Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாள் வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி; கையில் எடுத்தது வடக்கு மாகாண சபை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாள் வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி; கையில் எடுத்தது வடக்கு மாகாண சபை

 

யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக தலைதூக்கியிருக்கும் வாள்வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வடக்கு மாகாண சபை தீவிர நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது.

இன்று நடைபெற்று வரும் வடக்கு மாகாண சபையின்   28ஆவது மாதாந்த அமர்வில் அவைத்தலைவரால் குறித்த விடயம் சபைக்கு முன்வைக்கப்பட்டது.

 

தற்போது அதிகரித்துள்ள வாள்வெட்டு கலாச்சாரத்தினால்  பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே  வாள்வெட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் சபையின்  ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், இங்கு நடைபெற்று வரும்  வாள்வெட்டுக்கள்  , வன்முறைச்சம்பவங்கள் குறித்து நிறுத்துவதற்கு உடனடியாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்  அனுப்பியுள்ளேன்.

உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக எனக்கு பொலிஸ் மா அதிபர் உதியளித்துள்ளார் என முதலமைச்சர் தெரிவித்தார்.

அதன்போது தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறான சம்பவம்  தொடர்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டு தொடர்ந்தும்  கண்காணிக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். எனினும்  முதலமைச்சர் தலைமையிலேயே இந்ந விடயம்  தொடர்பில் நடவடிக்கை எடுப்பே சிறந்தது என அவைத்தலைவர் வலியுறுத்தியிருந்தார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=583734008630296683

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சிகள், பொதுமக்கள்,பொலிசார் என எல்லோரும் சேர்ந்து  இயங்கினால் வெற்றி கொள்ளலாம். வாளால் வெட்டுபவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சிகள், பொதுமக்கள்,பொலிசார் என எல்லோரும் சேர்ந்து  இயங்கினால் வெற்றி கொள்ளலாம். வாளால் வெட்டுபவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

நல்ல யோசனை,  நுணாவிலான்.

இரண்டு, வாள் வெட்டுக்காரருக்கு... மரண தண்டனை கொடுக்க,

மற்றவன் ஒருத்தனும்... வாளை, கையிலை எடுக்க மாட்டான். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்... இந்தத் தலைப்பிற்கு, ஒருவரும் கருத்து தெரிவிக்கவில்லை.
கருத்துத் தெருவித்தால், (தன்)மானம்?, கப்பலேறி விடும் என்ற பயமா? :icon_idea:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்... இந்தத் தலைப்பிற்கு, ஒருவரும் கருத்து தெரிவிக்கவில்லை.

கருத்துத் தெருவித்தால், (தன்)மானம்?, கப்பலேறி விடும் என்ற பயமா? :icon_idea:

வாளுக்குப் பதிலாகத் 'திருக்கை வாலை' ப் பாவித்தால், அதிக பிரச்சனைகள் ஏற்பட இடமில்லை! :D

 

மரண தண்டனை.. கொஞ்சம்.. அதிகம்..!

ஏன்... இந்தத் தலைப்பிற்கு, ஒருவரும் கருத்து தெரிவிக்கவில்லை.

கருத்துத் தெருவித்தால், (தன்)மானம்?, கப்பலேறி விடும் என்ற பயமா? :icon_idea:

 

அண்ணோய் நான் இந்த வாள் வெட்டு சம்பந்தமா முன்னம் ஒரு திரி திறந்து இருந்தனன். 
 
இதையும் பாருங்கோ 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.