Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நாட்டையும் – தமிழ் ஈழத்தையும் இன்று ஆள்வது யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டையும் – தமிழ் ஈழத்தையும் இன்று ஆள்வது யார்?

 

நாம் நினைப்பது போல இன்று தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆளவில்லை. தமிழர்கள் அங்கு சுதந்திரமாக வாழவும் இல்லை. தமிழ் நாட்டில் தமிழர்கள் இன்று ஒட்டு போடும் அடிமைகளாக வாழ்கிறார்கள். இதற்கான அடித்தளம் நாயக்கர்கள் காலத்தில் போடப்பட்டிருக்கிறது. சுருக்கமாக காண்போம்.

 

அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆக்கிரமித்துக்கொண்ட இசுலாமியர்களை விரட்டுகிறேன் என்ற சாக்கில் மதுரைக்கு படையெடுத்து வந்த குமார கம்பணன் என்ற தெலுங்கு வடுகன், முசுலிம்களை விரட்டிவிட்டு தமிழகத்தை தானே கைப்பற்றி தனது பிரதானிகளைக் கொண்டு ஆளத்தொடங்கினான். விசயநகர அரசை நிறுவிய அரிகரர், புக்கர் இருவரில் புக்கரின் புதல்வன்தான் இந்த குமார கம்பணன்.

 

அதன்பிறகு நூற்றாண்டுகள் கழித்து விசயநகர மன்னனாயிருந்த கிருட்டினதேவராயரின் மதுரை பிரதானியாக இருந்த நாகம நாயக்கன் கலகம் செய்யத் தொடங்கினான், காரணம் கிருட்டினதேவராயன் பலிசா வகுப்பைச் சேர்ந்தவன். கொல்லவார்கள் நிறுவிய விசயநகர பேரரசை வஞ்சகமாக கவர்ந்துக் கொண்டவர்கள் பலிசாக்கள் என்பதால் கம்மவார் வகுப்பைச் சேர்ந்த நாகம நாயக்கன் இந்த கலகத்தை தொடங்கினான். கிருட்டினதேவராயன் ஒரு சமாதானத்திற்கு உட்பட்டு, நாகம நாயக்கன் மகனான விசுவநாத நாயக்கன் மதுரையை தலை நகராக்கிக்கொண்டு தமிழகத்தை ஆளட்டும் என விசுவநாத நாயக்கனை மதுரை நாயக்கனாக்கினான். கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தான் கிருட்டினதேவராயன். தமிழகம் கடைத் தேங்காய் ஆனது.

 

மதுரையைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தை ஆண்ட முதல் தெலுங்கு மன்னனான இந்த விசுவநாத நாயக்கனின் பேரன் குமார கிருட்டினப்ப நாயக்கன் இலங்கைக்கு படையெடுத்துச் சென்று பாம்பு கடித்து இறந்து விடுகிறான். அவருடைய மைத்துனன் கவரா நாய்டு சாதியைச் சேர்ந்த விசய கோபால நாயக்கர் கவரை இனத்தவரையும் சில்லவாருகளையும் படை சேர்த்துக்கொண்டு இலங்கை சென்று குமார கிருட்டினப்பா நாயக்கன் விட்டுச்சென்ற படையையும் இணைத்துக்கொண்டு இலங்கையின் ஒரு பகுதியை கைப்பற்றிக் கொள்கிறான். இதுவே பின்னாளில் கண்டி அரசாக விரிவாக்கம் பெறுகிறது. ஆந்திராவிலிருந்து இலட்சம் இலட்சமாய் தமிழகம் வந்தேறிய தெலுங்கு வடுகர்கள் தமிழகத்திலிருந்து பல்லாயிரக்கணக்கில் இலங்கைக்கு குடியேறி விசய கோபால நாயக்கர் அரசை, அதாவது கண்டி அரசை வலுப்படுத்துகிறார்கள்.

 

முதலியார்கள் என்று இலங்கையில் அழைக்கப்பட்ட, தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட வெள்ளாளர்களிடமிருந்து வளமான விலைநிலங்களைக் கைப்பற்றிக் கொண்ட இந்த முரட்டு நாயக்கர்கள், அந்த முதலியார்களை மட்டுமன்றி நாடார் சாதியைச் சார்ந்த தமிழர்களையும் அங்கிருந்து இலங்கையின் நாலாதிசைக்கும் விரட்டிவிட்டார்கள்.

