Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணத்தில் இடம்பெறும் வாள் வெட்டுக்களும் அதை தடுப்பதற்கான வழிகளும்

Featured Replies

யாழ்பாணத்தில் இப்பொது வாள் வெட்டு என்பது அடிக்கடி நடக்கின்ற ஒரு நிகழ்வாகும். இதில் பல அப்பாவி மக்களும் பாதிக்கப்படுகின்றார்கள். பெரும்பாலும் குழுக்களுக்கு இடையில் ஏற்படும் சிறு சிறு பிரசின்னை தான் வாள் வெட்டு வரை போகின்றது. வாள் வெட்டில் ஈடுபட்ட சில நபர்கள் கைது செய்து (பெரும்பாலானவர்கள்  கைது செய்யபடுவது இல்லை) சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டாலும், சில நாட்கிளில் அவர்கள் பிணையில் வந்து தங்களது திருவிளையாடல்களை மீண்டும் ஆரம்பிகின்றார்கள். அத்துடன் அவர்களுக்கு எதிராக சாட்சி சொன்னவர்களையும் அச்சுறுத்தி வருகிறர்கள் (சாட்சி சொன்னவர்களுக்கும் வாள் வெட்டு). 
 
இந்த கலாச்சாரத்துக்கு மூல காரணம் என்ன?  இதற்கு தீர்வுதான் என்ன? இந்த வாள் வெட்டு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர என்ன செய்யலாம்?
  • கருத்துக்கள உறவுகள்

துவக்குக் கலாச்சாரத்தை கொண்டார வேண்டியது தான்.... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
இந்த வாள்கள் உள்ளூர் தயாரிப்பா ?
அல்லது யாழ்தேவி புண்ணியமா ?
 
தெரிந்துகொள்ள கேட்கிறேன்.
1990 காலத்தில் இப்படி வாள்களை நான் கண்டதே இல்லை.
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாள்கள் உள்ளூர் தயாரிப்பா ?
அல்லது யாழ்தேவி புண்ணியமா ?
 
தெரிந்துகொள்ள கேட்கிறேன்.
1990 காலத்தில் இப்படி வாள்களை நான் கண்டதே இல்லை.

இயக்கங்கள் தோன்ற முதல்....  உள்ளூர் சண்டியர்களிடம்,  வாழ் வெட்டு கலாச்சாரம் இருந்தது.

இந்த வாள்கள்; செய்வதற்கென்றே.... பிரபல பட்டறைகள் இருந்தது.

அத்துடன்.... திருக்கை வால், மாட்டின்.... அந்த முக்கிய உறுப்பை பதப் படுத்தி... அதனால், தாக்குபவர்களும் உண்டு :D

  • தொடங்கியவர்

இந்த வாள்கள் உள்ளூர் தயாரிப்பா ?
அல்லது யாழ்தேவி புண்ணியமா ?
 
தெரிந்துகொள்ள கேட்கிறேன்.
1990 காலத்தில் இப்படி வாள்களை நான் கண்டதே இல்லை.

அது யாருக்கு அண்ணை தெரியும் அந்த வாள்கள் எங்கை தயாரித்தது எண்டு. 
 
90களில் என்ன 2009 வரை இப்படியான வாள் வெட்டு சம்பவங்கள் யாழ்பாணத்தில் நடந்ததா நான் கேள்விப்படவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

இயக்கங்கள் தோன்ற முதல்....  உள்ளூர் சண்டியர்களிடம்,  வாழ் வெட்டு கலாச்சாரம் இருந்தது.

இந்த வாள்கள்; செய்வதற்கென்றே.... பிரபல பட்டறைகள் இருந்தது.

அத்துடன்.... திருக்கை வால், மாட்டின்.... அந்த முக்கிய உறுப்பை பதப் படுத்தி... அதனால், தாக்குபவர்களும் உண்டு :D

அதெல்லாம் நாம் வளர முன்பு 
நாம் வளர்ந்து வீதியில் இறங்கிய பின்பு 
உந்த வாழ் கத்தியெல்லாம் கண்டதில்லை.
 
