Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜின் மனைவியை அரசியலுக்கு இழுக்கும் சயந்தன்!

Featured Replies

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்சின் மனைவி களமிறக்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில தரப்புக்கள் வதந்திகளை கட்டவிழ்த்து விடத்தொடங்கியுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் சார்பில் தென்மராட்சியை பிரதிநிதுவப்படுத்தி அவர் தேர்தலில் போட்டியிட வைக்கப்படவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் தரப்பினிலிருந்து கதைகள் அவிழ்த்து விடப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது..

இது சம்மந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ரவிராஜ்சின் மனைவியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளமை என்ற காரணத்தினாலும், இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பெண் உறுப்பினர்கள் எவரும் இல்லாத காரணத்தினாலும் ரவிராஜ்சின் மனைவி தேர்தலில் போட்டியிட வைக்கப்படவுள்ளார் என்றும் இத்தரப்புக்கள் கதைகளினை அவிழ்த்து விட்டுள்ளன.

எதிர்வரும் தேர்தலில் தென்மராட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அருந்தவபாலன் களமிறங்க காத்திருக்கின்றார். அவரது வளர்ச்சி எதிர்வரும் காலங்களினில் தனக்கு பின்னடைவை தருமென சயந்தன் கருதியே இத்தகைய புரளிகளை அவிழ்த்து விட்டுள்ள போதும் இது வரை ரவிராஜின் மனைவி தனது சம்மதத்தினை தெரிவித்திருக்கவில்லையென தெரியவருகின்றது.

http://www.pathivu.com/news/41162/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

புருசனை இழந்து , தொலைத்து நிற்கும் அபலை பெண்களை குறி வைப்பதில் சம் சும் கில்லாடிகள்

  • கருத்துக்கள உறவுகள்

மீரா,

இப்படி எழுதியதற்குப் பதில் வடகிழக்கில் முன்னேற முயலும் ஆயிரமாயிரம் போர் விதவைகளின் முகத்தில் நீங்கள் காறித்துப்பி இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மீரா,

இப்படி எழுதியதற்குப் பதில் வடகிழக்கில் முன்னேற முயலும் ஆயிரமாயிரம் போர் விதவைகளின் முகத்தில் நீங்கள் காறித்துப்பி இருக்கலாம்.

கோசான் இன்று வரை எந்த கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினரோ மாகாண உள்ளூராட்சி சபை உறுப்பினரோ தமது உதவியாளராக இப்படியானவர்களை நியமித்து இருக்கிறார்களா? கூட்டமைப்பிற்கோ அல்லது அதன் உறுப்பு கட்சி ஏதாவது ஒன்றிற்கு மகளிர் அணி இருக்கிறதா? 

விதவைகளுக்கு தையல் மெசின், தென்னங்கன்று , பசு மாடு, கோழி வழங்குவதோ தங்கு விடுதி கொடுப்பதோ முன்னேற்றம். 

அனந்தி தனது கணவரை தேடுவதை நக்கல் செய்தவர்கள் நாளை இவரும் தனது கணவர் கொலை தொடர்பாக கதைக்கும் போது நக்கல் செய்யவா? 

தேர்தலுக்கு இழுத்தாலே இப்பிடி சொல்லுறிங்க, உதவியாளரா வைச்சா என்னவெல்லாம் சொல்லுவிங்க?

மகளிர் அணி எல்லாம் பம்மாத்து, பெண்களுக்கும் சம வாய்ப்பு, அதுக்காக தகமையை புறம்தள்ளமுடியாது.

ஆனந்தியையும் இலக்காக்கினார்களா? 

தேர்தலில் வாக்கு வேட்டைக்காக கைம்பெண்களை பயன்படுத்துவது சரி என்கிறீர்களா? 

மீரா அழகாக சொன்னீர்கள், வாக்கு வங்கியை நிரப்பத்தான் கணவரை இழந்த பெண்கள், வென்றால் பிறகு கணக்கே எடுக்க மாட்டார்கள்.

உண்மையில் கணவரை இழந்த பெண்கள் மீது கரிசனை இருந்தால் அனந்தியை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அமைச்சராக்கியிருக்க வேண்டும். வடமாகாணசபை வெற்றியில் அனந்தியின் பங்கு அளப்பெரியது. உண்மையிலே ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளே வடக்கின் பெரிய சவாலாய் இருக்கின்றது.

இப்ப அடுத்த ஆளை தேடத்தொடங்கிட்டினம்.

