Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று பிற்பகல் மஹிந்த - மைத்திரி சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிற்பகல் மஹிந்த - மைத்திரி சந்திப்பு!

[Wednesday 2015-05-06 08:00]
Mahinda-Maithri-200-news.jpg

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று பி.ப. 1.30 மணியளவில் நாடாளுமன்றத்திலுள்ள ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெறும்.

 

குறித்த சந்திப்பின் போது ஜனாதிபதி தரப்பிலிருந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா, கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

  

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி தரப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் குமார வெல்கம, நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோரும் கலந்து கொள்வர் என கூறப்படுகிறது. குறித்த பேச்சுவார்த்தை, அடுத்த பொதுத்தேர்தலின் பின் ஐ.ம.சு.மு அரசாங்கமொன்றை அமைப்பதற்கு அடித்தளமாக அமையும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதிக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி இடம்பெறவிருந்தது. ஆனால் திட்டமிடப்படாத காரணத்தினால் சந்திப்பு பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=131571&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏன்.. :lol::icon_idea:

 

மகிந்த: என்ன மைத்திரி நம்ம பிளான் வேர்க் அவுட் ஆவுதா..

 

மைத்திரி: அப்பே சிங்கள ஜனதாட்ட வேர்க்  அவுட் கொடாக்.. நா..  தெமிழ முஸ்லிமட்ட...ஹொந்தட்ட வெடக் கரனவா.

 

மகிந்த: அப்பே நாடகத்தை இன்னும் கொஞ்ச நூறு நாட்களுக்கு.. நீட்டுவாமா.. யு நோ அமெரிக்கன் இஸ் பிராப்பிளம்..

 

மைத்திரி: ஒவ் ஒவ். ஒயா கமதாம கரியட்ட தமாய் கியனவா மகிந்த. அமெரிக்கனட்ட டவுட் தியனவா. அப்பி ஒக்கம.. எஸ்கரண்ட ஒனே நெய்த..அத்தகொட்ட மே ட்ராமா தமாய்.. கொன்ரினியு கரன்டனோ.. மகிந்த.

 

மகிந்த: ரணில் இடையில பூந்து விளையாடுறானே..

 

மைத்திரி: எயா பிசு தமாய். எயாட்ட அப்பி ட்ராமா தன்னா நெய்த. ஹரி வெலவட்ட எயா தெரினவா.. அப்பி ஒக்கம கவுத..!

 

மகிந்த: கூட்டமைப்பு கூழ்ப் பானையாகிடுச்சுப் போல.

 

மைத்திரி: எயா ஒக்கம காமடி பீசு தமாய். எயாட்ட பயவென்ட எப்பா மகிந்த. சுமந்திரன் கமதாம அப்பே பத்த நெய்த. எயா எக்கனக் ஹொந்த மினிசுகார.

 

மகிந்த: ஹொந்தாய் ஹொந்தாய். அப்ப நாங்க போய் வருமா.

 

மைத்திரி: ஒவ் ஒவ் மகிந்த. அழுத் அவுருது வெவ.

 

மகிந்த: ஒயா ஒக்கமட்ட  ஏக்க தமாய். ஜெய வெவ.

 

1463054_10152814210837944_30429982881100

Edited by nedukkalapoovan

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நிறைவடைந்துள்ளது.

இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற வளாகத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறினார்.

- See more at: http://www.tamilmirror.lk/145515#sthash.JbWbQYJk.dpuf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை மைத்திரிபால தரப்பினர் நிராகரித்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவுக்கும் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே, மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினரால் இந்தக் கோரிக்கை பிரதானமாக முன்வைக்கப்பட்டது. இந்த வேண்டுகோளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால தரப்பிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என, மஹிந்த ராஜபக்‌ஷவுடன் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் குமார வெல்கம செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அனைவரும் எதிர்பார்த்திருந்த பிரதமர் வேட்பாளர் தொடர்பில் திருப்திகரமான பதில் எதுவும் இந்தக் கூட்டதில் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். எனினும் இவர்கள் இருவரும் மீண்டும் சந்தித்து பேச இணங்கையுள்ளனர் எனவும் குமார வெல்கம கூறுகிறார். இந்தச் சந்திப்பில் மஹிந்தவுடன் எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்தானந்த அலுத்கமகே, டளஸ் அழகப்பெரும, குமார வெல்கம, பந்துல குணவர்த்தன, பைசர் முஸ்தபா குழுவினர் கலந்துகொண்டனர். ஜனாதிபதி மைத்திரியுடன் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, துமிந்த திஸாநாயக்க , பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். - See more at: http://www.malarum.com/article/tam/2015/05/06/9927/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-.html#sthash.tmRQOb8r.dpuf

Read more: http://www.malarum.com/article/tam/2015/05/06/9927/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-.html

Follow us: @malarumdotcom on Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com

இழுபறியிலிருந்த எம்.ஆர் - எம்.எஸ் சந்திப்பு நிறைவு
3ab26be43cd0c490c9ffdb3b7a25fc6b.jpg
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவிற்கும் கிடையேயான சந்திப்பு  இன்று  பிற்பகல் 1.50 மணியளவில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
Mr%20ms.jpg
 
இன்று மதியம் 12.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். எனினும் 1.45 மணியளவிலேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச வருகை தந்திருந்தார். இருதரப்பினருக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது. 
 
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த பல விடங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 
 
குறித்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதியுடன் எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்தானந்த அலுத்கமகே, டளஸ் அழகப்பெரும, குமார வெல்கம, பந்துல குணவர்த்தன, பைசர் முஸ்தபா குழுவினர் கலந்துகொண்டனர்.
 
ஜனாதிபதி மைத்திரியுடன் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, துமிந்த திஸாநாயக்க , பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

http://onlineuthayan.com/News_More.php?id=633064020506136437

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் என்ன நடந்தது என்பதற்கான காணொளி வெளிவந்துவிட்டது.. :unsure:

Spoiler

:D

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் கட்சியில் இருந்து கொண்டே மகிந்தவுக்கு மைத்திரி ஆப்பு அடித்தவர். இனியும் திருப்பு மகிந்தவை சேர்த்தால் தனக்கு என்ன நடக்கும் என்பது தெரியும். சேர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்

 

https://www.youtube.com/watch?v=3tKkRqHdHjc

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.