இப்போ அங்கு பெரிதாக பட்டறைகளும் இல்லை 
அதுதான் எங்கிருந்து வருகிறது என்று கேட்டேன். 
  • கருத்துக்கள உறவுகள்

அது யாருக்கு அண்ணை தெரியும் அந்த வாள்கள் எங்கை தயாரித்தது எண்டு. 
 
90களில் என்ன 2009 வரை இப்படியான வாள் வெட்டு சம்பவங்கள் யாழ்பாணத்தில் நடந்ததா நான் கேள்விப்படவில்லை.

90களில் என்ன 2009 வரை....

வாள் தூக்கின ஆட்களெல்லாம், ஒட்டுக் குழுவில்... துவக்கு துக்கிக் கொண்டு திரிந்தவர்கள்.

இப்போ... துவக்குடன் திரிய முடியாது என்பதால்... திரும்பவும், வாளுக்கு மாறி விட்டார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தில் இடம்பெறும் வாள் வெட்டுக்களும் அதை தடுப்பதற்கான வழிகளும்..

நமது கடவுள்கள் எல்லோரும் வாளுடன் இருக்கும் இனத்தில் எவ்வாறு அவற்றை நீக்கமுடியும்..?

  • தொடங்கியவர்

நமது கடவுள்கள் எல்லோரும் வாளுடன் இருக்கும் இனத்தில் எவ்வாறு அவற்றை நீக்கமுடியும்..?

ஆனாலும் அண்ணை கடவுள்கள் குறுப்பா நிண்டு வெட்டுப்படவில்லை தான. கடவுள்கள் வாள் வைத்திருப்பது மக்களை காக்க எண்டு ஒரு ஐதீகம் (உண்மையில் அப்பிடி இல்லை எண்டு என்னை கேட்கபடாது :D). ஆனால் இப்பத்தையான் குறுப்புகள் வாள் வைத்திருப்பது மக்களை வதைக்க

Edited by Surveyor

ஆயுதங்கள் எம்முடன் ஊறியவை என்று சொல்லவந்தேன்..

அவை கலையப்படணும்

அதற்கு 

அன்பு

அதற்கு பணியாதபோது மறுபக்கமும் தேவை...

இது இரண்டும் இருக்கும் ஒருவராலேயே அதைச்சாதிக்கமுடியும்

நானறிய தமிழர்களிடம் தேசியத்தலைவர் பிரபாகரனிடம் மட்டுமே இவை இரண்டும் இருந்தன.

Edited by விசுகு

சரியாக சொன்னீர்கள். உந்த வாள் வெட்டு குறுப்புகளை அன்பினால் கட்டுபடுத்த முடியாது. மறுபக்கதைதான் பாவிக்கவேண்டும் போல இருக்குது 
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவர் போல் நல்ல அரசியல் தலைமையும்.. தமிழீழ காவல்துறை போல் ஒரு செயல்திறன் மிக்க காவல்துறையும் இருந்தால்.. இவற்றைக் கட்டுப்படுத்த ஓர் இரவு காணும்.

ஆனால்.. இனம் ஒன்று.. பல பிரிவுகளாகிச் சிதறி அது தன் விடுதலை பற்றியே சிந்திக்கக் கூடாது என்று நினைக்கும் ஒரு ஆக்கிரமிப்பாளனின் இருப்பின் கீழ் இவ்வாறான குற்றங்கள் மட்டுமல்ல.. பல குற்றங்கள் அவ்வினத்தில் பல்கிப் பெருக அனுமதிக்கப்படும். இது ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் இலக்குகளை அடையப் பயன்படுத்தும் ஒரு மென்போக்கு வழிமுறை தான்..! சிங்களம் இதில் நல்லா கைதேர்ந்த ஒன்று.

