Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

இப்ப உங்களுக்கு மாக்கட்டிங் பத்தி சொல்றேன்..கேளுங்க:

1. எங்கட சின்னப்பு ஒரு விருந்துக்கு போறார். அங்கு ஒரு அழகான பாட்டியை பார்த்து "நான் ஒரு பணக்காரன், என்னை கல்யாணம் பன்னிக்கிறிங்களா" என்று கேட்டால் அது "Direct Marketing"

2. எங்க ம--மைந்தர்கள் எல்லாரும் ரோட்டில நிற்கினம். ஒரு நல்ல வடிவான பெண் வாறா..சின்னப்புக்கு வெக்கம்..ஆக கந்தப்பு போய் அந்த பெண்ணிட்ட சொல்றார் "அதோ அங்கிருக்கும் அழகான வாலிபன் ஒரு பெரிய பணக்காரன் . அவனை கல்யாணம் கட்டிக்குங்க" என்று சொன்னால்...அது "Advertising"

3. இப்ப எங்க சுண்டல் ஒரு பல்கலைக்கழக விழாவுக்கு போறார்..அங்கு ஒரு வடிவான பெண்ணை பார்த்து, அவட தொலைபேசி எண்ணை வாங்கி அடுத்த நாள் தொலைபேசியில் அழைத்து "நான் ஒரு பணக்காரன், என்னை கல்யாணம் கட்டிகொள்" என்றார்....இது " Tele Marketing"

4. எங்கட சாத்திரி ஒரு விருந்துக்கு போய், ஒரு பெண்ணை பார்க்கிறார்...பெரிசா ஸ்டைல்காட்டி, தலைமுடியை கோதி, சிரித்து, அந்த பெண்ணின் கைப்பை கீழே விழ எடுத்து கொடுத்து "நான் ஒரு பணக்காரன் என்னை திருமணம் செய்துகொள்வீர்களா" என கேட்கிறார்...இது "Public Relations"

5. அடுத்த எங்கட முகத்தார்...அந்த காலத்தில பொன்னம்மாக்காவை முதலில் ஒரு விருந்தில் பார்க்கிறார்.. பொன்ஸ் அருகில் சென்று "நீ ஒரு பெரும் பணக்காரி என கேள்விபட்டேன்.என்னை திருமணம் செய்துகொள்வாயா?" என்றூ கேட்டார்....இது "Brand Recognition"

6. ஒரு ஆள் (ஆர் என்று கண்டு பிடியுங்க பார்ப்பம்) ஒரு விருந்துபசாரம்..ஒரு பெண்... அதே கதை சொல்லி செருப்பால் வாங்கி கட்டி கொண்டால்.....அது "Customer Feedback"

7. அதே விருந்து...அழகான பெண்..எங்கட டக்கு மாமா சொல்ல போக முதல்... எங்கட தூய்ஸ் அந்த பெண்ணிடம் "என்னை கல்யாணம் செய்து கொள்" என கேட்டால்....அது " Competition eating into your market share"

8. இதை எல்லாம் பார்த்த கந்தப்பு...ஒரு பெண்ணிடம் அதையே சொல்லலாம் என நினைக்கும் போது...ஆச்சி வந்திட்டா...இதை தான் " Restriction for entering new markets"

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா ஜொல்லு விடுறங்க

என்ன இது தூயா...

Marketing Concepts

or

ideas for Wedding proposals :rolleyes:

  • தொடங்கியவர்

;) இரண்டுமே தான்!

எப்படி இருக்கு?

நான் தூங்கிட்டிருந்தப்போ..எனக்கும

  • தொடங்கியவர்

நீங்க வேற நான் இப்படி தான் பரீட்சைக்கு படிப்பதே...எங்கட யாழ் வாரிசுகளை வைத்து படித்தேன் என்றால்....12 மணிக்கு கேட்டாலும் சொல்லிடுவன்ல ;)

6. ஒரு ஆள் (ஆர் என்று கண்டு பிடியுங்க பார்ப்பம்) ஒரு விருந்துபசாரம்..ஒரு பெண்... அதே கதை சொல்லி செருப்பால் வாங்கி கட்டி கொண்டால்.....அது "Customer Feedback"

:lol::lol: :P

  • தொடங்கியவர்

வசிண்ணா, கண்டுபிடிச்சிட்டிங்களா?

:P :P :P எனக்கும் தெரியும் பப்பிள்க்கா சொல்லவா துயா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:P :P :P எனக்கும் தெரியும் பப்பிள்க்கா சொல்லவா துயா :lol:

உண்மையாகச் சொல்கின்றீர்களா? அல்லது சும்மா சொல்கின்றீர்களா? உண்மை எண்டால் வெளியாலே சொல்ல வேண்டியது தானே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சும்மா சொன்னாலும் சரியாகத்தானிருக்கும் துயவனண்ணா

  • தொடங்கியவர்

இப்ப ஏன் இதில நின்று சும்மா சும்மா கதைக்கிறியள்...யார் என்று தெரியுமா என்று கேட்டதிக்கு இப்படியா?