 

கண்டி நாயக்கர்கள் மதுரை, தஞ்சை நாயக்கர்களின் உறவினர்கள் என்பதால் அவர்களிடமிருந்து தேவைப்படும் போதெல்லாம் இவர்கள் படையுதவி பெற்று வந்தார்கள். மேலும் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு பல்லாயிரக்கணக்கில் கம்மா நாயடுகளும், கவரா நாயடுகளும் குடியேறி அவர்கள் இலங்கையில் ஒரு வலுத்த சாதியினர் ஆகிப்போனார்கள்.

 

கண்டி அரசர்கள் மதுரையில் மீனாட்சி ராணியோடு நாயக்கர் வம்சம் முடிவுக்கு வரும் வரை மதுரையிலிருந்தே பெண் கொண்டார்கள். மதுரை நாயக்க வம்சம் முடிந்த பின்னாலும் ஏனைய தெலுங்கு பாளையக்காரர்கள் குடும்பங்களிலயே இவர்கள் மணவினைகளைத் தொடந்தார்கள்.

 

இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் இதுதான். மதுரையில் மீனாட்சி ராணியோடு நாயக்கர் வம்ச ஆட்சி முடிவு பெறுகிறது. அப்பொழுது கண்டியை ஆண்ட தெலுங்கு மன்னன், வீர நரேந்திர சிங்க நாயக்கன் இவன் காலம் வரையில் கண்டி நாயக்கர்கள் இந்து(வைணவ) மதத்தைப் பின்பற்றி வந்தார்கள். யாழ்பாண அரசை ஆண்ட தமிழ் மன்னர்களும் (சைவ) இந்துக்கள். கோட்டை அரசை ஆண்ட சிங்களர்கள் மட்டுமே பௌத்தர்கள்.

யாழ்ப்பாண அரசு – தமிழர்கள் – சைவர்கள்

கண்டி அரசு -தெலுங்கர்கள்  - வைணவர்கள்

கோட்டைஅரசு -சிங்களர்கள் - பௌத்தர்கள்

 

இந்து என்ற பெயரில் இன்று வைணவம் கிட்டத்தட்ட சைவைத்தை விழுங்கிவிட்டது. இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் விழிக்கிறார்கள் தமிழர்கள். தமிழ் நாட்டிலும், தமிழீழத்திலும் நிலமை இதுதான். கொஞ்சம் எஞ்சியிருக்கும் சைவத்தையும் அதன் அறிவுக் கூறுகளையும், தமிழர்களின் அறிவுச் செல்வத்தையும் தன்னதாக பறைசாற்றிக் கொள்கிறது இந்துத்துவா என்ற ஆரியம். இந்திய இறையாண்மை என்று கூவிக்கொண்டு ஆரியத்தை வன்முறையாக மக்கள் மேல் திணிக்கிறது இந்த ஆரிய வடுகக் கூட்டம். 

 

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் இலங்கையிலிருந்த கண்டி அரச குடும்பத்தினரும் அவர்களது குடிகளுமான தெலுங்கர்களும், தங்கள் இருப்பையும், பிழைப்பையும் இலங்கையில் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு தந்திரமான முடிவினை எடுக்கிறார்கள். தெலுங்கு நாயக்கர் ஆட்சி தமிழகத்தில் முடிந்துவிட்டதால் இனி இலங்கையில் ஏதேனும் யுத்தம் என்றால் முன்னைப்போல மதுரையில் இருந்து தெலுங்கர் படை கண்டி தெலுங்கு மன்னருக்கு உதவிக்கு வராது என்பதால், இலங்கையில் இருக்கும் சிறுபான்மைத் தமிழர்களை விட பெரும்பான்மை இனமான சிங்களரோடு இணக்கமாகப் போவதுதான் பிழைக்கும் வழி, என முடிவு செய்து இந்த தெலுங்கர்கள் அனைவரும் புத்த மதத்தை தழுவிக்கொண்டார்கள்.

