Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இடியாப்பத்தின் வாழ்வு தன்னை நூடல்ஸ் கவ்வும் மீண்டும் இடியப்பமே வெல்லும்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யோகாவை தமிழ் குருவிடம் படிக்க பின்னடிக்கும் பலர், அதே தமிழ் குருவிடம் பயின்ற வெள்ளையரிடம் ஆங்கிலத்தில், அதிக பணம் செலுத்தி படிக்கிறோம்.
 
கோகோ கோலா, பெப்சி குடிப்பதில் உள்ள கௌரவம், மோர், பருத்திப்பால் குடிப்பதில் இல்லை என்பது பலரது நிலைப் பாடு.
 
அதே போல் தமிழரிடம் இருந்து எடுத்த இடியாப்பம் செய்முறையினை, சீனாக் காரன் நூடில்ஸ் என்று திருப்பித் தர வாங்கி திங்கிறோம், அதுவும் வெள்ளையர் நிறுவனமான நெஸ்லே தரும்போது இன்னும் சந்தோசத்துடன்.
 
சிறுவர்கள் இடையே junk food அறிமுகப் படுத்தி, 'child obesity leads to early grave' என மேற்குலக மக்கள் விழித்துக் கொள்கிறார்கள் என்றவுடன், சீனா, இந்தியா என கடை விரிக்கின்றன இந்த பெரிய உணவு வியாபார நிறுவனங்கள்.
 
இந்தியா எனும் நாடே உருவாகும் முன்னர் தமிழனிடம் இருந்து எடுத்துக் கொண்ட curry  எனும் சொல், இன்று பிரிட்டனில் பங்களாதேசத்தவரால், 'இந்தியன் கறியாக' வியாபாரம் செய்யப் படுகின்றது. சிக்கின் டிக்கா மசாலா தாம் உருவாக்கி இந்தியாவிற்க்கு அறிமுகப் படுத்தி உள்ளோம் என்று பீலா வேற. தமிழனின் கறியை எடுத்து, தான் உருவாக்கிய இந்தியாவில், இந்தியானாகி விட்ட இன்றைய தமிழனுக்கு, தலையில் கட்டும் பிரிட்டனின் வியாபார தந்திரம். 
 
முப்பது வருடமாய்ச் சரியாய் இருந்த ஒரு விஷயம் இன்று தவறாய்ப் போனது. எனவே பல நூறு வருடங்களாய் நமக்கு ஏற்ப நாம் கட்டி எழுப்பிய நமது பாரம்பரிய தின்பண்டங்களை நோக்கி நமது குழந்தைகளுக்காக வேணும் நாம் திரும்பியே தீர வேண்டும். அந்த வகையில் நமது பாரம்பரிய தின்பண்டங்களின் சிறப்புக்களை இப்பகுதியில் ஒவ்வொன்றாய்க் காண்போம், எள்ளு மிட்டாய்: நவதானியங்களில் ஒன்றான எள் நமது நாட்டிற்கே உரிய தானிய வகையாகும். இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழிகளில் இடம் பெற்றுள்ள எள். நம் தமிழர் உணவுப் பழக்கத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. எளிய உணவு தானியங்களில் ஒன்றான எள் நமது உடலுக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டுள்ளது. எள் நாவுக்குச் சுவை தருவதோடு உடலுக்கு மருந்தும் ஆகிறது.

இது இந்தியா முழுவதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதற்கு திலம் என்று மற்றொரு பெயர் உண்டு. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டதுஃ மேலும் இரத்த அழுத்தத்தை சீர்படுத்துகிறது. எள்ளில் உள்ள கால்சியம் மிக அதிகம் உள்ளதால் எலும்புகள், பற்கள், நகங்கள் வலுவடைய இது உதவுகிறது. குறிப்பாக எலும்புகளின் அடர்த்தியை அதிகப்படுத்தும் தன்மை எள்ளில் உள்ள கால்சியத்திற்கு உண்டு. வளரும் குழந்தைகளின் ஆரோக்கியமும், மூளை வளர்ச்சியும் சீராக நடைபெற தரமான கால்சியச் சத்து போதுமான அளவு உடலுக்கு தேவை. இந்த கால்சியம் எள்ளில் இருப்பதால் தினமும் இதனை உபயோகப்படுத்தும் போது ஆரோக்கியம் மேம்படும்.