முதல் இருந்த MPமாரில் ஸ்ரீதரனை விட மற்ற ஒருத்தரையும் காணக்கிடைக்கிறதே இல்லை

இனி ஆர் ஆட்டைய போட வருகினமோ தெரியாது

தேர்தலில் வாக்கு வேட்டைக்காக கைம்பெண்களை பயன்படுத்துவது சரி என்கிறீர்களா? 

எனது கேள்வி அனந்தியை இலக்காகினார்களா? அல்லது அனந்தி தானே வந்து கேட்டாரா? 

கைம்பெண்கள் என்று நீங்கள் சொல்வது பெண்களை பற்றி உங்கள் பார்வை.. 

மீரா அழகாக சொன்னீர்கள், வாக்கு வங்கியை நிரப்பத்தான் கணவரை இழந்த பெண்கள், வென்றால் பிறகு கணக்கே எடுக்க மாட்டார்கள்.

உண்மையில் கணவரை இழந்த பெண்கள் மீது கரிசனை இருந்தால் அனந்தியை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அமைச்சராக்கியிருக்க வேண்டும். வடமாகாணசபை வெற்றியில் அனந்தியின் பங்கு அளப்பெரியது. உண்மையிலே ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளே வடக்கின் பெரிய சவாலாய் இருக்கின்றது.

இப்ப அடுத்த ஆளை தேடத்தொடங்கிட்டினம்.

முதல் இருந்த MPமாரில் ஸ்ரீதரனை விட மற்ற ஒருத்தரையும் காணக்கிடைக்கிறதே இல்லை

இனி ஆர் ஆட்டைய போட வருகினமோ தெரியாது

விதவை பெண்கள் தொடர்பாக கூட்டமைப்பு செய்ததை விட புலத்தில் யாராவது அதிகம் செய்தார்களா? அல்லது எதாவதுதான் செய்தார்களா?

யாரும் செய்ய விருப்பம் இல்லாமல் இல்லை அவர்களால் செய்யமுடியாத நிலை அதனை செயவல்லது கூட்டமைப்பு ஒன்றே அதன்கேற அரசியல் சூழலை உருவாக்கி அவர்களால் முடிந்ததை செய்கிரார்கள். 

அனந்தியை வேட்பாளராக அறிவித்த பின்னர் பேரினவாதிகளளால் வந்த சவால்கள் எதிர்கொண்டது கொட்டமைப்புத்தான்.

அனந்தியை இழுத்தது கூட்டமைப்பு இல்லை அது அவரின் தெரிவு. 

  • கருத்துக்கள உறவுகள்

எனது கேள்வி அனந்தியை இலக்காகினார்களா? அல்லது அனந்தி தானே வந்து கேட்டாரா? 

கைம்பெண்கள் என்று நீங்கள் சொல்வது பெண்களை பற்றி உங்கள் பார்வை.. 

அனந்தியை கூட்மைப்பினர் தான் அரசியலுக்குள் கொண்டு வந்தனர்.

ரவிராஜின் மனைவி கைம்பெண் இல்லையா? 

அனந்தியை கூட்மைப்பினர் தான் அரசியலுக்குள் கொண்டு வந்தனர்.

ரவிராஜின் மனைவி கைம்பெண் இல்லையா? 

தவறு, அனந்தி விரும்பே போனார். கூட்டமைப்பு அவரை அழைக்கவில்லை.

ரவிராஜின் மனைவி விதவைதான் அனாலும் அவர் ஒரு பெண்தான். சகமந்தருக்கு இருக்கும் அத்தனை உரிமையும் அவருக்கும் இருக்கு.

யாரோ கேட்டார்கள் என்பதற்காக அவர் போவார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

அப்படி பார்க்கபோனால் ஆயுத போராட்டத்துக்கு போன பெண்கள், போராளிகள், எல்லோரும் என்னவென்று சொல்வீர்கள்? அவர்களும் தமது சுய விருப்புடந்தானே போனார்கள்?

தயவுசெய்து வாதத்துககவேனும் வீண்பழி போடவேண்டாம்.

எல்லாத்துக்கும் மேல் இந்த செய்தி வந்த மூலமே தமிழ் ஊடகங்களில் மிகவும் குறைந்த நம்பிக்கையை பெற்ற ஊடகம்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் ஒருவரையும் கூட்டமைப்பு குழறக் குழற அரசியலில் கொண்டு வந்தார்கள் எனக் கூறவில்லை. 

