Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவியை அடித்த கணவனை கடித்துக் குதறிய நாய்: 35 இடங்களில் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மனைவியை அடித்த கணவனை கடித்துக் குதறிய நாய்: 35 இடங்களில் காயம்
 
dog_gampola_002.jpg
மனைவியை அடித்து துன்புறுத்திய கணவனை, அவர்களின் வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் ஒன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.

தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வரும் குறித்த நபர் மனைவி, பிள்ளைகளுடன் சண்டையிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பங்களில் அம்மு என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் குறித்த நாய், இடை நடுவே புகுந்து குரைப்பதும் அந்த நபரை கடிப்பது போல் பாசாங்கு காட்டி வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வழமைபோல் சண்டை நடந்த சமயம் குறித்த நாய் பலமாக குரைத்தும் சண்டையை நிறுத்தாதையடுத்து, அந்நபரின் மீது ஆவேசமாக பாய்ந்து கடித்துக் குதறியுள்ளது.

படுகாயமடைந்த நபர் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த நபரின் உடலில் 35 இடங்களில் நாய் கடித்துக்குதறிய காயங்களுடன், கீறல் காயங்களும் உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

காயங்களுக்கு 21 தையல்களும் இடப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

dog_gampola_001.jpg

tamilwin.com

 

  • கருத்துக்கள உறவுகள்

நாயால் கவலாளியாக மட்டுமல்ல அதனால் நீதிபதியாகச் செயல்பட்டுத் தண்டனையும் தரமுடியும். :icon_idea:

 

இந்நிகழ்ச்சி என்ன சொல்லுதெண்டால்: 
ஒன்று, மனைவிக்கு அடிப்பவர்கள் நாய் வளர்க்கக்கூடாது.
இரண்டாவது, நாய் வளர்ப்பவர்கள் மனைவிக்கு அடிக்கக்கூடாது.
 
நான் அடி வாங்காம இருக்க என்ன மிருகத்தை வளர்க்கலாம்.
  • கருத்துக்கள உறவுகள்

அவளைத் தொடுவானேன் காயப்படுவானேன்.
எதற்கும் நாய் நல்ல நாயோ விசர் நாயோ என்று மிருக வைத்தியரிடம்

சான்றிதழ் வாங்கும்படி அந்த நபரைக் கேட்டுக் கொள்கின்றேன் :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

 தன் வீட்டில் நடக்கிற அநியாயத்தை நாயாலேயே தாங்க முடியல. கிளர்ந்தெளுந்து பாதிக்கப் பட்டவர்களை காத்திருக்கு அந்த ஐந்தறிவு படைத்தது.  அது பயங்கரவாதியாய் இருக்காது என நம்புகிறேன். தலைவன் பொறுப்போடு நடக்காததால் வந்த வினை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாவும் அம்மாவும் ஒண்டுக்கொண்டாய் உல்லாசமாய் இருக்கேக்கை குழந்தைப்பொடி கண்டுதெண்டால்........ ஐயோ அம்மாவை அப்பா ஏதோ செய்யுறார்....அம்மா பாவம் எண்டு வீரிட்டு கத்தும். :icon_mrgreen:

அது போலை நாயும் நினைச்சு கடிச்சு குதறிச்சுதோ ஆருக்குத்தெரியும்???  :D:lol:

அப்பாவும் அம்மாவும் ஒண்டுக்கொண்டாய் உல்லாசமாய் இருக்கேக்கை குழந்தைப்பொடி கண்டுதெண்டால்........ ஐயோ அம்மாவை அப்பா ஏதோ செய்யுறார்....அம்மா பாவம் எண்டு வீரிட்டு கத்தும். :icon_mrgreen:

அது போலை நாயும் நினைச்சு கடிச்சு குதறிச்சுதோ ஆருக்குத்தெரியும்???  :D:lol:

 

ரத்தினச்சுருக்கமாய் அம்மாவின் மேலே என்ன என்று தம்பி கேட்க அக்கா அம்மாவின் மேல் பேயாடுது என்ற கதையைக்கூறிவிட வேண்டியது தானே

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைப்பிள்ளயள்  வாசிக்கிற இடத்தில உதென்ன கதை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.