பெரியவர்களின் கால் மூட்டு தேய்மானம் கால்சிய சத்துக் குறைவால் ஏற்படுகிறது. இதற்கு எள் ஒரு சிறந்த மருந்து உணவுப் பொருளாக உபயோகமாகிறது இத்தகைய சிறப்பு மிக்க தானியத்தை நம் நாவிர்கேற்ப சுவை கூட்டி எள்ளு மிட்டாய் என நம் குடும்பங்களில் உண்டு வந்தோம். எள்ளு மிட்டாய் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மிகவும் அவசியம். சூடு அதிகம் என்பதால் கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது. நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (www.nativespecial.com) என்ற இணையதளம் இத்தகைய பாரம்பரிய சிறப்புமிக்க தின்பண்டங்களை நம் வீட்டிற்க்கே கொண்டு வந்து சேர்க்கிறது. இக்கால கட்டத்திற்கு இது அவசியமும் கூட. இத்தகைய தின்பண்டங்கள் கிடைக்கவில்லை என்ற வருத்தம் நகரவாசிகளுக்கு இனி இல்லை. எள்ளில் உள்ள சத்துக்கள்: எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது.

"இடியாப்பத்தின் வாழ்வு தன்னை நூடல்ஸ் கவ்வும் மீண்டும் இடியப்பமே வெல்லும்"

From Thatstamil and also by Nathamuni
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாளையில் இருந்து எல்லோரும் கேஎப்சி கபாப் டிக்கா மசாலா வை விட்டுப் போட்டு, பிள்ளயளுக்கு எள்ளும் கொள்ளும் கொடுங்கோ.......

இதனால் பிள்ளை கடுப்பாகி எள்ளும் தண்ணியும் உங்களுக்கு தெளிக்க ரெடியாகினா, அதுக்கு நான் பொறுப்பில்லை.

நூடுல்ஸ் சர்சையை வைத்து தட்ஸ்தமிழ் உதவியுடன் ஆரோ ஓர்கானிக் யாவாரி இணையக் கடை விரிக்கிறார். உசார் மக்களே.

  • தொடங்கியவர்

ஆங்கிலத்தில், ஒத்தை மரத்தை மட்டும் பார்த்து, அது போல் பல மரங்கள் சேர்ந்த தோப்பை கவனிக்காமல் விடுவதை, Lost the wood for the tree என்பார்கள்.

உங்கள் பின்னோட்டத்தை பார்க்கும் போது அது தான் நினைவில் வந்தது நண்பரே.

மேல் நாட்டு நிறுவனங்கள், எம்மிடம் எடுத்து, எமக்கே தருவதை சொல்ல வந்தேன். நீங்கள் எங்கோயோ இழுத்துப் போக முயல்கிறீர்கள்.

:o

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

I am not losing the woods for the tree ( woods என்பதை சிறுகாடு எனலாம், தோப்பு இல்லை, தோப்புக்கு ஆங்கிலம் grove).

நீங்கள் சொல்லும் விடயம் விளங்காமலில்லை. ஆனால் நடைமுறைச் சாத்தியம் எண்டு ஒன்று இருக்கே- சும்மா சோறு கறி சாப்பிட வைக்க அம்மாக்களுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும். இதில எள்ளும் கொள்ளும் சாத்தியமா?

அடுத்து தட்ஸ்தமிழ் ஒரு வியாபார பத்திரிகை. செய்திபோல வியாபார இணையத்தை முந்த்ஹள்ளுகிறார்கள். தட்ஸ்தமிழினை தொடர்ந்து படிப்போர்கு இது தெரியும்.

ஜயா,

அவர்கள் அங்கே வாழ்பவர்க்கு சொல்வதை, நீங்கள் இங்கே இழுத்துப் போர்க்கக் கூடாது.

கட்டுரையின் முதல் பகுதி எனது ஆதங்கம், எள்ளு, கொள்ளு அவர்களது. உங்கள் கவலை அவர்கள் குறித்தது.

எனது பகுதியில் தமிழனின் 'கறி' குறித்து பதிந்திருந்தேன். அது குறித்த விபரம் அறிய சில நண்பர்கள் தனியே தொடர்பு கொண்டார்கள்.

நீங்கள் இன்னும், எள்ளு, கொள்ளுடனே நிற்கிறீர்கள். சிறுதோப்போ, சிறுகாடோ, கொஞ்சம் விலாவாரியா பார்த்தால் நான் சொல்வதின் தாற்பரியம் தெரியும்.

தமிழனின் கறியை, இந்தியன் கறி என, கிழக்காபிரிக்கவிலிருந்து வந்த பத்தக்கும் (Pattak) நூனும் (Noon), பங்களாதேசில் இருந்து வந்தவர்களும் மில்லியன்களில் உழைக்கையில், தமிழன் இங்கு ஒரு பவுனுக்கு நாலு வடை, சக தமிழனுக்கு விற்கும் அவலம் ஐயா!. இதை தான் நாய்க்கு நடுச்கடலிலும் நக்குத் தண்ணி என்பார்களோ?

