Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கலகலவென சிரி... கண்ணில் நீர் வர சிரி'... இன்று உலக சிரிப்பு தினம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"கலகலவென சிரி... கண்ணில் நீர் வர சிரி'...

இன்று உலக சிரிப்பு தினம்!
 

சென்னை : ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஞாயிறு உலக சிரிப்பு தினமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பழமொழி. ஆனால், இந்த இயந்திர உலகில் நமக்கும் சிரிக்க நேரமில்லை, மற்றவர்களைச் சிரிக்க வைக்கவும் நேரமில்லை.

எனவே, ஆண்டுதோறும் உலக சிரிப்பு தினம் என்ற ஒன்று கொண்டாடப்பட்டு, அன்றைய தினம் முடிந்தளவு மக்கள் ஆங்காங்கே ஒன்றாகக் கூடி சிரித்து, களித்து மகிழ்கிறார்கள்.

 

•கடந்த 1998ம் ஆண்டு உலக சிரிப்பு தினத்தை (World Laughter Day) இந்தியாவை சேர்ந்த டாக்டர் மதன் கதாரியா (Dr. Madan Kataria) என்பவர் உருவாக்கினர்.
•இவர் மும்பையை தலைமை இடமாக கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் 'லாப்டர் யோகா' இயக்கத்தை (Laughter Yoga Moveement) தொடங்கியவர்.
•மதம், இனம் தாண்டி, லாப நோக்கம் எதுவும் இன்றி இத்தினம் சந்தோஷமாக கொண்டாடப்படுகிறது.
•முதல் உலக சிரிப்பு தின கொண்டாட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மும்பையில் ஒரே இடத்தில் கூடி மகிழ்ந்தனர்.
•2000ம் ஆண்டு இந்தியாவுக்கு வெளியே முதல் உலக சிரிப்பு தினம் கொண்டாடப்பட்டது.
•அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் லாப்டர் கிளப்கள் உருவாக்கப்பட்டு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6000-க்கும் மேற்பட்ட கிளப்கள் இருக்கின்றன.
•இத்தினத்தில் இந்தியாவில் லாப்டர் கிளப்பை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக போய் கொண்டாடுகிறார்கள்.அப்போது, 'சிரிப்பு மூலம் உலக அமைதி', வாழ்க்கைக்காக சிரிப்பு, அன்பும் சிரிப்பும், சிரிப்புக்கு மொழி இல்லை, சிரிப்பு ஒரு உலக மொழி,ஹோ ஹோ ஹா ஹா, சிரிப்பு & ஒரு பாசிடிவ் சக்தி, போன்ற பேனர்களுடன் செல்கிறார்கள்.
•சிறப்பாக சிரிக்கும் சிறுவர்-சிறுமிகள்,பெண்கள்,வயதானவர்களுக்கு பரிசும் வழங்கப் படுகிறது.
•சிரிப்பு ஒரு சிறந்த மருந்து என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சிரிக்கும் போது, முழு உடலுக்கும் நன்மை விளைகிறது. நுரையீரலுக்கு பயிற்சி கிடைக்கிறது. உமிழ்நீரில் கிருமிகளை எதிர்க்கும் ஆண்ட்டிபாடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வயிற்றில் அல்சர் வருவதை தடுக்கும் என்சைம்மைச் சுரக்க செய்கிறது. வலிபோக்கும் நிவாரணியான என்டார்ஃபின்சையும் சுரக்கச் செய்கிறது என பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
•சிறு குழந்தைகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 300-400 தடவைகள் சிரிக்கின்றன. 150 தடவைகள் கலகலவென சிரிக்கின்றன.ஆனால்,வயதாக வயதாக இது 6 தடவையாக சுருங்கி விடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
•மற்ற உறுப்புகள் சரிவர இயங்க உடற்பயிற்சி எப்படி முக்கியமோ அதைப் போலவே சிரிப்பு மூலம் உள் உறுப்புகளை வலிமையாக்க முடியும் என அவர்கள் ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
•தினமும் அரை மணி நேரம் சிரித்தால் மாரடைப்புக்கு காரணமான மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பும்,அவற்றின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
•அதேபோல், மனம் மற்றும் வாய்விட்டு சிரிப்பது மூலம் உடலில் தேங்கி இருக்கும் தேவையற்றை கொழுப்பு கரைகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
•நாமும் சிரித்து, மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வோம் என இந்நாளில் சபதம் எடுத்துக் கொள்வோமாக...

