Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன் தமிழர்களை கொன்றொழித்த சிங்கள வெறியர்களை காப்பாற்ற முயல்கின்றார்.- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு!

Featured Replies

ஜூன் 21, 2015 அன்று சுமந்திரன் அவர்கள் புலம்பெயர்ந்த மக்களுக்கு (Tamils Relief <tamils.relief@gmail.com>)எழுதிய கடிதமொன்றில், உள்நாட்டு பொறிமுறை இல்லையெனில் செப்டெம்பர் வெளியாக உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது வெறுமனனே அறிக்கையுடன் நின்றுவிடும் அது ஜெனிவாவில் ஒரு அறையிலேயே இருந்துவிடும் என்று கூறியுள்ளார்.
 
சுமந்திரன் அனுப்பிய கடிதத்தின்ஆங்கில உள்ளடக்கமும்  தமிழ் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது.  
 
"I have said that after the tabling of the report there has to be a domestic mechanism ... Otherwise that report will sit on a shelf in Geneva."
 
'நான் சொல்வது என்னவெனில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஒரு உள் நாட்டு பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்படி இல்லாவிடில் அது ஜெனிவாவில் ஒரு அலுமாரியில் தான் இருக்க வேண்டி வரும்.' என்று எழுதியுள்ளார்.
 
இது பற்றி ஐ. நா மனித உரிமைகள் அமைப்பில் பொறுப்பாக உள்ள அதிகாரியோடு ஒபாமாவுக்கன தமிழர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் உரையாடிய போது, சுமந்திரன் கூறும் விடையத்தில் எவ்வளவு உண்மை உள்ளது என்று கேட்டபோது, அதைக்கேட்ட அதிகாரி வியந்து போய்விட்டார். அதன் மூலம் சுமந்திரன் உண்மையை சொல்லவில்லை என்பது தெரிந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினால் ஏற்கனவே மேற்கொண்ட (பிற நாடுகளில்) நடவடிக்கை பற்றி விபரங்களை எம்மிடம் மின்  அஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்.
 
இவை எல்லாம் தெரிந்து கொண்டு சுமந்திரன் உண்மையை மறைக்கின்றாரா?. ஏன் இப்படியாக செய்கின்றார்?
 
சுமந்திரனும் இலங்கை அரசு வைக்கும் அதே கோரிக்கையைத் தான் ஐ.நா மனித உரிமைச் சபையில் கடந்த  மார்ச் மதம் 7ம் திகதி கேட்டார். ஆனால் தமிழ் மக்களுக்கு வந்து சொன்து  "இலங்கை போர் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அறிக்கை வெளியிடப்பட கூறியதாய்" ஆனால் இது உண்மை இல்லை.
 
 அதே வேளை இலங்கை அரசு பயன்படுத்தும் அதே வார்த்தைப் பிரயோகங்களையே சுமந்திரனும் பயன் படுத்தி புலம் பெயர்ந்த தமிழருக்கான கடிதத்தினை எழுதியுள்ளார். இக் கடிதத்தின் மூலம் சுமந்திரன் தனது நோக்கத்தையும் சிந்தனையையும்  வெளிப்படுத்தியுள்ளார்
 
இதன் மூலம் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான நீதியையும் குளிதோண்டி புதைக்கும் அதே வேளை புலம் பெயர்ந்த மக்களையும் முட்டாளாக்கப் பார்க்கின்றார்.
 
அத்துடன் ரணில் அவர்கள் கருணாவை விடுதலைப்புலிகளில் இருந்த பிரித்து அதன் மூலம் ஆயுதப் போராட்டத்தினை அழிப்பதற்கு வழிவகுத்தாரோ அதே போன்று புலம்பெயர்ந்த மக்களை அவர்களது விடுதலைக்கான குரலையும், இனப்படுகொலைக்கான குரலையும் அழிப்பதற்கு இந்த சுமந்திரனை சிங்கள அரசு பயன் படுத்தப்படுகின்றார்களோ என எண்ணத்தோன்றுகின்றது.
 
- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு! http://www.pathivu.com/news/41171/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பற்றி இரண்டு கேள்விகள் எனக்கு உண்டு, தேடிப் பார்க்க நேரமில்லை, யாராவது விரல் நுனியில் வைத்திருப்போர் வந்து பதில் சொல்லுங்கள் தயை கூர்ந்து:

1. தென்னாபிரிக்காவில் நடந்தது உள்நாட்டுப் பொறிமுறையா, சர்வதேச பொறிமுறையா அல்லது கலவையா?

2. தென்னாபிரிக்கா பஷீரைக் காப்பாற்றுவது போல, இந்தியா மகிந்த அன்ட் கோவைக் காப்பாற்றும் வாய்ப்பு எவ்வளவு? 