என்ன சொல்லப் போகின்றீர்கள். இன்னும் பல தரவுகள் தர முடியும். தற்தமிழ் மரத்தை விட்டு தோப்பை பாருங்கள் நண்பரே.

கறி குறித்த ஒர் ஆய்வு நடாத்தி ஒரு ஸ்தாபனத்துக்கு அனுப்பியுள்ளேன். விபரம் பின்னர் பகிர்வேன்.

இங்குள்ள நமது சமூகம், பாதுகாப்பு காரணமாக வெள்ளையர் போகப் பயப்படும் ஆபிரிக்க, மத்திய கிழக்கு, சீன, இந்திய சந்தைகளை இலக்கு வைத்து வளர வேண்டும். முடியுமா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி கூறுவது உண்மைதான். எண்கள் பாரம்பரிய உணவுகள் அத்தனை சத்துக்களும் மிக்கதாக எம்மை எல்லா விதத்திலும் காத்தது. இப்ப ..... பிள்ளைகள் உன்ன மாட்டார்கள் என்று நாமும் சும்மா இருக்காமல் எந்தவகையிலாவது அந்த உணவுகளை உணவில் சேர்க்க முயற்சிக்க வேண்டும் கோசான்.

வெளி நாட்டுக்கு வந்து இரண்டு வேலை செய்து கிடைத்த நேரத்தில் இரண்டு குழந்தை பெற்று அதுகளை வளர்க்க இடியப்பத்தை வாங்கி உண்டு நாங்களும் இடியப்பத்தால் வயிறு வளர்த்து நாட்டுப்பிரச்சனையின் போது சொந்தங்களுக்கும் சொந்தமில்லாதவர்க்கும் வாரி வாரி வழங்கி வட்டிக்கும் வாங்கி வழங்கி போதாக்குறைக்கு ஒரு பெரிய வீடு வீட்டில் படுப்பதோ ஒரு மூன்று மணித்தியாலம்  செய்ததெல்லாம்  துரோகம் யாருக்கு பெற்றபிள்ளைகளுக்கு ஒரு சுற்றுலா வெளி நாடோ உள் நாடோ எதுவும் இல்லை..... இப்போ தலையில் அடித்தால்......... மீண்டும் இடியப்பமா?

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

கறி மட்டுமில்லை, கட்டமரான் (கட்டுமரம்), மிளகுதண்ணி (மிலகுடன்னி), அணைக்கட்டு (அனிகட்) இப்படி எம்மிடம் இருந்து ஆங்கிலேயன் பலதை சுட்டுள்ளான். நாம் மட்டுமிலை தம் பரம வைரிகளான பிரெஞ்சு காரனிடம் இருந்து பலதை சுட்டுள்ளான்.

அதுதான் ஆங்கிலேயன், சேர்ப்பதை எல்லாம் சேர்த்து தன் கலாச்சார, மொழிச் செழுமையை கூட்டி காசும் பார்பான். நாம் அப்படியா எள்ளு, கொள்ளு, என்று பழங்கதை பேசியே மாய்ந்து போவோம்.

தவிரவும் கறி தமிழர் உணவு என்பது பற்றி ஆராய ஏதுமிருப்பதாய் எனக்குத்தெரியவில்லை . இது எல்லோரும் ஏற்று கொண்ட ஒரு விடயம்.

http://www.bbc.co.uk/food/0/24432750

நமக்கு மட்டுமில்லை ஆபிரிக்கன், ஐரோப்பியன் என்று எல்லோருக்கும் ஒரு பாரம்பரியம், உணவு முறை இருக்கு. கறி என்ற சொல் எமது. ஆனால் ஆபிரிக்கனும் மிளகாயை அரைத்து, அதில் மாமிசத்தை போட்டு வேகவைத்து அதே பொருளை வேறு பெயரில் சாப்பிட்டு இருக்கிறான். அரேபியர்களும், யூதரும் கூட.

தவிர ஐரோப்பியர் வரலாறு தொடங்கிய முதல் பேர்கருடனும், பிரைட் சிக்கினுடனும் வாழவில்லை. கேழ் வரகு, திணை இவைதான் அவர்களும் சாப்பிட்டது. பக் வீட், ஸ்பெல்ட், பலவகை மில்லெட் இப்படித்தான் அவர்களும் இருந்தார்கள்.