எலாரும் சும்மா சும்மா ஏன் கதைகிறீங்கள் சும்மா வெட்டி கதை கதைத்தால் வெட்டுகுழுவினர் சும்மா சும்மா எல்லாம் வெட்டீடுவீனம் சரியோ :lol: :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இலகுவாக விளங்கக் கூடியதா இருக்குதே. அநேகம் யுனியில கஸ்டமான விடயங்களை விளங்க ஞாபக்கப்படுத்த இப்படிதான் ஜொள்ளு கென்செப்ட் யூஸ் பண்ணுறது. சிலதுகள் அதையே சோதனையிலும் எழுதி பெயிலாகிடுங்கள். எல்லாம் அனுபவம் தான். :lol:

  • தொடங்கியவர்

;) நீங்களும் அப்படி எழுதிட்டீங்களா? ஆசிரியர் என்ன சொன்னார்? பிரம்படியா?

  • கருத்துக்கள உறவுகள்

;) நீங்களும் அப்படி எழுதிட்டீங்களா? ஆசிரியர் என்ன சொன்னார்? பிரம்படியா?

எழுதினது ஒன்றை ஆசிரியை காட்டினாங்க.

ஆண்டு 9 இல் தாக்கவீதத் தொடர் என்று ஒன்று வரும். அதை ஞாபகப்படுத்த பலரும் சில வழிமுறைகளை கையாள்வார்கள். அவன் ஒருத்தன் தாக்கவீதத் தொடரை எழுதுக என்ற

பொன்னர் (இங்க முகத்தார் போல அங்கினை பொன்னரும் Famous) பிளான் வெறும் பாதகச் செயல் யா ழத் மிழர் லங்கை நாட்டில் ல்லலுறும் க்கள் ண்ணீர் சோகம் பொழிகின்றனர். அப்படின்னு எழுதிவிட்டான்.

ஆனால் அது...

பொன், பிளாட்டினம், வெள்ளி, பாதரசம் (Mercury), செம்பு, ஐதரசன், ஈயம், தகரம், இரும்பு, நாகம், அலுமினியம், மக்னீசியம், கல்சியம், சோடியம், பொட்டாசியம். என்று கீழருந்து மேல் நோக்கி வர வேண்டும். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நெடுக்ஸ் பழைய காலத்தை நினைவு படுத்திட்டீங்க.. தூயாவுக்காக இன்னும் ஒன்று...

Hello He Likes Better Best Car Number Of Five Neeya Naana Mgra Allathu Sivaji Pathmini Silukku Clikekulla (Kulikekulla) Ar kandathu Camal.

ஏழு எட்டு வருடங்கள் போனாலும் மறக்கவில்லை.. காரணம் இப்படி நினைவில் நிறுத்தியதால்.. :lol::lol:

:lol: தூயா.. அது என்ன உங்களுக்கு எல்லாம் (negative customer feedback) நெகடிவிவ் கஸ்டமர் பீட்பக் தான் தெரியுமோ... பொசிட்டிவ் தான் எனக்கு எப்போதும் கேட்டுப்பழக்கம்.... change it as negative customer feedback.

எனக்கும் ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகுது. நான் O/L படிக்கெக்குள்ளை (1956 எண்டு நினைக்கிறன்) திரிகோண கணிதத்திலை எதிர்ப் பக்கம் செம் பக்கம் எல்லாம் ஞாபகம் வைக்கிறதுக்கு இதைத் தான் சொல்லிப் பாக்கிறனாங்கள்

'என்னை அடித்தவர் எவராயினும் செத்துப் போகச் செருப்பால் அடிப்பேன்.

எண்டாலும் தூயாவை மாதிரி BUsiness studies படிப்பிச்சிருந்தால் ஏங்கெயோ போயிருப்பன். :lol:

தூயா நல்லாகத்தான் படிக்கிறேள். ம்ம்ம் படியுங்கோ பரீட்சையிலும் இப்படியே எழுதினால் அவ்வளவுதான்

என்னது மணிவாசகன் 56 இல் O/L?

எனக்கும் ஒன்று நினைவுக்க வருது

வறிய கிழவி தெருவில் மேய்ந்தாள்..என்று திசைகளை நினைவுவைத்திருக்க 4ம்

வகுப்பில் படித்த நினைவு (2001 என்று நினைக்கிறேன்.. :unsure::unsure: )

  • தொடங்கியவர்

ஆகா எல்லாரும் பயங்கர ஆளுங்களா இருக்கிங்களே... ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சயன்ஸ் ரீச்சர் வர குருக்கள் மந்திரம் இயம்ப கொப்பர் நின்று கும்பிட்ட நாகம்

என்ன இது எண்டு கேகிறியலோ இரசாயணவியலில் Periodic Table பாடமாக்கியது

Sc,Ti,V,Cr,Mn,fe,Co,Ni,Cu,zn

இவைதான் அவை இன்னும் ஜாபகமிருக்கு

அப்ப விகடகவி 4ம் வகுப்பு 2001 இலோ இது ரொம்ப அநியாயமா தெரியுது

எனக்கும் ஒன்று நினைவுக்க வருது

வறிய கிழவி தெருவில் மேய்ந்தாள்..என்று திசைகளை நினைவுவைத்திருக்க 4ம்

வகுப்பில் படித்த நினைவு (2001 என்று நினைக்கிறேன்.. :D:D )

எனக்கு இது தெரியாதே.. ஏனென்டா நான் அடுத்த வருசம்தான் (2007)

4ம் வகுப்புக்கு போறன்.. :rolleyes: :P

Edited by vasisutha

  • தொடங்கியவர்

ம்ம்ம் வசிண்ணா, நீங்களிப்ப தான் கின்டி என்று எங்களுக்கு தெரியுமே... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes::D:D:D:D:D

நல்லாய் இருக்குது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.