 

தமிழகத்தில் இந்துமதத்தைக் காப்பாற்ற வந்ததாக பீற்றிக்கொண்ட இந்த தெலுங்கு வடுகர்களான கம்மா நாயுடுகளும் ,கவரா நாயுடுகளும் இலங்கையிலும் தமிழர்களோடு அல்லவா இணக்கமாக போயிருக்கவேண்டும்.? மாறாக பௌத்தத்தைத் தழுவிக்கொண்டு சிங்கள மொழியைத் தங்கள் தாய்மொழியாக வரித்துக்கொண்டு,  இலங்கையிலும் சிங்களர்களைப் போல இன்றுவரை நடித்துக்கொண்டு இருகிறார்கள்.

 

ஆரம்பத்தில் இந்துக்கோவில்களை இடிக்காமல் இருந்த இந்த சிறிலங்கா மணவாடுகள் பின்னாளில் தங்களைச் சிங்களர்கள் என்று உண்மைச் சிங்களர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்து கோவில்களை இடிப்பதிலும் , இந்துக்களான தமிழர்களை இனப்படுகொலை செய்வதிலும் இந்த சிறிலங்கா மணவாடுகள்தான் சிங்களர்களுக்கும் முன்னோடிகளாக இருந்திருகிறார்கள்.

கோவிகாமாவில் இருந்து படிப்படியாக பௌத்தத்தைத் தெளிவாகக் சதி செய்து கைப்பற்றி உண்மை பௌத்தர்களையும், சிங்களர்களையும் அரசில் பங்குகொள்ள முடியாதவாறு செய்திருக்கின்றனர் இவர்கள். பௌத்த தேரர்கள் இவர்களே. சிங்கள ஆட்சியில் இருப்பவர்களும் இவர்களே. அதாவது இந்த அடாவடித் தெலுங்கர்கள்.

 

இந்துக்களுக்காகவேதான் தாங்கள் உயிர் வாழ்கிறோம் என்று சொல்லிக் கொண்டுத்திரியும் ஆரிய RSS, பஜ்ரங்க்தள், சிவசேனா..... இன்னும் பல........ஈழத்தில் இந்துக் கோயில்கள் இடிக்கப்படும்போது மவுனமாயிருக்கும். இந்து வீரம் பேசும் தொகாடியா, ஈழத்தில் இந்துக்கள் கொல்லப்படும்போது தனது வீர வசனங்களை அடக்கி தூங்க வைத்து விடுவார்.  ஆனால் ஈழத்தில் ராமருக்காக கோயில் கட்டினால் முதல் ஆளாக வருவார் தொகாடியாவும் அவரின் நண்பருமான மாண்புமிகு நரேந்திரபாய் மோடி, அமித் சாவும். ஆகத் தேவைப்படும்போது மட்டும் இவர்களுக்கு இந்து தேவைப்படும். அதாவது ஆரியத்தின் அடிப்படை இதுதான். சரியான சுயநலவாதிகள். தங்களுக்காகவே மக்கள் என்னும் இழிகுணம் படைத்தோர். இவர்களின் அதாவது ஆரியத்தின் கையில் இன்று இந்தியா இருக்கிறது. ஆரியமும், திராவிடமும் சேர்ந்து தமிழனை இன்று அடிமைகளாக வைத்துள்ளனர். இதற்குத் தடையாக கொஞ்சம் சுயமரியாதையோடு நிற்கும் தமிழினத்தை அழிப்பதையே இந்த ஆரியம் இன்று தனது முதல் வேலையாகச் செய்கிறது. இதுதான் இலங்கைக்கு இந்தியாவின் உதவிக்கு அடித்தளம்.

 

கண்டி அரசர்களாக இந்த தெலுங்கர்கள் இருந்த போது புத்தரின் புனிதப்பல்லை கைப்பற்றித் தங்கள் பாதுகாப்பில் வைத்துக்கொண்டார்கள். புத்தரின் புனிதப்பல் யாரிடம் இருக்கிறதோ அவர்களிடமே இலங்கையின் ஆட்சி உரிமை இருக்க வேண்டும் என்ற இலங்கை பௌத்த மரபை ஒட்டி அவ்வாறு செய்தார்கள். காரியவாதிகளான இந்த சிறிலங்கா மனவாடுகள் தங்கள் இனத்தாரில் பெருவாரியானோரை புத்தபிக்குகளாக்கி புத்த மத தலைமையையும் கைப்பற்றிக்கொண்டார்கள். சிங்கள இனவாதத்தை பின்னுக்குத் தள்ளி, பௌத்த மதவாதத்தை முன்னுக்கு கொண்டுவந்து, தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள், என அனைத்தையும் இடித்துத் தள்ளுகிறார்கள். இனத்தால் தெலுங்கரான, மதத்தால் பௌத்தத்தை தழுவிக்கொண்ட இந்த சிறீலங்கா மணவாடுகள் இலங்கையில் பௌத்த மத வாதத்தை முன்னுக்குக் கொண்டுவந்ததன் வாயிலாக இலங்கையின் அரசியலை முழுவதுமாக இன்று தங்கள் பிடிக்குள் வைத்துள்ளார்கள்.