அதற்கு எமது தற்கால அரசியல்வாதிகளும் ஒத்தூதிச் செல்கிறார்கள்.. அவர்களுக்கு அவர்களின் இருப்பு முக்கியமே தவிர இன விடுதலை.. அரசியல் விடுதலை அல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றையதினம் அல்வாய்ப்பகுதியில் ஒரு வாள்வெட்டுச்சம்பவத்தில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார், நான் நினைக்கிறன் இதில் சம்பந்தப்பட்டவர்கள் நெல்லியடிச் சந்திக்குப் பின்புறமுள்ள "கம்பொல்லைக்" கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என விடுதலைப் புலிகள் இருக்கும்வரைக்கும் கம்பொல்லையில் செங்கதிர் கொஞ்சம் இவர்களை அடக்கி வைத்திருந்தார் அதன்பின்பு தொடர்ந்தும் அடங்கியே இருந்தார்கள், ஆனால் தொன்னூற்றுஐந்தில் விடுதலைப்புலிகள் குடாநாட்டைவிட்டு அகன்றதன்பின்னர் நெல்லியடிச்சந்தியில் என் கண் முன்னாலேயே அலப்பறை செய்ததைக் கண்டுள்ளேன்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் யாழ் இந்துமகளிர் பாடசாலைக்கு அருகில் உள்ள ரெயில்வே கடவைக்கு அருகில் புங்குடுதீவைச்சேர்ந்த அப்பன் என்பவர் சைக்கிள் திருத்தும் கடை வைத்திருந்தார் அக்கடையைச் சுத்தி அப்பகுதி இளவட்டங்கள் எப்போதும் காணப்படுவர், அதனாலேயோ என்னவோ அப்பன் கொஞ்சம் என்ன நிறையவே சண்டித்தனம் செய்வார், அவர்களது அயலில் "ரதி வாச் வேக்ஸ்" உரிமையாளரது வீடும் இருந்தது அவர்களது பொடியளுக்கும் அப்பனுக்கும் எப்பவுமே பிரச்சனைதான். இவர் ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு எங்களிட்டையும் ஒருக்கால் வாலாட்டினவர், பிறகு நடந்ததை விபரிக்க விருப்பம் இல்லை...

ஆரியகுளத்தடியில் கெட்டவன் நடேசனுடைய பிள்ளைகள் கேமன் பிரேமன் பாபு என மூவர் அவர்களுடன் ரிற்றி, பணம் என இதர பேர்வளிகள், கொய்யாத்தோட்டத்தில் மணியம் என்பவர் தவிர கொட்டடி மணியம் என்பவர், தவிர கரையூர் மணியம் என்பவர் தவிர போயா என்பவர் இவர்கள் பிறப்பிலேயே மனப்பிரள்வுடன் பிறந்தவர்கள்போலவே காணப்படுவார்கள்

யார்ப்பாணம் ராஜா தியேட்டருக்கு அருகில் கஸ்தூரியார் வீதியையும் காங்கேசந்துறை வீதியையும் இணக்கும்வண்ணம் ஒரு குச்சொழுங்கை போகும் அதுக்குள்ள அழகிரிசாமி என்பவன் கள்ளச்சாராயம் விக்கிறவன் கெட்டவன் நடேசனது மூத்தபொடி பிரேமன் அதுக்குள்ள சாராயம் குடிச்சிட்டு வரும்போது போயா என்பவன் வாளால போட்டுத்தள்ளிட்டான்

இப்படி நிறைய விடையங்கள் நாங்கள் வாழும் காலங்களில் எம்மைச் சுத்தி இருந்தவையள் விடுதலைப் புலிகளது பிரசன்னத்துக்குப் பின்பு அனைவரையும் கூட்டிப்பெருக்கியாச்சு மிஞ்சினதுகள் வெளிநாட்டுக்கு வந்து சேர்ந்திட்டுதுகள். அனேகமாக பிரான்ஸுக்குள்ளதான் இவர்கள் ஒதுங்கினவையள்.