நான் அறிந்த வரை கூட்டமைப்பினரே அனந்தியுடன் முதலில் தொடர்பு கொண்டார்கள்.  

இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டு 24 மணிநேரத்திற்கு பின்னர் இச் செய்தியின் மூல ஊடகம் பற்றி எழுதுகிறீர்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் லாபம் தேடுபவர்கள் எதையும் ஆயுதமாக எடுப்பார்கள்.

இங்கு நான் ஒருவரையும் கூட்டமைப்பு குழறக் குழற அரசியலில் கொண்டு வந்தார்கள் எனக் கூறவில்லை. 

நான் அறிந்த வரை கூட்டமைப்பினரே அனந்தியுடன் முதலில் தொடர்பு கொண்டார்கள்.  

இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டு 24 மணிநேரத்திற்கு பின்னர் இச் செய்தியின் மூல ஊடகம் பற்றி எழுதுகிறீர்கள். 

யாரவது உணமை அறிந்தவர்கள் சொல்லட்டும் அனந்தி தானே போனாரா அல்லது அழைக்கப்பட்டாரா என்று.

ஆதாரம் இல்லாத பதிவு செய்தியை நம்பி இதுக்குமேல் விவாதிக்காமல் விடவே சொன்னேன்.

விதவை பெண்கள் தொடர்பாக கூட்டமைப்பு செய்ததை விட புலத்தில் யாராவது அதிகம் செய்தார்களா? அல்லது எதாவதுதான் செய்தார்களா?

யாரும் செய்ய விருப்பம் இல்லாமல் இல்லை அவர்களால் செய்யமுடியாத நிலை அதனை செயவல்லது கூட்டமைப்பு ஒன்றே அதன்கேற அரசியல் சூழலை உருவாக்கி அவர்களால் முடிந்ததை செய்கிரார்கள். 

அனந்தியை வேட்பாளராக அறிவித்த பின்னர் பேரினவாதிகளளால் வந்த சவால்கள் எதிர்கொண்டது கொட்டமைப்புத்தான்.

அனந்தியை இழுத்தது கூட்டமைப்பு இல்லை அது அவரின் தெரிவு. 

சூராவளி,

கணவரை இழந்த பெண்களுக்கு கூட்டமைப்பு என்ன கிழித்திருக்கின்றது? ஒன்றை கூறுங்கள்?

புலத்தில் இருந்து எத்தனை உதவிகள் கிடைதிருக்கின்றது, ஏன் யாழ் உறுப்பினர்களே ஒரு உதவித்திட்டம் செய்திருக்கின்றோம்(http://www.yarl.com/forum3/topic/154777-என்னுடைய-மனைவியையும்-பிள்ளையையும்-கடைசி-வரை-பார்த்துக்-கொள்ளம்மா-முன்னாள்-போராளியின்-கடைசி-வார்த்தை/?page=1).

சரி அனந்தி விரும்பிச்சென்றார் என்று வைத்துக்கொள்வோம்....
கூட்டமைப்பு அவரை வேட்பாளராக அனுமதித்த பின் அவருடன் நியாயமாக நடந்து கொண்டதா?
2வது விருப்பு வாக்கு பெற்றவரை தூக்கி எறிவதும், வாக்களித்த மக்களை தூக்கி எறிவதும் சமனல்லவா?
கணவரை இழந்த மனைவிமாரும், பெற்றோரை இழந்த குழந்தைகளும் பெரும் சவாலை எதிர்நோக்கும் வேளையில் இவரை அவர்களுக்கு பொறுப்பான அமைச்சராக நியமித்து இருக்க முடியாததேன்?
அவ்வாறு நியமித்திருந்தால் அவர் பல அபிவிருத்திகளை செய்திருப்பார், அதுமட்டுமல்லாமல் இம்முறை பாராளமன்ற தேர்தலில் கூட்டமைப்பு பெரும் பலம் பெற்றிருக்கும்.

முதலில் கூட்டமைப்பில் இளம் சந்ததியினருக்கு இடம் விட்டு வயோதிபர்கள் விலகி நிக்க வேண்டும்

கூட்டமைப்பின் மீது உங்கள் விமர்சனம் ஏற்றுகொள்ளக்கூடியதே.

போலியான அவதூறுகளை பரப்பவேண்டாம் என்பதே என்கருத்து.

கூட்டமைப்பின் மீது உங்கள் விமர்சனம் ஏற்றுகொள்ளக்கூடியதே.

போலியான அவதூறுகளை பரப்பவேண்டாம் என்பதே என்கருத்து.