இப்போ நாம் காணும் ஜங் பூட் பூகோளமயமாதலின் ஓர் அங்கம். எப்படி லண்டனில் வேட்டி சட்டையோடு வேலைக்கு தினமும் போக முடியாதோ அப்படித்தான் எள்ளும் கொள்ளும் தின்பதுவும்.

நாமாக தனிப் பட்ட முறையில் வேணுமெண்டால் ஹொலண்ட் அண்ட் பாராட் போன்ற கடைகளில் அநியாயத்துக்கு காசை அழுது, எள்ளை வாங்கிச் சாப்பிடலாம்.

பிள்ளைகளுக்கு திணித்தால்... சோசல் சேர்விஸ் கதவை தட்டுவது நிச்சயம்.

தவிரவும்- தற்ஸ்தமிழ் இதில் ஒரு இணையதளத்திடம் காசு வாங்கி கொண்டு செய்தி போடுவது வெள்ளிடமலை. நேர்மையான பத்திரிகை இப்படி ஒரு தளத்தை மட்டும் சுட்டாது. இது செய்தி போல் பிரசுரிக்கப் படும் விளம்பரமே (product placement). இதே போல் "ஐடி வேலைவாய்ப்பு அமோகம்", "புதிய வகையில் திருநெல்வேலி அல்வா" போன்று பல தகிடுதத்தங்களை தட்ஸ்தமிழ் செய்துளது.

  • கருத்துக்கள உறவுகள்

நீலப்பறவை,

இதே லண்டனில் food bank எனும் இலவசமாய் உலர் உணவு கொடுக்கும் இடங்கள் பல உண்டு. இந்த நாட்டில் பிறந்த குடிகள் பலர் அதை நம்பி வாழ்கிறார்கள்.

இந்த நாட்டு அரசு -55 பவுண்டு ஒரு கிழமைக்கு கொடுக்கிறது. அதில் மட்டுமே வாழ்பவன் 2 பவுண்ஸ் பேகரை உண்பானா? அல்லது கொலண்ட் அண்ட் பராட்டில் போய் அரைக்கிலோ எள்ளை 4.99 இற்கு வாங்குவானா?

வாங்கினாலும் சமைக்க யார் காஸ் பில் கட்டுவார்கள்?

சாதாரண பாலுக்கும், ஓகானிக் பாலுக்கும் உள்ள வித்தியாசம் 50 பென்னி. ஓகானிக் முட்டை, ஓகானிக் இறைச்சி எல்லாம் அப்படியே.

கொத்து ரொட்டியாகட்டும், பிரரைட் சிக்கினாகட்டும் - ஏழைகள் உண்பது எப்போதும் ஜங் பூட்தான்.

எங்கள் வீட்டில் இப்பவும் ஓரளவிற்கேனும் எம் உணவு வகைகளைத் தான் பிள்ளைகளுக்கு கொடுக்கின்றோம். இடியப்பம் என்றாலும் அநேகமான நேரங்களில் என் மனைவி வீட்டில் தானே செய்த இடியப்பத்தினைத் தான் தருவார். பர்கர் வாரத்தில் ஒரே ஒரு நாள், மதியம் மட்டுமே. Hot dog உம் மாதத்தில் ஒன்றிரண்டு தடவைகள் மட்டுமே கொடுக்கின்றோம். வாரத்தில் ஒரு நாளாயினும் பச்சைக் காய் கறிகளுடனான சலட் மதிய நேரம் பாடசாலைக்கு கொண்டுபோக கண்டிப்பாக கொடுக்கின்றோம். அநேகமான நாட்களில் இரவு உணவாக மீன் தான் கொடுக்கின்றோம். கனடிய சாப்பாட்டு வகைகளில், whole wheat bread அடிக்கடி இரவு உணவாக வரும். காலை உணவாக Cereal அல்லது whole wheat bread sandwich அல்லது  புட்டும் முட்டையும். மக்டொனால்ட்ஸ் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை.

எனக்கு மட்டும் உந்த 'பரோட்டா' ஆசை விட மாட்டேன் என்கின்றது. வாரத்தில் ஒரு இரவேனும் பராட்டா சாப்பிடாமல் இருக்க முடியுது இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

கறி மட்டுமில்லை, கட்டமரான் (கட்டுமரம்), மிளகுதண்ணி (மிலகுடன்னி), அணைக்கட்டு (அனிகட்) இப்படி எம்மிடம் இருந்து ஆங்கிலேயன் பலதை சுட்டுள்ளான். நாம் மட்டுமிலை தம் பரம வைரிகளான பிரெஞ்சு காரனிடம் இருந்து பலதை சுட்டுள்ளான்.