போக்ஸ்வேகன் காரினது பலன்ஸ் பிளேட்தான் அந்தக்காலத்தில வாள் செய்யுறதுக்குப் பயன்படுவது மிகவும் நேர்த்தியான வாள் செய்பவர் ஒருவர் மணியம்தோட்டத்துக்குள்ள இருந்தவர், ஆசை காரணமாக நானும் ஒரு வாள் செய்து வைத்திருந்தனான் அதால வெங்காயம் கூட நான் அறுத்திருக்க மாட்டன். சடாசிவத்தாற்றை பொடியன் தமிழரசுவரன் இந்தியாவில நாலாவது குழுப் பயிற்சிமுடித்து ஊருக்குள்ள வந்துநிண்டவன் "அர்ச்சுணா" மச்சன் என்னட்ட ஒரு சாமான் இருக்கு உனக்கு சிலநெரம் பயன்படும் எண்டு கொடுத்திட்டன் அதால அவன் வெங்காயத்தைக்கூட அறுக்காமல்விட்டாணோ அல்லது சிங்களவன் தலைகளைக் கொய்தாணோ எனக்குத் தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்பாணத்தில் இடம்பெறும் வாள் வெட்டுக்களும் அதை தடுப்பதற்கான வழிகளும்..

நமது கடவுள்கள் எல்லோரும் வாளுடன் இருக்கும் இனத்தில் எவ்வாறு அவற்றை நீக்கமுடியும்..?

யேசு நாதர் சிலுவையோடை நிக்கிறார்......வைரவர் சூலத்தோடை நிக்கிறார். இதிலை வன்பொருள் எப்பிடி மென்பொருளகினாது...மென்பொருள் எப்பிடி வன்பொருளாகினது.......
 
வைச்சிருக்கிறவனைப்பொறுத்து அததது தீர்மானிக்கப்படும்.
நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எனது எதிரியே தீர்மானிக்கிறான். 
துப்பாக்கியை எடுக்கவா? அல்லது  வாளை உருவவா?  :D  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

----

எண்பதுகளின் ஆரம்பத்தில் யாழ் இந்துமகளிர் பாடசாலைக்கு அருகில் உள்ள ரெயில்வே கடவைக்கு அருகில் புங்குடுதீவைச்சேர்ந்த அப்பன் என்பவர் சைக்கிள் திருத்தும் கடை வைத்திருந்தார் அக்கடையைச் சுத்தி அப்பகுதி இளவட்டங்கள் எப்போதும் காணப்படுவர், அதனாலேயோ என்னவோ அப்பன் கொஞ்சம் என்ன நிறையவே சண்டித்தனம் செய்வார், அவர்களது அயலில் "ரதி வாச் வேக்ஸ்" உரிமையாளரது வீடும் இருந்தது அவர்களது பொடியளுக்கும் அப்பனுக்கும் எப்பவுமே பிரச்சனைதான். இவர் ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு எங்களிட்டையும் ஒருக்கால் வாலாட்டினவர், பிறகு நடந்ததை விபரிக்க விருப்பம் இல்லை...

ஆரியகுளத்தடியில் கெட்டவன் நடேசனுடைய பிள்ளைகள் கேமன் பிரேமன் பாபு என மூவர் அவர்களுடன் ரிற்றிபணம் என இதர பேர்வளிகள், கொய்யாத்தோட்டத்தில் மணியம் என்பவர் தவிர கொட்டடி மணியம் என்பவர், தவிர கரையூர் மணியம் என்பவர் தவிர போயா என்பவர் இவர்கள் பிறப்பிலேயே மனப்பிரள்வுடன் பிறந்தவர்கள்போலவே காணப்படுவார்கள்

யார்ப்பாணம் ராஜா தியேட்டருக்கு அருகில் கஸ்தூரியார் வீதியையும் காங்கேசந்துறை வீதியையும் இணக்கும்வண்ணம் ஒரு குச்சொழுங்கை போகும் அதுக்குள்ள அழகிரிசாமி என்பவன் கள்ளச்சாராயம் விக்கிறவன் கெட்டவன் நடேசனது மூத்தபொடி பிரேமன் அதுக்குள்ள சாராயம் குடிச்சிட்டு வரும்போது போயா என்பவன் வாளால போட்டுத்தள்ளிட்டான்

----

எழுஞாயிறு குறிப்பிட்டவை, எல்லாம் தெரிந்த பெயர்கள்.... அறிந்த இடங்கள். :) 

ரிற்ரியை... 85´களில் ஜேர்மனியில், ஊன்று கோலுடன் கண்டேன்.

ஊரில் இருக்கும் போது.... பினான்ஸ் கொம்பனி ஒன்றில் கடன் வாங்கிய ஒருவர் பணத்தை திருப்பிக் கொடுக்காததால்...