அண்ணை யாரும் போலியான அவதூறான கருத்தை பரப்ப முயலவில்லை, கூட்டமைப்பு கொள்கையிழந்து நிற்பதே இப்படியான கருத்துக்கள் வர காரணம்

அண்ணை யாரும் போலியான அவதூறான கருத்தை பரப்ப முயலவில்லை, கூட்டமைப்பு கொள்கையிழந்து நிற்பதே இப்படியான கருத்துக்கள் வர காரணம்

கூட்டமைப்புக்கு கொள்கை இல்லாமல் இல்லை. அவர்களின் இப்பொதய கொள்கை உங்களுக்கு உடன்பாடில்லை.

கூட்டமைப்புக்கு கொள்கை இல்லாமல் இல்லை. அவர்களின் இப்பொதய கொள்கை உங்களுக்கு உடன்பாடில்லை.

அவர்களது கொள்கை ஒருசததிட்கும் லாய்க்கில்லை என்பதே எமது கருத்து

இவர்களின் கொள்கையில் பயனிப்பதும், படுத்து நித்திரை கொள்வதும் ஒன்று தான் என்பது எனது கருத்து.

எங்கே கூறுங்கள் பார்க்கலாம், அவர்களின் இப்பொதய கொள்கையில் உள்ள சிறப்பம்சங்களை(நீண்ட நோக்குடனும், சிங்களவனுடைய கடந்த கால அனுபவத்துடனும்)

கீழ் உள்ள இணைப்பை வாசித்து பாருங்கள், பின்னர் புரியும் சிங்களவன் கூட்டமைப்பின் விட்டுக்குடுத்து செல்லும் அரசியலில் சிக்குவானா என்று..............

http://www.yarl.com/forum3/topic/159573-மரண-தண்டனையால்-ஹீரோவான-ஆமி/http://www.yarl.com/forum3/topic/159573-மரண-தண்டனையால்-ஹீரோவான-ஆமி/

Edited by Surveyor

இது உஙளின் கருத்து. 

அவர்களின் கொள்கையை விளங்கப்பசுத்த நான் யாருக்கும் கொள்கை பரப்பு செயளாளன் இல்லை.

எந்த கொள்கையும் இல்லாமல் அவர்களுக்கு இவ்வளவு காலமும் சனம் வாக்கஇல்லை.

ஆக அடுத்த தேர்தல் வரை பொறுப்பதே னல்லது.

அண்ணை தேர்தலுக்கு முதல் ஒரு முடிவெடுத்தாத்தான் நல்லது, விட்டா அடுத்த 5 வருசத்தாலதான் தேர்தல் வரும்

விதவை பெண்களை தேர்தலுக்கு கூப்பிட்டால் வெட்கமாம் அனால் பாலியல் பலாத்தகாரம் செய்யலாமாம்.

முதலில் செய்தி போட்ட அந்த விபசச்சார ஊடகம் ஏன் இப்படியான் உணமைகளை வெளிகொனருவதில்லை? 

http://www.onlineuthayan.com/News_More.php?id=483964117429890994

 விதவைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்? 
news

போரின் போது கணவரை இழந்த பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியாது அல்லலுறும் பெண்கள், சிலரின் பாலியல் இச்சைகளுக்கு இணங்க வற்புறுத்தப்படுவதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
தமது இன சமூகத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.மற்றுமொரு தரப்பினர் தம்மை அபசகுனத்தின் அடையாளமாக ஓரம்கட்டி ஒதுக்குவதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.
 
போர் நிறைவடைந்தாலும், சமூக போர் தொடர்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளனர். இளம் கணவரை இழந்த பெண்கள் அதிகளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீட்டு வன்முறைகளும் அதிகளவில் இடம்பெற்று வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத சமூக சேவகியொருவர் தெரிவித்துள்ளார்.
 
ஜீவனோபாய வழிகளை தேடிக் கொள்வதில் காணப்படும் நெருக்கடி நிலைமை காரணமாக, சில கணவரை இழந்த பெண்கள் பாலியல்  தொழிலை தெரிவு செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதாக மற்றுமொரு சமூக சேவையாளர் தர்சனி சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
கணவரை இழந்த பெண்களுக்கு இந்த சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆண்கள் பாலியல் ரீதியான இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ள முனைவதாகவும், பாதுகாப்பற்ற நிலைமையை உணர்வதாகவும் மற்றுமொரு கணவரை இழந்த பெண் தெரிவித்துள்ளார்.
 