அதுதான் ஆங்கிலேயன், சேர்ப்பதை எல்லாம் சேர்த்து தன் கலாச்சார, மொழிச் செழுமையை கூட்டி காசும் பார்பான். நாம் அப்படியா எள்ளு, கொள்ளு, என்று பழங்கதை பேசியே மாய்ந்து போவோம்.

தவிரவும் கறி தமிழர் உணவு என்பது பற்றி ஆராய ஏதுமிருப்பதாய் எனக்குத்தெரியவில்லை . இது எல்லோரும் ஏற்று கொண்ட ஒரு விடயம்.

http://www.bbc.co.uk/food/0/24432750

நமக்கு மட்டுமில்லை ஆபிரிக்கன், ஐரோப்பியன் என்று எல்லோருக்கும் ஒரு பாரம்பரியம், உணவு முறை இருக்கு. கறி என்ற சொல் எமது. ஆனால் ஆபிரிக்கனும் மிளகாயை அரைத்து, அதில் மாமிசத்தை போட்டு வேகவைத்து அதே பொருளை வேறு பெயரில் சாப்பிட்டு இருக்கிறான். அரேபியர்களும், யூதரும் கூட.

தவிர ஐரோப்பியர் வரலாறு தொடங்கிய முதல் பேர்கருடனும், பிரைட் சிக்கினுடனும் வாழவில்லை. கேழ் வரகு, திணை இவைதான் அவர்களும் சாப்பிட்டது. பக் வீட், ஸ்பெல்ட், பலவகை மில்லெட் இப்படித்தான் அவர்களும் இருந்தார்கள்.

BBC யில் ஒருவர் எழுதினால் அதுதான் சரியானது என்று அர்த்தம் இல்லை.
 
மத்திய காலப் பகுதியில் (medivel time (1000 - 1500) ஆறு சுவைகளில், உறைப்பு என்பது ஐரோப்பிய சாதாரண மக்கள் அறிந்திராதது. அரச, பணக்கார குடும்பங்கள், அரேபியர்கள் தரை மார்க்கமாக கொண்டுவந்த எமது மிளகை பரவசத்துடன் உண்ண , தங்கத்துடன் பண்ட மாற்று செய்திருகிறார்கள்.
 
கறி, தமிழனுக்கு உரியது. அவனது மிளகை வாங்க வந்தவனே போர்த்துகேயன் வாஸ் கோட  காமா. ஆனால் ஸ்பானிஸ்காரன் தென் அமெரிகாவில்   இருந்து மிளகாய் ஐரோப்பா கொண்டு வர, மிளகாய் ரிவேர்சில் நமது பகுதிக்கு அதே போர்துகேயனால் வந்தது. Spice Trade தான் காலனித்துவத்தின் அடிப்படை.
 
இன்று நாம் சொல்லும், உண்ணும் கறி, 15ம் நூறாண்டில் வந்த ஐரோப்பியர்களால் பெரும் மாறுதலுக்கு உள்ளாகியுள்ளது. கறி ஆங்கில மொழியில் கலந்தது 15ம் நூறாண்டில். 18ம், 19ம்  நூறாண்டில், பிரிட்டிஷ் காரர்களால் உருவான இந்தியாவில் இருந்து ஆபிரிக்கா போன வர்களின் வழிதோன்றல்கள், 'இந்தியன் கறி' என்று பீலா விடுவது சரிதானோ?  இன்னும் சொல்ல முடியும் நேரமில்லை. 
 
பரம வைரிகளான பிரெஞ்சு காரனிடம் இருந்து பலதை சுட்டுள்ளான். என்கிறீர்கள்: ஆங்கில சரிதம் தெரிந்தால் நீங்கள் சொல்வது தவறு ஆகிவிடும்.
 
11ம் நூறாண்டில் பிரான்சின் நோர்மண்டி பகுதியின் வில்லியம் எனும் குறுநில மன்னன் இங்கிலாந்தினை போரில் பிடித்தான். அவனது ஆட்சியில் ஆரம்பித்து, பிரஞ்சு, ஆங்கிலோ சக்ஸ்சொன், செல்டிக் ஆகிய மொழிகளின் கலவை தான் ஆங்கிலமாக உருவாகியது. (இன்றைய திகதிப் படி 'வென்ற பெரும் வேந்தன் வில்லியம்' தான், வெளியே இருந்து வந்து, இங்கிலாந்தினை போரில் கடைசியாக வென்றவனாக கருதப்படுகிறான்.)
 