அந்த நிறுவனம் அந்த லொறி உரிமையாளரை வெருட்ட... ரிற்றியை அணுகியது.

ரிற்ரியும் பிளான் போட்டு... ஒரு நாள் ஓடிக் கொண்டிருந்த லொறியில்.... தாவி ஏறும் போது, அந்தச் சாரதி

லொறியை... மதிலுடன் கொண்டு போய், தேய்க்க... ரிற்ரியின் கால் ஊனமாகி விட்டது. :D   

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

திரி போற போக்கை பார்த்தல், யாழ்ப்பாணத்தின் பழைய சண்டியர்மாரின் வரலாறு எல்லாம் அறியலாம் போல இருக்குது.

நம்ம கந்தர்மடக் கதையள் எல்லாம் வெளிக்கிடுது.

பெட்டையளை திரத்திற விசயத்தில அடிபாடு வந்து ஒரு கோஸ்டி பணம் இடம் போக, அந்தாளோ முருங்கக்காய் சைஸ்.

தன்னை மேல இருந்து கீழ வரை பார்த்து மட்டுக் கட்டுகினம் என்று தெரிந்தவுடன், ஆரம்பகால வடிவேலு ஸ்ரைல கொலரை, பினனால இழுத்து விட்டு, ஒய்யார நடை நடந்து வந்து, 'தம்பிமார், என்ன பாக்கிறியள், ஆளைப் பாத்தால் அப்படி இப்படித்தான், அடி எண்டால், நரம்படி, நாரி (இடுப்பு) முறியும். ம்..ம் கேசை சொல்லுங்க...' என்றாராம்.

'ஆளைப் பார்த்தா அப்படி, இப்படி...... என்ற பணத்தின் அன்றைய பஞ்ச் இளவட்டங்களிடையே பிரபலானது. :D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

திரி போற போக்கை பார்த்தல், யாழ்ப்பாணத்தின் பழைய சண்டியர்மாரின் வரலாறு எல்லாம் அறியலாம் போல இருக்குது.

முந்தி இயக்கங்களுக்குள் இந்தச் சண்டியர்களை ஒழிப்பதில் ஒற்றுமை இருந்தது. யாழ் நகரப் பகுதியில் பல சண்டியர்களுக்கு மின்கம்பத் தண்டனை வழங்கப்பட்டமை அப்போது செய்திகளாக வந்த ஞாபகம் உள்ளது.

ஆனால் பின்னாடி.. அந்த இயக்கங்களில் சிலவே சண்டியர் கும்பலானது வேறு கதை. இப்பவும் அந்தக் கும்பல்கள் தான் மக்களை மிரட்டிப் பணிய வைத்து வயிறு வளர்க்க இந்தக் கும்பல்களை நடாத்தி வருகின்றன..!

இந்தியப் படைகள் காலத்தில்.. வீடு புகுந்து திருடும்.. ஒரு கும்பலே இயங்கியது. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

வயல்குளம் விஜயன் எண்டு ஒரு சண்டியர் ஆஸ்பத்திரிக்கு முன்னால் தோடம்பழ வியாபாரி.

அவர் சொன்னது தான் விலை. தோடம்பழம் தொட்டால் வாங்காமல் போக ஏலாது. ஆனால் அவரது மெயின் வியாபாரம் தோடம்பழம் இல்லை, கஞ்சா.

ரீயூசன் முடிந்து சைக்கிலில் வந்த யாழ் இந்து பொடியள மறிச்சு, உங்கள இதால போகேக்க சத்தம் போடாமல் எல்லோடா போகச் சொன்னனான்.... என்று இரண்டு பேருக்கு இரண்டு தட்டும் போட்டுவிட்டார்.

ஆள்மாறாட்டம், வேற யாரோடயோ பிரச்சனை. தண்ணில பிழையான ஆக்களோட கொழுவல்.