சில நேரங்களில் குடும்ப நண்பர்கள் கூட பண மற்றும் ஏனைய உதவிகளுக்கு கைமாறாக பாலியல் இச்சைகளுக்கு இணங்க வேண்டுமென எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
யாழ்ப்பாணத்தில் மட்டும் 27000 கணவரை இழந்த பெண்கள் வீட்டுத் தலைமைப் பொறுப்பினை ஏற்று செயற்பட்டு வருகின்றனர் என உத்தியோகபூர்வ புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=483964117429890994#sthash.J5GP4hrM.dpuf
 
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கு கொள்கை இல்லாமல் இல்லை. அவர்களின் இப்பொதய கொள்கை உங்களுக்கு உடன்பாடில்லை.

முதலில் சமஸ்டி அரசு கேட்டது  தமிழரசுக் கட்சி. ஆனால் கட்சியின் பெயரில் மட்டும் தமிழரசுக்கட்சி.பின்னர் பல கட்சிகள் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டைத் தீர்மானம் தனித் தமிழீழமே ஒரே முடிவு என்றார்கள்.

இப்போது மீண்டும் இன்னொரு புதுக் கொள்கை இலங்கையில் தேசிய அரசு அமைப்பதே கூட்டமைப்பின் கொள்கையாம். அண்மையில் சம்பந்தர் திருகோணமலையில் அறிவித்தார். காலம் காலம் கொள்கை மாற்றி மாற்றி அதிகாரத்திற்கு வர முடியாது.

நீங்கள் கூறுவதுபோல மக்கள் வாக்குக் கூட்டமைப்பிற்குச் செல்வதற்குப் பல காரணங்கள் உண்டு.
பல கட்சிகளின் வாக்குக்களும்  சந்தர்ப்பத் திற்கேற்ற மாதிரி மக்களை ஏமாற்றப் புதிய வேட்பாளர்களைக் களம் இறக்குவதும் ஒரு காரணம்.
அதைவிட முக்கியமான காரணம் இதுவரை கூட்டமைப்பின் ஏமாற்று அரசியல் ராணுவப் பிடியில் இருந்த மக்களிடம் திணிக்கப்பட்டதே.
இந்த முறை வரும்  தேர்தலிலும் அப்படி ஒரு நிலை வரக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களது கொள்கை ஒருசததிட்கும் லாய்க்கில்லை என்பதே எமது கருத்து

இவர்களின் கொள்கையில் பயனிப்பதும், படுத்து நித்திரை கொள்வதும் ஒன்று தான் என்பது எனது கருத்து.

எங்கே கூறுங்கள் பார்க்கலாம், அவர்களின் இப்பொதய கொள்கையில் உள்ள சிறப்பம்சங்களை(நீண்ட நோக்குடனும், சிங்களவனுடைய கடந்த கால அனுபவத்துடனும்)

கீழ் உள்ள இணைப்பை வாசித்து பாருங்கள், பின்னர் புரியும் சிங்களவன் கூட்டமைப்பின் விட்டுக்குடுத்து செல்லும் அரசியலில் சிக்குவானா என்று..............

http://www.yarl.com/forum3/topic/159573-மரண-தண்டனையால்-ஹீரோவான-ஆமி/http://www.yarl.com/forum3/topic/159573-மரண-தண்டனையால்-ஹீரோவான-ஆமி/

தம்பி

செய்பவர்களுக்குத்தான் தெரியும்

அனுபவங்கள் கிடைக்கும்...

நானும் ஒரு திட்டத்தை செயற்படுத்த முயன்று தான் ஒருவரின் உண்மை முகத்தைப்பார்த்தேன்

அத்தனையும் எழுத்திலும் சாட்சியங்களுடனும் என்னிடமிருக்கு..

ஆனால் பொத்திக்கொண்டு இருக்கவேண்டியுள்ளது

காரணம் தாயக தமிழரின் இன்றையநிலை

எம்மை பழி தீர்ப்பதற்காக

இவர்கள் அந்த மக்களின் வாழ்வில் அடிக்க ஒரு போதும் தயங்கமாட்டார்கள் என்று தெரியும் போது..

அவர்களுக்கு நாம் செய்ய முயல்வது எந்தக்காரணம் கொண்டும் தடுக்கப்பட்டுவிடக்கூடாது என்ற நிலை.

நாம் இந்தநிலையில்

இந்த கொடுமைக்குள்

பாழுங்கிணற்றுக்குள் இருக்கும்வரை......:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.