13ம் நூறாண்டில் வேல்சினைப் பிடித்த அவனது வாரிசுகள், அங்கே ஆங்கில மொழி மட்டுமே என சட்டம் போட்டு விட்டார்கள். இதையே வில்லியம் செய்திருந்தால், பிரஞ்சு மொழி மட்டுமே இருந்திருக்கும். ஆங்கிலம் உருவாகி இராது.
 
முழு வீச்சில் இந்த மொழி எழுந்தது: 17ம் நூறாண்டில், சேக்ஸ்க்பியர், முதலாம் எலிசபெத் மகாராணி ஆட்சி காலத்தில். 
 
உங்களுக்கு முடிந்தால் எள்ளையும், கொள்ளையும் கொடுங்கள். முடியா விட்டால் பர்கரை கொடுங்கள். அவரவர் வசதி. காலையில் தவிடு தான் நம்ம வசதி.  :D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி கூறுவது உண்மைதான். எண்கள் பாரம்பரிய உணவுகள் அத்தனை சத்துக்களும் மிக்கதாக எம்மை எல்லா விதத்திலும் காத்தது. இப்ப ..... பிள்ளைகள் உன்ன மாட்டார்கள் என்று நாமும் சும்மா இருக்காமல் எந்தவகையிலாவது அந்த உணவுகளை உணவில் சேர்க்க முயற்சிக்க வேண்டும் கோசான்.

எள்ளின் பயன்களை அறிந்தபின் தேடி  உட்கொள்ள  வடமராட்சி பகுதியில் எள்ளுருண்டை செய்வது எப்படி என தேடி பிடித்து அறிந்து ஒரு கிழமைக்கு தேவையானதை முன்பே செய்து வைக்கலாம் (வசதி) தற்போது தவிர்க்க முடியாத உணவு ஆகி விட்டது .

பர்கர் என்பவை ஜாங் பூட்  என சிறு வயது  பள்ளிகளில் சொல்லி கொடுக்கின்றார்கள் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

தலைப்பை விட்டுப் போனாலும். சுவாரசியமாய் போவதால் சிலதை சொல்லி வைக்கிறேன்.

1) வில்லியம் த கொன்கரரின் நோமண் படைஎடுப்புக்கு முன்பே ரோமர்கள் இங்கிலாந்தையும் வேல்சையும் பலகாலம் கட்டுப்படுத்தி ஆண்டுளனர். அதற்க்கு முன்பும் வைக்கிங் படைஎடுப்புகளும் குடியேற்றமும் நிகழ்ந்துளது. ஏன் முதலாம் எலிசபெத் அரசவையில் கூட ஆங்கிலம் நீச பாசையாகவும் பிரெஞ்சு மொழியு அரச மொழியாயும் இருந்துளது. ஆனால் ஆங்கிலேயர்கள் தாம் அடிமைபடுத்தியவனிடம் இருந்து மட்டுமில்லை, தம்மை அடிமை படுத்தியவர்களிடமும் இருந்து விடயங்களை பெற்று தம் மொழியை/கலாச்சாரத்தை/உணவை செழுமை ஆக்கியுளர்.

இதை அவர்கள் திட்டமிட்டு செய்யவில்லை. இயல்பாகவே அவர்களிடம் இருந்த பலதையும் ஏற்கும் மனோநிலையாலே இது சாத்தியமாயிற்று.

2) பிபிசி மட்டுமல்ல கறி தமிழ் சொல்லுதான் என்பதற்கு இன்னும் பல சான்றுகள் உண்டு. இதை மீள நிறுவுவது சுவாரசியமாய் இருக்கலாம், ஆனால் புதிதாய் இதில் ஏதுமில்லை. உலகம் உருண்டை என மீள நிறுவுவது போல.

முன்பே ஐம்பது போல கறி எனும் சொல்தான் தமிழே தவிர, மாமிசம்/மரக்கறியை, காரம் சேர்த்து (மிளகு /மிளகாய்) கூட்டுப் போல வேகவைத்து உண்பது is as old as human race itself. அதை தமிழரே முதலில் செய்தனர் என்பது நாம் பெரிது என்ற எம் மனோநிலையே அன்றி வேறில்லை.

3) பேகர் ஜங் பூடில்லை - processed meat கொண்டு செய்த பொரித்த பேகரே ஜங் பூட். உடன் கிரில் இல் தயாரிக்க பட்ட பேகரில் சாஸ் வகைகள் இன்றி, சலாடுடன் சாபிட்டால் அதை விட நல்ல சாப்பாடு இல்லை. வண்டி கணக்கில் சோத்தை அல்லது அரிசி மாவை வெளுப்பதிலும் எவ்வளவோ மேல்.