தென்னாபிரிக்காவில் கறுப்பினத்தவரிடம் ஆட்சி மாறிய பின், கறுப்பின அரசால் உள் நாட்டு விசாரணைகள் நடைமுறைப்படுத்தபட்டன. அதனையே  சிறிலங்காவில் செய்வதாயின், தமீழீழ அரசு உருவாக்கப்பட்டு, தமிழீழ நீதித் துறையால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமாயின் தமிழர்கள் அதனை ஏற்றுக்  கொள்வார்கள்.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"1. தென்னாபிரிக்காவில் நடந்தது உள்நாட்டுப் பொறிமுறையா, சர்வதேச பொறிமுறையா அல்லது கலவையா?"

 
எனக்கு தெரிந்த வரையில், அங்கே விசாரனை நடந்த போது பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியில் இருந்தார்கள். இலங்கையில் அந்த நிலை இல்லை. அதை இங்கே புகுத்ததான் - நாங்களும் ஆட்சியில் இருக்கிறோம் என்று காட்டத்தான் சிங்களவன் சம்சுங் பின்னால் திரிகிறான். தேர்தல் முடிந்த உடன் , 2-3 பேர் அமைச்சராக வர கதை சரி.
 
அதைத்தான் நாம்மாளுகள்... காணாத தை கண்டது மாதிரி தங்களுக்குள் தீருஸ்டி போட்டு கொண்டு திரிகிறார்கள். 
 
  • கருத்துக்கள உறவுகள்

சும் யாழில் போட்டி இடுவதாய் இருந்தால் இதை விட நல்ல சகுனம் இருக்க முடியாது.

ஆரம்பத்தில் விக்கி தட்டுத் தடுமாறிய போது ஒ த அமைப்பு அவரைச் சாடி ஒரு அறிக்கை விட்டது. அதுக்குப் பிறகு மனுசனுக்கு ஏறு முகம்தான்.

இப்போ சும்முக்கும்.

ஜஸ்டீன்,

2ம் உலக யுத்தம், முன்னாள் யூகோஸ்லாவியா, சிலி, அர்ஜென்டினா, தீமோர், தென்னாபிரிக்கா எங்குமே போரில் அல்லது போராட்டத்தில் வென்ற தரப்பே விசாரணைகளைச் செய்தது. History is often the account of the victors என்பர். என்னை கேட்டால் inquiries are also often the accounts of the victors என்பேன்.

இதற்கு நான் கண்ட ஒரு விதிவிலக்கு ருவாண்டா.

மகிந்த அரசின் பிடிவாதத்தால் - இலங்கை ஒரு சர்வதேச விசாரணையில் சிக்கிக்கொண்டது.

2) அது மகிந்தவின் நடத்தையை பொறுத்தது. Protocol ஐ மீறி மகிந்தவை மோடி சந்தித்தது மகிந்தவின் எதிர்கால நடவடிக்கை பற்றி சில அறிவுறுத்தல்களை நேரில் வழங்கவே. அதற்கு அமைய மகிந்த நடந்தால் மோடி காப்பாற்றுவார் என்றே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒ த அமைப்புக் கண்ணுங்களா,

 

சுமந்திரன் ஒரு பொய்யும் கூறவில்லை.

இஸ்ரேலிய ராணுவம் அண்மைய காசா இண்டிபாடாவில் யுத்த குற்றமிழைத்ததாய் அண்மையில் இதே ஐநா மனித உரிமை விசாரணை அறிக்கை சொன்னது.

போங்கடா போக்கத்த பசங்களா என்று இஸ்ரேல் அன்றிரவே ஒரு அறிக்கை விட்டதோடு -  இப்போ ஐநா அறிக்கை ஜெனிவாவில் - ஒரு அலுமாரியில் செமதூக்கம்.

ஏன்னா இஸ்ரேலுக்கு அமெரிக்க சப்போர்ட் இருக்கு.

அப்படி இலங்கையில் நடக்காம இருக்க இலங்கையில் ஒரு உள்நாட்டு பொறிமுறை, அமெரிக்க மேற்குல அழுத்தத்தோடு அவசியமாகிறது.

 

இந்த அடிப்படை விடயம் தெரியாதளவுக்கு முட்டாள் கூட்டமா ஒ த அ? அல்லது சும் மீது வீண்பழி போட பொய் சொல்கிறார்களா?

ஒபாவுக்கான தமிழர் அமைப்பு தனது தற்போதய நோக்கம் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் 21, 2015 அன்று சுமந்திரன் அவர்கள் புலம்பெயர்ந்த மக்களுக்கு (Tamils Relief <tamils.relief@gmail.com>)எழுதிய கடிதமொன்றில், உள்நாட்டு பொறிமுறை இல்லையெனில் செப்டெம்பர் வெளியாக உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது வெறுமனனே அறிக்கையுடன் நின்றுவிடும் அது ஜெனிவாவில் ஒரு அறையிலேயே இருந்துவிடும் என்று கூறியுள்ளார்.
 