ஆளுக்கு படிப்பினை கொடுக்க தீர்மானித்தாகிற்று. அது இயக்கங்கள் இலைமறை காயாக திரிந்த காலம். அதை பயன்படுத்த தீர்மானிக்கப் பட்டது

இரவு 8 மணி, கடை கட்டிக் கொண்டிருந்தார். வாட்டசாட்டமான இரண்டு பேர் தோலில் துணிப் (ஜோல்னா) பையுடன் ஆஸ்பத்திரி மதிலுடன் நிற்கிறார்கள், அடிக்கடி அவரை நோட்டம் இட்டபடி.

விஜயனுக்கு ஏதோ புரிகிறது, பயம் கவ்விக் கொள்கிறது.

தீடீரென நால்வர் சைக்கிளில் வந்து விஐயனுக்குப் பக்கத்தில் நிறுத்தி, விசாரனை ஒன்று இருக்கு, இங்க வா என்று கூப்பிட வெலவெலத்துப் போனார்.

கொஞ்ச நாளில, விசயன் பாஸ்போட் எடுத்து, 'வெளியால', போட்டாராம்... :D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் ராணித்தியேட்டருக்குப் பின்னால் கஸ்தூரியார் வீதியுடன் இணைந்திருக்கும் வண்ணான் குளத்தை அண்டியபகுதிதான் வயல்வெளி எனக் கூறுவர் இதோடு சேர்ந்த பகுதிதான் எஸ்பி சாமி அன் கொம்பனினிக்கு அருகில் போகும் ஒழுங்கைப் பிரதேசம் அதனை நாங்கள் புழுக்குத்தித் தோட்ட ஒழுங்கை என்றே அழைப்போம். வயல் விசயனை நாங்கள் அழைப்பது தோடம்பழம் என இதைவிட மாம்பளம் என அழைக்கப்பட்ட ஒருசாரர் யாழ் பழைய மார்க்கற் பகுதியில் இருந்தார்கள்.

மேலே நான் கூறிய பணத்தை இயக்கம்தான் போட்டது, போயாவையும் அவையள்தான் போட்டவயள்,

தவிர கரையூர் மணியத்தை வெட்டி வீழ்த்தியது மல்லாகத்தைச் சேர்ந்த ஒரு வாய்பேசமுடியாத சின்னப்பெடியன் அது நடந்தது கரையூர் அலுப்பாந்திக்குக் கிட்ட ஒரு அரசாங்க மரக்காலை இருக்கு அதன் வேலி எல்லையில்.

தவிர பாசையூர் கரையூர் மற்றும் யாழ் கனகரத்தினம் மகா வித்தியாலையப் பக்கம் இருக்கும் துண்டி எனப் பல பகுதி ஆட்கள் அந்தக்காலத்தில் ஏரியா, குழு, மற்றும் சாதி அடிப்படையிலான மோதல்களில் ஈடுபடுபவர்கள், அதைவிட யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் உள்ளவர்களுக்கும் சோனகதெருவில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் பரஸ்பரம் வாழ்வெட்டு நடைபெறுவதுண்டு, புலிகளது காலத்திலும் இது நடந்து அந்தநேரம் ஆதவன் என்பவரைத்தான் இவற்ரினை அடக்கப் புலிகளாள் நியமிக்கப்பட்டது ஞாபகம்.

நாயன்மார்க்கட்டு முத்திரைச்சந்திப்பகுதியில் ஞானக்கோண் எனும் பெயரில் ஒரு சண்டியன் இருந்தது தெரியும்.  காலத்துக்குக் காலம் அப்பப்ப நிறையப்பேர் உருவாகி மறைந்து போவதுண்டு. இவைகள் அனைத்தும் "சொல்லாமல் மறந்த கதைகள்" யாழ் களம் இப்போது அவற்றினை நினைவூட்டுகின்றது. முடியுமாகில் தொடருகிறேன்.

நாவலர் வீதி வைவன் வீதி முடக்கில் கிட்டரும் பண்டிதரும் ஒருக்கால் பொழுதுபட்ட நேரத்தில பச்சமட்டை அடிபோட்ட கதையும் நினைவில் இருக்கு சிலநேரம் படிச்ச மணோவோட தொடர்பில் இருக்கும் அர்ச்சுணுக்கு இதுபற்றித் தெரிந்திருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.