4) நமக்கு எப்பவும் காலையில் ஒரு பக்கெட் புண்ணாக்குத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எள்ளின் பயன்களை அறிந்தபின் தேடி  உட்கொள்ள  வடமராட்சி பகுதியில் எள்ளுருண்டை செய்வது எப்படி என தேடி பிடித்து அறிந்து ஒரு கிழமைக்கு தேவையானதை முன்பே செய்து வைக்கலாம் (வசதி) தற்போது தவிர்க்க முடியாத உணவு ஆகி விட்டது .

பர்கர் என்பவை ஜாங் பூட்  என சிறு வயது  பள்ளிகளில் சொல்லி கொடுக்கின்றார்கள் .

ஏன் வடமராட்சியார் தான் எள்ளுருண்டை செய்வினமே. நாங்களும் செய்வம். :D

எள்ளை உருண்டையாக்கிக் குடுத்தால் தான் பிள்ளையள் சாப்பிட யோசிப்பினம். கேசரி போல் துண்டாக வெட்டிக் கொடுத்தால் என் பிள்ளைகள் போல் புளுகிப் புளுகிச் சாப்பிடுவினம். நாங்கள் தான் பஞ்சியில ஒண்டுமே செய்யாமல் சும்மா அவன் இவனைக் குறை சொல்லுறது.

  • கருத்துக்கள உறவுகள்

நீலப்பறவை,

இதே லண்டனில் food bank எனும் இலவசமாய் உலர் உணவு கொடுக்கும் இடங்கள் பல உண்டு. இந்த நாட்டில் பிறந்த குடிகள் பலர் அதை நம்பி வாழ்கிறார்கள்.

இந்த நாட்டு அரசு -55 பவுண்டு ஒரு கிழமைக்கு கொடுக்கிறது. அதில் மட்டுமே வாழ்பவன் 2 பவுண்ஸ் பேகரை உண்பானா? அல்லது கொலண்ட் அண்ட் பராட்டில் போய் அரைக்கிலோ எள்ளை 4.99 இற்கு வாங்குவானா?

வாங்கினாலும் சமைக்க யார் காஸ் பில் கட்டுவார்கள்?

சாதாரண பாலுக்கும், ஓகானிக் பாலுக்கும் உள்ள வித்தியாசம் 50 பென்னி. ஓகானிக் முட்டை, ஓகானிக் இறைச்சி எல்லாம் அப்படியே.

கொத்து ரொட்டியாகட்டும், பிரரைட் சிக்கினாகட்டும் - ஏழைகள் உண்பது எப்போதும் ஜங் பூட்தான்.

லண்டனில மட்டுமில்லை எல்லா இடமும் எல்லாக் கடைகளிலும் எள்ளு இருக்கு கோசான். கட்டாயம் கொலண்ட் அண்ட் பராட்டில் தான் வாங்கவேண்டும் என்றில்லையே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோசன்,

சிறு திருத்தம். ரோமர்கள் ஆண்டது 1ம் நூறாண்டில் இருந்து 5ம் நூறாண்டு வரை. வைக்கிங்ஸ், சாக்சன்ஸ் வந்தது, ஆண்டது அதன் பின்னர். மத்திய காலம் நோர்மான்டி வில்லியத்துடன் ஆரம்பமாகி, 15ம் நூறாண்டின் ரீயூடர் வம்சம் வரை தொடர்ந்தது. ரீயூடர் வம்சம் 1ம் எலிசபத்தின் பின் தழைக்காமல் போக, ஜேர்மனி அரச குடும்பத்திலிருந்து வந்தவர் இங்கிலாந்து மன்னரானார்.

அரச குடும்பம் இறைவனால் அனுப்பப்பட்டது என்ற நம்பிக்கையால், இங்கிலாந்தில் மன்னர் சார்ல்சை போரில் வென்ற லோக்கல் படைத்தலைவரான ஒலிவர் குரோம்வெல் மன்னராகாமல் ஆட்சி செய்தார். எனினும் பிரான்சில் இதே நிலையில், நெப்போலியன் தன்னை மன்னராக்கிக் கொண்டான்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நாமு வைகிங்ஸ் இன் முதல் பதியப் பட்ட வரவு யோக்சியரில் கி மு 793 நிகழ்ந்துளது. இது ரோமர் வருவதற்கு 300 வருடங்கள் முன்பு. ஆனால் தாக்கி அழிக்கும் ரெயிட்ஸ் தான் முதலில். குடியேற்றங்கள் பின்பே உருவாகின.