 

இன்று இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளையும், சனதா விமுக்தி பெரமுனா என்ற தீவிரவாத கட்சியையும் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது இந்த சிறீலங்கா மணவாடுகளே.

 

சேன நாயக்க, பண்டார நாயக்கா, சந்திரிகா, குமாரதுங்கா, ராசபக்சே சகோதரர்கள் இவர்கள் அனைவரும் அன்று மதுரையிலிருந்து இலங்கை சென்ற அரவா மணவாடுகளின் வாரிசுகள்! இன்றைய சிறீலங்கா மணவாடுகள்!

வைணவர்களான இவர்களின் விருப்ப தெய்வம் திருப்பதி ஏழுமலையான். அதுவும் தமிழர்களை ஏய்த்து கைப்பற்றிக் கொண்டதமிழர்களின் திருப்பதி முருகன் கோவில். இன்று தமிழர்கள் தமிழ் நாட்டு அரசியலில் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருப்பவர்கள் இந்தக் கும்பல். இவர்கள் தமிழர்களைத் திராவிடர்கள் ஆக்கி தமிழன்  செய்திட்டு  போன அத்தனையையும் தாங்கள் செய்ததாக தங்கள்  பெயரை எழுதி  வைத்து போகிற    வேலையத்தான்  இன்றுவரை  செய்கிறார்கள்  இந்த திராவிடர்கள்.

 

தமிழ்நாட்டில் தமிழர்கள் செய்யும் நல்லது எதனையும் தெளிவாக இருட்டடிப்புச் செய்பவர்கள் இந்த திராவிடர்கள். பெரியார் எனும் ஈ.வெ. ராமசாமி பலிஜா நாயுடு பெரிய சமூகச் சீர்திருத்தவாதியாகச் சித்தரிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் தமிழர்களை ஏமாற்றி ஈழத்தில் உள்ள தமிழர்களை தன் உள்குத்து வேலையினால் ஏமாற்றியவர் இவர். தமிழ்நாட்டில் வைகுண்டர் செய்ததைவிடப் பெரியதாக இவர் எதனையும் செய்யவில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை எனக் கூறி தன் சாதி சனங்களுக்கே அத்தனை சலுகைகளையும் இன்று வரை வழங்குபவர்கள் இந்த திராவிடர்கள். உண்மைத் தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே அடிமைகளாக வாழ்கிறார்கள்.  

 

திராவிட இயக்கத்தில் இருக்கும் அத்தனை தமிழர்களும் திராவிட இயக்கத்தை விட்டு தமிழ் தேசியத்தில் இணைந்து, தமிழர்களுக்காக பணியாற்றினால் மட்டுமே தமிழர்கள் வளம் பெறுவர். இந்துக் கோவில்களில் தட்டு ஏந்தி நிற்கும் ஆரியர்களும் இன்று அரசாளுமைக்கு வந்திருக்கிறார்கள். ஆரியர்களும் திராவிடர்களும் ஒன்று சேர்ந்து கொண்டுதான் இன்று தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். வெளியே சண்டையிடுவது போல காட்சி, உள்ளே அத்தனை உள்குத்து வேலைகளும் தெளிவாக நடைபெறுகிறது. திராவிட-ஆரிய இந்தக் கூட்டு கலைக்கப்பட வேண்டும்.

 

தமிழ்நாட்டில் தமிழர்களாக வேடம், இலங்கையில் சிங்களவர்களாக வேடம். தமிழர்களுக்கு உதவுவதாகச் சொல்லிக் கொண்டு காட்டிக் கொடுக்கும் அரசியல் வேலையை கனகச்சிதமாக செயலாற்றி வருகிறார்கள். மீத்தேன் எதிர்ப்பாகட்டும், நியுட்ரினோ எதிர்ப்பாகட்டும், மேகதாது எதிர்ப்பாகட்டும் திராவிடர்கள் முன்னின்று (எடு: வைகோ) தமிழனை பின்னிறுத்திவிடுகிறார்கள்.