சுமந்திரன் அனுப்பிய கடிதத்தின்ஆங்கில உள்ளடக்கமும்  தமிழ் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது.  
 
"I have said that after the tabling of the report there has to be a domestic mechanism ... Otherwise that report will sit on a shelf in Geneva."
 
'நான் சொல்வது என்னவெனில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஒரு உள் நாட்டு பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்படி இல்லாவிடில் அது ஜெனிவாவில் ஒரு அலுமாரியில் தான் இருக்க வேண்டி வரும்.' என்று எழுதியுள்ளார்.
 
இது பற்றி ஐ. நா மனித உரிமைகள் அமைப்பில் பொறுப்பாக உள்ள அதிகாரியோடு ஒபாமாவுக்கன தமிழர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் உரையாடிய போது, சுமந்திரன் கூறும் விடையத்தில் எவ்வளவு உண்மை உள்ளது என்று கேட்டபோது, அதைக்கேட்ட அதிகாரி வியந்து போய்விட்டார். அதன் மூலம் சுமந்திரன் உண்மையை சொல்லவில்லை என்பது தெரிந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினால் ஏற்கனவே மேற்கொண்ட (பிற நாடுகளில்) நடவடிக்கை பற்றி விபரங்களை எம்மிடம் மின்  அஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்.

.

எந்த அமைப்பின் எந்த அதிகாரியும் தமது அமைப்பின் பவீனங்களையும் தோல்விகளையும் இயலாமைகளையும் பொதுவாக ஏற்றுக்கொள்வதில்லை. கடுமையான அழுத்தங்களின் பின் அரசியல் செல்வாக்கு காரணமாக உருவாக்காப்படும் உள்ளக விசாரணையின் பின் உத்தியோகபூர்வமாக சில சந்தர்ப்பங்களில் நிறுவனங்கள் தமது தவறுகளை ஏற்றுக்கொள்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையும் இவ்வாறான அமைப்பு ஒன்றே.

முள்ளிவாய்க்காலில் மக்கள் படுகொலை செய்யப்படுவதை ஐக்கியநாடுகள் சபை தடுக்கவில்லை. தாம் தவறு செய்துவிட்டதாக முதலில் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. பின்னர் அமரிக்க அரசின் கட்டாயத்தால் உருவான உள்ளக விசாரணையின் முடிவில் தமது தவறை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டார்கள்.

சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் பயனற்று போன பல சந்தர்ப்பங்களை ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் ஒரு போதும் மேற்கோள் காட்டி தமது நிறுவனம் பயனற்றது என்று மற்றவர்களுக்கு நிருபிக்க மாட்டார்கள். மற்றவர்கள் தான் மேற்படி ஆதாரங்களை காட்டி பயனற்ற போர்க்குற்ற விசாரணைகளை பற்றி ஐக்கிய நாடுகள்  சபையிடம் கேள்வி எழுப்ப முயலலாம்.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு ஒபாமாவுக்கு ஆதரவு அளித்து சாதித்தது என்ன?  முள்ளிவாய்க்காலில் வைத்து மக்களை ஒபாவிடம் ஒப்படைக்கிறோம் என்று சொன்னார்களே? அந்த மக்களை ஒபாமா காப்பாற்றவில்லையே? ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் போலவே ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் செயற்பாடுகளும் தொல்வியடைந்த செயற்பாடுகள். பயனற்ற செயற்பாடுகள்.

சுமேந்திரன் சிங்கள அரசியல்வாதிகளுடன் சேர்ந்து செயற்படுகிறார். அதில் வெற்றியும் காண்கிறார். மகிந்த - கொத்தாவின் ஆட்சியை அகற்றுவதில் தமிழரின் பங்களிப்பை வழங்குவதில் சுமேந்திரனும் விக்னேஸ்வரனும் முன்னின்று உழைத்து வெற்றி கண்டுள்ளார்கள். மகிந்தவும் கொத்தாவும் பதவிக்கு வருவதில் விடுதலை புலிகள் ஆற்றிய பங்களிப்பை இங்கு நாங்கள் மறந்து விடக்கூடாது. அந்த மாதிரியான தவறுகளை இன்று சுமேந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் மிகவும் சிரமத்துடன் திருத்தி வருகிறார்கள். ஆகவே தமிழ் மக்கள் அவர்களை ஆதரிக்க வேண்டும்.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தவறான பாதையில் தமிழ் மக்களை நம்பிக்கை கொள்ள வைத்து மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் தவறை செய்யக்கூடாது.

 

 

Edited by Jude

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.