http://www.primaryhomeworkhelp.co.uk/viking/when.html

சைமன் சாமா 3 வால்யூம்களில் ஹிஸ்டரி ஒப் பிரிட்டன் எழுதியுள்ளார். அற்புதமான புத்தகம். படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

எலிசபெத் பிளண்டஜெனட் இற்கு பின் இங்கிலாந்து அரசரானவர், மேரி குயின் ஒவ் ஸ்கொட்சின் மகனும் எலிசபெத்தின் ஒன்று விட்ட பெறா மகனுமாகிய 1ம் ஜேம்ஸ். இங்கிலாந்து அரசர் ஆகும் போது இவர் ஏலவே ஸ்காட்லாந்த்ஹின் அரசர். இவர் காலத்திலேயே இங்கிலாந்தும் ஸ்காட்லாந்த்ஹினதும் ராச்சியங்கள் ஐக்கியமாயின.

ஜேம்சின் தாய் ஒரு டியூடர். தந்தை ஒரு ஸ்காட்லாந்து பிரபு (டான்லி).

ஜேம்ஸ் மணமுடித்த ராணியே நெதர்லாந்து அரச வம்சம். அதில் இருந்துதான் இங்கிலாந்து அரச குடும்பத்தில் பெரிய அளவில் ஒஸ்ரோ-ஹங்கேரிய-ஜேர்மானிக்-கிரேக்க கலப்பு ஏற்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த ராச குடும்பத்தில இவ்விடத்து வெள்ளத்தோல் ரத்தம் எல்லாம் கலந்தோடுது. கலவன் கூட்டம்.

இப்ப இருக்கிற ராணின்ற பெரிய தேப்பன், ராசாவா இருந்து, வேலைக்காரிய கிளப்பிக் கொண்டு பிரான்சுக்கு ஓடிப் போட்டார். வளப்புச் சரிஇல்லை. :icon_mrgreen:

அதால தம்பியார் ராசாவாகி, பிறகு இவோ வந்தவோ. பெரிய ராசா ஒழுங்கா இருந்திருந்தா இவோ வந்திருக்க ஏலாது. அது தான் விதி!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை. டயனாவையும் கேற்றையும் தவிர ஏனையோரில் ஆங்கில ரத்தம் மருத்துக்குமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை. டயனாவையும் கேற்றையும் தவிர ஏனையோரில் ஆங்கில ரத்தம் மருத்துக்குமில்லை.

பெரிய ராசாவின்ற குழப்படியோட அவையன்ற தலைக்கனம் போய், சாதாரண குடும்ப பெண், ஆண் எண்டு எடுக்க வெளிக்கிட்டுத் தான் டயானாவும், கேற்றும்.

இருந்தாலும், ராணின்ற மூத்த பெடியும், டயானாவை கட்டியும் அப்படி இப்படி தான்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள்... காலைமை, மத்தியானம், பின்னேரம் எல்லாம்.....
நெடுகவும்.... சோறு சாப்பிடுகின்ற படியால்....
"மகி நூடில்ஸ்" பிரச்சினையால்.... வரும், "இடியாப்ப சிக்கலைப்" பற்றி... எமக்கு கவலையில்லை. :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ராணியின் பெரியப்பா வேலைக்காரியை கிளப்பவில்லை.

பெரும் செல்வந்தரான அமெரிக்க விதவை வாலிஸ் சிம்சனை முடிக்க விரும்பினார்.

முடியா காதலியா எனும் போது முடியை கடாசி விட்டுப் போனார்.

இது வெளியே சொல்லும் கதை.

உண்மையில் ஆள் கிட்லரோடு ரகசிய உடன்படிக்கை செய்த்தாயும் அதனால் சேர்சில் பதவி விலக நிர்பந்தித்தாயும் இன்னொரு கதை.

பிரிட்டிஷ் ராசாட்ட இல்லாத காசா? பணம் பெரிசில்லை. அவோ பணிவிடை செய்வதாகவே அறிமுகம் ஆனா.... 
 
ராசாவுக்கு மருந்தை மாயத்தைப் போட்டு மசக்கிப் போடடா, முடியை கடாசிப் போட்டு ஓடுற அளவுக்கு. :(

மயிரை....பிச்சுக் கொண்டு, ஓடுற அளவுக்கு...

ராசாவுக்கு, என்ன பிரச்சினை,

ராணியிடம்.... இருந்து, வந்தது? :rolleyes:

மயிரை....பிச்சுக் கொண்டு, ஓடுற அளவுக்கு...

ராசாவுக்கு, என்ன பிரச்சினை,

ராணியிடம்.... இருந்து, வந்தது? :rolleyes:

அவுக அந்த முடிய சொன்னாப்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.