 

நன்றி தற்ஸ் தமிழ்.

 

கி..கீ...கீ.... :D 

ஹ...ஹா... ஹா... :lol: 

ஹி... ஹீ... ஹி.... :icon_mrgreen: 

  • கருத்துக்கள உறவுகள்

Edited by vaasi

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்போ சிரிப்பு
ஒரே சிரிப்பு  
ஊரே சிரிக்கின்றதே
நாங்களும் சிரிப்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=qe0i-cHYeNc

 

Laughing-chimp-gif-animation.gif

 

ஆதி சிரிப்பிங் டமில்

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பு என்பது மனிதனுக்குரிய சிறப்பம்சங்களில் ,மனித உணர்வின் விஷேடமானதொரு வெளிப்பாடாகும் இச் சிரிப்பானது மூன்று மாத குழந்தைப்பருவத்திலே இருந்தே ஆரம்பிக்கிறது (குழந்தையின் மழலை சிரிப்பில் மகிழாதவர்களுண்டோ?)



சிரிப்பானது பல்வேறு சந்தர்ப்பங்களில் இயல்பாகவே அல்லது செயற்கையாகவே வெளிப்படக்கூடியதாகும்.

வைத்தியதுறையினரின் ஆராய்ச்சியால் உடலில் 300 வகையான தசைகள் சிரிக்கும்போது அசைகின்றன என்பதனையும் மனமும் தேகாமும் சிரிக்கும் சந்தர்ப்பங்களில் புத்துணர்ச்சியும் , ஆரோக்கியமும் பெறுகின்ற என்பதனையும் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வென்றின் படி ஓரு நாளைக்கு சராசரி மனிதன் 15 தடவைகளும் குழந்தைகள் கிட்டத்தட்ட 400 தடவைகளும் சிரிக்கின்றன.இதிலிருந்து மனிதனுடை வயதிற்கேற்றவாறு சிரிப்பு குறைந்துகொண்டுபோவதை அவதானிக்கமுடிகிறது.

சில மேற்குலக நாடுகளில் சிரிப்பதை ஒரு பயிற்சியாக மேற்கொள்கின்றனர்

சிரிப்பின் வகைகள்

அசட்டு சிரிப்பு
ஆணவ சிரிப்பு
ஏளனச் சிரிப்பு
சாககச் சிரிப்பு
நையாண்டி சிரிப்பு
புன் சிரிப்பு

மழலை சிரிப்பு
நகைச்சுவை சிரிப்பு
அச்சிதல் சிரிப்பு


சிரிப்பை தெரிவிக்கும் விதங்கள்

உதட்டின் மூலமாக
பற்கள் தெரியும்படியாக
பற்கள்,நாக்கு என்பன தெரியும்படியாக சத்தமான சிரிப்பு

சிரிப்பினால் வெளிப்படுத்தும் தகவல்கள்

அன்பு
மகிழ்ச்சி
அகம்பாவம்
செருக்கு
இறுமாப்பு
தற்பெருமை
அவமதிப்பு
புறக்கனிப்பு
வெறுப்பு

சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்

வெற்றியில் சிரிப்பவன் வீரன்.

கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்.

துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.

மகிமையில் சிரிப்பவன் மன்னன்.

விளையாமல் சிரிப்பவன் வீணன்.

இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்.

மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்.

மோகத்தில் சிரிப்பவன் வெறியன்.

கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்.

ஓடவிட்டு சிரிப்பவன் நயவஞ்சகன்.

தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்.

நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்.

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்.

கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்.

கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன்.

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி.

நினைவோடு சிரிப்பவன் அறிவாளி.

தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி.

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி..

குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி.

நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி.

அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி.

தற்பெருமையில் சிரிப்பவன் கோழை.

நிலை மறந்து சிரிப்பவள் காதலி.

காதலால் சிரிப்பவள் மனைவி.

அன்பால் சிரிப்பவள் அன்னை.

 

http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=9820

வாத்தியார் ஆதியின் சிரிப்பு எந்த இரகம் உய்த்தறிந்து கூறமுடியுமா?

(அடையாளம் தேடும் ஆதி) :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Laughing-chimp-gif-animation.gif

 

ஆதி சிரிப்பிங் டமில்

 

1291112898_monkey-laughs-at-puppys-penis  :D  :lol:

1291112898_monkey-laughs-at-puppys-penis  :D  :lol:

 

இது ஆதி விழுந்து விழுந்து சிரிக்கும்போது எடுத்த காட்சி........ஆதிக்கு இப்படி சிரிப்பு வாறமாறி இந்த குட்டி நாயில் என்ன இருக்கு கண்டு பிடிச்சால் :icon_mrgreen:  :icon_mrgreen:  கம்முனு சிரிச்சிட்டு போயிடனும் :D

  • கருத்துக்கள உறவுகள்

sneha1.jpg

 

அவள் புன்னகை என்னை ஈர்த்தது’. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏராளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.

சின்ன சந்தோஷம் தரும் விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா…?

கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது. 10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்களும் கண்காணிக்கப்பட்டது.

கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச்’ வசனம் அவர்களின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தனர்.

இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும். அதாவது பெண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகுதிக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது. அவர்களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக்கிறது. எனவே இயல்பான ஜோக்குகள் கூட அவர்களுக்கு விசேஷமாகத் தெரிகிறது. இதனால் எளிதில் சிரிப்பைத் தூண்டி விடுகிறது. அத்துடன் பஞ்ச்’ வசனங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டால் விடாமல் சிரிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைகிறது. பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோகச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமைகிறது என்கிறது ஆய்வு. பிறர் நோகாமல் சிரியுங்கள் நோயின்றி வாழுங்கள்!

1352491579_screen.jpg

 

அன்பே.......

சிரிப்தை நிறுத்தேன்

மீள..... மீள ......

என்னால் சிறைப்பட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

.....

கார்ட்டூன் படத்தில் இருந்த 'பாஞ்ச்' வசனம் அவர்களின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தனர்......

 

 

 

 

பாஞ்ச்..பாஞ்ச்..! அப்படி என்னதான் பெண்களின் சிந்தனையை தூண்டி சிரிக்க வைத்தீர்களோ..? :lol:( click RED button to play)

 

 

உங்கள் 'இளமை'யில் செப்பவும்! :):lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பு என்பது மனிதனுக்குரிய சிறப்பம்சங்களில் ,மனித உணர்வின் விஷேடமானதொரு வெளிப்பாடாகும் இச் சிரிப்பானது மூன்று மாத குழந்தைப்பருவத்திலே இருந்தே ஆரம்பிக்கிறது (குழந்தையின் மழலை சிரிப்பில் மகிழாதவர்களுண்டோ?)

..

சிரிப்பின் வகைகள்

அசட்டு சிரிப்பு

ஆணவ சிரிப்பு

ஏளனச் சிரிப்பு

சாககச் சிரிப்பு

நையாண்டி சிரிப்பு

புன் சிரிப்பு

மழலை சிரிப்பு

நகைச்சுவை சிரிப்பு

அச்சிதல் சிரிப்பு

...

 

http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=9820

 

நல்லாயிருக்கு வாத்தியார்..!  :lol:

 

 

baby10.jpg

இந்த சிரிப்பிற்கு உலகில் 'ஈடு' உண்டா?

Edited by ராசவன்னியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.