இவர்களை எதிர்த்து தமிழர்கள் இன்றுவரை எதனையும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம். தாம் அடிமைகளாக வாழ்கிறோம் என்பது தெரியாமலே இருப்பதுதான் தமிழர்களின் மிகப்பெரிய சோகம். இதன் காரணம் அரசு தலைமை அவர்கள் கையில். ஆக தெலுங்கர்களாக, வடுகர்களாக, ஆரியர்களாக, ஆரியவடுகமாக, பிராமணியமாக, வடுகஆரியபிராமணியமாக பல உருவங்களில் தென்படும் இவர்கள் அனைவரும் இணையும் ஒற்றைப் புள்ளி தமிழர் எதிர்ப்பு. அத்தனைக்கும் இவர்கள் அத்தனை பேருக்கும் நல்லது மட்டுமே செய்தவர்கள் தமிழர்கள்.

 

பந்து போடுபவனும் தெலுங்கன். அடிப்பவனும் தெலுங்கன். கோட்டிற்கு வெளியே நின்று அடித்த பந்தை பொறுக்கிப் போட மட்டும் தமிழன்! தமிழக அரசியலை தமிழன் எட்ட நின்று பார்க்கலாம்! ரசிக்கலாம்! பதறலாம்! பரவசப்படலாம்! ஆனால் பங்கேற்கக்கூடாது! முடியாது!.

 

அரச மரபை உலகத்திற்கே வழங்கிய தமிழினம் ஏய்க்கப்பட்டு இன்று நிற்கிறது. அரச மரபைத் தெரியாத நாய்களைக் கூட்டிக்கொண்டு வேட்டையாடித் திரிந்த வடுக இனம் இன்று தமிழர்களாகிய நம்மை வேட்டையாடிக்கொண்டிருக்கிறது. அரச மரபு வெல்ல தமிழர்கள் தாம் வெல்லவேண்டியவைகளை முன்வைத்து ஆளுமை அரசியலுக்கு வர வேண்டும். திராவிடத்தையும், ஆரியத்தையும், வடுகத்தையும், வடுகபிராமணியத்தையும் விட்டு தமிழர்கள் தாம் தமிழர்களாக வாழ்ந்தாலே போதும்.

அந்த நாள் எந்நாளோ? விரைவில் வரும் எனும் நம்பிக்கை எனக்குண்டு.

 

___---ooo000OOO000ooo---____

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை பகுதிகளில் தமிழும் பேசுகிறோம், தெலுகும் சிறிது மாட்டாடுறோம்.. நாங்கள் தமிழர்களா..? தெலுங்கர்களா? :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஆக்கம்.

கலைஞரையும் மனவாடு என்றுதான் சொல்கிறார்களாம் ஆந்திராவில்.

இந்தக் கும்பல்களிடம் இருந்து தமிழும், தமிழ் நிலங்களும் விடுதலை பெற வேண்டும். அதற்கு தமிழனைத் தமிழனே ஆளும் நிலை வரவேண்டும்.

நமது வாக்கு நம்மை ஆளவா?? அல்லது நாமே ஆளவா?? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஆக்கம்.

கலைஞரையும் மனவாடு என்றுதான் சொல்கிறார்களாம் ஆந்திராவில்.

இந்தக் கும்பல்களிடம் இருந்து தமிழும், தமிழ் நிலங்களும் விடுதலை பெற வேண்டும். அதற்கு தமிழனைத் தமிழனே ஆளும் நிலை வரவேண்டும்.

நமது வாக்கு நம்மை ஆளவா?? அல்லது நாமே ஆளவா?? :rolleyes:

 

2016............ :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் தெலுங்கு நாயக்கர்கள் ...... .........! இவர்கள் என்ன செய்வார்கள் என்றால் தமிழர்பால் அக்கறை உள்ளதுபோல் நடிப்பார்கள். ஆனால் நிச்சயம் தமிழர் விரோத தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவார்கள். தமது இருப்புக்காகா போலி தமிழ்வேடம் பூணுவார்கள்!

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் ஒழிக

தமிழன் வாழ்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.