநாதனுடன் இணைந்து கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு நாட்டை பிளவுபடுத்த நினைத்திருந்தால் ஆட்சி; அதிகாரத்தை தாம் பிரபாகரனுக்கு வழங்கியிருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மன்னர் துட்டகமுனுவை லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்துச் சென்றதனைப் போன்றே சிலர் சத்தமிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் அரசாட்சி செய்வது நீதியோகும் என்பதனை சிலர் மறந்து விட்டு செயற்படுகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு கோரி லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு ஏன் வந்து வாக்கு மூலமொன்றை அளித்திருக்க முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கம் 100 நாள் திட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி சொந்த சொத்து என சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும், கட்சி தோல்வியடைந்த போது அதனை காத்து வந்ததாகவும், பலர் இணைந்தே தீர்மானங்கள் எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118984/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ரணில்.. நீங்கள் இருக்கும் கதிரை, சொற்ப காலத்துக்கு மட்டுமே.... என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அதற்கிடையில், தமிழ்மக்களுக்கு... உருப்படியான வேலை, செய்யாவிட்டலும்.... ராங்கி கதைகளை நிற்பாட்ட வேண்டும்.
அதிர்ஷ்டம்... ஒரு முறை தான், கதவை தட்டும். உங்களுக்கு... அது கிடைத்தது...
அதனை பயன் படுத்த முடியாத, உங்களுக்கு... வாழ்நாளில்... இனி அதிர்ஷ்டம் வரப் போவதில்லை.
 

வார்த்தைகளை விட்டு வாயை புண்ணாக்கவேண்டாம்  .

  • கருத்துக்கள உறவுகள்
ரணில் பகிடிக்கு சொன்னார் 
                       -----சந்திரிகா-----
  • கருத்துக்கள உறவுகள்
'யு.என். பி' கட்சியின் சின்னம் யானை. அதன் தலைவர் ரணில்.  யானை தன்தலையில் தானே மண்ணை அள்ளிப்போடும். ரணிலும் அதைத்தானே செய்தார், செய்கிறார். பின்பு ஏன் புலம்பவேண்டும்.  :o
 
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்கள் போரின் போதும் போரின் பின்பும் சந்தோசமாக தான் இருக்கிறார்கள் தமிழ் மக்களுடன் ஒப்பிடும் போது. பிரபாகரனின் மண்ணை எடுத்த சிங்கள மக்களை தடுத்தவர்கள் எல்லாம் ஊடகங்களில் கருத்து சொல்ல லாயக்கானவர்களா? பொதுவாக தமிழ் மக்கள் மகிந்த கள்ளன் ரனில் நரி என்பதில் உறுதியாக உள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.